Monday, November 15, 2010

ஆட்சியில் இல்லாது மாட்சிமை கொள்ளும் மகாராணி

rajiv-sonia-marriage

மூலம்: ஜான் மெக்லிதான் (நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், 12/11/10)
தமிழில்: எஸ். ராமன்

சோனியா காந்தியைப் போலவே நானும் மேலை நாட்டைச் சேர்ந்தவன், ஒரு கிறிஸ்தவன். சோனியாவைப் போலவே நானும் இந்தியாவில் பல வருடங்களாக வாழ்பவன். மேலும் இந்நாட்டை எனது நாடாகத் தழுவியுள்ளவன். ஆனால் எங்களுக்குள் உள்ள ஒற்றுமை இத்துடன் முடிவடைகிறது.

உண்மைக்கு மாறுபட்ட பல விதமான எண்ணத் தாக்கங்களுடன் தான் நான் இந்தியாவை வந்தடைந்தேன். எனது இளம் பிராயத்துக்கே உண்டான முதிர்ச்சியின்மையின் காரணத்தால் இங்கு வாழும் மக்களை பொய்யான மதத்தின் பிடியிலிருந்து காப்பாற்றி, உண்மைக் கடவுளிடம் சேர்ப்பிக்கும் இறைதூதன் நான் என்றே என்னைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தேன்.

ஆனால் இந்தியா வந்தடைந்ததுமே நான் இந்தியர்களுக்கு கொடுப்பதற்கு ஒன்றுமில்லை, மாறாக நான் கற்றுக் கொள்ளுவதற்குத் தான் இந்தியாவிடம் நிறைய இருப்பதோடு மட்டுமல்லாது, அதை எனக்கு கொடுத்துக் கொண்டு இருக்கிறது என்றும் புரிந்து கொண்டேன். எனது தொழிலிலோ, ஆன்மீகத்திலோ, மனித உணர்வுகளிலோ நான் இந்தியாவிடம் பெற்றது ஏராளம், ஏராளம். இங்கு வரும் மேல்நாட்டினர்களில் பலபேருக்கு இந்தியா தங்கள் நாடுகளை விடத் தாழ்ந்தது என்றும், தாங்கள் அதை ஈடு செய்து இந்நாட்டை கடைத்தேற்றத்தான் வந்திருப்பதாகவும் ஆழ் மனத்திலாவது ஒரு எண்ணம் உண்டு. ஆங்கிலேயர்களுக்கும் அப்படிப்பட்ட உள்ளுணர்வு உண்டு, அன்னை தெரசாவுக்கும் அப்படியே, சோனியாவுக்கும் அப்படியேதான்.

சோனியா காந்தி காங்கிரஸ் கட்சிக்குள் ஒழுக்கம், கட்டுப்பாடு, ஒற்றுமை எல்லாம் கொண்டு வந்திருப்பதை எவரும் மறுக்க முடியாது. மற்ற நூற்றுக்கணக்கான பாராளு மன்ற உறுப்பினர்கள் போல் அவரும் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்றாலும், ஒரு வெளி நாட்டவரான அவருக்கு இருக்கும் அதிகாரம் அவருக்கே அவரிடம் பயம் கொள்ளுவதாகத் தான் இருக்கிறது. மராட்டிய முதல்வர் தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அவரைப் பார்க்க டெல்லிக்கு ஓடுவதை அனைத்துத் தொலைகாட்சிகளும் கண்ணின் இமை கொட்டாதது போல் ஒளிபரப்பிக் கொண்டிருக்கின்றன. உண்மையில் சவான் ஒரு மாநில முதல்வராக பிரதமரிடம் அல்லவோ முதலில் சென்றிருக்க வேண்டும்?

மத்திய புலனாய்வுத் துறையான CBI, வெளி நாட்டவரான ஆட்டாவியோ குவாத்ரோச்சி சம்பந்தப்பட்ட வழக்கில் வெட்கம், மானம் ஏதுமின்றி வெளிப்படியாகவே தனது குற்றப்பட்டியலையும், விசாரணையையும் நீர்த்துப் போகச் செய்ததுமல்லாமல், ஏதோ அவருக்கு சீர் வரிசை செய்வது தனது கடமை என்பது போல, அந்தக் குற்றவாளியே கொள்ளை அடித்த இந்திய மக்களின் கோடானு கோடி பணத்தையும் லாவகமாக எடுத்துப் போகவும் அனுமதித்தது. அந்தக் கொள்ளையைப் பற்றி சற்றும் கண்டு கொள்ளாமல், நமது ஊடகங்களோ ஊழல் என்று பெரிதும் இல்லாது, நன்கு நிர்வகிக்கப்படும் ஒரு மாநிலத்தின் முதல்வரை கடுமையாகச் சாடுகிறது. சோனியாவின் அனுமதி பெற்றோ பெறாமலோ, தனது பண பலத்தால் காங்கிரஸ் கட்சியோ பல மன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி காங்கிரஸ் அல்லாத கட்சி ஆளும் மாநில ஆட்சிகளை கவிழ்கின்றது. அவரது கைப்பாவைகளாக மாநிலத்தின் ஆளுநர்கள், சட்டத்தின் ஓட்டைகளைக் கொண்டு ஆட்சிக் கவிழ்ப்பு நாடகத்தை அரங்கேற்றுகின்றனர்.

sonia_gandhi_caricature.jpg

10 ஜன்பத் இல்லத்தை கோட்டையாகக் கொண்டு, காவலர்களையும் பாதுகாப்பாகக் கொண்டு, ஒரே ஒரு ஆளாக நாட்டிற்கு மிக முக்கியமான தீர்வுகள் பலவற்றையும் தானே செய்துகொண்டு இந்த முடிசூடா மகாராணி இந்தியாவை கிட்டத்தட்ட ஒரு முடியரசாக கோலோச்சிக்கொண்டு ஆள்வதை இந்தியர்கள் அறிவார்களா? டில்லியில் 2G, CWG, மற்றும் மும்பையில் ஆதர்ஷ் என்று பல தரப்பட்ட ராக்ஷச அளவில் நடைபெறும் ஊழல்களின் வழியே கொள்ளை அடிக்கப்படும் செல்வம் எல்லாம் அவைகளில் ஈடுபடும் பற்பல அரசியல்வாதிகளின் கைகளுக்கு வெகுவாகச் செல்லாது, சோனியாவைத் திருப்திபடுத்தும் முகமாக அடுத்து வரும் தேர்தல்களுக்காக காங்கிரசின் பொக்கிஷத்திற்கே போய்ச் சேர்கிறது என்று இந்தியக் குடிமக்களுக்குத் தெரியுமா? சோனியாவின் இந்த மறைமுக ஆட்சியில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை பலரும் கவனிக்கத் தவறுகிறார்கள் என்றே தெரிகிறது.

எழுத்தாளர் அருந்ததி ராய் பிரிவினை வாதத்தைத் தூண்டுகிறார் என்று மணிக்கணக்கில் கூச்சல் போடுகிறார்கள். அதையும் விட முக்கியமாக காங்கிரஸ் அரசே நுனி மரத்தில் உட்கார்ந்து கொண்டு அடி மரத்தை வெட்டும் வேலை ஒன்றைச் செய்துகொண்டிருப்பதை மக்கள் அறிவார்களா? இந்த தேசத்திற்கு ஒரு மரியாதையுடனும், பக்தியுடனும் சேவை செய்து கொண்டிருக்கும் தேசிய ராணுவம் ஒன்றுதான் முந்தைய காலத்து உண்மையான க்ஷத்ரியர்கள் போல் தற்காலத்தில் எஞ்சியிருக்கும் ஒரே ஒரு ஸ்தாபனம். ஏனென்றால் அரசியல், நிர்வாகம், நீதி, பத்திரிகை என்று பல துறைகளும் புரையோடிப் போயிருப்பது கண்கூடு. நிர்வாகங்கள் அனைத்திலுமே ராணுவம் ஒன்றுதான் தங்களது ஊதியம் அதற்கு ஏற்றாற்போல் இல்லாவிட்டாலும், தங்கள் உயிரினைக் கொடுத்து தேசத்தைக் காப்பாற்றும் வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறது. மேலும் ராணுவம் ஒன்றுதான் இப்போது சாதி, சமயங்கள் அற்ற நிர்வாகமாக இருக்கின்றது. ஒரு சிப்பாயோ, அதிகாரியோ இந்துவாகவோ, முஸ்லீமாகவோ எப்படி இருந்தாலும் எவருக்கும் எந்த சிறப்பு சலுகையும் மத அடிப்படையில் கிடையாது. அந்தக் கட்டுக்கோப்பை கலைக்கும் முகமாக, முதலில் காங்கிரஸ் அரசு சாதி அடிப்படையில் இராணுவத்தினரைப் பற்றி ஒரு ஜனத்தொகை கணக்கு எடுத்தது. அது அவர்களிடையே ஒரு பிரிவினை உண்டாக்கவா, அல்லது தான் என்ன செய்கிறோம் என்பதை அறியும் திறமை இந்த அரசுக்கு இல்லையா?

அடுத்த படியாக காஷ்மீரில் ராணுவத்தின் வலிமையைக் குறைக்கும் செயல்களைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறது. இது பாகிஸ்தானுக்கு வலு சேர்க்குமா, இல்லையா?

இப்போது ஆதர்ஷ் ஊழலில் ராணுவ அதிகாரிகளை விவரம் புரிந்தோ, புரியாமலோ மாட்டி வைக்குமா என்பது தெரியவில்லை. நாம் இப்போது அறிந்த அளவில் காங்கிரசைச் சேர்ந்த அரசியல்வாதிகளே அதில் பயனடைந்துள்ளனர் என்று தெரிகிறது.

ஒரு உதாரணத்திற்கு, பிரான்ஸ் போன்ற தேசத்தில், கிறிஸ்தவர் அல்லாத ஒருவர் இந்து சமயத்தைச் சார்ந்தவர் ஒருவரை தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமருக்கும் மேலான அதிகாரங்கள் கொண்ட திரை மறைவு அதிகாரி ஆக்குவது என்பதைக் கனவிலும் காண முடியாது. இப்போது காங்கிரசிலேயே திறமை கொண்ட பல தலைவர்கள் இருக்கிறார்கள். கோடிக்கணக்கான இந்தியர்கள், தம் கலாசாரத்தையும் இந்தியரின் பழக்க வழக்கங்களையும் நன்கு அறிந்த இந்தியர் ஒருவரையே தம்மை ஆளும் தலைவராக ஏன் தேர்ந்தெடுக்க முடியாது? அப்படி இல்லாது இப்போது அந்நியராகிய சோனியா தலைமையில் இயங்குவதால் நம் கண்ணுக்கும், புலனுக்கும் தெரியாத நாட்டின் நலனுக்கு பங்கம் விளைவிக்கும் பல சக்திகள் அவிழ்த்து விடப்பட்டிருக்கின்றன.

ஜனநாயகம், தொழில் நுட்பத் திறமைகள், நல்வாழ்வு வசதிகள் என்ற இப்படியான மேலை நாட்டுத் தரவுகளை வரவேற்பதில் எந்த விதமான தவறும் இல்லை. ஆனால் மேலை நாட்டு பிரச்சினைகள் நமக்கு எதற்கு? அங்கு மூன்றில் இரண்டு திருமணங்கள் விவாகரத்தில் முடிகின்றன. சிறுவர்கள் துப்பாக்கி ஏந்தி தங்களையோ, மற்றவர்களையோ சுட்டுத் தள்ளிக் கொண்டிருக்கின்றனர். முதியோர்களை அவர்களின் வாரிசுகளே கவனிப்பதில்லை. கிட்டத்தட்ட அனைவருமே பிடிபடாத ஒரு மனத் தாழ்வினால் ஏதோ ஒரு வகையில் அவதிப்படுகின்றனர். இப்படியான சூழ்நிலையில், அவைகளுக்கு மருந்தாக மேலை நாட்டினரே இந்தியா போன்று ஆன்மிகம் தழைத்த நாடுகள் தரும் பதிலை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

bharatham03

நிலைமை இப்படி இருக்க, காலத்தால் பண்பட்ட தனது மதிப்புகளைத் துறந்துவிட்டு இந்தியா ஏன் கண்மூடித்தனமாக மேலை நாட்டை பின்பற்ற வேண்டும்? இன்னும் 85 கோடி இந்துக்கள் இந்தியாவில் இருக்கின்றனர், உலகளவில் 100 கோடியாகவும் உள்ளனர், இந்தியாவுக்கு அயல் நாடுகளிலிருந்து என்ன நன்மைகள் வந்த போதிலும் இந்து சமயத்தின் பழமையும், பெருமையும் மிக்க ஆன்மீக உணர்வுகளே உலகளவில் இந்தியாவின் தனித் தன்மைக்கு கைகொடுத்திருக்கிறது என்பவைகள் எல்லாவற்றையும் சோனியா தன் மனத்தில் இருத்திக் கொள்வது நல்லது. அந்தத் தனித் தன்மையே ஒரு இந்தியக் கிறிஸ்துவனையும் ஒரு அமெரிக்கக் கிறிஸ்துவனையும் வேறு படுத்திக் காட்டுகிறது. அதுவே ஒரு இந்திய முஸ்லீமையும் ஒரு சவூதி முஸ்லீமையும் வேறு படுத்திக் காட்டுகிறது.

அதனாலேயே, ஆயிரக்கணக்கில் இந்துக்களைக் கொன்று குவித்தும், பல்லாயிரக் கணக்கான இந்துப் பெண்களையும், குழந்தைகளையும் அடிமைகளாக நடத்தியும் அராஜகம் செய்த ஹுமாயுனின் சமாதியை, இந்தியா வந்த அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுக்கு தலைநகர் டில்லியில் முதன் முதல் நிகழ்ச்சியாக அமைத்து, அவரை அழைத்துக் கொண்டு காட்டியது அனைத்து இந்துக்களையும் அவமதிக்கும் செயல் அன்றி வேறென்ன? ஹுமாயூன் தனது அண்ணனின் கண்களை நோண்டி எடுத்து, அதில் எலுமிச்சையைப் பிழிந்து அவனை இம்சை செய்த கொடுங்கோலன்!

அந்நிய ஆதிக்கத்தில் வெகு காலமாக அவதியுற்று இருந்தது இந்தியாவின் சரித்திரத்தின் ஒரு துயரப் பகுதி. அதன் காரணமாகவே, அண்டை நாடான சீனா போல் அல்லாது, தனது தீர்வுகள் அனைத்திற்கும் இந்தியா மேலை நாடுகளின் வழிகளைப் பின்பற்றுகிறது. அந்த வழிமுறையின் பிரதிபலிப்பாகவே, அவருக்கு வேண்டிய தகுதிகள் இருக்கிறதோ இல்லையோ இங்கு சோனியா காந்தியும் மகாராணியாக வீற்றிருக்கிறார்.

(கட்டுரை ஆசிரியர் ஜான் மெக்லிதான் Hindutva, sex & adventures என்ற ஆங்கில நாவலையும் எழுதியிருக்கிறார்).

http://www.tamilhindu.com/2010/11/sonia-empress-in-new-clothes/

தலையங்கம்: ஸ, ஷ, க்ஷ, ஜ, ஹ?

First Published : 09 Nov 2010 12:00:00 AM IST


கணினி பயன்பாட்டில் தமிழ்மொழியின் வரிவடிவங்களை உலகம் முழுவதும் சிரமம் இல்லாமல் எழுதவும், படிக்கவும் வகை செய்யும் டேஸ் 16 (TA​M​IL ALL CH​A​R​A​C​T​ER EN​C​O​D​I​NG​ 16) மென்பொருளைப் பயன்படுத்த அனுமதி தந்த தமிழக அரசு, தற்போது அந்தப் பரிந்துரையை நிறுத்தி வைக்குமாறு மத்திய அரசின் தகவல் தொழில்நுட்பத் துறைக்குக் கடிதம் அனுப்பியுள்ளது.

தமிழக முதல்வர் கருணாநிதி இக் கடிதத்தை எழுதியிருப்பதோடு, தன் கடிதத்தின் மீது தகவல் தொழில்நுட்பத் துறை மேற்கொண்டிருக்கும் நடவடிக்கை குறித்து தமக்குத் தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். தமிழ் அறிஞர்களின் குழுவை அமைத்து, கலந்து ஆலோசித்து, பின்னர் இது தொடர்பான வேறு பரிந்துரை அனுப்பப்படும் என்றும் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார் முதல்வர்.

உலகம் முழுவதும் மின்அஞ்சல், குறுந்தகவல், தமிழ்ப் பதிப்புத்துறைக்குப் பயன்படும் இந்த ஒருங்குறி (யுனிகோட்) மென்பொருளைப் பரிந்துரைத்ததில் அப்படி என்ன இமாலயத் தவறு நேர்ந்துவிட்டது? ஒரு தவறும் இல்லை. இதில் பிரச்னை வெறும் ஐந்து எழுத்துகளின் வரிவடிவம்தான். அவை-ஸ,ஷ,க்ஷ,ஜ,ஹ.

இந்த ஐந்தெழுத்துகளும் சம்ஸ்கிருத வார்த்தைகள் என்பதாக முதல்வருக்கு நெருக்கமானவர்கள் சிலர் எழுப்பிய பிரச்னையின் காரணமாகத்தான் இப்போது இந்த டேஸ் 16 மென்பொருளுக்கான தமிழக அரசின் பரிந்துரையை நிறுத்தி வைக்குமாறு கூறுகிறார் முதல்வர்.

இந்த ஐந்து வரிவடிவங்களும் தமிழர்களால் தமிழுக்குக் கொண்டுவரப்பட்ட வரிவடிவங்கள். தமிழில் சம்ஸ்கிருத வார்த்தைகள் மலிந்து மணிப்பிரவாளம் புழங்கிய காலத்தில், சம்ஸ்கிருதத்தில் இருந்த, ஆனால் தமிழில் இல்லாத ஒலிப்புகளுக்கான வரிவடிவம்தான் இவை. இந்த வரிவடிவம் வேறு எந்த வடமொழியிலும், அல்லது திராவிட மொழிக் குடும்பத்திலும்கூட கிடையாது. தமிழில்தான் இந்த ஐந்து எழுத்துகளும் துல்லியமான ஒலிப்புமுறைக்காக வரிவடிவம் தரப்பட்டன.

இன்றைய நடைமுறையை உதாரணமாகச் சொல்வதென்றால், ஆங்கில எழுத்து ஊ-ல் தொடங்கும் சொற்களைத் தமிழில் பயன்படுத்தும்போது இப்போது நாம் முன்னொற்றாகப் ஃ பயன்படுத்தி ஃபெயில், ஃபெலோஷிப், ஃபிரன்ட்ஸ் என்று எழுதுவதைப் போன்ற ஒரு வசதிக்காக உருவாக்கப்பட்டதுதான் மேற்சொன்ன 5 வரிவடிவங்களும். "பஸ் மோதி பசு மரணம்' என்பதை "பசு மோதி பசு மரணம்' என்று எழுதினால் எத்தனை பொருள் மாறுபாடு ஏற்படும்? அக்காரணம் கருதி, தமிழர் பயன்பாட்டுக்காக உருவாக்கப்பட்டவைதான் இந்த வரிவடிவம்.

சம்ஸ்கிருத வார்த்தைகளைப் பயன்படுத்த அவசியமில்லாத ஒரு தமிழ்ச் சமூகத்தை உருவாக்குவது வரவேற்கத்தக்கதுதான். பாராட்டுக்குரியதுதான். தமிழ் உணர்வு உள்ளவர்கள் செய்ய வேண்டிய செயல்தான். இன்றைய நாளில் "பேருந்து மோதி பசு மரணம்' என்று எழுதவும் அதைப் பாமரரும் புரிந்துகொள்ளவும்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. "காமாக்ஷியம்மன் கோயில்' என்பதுபோய், இப்போது "அருள்மிகு காமாட்சி அம்மன் ஆலயம்' என்று எழுதும் நிலை உருவாகியுள்ளது. அடுத்த பத்து ஆண்டுகளில் இந்த சம்ஸ்கிருத ஒலிப்புக்கான தமிழ் வரிவடிவங்கள் தானே வழக்கொழிந்துபோகும் நிலை உருவாகலாம். ஆனால், இந்த வரிவடிவங்களுக்காகத் தமிழ் மொழியின் ஒட்டுமொத்த வளர்ச்சியையும் நிறுத்திவைப்பது எந்த வகையில் சரியானது? மேலும், தமிழில் பஞ்சாங்கம், ஜோதிடநூல்கள் அச்சிடுவோர் இந்தச் சொற்களை, வரிவடிவங்களைப் பயன்படுத்திக் கொண்டிருக்கும்போது, இவை கணினியில் இடம்பெறாமல் தடுப்பது முறையாகுமா?

மேலும், முந்தைய தலைமுறையின் மிகச்சிறந்த படைப்பாளிகளின் படைப்புகளை செம்பதிப்பாக வெளியிட வேண்டுமானால், அவர்கள் பயன்படுத்தியுள்ள இந்த வரிவடிவங்களை நீக்கிவிட்டு வெளியிடுதல் சரியானதாக இருக்குமா? ஒரு படைப்பில் "ஜன்மபூமி' என்றிருந்தால் அதை "சன்மபூமி' என்றும், "அருட்பெரும்ஜோதி' என்பதை "அருட்பெரும்சோதி' என்றும் வெளியிட்டால் அது செம்பதிப்பு ஆகுமா? ஜெயலலிதாவை செயலலிதா என்று எழுத முடியுமா? ஸ்டாலினை ச்டாலின் என்று அழைப்பதா? ரஜினி காந்தை ரசினி காந்த் என்றும், ஐஸ்வர்யா ராயை ஐசுவர்யா ராய் என்றும் அச்சிடுவதா?

சம்ஸ்கிருத ஒலிப்பே இடம்பெறாத தமிழ்ச் சூழலை உருவாக்குதல் நன்று. ஆனால், தானே மெல்ல வழக்கொழிந்துவரும் 5 வரிவடிவங்களுக்காக உலகம் முழுவதும் இணைய தளத்தில் ஒன்றுபோல அனைத்துத் தமிழருக்கும் பயன்தரக்கூடிய மென்பொருளையே நிறுத்தி வைப்பது சரியல்ல. பெருவாரியான தமிழ் ஆர்வலர்களின் பேரக்குழந்தைகளின் பெயர்களை ஸ,ஷ,க்ஷ,ஜ,ஹ இல்லாமல் உச்சரிக்க முடியாத நிலைமை ஏற்பட்டிருப்பது முதல்வருக்குத் தெரியாதா என்ன? தேவையில்லாத சர்ச்சைகளை தேவையே இல்லாத வேளையில் கிளப்பி, மக்களின் பார்வையைத் திசை திருப்புவது என்பது அரசியல்வாதிகளுக்குக் கைவந்த கலை. இதுவும் அந்த ரகத்தைச் சேர்ந்தது என்பது மட்டும் தெரிகிறது. கண்ணெதிரில் தமிழை விழுங்கும் ஆங்கிலத்தைத் தமிழக அரசும், தமிழ்ச் சமூகமும் பார்த்துக் கொண்டிருக்கிறது. ஆனால் செத்துப்போன மொழியின், செத்தஉடலாக இற்றுக்கொண்டுவரும் 5 வரிவடிவங்களுக்காகத் தமிழக அரசு வேட்டியை வரிந்துகட்டிக் கொண்டு மல்லுக்கு நிற்கிறது. இதனால் யாருக்கு லாபம்?

Sunday, November 14, 2010

Most 2G licences given by Raja illegal, says CAG

NEW DELHI: Adding a new twist to the 2G spectrum scam, the Comptroller and Auditor General (CAG) has in its latest communication told the department of telecom (DoT) that a vast majority of the 126 licences controversially issued by the government in 2008 are illegal.

The sensational audit finding will further complicate the situation for the UPA government as Supreme Court begins to monitor investigations into the allocation of 2G spectrum under the stewardship of telecom minister A Raja in January 2008.

According to sources, CAG wrote to DoT in the second week of September that more than 75 licences issued in the 2G spectrum allocations have violated several of the guidelines for granting Unified Access Services Licence in a Service Area. These guidelines were issued on December 14, 2005 by DoT.

The CAG’s communication to DoT says these licences were awarded to companies that did not meet several of the basic criteria laid down under the licence conditions. The finding comes over and above CAG’s draft report that has indicted Raja for personally approving many of the important decisions that finally resulted in nine companies — five of them with no experience in the telecom sector — pocketing precious spectrum at throwaway prices.

CAG has listed a host of violations of DoT guidelines by the five new entrants and their several newly-floated companies. Among those indicted by CAG in its latest communication are Unitech, Loop, Swan, Datacom and Allianz Infra. Through various companies floated by them, together they hold over 75 of the total 126 licences given by the government without an auction. Some estimates have calculated the loss to the exchequer because of this sale in the region of Rs 60,000 crore.

CAG has also found some cases of forgery. In many of the licences, the Memorandum of Association of the applicant companies did not specify that they were being set up for telecom business, many of them were for construction business. So to overcome the need to have new MoAs approved by the registrar of corporate affairs, some of them put up unsigned MoAs in their applications. Many companies did not have adequate paid-up capital, and in some cases, they had violated cross-holding rules in telecom sector.

In the case of eight companies of Unitech, all of them held the annual general meetings just a day or two before the application was to be submitted. Officially, the AGMs were all held over two days within hours of notices being given, showing the farcical nature of the entire exercise.

The CAG findings now go beyond the issue of auction, and highlight the fact that DoT did not ensure that the companies adhered to its own guidelines. Raja had recently managed a law ministry opinion that CAG cannot question government’s policy decisions, but the latest findings show that his department did not even carry out basic due diligence.

The findings add further complications to the 2G spectrum scam. Earlier, in its draft report, CAG had pointed out that Raja personally approved the issue of the now infamous press release of January 10, 2008, insisting on first-come-first-serve basis for allocation of licences, and giving operators just an hour’s window to deposit demand drafts. The press release also advanced the cutoff date for submission of applications to September 25, 2007.

Raja had approved and signed the approval notings for the allocation of 2G spectrum to all the nine companies. Raja personally decided on the various cut-off dates in 2007, and later in January 2008, which favoured select companies, CAG found. First-come-first-serve was never DoT policy for granting licences, contrary to Raja’s claims. It had been the policy only for release of spectrum after licences were granted, the CAG draft report said.

http://timesofindia.indiatimes.com/india/Most-2G-licences-given-by-Raja-illegal-says-CAG/articleshow/6632742.cms

http://janamejayan.wordpress.com/category/corruption-india/page/2/

அமைச்சர் பதவியில் இருந்து ஆ. ராசா ராஜிநாமா

First Published : 15 Nov 2010 03:11:23 AM IST

Last Updated : 15 Nov 2010 04:15:28 AM IST

புதுதில்லி, நவ. 14: 2ஜி அலைக்கற்றை (ஸ்பெக்ட்ரம்) ஊழல் குற்றச்சாட்டைத் தொடர்ந்து தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசா ஞாயிற்றுக்கிழமை ராஜிநாமா செய்தார். அவர் தனது ராஜிநாமா கடிதத்தை பிரதமர் மன்மோகன் சிங்கிடம் அளித்தார்.

தமிழக முதல்வர் கருணாநிதியிடம் ஆலோசனை நடத்திவிட்டு ஞாயிற்றுக்கிழமை மாலை சென்னையிலிருந்து தில்லி திரும்பிய அவர், பிரதமரை அவரது இல்லத்தில் சந்தித்தார். அப்போது அவரிடம் ராஜிநாமா கடிதம் கொடுத்ததாகத் தெரிகிறது.

பிரதமர் இல்லத்திலிருந்து வெளியே வந்தபோது ராசா செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். நாடாளுமன்றத்தில் ஆளும் கூட்டணிக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தக் கூடாது என்பதற்காவும் அவை நடவடிக்கைகள் சுமுகமாகவும் அமைதியாகவும் நடைபெற உதவிடும் நோக்கிலும் எனது தலைவர் கருணாநிதி கேட்டுக்கொண்டதற்கு இணங்க நான் பதவி விலகுகிறேன் என்று அப்போது ராசா கூறினார்.

அமைச்சர் ஆ.ராசா பதவி விலகும் வரை நாடாளுமன்றத்தை முடக்கி அரசுக்கு கடும் நெருக்கடி கொடுக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டிருந்தன. ஏற்கெனவே ஆதர்ஷ் குடியிருப்பு ஊழல், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஊழல் போன்றவற்றால் கடந்த வாரம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடக்கப்பட்டன. அப்போது அலைக்கற்றை ஊழலும் எழுப்பப்பட்டது.

ஆதர்ஷ் குடியிருப்பு ஊழல் தொடர்பாக மகாராஷ்டிர முதல்வர் அசோக் சவாண் பதவி விலகினார். காமன்வெல்த் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக, போட்டி அமைப்புக் குழு தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான சுரேஷ் கல்மாடி காங்கிரஸ் நாடாளுமன்றக் குழு செயலர் பதவியிலிருந்து விலகினார். இதில் ஓரளவு சமாதானமடைந்த எதிர்க்கட்சிகள், அலைக்கற்றை ஊழல் புகார் தொடர்பாக திமுக அமைச்சர் ராசா பதவி விலக வலியுறுத்தி வந்தன.

ஆனால் ராஜிநாமா செய்வதில்லை என்பதில் ராசா உறுதியாக இருந்தார். ராஜிநாமா செய்ய மாட்டேன் என்று அவர் பலமுறை கூறிவந்தார். திமுக தலைவர் முதல்வர் கருணாநிதியும் ராசா குற்றமற்றவர், அவர் ராஜிநாமா செய்யத் தேவையில்லை என்று கூறிவந்தார்.

இந்த நிலையில் ராசா ராஜிநாமா செய்யும்வரை நாடாளுமன்றத்தை முடக்குவது என்பதில் எதிர்க்கட்சிகள் உறுதியாக இருந்தன. அதோடு அரசுக்கு கடும் நெருக்கடி கொடுக்கவும் எதிர்க்கட்சிகள் திட்டமிட்டிருந்தன.

மேலும் அலைக்கற்றை ஊழல் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் திங்கள்கிழமை விசாரணைக்கு வரும்போது ராசா அமைச்சர் பதவியில் நீடிப்பது குறித்து நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தால் மத்திய அரசுக்கு மேலும் நெருக்கடி ஏற்படும் என்று கருதப்பட்டது. ஏற்கெனவே ராசா பதவியில் நீடிப்பது குறித்து நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த இக்கட்டான சூழலை அடுத்து பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆகியோர் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டனர்.

நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், அலைக்கற்றை ஊழல் விவகாரத்தில் அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முடிவுகள் எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

நாடாளுமன்றம் சுமுகமாக நடைபெற வேண்டுமானால் ராசா பதவி விலகுவதைத் தவிர வேறு வழியில்லை என்று காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்ததாகத் தெரிகிறது. இந்த முடிவு திமுக தலைமைக்குத் தெரிவிக்கப்பட்டது.

ராசா பதவி பறிக்கப்படுவதை திமுக தலைமை முதலில் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் நிலைமை கையை மீறிப் போய்விட்டதால் வேறு வழியில்லை என்பதை காங்கிரஸ் மேலிடம்திமுக தலைமைக்கு உணர்த்தியதாகக் கூறப்படுகிறது.

காங்கிரஸ் மேலிடத் தகவலை அடுத்து முதல்வர் கருணாநிதி ராசாவை அழைத்து ஆலோசித்ததாகத் தெரிகிறது. கருணாநிதி கேட்டுக்கொண்டதற்கு இணங்க அவர் சென்னையிலிருந்து தில்லி புறப்பட்டுச் சென்றார். அங்கு பிரதமரைச் சந்தித்து ராஜிநாமா கடிதம் கொடுத்தார்.

தொலைத் தொடர்புத் துறை மூலம் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டதில் நடந்த முறைகேடுகளால் அரசுக்கு 1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதற்கு தொலைத்தொடர்பு, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆ. ராசாவே பொறுப்பு. எனவே அவர் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன.

ஆனால் "நான் தவறேதும் செய்யவில்லை. அரசின் கொள்கை முடிவுப்படியே ஒதுக்கீடு செய்யப்பட்டது. 1999-ம் ஆண்டு முந்தைய அரசு மேற்கொண்ட கொள்கையின்படி லைசென்ஸ் ஒதுக்கீடு அளிக்கப்பட்டது' என்று அவர் கூறினார்.

அதற்கும் மேலாக, "அலைக்கற்றை ஒதுக்கீடு நடைமுறைகள் யாவும் பிரதமர் அலுவலகத்தின் வழிகாட்டுதலின் பேரிலேயே மேற்கொள்ளப்பட்டன' என்றும் அமைச்சர் ராசா கூறினார்.

பிரதமரிடம் விளக்கம் கேட்க...

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் திங்கள்கிழமை இந்தப் பிரச்னையை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டிருந்தன. இப்போது ராசா ராஜிநாமா செய்தாலும் இந்தப் பிரச்னையில் பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

"அலைக்கற்றை ஒதுக்கீடு நடைமுறைகள் யாவும் பிரதமரின் ஆலோசனையின் பேரிலே செய்யப்பட்டது என்று அமைச்சர் ராசா கூறி வருவதால் இது குறித்து பிரதமர் மன்மோகன் சிங் விளக்கம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தவும் எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

சுதந்திர இந்தியாவில் நடைபெற்ற மிகப் பெரிய ஊழல், அலைக்கற்றை ஊழல்தான்.

இந்த விஷயத்தில் பிரதமரின் மெüனம் கலைய வேண்டும். அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக குற்றச்சாட்டு கூறும்போதெல்லாம், பிரதமருக்கு தெரிந்தே எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு முறையும் பிரதமரின் ஆலோசனையின் பேரிலே செயல்பட்டுள்ளேன் என்று ராசா கூறி வருகிறார். எனவே இதற்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு பிரதமருக்கு உள்ளது. ராசா சொல்வதைப்போல் அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கு பிரதமர் நேரடியாக ஒப்புதல் தந்தாரா என்பதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் கோர உள்ளனர்.

ராசா பதவி விலகுவது என்பது இரண்டாம்பட்சம்தான். முதலில் பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று ஐக்கிய ஜனதாதள உறுப்பினர் சிவானந்த் திவாரி கூறினார்.

அரசுக்கு தலைமையேற்பவர் என்ற அடிப்படையில் இந்தப் பிரச்னையில் பிரதமர் மன்மோகன் சிங் விளக்கம் அளிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலர் டி. ராஜா கூறினார்.

ஏற்கெனவே கடந்த வாரம் ஊழல் பிரச்னைகளை எழுப்பி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளி செய்ததால் அவை நடவடிக்கைகள் முடங்கின.

2-ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் அரசுக்கு ஏற்பட்டுள்ள இழப்பீடு குறித்து தணிக்கை தலைவர் வினோத் ராய் புதன்கிழமை தனது அறிக்கையை அரசிடம் தாக்கல் செய்தார். அதில் தொலைத் தொடர்பு அமைச்சகம் சிலருக்கு சாதகமாக நடந்து கொண்டதால் அரசுக்கு 1.76 லட்சம் கோடி வருவாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த அறிக்கையை பூதாகரமாக்குவது எதிர்க்கட்சிகளின் திட்டம்.

கனிமொழி மறுப்பு

ராசாவுக்குப் பதில் கனிமொழி தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக்கப்படுவார் என்று வெளியான செய்தியை மாநிலங்களவை திமுக உறுப்பினரும் முதல்வர் கருணாநிதியின் மகளுமான கனிமொழி மறுத்துள்ளார். மாநிலங்களவை உறுப்பினராகவே தொடர்வேன் என்று அவர் கூறினார்.

அலைக்கற்றை விவகாரம் தொடர்பாக காங்கிரஸ்-திமுக உறவில் விரிசல் ஏதுமில்லை. எனக்கு தெரிந்து இதுவரை காங்கிரஸ்- திமுக இடையே உறவு சிறப்பாக உள்ளது என்றார்.

Courtesy: www.dinamani.com

ஸ்பெக்ட்ரம் நெருக்கடி முற்றுகிறது: சோனியா, மன்மோகன், பிரணாப் ஆலோசனை

புதுதில்லி, நவ. 14: 2ஜி அலைக்கற்றை (ஸ்பெக்ட்ரம்) ஊழல் விவகாரம் தீவிரமடைந்து வருகிறது. தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா பதவி விலகும் வரை நாடாளுமன்றத்தை முடக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

இந்த நிலையில், இது குறித்து பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆகியோர் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டனர்.

நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், அலைக்கற்றை ஊழல் விவகாரத்தில் அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அலைக்கற்றை ஊழல் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் திங்கள்கிழமை விசாரணைக்கு வருகிறது. இதில் நீதிமன்றம் ஏதாவது உத்தரவு பிறப்பித்தால் அதன் அடிப்படையில் முடிவு எடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

தொலைத் தொடர்புத் துறை மூலம் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டதில் நடந்த முறைகேடுகளால் அரசுக்கு ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதற்கு தொலைத்தொடர்பு, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆ. ராசாவே பொறுப்பு. எனவே அவர் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் "நான் தவறேதும் செய்யவில்லை. அரசின் கொள்கை முடிவுப்படியே ஒதுக்கீடு செய்யப்பட்டது. 1999-ம் ஆண்டு முந்தைய அரசு மேற்கொண்ட கொள்கையின்படி லைசென்ஸ் ஒதுக்கீடு அளிக்கப்பட்டது' என்று அவர் கூறி வருகிறார்.

அதற்கும் மேலாக, "அலைக்கற்றை ஒதுக்கீடு நடைமுறைகள் யாவும் பிரதமர் அலுவலகத்தின் வழிகாட்டுதலின் பேரிலேயே மேற்கொள்ளப்பட்டன' என்றும் அமைச்சர் ராசா கூறி வருகிறார்.

ராசா பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தீவிரமாக வலியுறுத்தி வரும் வேளையில், "அவர் குற்றமற்றவர், பதவி விலகத் தேவையில்லை' என்று திமுக தலைவரும் தமிழக முதல்வருமான கருணாநிதி கூறியுள்ளார். இதனால் இந்தப் பிரச்னையில் அரசுக்கு நெருக்கடி முற்றியுள்ளது.

பிரதமரிடம் விளக்கம் கேட்க...

இந்த நிலையில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் திங்கள்கிழமை இந்தப் பிரச்னையை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. அலைக்கற்றை ஒதுக்கீடு நடைமுறைகள் யாவும் பிரதமரின் ஆலோசனையின் பேரிலே செய்யப்பட்டது என்று அமைச்சர் ராசா கூறி வருவதால் இது குறித்து பிரதமர் மன்மோகன் சிங் விளக்கம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தவும் எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

சுதந்திர இந்தியாவில் நடைபெற்ற மிகப் பெரிய ஊழல், அலைக்கற்றை ஊழல்தான். எனவே அந்த துறை அமைச்சர் ராசா தொடர்ந்து பதவியில் நீடிப்பதை எப்படி அனுமதிக்கிறீர்கள். அவரைக் காப்பாற்ற முயல்வது ஏன் என்று பிரதமரிடம் கேள்வி எழுப்பவும் திட்டமிட்டுள்ளன.

இந்த விஷயத்தில் பிரதமரின் மெüனம் கலைய வேண்டும். அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக குற்றச்சாட்டு கூறும்போதெல்லாம், பிரதமருக்கு தெரிந்தே எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு முறையும் பிரதமரின் ஆலோசனையின் பேரிலே செயல்பட்டுள்ளேன் என்று ராசா கூறி வருகிறார். எனவே இதற்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு பிரதமருக்கு உள்ளது. ராசா சொல்வதைப்போல் அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கு பிரதமர் நேரடியாக ஒப்புதல் தந்தாரா என்பதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் கோர உள்ளனர்.

ஜி-20 நாடுகள் உச்சி மாநாட்டில் பங்கேற்றுவிட்டு வெள்ளிக்கிழமை நாடு திரும்பிய பிரதமர் மன்மோகன் சிங், இந்த விஷயம் தொடர்பாக இதுவரை எந்தக் கருத்தும் சொல்லவில்லை. அலைக்கற்றை ஊழல் குறித்த கேள்விகளுக்கு பதில் சொல்வதை அவர் தவிர்த்து வந்தார்.

ஆனால் நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை அரசு தரப்பில் குறிப்பாக பிரதமரே இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்த உள்ளன.

ராசா பதவி விலகுவது என்பது இரண்டாம்பட்சம்தான். முதலில் பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று ஐக்கிய ஜனதாதள உறுப்பினர் சிவானந்த் திவாரி கூறினார்.

அரசுக்கு தலைமையேற்பவர் என்ற அடிப்படையில் இந்தப் பிரச்னையில் பிரதமர் மன்மோகன் சிங் விளக்கம் அளிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலர் டி. ராஜா கூறினார்.

ஏற்கெனவே கடந்த வாரம் ஊழல் பிரச்னைகளை எழுப்பி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளி செய்தததால் அவை நடவடிக்கைகள் முடங்கின.

இந்த நிலையில் அலைக்கற்றை ஊழல் விவகாரத்தில் தணிக்கைத் துறை தலைவரின் அறிக்கையை எதிர்க்கட்சிகள் துருப்புச் சீட்டாக பயன்படுத்த திட்டமிட்டுள்ளன. தணிக்கை துறை தலைவரின் அறிக்கை ஓரிரு நாள்களில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2-ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் அரசுக்கு ஏற்பட்டுள்ள இழப்பீடு குறித்து தணிக்கை தலைவர் வினோத் ராய் புதன்கிழமை தனது அறிக்கையை அரசிடம் தாக்கல் செய்தார். அதில் தொலைத் தொடர்பு அமைச்சகம் சிலருக்கு சாதகமாக நடந்து கொண்டதால் அரசுக்கு ரூ. 1.76 லட்சம் கோடி வருவாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த அறிக்கையை பூதாகரமாக்குவது எதிர்க்கட்சிகளின் திட்டம்.இதற்கிடையே அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் விவகாரத்தில் அரசுக்கு நெருக்கடி கொடுப்பது குறித்து ஆலோசிக்க பாஜக கூட்டணி அல்லாத எதிர்க்கட்சிகளின் கூட்டம் திங்கள்கிழமை நடைபெறுகிறது. இதற்கு மதச்சார்பற்ற ஜனதாதளத் தலைவர் தேவ கெüடா தலைமையேற்கிறார்.

www.dinamani.com

தலையங்கம்: சட்டம் தரும் பாதுகாப்பு

First Published : 10 Nov 2010 01:51:55 AM IST


நாடாளுமன்ற நடப்புக் கூட்டத் தொடரில் அறிமுகம் செய்யப்படுவதற்குத் தயாராக உள்ளது பணியிடங்களில் பாலியல் தொல்லையிலிருந்து மகளிரைப் பாதுகாக்கும் சட்டம். இந்தச் சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஏற்கெனவே ஒப்புதல் அளித்துவிட்டது. இரண்டாவதாக தயார் நிலையில் இருக்கிறது, பாலியல் கொடுமைகளிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்ட வரைவு மசோதா; விரைவில் இதுவும் சட்டமாகலாம்.

இரண்டுமே இன்றைய காலத்தின் கட்டாயம் என்பது மட்டுமன்றி, பெண்களுக்கு உண்மையிலேயே பாதுகாப்பாக அமையும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.

பணியிடங்களில் பெண்களின் மீதான பாலியல் தொல்லைகளைத் தடுக்கும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ள இந்தச் சட்டம், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களை மட்டுமல்ல, அமைப்புசாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள பெண்களையும்கூட உள்ளடக்கியதாக இருக்கிறது. மேலும், இந்த நிறுவனங்களில் பணியாற்றுகிற பெண்களை மட்டுமன்றி, நிறுவனத்துக்கு வரும் பார்வையாளர், வாடிக்கையாளர் என யாராக இருந்தாலும் அவர்களும், பணியிடத்தில் பாலியல் தொல்லைக்கு ஆளாகும்போது இச்சட்டத்தின் கீழ் வழக்குத் தொடுக்க முடியும் என்ற விதிமுறை, நிறுவனத்துக்கு அப்பாற்பட்ட பெண்களையும் பாதுகாப்பதாக அமைந்துள்ளது. பணியிடம் மட்டுமன்றி, கல்விக்கூடங்களில் மாணவ, மாணவிகள், ஆய்வு மாணவிகள், மருத்துவமனைகளில் மருத்துவ ஆலோசனைபெற வரும் மகளிரும்கூட இச்சட்டத்தின் கீழ் வழக்குத் தொடுக்கலாம் என்பதுதான் இதன் சிறப்பு.

இந்தச் சட்டம் அமலுக்கு வரும்போது, ஆண்களுக்கு எதிராகத் தவறாகப் பயன்படுத்தப்படும் என்றும், கறாராக இருக்கும் அதிகாரியை மிரட்டுவதற்காகப் பயன்படுத்தப்படும் என்றும் ஒரு கருத்து முன்வைக்கப்பட்டாலும்கூட, பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லை புகார்களின் எண்ணிக்கையை ஒப்பிடும்போது, இத்தகைய பொய்ப்புகார்களின் எண்ணிக்கை மிகமிகக் குறைவாகவே இருக்கும் என்பது நிச்சயம். புகார் தெரிவிப்பதால் பணியிடத்தில் வேலையை இழக்க நேரிடும் என்ற இயல்பான அச்சத்தையும் போக்கி, புகார் கூறிய பெண்கள் வழக்கு முடியும்வரை சம்பளத்துடன்கூடிய விடுப்பில் செல்லவும் அல்லது வேறுஇடத்தில் பணியாற்றவும் இச்சட்டம் வகைசெய்துள்ளது.

இரண்டாவதாக, வரைவு மசோதா நிலையில் உள்ள, குழந்தைகள் மீதான பாலியல் கொடுமையிலிருந்து பாதுகாக்கும் சட்ட மசோதாவின் முக்கியத்துவம் என்னவெனில், 16 வயதுக்குள்பட்ட சிறுமி அல்லது சிறுவன் யாராக இருப்பினும், அவர்கள் யார் மீது குற்றம் சுமத்தினாலும், குற்றமற்றவர் என்று நிரூபிக்க வேண்டிய பொறுப்பு, குற்றம் சாட்டப்பட்ட நபரைச் சார்ந்ததே தவிர, நீதிமன்றம் அவர் குற்றவாளி என்று நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதுதான். முந்தைய சட்டத்தில் இடம்பெற்ற புணர்தல் என்ற சொல்லை நீக்கிவிட்டு -பாலியல் நோக்கத்துடன்- என்ற சொல் இடம்பெற்றிருப்பதால் இச்சட்டம் நிச்சயமாகவே பெண் குழந்தைகளைப் பாதுகாப்பதாக அமையும். இந்தச் சட்டத்தின் கீழ் யாராக இருந்தாலும், அரசுப் பதவியில், ராணுவத்தில் இருந்தாலும்கூட அவர் மீது வழக்குப் பதிவு செய்ய முடியும் என்கிற அளவுக்குச் சட்டத்தில் கிடுக்கிப்பிடி போடப்பட்டுள்ளது.

வழக்கமாக இத்தகைய சிறுமிகள் சிறுவர் பாலியல் கொடுமைக்கு ஆளாகும்போது அவர்களது பெயரை வெளியிடக்கூடாது என்கிற பொது நடைமுறை ஏற்கெனவே இருக்கிறது. ஆனாலும் பல பத்திரிகைகள், பரபரப்புச் செய்திக்காக இத்தகைய சம்பவங்களை வெளியிடும்போது, அக்குழந்தை படிக்கும் பள்ளி, பெற்றோரின் பெயர், வசிக்கும் தெரு எல்லாவற்றையும் சொல்லிவிட்டு, -பெயர் மாற்றப்பட்டுள்ளது- என்று ஏதோ ஒரு பெயரை அச்சில் தெரிவிக்கும் வழக்கம் இருந்து வருகிறது. பாலியல் வன்முறைக்கு ஆளான சிறார் குறித்த அடையாளங்கள் எந்த வகையிலும் வெளிப்படுத்தப்படக்கூடாது என்று மிகக் கடுமையாகச் சொல்லியிருக்கிறது இந்த வரைவு மசோதா. ஆனால் அதேசமயம், பாலியல் வன்கொடுமைக்கு இலக்கான சிறார் அல்லது அவர் தம் பெற்றோர் அனுமதியுடன் ஆதாரப்பூர்வமான தகவலை வெளியிடலாம் என்று அனுமதித்திருப்பது, மீண்டும் பழைய போக்குக்கே வழிவகுப்பதாக அமையும். வழக்கு முடியும்வரை சிறார்கள் குறித்த எந்தத் தகவலையும் வெளியிடக்கூடாது என்கிற விதிமுறை இருப்பது மட்டுமே சரியானதாக இருக்க முடியும். ஏனெனில், இத்தகைய சட்டத்தின் நோக்கமே, குழந்தைகளின் அடையாளம் தெரிந்தால், சமூகத்தில் அவர்கள் மீதான தேவையற்ற சங்கடப் பார்வைகள் விழும் என்பதுதான். இந்த நிலைமை பாலியல் வன்கொடுமையில் அவர்கள் ஆளாகும்போது மட்டுமல்ல, அவர்கள் பெற்றோர் ஆளாகும்போதும் இதே சமூகப் புறக்கணிப்புக்கு குழந்தைகள் ஆளாகிறார்கள்.

ஒரு பெண் கள்ளக்காதல் கொலை வழக்கில் கைது செய்யப்படும்போது, அவரது குழந்தைகளின் படங்களையும் பிரசுரிப்பது அக்குழந்தைகள் மீது பச்சாதாபத்தை ஏற்படுத்துவதைவிட சமூகப் புறக்கணிப்புக்கும், கேலிக்கும்தான் அதிக இடமேற்படுத்துகிறது. எதற்காக அந்தக் குழந்தைகளின் படம் அல்லது அப்பாவித்தனமான பேட்டியை வெளியிட வேண்டும்? அண்மையில் ஒரு நடிகை விபசார வழக்கில் கைது செய்யப்பட்டபோது, அவரது குழந்தையின் பெயர், படிக்கும் பள்ளி, வகுப்பு எல்லா தகவலும் பத்திரிகைகளில் வெளியாயின. தாய் தந்தை செய்த தவறுக்குக் குழந்தைகள் என்ன செய்வார்கள்? இதற்கும்கூட சில நிபந்தனைகள் தேவையாக இருக்கின்றன.

Can Sonia Gandhi address a Press Conference or go to Court on Sudarshan’s disclosure?

Nov. 12, 2010

Statement of Dr. Subramanian Swamy, President of the Janata Party

The Congress Party deserves to be condemned for taking to the street and engaging in violent protests against the RSS for the disclosure made regarding Sonia Gandhi’s past by former Sarsangchalak KS Sudarshan. Any party which is committed to democracy, which the Congress Party have proved in the Emergey, it is not, should resort to media rebuttal or court action to counter the disclosure made by Shri Sudarshan. But obviously Sonia Gandhi cannot address a press conference or go to court on this matter. In 2008, the Congress Party had filed a defamation suit in the New York State Supreme Court seeking equivalent of Rupees five hundred crores as damages from three NRIs based in US, namely, Mr. N. Kataria, Mr. Arish Sahni and Mr. D. Satya for bringing out a fullpage advertisement in the New York Times precisely making the same disclosure which Mr. Sudarshan has made yesterday.

The New York State Supreme Court however dismissed their defamation suit and the Congress Party chose not to appeal to the Federal Supreme Court in Washington. Obviously going to court would lead to further disclosures that Sonia Gandhi would be required to make on the witness box during her cross examination. Hence she has chosen the path of all dictators to engage in violent acts to intimidate her critics. Unfortunately such violent acts against Shri Sudarshan will only boomerang against Sonia Gandhi.

Subramanian Swamy

http://janamejayan.wordpress.com/category/sonia-and-mafia/