Thursday, January 13, 2011

அ.தி.மு.க., – தே.மு.தி.க., விறு விறு பேச்சுவார்த்தை: சூடாகிறது தேர்தல் களம்

தமிழக அரசியல் களத்தில் பொதுத்தேர்தல் காற்று வீசத் துவங்கி விட்டது. கூட்டணிகள் எப்படி மாறும் என்பதில் துவங்கி, யாருக்கு எத்தனை இடம், எப்படி அணி, எப்படி கூட்டணி அமைந்தால் வெற்றி பெறும் என்றெல்லாம் கூட்டல், கழித்தல் கணக்குகள் அரசியல் வட்டாரத்தில் போடத்துவங்கி விட்டனர். தேர்தலை கருத்தில் கொண்டு, ஜாதிக்கட்சிகளும் உயிர்பெறத் துவங்கி விட்டன.

தி.மு.க.,வைப் பொறுத்தவரையில், காங்கிரசின் தோழமையை மட்டும் வைத்து தேர்தலை சந்திக்க தயார் என்ற நிலையில் உள்ளது. இடைத்தேர்தல்களின் பயன்படுத்திய வெற்றி பார்முலாவும், அரசின் சாதனைகளும் தங்களின் வெற்றிக்கு துணையாய் இருக்கும் என்பது தி.மு.க., தலைமையின் எண்ணமாக உள்ளது. தேர்தல் களத்தை எதிர்கொள்ள பல்வேறு வியூகங்களை வகுக்க வேண்டிய நிலையில் அ.தி.மு.க., உள்ளது. “தி.மு.க.,வை ஒழிப்பதே என் முதல் வேலை’ என விஜயகாந்த் திடீர் சபதம் எடுத்துள்ளது அ.தி.மு.க.,விற்கு நம்பிகையை கொடுத்துள்ளது. எப்படியும் அ.தி.மு.க., – தே.மு.தி.க., கூட்டணி அமைந்து விடும் என்பதை உறுதிப்படுத்துவது போல் இந்த பேச்சு அமைந்துள்ளது. இரு கட்சிகளுக்கிடையே கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்ற தகவல் தொடர்ந்து வெளியாகி வரும் நிலையில், அதை ஜெயலலிதாவே, விஜயகாந்தோ இதுவரை மறுக்கவில்லை.

தே.மு.தி.க.,வை கூட்டணியில் சேர்த்தால், வெற்றி உறுதி என்ற கருத்து தொடர்ந்து அ.தி.மு.க., தலைமைக்கு பல்வேறு ஆலோசகர்களால் சொல்லப்பட, கூட்டணியை உறுதிப்படுத்தும் இறுதிக்கட்ட பணி தீவிரமாகியுள்ளது. முதல்கட்ட பேச்சுவார்த்தையின் போதே, “எங்கள் கட்சிக்கு 15 சதவீத ஓட்டு வங்கி உள்ளது. எனவே, 80 முதல் 100 சீட்டுகளை ஒதுக்க வேண்டும்’ தே.மு.தி.க., நிபந்தனை விதித்துள்ளது. அவர்கள் கேட்கும் அளவுக்கு இடங்களை ஒதுக்க முடியாது என்றாலும், கூட்டணிக்கு ஒப்புக் கொண்டதே அ.தி.மு.க.,விற்கு தெம்பினை கொடுத்துள்ளது.

அ.தி.மு.க.,வின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் மூலமாக, தொகுதிகளின் எண்ணிக்கையை குறைப்பது குறித்து பேசப்பட்டுள்ளது. “உங்களுடன் கூட்டணி சேர வேண்டிய நிர்பந்தம் எதுவும் எங்களுக்கு இப்போது இல்லை. நாங்கள் தனித்து நின்றாலும், ஓட்டு வங்கி குறையாது. நாங்கள் பிரிக்கும் ஓட்டுக்கள் உங்களுக்குத்தான் இழப்பை ஏற்படுத்தும். எனவே, யோசித்து முடிவு சொல்லுங்கள்’ என அடுத்த வாதத்தை தே.மு.தி.க., முன்நிறுத்தியுள்ளது. பல கட்டங்களில் நடந்த பேச்சுவார்த்தையில், 50 தொகுதிகளுக்கு கீழேயே அ.தி.மு.க., நின்றுள்ளது. ஆனால், “ஐம்பது தொகுதிக்கு மேல் கொடுப்பதாக இருந்தால்தான், அடுத்த கட்ட பேச்சுவார்த்தை’ என தே.மு.தி.க., உச்சியில் ஏறிக் கொண்டுள்ளது.100 சீட்டில் பேச்சைத் துவங்கினால்தான், 50ல் முடிப்பார்கள் என்ற கணக்கில் தே.மு.தி.க., வின் காய் நகர்த்தல்கள் உள்ளன என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

இது குறித்து அரசியல் பார்வையாளர்கள் தரப்பில் கூறப்படுவதாவது: அ.தி.மு.க., வைப் பொறுத்தவரை 144 தொகுதிகளில் தாங்கள் களமிறங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 90 தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு பங்கு வைக்கும் திட்டத்தையும் தற்போது தயாரித்துள்ளது. தே.மு.தி.க., கூட்டணியில் சேர்வது உறுதியாகியுள்ளது. அவர்களுக்கு 45 தொகுதிகளும், இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் சேர்த்து 15 தொகுதிகளும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. ம.தி.மு.க.,விற்கு 25 தொகுதிகளும், உதிரிக் கட்சிகள், ஜாதிக்கட்சிகளுக்கு என ஐந்து தொகுதியும், “ரிசர்வ்’ செய்யப்பட்டுள்ளது.

இதில், தே.மு.தி.க., முரண்டு பிடிக்குமானால், ம.தி.மு.க.,விடம் இருந்து ஐந்து தொகுதிகளை பறித்து, 50 தொகுதிகளை தே.மு.தி.க.,விற்கு வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. வழக்கம்போல், இந்த முறையும் ம.தி.மு.க.,வின் தன்மானம் பரிசோதனைக்கு உள்ளாக்கப்படும் என்றே தோன்றுகிறது. பொதுத்தேர்தல் நேரத்தில் கூட்டணியை விட்டு வெளியேற வேண்டிய நிர்பந்தம் அந்த கட்சிக்கு எழும் வாய்ப்பு உள்ளது. அப்படி ம.தி.மு.க., வெளியேறும் பட்சத்தில், பா.ம.க.,விற்கு வலை போடவும் அ.தி.மு.க., தயாராக உள்ளது. தே.மு.தி.க., தரப்பிலும் அதற்கு இசைவு தெரிவிக்கப்பட்டுள்ளது. இவையெல்லாவற்றையும் விட, காங்கிரஸ் கூட்டணிக்கான முயற்சிகளும் ஒருபுறம் தொடர்கிறது. இந்த முயற்சி வெற்றி பெற்றால், மொத்த கூட்டணிக் கணக்கும் மாறிவிடும் வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

http://senthilvayal.wordpress.com

பேஸ்புக்‌கில் மலர்ந்த நட்பு கற்பழிப்பில் முடிந்த கொடுமை

பேஸ்புக்கில் புகுந்து விளையாடுபவர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பேஸ்புக் பற்றிய அதிர்ச்சித் தகவல்களும் சம அளவில் வெளிவந்து கொண்டே தான் இருக்கின்றன. பலர் தங்கள் பணிகளை மறந்து கூட பேஸ்புக்கில் மூழ்கி விடுகின்றனர் என்ற குற்றச்சாட்டு பரவலாக இருக்கிறது. மும்பையில் கல்லூரி மாணவி ஒருவர் பேஸ்புக்கில் விரிக்கப்பட்ட வலையில் சிக்கி கற்பிழந்து கண்ணீருடன் தவித்து நிற்கிறாள். மும்பை கிழக்கு செம்பூர் பகுதியில் இருக்கும் தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவி, சும்மா பேஸ்புக்கில் நட்பு வளர்த்துள்ளார். எதிரே வலை விரித்த இளைஞனுக்கோ எண்ணம் வேறாக இருந்தது. தினமும் பேஸ்புக்கில் சாட் செய்த இருவரும், ஒரு நாள் பாட விஷயமாக கருத்துக்களை பறிமாறிக்கொள்ள நேரில் சந்தித்தனர். அதன் விளைவு, ஏற்கனவே திட்டமிட்டிருந்தபடி அந்த இளைஞன், இளம் பெண்ணை கற்பழித்தான். பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பெற்றோரும், உற்றாரும் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அந்த இளைஞர் மீது கற்பழிப்பு வழக்கு பதிவு செய்துள்ளனர். இன்டெர்நெட் வசதிகளை தவறாக பயன்படுத்துவதால் இன்றைய இளசுகள் இடம் தெரியாமல் போகிறார்கள்.

http://senthilvayal.wordpress.com

குழந்தைகள் கடத்தல்… குறிவைக்கும் கும்பல்கள்..!

தமிழகத்தில் குழந்தை கடத்தல் சம்பவம் நடைபெறுவது அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் எல்லோரது பார்வைக்கும் தெரிந்தது. கிருஷ்ணகிரியில் சிக்கிய குழந்தை கடத்தல் கும்பலிடம் நடத்தபட்ட விசாரணைக்கு பிறகுதான், இவ்வளவு குழந்தைகள் கடத்தபட்டு இருக்கிறார்களா? என்று எல்லோரும் அதிர்ச்சியின் எல்லைக்கே போனார்கள்.

`பணத்துக்காக இப்படியெல்லாமா செய்வார்கள்?’ என்று எல்லோரையும் கேட்க வைத்த இந்த குழந்தைகள் கடத்தல் சம்பவம், தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுக்கவும் தொடர்கதையாகத்தான் உள்ளது. பாதாளம் வரை பாயும் பணத்தாசைதான் சிலரை இந்த இரக்கமற்ற செயலில் ஈடுபட வைக்கிறது.

கடத்திய குழந்தைகளுக்கு ஒவ்வொரு விலை நிர்ணயம் செய்து, ஏதோ விலை உயர்ந்த பொருள் போல் விற்பனை செய்கிறது இந்த கும்பல். குழந்தை இல்லாத தம்பதியரிடம் இவர்கள் முடிந்தவரை பணத்தை கறந்து இருக்கிறார்கள். உடல் உறுப்புகளை பெறுவதற்காக, குழந்தைகளை கடத்தி விற்பனை செய்வது உலக அளவில் நடக்கும் கொடூரம்.

பொதுவாக இந்தியா முழுக்க குழந்தைகளை கடத்தும் கும்பலைச் சேர்ந்தவர்களுக்கும், விபசார கும்பலுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. அழகான சிறுமிகளை குறி வைத்து கடத்தும் இவர்கள், விபசார கும்பலிடம் அந்த சிறுமியை ஒப்படைத்துவிட்டு, மிகபெரிய தொகையோடு திரும்பி விடுகிறார்கள்.

ஒருசில லட்சம் ரூபாய்க்காக விற்கபட்ட சிறுமிகள், ஆயுள் முழுக்க விபசார கும்பலிடம் அடிமை வாழ்க்கை வாழ்ந்து தங்கள் வாழ்க்கையையே தொலைத்து விடுகிறார்கள். அங்கே, நாள்முழுக்க விபசாரம் செய்து, விபசார தாதாக்களுக்கு பணம் சம்பாதித்துக் கொடுப்பதுதான் இவர்களது வேலை. அவர்களுக்கு கிடைக்கும் கூலியோ மாதத்திற்கு சில ஆயிரங்கள் தான். எவ்வளவோ விழிப்புணர்வு இருந்தும் கூடிய விரைவிலேயே எய்ட்ஸ் உள்ளிட்ட பால்வினை நோய் தாக்குதலுக்கும் இவர்கள் ஆளாகி விடுகிறார்கள்.

ஆபாச படம் எடுப்பதற்காகவும் சிறுமிகள் கடத்தபடுகிறார்கள். கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் இதற்காக கடத்தபடும் சிறுமிகள் எண்ணிக்கை அதிகம் என்கிறது போலீஸ் வட்டாரம்.

வயதுக்கு வரும் வரை இவர்களை அடைத்து வைத்து வளர்க்கும் கும்பல், அதன்பிறகு இவர்களை வைத்து விதவிதமாக படங்களை தயாரித்து கோடிக்கணக்கில் சம்பாதித்து விடுகிறது. 18 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பயன்படுத்தி எடுக்கபட்ட புளுபிலிம்களுக்கு நல்ல வரவேற்பும், அளவுக்கு அதிகமான விலையும் கிடைக்கும் என்பதால், இதுபோன்ற குற்றச் செயல்கள் அதிகரித்த வணம் உள்ளன.

இந்தியாவில் குழந்தைகள் கடத்தல் ஒருபுறம் நடக்க… மறுபுறம் அந்த குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் இன்னும் வேகமாக அதிகரித்து கொண்டிருக்கின்றன. இந்தியாவில் உள்ள குழந்தைகளில் 53 சதவீதத்தினர் பாலியல் கொடுமைகளை சந்தித்தவர்கள் என்கிற ஐ.நா. குழந்தைகள் நல அமைப்பின் தகவலே அதற்கு சான்று.

மேலும், நாட்டில் உள்ள 28 லட்சம் பாலியல் பெண் தொழிலாளர்களில் 25 சதவீதம்பேர் கடத்தபட்டு வந்தவர்களே என்று அதிர வைக்கிறது இன்னொரு கணக்கெடுப்பு. காணாமல் போகும் குழந்தைகள் பெரும்பாலும் கிடைப்பதில்லை என்பதே உண்மை என்கின்றன, குழந்தைகள் நல அமைப்புகள்.

கடத்தபடும் குழந்தைகள் பற்றிய தகவல்கள் நம்மை அதிர வைக்க, தாங்களாகவே கடத்தல் கும்பலிடம் சிக்கிக்கொள்ளும் சிறுவர்-சிறுமிகளும் இருக்கிறார்கள். இவர்கள் வீட்டைவிட்டு வெளியேற முக்கிய காரணம் அவர்களது பெற்றோர்கள்தான். சரியாக படிப்பு வரவில்லை, நல்ல மார்க் எடுக்கவில்லை என்ற காரணங்களுக்காக அச்சுறுத்தபடும் இவர்கள், வேறு வழி தெரியாமல் வீட்டைவிட்டு ஓடி விடுகிறார்கள். பஸ், ரெயில் நிலையங்களில் வழி தெரியாமல் இவர்கள் தவிக்கும்போது, போலீசார் வசம் சிக்கினால் பிரச்சினை இல்லை. மீண்டும் வீடு வந்து சேர்ந்துவிடலாம். அதுவே, கடத்தல் கும்பல் என்றால், அவர்கள் கதி அதோகதி தான்.

சமீப காலமாக அதிகரித்து வரும் குழந்தை இல்லாத பெற்றோர்களின் எண்ணிக்கையும் கூட, குழந்தைகள் கடத்தலுக்கு ஒரு வகையில் காரணமாக அமைந்து விடுகிறது. சட்டபூர்வமாக குழந்தையை தத்து எடுப்பதில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதால், குறுக்கு வழியில் குழந்தைகளை பெற அவர்கள் முயற்சி செய்கிறார்கள். கடத்தல் கும்பலை தொடர்பு கொள்கிறார்கள். அந்த கும்பலும் பெரும் தொகையை வாங்கிக்கொடு பச்சிளங்குழந்தைகளை அவர்களுக்கு கடத்தி வந்து விற்று விடுகிறது. இதனால்தான், கைக்குழந்தைகளை வைத்துக்கொண்டு தனியாக பயணம் மேற்கொள்ள பெண்கள் பயப்படுகிறார்கள்.

பல்வேறு தேவைகளுக்காக நடைபெறும் குழந்தைகள் கடத்தல், ஒவ்வொரு பெற்றோரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதுபோன்ற சூழ்நிலைகளில் அவர்கள் தங்களை எவ்வாறெல்லாம் விழிப்புணர்வுக்கு உள்ளாக்கிக் கொள்ளலாம்?

* குழந்தைகளுடன் வெளியூர் செல்லும்போது அவர்களை தங்களது கண்காணிப்பில் வைத்துக்கொள்வது நல்லது. கைக்குழந்தைகள் இருக்கும்பட்சத்தில், அவசர நேரங்களில் முன்பின் தெரியாத – சில மணி நேரத்திற்கு முன்பு பழக்கமான நபரிடம் அவர்களை ஒப்படைக்க வேண்டாம்.

* பிறந்த குழந்தைகளும் திருடு போவதால், பிரசவம் நடைபெறும் மருத்துவமனையில் போதிய பாதுகாப்பு வசதி இல்லை என்று உணர்கிறபோது உஷாராக இருப்பதுதான் நல்லது.

* பெற்றோர்களுக்கு பயந்து வீட்டைவிட்டு வெளியேறும் சிறுவர்-சிறுமியரின் எண்ணிக்கை தடுக்கபட வேண்டும். பெற்றோரின் கனிவான நடவடிக்கைகளும், ஆதரவான பேச்சுக்களுமே அத்தகைய சம்பவம் மீண்டும் ஒருமுறை நடைபெறாமல் தடுக்க உதவும்.

* பள்ளிக்கூடத்திற்கு குழந்தையை அனுப்பும்போது, முன்பின் தெரியாத ஒருவரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றி கற்றுக்கொடுக்க வேண்டும். உதாரணத்திற்கு, முன்பின் தெரியாத ஒருவர் ஏதேனும் உணவு பொருள் வாங்கிக்கொடுத்தால் அதை வாங்கி சாப்பிடக்கூடாது… அவர் வற்புறுத்தி அழைத்துச் செல்ல முயன்றால், அடுத்தவர் உதவிக்காக கூக்குரலிட வேண்டும்… அம்மா, அப்பா பெயரைச் சொல்லி, அவர்கள் அழைத்ததாக யாரென்றே தெரியாத ஒருவர் கூறினால் அவருடன் சென்றுவிடக்கூடாது… என்றெல்லாம் கூறி பயிற்சி கொடுத்து, அவர்களை பக்குவபடுத்த வேண்டும்.

* பள்ளிக்கு செல்லும் மாணவ- மாணவிகளை அடுத்தவர்களின் பாலியல் சில்மிஷங்களை கண்டிக்கும் தைரியத்தோடு வளர்க்க வேண்டும்.

* தற்காப்பு கலைகளை பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுப்பதும், எதிரிகளிடம் இருந்து அவர்களை தற்காத்துக்கொள்ள உதவும்.

* பெற்றோர்களின் இத்தகைய விழிப்புணர்வுடன், ஆசிரியர்களின் பங்களிப்பும் இருப்பது மாணவ-மாணவியருக்கு கூடுதல் பலத்தை தரும.

நன்றி- தினத்தந்தி

http://senthilvayal.wordpress.com

“தமிழ் குடிமகன்’ ஆக்குங்க : முதல்வருக்கு கோரிக்கை(சரக்குகளுக்கு தமிழ் பெயர்)

கோவையில் செம்மொழி மாநாடு நடந்து முடிந்த, “உற்சாகம்’ இன்னும் அங்கு குறையவில்லை. இதை நிரூபிப்பது போல், கோவையில் இருந்து ஒரு வாசகர், முதல்வருக்கு முகவரியிட்டு, நமக்கு அனுப்பியுள்ள, “இ-மெயில்’ கடிதம்: ஐயா, எல்லாரும் வியக்கும்படி, எங்க ஊரில செம்மொழி மாநாடு நடத்துனீங்க… எங்கும் தமிழ்… எதிலும் தமிழ்னு மாநாட்டில நீங்க முழக்கமிட்டீங்க… ஆனா, தமிழகத்தில ஒரு இடத்தில மட்டும், சுத்தமா தமிழ் இல்லாம, முழுக்க, முழுக்க இங்கிலீஸ்தான் ஆக்கிரமிச்சு இருக்கு. நீங்கதான் இந்த விஷயத்தில தலையிட்டு, ஒரு நல்ல முடிவா எடுத்து, தமிழ்பெயர் சூட்ட நடவடிக்கை எடுக்கணும்.

தமிழுக்கு மரியாதை இல்லாத அந்த இடம், “டாஸ்மாக்…’ அங்க இருக்கிற சரக்குக்கு எல்லாம், தமிழ்லே பேர் வைச்சு சாதாரண, “குடி’மக்களை, “தமிழ் குடிமக்களாக’ மாற்ற வேண்டுகிறேன். அதுக்காக, நானே சில பெயர்களை யோசிச்சு வைச்சிருக்கேன். இதை அப்படியே ஏத்துக்கணும்னு அவசியமில்லை. நீங்க வேணும்னா, இதுக்குன்னு தமிழ் புலவர்களைக் கொண்ட ஒரு குழு அமைச்சு, நல்ல, நல்ல பெயரா வையுங்க…

அவர் அனுப்பியுள்ள பட்டியல்:

சரக்கு பெயர் தமிழ் பெயர்

1. மிடாஸ் கோல்டு – தங்கமகன்
2. நெப்போலியன் – ராஜராஜசோழன்
3. கோல்கொண்டா – கங்கை கொண்டான்
4. வின்டேஜ் – அறுவடைத் தீர்த்தம்
5. ஆபிசர்ஸ் சாய்ஸ் – அதிகாரிகள் விருப்பம்
6. சிக்னேச்சர் – கையொப்பம்
7. ஓல்டு மங் – மகா முனி
8. ஓல்டு காஸ்க் – பீப்பாய் சரக்கு
9. கேப்டன் – தனிச் சரக்கு
10. ஜானிவாக்கர் – வெளியே வா
11. ஓட்கா – சீமைத்தண்ணி
12. கார்டினல் – பொதுக்குழு
13. மானிட்டர் – உளவுத்துறை
14. பேக் பைப்பர் – ”ஊத்து’க்காரன்
15. சீசர் – கரிகாலன்
16. மெக்டவல் – “மட்டை’ வீரன்
17. டிரிபிள் கிரவுன் – மூணு தலை
18. மேன்சன் ஹவுஸ் – உறுப்பினர் விடுதி
19. ராயல் சேலன்ஞ் – நாற்பதும் நமதே
20. ஹேவார்ட்ஸ் 5000 – ஓட்டுக்கு 5000
21. ஜிங்காரோ – சிங்காரி சரக்கு
22. கோல்டன் ஈகிள் – தங்க கழுகு
23. கிங் பிஷர் – மீன்கொத்தி
24. மார்பியூஸ் – மயக்கி

நன்றி- தினமலர்

http://senthilvayal.wordpress.com

கம்ப்யூட்டர் பாதுகாப்பு



கம்ப்யூட்டரில் நாம் பயன்படுத்தும் தகவல்கள், ஆவணங்கள், நிழற்படங்களைப் பல வேளைகளில் பாதுகாக்க வேண்டியுள்ளது. இவற்றிற்கான தொழில் நுட்பங்கள் பல வகையில் நமக்குக் கிடைக்கின்றன. அவை குறித்து இப்பகுதியில் விரிவாக எழுதப் பட்டுள்ளது. உங்களுடைய நினைவில் உள்ள அவற்றை, இந்த வினாடி வினா மூலம் புதுப்பித்துக் கொள்வோம்.
1.தகவல்களைத் தனிப்பட்ட முறையில் சுருக்கி, அதனை அதற்கான கீ உள்ள ஒருவர் மட்டுமே படிக்கும் முறையில் அமைக்கும் தொழில் நுட்பத்திற்கான பெயர் என்ன?
அ. Compression
ஆ.Systematic Variation
இ.Encryption
2.கம்ப்யூட்டர் பாதுகாப்பு குறித்த சொற்களில் Hash என்பது எதனைக் குறிக்கிறது?
அ. குக்கீஸ் அழிக்கும் தொழில் நுட்பம்
ஆ.சுருக்கப்பட்ட ஒன்றின் மதிப்பு (Encrypted Value)
இ. ரகசியமாகச் சுருக்கப்பட்ட ஒன்றினைத் திறக்கும் கீ (Encrypted Key)
3. SSL என்பது எதனைக் குறிக்கிறது?
அ. Secure Sockets Layer
ஆ. Secret Service Logrithm
இ.Systematic Security Level
4. Firewall என்பது என்ன?
அ.ஒரு ஆண்ட்டி வைரஸ் சாப்ட்வேர் தொகுப்பு
ஆ.இன்டர்நெட் பயன்பாட்டினைத் தொகுக்கும் ஒரு சாப்ட்வேர்
இ.இன்டர்நெட் இணைப்பு செயல்படுகையில் ஒரு வடிகட்டியாகச் (Filter) செயல்படும் ஒரு புரோகிராம்.
5. Proxy Server என்பது என்ன?
அ.முதன்மை சர்வர்களிலிருந்து கம்ப்யூட்டருக்குத் தகவல் செல்லும் முன், அவற்றைப் பெற்று கம்ப்யூட்டருக்கு அனுப்பும் ஒரு சர்வர்
ஆ.மெயில் சர்வர் போலச் செயல்படும் ஒரு சர்வர்
இ. உணவு விடுதிகளில் சாப்பிடுகையில், நம் டம்ளர்களில் தண்ணீர் இல்லாத போது, அதைப் பார்த்தவாறே வேறு ஒரு இடத்திற்கு, ஒரு வேலையும் இல்லாமல் செல்லும் பணியாளர்.
6. DDosஎன்பது எதனைக் குறிக்கிறது?
அ.Dangerous DOS open Security
ஆ.Digital Default of Servers
இ.Distributed Denial of Service
விடைகள்:
1. Encryption : தகவல்களை இவ்வழியில் சுருக்கி அமைக்கும்போது, அதற்கான கீ உள்ள ஒருவர் மட்டுமே, அதனைத் திறந்து விரித்துப் பார்க்க முடியும். இதனையும் கூட எப்படியாவது தெரிந்து கொண்டு, கீயை அமைக்கும் திருடர்கள் உள்ளனர். ஆனால் அது எப்போதாவது மட்டுமே நடைபெறும் ஒன்றாகும்.

2. Encrypted Value. Hash அல்லது Hash Value என்பது, ரகசியமான குறியீடுகளில் சுருக்கப்பட்ட ஒரு தகவலைக் காட்டும், பல கேரக்டர்கள் அடங்கிய தொகுப்பு. Hashing Algorithm என்பதன் வழியாக தகவல்களைக் கொண்டு சென்று இதனை உருவாக்கலாம்.

3. Secure Sockets Layer: தகவல்களை ரகசியக் குறியீடுகளில் பொதுவான முறையில் சுருக்குவது.

4.C. Firewall இண்டர்நெட் இணைப்பில் ஒரு வடிகட்டியாகச் செயல்படுகிறது.

5.A. Proxy Server கள் இன்டர்நெட்டில் இடைத் தரகர்கள் போலச் செயல்படுபவை. அவை, இணையத் தளங்களை மற்றும் பக்கங்களை, அவை உள்ள சர்வர்களிலிருந்து பெற்று, தேவை எனக் கேட்ட்கும் கம்ப்யூட்டருக்கு அனுப்பும்.

6.C.Distributed Denial of Service: சர்வர் ஒன்று ஒரு நேரத்தில், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கேள்விகளை மட்டுமே கையாள முடியும். இந்த சர்வரை வேண்டுமென்றே இயங்காமல் செய்திட, அந்த எண்ணிக்கைக்கு மேலாக, பல லட்சக்கணக்கில் கேள்விகளை அனுப்பலாம். மிகப் பெரிய அளவில், பல கோடிக் கணக்கில் கேள்விகள் ஒரு சர்வருக்குச் சென்றால், பன்னாட்டளவில் இன்டர்நெட் செயல்பாடே திணறத் தொடங்கிவிடும்.

http://ta.wordpress.com/

Monday, January 10, 2011

தனியார் மருத்துவமனைகளுக்கும் வருமானம் கலைஞர் டிவிக்கும் வருமானம்!


சென்னை குரோம்பேட்டையில் உள்ள மக்கள் விழிப்புணர்வு சங்கத்தின் தலைவர் வி.சந்தானம், தகவல் அறியும் உரிமை சட்டத்தில் டிசம்பர் 30-ம் தேதி இ.எம்.ஆர்.ஐ. தலைமைச் செயல் இயக்குநரிடம் இருந்து பெற்ற கேள்வி- பதில்களின் விவரம்:

கேள்வி: 108 ஆம்புலன்ஸ் சேவை சம்பந்தமான விளம்பரங்கள் சன் மற்றும் கலைஞர் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படுகின்றன. இது இலவச விளம்பரமா? அல்லது கட்டண விளம்பரமா? கட்டணமென்றால் ஒரு முறை விளம்பரத்துக்கு எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும்?

பதில்: 108 ஆம்புலன்ஸ் சம்பந்தமான விளம்பரம் இலவச விளம்பரம் அல்ல. கட்டண விளம்பரம்தான். ஒரு முறை பத்து விநாடிகள் விளம்பரத்துக்கு சன் டிவியில் ரூ. 23,474-ம், கலைஞர் டிவியில் ரூ. 9,700-ம் செலுத்த வேண்டும் என்று இ.எம்.ஆர்.ஐ. பதில் அளித்துள்ளது.

கேள்வி: இலவச ஆம்புலன்ஸ் சேவை அறிமுகப்படுத்தப்பட்ட நாள் முதல் விளம்பரத்திற்காக சன் மற்றும் கலைஞர் டிவி நிறுவனங்களுக்கு இன்று வரை செலுத்தப்பட்ட தொகை எவ்வளவு?

பதில்: இன்று வரை சன் மற்றும் கலைஞர் டிவி விளம்பரத்திற்காக செலுத்தப்பட்ட தொகை ரூ. 1,01,53,320 என்று பதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- தினமணி 9-1-2011

கலைஞர் காப்பீடு திட்டம் போல தனியார் மருத்துவமனைகள் கள்ளா கட்ட சிறப்பான சேவை செய்வது 108 ஆம்புலன்ஸ் சேவை. எல்லா இடத்திலேயும் நிரம்பி விட்ட தனியார் மருத்துவமனைக்கு நம்ம பணத்திலேயே மருத்துவம் செய்ய காப்பீடு திட்டம் அதற்கு உங்களை அழைத்து செல்ல 108 சேவை. இதற்கெல்லாம் முதலாளிகளிடம் இருந்து பங்கு வாங்குவது பத்தாது என்று 108 ஆம்புலன்ஸ் சேவை விளம்பரத்தில மக்கள் பையில் இருந்து ஒரு கோடி ரூபாயும் கொள்ளையடித்து விட்டார் கலைஞர்.

http://athikalai.wordpress.com/2011/01/10/108ambulance/


குழந்தைகளிடம் செல்பேசி தராதீர்கள்!


குழந்தைகளின் விளையாட்டுப் பொருட்களில் இன்று செல்பேசியும் இடம் பெற்றுவிட்டது. அம்மாவுடைய போன், அப்பாவுடைய போன் மற்றும் மாமா, மாமிகள் வைத்திருக்கும் செல்போனை அந்தக் குழந்தைகள் வாங்கி பெரியவர்கள் பேசுவதுபோலவே காதில் வைத்து “ஹலோ” சொல்வதை பெரும் பேறாகக் கருதி உள்ளம் மகிழ்வார்கள்.

“என்னமா பேசுது பாரு; அதுல என்னென்ன ஆப்ஷன் இருக்குன்னு எனக்குத் தெரியாது. அதுக்கு நல்லா தெரியும்” பெருமை பொங்க தன் பிள்ளை செல்போன் நோண்டுவதை பெற்றோர் ரசிப்பார்கள்.

என்னதான் விலைதந்து செல்போன் வாங்கினாலும் அதில் அனைத்தும் விஷத்தன்மையுள்ள கதிரலைகளின் வாயிலாகத்தான் இயங்குகின்றன. பெரியவர்களின் எலும்பு ஓரளவு வளர்ச்சியடைந்து கனமாகி இருக்கும். பாதிப்புகள் இதனால் சற்று குறைவு. ஆனால் குழந்தைகள் எலும்பு மெலிதானது. இதனால் கதிரலை உடனடியாக அவர்களை ஊடுருவி தாக்கும் அபாயம் உண்டு.

நாடெங்கும் இரண்டரை இலட்சம் கதிரலை பரப்பும் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 2ஜி, 3ஜி என்பது இந்தக் கோபுரங்களிலிருந்து கதிரலை பீய்ச்சி அடிக்கும் திறனைக் குறிப்பது. 2ஜி தகவல் பரிமாறலாம், சேமிக்கலாம், இணையத்தோடு தொடர்பு கொள்ளலாம். 3ஜி இவை அனைத்தையும் தாண்டி முன்னிலும் வேகமான செயல்பாடுள்ளது. நடந்தபடியே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை, வீடியோக்களை பார்க்கும் வகையில், செல்பேசியில் உள்ள அலை ஈர்ப்புத்திறன் கூட்டப்பட்டுள்ளது. அதைப்போல் அலைவீச்சும் பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

அணுகுண்டு கதிர்வீச்சு போலவே இந்தக் கதிரலைகள் வான்வெளி முழுவதும் வியாபித்து தொலைத் தொடர்பை உருவாக்குகிறது.

அறிவியலின் தொலைத்தொடர்பு மகத்தான கண்டுபிடிப்பு இந்த 3ஜி. அதே நேரம் இது ஓர் அறிவியலாகவும் உள்ளது. இளம் பிள்ளைகள் 3ஜி வசதியுள்ள மொபைல்களை கையாளும் போது அதன் கதிரலை பயன்படுத்தும் மனிதனின் மண்டையோட்டை, செவித்திறனை, தோலை, மூளையை வெகுவாக பாதிக்கும் என்கிறார் மும்பை ஐ.ஐ.டி. பேராசிரியர் கிரிஷ்குமார். இதற்காக இவர் நாடெங்கும் உள்ள அலைக்கற்றை கோபுரங்கள் வெளியிடும் கதிர்வீச்சை ஆய்வு செய்து இந்த முடிவை தெரிவித்துள்ளார்.

3ஜி என்பதை மூன்றாம் தலைமுறை அலைக்கற்றை என்பார்கள். ஆனால், அடுத்த தலைமுறை புற்றுநோயாளிகளாக மாறும், மாற்றும் அபாயம் உள்ளதாகத்தான் அதன் முடிவுகள் தெரிவிக்கின்றன.

பெல்ஜியம், போலந்து, பின்லாந்து, பிரான்ஸ், இஸ்ரேல், ருசியா முதலிய நாடுகளில் உள்ளவர்கள் கதிரலை உடலில் பட்டால் ஏற்படும் ஆபத்தை உணர்ந்த படிப்பாளிகள் என்பதால், அங்கெல்லாம் மொபைலை குழந்தைகள் தொட ஊக்குவிப்பதில்லை.

மீறி என்னதான் நடந்துவிடும் நம் குழந்தைக்கு, பார்த்துவிடலாமே! என எண்ணும் பணமுள்ள படிப்பில்லாதவர்கள் தங்கள் குழந்தை தவறி கீழே விழுந்தால் ஏற்படும் சிராய்ப்பு, இரத்தக் கசிவை கண்களால் பார்க்க இயலும். ஆனால் கதிரலை பாதிப்பு என்பது சட்டென்று தெரியாது. காலப் போக்கில் தான் அது தெரிய வரும்.

நரம்பு மண்டலம் தாக்கப்படுவதால் மனநல பாதிப்பு, இனம் புரியாத தலைவலி, நினைவாற்றல் குறைபாடு, தலை கிறுகிறுப்பு, அடிக்கடி உடல் சிலிர்ப்பு, தசைப்பிடிப்பு, மரத்துப்போதல், தசை மற்றும் மூட்டுக்களில் வலி, மனச்சிதைவு, உறக்கமின்மை இவைகளுடன் சமயங்களில், கைகால் செயலிழப்பு, வலிப்பு, மனநோய் என பலவும் கதிர்வீச்சால் உண்டாவது. குறிப்பாக விலை என்ன இருந்தாலும் சில மொபைல்களில் தொடர்பு கொண்டால் உரிய சிக்னல் கிடைக்காமல் நீண்ட நேரம் அழைப்பு சென்றபடி இருக்கும். இது போன்ற நிலை ஆபத்தானது. வலுவில் கதிரலையை தன்னால் இயன்ற அளவைவிட கூடுதலாக திறனை பயன்படுத்திடும்போது அந்த செல்பேசி பன்மடங்கு கதிரலையை நமக்குள் பரவ விடுகிறது.

ஆக நாகரீக பெருமைக்கான ஒரு சாதனமாக செல்பேசி இருந்தாலும் ஏகப்பட்ட ஆபத்தையும் உள்ளடக்கியுள்ளதால் உங்கள் குழந்தைகள் கையில்மட்டும் தயவு செய்து தராதீர்கள். அவர்கள் அழிவை அறியாத பிஞ்சுகள். அவர்கள் உடல் நலனோடு நோய் நொடியின்றி வாழ, அவர்களுக்காகத்தான் நான் சம்பாதிக்கிறேன் என்பது உண்மையானால் உங்கள் மொபைலை தயவு செய்து அவர்களிடம் விளையாட்டாகக் கூட தராதீர்கள்.

ஆயிரக்கணக்கான கோடிகளை இதில் முதலீடு போட்டு தொழில் செய்யும் நிறுவனங்களுக்கு உங்கள் மீதும் உங்கள் குழந்தைகள் மீதும் அக்கறை இருக்கும் என எதிர்பார்ப்பது தவறு. நாம்தான் கேடு வரும் முன்பு காத்துக் கொள்ள வேண்டும்.

http://newstbm.blogspot.com/2011/01/blog-post_3292.html