Monday, February 27, 2012

ஜாதிகள் உள்ளதடி பாப்பா


ஆர்.ரங்கராஜ் பாண்டே

இறுதியாக, பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது.

"ஜாதி, மத பேதமற்ற சமுதாயம் உருவாக, தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த' இனமானத் தலைவர், தமிழக முதல்வர் கருணாநிதியின் உள்ளத்தில் ஒளிந்திருந்த விஷயம், தன்னையும் மீறி அவரை வெளிப்படுத்திவிட்டது.

கடந்த 21ம் தேதி, சென்னையில் ஒரு நிகழ்ச்சி நடந்தது. நடிகர் ஜெமினி கணேசனின் 90வது பிறந்த நாள் விழா. தமிழகத்தில் நடக்கும் எந்த விழாவாக இருந்தாலும், விழா நாயகராக முதல்வர் கருணாநிதி தான் இருப்பார் என்பது, கடந்த நாலரை ஆண்டு நாட்டு நடப்புகளை கவனித்தவர்களுக்குத் தெரிந்திருக்கும். இந்த விழாவுக்கும் அவரே சிறப்பு அழைப்பாளர்.

தான் எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும், சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி நடக்கும் இடம் அல்லது நிகழ்ச்சியில் சம்பந்தப்பட்டவரோடு தன்னை எப்படியாவது தொடர்புபடுத்திக் கொள்வது முதல்வரின் பாணி. "முதல்வர் என்பதற்காகத் தான் அழைத்தார்கள்' என்றாகிவிடக் கூடாதாம்.

பூந்தமல்லிக்குச் சென்றால், "என் திரைப்படங்களின் ஒன்றின் நாயகிக்கு பூவிருந்தவல்லி என்று தான் பெயர் வைத்தேன்' என்பார். தூத்துக்குடிக்குச் சென்றால், "இங்கு தான் முதன் முதலில் கொடியேற்றினேன்.' திருச்சிக்குச் சென்றால், "குளித்தலையில் தான் நான் முதல் முதலில் போட்டியிட்டேன்.'

"கோவையில் தான் கதை, வசனம் எழுதக் குடியிருந்தேன்; சைதாப்பேட்டை வேட்பாளரை வெற்றி பெற வைத்து தங்க மோதிரம் வாங்கினேன்' என, அந்தப் பட்டியல் சென்றுகொண்டே இருக்கும். டெல்டா மாவட்டங்களைப் பற்றி கேட்கவே வேண்டாம். "எனக்குத் தெரியாமல் அங்கு எந்தத் தெருவும் கிடையாது' என்பார். அப்படிப்பட்டவர், ஜெமினி கணேசனுக்கும் தனக்கும் எந்தத் தொடர்பையும் ஏற்படுத்திக்கொள்ளாவிட்டால் எப்படி?

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி என்றொரு புரட்சிப் பெண். பாடப் புத்தகத்தில் படித்திருப்பீர்கள். தமிழகத்தைச் சேர்ந்தவர். எம்.பி.பி.எஸ்., படித்த முதல் பெண். இந்தியாவிலேயே எம்.எல்.சி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்ணும் கூட. அவர், ஜெமினி கணேசனுக்கு அத்தை முறை. அவரை முதல்வர் எப்படி அறிமுகப்படுத்துகிறார் பாருங்கள் :

ஜெமினியின் சின்ன தாத்தா நாராயணசாமி. அவர், குழந்தைக்காக, இரண்டாம் தாரமாக, "எங்கள் சமுதாயத்தைச் சேர்ந்த' சந்திரம்மா என்ற பெண்ணை மணந்தார். சந்திரம்மா மூலம் நான்கு குழந்தைகள் பிறந்தன. அவற்றுள் முதல் குழந்தை தான் முத்துலட்சுமி ரெட்டி.

தலைவரின் தொடர்பைக் கவனித்தீர்களா? இதுவரை முத்துலட்சுமி ரெட்டியைப் பெருமைப்படுத்தியவர்கள் யாரும், அவருடைய ஜாதியைக் கேட்டறிந்ததில்லை. அதை எடுத்துச் சொன்னதும் இல்லை. முத்துலட்சுமி சேர்த்துக்கொண்ட பரிசுகளும், பட்டங்களும், சிறப்புகளும், அவருடைய உழைப்புக் கிடைத்தனவே அன்றி, அவருடைய ஜாதிப் பின்னணிக்கு கிடைத்தவை அல்ல. அந்த வகையில், முத்துலட்சுமி ரெட்டியை ஒரு ஜாதி வளையத்துக்குள் சுருக்கிய பெருமை, தலைவரைத் தான் சேரும்.

முதல்வருக்கு, தான் பிறந்த ஜாதி மீது பற்றும், பாசமும் இருப்பதால் தானே, "இசை வேளாளர் சமுதாயத்தில் பிறந்த' என்று கூட குறிப்பிடாமல், "எங்கள் சமுதாயத்தைச் சேர்ந்த' என்ற அடைமொழியைக் கொடுக்கிறார். இவரை விட, தமிழகத்தையே சமத்துவபுரமாகக் காண விழையும் தலைவர், வேறு யாராக இருக்க முடியும்? அதோடு நிறுத்திக் கொள்ளவில்லை. மேலும் சொல்கிறார்:

இதை இந்த விழாவில் ஏன் சொல்ல வேண்டுமென்றால், ஜெமினி கணேசனின் அத்தை முத்துலட்சுமி ரெட்டி. எனவே, எனக்கும் ஜெமினி கணேசனுக்கும் சொந்தம் இருக்கிறதா, இல்லையா? என்னை, வாலியோ அல்லது பாலச்சந்தரோ பிரித்துப் பார்த்து, "உனக்கு சொந்தம் இல்லை' என்று சொல்ல முடியாது அல்லவா?' என்கிறார். முத்துலட்சுமி ரெட்டியை மட்டுமின்றி, ஜெமினி, வாலி, பாலச்சந்தர் என மூன்று ஜாம்பவான்களையும் ஜாதி வளையத்துக்குள் அடக்குகிறார். மூவரும் ஒரே ஜாதி என அடையாளம் காட்டுகிறார்.

விழா தொடர்பான விஷயங்கள் தவிர, இதுவரை எங்குமே, எதுவுமே பேசியிராத பாலச்சந்தர் ஏன், "உனக்கு சொந்தமில்லை' என சொல்லப்போகிறார்? கலைஞரை வாழ்த்துவதைத் தவிர தொழில் வேறில்லை என வாழ்ந்துவரும் வாலி ஏன் கேட்கப்போகிறார்? இவர்களின் ஜாதியைச் சுட்டிக்காட்டுவதன்றி, முதல்வருக்கு வேறு எந்த நோக்கமும் இருக்கக்கூடும் என என்னால் யூகிக்க முடியவில்லை.

இந்த ஒரு நிகழ்ச்சி தான் என்றில்லை. "தாழ்த்தப்பட்டவர்களின் சம்பந்தி நான்; பரிதிமாற் கலைஞர் பிராமண சமுதாயத்தைச் சேர்ந்தவர்; தாழ்த்தப்பட்டவராக இருப்பதால் தான் "ஸ்பெக்ட்ரம்' ராஜா மீது புகார் சொல்லப்படுகிறது; பிற்படுத்தப்பட்டவனாக பிறந்தது தான் நான் செய்த பாவமா?' என, எவரை எடுத்தாலும், எதை எடுத்தாலும், ஜாதியைச் சொல்லி அடையாளம் காட்டுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

"நீ யார்?' என்று நம்மை யாரேனும் கேட்டால், "நான் முதலியார்; ரெட்டியார்; நாயுடு; தேவர் என்றெல்லாம் சொல்லாமல், "நான் தமிழன்' என தலைநிமிர்ந்து சொல்லும் காலம் வரவேண்டும்' என அடிக்கடி சொல்லி வருகிறார், துணை முதல்வர் ஸ்டாலின்.

இதை முதல்வர் படித்ததில்லையோ?

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=132174&Print=1

Sunday, February 26, 2012

மக்களைக் காப்பது விளையாட்டல்ல…

February 25, 2012
-
அச்சிட அச்சிட

சென்னையில் அண்மையில் ஒரு மாத காலத்துக்குள் இருவேறு வங்கிகளில் பகல் நேரத்திலேயே கொள்ளையர்கள் கைவரிசை காட்டினார்கள். துப்பாக்கி முனையில் நடந்த இக்கொள்ளைச் சம்பவங்கள் மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கின. இவற்றில் தொடர்புடையதாகக் கூறப்படும் வெளிமாநிலத்தைச் சார்ந்த ஐந்து கொள்ளையர்கள் வேளச்சேரி அருகே பிப். 23 அன்று சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

கடந்த பிப். 20 ல் திருப்பூரில் காவல் நிலையம் எதிரில் உள்ள ஒரு பிரபல நகைக்கடையில் இரவில் புகுந்த திருடர்கள் சாவதானமாக 38 கிலோ நகையைத் திருடிச் சென்றிருக்கின்றனர். திருடர்கள் வெளிமாநிலத்தவர்களாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. அவர்களைத் தேடி காவலர் தனிப்படைகள் அலைகின்றன.

இரண்டு மாதங்களுக்கு முன்னர் அதே திருப்பூரில் ஒரு பிரபல நகை அடகுக் கடையில் கொள்ளை நடந்தது; ஆயினும் காவல்துறையின் புலனாய்வால் குற்றவாளிகள் சிக்கினர்.வள்ளியூரில் ஒரு வங்கியில் கொள்ளை முயற்சி பிப். 23 ம் தேதி நடந்துள்ளது. இது போல மாநிலத்தின் பல இடங்களில் ஏடிஎம் இயந்திரங்களிலும் கொள்ளை சம்பவங்கள் அரங்கேறி உள்ளன. வீடு புகுந்து கொள்ளை அடிப்பது அதிகரித்து வருவதை மாலைமலர் பத்திரிகை படித்தாலே உணர முடிகிறது.

இது போன்ற நிகழ்வுகள் தற்போது ஆங்காங்கே தொடர்ந்து நடந்துவருவது கவலை அளிக்கிறது. குற்றம் நடந்த பின்னர் காவல்துறை திறமையாகச் செயலாற்றி வருவது திருப்தியே. எனினும், குற்றம் நடக்காமல் தடுப்பதில் தான் ஒரு அரசின் சிறப்பு இருக்க முடியும். அரசின் முக்கிய கடமைகளில் ஒன்று குடிமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது. அதற்காகவே காவல்துறை இயங்குகிறது. குற்றம் நிகழாமல் தடுப்பதே இதன் முதன்மைப்பணி. குற்றம் நிகழும் தருணங்களில் விரைந்து செயல்பட்டு குற்றவாளிகளைக் கண்டறிந்து அவர்களுக்கு தண்டனை பெற்றுத் தருவதும் அரசின் கடமை. அப்போது தான் குற்றம் புரிய அஞ்சும் நிலை உறுதியாகும்.

எனவே தான், ஒவ்வொரு காவல் நிலையத்திலும் சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு என்ற இரு பிரதானப் பிரிவுகள் செயல்படுகின்றன. சட்டம் ஒழுங்குப் பிரிவின் கடமை, சமுதாயத்தின் ஒழுங்கு குலையாமல் பாதுகாப்பதும், குற்றம் நிகழாமல் தடுப்பதுமே. குற்றவாளிகளை முடக்குவதும் குற்றங்களைப் புலனாய்வதும் குற்றப்பிரிவின் பணி. ஆக, இவ்விரு பிரிவுகளில் சட்டம் ஒழுங்கே முதன்மையானது என்பது விளங்கும்.

இதில் முதன்மைப் பணியில் கோட்டை விட்டுவிட்டு, கொள்ளையர்களை சுட்டுக் கொல்வதில் பயனில்லை. ஏனெனில் கொள்ளையில் இழந்த பொருளின் பெரும் பகுதி மீட்கப்பட வாய்ப்பில்லாமலே போகக் கூடும்; தவிர, கொள்ளையில் தொடர்புடைய பலர் தப்பிக்கவும் உதவக்கூடும். உண்மையில், குற்றவாளிகளைப் பிடிப்பதோ, கொல்வதோ, தும்பை விட்டு வாலைப் பிடிப்பது போலத் தான் கருதப்படும். ஆகவே, குற்றங்கள் நடக்காமல் தடுப்பதே அரசின் பிரதானக் கடமை. ஆனால், நமது அரசு என்ன செய்கிறது?

கடந்த ஆண்டு மே மாதம் ஜெயலலிதா தலைமையில் மூன்றாவது முறையாக அதிமுக அரசு அமைந்தபோது தமிழகமே நிம்மதிப் பெருமூச்சு விட்டது. திமுக அரசின் குடும்ப அரசியலும், அராஜகங்களும், கரைகாணாத ஊழல்களும் மக்களுக்கு ஏற்படுத்திய அதிருப்தியே அதிமுகவின் வெற்றிக்குக் காரணமானது. புதிய அரசால் தமிழகம் பொலிவு பெறும் என்ற எதிர்பார்ப்பு அனைவருக்குமே இருந்தது.

ஆரம்பத்தில் எல்லாம் நன்றாகத் தான் இருந்தது. ஆனால் யார் கண் பட்டதோ தெரியவில்லை. அதிமுக அரசின் பல நடவடிக்கைகளும் பலத்த எதிர்ப்பையும் நீதிமன்ற வழக்குகளையும் சந்தித்தன. சமச்சீர் கல்வி, கிராம நலப் பணியாளர்கள் பதவி நீக்கம், பேருந்துக் கட்டண உயர்வு, அடிக்கடி அமைச்சர்கள் மாற்றம், அதிகாரிகள் இடமாற்றம், கடுமையான மின்வெட்டு,… என அரசின் சொதப்பல்கள் தொடர்ந்தன.

ஜெயலலிதா முதல்வரானவுடன், ‘மாநிலத்தில் நிலவும் கொள்ளைச் சம்பவங்கள் கட்டுக்குள் வருமா?’ என்று செய்தியாளர்கள் ஒரு பேட்டியில் கேட்டனர். அதற்கு பதில் அளித்த முதல்வர் ஜெயலலிதா, ‘திமுக ஆட்சியின்போது தமிழகத்தில் உலாவிய கொள்ளையர்கள் (யாரையோ சொல்லி இருக்கிறார். அவர்கள் யார்?) ஆந்திராவுக்குத் தப்பிவிட்டார்கள்’ என்றார்! ஆனால், இப்போது மாதந்தோறும் மாநிலத்தின் ஏதாவதொரு பகுதியில் கொள்ளைகள், கொலைகள் நிகழ்வது வாடிக்கையாகிவிட்டது. இதற்கு மின்வெட்டைக் காரணமாக மக்கள் கூறுவது அதிர்ச்சி அளிக்கும் தகவல்.

ஆனால் அரசோ, இவை எதைப் பற்றியும் கவலைப்படாமல், திமுக முன்னாள் அமைச்சர்கள் மீது நிலப்பறிப்பு வழக்குகள் தொடுப்பதிலேயே குறியாக இருந்து வருகிறது. முந்தைய ஆட்சியில் திமுகவினர் நடத்திய அராஜகங்களில், அப்பாவிகளிடம் மிரட்டி நிலங்களைப் பறித்தது மாபெரும் குற்றம்; அதில் சந்தேகமில்லை. ஆனால், முன்னாள் அமைச்சர்கள் மீதான பல வழக்குகள் இட்டுக் கட்டப்பட்டவையாக இருப்பதைக் காணும்போது, இந்த நிலப்பறிப்பு வழக்குகளே வீணாகிவிடுமோ என்ற கவலையும் எழுகிறது.

ஆட்சிக்கு வந்து பத்து மாதங்கள் முடிவடையும் நிலையில், இன்னும் முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்குகளைப் பதிவு செய்து கொண்டிருப்பது, அவர்கள் மீது அனுதாபத்தையே உருவாக்கும்; அரசின் செயல்பாடு பழிவாங்கும் போக்காக கருதப்பட்டுவிடும் என்பதை ஜெயலலிதா உணர வேண்டும். அவருக்கே 1996 ல் இதே போன்ற நிலையை திமுகவினர் ஏற்படுத்தியதை மறந்திருக்க மாட்டார்.

ஜெயலலிதாவை முடக்க கருணாநிதி நடத்திய சட்ட விளையாட்டுகளால் தான், அவர் மீது மக்களுக்கு மீண்டும் பரிவுணர்ச்சி வந்தது. அதே போன்ற சூழலை திமுகவின் முன்னாள் அமைச்சர்களுக்கு அதிமுக அரசு ஏற்படுத்திவிடக் கூடாது. தவிர, செத்த பாம்பை அடிப்பதில் எந்த வீரமும் இல்லை.

அடுத்து, தனது முன்னாள் உயிர்த்தோழி சசிகலாவைத் துரத்திய பிறகு, அவருடன் தொடர்புள்ளவர்கள் திட்டமிட்டு வேட்டையாடப்படுகிறார்கள். ராவணன், திவாகரன், நடராஜன், என ஜெயலலிதாவின் முன்னாள் நண்பர்கள் பலரும் இப்போது சிறைக்குள் இருக்கிறார்கள். இதற்காகவும் நமது காவல்துறை மெனக்கெடுகிறது; பல வழக்குகள் தூசு தட்டப்படுகின்றன; பல புதிய புகார்கள் பதிவாகின்றன. இதனால், கட்சிக்குள்ளும் நம்பகமற்ற சூழ்நிலை உருவாகி வருகிறது.

சசிகலா கும்பலுடன் தொடர்பு கொண்டவர் என்று உளவுத்துறையால் சுட்டிக் காட்டப்படும் அதிகாரிகளும், அமைச்சர்களும், உள்ளாட்சிப் பிரதிநிதிகளும், கட்சி நிர்வாகிகளும் அதிகார மையங்களிலிருந்து உடனடியாக அகற்றப்படுகிறார்கள். இந்த இசை நாற்காலி விளையாட்டுக்கு உதவுவதற்கே காவல்துறையின் உளவுப் பிரிவுக்கு நேரம் சரியாக இருக்கிறது.

இவ்வாறாக, அதிமுக அரசின் கவனம் முழுவதும் எங்கு செலுத்தப்பட வேண்டுமோ அங்கு செலுத்தப்படாமல், தேவையற்ற பகுதிகளில் விரயமாகிறது. சட்டம் ஒழுங்கைப் பராமரிக்க வேண்டிய காவலர்கள், முன்னாள் அமைச்சர்களின் பழைய சரித்திரத்தை புரட்டிக் கொண்டிருக்கிறார்கள். அரசை விழிப்புணர்வுடன் காக்க வேண்டிய உளவுத்துறையோ சில்லறை விஷயங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், பொருளாதாரச் சீரழிவின் எதிரொலியாக கொள்ளையர்கள் தமிழகத்தில் வேட்டை நடத்தி வருகின்றனர். அதைத் தடுக்கும் ஆற்றலின்றி கையைப் பிசைகிறது காவல்துறை. அதன் சக்தி ஒருமுகப்படாமல் விழலுக்கு இறைக்கப்படுவதே காரணம் என்பதை இனியேனும் நமது முதல்வர் உணர வேண்டும்.

காவல்துறையை தன்வசம் வைத்துள்ள முதல்வர் அதன் முக்கியத்துவத்தை அறியாதவர் அல்ல. துணிச்சலான பெண்மணி, தேசநலனில் விட்டுக் கொடுக்காதவர், காவல்துறை சுயமாக இயங்கச் செய்பவர்,.. என்றெல்லாம் அவரைப் பற்றிக் கூறப்பட்டதுண்டு. அந்தக் கருத்துக்கள் பொய்யாகாமல் காக்க வேண்டிய பொறுப்பும் முதல்வருக்கே உண்டு.

http://www.tamilhindu.com/2012/02/tn-law-and-order-and-crimes/

Saturday, February 25, 2012

The rise and rise of tomorrow’s Prime Minister Narendra Modi


o politician in independent India has been demonised in such a relentless, Goebbelsian manner as Narendra Modi, and no politician has withstood it with as much resilience and courage as him, notwithstanding the entire Central government, influential sections of the media machinery and civil society arraigned against him.

His dark patch started with the unfortunate Godhra train massacre and the ensuing communal riots in Gujarat in 2002, where several innocent people lost their lives. A train carrying non-violent harmless karsewaks were set on fire and nearly 60 persons were burnt to death. Understandably, but regrettably, this provoked retaliation and mayhem resulting in many innocent members of the minority community losing their lives and suffering other indignities. It is equally true that the desire for revenge did paralyse the will of some law enforcement agencies, including some prosecutors and judges. Serious steps had to be taken to restore the confidence of the victims of revenge in the legal and judicial system of the state.

Today, vast sections of civil society see in Narendra Modi the next Prime Minister of India. I hope he will plant more visible footprints on the international seashore. He has to speak of peace and a durable solution to the Kashmir problem with the rulers of Pakistan.

The most diabolical role was played by the Congress government at the Centre. A bogus commission was appointed to whitewash the Godhra tragedy to establish that the attack on the train was not the result of a conspiracy of some evil minded Muslims, but an accidental stove fire. This serious crime by the Congress government was fully exposed when a Special Investigation Team appointed by the Supreme Court made their own independent investigation and reiterated that the burning of the pilgrims was a concerted plan by those who must have known that it will inevitably lead to retaliation and atrocities against the minorities, a finding fortified by recent court judgments. Their evil calculations proved to be right. Obviously, the planners wanted India to get a bad name, its national unity and integrity shaken and its defence against scheming neighbours enfeebled.

The unfortunate riots were followed by the state elections, the results of which made the psephologists run for cover. One is reminded of a story, which may well be apocryphal, but is fairly apposite and bears repetition. The Viceroy of India, Lord Linlithgow, wanted to hold an open air reception in Simla and sought, and received, the assurance of the weather bureau that there wouldn't be any showers on that day. But while strolling on the mall, he encountered a farmer and his donkey. Proletarian as he pretended to be, he struck up a conversation with him and made the same enquiry. The farmer looked at his donkey and said, "Whenever my mate's ears shake the way they are doing now, it just pours." The Viceroy made light of the donkey signal, but his evening party was a big fiasco. In anger, he had the weather station removed to faraway Pune as punishment. I hope the media will never again mess with Narendra Modi or Gujarat elections. Modi won a landslide victory, which even he and his followers could not have imagined or hoped for. I congratulated him for his brilliant victory, but I sincerely advised him that he should wear a look of absolute humility; he should publicly own that something had seriously gone wrong and that he should loudly proclaim that India could never go forward and retain its independence and sovereignty unless Hindus and Muslims were locked in an embrace of love and mutual understanding. He must declare his firm resolve to bring back to the minorities a feeling of absolute security and an assurance of every kind of protection by the powers of the state. Modi thought out and reasoned his strategy and since then his stature has risen manifold to heights rarely attained before.

Today, vast sections of civil society see in him the next Prime Minister of India. I hope he will plant more visible footprints on the international seashore. He has to speak of peace and a durable solution to the Kashmir problem with the rulers of Pakistan. He must project himself as a great democratic leader of the world and a fighter for human rights and justice the world over. On the domestic front, I am proud to see him winning Muslim hearts by presenting to them the real Hindutva, which even the Supreme Court had to acknowledge and admire. Let not the real Hindutva be confused with its counterfeit version, which unfortunately gains currency during the course of electoral battles.

he policies and conduct of Narendra Modi may be compared with those of the late Rajiv Gandhi. The sad assassination of his mother led to what may accurately be described as a virtual genocide of the Sikhs. Armed bands of hooligans and murderers went around the streets and colonies of Delhi in search of innocent Sikhs, sought them out and slaughtered them mercilessly. We saw some Sikhs being burnt alive on public roads while crowds watched the heartrending scenes. Even the then Sikh President could not move a finger to help the unfortunate followers of Guru Nanak. I cannot forget those shameful days even now. All that the new Prime Minister Rajiv Gandhi had to say was a defiant, "When a big tree falls the earth must shake". Never did the Congress leadership apologise for the atrocities and the murders. It is the greatness of the Sikh community that they have forgiven the Congress.

In a corruption ridden country where the chief source of corruption is the Congress and its leaders, Narendra Modi shines for his impeccable integrity. He has focused his entire energy on building in Gujarat an able administration and good governance. He has achieved phenomenal development and economic growth, and at the same time bolstered social inclusiveness. Through these he has worked hard to regain the confidence of the minorities, even as the relentless and pervasive hate campaign against him has continued unabated in the electronic media, among the fashionable intellectuals and civil society activists, who have become the media sweethearts.

http://www.sunday-guardian.com/analysis/the-rise-and-rise-of-tomorrows-prime-minister-narendra-modi

Friend, father & philosopher of black money is Chidambaram


alaniappan Chidambaram, whom I shall for the sake of brevity call just Chidambaram, is best seen through black and white. And please don't get me wrong and accuse me of racism. I refer not to epidermis or mane, but to the economic colour of money. Some of his greatest contributions to the economy of India are his brilliant pioneering initiatives for changing the colour of money from black to white. And this passion has never left him.

Many of us have forgotten the Voluntary Disclosure of Income Scheme (VDIS) 1997, which he announced when he was Finance Minister with the United Front government, granting income-tax defaulters indefinite immunity from prosecution under the Foreign Exchange Regulation Act, 1973, Income Tax Act, 1961, Wealth Tax Act, 1957, and Companies Act, 1956, in exchange of self-valuation and disclosure of income and assets. The scheme was brilliantly conceived. While all schemes in the past valued declared assets at current prices, VDIS 1997 brought in an arbitrary date of 1 April 1987. Gold and silver hoarders, and large property holders got an exceptional bonanza on this valuation system. Further, proof of purchase was not insisted upon, which gave complete freedom to the confessors to fudge any date they wanted to their own financial advantage and further plunder of the country. So, even if gold was bought after 1987, it could be shown as having been bought before 1987, and it was a win-win game for all stakeholders to rake in the cuts. The Comptroller and Auditor General of India condemned the scheme in his report as abusive and a fraud on the genuine taxpayers of the country. But the issue was forgotten, and the illustrious career of Palaniappan Chidambaram rose to greater heights in the UPA regime.

Those were his innocent days. What a long way he has come since the era when he was cooking up VDISs, so utterly transparent, that the loopholes and avenues to give relief to the looters stared you in the face. The world economy was also then a little simpler than it is today, and his best achievement was getting caught about his investments in Fairgrowth, which was involved in the Securities Scam of 1992. Chidambaram had to resign for this utterly transparent investment in a company whose scam would have paid rich dividends. Unfortunately, he was not Finance Minister at the time and did not have the machinery to hush things up, and could only remotely control the markets, unlike his present capabilities as former Finance Minister and thereafter.

Being Finance Minister in the UPA government was his finest hour. He could fiddle around with share markets, capital markets, banks, financial instruments, such as, securities, participatory notes, tax treaties, not to speak of spectrum sale, and use his extraordinary innovative powers of black money magic to plunder our country with complete impunity. He assiduously cultivated the media with his clipped English accent (that led him down, now and then), occasional freebies, and sustained shadows of the Enforcement Directorate that he commanded.

hidambaram cannot get black money out of his blood. Dr Subramanian Swamy has clearly stated in his website, "I now have further information from my usually reliable sources in the Union Government that the tapping of Finance Minister Mr. Pranab Mukherjee and his close associate in the Ministry, enabled Mr. Robert Vadra the son-in-law of Ms. Sonia Gandhi and Mr. Karthik son of Mr. P. Chidambaram, to use the data thereby collected to manipulate and rig the Mumbai stock market. Earlier these data were directly provided by the then Finance Minister Mr. Chidambaram. I demand that the SEBI be asked by PM to initiate 'Insider Trading' investigation and prosecution of Mr. Vadra and Mr. Karthik."

If what is put out by Dr Subramanian Swamy is false why doesn't Chidambaram sue him?

The dark clouds of the 2G scam and the repeated evidence being given by A. Raja and other accused of his tacit involvement and other acts of omission and commission are menacingly closing in on Chidambaram. He is losing his cool, and more importantly, losing his carefully clipped English accent to its more indigenous roots more often. And like his colleague Digvijay Singh, his mind seems to be disintegrating to a stage where he has started talking gibberish. Take this, for example: in reply to the BJP demand for his resignation for his involvement in the 2G scam, Chidambaram claims that the BJP is targeting him since he initiated a probe by the NIA into Hindu terror. Can any rational person see the connection between the two?

Take also his comments regarding the recent Mumbai blasts. As Home Minister, instead of taking stock of the situation, and providing leadership, the only intelligent thing he could think of saying was, "No intelligence is not intelligence failure." Even a college debating society expects better logic. It's something like saying "illness is not a failure of health" or "impotence is not a failure of potency".

Chidambaram's special financial skills have diversified into electoral politics also. He has the distinction of having been declared defeated in the last Lok Sabha election, after which he galvanized his special skills and local machinery, in particular, a data entry operator, and doctored a marginal victory on the recount. That is quite a record for fraud. And can one forget how the Indian Bank was cleaned up and left with only non-performing assets thanks to him and his Tamil Maanila buddies?

Chidambaram's record as Home Minister has been disastrous. Neither has he made any impact on internal security, with the worst massacres of his own paramilitary forces taking place in his time, nor on terrorism, which carries on in complete complacency because there are neither effective preventive or punitive systems in place, nor political will and national legislation to combat terrorism. It is on record and in the public domain that the Home Ministry gave incorrect names of India's most wanted list of terrorists allegedly hiding in Pakistan, some of whom were tracked living in India or in custody. Is this a testament to his fabled efficiency and commitment?

What a laughing stock we must be before the world. It is almost as if India is determined that it shall not combat terrorism, shall not have enabling legislation as enacted by the US, such as the Homeland Security Act 2002, and the Prevention of Terrorism Act 2005 of UK and similar legislations in European governments. India is determined not to have an effective national agency on the lines of the Homeland Security Department of the US. The ramshackle National Investigation Agency showed itself as a complete failure during the recent Mumbai attacks. Understandable, because its only mandate appears to be to investigate "Hindu terror", the last refuge for failed and hopeless Congressmen like Chidambaram. The CCTNS, JIC, ARC, NTRO (presently in another scam), and NCTC remain effete, scattered and unmonitorable, even by the Home Ministry. With such an unequivocal determination by the UPA government not to address terrorism effectively, I can only grieve for my country.

http://www.sunday-guardian.com/analysis/friend-father-a-philosopher-of-black-money-is-chidambaram

அம்மா தாயே ஊழல் பிச்சை போடு...



பிரதமர் மன்மோகன் சிங் சாப்பாட்டு மேஜையில் சோகமாக அமர்ந்து சப்பாத்தியை ஆள்காட்டி விரலால் கிள்ளி கொண்டிருந்தார் அவர் எதிரே சாம்பார் சாதத்தை ஒரு பிடிபிடித்த திருப்தியோடு அமர்ந்திருந்த உள்துறை அமைச்சர் சிதம்பரம் எதிர்க்கட்சிகாரர்கள் கொடைச்சல் கொடுக்கிறார் என்று வருத்தபட்டால் நியாயம் இருக்கிறது சுப்ரமணிய சாமி ஆதாரத்தை கோர்டில் காட்டிவிடுவாரோ என்று பயப்படுவதில் அர்த்தம் இருக்கிறது ஆனால் அந்த பயம் எல்லாம் கூட எனக்கு சட்டையில் ஒட்டிய தூசி தான் இந்த ராகுல் காந்தி பேசுவதை பார்த்தால் தான் தொடை நடுங்குகிறது என்று பிரதமரிடம் அழாத குறையாக சொல்லிக்கொண்டிருந்தார்

நானும் அவர் பேசியதை பேப்பரில் படித்தேன் இவர் காட்டுகிற பூச்சாண்டியில் நமக்கு குலை நடுங்குகிறது ஊழல் வாதிக்கு காங்கிரசில் இடமில்லை என்கிறாரே ஒருவேளை சோனியாகாந்தியை கட்சியை விட்டு துரத்துவதற்கு சொந்த மகனே சதி செய்கிறாரோ என்றும் எண்ண தோன்றுகிறது அந்த ஆள் பேசியதை படித்த நேரமுதல் நிம்மதியாக மூச்சிவிட முடியவில்லை நிம்மதியாக ஒருகவளம் சாப்பிட முடியவில்லை எல்லாம் நம் தலையெழுத்து என்று பிரதமரும் தன்பாட்டிற்கு புலம்பி கொண்டிருந்தார்

அந்த நேரம் உள்ளே வந்த அதிகாரி ஒருவர் உங்கள் இருவரையும் சோனியா மேடம் அவசர ஆலோசனைக்கு கூப்பிடுகிறார்கள் என்று சொன்னார் அதை கேட்டவுடன் இருவர் முகமும் வியர்த்து விட்டது படபடப்பு அதிகரித்து இருப்பது அவர்கள் கைகள் நடுங்குவதிளிருந்து தெரிந்தது என்ன ஆலோசனையோ என்ன கூட்டமோ ஒன்றும் புரியவில்லை பிரதமர் பதவி விட்டு வீட்டுக்கு போ என்று சொல்லப்போகிறாரோ என்னவோ எதுவாக இருந்தாலும் நான் முன்னால் போகிறேன் நீங்கள் பின்னால் வாருங்கள் என்று சிதம்பரத்திடம் கூறிவிட்டு பிரதமர் அவசர அவசரமாக கிளம்பினார்


சோனியா காந்தி தனது இல்லத்தில் அவசர ஆலோசனை கூட்டம் நடத்த ஆரம்பித்தார் பிரதமர் மன்மோகன் சிங் சாப்பிட்ட கையை கழுவாமலே கூட்டத்துக்கு வந்தார் என்ன மிஸ்டர் மன்மோகன் கையை கழுவி விட்டு வரக்கூடாதா என்ற கேட்ட சோனியாவிடம் நீங்கள் கூப்பிட்டதாக சொன்னார்கள் கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை அவசர அவசரமாக வந்து விட்டேன் என்று பிரதமர் அசடு வழிந்தார்

அப்போது தான் உள்ளே நுழைந்த உள்துறை மந்திரி சிதம்பரம் மேல்மூச்சி கீழ்மூச்சி வாங்கி நின்றார் அவரை பார்த்து என்ன சிதம்பரம் சார் பதட்டமா இருக்கீங்க என்று சோனியா கேட்கவும் ஒன்றும் இல்லை மேடம் எனக்கும் பிரணாப் முகர்ஜிக்கும் நீங்கள் ஆள் அனுப்பியிருக்கிறீர்கள் என்று கேள்வி பட்டேன் முகர்ஜி வருவதற்குள் நான் வரவில்லை என்றால் அவர் என்னை பற்றி எடாக்கூடமாக எதாவது போட்டு கொடுத்து விடுவார் நீங்களும் நம்பி விட்டீர்கள் என்றால் என்னை காப்பாற்ற யாருமே இல்லாமல் போய்விடுவார்கள் என்று தழுதழுத்த குரலில் சிதம்பரம் பதில் சொன்னார்


கவலை படாதீங்க நான் அவர் சொல்வதை நம்ப மாட்டேன் அவரென்ன வேறு யார் யாரை பற்றி புகார் சொன்னாலும் அதை நம்புவது இல்லை என்று உறுதியோடு இருக்கிறேன் புகார்களை எல்லாம் நம்பி நடவடிக்கை எடுத்தேன் என்று வைத்து கொள்ளுங்கள் நமக்கு நாலு காசு யார் தருவார் என்று சோனியா பதில் சொல்லவும் சிதம்பரம் மனது குளிர்ந்து போய் விட்டது

நீங்கள் சொல்வதை கேட்டால் சந்தோசமாக இருக்கிறது உங்கள் பிள்ளையாண்டான் பேசுகிற பேச்சை பார்த்தால் அடிவயிறு கலங்குகிறது மேடம் ஊழல் செய்தவர்களுக்கு காங்கிரசில் இடம் இல்லை என்கிறார் அவர்களை உண்டு இல்லை என்று ஆக்கி விடுவேன் என மிரட்டுகிறார் மிகவும் பயமாக இருக்கிறது என்று பிரதமர் மன்மோகன் சிங் அழாத குறையாக பேசினார்

ஆமாம் மேடம் நம்ம பிரதமர் சொல்வது நூற்றுக்கு நூறு சரி ராகுல் காந்தி தீடிர் தீடிரென பற்றவைக்கும் அதிர் வேட்டுகள் இதையத்தை பிளந்து விடும் போல் இருக்கிறது ஊழல் செய்தவர்களுக்கு காங்கிரசில் இடம் இல்லை என்றால் நாங்கள் எல்லாம் எங்கே போய் நிற்போம் எங்களுக்கு ஆதரவாக யார் இருக்கிறார்கள் பரம்பரை பரம்பரையாக எங்களை காப்பாற்றுவது உங்கள் குடும்பம் தானே இது உங்கள் மகனுக்கு தெரியாதா? என்று சிதம்பரம் மெல்லிய குரலில் விண்ணப்பித்தார்


உங்கள் மாமியாருக்கு நாங்கள் காட்டிய விசுவாசம் உலகமே பாராட்டக்கூடியது அவர் மாருதி நிறுவனத்தில் கொள்ளையடித்த போது கூட இருந்து ஒத்தாசை புரிந்தது யார் சரி அதை விடுங்கள் உங்கள் வீட்டுக்காரர் பீரங்கி பேர ஊழலில் மாட்டிக்கொண்ட போது விசுவநாத் பிரதாப் சிங் கிழி கிழி என்று கிழித்தாரே அப்போது நாங்கள் இல்லை என்றால் உங்கள் புருஷன் கதி என்னாவாயிருக்கும் அதையெல்லாம் உங்கள் மகன் யோசிக்கவே இல்லையே இது பிரதமரின் புலம்பல்

அதை விடுங்கள் நரசிம்ம ராவ் என்ற கடுவன் பூனை பிரதமராக இருந்தது போது உங்களையே என்ன மிரட்டு மிரட்டினார் உங்கள் சொந்தகாரர் குத்துரோச்சியை விடாக்கண்டன் போல் மாட்டி விட்டாரே அப்போதெல்லாம் உங்கள் கூட இருந்தது யார் நாங்கள் தானே அந்த வரலாறு உங்கள் பிள்ளைக்கு மறந்து போய்விட்டதா இது சிதம்பரத்தின் அங்கலாய்ப்பு

காந்தி குல்லா போட்டுகிட்டு ஹசாரே உழலை ஒழிப்பேன் என்று சொன்னால் ஒரு நியாயம் இருக்கிறது ஹசாரேயிக்கு சொந்தமா கட்சியும் கிடையாது புடலங்காயும் கிடையாது தேர்தலுக்கு செலவு செய்ய ஊர்வலம் போய் கோடி பிடிக்க ஆள் அம்பு ரவடிகள் சேர்க்க பணம் தேவையில்லை நம்ம கதை அப்படியா எத்தனை மாநிலத்தில் தேர்தல் செலவை கவனிக்க வேண்டும் எம்.எல்.ஏ, எம்பிக்களை விலைகொடுத்து வாங்க வேண்டும் அதற்கெல்லாம் பணம் எப்படி வரும் நம்ம சம்பளத்தில் தான் அரசியல் நடத்த வேண்டுமென்றால் கட்சி என்னாவது தொண்டர்கள் என்னாவார்கள் அட நம் கதி தான் என்னவாகும் கொஞ்சம் யோசிங்க மேடம் இது பிரதமர்


சுப்ரமணிய சாமி அலைக்கற்றை உழலில் எனக்கு சம்பந்தம் இருப்பதாக கோர்டில் குதிக்கிறார் ஊழல் செய்தால் கட்சியை விட்டே தூக்கி விடுவேன் என்கிறார் உங்கள் மகன் சுவாமிக்கும் ராகுலுக்கும் வித்தியாசமே எனக்கு தெரியவில்லை இது சிதம்பரம்

கட்சியை விட்டு தூக்கினால் கூட வேறு எதாவது கட்சியில் சேர்ந்தோ புதிய கட்சி துவங்கியோ பிழைப்பு நடத்தி கொள்வோம் ஆனால் ராகுல் ஊழல் புரிந்தவருக்கு அரசியலில் எதிர்காலமே இல்லாமல் செய்து விடுவதாக மிரட்டுகிறார் வெட்கம் மானம் சூடு சுரணை எல்லாவற்றையும் விட்டு விட்டு அரசியல் நடத்துவது எங்களுக்கு பழகி போச்சி இதை விட்டால் வேறு தொழில் எதுவும் தெரியாது ஓட்டலில் பெஞ்சி துடைக்க கூட எங்களை யாரும் சேர்த்தது கொள்ள மாட்டார்கள் இது பிரதமர்

மேடம் நீங்கள் எதுக்கு கூப்பிட்டீர்கள் ஏன் கூப்பிட்டீர்களோ அது தெரியாது காங்கிரஸ் கட்சியை அழித்த பெருமை ராகுல் காந்திக்கு வரவேண்டாம் அவரிடம் சொல்லி வையுங்கள் இப்படி எல்லாம் எங்களை மிரட்டினால் நாங்கள் அனைவரும் வேறு வழி இல்லாமல் செங்கோட்டையின் முன்னால் தூக்கில் தொங்கி விடுவோம் இது சிதம்பரம்

ஊழல்இல்லாமல் அரசியல் நடத்துவது ஒரு அரசியியல் ஆகுமா குருமா இல்லாமல் சப்பாத்தி சாப்பிடலாம் ஊழல் இல்லாமல் ஆட்சி நடத்த முடியுமா? நினைத்து பார்க்கவே பயமாக இருக்கிறது எங்களை எல்லாம் நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும் உங்களை விட்டால் எங்களுக்கு கதி ஏது இது பிரதமர்

இத்தனை நேரம் அமைதியாக இருந்த சோனியா நீங்கள் பயப்பட வேண்டிய அவசியமே இல்லை ராகுல் காந்திக்கு இந்த உண்மைகள் எல்லாம் தெரியாதா என்ன விவரம் இல்லாமல் அவன் பேசவில்லை நம்நாட்டில் இது வரை யாருடைய ஊழலாவது நிருபிக்கபட்டுள்ளதா என்ன அப்படியே நிரூபித்தாலும் தண்டனையில் இருந்து தப்பிக்க ஏராளமான வழிகள் இருக்கிறது ஊழல் நிரூபிக்கப்பட்டு தண்டனை உறுதிபடுத்த பட்டவர்களுக்கு மட்டும் தான் நமது கட்சியில் இடம் இல்லை என்று ராகுல் பேச்சுக்கு அர்த்தம் எடுத்துக்கொள்ள வேண்டும் நிரூபிப்பது தண்டனை பெறுவது எல்லாம் நடக்க கூடிய விஷயமா அப்படியே நடந்தாலும் உடனடியாக நடக்குமா? குறைந்த பட்சம் நூறு வருசமாவது ஆகாதா இது புரியாதா உங்களுக்கு நீங்கள் சின்ன பிள்ளைகளா கவலை படாதீர்கள் நான் இருக்கும் வரை உங்களை கைவிட மாட்டேன் என்றார்

சோனியாவின் இந்த பேச்சை கேட்டவுடன் தான் சிதம்பரத்திற்கும் பிரதமருக்கும் போன உயிர் திரும்பி வந்தது பிரதமருக்கு சாப்பிடாமல் விட்டுவந்த பாதி சப்பாத்தி நினைவுக்கு வரவே மேடம் நான் போய் உணவை முடித்து விட்டு கைகழுவி வரலாமா என்று உத்தரவு கேட்டார் சோனியாவும் பெருமையோடு போங்கள் என்று விரல் அசைத்தார்.

http://ujiladevi.blogspot.in/2012/01/blog-post_29.html

Friday, February 24, 2012

கருணாநிதியின் பார்ப்பன எதிர்ப்பு கோஷம்


தன் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கு நேரடியாக பதில் சொல்ல முடியாத போதெல்லாம் ஆரிய-திராவிட பகை, பார்ப்பன சதி என்ற பிரசாரங்களில் இறங்கும் தன் வழக்கப்படி வேலூர் கோட்டை மைதானப் பேச்சிலும், சமீப கால அறிக்கைகளிலும் கருணாநிதி அதே உத்தியை மறுபடியும் கையில் எடுத்துக் கொண்டிருக்கிறார். இவையெல்லாம் விஷ(ம)ப் பேச்சு என்பதில் சந்தேகமே இல்லை.

அவர் ஆரியர்கள் என்று கருதும் பிராமணர்கள் பலரின் உதவியோடும் கூட்டோடும்தான் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார். ‘போகாதே போகாதே என் கணவா, பொல்லாத சொப்பனம் நானும் கண்டேன்’ என்று புலம்பியும், தன்னை விட்டுப் போனால் காங்கிரசுக்கு அதிக இழப்பு என்று மிரட்டியும் அவர் கூடவே வைத்துக் கொண்டிருக்க விரும்பும் காங்கிரசின் தலைமை காஷ்மீர் பிராமணர்களின் வாரிசுதான். கருணாநிதி குடும்பத்தின் அத்தனை தொழில்களிலும் பிராமணர்களின் பங்கு கணிசமாக இருக்கிறது. புதிய வருணாசிரமத்தில் உச்சியில் உட்கார்ந்திருக்கும் புதிய பார்ப்பனர் கருணாநிதிதான்.

எனவே அவர் காலாவதியாகிப் போன உத்தியை உதறிவிட்டு நேர்மையாக பிரச்சினையை எதிர்கொள்ள முன்வேண்டும். ‘ராசா தலித் என்பதனால் பாராளுமன்றத்தில் இவ்வளவு எதிர்ப்புக் கூச்சல் இதே டி.டி.கிருஷ்ணமாச்சாரியாக இருந்தபோது அவர் ராஜினாமா செய்த அடுத்த நாளே அமைதியாகிவிட்டார்கள்’ என்று (சின்னக் குத்தூசி பாணியில் சொல்வதானால்) விஷ(ம)த்தைக் கக்கியிருக்கிறார் கருணாநிதி.

டி.டி.கே விவகாரம் என்ன ? ராசா விவகாரம் என்ன என்று பார்ப்போம். 1957ல் முந்த்ரா என்ற தொழிலதிபரின் பங்குகளை அரசுக்குச் சொந்தமான எல்.ஐ.சி நிறுவனம் வாங்கி நஷ்டமடைந்தது என்பதுதான் புகார். பங்குகளை வாங்க உத்தரவிட்டவர் நிதித்துறை செயலாளர் எச்.எம் பட்டேல். நிதி அமைச்சராக டி.டி.கே.இருந்தார். எல்.ஐ.சி இழந்தது ஒன்றரை கோடி ரூபாய். பதிலுக்கு காங்கிரஸ் தேர்தல் நிதிக்கு முந்த்ரா இரண்டரை லட்சம் ரூபாய் கொடுத்ததாகச் சொல்லப்பட்டது.கான்பூரில் முந்த்ராவின் மில்லை மூடினால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழப்பார்கள். அதை மூடக் கூடாது என்று நிபந்தனை விதித்ததை முந்த்ரா ஏற்றுக் கொண்டார்.

முதலீட்டுக்குழு ஒப்புதல் இல்லாமல் முந்த்ராவின் பங்குகளை எல்.ஐ.சி வாங்கிய முறைகேட்டை அம்பலப்படுத்தியது எதிர்க்கட்சிகள் அல்ல. பிரதமராக இருந்த நேருவின் மருமகனும் இந்திராவின் கணவரும் ஆளுங்கட்சி எம்.பியுமான பெரோஸ் காந்திதான். எதிர்க்கட்சிகள் அவரோடு சேர்ந்துகொண்டன.

நேரு உடனடியாக மும்பை உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி எம்.சி.சாக்ளாவை விசாரணை கமிஷனாக நியமித்தார். பங்குகளை வாங்க உத்தரவிட்டது நிதிச் செயலாளர்தான் என்றும் அதற்கான தார்மிகப் பொறுப்பு நிதி அமைச்சருடையது என்றும் சாக்ளா முடிவு செய்தார். தான் ‘ லுக் இண்ட்டு திஸ் மேட்டர்’ என்று சொன்னதாக டி.டி.கேவும், அதை பங்குகள் வாங்கச் சொன்னதாகப் புரிந்துகொண்டதாக பட்டேலும் சாட்சியத்தில் சொல்லியிருந்தார்கள். டி.டி.கே ராஜினாமா செய்தபோது நேரு உங்களுக்கு இதில் தொடர்பில்லை என்றாலும் நீங்கள் தார்மிக அடிப்படையில் விலகுகிறீர்கள் என்பதைப் புரிந்துகொள்கிறேன் என்று சொன்னார்.

டிசம்பர் 16, 1957ல் பெரோஸ் காந்தி புகார் எழுப்பினார். ஜனவரி முதல் வாரத்தில் சாக்ளா கமிஷன் பகிரங்க விசாரணையைத் தொடங்கியது. நூற்றுக்கணக்கான பொதுமக்கள் முன்னிலையில் 11 நாட்கள் விசாரித்த உடனே சாக்ளா அறிக்கை கொடுத்தார். அமைச்சர் ராஜினாமா செய்தார். எல்லாமே ஒரு மாதத்துக்குள் முடிந்துவிட்டது.முந்த்ரா போலிப்பங்குகளை விற்றதற்காக சிறையில் அடைக்கப்பட்டார்.

கருணாநிதி அவர்களே, அப்புறம் எதற்காகத் தொடர்ந்து அவையில் யாரும் கூச்சல் எழுப்ப வேண்டும் ?

ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் வெளிவந்து ஒரு வருடத்துக்கு மேல் ஆகிறது. நேரு ஒரே வாரத்தில் ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியை விசாரிக்க நியமித்தது போல மன்மோகன்சிங் ஏதாவது நியமித்தாரா ? கனிமொழி ராசா டேப் பதிவுகள் அம்பலமாகி பல மாதங்கள் ஆகிவிட்டன. கருணாநிதி அதைப் பற்றி இன்னும் வாயையே திறக்கவில்லை. என்ன செய்வது ? பதிவு செய்த மெஷின் பார்ப்பான் கண்டுபிடித்த மெஷின் என்று சொல்ல முடியாதே.

பிரதமரின் மருமகனே அரசின் முறைகேட்டை வெளிப்படுத்தும் சூழல் நேரு காலத்தில் இருந்தது. ராசாவின் ஊழலை அவர் கட்சியையே சேர்ந்த எந்த தி.மு.க காரனாவது வெளிப்படுத்தும் வாய்ப்பு இருக்கிறதா ?கருணாநிதி காலத்தில் யாராவது எந்த ஊழலையாவது வெளிப்படுத்தினால் அவரால் கம்யூனிட்டி சர்ட்டிஃபிகேட் ஆராய்ச்சி மட்டும்தான் நடத்த முடியும்.

முந்த்ராவின் பங்குகளை எல்.ஐ.சியை வாங்கச் செய்து நஷ்டமடைந்தது தவறு என்று மட்டும்தான் சாக்ளா சொன்னார். அதில் யாருக்கும் பணம் கை மாறியதாக எந்த ஆதாரமும் இல்லை என்றார். விவான் போஸ் குழுதான் கட்சிக்கு பணம் தரப்பட்டதாக சொன்னது. நேரு தன் உளவுத் துறையை விசாரிக்கச் செய்தார். அமைச்சர், அதிகாரிகள் யாரும் பணம் பெறவில்லை என்று உளவுத் துறை கூறியது.

தவிர முந்த்ரா ஒரு மோசடிப் பேர்வழி என்பது முன்பே நேரு. டி.டி.கே பட்டேல் எல்லாருக்கும் தெரியும். முந்த்ரா பங்கு மார்க்கெட்டில் செய்துவரும் நடவடிக்கைகள் பற்றி பல குறிப்புகளை டி.டி.கேவும் நேருவும் கோப்புகளில் முன்பே பதிவு செய்திருக்கிறார்கள். முந்த்ரா கம்பெனி திவாலானால் பங்கு மார்க்கெட்டில் சிக்கலும் முந்த்ராவுக்கு கடன் கொடுத்த வங்கிகளுக்கு சிக்கலும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலை இழப்பும் வரும் என்பதால், தற்காலிகத் தீர்வாக முந்த்ரா பங்குகளை எல்.ஐ.சி வாங்குவதென்ற முடிவை நேரு அரசு எடுக்க வேண்டியிருந்தது. அது உண்மையில் பொருளாதார நெருக்கடி பற்றிய ஜட்ஜ்மெண்ட் எரர்தானே தவிர ஊழல் அல்ல.

ராசா செய்தது அப்பட்டமான மோசடி. ஸ்பெக்ட்ரம் விற்பனை விதிகளை, தேதிகளை மாற்றி அமைத்தது, அனுபவமில்லாத கம்பெனிகளுக்கு லைசன்ஸ் கொடுத்தது, அவர்கள் அதை விற்று பல கோடி சம்பாதித்தது, நீரா ராடியாவுடன் பேரங்களில் ஈடுபட்டது, பிரதமர் சொன்னதைக் கேட்காதது எல்லாம் ஒரு சாதாரண பாராளுமன்றக் கூட்டுக் குழுவால் கூட விசாரிக்க முடியாமல் கருணாநிதி வகையறாக்களால் வருடக்கணக்கில் தடுக்கப் பட்டு வருகிறது. இதைக் கேள்வி கேட்டால் விஷத்தைக் கக்குகிறார் கருணாநிதி. பக்தவத்சலம் சொன்னது போல விஷக் கிருமிகள் பரவிவிட்டன. அவர் கருணாநிதி வகையறாக்களைத்தான் குறிப்பிட்டிருக்க வேண்டும். தேர்தலின் போது சரியான மருந்து அடிக்கத் தவறினால் நாம்தான் மாண்டு போவோம்.

http://gnani.net/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/

தலையங்கம்: துப்பாக்கியல்ல தீர்வு!

First Published : 25 Feb 2012 02:47:13 AM IST
Last Updated : 25 Feb 2012 03:50:12 AM IST

அன்னையில் நடந்தேறிய இரண்டு வங்கிக் கொள்ளைகள் எந்த அளவுக்கு அதிர்ச்சியை அளித்ததோ அதைவிட அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது, நள்ளிரவில் நடந்த காவல்துறையின் அதிரடி நடவடிக்கை. கொள்ளைக்காரர்களைக் காவல்துறையினர் பிடித்துச் சட்டத்தின் முன் நிறுத்தியிருந்தால் அதைத் தமிழக காவல்துறையின் திறமை, சாதனை என்று போற்றிப் பாராட்டலாம். எந்தவித வலுவான ஆதாரங்களோ சாட்சியங்களோ இல்லாமல், ஐந்து பேரைக் குற்றவாளிகள் என்று காவல்துறையே தீர்மானித்து அவர்களைச் சுட்டும் கொன்றுவிட்டிருப்பதை, கடமையைச் செய்திருக்கிறது காவல்துறை என்று அங்கீகரிக்க முடியவில்லை.

வழக்கமாக எல்லா என்கவுன்டர் மரணங்களிலும் நடப்பதுபோல, காவல்துறையைச் சேர்ந்தவர்களுக்குத் துப்பாக்கித் தோட்டாக்கள் உராய்ந்து காயம் ஏற்பட்டிருக்கிறது. குற்றவாளிகள் என்று கருதப்படுபவர்கள் மட்டும் மரணமடைந்திருக்கிறார்கள். கதவை உடைத்ததற்கான அடையாளமோ கொலையுண்டவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையில் பெரிய அளவிலான போராட்டம் நடந்ததற்கான அடையாளமோ இல்லை என்பது ஒருபுறம் இருக்க, காவல்துறையினரால் அடையாளம் காணப்பட்ட நபர்கள் அவர்களே அல்ல என்று தேசியக் காட்சி ஊடகங்கள் வெளிச்சம் போட்டு வேறு காட்டுகின்றன.

வங்கிக் கொள்ளையும், அதில் தொடர்புள்ள குற்றவாளிகளைப் பிடிப்பதும் அல்ல பிரச்னை. குற்றவாளிகள் என்று சந்தேகிக்கும் நபர்களை அதற்குப் போதுமான ஆதாரமோ, சாட்சியமோ இல்லாமல், அவர்களிடம் எந்தவித விசாரணையும் மேற்கொள்ளாமல் தண்டிக்கும் உரிமை காவல்துறைக்கு உண்டா இல்லையா என்பதுதான் இந்த என்கவுன்டர் சம்பவம் எழுப்பும் மிக முக்கியமான கேள்வி.

குற்றவாளிகள் என்று கருதப்படும் ஐந்து பேரில் ஒருவரையாவது உயிருடன் பிடித்து நீதிமன்றத்தின் முன்னால் நிறுத்தி இருந்தால், காவல்துறை தற்காப்புக்காகத்தான் துப்பாக்கிச் சூட்டில் இறங்கியது என்று நாம் ஏற்றுக்கொள்ள முடியும். இப்போது, நம்முன் ஓடுகின்ற கேள்வி, அந்த ஐந்து பேரில் ஒருவர் அல்லது இருவர் இந்தக் கொள்ளையில் தொடர்பே இல்லாதவராக இருந்திருந்தால், விவரம் தெரியாமல் குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்திருந்தால், அவரும் கொல்லப்பட்டிருப்பாரே, அது எந்த வகையில் நியாயம் என்பதுதான்.

""சட்டம்-ஒழுங்கு கெட்டுவிட்டது. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, திருட்டு என்று சமூக விரோதக் கும்பல்களின் நடமாட்டம் அதிகரித்துவிட்டது. இந்த நிலையில் இதுபோல சில அதிகார அத்துமீறல்களை அங்கீகரிப்பதால், சமூக விரோதிகளுக்குப் பயம் இருக்கும்'' என்பது காவல்துறையினரின் வாதமாக இருந்தால் அது ஏற்புடையதல்ல. சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கும், சமூக விரோதிகளை ஒடுக்குவதற்கும் துப்பாக்கியைப் பயன்படுத்துவது என்பதை சட்டத்தின் ஆட்சியில் அனுமதிக்க முடியாது.

தீவிரவாதிகள், தேசத் துரோகிகள், சதித்திட்டத்தில் ஈடுபடுபவர்கள் போன்றவர்களிடத்தில் காவல்துறை கையாளும் அணுகுமுறையை கொலை, கொள்ளை, திருட்டு போன்ற சமூகவிரோதச் செயல்களில் ஈடுபடுவோரிடம் கையாளக் கூடாது. காவல்துறை என்கவுன்டரைத் தனது ஆயுதமாகப் பயன்படுத்துவது தெரிந்தால் இதுவரை கத்தி, கைத்துப்பாக்கி என்று மட்டுமே செயல்பட்டு வரும் குற்றவாளிகள் இனிமேல் ஏகே 47, வெடிகுண்டு என்று தொழில்நுட்பத்தை வளர்த்துக் கொள்ளத் தொடங்குவார்கள். அப்போது, அவர்களை எதிர்கொள்ளவே முடியாத நிலைக்குப் பழைய ரைபிள்களை வைத்துக் கொண்டிருக்கும் காவல்துறை தள்ளப்படுமே, அதை யோசித்துப் பார்த்தார்களா?

காவல்துறை சட்ட-ஒழுங்கை நிலைநாட்டவும் சமூக விரோதிகளை ஒடுக்கவும் பல இடையூறுகளை எதிர்கொள்ள நேர்கிறது என்பது உண்மை. சமூக விரோதிகளில் பெரும்பாலோருக்கு அரசியல் ஆதரவு இருக்கிறது என்பதும் உண்மை. முறையாக விசாரணை நடத்திக் குற்றவாளிகளைக் கூண்டில் நிறுத்தினால், சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தி அவர்கள் நீதிமன்றத்தால் விடுவிக்கப்படுகின்றனர் என்கிற காவல்துறையினரின் ஆதங்கத்திலும் நியாயம் இருக்கிறது. அதற்காக, நீதி பரிபாலனத்தைக் காவல்துறையே எடுத்துக் கொள்வதா என்ன?

குற்றவியல் சட்டத்தின் அடிப்படைத் தத்துவமே, நூறு குற்றவாளிகள் தப்பித்தாலும்கூடத் தவறில்லை. ஒரு நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது என்பதுதானே தவிர, நூறு நிரபராதிகள் ஒரு குற்றவாளியைத் தண்டிப்பதற்காகக் கொலை செய்யப்படலாம் என்று சொல்லவில்லை. சட்டத்தை மக்கள் எப்படிக் கையில் எடுத்துக்கொள்ள முடியாதோ அதேபோலக் காவல்துறையும் நீதிபரிபாலனத்தை, இன்னார் குற்றவாளி, இன்னார் நிரபராதி என்று தீர்ப்பளித்து அவர்களுக்குத் தண்டனை பிறப்பிப்பதைத் தனது கையில் எடுத்துக் கொள்வதை அனுமதிக்க முடியாது.

சமூக விரோதிகளை அடக்குவதற்கும், சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவதற்கும் காவல்துறை அத்துமீறுவதை அனுமதிக்க வேண்டும் என்று சொல்பவர்கள் அதன் பின்விளைவுகளைப் பற்றி யோசிக்காமல் பேசுகிறார்கள். யார் குற்றவாளி, யார் நிரபராதி என்பதைக் காவல்துறை தீர்மானித்துத் தீர்ப்பளிக்க அனுமதித்துவிட்டால், ஆட்சியாளர்களின் கைப்பாவையாக அந்தத் துறை செயல்பட்டு எதிர்ப்பாளர்கள் அனைவரையும் வாயடைக்கச் செய்யும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டு விடுவோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். தட்டிக் கேட்கவோ, விமர்சனம் செய்யவோ, உரிமையே இல்லாத ஒரு சூழலுக்கு இதுபோன்ற செயல்கள் நம்மை நகர்த்திவிடக் கூடும்.

முதல்வரின் பிறந்த நாள் பரிசாகக் குற்றவாளிகளை உயிருடன் பிடித்து சட்டத்தின் முன் நிறுத்துவதற்குப் பதிலாக, ஐந்து பேரை விசாரணையே இல்லாமல் சுட்டுத் தள்ளி சட்டம் - ஒழுங்கைப் பாதுகாத்ததாகக் கூறிக்கொள்ளும் சென்னை மாநகரக் காவல்துறை ஆட்சிக்கும் காவல்துறைக்கும் களங்கம் ஏற்படுத்தி இருக்கிறது என்பதுதான் உண்மை.

குற்றவாளிகள் என்று கருதுவோரை காவல்துறை எந்தவித விசாரணையும் இல்லாமல் குருவி சுடுவதுபோல சுட்டுத் தள்ளுவது அல்ல, பெருகிவரும் குற்றங்களைத் தடுப்பதற்கான தீர்வு. காக்கிகளின் கையில் லத்தி இருப்பதையே மனித உரிமை மீறல் என்று சர்வதேச மனித உரிமை ஆணையம் கூறும்போது, காவல்துறையினர் துப்பாக்கித் தீர்ப்பு வழங்குவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?