Tuesday, December 28, 2010

தமிழகத்தில் 1000 தியேட்டர்கள் மூடல்!

Thousand  theaters closed in tamilnadu









தமிழகத்தில் சுமார் 1000 தியேட்டர்கள் நஷ்டத்தால் மூடப்பட்டுள்ளன. இதனால் இருக்கிற தியேட்டர்களை காப்பாற்றுவதற்காக முன்னணி நடிகர்கள் மற்றும் முன்னணி டைரக்டர்களுக்கு விநியோகஸ்தர்கள் திடீர் கட்டுப்பாடு விதித்துள்ளனர். தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்களின் சிறப்பு கூட்டம் சென்னையில் நடந்தது. தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு தலைவர் எஸ்.பாலாஜி தலைமை தாங்கினார். செயலாளர் ஏ.பிரான்சிஸ் முன்னிலை வகித்தார். சென்னை - காஞ்சிபுரம் - திருவள்ளூர் மாவட்ட விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் கலைப்புலி ஜி.சேகரன், கோவை மாவட்ட விநியோகஸ்தர்கள் சங்க பொதுச்செயலாளர் திருப்பூர் சுப்பிரமணியம், நாகராஜராஜா உள்பட அனைத்து மாவட்ட வினியோகஸ்தர்கள் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டார்கள்.

கூட்டத்தில் பேசிய நிர்வாகிகள், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களும், வினியோகஸ்தர்களும், திரையரங்கு உரிமையாளர்களும் சமீபகாலமாக மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்து வருகிறார்கள். தமிழகத்தில் இருந்த 2 ஆயிரம் திரையரங்குகளில் பாதிக்கு மேல் சுமார் 1,000 திரையரங்குகள் மூடப்பட்டுவிட்டன, என்று வேதனை தெரிவித்தனர். இதனால் இருக்கிற தியேட்டர்களையும், விநியோகஸ்தர்களையும், தயாரிப்பாளர்களையும் காப்பாற்றி, சினிமா தொழிலை காப்பாற்றுவதற்காக முன்னணி நடிகர்கள் மற்றும் முன்னணி டைரக்டர்களுக்கு கட்டுப்பாடு விதிக்க முடிவு செய்திருப்பதாகவும் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

அதன்படி, இனிவரும் காலங்களில் எந்த ஒரு பெரிய பட்ஜெட் படம் (ரூ.10 கோடிக்கு மேல் எடுக்கப்படும் படம்) நஷ்டத்தை சந்திக்குமானால், அந்த படத்தில் பணியாற்றிய முன்னணி நடிகர்கள் மற்றும் டைரக்டர்கள், இசையமைப்பாளர்கள் அடுத்த `கால்ஷீட்' அதே தயாரிப்பாளர்களுக்கு கொடுத்து, அந்த நஷ்டத்தை ஈடுகட்டித்தர ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும், மேற்படி தயாரிப்பாளர் மேற்படி படத்தை அதே விநியோகஸ்தர்களுக்கும், அதே திரையரங்கு உரிமையாளர்களுக்கும் கொடுத்து, அவர்களது நஷ்டத்தை ஈடுகட்டித் தரவேண்டும் என்றும் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



‘‘பொங்கல் வரை விலை குறையாது..!’’ வெங்காய விலையேற்றப் பின்னணி


வெங்காயத்தை உரித்தால்தான் கண்ணீர் வரும். ஆனால், இப்போது வெங்காய விலையைக் கேட்டாலே கண்ணீர் வருகிறது. அந்தளவுக்கு வெங்காய விலை எகிறி நிற்கிறது.

சில நாட்களுக்கு முன்பாக 20 ரூபாய் விற்றுக் கொண்டிருந்த கிலோ வெங்காயத்தின் விலை இன்றைக்கு 100 ரூபாயை தொட்டு நிற்கிறது. ‘‘ஐநூறு ரூபாய்க்கு காய்கறி வாங்கினால், இரண்டு வெங்காயம் ஃப்ரீ...’’ என்று சொல்லும் அளவுக்கு நிலைமை விபரீதமாகி இருக்கிறது.

‘‘ஏற்கனவே காய்கறி விலை இருமடங்கு அதிகரித்துவிட்ட நிலையில், சாதாரண மக்கள் குடும்பம் நடத்தவே கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார்கள். இந்நிலையில் வெங்காயத்தின் விலையும் கிலோ 100 ரூபாய் என்றால், என்ன செய்வது?’’ என்று வெங்காய விலையைச் சொல்லிப் புலம்பினார் சாந்தோம் கிருஷ்ணகுமாரி.

‘‘பெட்ரோல் விலை எகிறிவிட்டது. கேஸ் சிலிண்டர் விலையையும் தொடர்ந்து ஏத்தறாங்க. இப்ப காய்கறி விலையும். சம்பளம் ஏறாம விலைவாசி மட்டும் ஏறினா நாங்க எப்படிங்க வாழ முடியும்?’’ என்று நடுத்தர குடும்பத்துப் பெண்மணியான மைலாப்பூர் சீதாலட்சுமியும் விலைவாசி உயர்வைச் சொல்லி கவலைப்பட்டார்.

வெங்காயத்தின் திடீர் விலை ஏற்றம் ஏன் என்பது குறித்து சென்னை கோயம்பேடு மார்க்கெட் வெங்காய வியாபாரிகள் சிலரிடம் கேட்டோம்.

சேகர் என்பவர், ‘‘ கோயம்-பேட்டிலுள்ள 50 வெங்காய மண்டிகளுக்கு வழக்கமாக 70 லாரிகளில் வெங்காயம் வரும். தற்போது இந்தியாவில் பரவலாக பெய்து வரும் மழையால் வெறும் 20 லாரிகளில் மட்டுமே வெங்காயம் வருகிறது. கடும் மழைதான் வெங்காயத்தின் இந்த விலை ஏற்றத்துக்குக் காரணம்’’ என்றார்.

அடுத்து பேசிய மொத்த வியாபாரி-யான ராபின்சன், ‘‘ஆறுமாதத்திற்கு முன் 50 கிலோ கொண்ட ஒரு மூட்டை வெங்காயத்தின் விலை 500 ரூபாய்தான். டிசம்பர் துவக்கத்தில் அது 2 ஆயிரம் ரூபாயாக இருந்தது. தற்போதோ 3 ஆயிரத்து 500 ரூபாய் முதல் 4 ஆயிரமாகிவிட்டது. இந்த வாரம் மட்டும் ஒரு நாளைக்கு 500 ரூபாய் வீதம் விலை ஏறிக்கொண்டே போகிறது. கடந்த 13 ஆண்டுகளாக 500 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரைதான் இருந்தது. அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய மழை மாதங்களில் 500 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரைதான் விலை உயரும். ஆனால் இந்த முறை அது மூவாயிரம் ரூபாயாக மாறிவிட்டது’’ என்று சொல்லி வருத்தப்பட்டார்.

‘‘கோயம்புத்தூர் சீசனான ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் ஒரு மூட்டை வெங்காயம் ஆயிரம் ரூபாய்தான். அந்த சீசன் தற்போது இல்லாததாலும், ஆந்திர வெங்காய வரவு குறைவாகிவிட்டதும், இந்த சீசனில் பெங்களூருவில் இருந்து மட்டுமே வெங்காயம் வருவதால்தான் இந்த திடீர் விலை உயர்வு ஏற்பட்டிருக்கிறது. எப்போதும் பெங்களூரு சீசனில் விலை அதிகரிக்கும். இந்த முறை அது பலமடங்கு உயர்ந்துவிட்டது. நாசிக், சோலாப்பூர், பூனா சீசன் இன்னும் 15 நாட்களில் துவங்கிவிடும். அப்போது விலை குறைந்துவிடும்’’என்றார் வெங்காய கமிஷன் மண்டி ஒன்றின் மேனேஜரான முகம்மது ரபீக்.

சில்லறை வியாபாரி பாஸ்கரின் கருத்தோ வேறு மாதிரியாக இருக்கிறது. அவர், ‘‘நான் காலை 5 மணிக்கு லோடு வந்தவுடன் ஒரு மூட்டை வெங்காயத்தை 4 ஆயிரத்து 300 ரூபாய்க்கு வாங்கினேன். இந்த விலை உயர்வுக்கு காரணம் மழை காரணமாக வெங்காய லாரிகள் வரத்து குறைவு என்று சொல்வது எல்லாம் பொய். சுனாமியின்போதெல்லாம் வெங்காயம் விலையேறாமல் இப்போது ஏறுவதற்கு முக்கிய காரணம் மொத்த வியாபாரிகள் சென்னைக்கு வழக்கமாக வரும் 70 லாரிகளை தாமதப்படுத்தி, 20, 20 லாரிகளாக வர வைப்பதும், பெட்ரோல், டீஸல் விலை ஏற்றத்தால் லாரி முதலாளிகள் வாடகையை ஏற்றிவிட்டதும்தான். பொங்கல் திருநாள் வரைக்கும் வெங்காய வரத்து குறைவு என்று சொல்லியே தற்போதுள்ள விலையை நீட்டிப்பதுதான் மொத்த வியாபாரிகளின் நோக்கம்’’ என்று அதிர்ச்சிக் குண்டை வீசினார்.

கோயம்பேடு மார்க்கெட் வெங்காய மொத்த வியா-பாரிகள் சங்கத் தலைவர் ஜான்வல்தாரிஷிடம் பேசினோம்.

‘‘ வெங்காய விலை உயர்வுக்கு காரணம் எந்த விதமான பதுக்கலோ, ஆன்லைன் விற்பனையோ கிடையாது. தேவைக்கேற்ற விளைச்சல் இல்லாததும், அந்த குறைந்த விளைச்சலில் கணிசமான அளவை இயற்கை சீற்றமான மழை அழித்துவிட்டதும்தான் திடீர் வெங்காய விலை உயர்வுக்கு காரணம்’’ என்று உறுதிபடச் சொன்னார்.

கோயம்பேடு மார்க்கெட் சங்கங்களின் ஆலோசகரான வி.ஆர். சௌந்தரராஜன் நம்மிடம் பேசும்போது, ‘‘இந்தியா முழுவதுமான வெங்காயத் தேவையை மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்களில் விளையும் வெங்காயமே பூர்த்தி செய்கிறது. ஆனால் தற்போது கர்நாடகா, மகாராஷ்டிராவிலிருந்து மட்டுமே வெங்காயம் வருகிறது. இப்போது பெய்து வரும் மழை ஆந்திரா, மகாராஷ்டிரா, கர்நாடகா என பரவலாக பெய்து வருவதால் விளைந்த வெங்காயங்கள் அழுகிவிட்டன. இவையே விலையேற்றத்துக்கு முக்கிய காரணம்.

மழைக்காலம் முடிந்தவுடன் விலை கணிசமாக குறையும் என்றாலும், கடந்த சில வருடங்களில் கிலோ 10 ரூபாய் என்று இருந்த நிலை இனி வராது. வால்மார்ட், ரிலையன்ஸ், மோர், திரினேத்ரா போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் வெளிநாடுகளுக்கு வெங்காயம் போன்ற அத்தியாவசிய பொருட்களை ஏற்றுமதி செய்வதற்காக வெங்காயத்தின் விலையை விவசாயிகளிடம் ஏற்றிவிட்டன. அதனால் கடந்த ஆறு மாதத்திற்கு முன்பிருந்த விலையான ரூபாய் நாற்பதே நீடிக்கும். ஆகவே நம் தேவைக்கு குறைவாக இருக்கும் வெங்காயம் போன்ற அத்தியாவசிய பொருட்களை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு நிரந்தரத் தடை விதிக்க வேண்டும்’’ என்றார்.

வெங்காய விலை உயர்வால் ஆட்சியே கவிழ்ந்த வரலாறு இந்தியாவுக்கு உண்டு. மக்கள் நலத்தைக் காட்டிலும் தங்கள் நலத்துக்காகவாவது வெங்காய விலை குறைய ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுத்தே ஆகவேண்டும்.

டெய்ல் பீஸ்: வெங்காய விலையேற்றத்தின் விபரீதத்தை உணர்ந்துள்ள மத்திய அரசு வரும் ஜனவரி 15 வரை வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளது. இன்னும் ஒரு வாரத்துக்குள் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி உறுதி அளித்துள்ளார்.

படங்கள்: த.சங்கரன்

http://www.tamilagaarasiyal.com/ActionPages/Content.aspx?bid=2160&rid=98

எல்லாம் இலவசம் - போகிற போக்கில்...

திராவிடக் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் வேலைவாய்ப்புத் திட்டங்கள், உணவு உற்பத்தியில் தன்னிறைவு , காசுக்கு கல்வி என்ற நிலை அகர்ர்ர்ரிஎல்லூருக்கும் தரமான கல்வி போன்ற அறிவிப்புகள் இருக்காது. மக்களுக்கு அடுத்து என்ன இலவசம் தரலாம் என்று தான் இருக்கும். இப்போதே அடுத்த தேர்தலில் இலவச கம்ப்யூட்டர், குடும்ப அட்டைக்கு இருபது கிலோ இலவச அரிசி என்று யோசித்து வருகின்றன.

இலவசங்கள் தான் திராவிடக் கட்சிகளின் ஓட்டு வங்கிக்கான வைப்புத் தொகை ,தமிழ்நாடு பணக்கார மாநிலம் அல்ல .இங்கு வறுமை கோட்டிற்கு கீழ் இருப்பவர் கிராமங்கள் , சிறு நகரம் , பெரு நகரம், என்று எங்கும் நிறைந்து இருக்கிறார்கள். இப்படிபட்ட வறியவர்களை தி.மு.க , அ.தி.மு.க இரண்டும் தங்கள் வாக்கு வங்கியாக மாற்றப் பயன் படுத்தும் அஸ்திரம் இலவச திட்டம் .

இலவசச் சீருடை , இலவச மதிய உணவு, இலவச முட்டை, இலவசப் புத்தகம் , இலவச மின்சாரம் , இலவச சைக்கிள் , இலவச டி.வி, இப்போது இலவச மின்மோட்டார் என்று இத்தனை இலவசங்கள் கிடைப்பது ம் இந்தியாவிலேயே தமிழ் நாட்டில்தான், இதைத்தவிர வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள பெண்களுக்கு திருமணம் நடத்த உதவித்தொகை தவிர முதியோர் பென்ஷன், சென்ற தேர்தலில் தி.மு.க வின் கதாநாயகன் அதன் தேர்தல் அறிக்கையே என்று பொருளாதார மேதை என்று சொல்லப்படும் ப.சிதம்பரம் வெளிப்படையாகப் பாராட்டினார். அந்தத் தேர்தல் அறிக்கையில் பல இலவச திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருந்தன.

சரி இந்த இலவசத் திட்டங்களின் பயன் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளவர்களுக்கு போய்ச் சேர்கிறதா என்ற கேள்விக்கு , கட்சி அனுதாபிகளுக்கும் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கும் தவறாமல் போய்ச் சேர்கிறது என்கிறார்கள் எதிர்க்கட்சியினர்.

உண்மையாக இருக்கலாம் , ஆளும் கட்சி அனுதாபிகள், கட்சி உறுப்பினர்கள் , அமைச்சர்கள், கட்சித் தலைமையின் சினிமா தயாரிப்பாளர்களான சொந்தங்கள் , விமான நிறுவன அதிபர் அல்ல , எல்லொரும் ஏழைகள்தானே, , ஏதோ அவர்களின் தேவையாவது பூர்த்தியாகிறதே என்று சந்தோஷப்பட வேண்டியதுதான்.

இது போன்ற இலவச திட்டங்களுக்கு பல கோடிகளை ஒதுக்குவதால் பற்றாக்குறை பட்ஜெட்தான் சமர்ப்பிக்கப்படுகிறது. அரசு கஜானாவில் இருந்து கணிசமான தொகை இந்த இலவச திட்டங்களுக்கு போய்விடுகிறது.

இலவசங்கள் பற்றி பல்வேறு விமர்சனங்கள் முதலில் வந்தன. மக்களை உழைக்காமல் சோம்பேறிகள் ஆக்கிவிடும் என்ற குற்றச்சாட்டு சொல்லபட்டது, ஆனால் பொருளாதார நிபுணர்கள் இலவசத் திட்டங்கள் அவசியம் தான் என்கிறார்கள், தொலை நோக்கு பார்வையில் சமூகம் மேம்பட இந்த இலவச திட்டங்கள் தேவை என்பது பொருளாதார நிபுணர்கள் கருத்து. இதை அரசியல்கண்ணாடி அணிந்து பாக்ககூடாது என்பது இவர்கள் வாதம். சத்துணவு , இலவச முட்டை ஆகியவை குழந்தைகளின் ஆரோக்கியம் மேம்பட உதவுகிறது. இலவச எரிவாயுத் திட்டம் பெண்களின் வேலைப் பளுவைக் குறைக்க உதவுகிறது.

வாக்கு வங்கியை மனதில் வைத்து தீட்டபட்ட திட்டங்கள் இவை என்பது எவ்வளவு உண்மையோ அதே போல் வறியவர்கள் வாழ்க்கை மேம்பட உதவுகின்றன என்பதும் உண்மை என்ற கருத்தும் வரத் துவங்கிவிட்டது.


அதே சமயம் தமிழகம் தொழில் வளர்ச்சியில் முன்னேறி வரும் மாநிலம் என்று ஆளும் கட்சி பெருமை பீற்றி கொள்ளும் போது மக்களை சோம்பேறிகள் ஆக்கத்தான் இந்த இலவசத் திட்டங்கள், இலவச கலர் டி.வி மூலம் கலாச்சார சீரழிவு நிகழ்ச்சிகளைத் தரும் தனியார் டி.வி சேனல்கள் பணம் பண்ணுகின்றன, தமிழன் சீரழிய தான் இலவச கலர் டி.வி என்ற எதிர்க் குரலும் கேட்கிறது. இலவசத் திட்டங்களால் தமிழகத்தின் கடன் சுமை கோடிக் கணக்கில் உயர்ந்து கொண்டே போகிறது, இதற்கான வட்டிக்காக வரி ஏற்றம் என்ற சுமையை மறைமுகமாக மக்கள் மீது அரசு சுமத்துகிறது. இலவசங்கள் இந்த சுமையின் வலியை
மறக்கடிக்கிறது என்றும் சொல்லப்படுகிறது.

ஆனால் இலவசங்களை நியாயப்படுத்தும் குரல்தான் ஓங்கி ஒலிக்கிறது, தி.மு.க போய் அ.தி.மு.க வந்தாலும் இலவசங்களை தொடரத்தான் வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். அதே சமயம் இலவசமாகப் பெறும் எந்தப் பொருளும் அதற்கு உரிய மதிப்புப் பெறாது, இலவசமாக வந்ததுதானே என்ற அலட்சிய மனோபாவம் தான் இதற்கு காரணம். இலவசக் கலர் டி.வி கேரளாவிற்கு கடத்தி செல்லபட்டு வருகிறது என்று ஊடகங்கள் ஆதாரத்துடன் நிருபித்துள்ளன. காரணம் டி.வி நமது அன்றாட வாழ்க்கையின் அங்கம் என்று எப்போதோ ஆகிவிட்டது. ஏற்கனவே டி.வி வைத்திருந்தவர்களுக்கு டி.வி தந்தால் என்ன செய்வார்கள் அதை விற்க தான் செய்வார்கள். நிறைய இலவச திட்டங்களால் தமிழக மக்கள் எல்லாவற்றையும் இலவசமாக எதிர்பார்க்கும் மனோபாவம் என்ற ஆபத்து இருக்கிறது.

எனவே யாருக்கு எது தேவையோ அது மட்டும் இலவசம் என்று யோசித்து அதை மட்டும் வழங்கினால் அரசு கஜானாவிற்கு செல்லும் பணம் கணிசமாக மிஞ்சும். திராவிடக் கட்சிகள் இலவசத் திட்டங்களை அறிவிக்கும் முன்பு யோசிக்க வேண்டும்.

இந்த இலவச யோசனை அவர்கள் காதில் விழுமா?

http://www.andhimazhai.com/news/viewmore.php?id=12356

Dec 28 மடக்கியது சி.பி.ஐ. திணறினார் ராசா. தவிர்க்க முடியாத கைது நடவடிக்கை.


இரண்டு நாட்கள்... பதினைந்து மணி நேர மாரத்தான் விசாரணை முடிந்து அப்பாடா என்று மூச்சு விட்டுக் கொண்டு இருக்கிறார், ராசா... இரண்டு நாட்கள் விசாரணையில் சி.பி.ஐ. அதிகாரிகள் அவரை குடைந்து எடுத்துவிட்டார்கள். விசாரணையை எப்படி எதிர்கொள்வது என்று முன் எச்சரிக்கையுடன் சென்றவர், சி.பி.ஐ.யின் எதிர்பாராத கேள்விகளால் திணறித்தான் போனார் என்று சொல்லப்படுகிறது.

இந்த க்ளைமேக்ஸ் இடைவெளியில் அறிவாலயத்தில் இறுக்கம் தளர்ந்திருக்கிறது. ஸ்பெக்ட்ரம் பிரச்னையில் இருந்து கட்சியைக் காப்பாற்ற அடுத்தகட்ட முயற்சியில் முதல்வர் கருணாநிதி தீவிரமாகி யுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை காலை சி.பி.ஐ. தலைமை அலுவலகத்தில் ஆஜரானார் ராசா. அன்றைய தினம் மட்டும் 9 மணி நேரம் விசாரணை நடந்தது. விசாரணையில் நடந்தது என்ன என்பது குறித்து சி.பி.ஐ. அதிகாரிகள் வட்டாரத்தில் விசாரித்தோம்.

அலுவலக வாசலில் நின்று அதிகாரிகள் ராசாவை உள்ளே அழைத்துச் சென்றனர். அங்கு ஒரு அறையில் உட்கார வைத்தனர். அவரிடம், அறுபது பக்கம் கொண்ட கேள்விகளைக் கொடுத்து பதில் எழுதித் தருமாறு கேட்டுள்ளனர். அதை வாங்கிப் படித்த அவர் ஏற்கெனவே தயார் செய்துகொண்டு வந்திருந்ததால், பதற்றம் இல்லாமல் பதில்களை எழுதினார்.

மதிய உணவு இடைவேளைக்காக ஒரு மணி நேரம் ஓய்வு கொடுத்தனர். விசாரணை முடிந்தது என்று நினைத்தார், ராசா. ஆனால், அவரைச் சுற்றி 11 சி.பி.ஐ. அதிகாரிகள் உட்கார்ந்து கொண்டனர். அடுக்கடுக்காக பல கேள்விகளைக் கேட்க, ராசா நிதானமாக பதில் சொல்லியிருக்கிறார். கேள்விகள் போகப்போக ராசா தடுமாற ஆரம்பித்து இருக்கிறார். முதலில் அவர் சொன்ன பதில்களும், பின்னர் கேள்வியை மாற்றிக் கேட்டபோது சொன்ன பதில்களும் குழப்பமாக இருந் ததாம். இதைக் குறித்துக்கொண்ட அதிகாரிகள், ‘முதலில் இப்படிச் சொன்னீர்கள். இப்போது மாற்றிச் சொல்கிறீர்களே?’ என்று கேட்க திகைத்துப் போனார்.

ராசாவின் பினாமி கம்பெனிகளின் பெயர்களைக் குறிப்பிட்டு, அதற்கு 2ஜி அலைவரிசை ஒதுக்கியது ஏன்? ராசாவை மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக்க நீரா ராடியா நடத்திய பேச்சுவார்த்தை தொடர்பான ‘டேப்’தான் மீடியாக்களில் வெளியாகியுள்ளது. ஆனால், ராசா மத்திய அமைச்சராக இருந் தபோது, 2 ஜி அலைவரிசை ஒதுக்கீடு தொடர்பாக நீரா ராடியாவுடன் நடத்திய பேச்சுவார்த்தை அடங்கிய டேப்பை சி.பி.ஐ. போட்டுக் காட்ட, அவரது முகம் வெளிறிப்போனதாம். அந்த டேப்பின் மூலம் எழுந்த சில கேள்விகளை ராசாவிடம் கேட்டு விளக்கம் பெறப்பட்டுள்ளது. குறிப்பாக, யார் யாருக்கெல்லாம், எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது? குறிப்பிட்ட சில கம்பெனி களுக்கு, 2 ஜி அலைவரிசை ஒதுக்கீடு செய்ய யார் பரிந்துரை செய்தது? உள்ளிட்ட கேள்விகளுடன், ரெய்டின்போது ராசா வீடு, அலுவலகத்தில் கைப் பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் பல கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. அதில் அவர் வீட்டில் கைப்பற்றப்பட்ட டி.ஓ.டி. அலுவலக ஃபைல்கள் பற்றி இருந்ததாம். ‘பதவியை ராஜினாமா செய்த பின்னர் அந்த ஃபைலை ஏன் வீட்டில் வைத் திருந்தீர்கள்? அரசு ரகசியத்தை நீங்கள் எப்படி வைத்திருக்கலாம்?’ என்று கேள்வி எழுப்பி னார்களாம். அந்த பைலில்தான் பிரதமர் எழுதிய முக்கிய கடிதங்கள் இருந்ததாம்.

அனைத்துக் கேள்விகளுக்கும் மழுப்பலாக பதில் சொல்லி சமா ளிக்கப் பார்த்திருக்கிறார். சி.பி.ஐ. அதிகாரிகள் எடுத்து வைத்த ஃபைல் களைப் பார்த்ததும் அவர் ஆடிப் போய், ஒரு கட்டத்தில் உண்மையைச் சொல்லியிருக்கிறார். 9 மணி நேர விசாரணையை முடித்து இரவு 7.30 மணிக்கு ராசாவை வீட்டிற்கு அனுப்பியுள்ளனர்.

விசாரணை முடிந்தது என்று ராசா நினைக்க, ‘மீண்டும் நாளைக்கு வரவேண்டும்’ என்று சி.பி.ஐ. அதிகாரிகள் சொல்ல கலங்கிப்போனாராம்.

இரண்டாவது நாள் விசாரணை மிகவும் கடினமாக இருந்ததாம். மீடியாக்களின் பார்வையில் இருந்து தப்பிப்பதற்காக தனது படை பரிவாரங்களை எல்லாம் வி ட்டுவிட்டு தன்னந்தனியாக அவர் காலை 8.30 மணிக்கெல்லாம் சி.பி.ஐ. அலுவலகம் போய்விட்டார்.

முதல்நாள் விசாரணை போல், 2-வது நாளிலும் விசாரணை இருக்கும் என்று எண்ணிய ராசாவிற்கு அதிர்ச்சி. 2வது நாள் விசாரணையில் சி.பி.ஐ. அதிகாரிகளின் அணுகுமுறையில் வேறுபாடு இருந்துள்ளது.

அன்றைய தினம் ஸ்பெக்ட்ரம் முறைகேடு மூலம் கிடைத்த பணம் எங்கே போனது? யார் யார் மூலம் அனுப்பப்பட்டது என்று கேட்டுள்ளனர். முதலில் அவர் மறுத்துப் பேசவே, நீரா ராடியா வாக்குமூலம், ஹவாலா ஏஜெண்டுகள் கொடுத்த வாக்குமூலம், அவர்களின் ரெக்கார்டுகள் ஆகியவற்றை ஒவ்வொன்றாக எடுத் துப் போட்டுள்ளனர் சி.பி.ஐ. அதிகாரிகள்.

அதோடு, இவருக்கு வெளிநாட்டில் உள்ள சொத்துக்களின் விவரங்களையும், பினாமி சொத்துப் பட்டியலையும் அதிகாரிகள் எடுத்துவிட, ஆடிப்போனார். அதன் பின்னர் வேறு வழியில்லாமல் அதிகாரிகளின் கேள்விகளுக்கு விறுவிறுவென பதில் சொல்லியிருக்கிறார். கேள்விகள் அனைத்தும் வெளிநாட்டு முதலீடு பற்றியே இருந்ததால், பெரா (திணிஸிகி) வழக்கு வருமோ என்ற சந்தேகம் ராசா மனதில் ஏற்பட்டுள்ளது. அப்படி வழக்கு வந்தால், கைதாவதில் இருந்து தப்பிக்க முடியாது. ஆறு மணி நேர விசாரணைக்குப் பின்னர் வெளியே வந்த அவர், ரொம்ப அப்செட்டாக இருந்தாராம்.

‘விசாரணை முடிந்துவிடவில்லை. தேவைப்பட்டால் மீண்டும் விசாரணைக்கு அழைப்போம். அப்போது வாருங்கள்’ என்று சி.பி.ஐ. அதிகாரிகள் தெரிவித்துள்ள னர். மேலும், இன்னும் சில தினங்களில் ராசாவின் மனைவியிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தப் போவதாகவும் கூறப்படுகிறது.

சி.பி.ஐ. விசாரணையில் என்ன நடந்தது என்பதை உடனுக்குடன் டெல்லியில் இருந்து அறிவாலயத்துக்கு ‘பாஸ்’ செய்யப்பட்டதாம். ஸ்பெக்ட் ரம் தொடர்பாக முதல்வரின் குடும்ப உறுப்பினர்கள் குறித்து ஏதாவது விசாரிக்கப்பட்டதா? என்று விசாரணை முடிந்து வெளியில் வந்த ராசாவிடம் எம்.பி.க்கள் குடைந்து எடு த்துவிட்டார்களாம். அவர் இல்லை என்று சொன்ன பதில் உடனடியாக சென்னைக்கு சொல்லப்பட்டதாம். அதன் பின்னர் தான் இறுக்கம் தளர்ந்ததாம்.

இதை எதிர்பார்த்துதான் சி.பி.ஐ. விசாரணைக்கு முதல்நாள் ராசாவுக்கு ஆதரவாக மாவட்டம் முழுவதும் ஸ்பெக்ட்ரம் விளக்கக் கூட்டம் நடத்தும்படி அறிவிப்பு வெளியிடப்பட்டதாம். நெல்லையில் நடந்த விழாவில் ஸ்டாலின் கலந்துகொண்டு, ‘ராசாவை கழகம் கைவிடாது’ என்று சொன்னாராம். கூட்டம் நடத்தியதற்கு கைமேல் பலன் கிடைத்ததால் அடுத்தகட்ட மூவிற்கு ஆயத்தமாகி வருகிறது.

வழக்கு சுப்ரீம் கோர்ட் கண்காணிப்பில் இருப்பதால், இன்னும் விசாரணை தொடரும் என்பது தி.மு.க. தெரிந்தே வைத்திருக்கிறது. தேர்தல் வேறு நெருக்கத்தில் இருக்கிறது. இந்த நேரத்தில் ஸ்பெக்ட்ரமைத் தாண்டி கட்சியைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு முதல்வர் கருணாநிதியிடம் இருக்கிறது.

இரண்டு மாதங்களுக்கு முன்பு வரையில் கூட்டணியே இல்லை என்றாலும் வெற்றி பெற்று விடுவோம் என்று சொல்லும் அளவுக்கு மக்கள் மத்தியில் செல் வாக்கோடு இருந்தது. இப்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. எப்படி கூட்டணி அமைப்பது, மீண்டும் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சிக்கு வருவது என்பது குறித்து முதல்வர் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறார்.

http://www.thedipaar.com/news/news.php?id=22530

தலையங்கம்: இதற்கு யார்தான் காரணம்?

First Published : 29 Dec 2010 12:22:13 AM IST
Last Updated : 29 Dec 2010 06:24:41 AM IST


வெங்காயத்தின் விலை குறையவில்லை; தக்காளி, பூண்டு விலை குறையவில்லை; சர்க்கரை விலை குறையவில்லை; அரிசி, பருப்பு, கோதுமை விலையும் குறையவில்லை; விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கையும் குறையவில்லை!

ஆமாம், 2008-ம் ஆண்டு தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் எண்ணிக்கையைக் காட்டிலும், 2009-ம் ஆண்டு தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. தேசிய குற்றப் பிரிவு வழக்குப் பதிவேட்டின்படி தற்கொலைக் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ள விவரம் இது. 2009-ம் ஆண்டு, பல்வேறு காரணங்களுக்காக 17,368 பண்ணை விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இது அதற்கு முந்தைய ஆண்டைக்காட்டிலும் 1172 சாவுகள் அதிகம். வேளாண் விளைபொருள்களின் விலை சந்தையில் குறையவில்லை. ஆனால் தற்கொலையும் குறையாது என்றால் எங்கே குறை? இதற்கு யார்தான் காரணம்?

இந்தியா வளரும் நாடாக இருக்கிறது என்பதில் சந்தேகமே இல்லை. இங்குள்ள மிகப்பெரும் நுகர்வுச் சந்தைக்காக அமெரிக்க அதிபர் வந்து உடன்படிக்கையில் கையெழுத்திடுகிறார். சீன அதிபர் வருகிறார். ரஷிய அதிபர் வருகிறார். எல்லோரும் இந்தியாவுக்கு வந்து, இந்தியாவுடன் உறவை மேம்படுத்திக் கொள்கிறார்கள். ஒப்பந்தங்களில் கையெழுத்திடுகிறார்கள். ஆனால், வங்கிக் கடனுக்குக் கையெழுத்திட்ட விவசாயி மட்டும், இந்த நாட்டில் செத்துக் கொண்டிருக்கிறான். என்ன வேதனையான வேடிக்கை!

இந்தத் தற்கொலைப் பட்டியலில் 5 மாநிலங்கள் "பெருமை' சேர்த்துக் கொண்டுள்ளன. அவை: மகாராஷ்டிரம், கர்நாடகம், ஆந்திரம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்கள். இங்கே முந்தைய ஆண்டைக்காட்டிலும் சராசரியாக 1000 தற்கொலைகள் அதிகரித்துள்ளதாகப் புள்ளிவிவரம் கூறுகிறது.

இந்த மாநிலங்களை விட்டுத் தள்ளுவோம். தமிழ்நாட்டின் நிலைமை என்ன? தமிழ்நாட்டைப் பொறுத்தவரை விவசாயிகள் தற்கொலை அதிகம் இல்லை என்று பெருமைப்பட்டுக்கொள்ளும் அதே நேரத்தில் வருத்தம் தரும் புள்ளிவிவரம் என்னவெனில், இந்தத் தற்கொலைகள் இப்போது இரட்டிப்பாகியுள்ளன. 2008-ம் ஆண்டில் 512 ஆக இருந்த விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கை, 2009-ம் ஆண்டில் 1060 ஆக உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் விவசாயத் தற்கொலைகள் குறைவு என்று தமிழக அரசு வேண்டுமானால் பெருமை பேசலாம். ஆனால், நிலைமை நன்றாக இல்லை என்பதைத்தான் இப்போதைய இரட்டிப்புச் சாவு எண்ணிக்கை வெளிப்படையாகச் சொல்கிறது.

விவசாயிகள் எண்ணிக்கை கிராமங்களில் குறைந்து வருகிறது. நகர்ப்புறங்களுக்கு இடம் பெயர்கிறார்கள். இந்நிலையில், இருக்கும் விவசாயிகளும் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொள்வார்கள் என்றால் தமிழகத்தில் யார்தான் விவசாயத்தில் ஈடுபடப்போகிறார்கள்?

கரும்பு விளைவித்தால் விவசாயிக்கு லாபமில்லை. ஆனால் சர்க்கரை ஆலைகள் கோடிகோடியாய் லாபம் அடைகின்றன.

நெல் மூட்டைக்கு கூடுதல் விலை இல்லை. ஆனால் அரிசி மண்டிகள் இப்போதே ஜனவரி மாதத்தில் அரிசிக்கு என்ன விலை என்பதைத் தீர்மானித்து விட்டன. பொன்னி அரிசி தற்போதுரூ.800-க்கு (25 கிலோ) விற்கப்படுவது பொங்கலுக்குப் பிறகுரூ. 1000 என்று தீர்மானித்து, வாடிக்கையாளர்களிடம் இப்போதே வாங்கிக் கொண்டால் பிழைத்தீர்கள் என்று சொல்லவும் செய்கிறார்கள். ஆனால் விவசாயி, மத்தியக் குழுவின் வருகைக்காகவும், அரசின் அறிக்கைக்காகவும் காத்திருக்கிறான். அரசு இழப்பீடு வழங்கினாலும், லஞ்சம் போக அவன் கைக்குக் கிடைப்பது சொற்பமாகத்தான் இருக்கும்.

சிறுஉற்பத்தியான காய்கறிகளில்கூட விவசாயி லாபம் காண முடிவதில்லை. விலையை அவனால் நிர்ணயிக்கவே முடியாது. யாரோ விலையைத் தீர்மானிக்கிறார்கள். வெங்காயம் விலை உயர்ந்தால், கொத்தமல்லி, கறிவேப்பிலைகூட விலை கூடுகிறது. இந்த விலைஉயர்வில் 10 விழுக்காடுகூட விவசாயிக்குப் போய்ச் சேர்வதில்லை. இப்படித்தான் வேளாண் விளைபொருள்கள் சந்தைப்படுத்தப்படுகின்றன.

இன்றைய தமிழகத்தின் மிகப்பெரும் சவால் பாசன வசதியுடன்கூடிய விளைநிலங்களை அரசியல் பினாமிகள் வாங்கிப் போட்டு விவசாயம் செய்யாமல் தரிசாக வைத்திருக்கிறார்கள். இன்னொருபுறம் விவசாயம் செய்யும் விவசாயிகளுக்குப் போதுமான மின்சாரம் கிடைப்பதில்லை. ஜெனரேட்டர் வைத்து நீர்இறைக்கும் சக்தி அனைவருக்கும் கிடையாது. பிறகு எப்படி விவசாயம் நடக்கும்?

புதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்த அரசு விழாவில், விஜயகுமார் என்கிற விவசாயி, தனக்குத் தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்ட இலவச டி.வி.யை அமைச்சரிடமே மேடையில் திருப்பிக் கொடுத்துவிட்டு, "விவசாயிக்கு டி.வி. வேண்டாம், குறைந்தது ஒரு மாவட்டத்துக்காவது மின்தடையில்லாமல் செய்யுங்கள்'' என்று கூறியிருக்கிறார். குடும்ப அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் இலவச டி.வி. வழங்குவதைக் காட்டிலும் முக்கியத்துவம் தரவேண்டிய பிரச்னைகள், குறிப்பாக விவசாயப் பிரச்னைகள் இருப்பதன் வெளிப்பாடுதான் இந்தச் சம்பவம். அரசு இதை ஓர் எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ள வேண்டும். விவசாயிகள் நலனில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

மற்றொரு மிகப்பெரும் தவறைத் தமிழக அரசு செய்து கொண்டிருக்கிறது. தற்போது குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக மாற்றும் திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள பயனாளிகளில் 75 விழுக்காடு பயனாளிகள் கிராமத்தில் இருக்கும் விவசாயிகள் மற்றும் விவசாயக் கூலிகள்தான். இத்திட்டத்துக்கு இரும்புக் கம்பி, சிமென்டை வழங்கிவிட்டு, அதற்கான தொகை போக மீதித் தொகையை வீடுகட்டியவருக்கும் தருகிறார்கள். ஆனால் இந்தத் தொகையில் வீடு கட்டவே முடியாது என்பதுதான் எதார்த்த நிலைமை.

அரசு குறிப்பிட்டிருக்கும் அளவின்படியே வீடு கட்டினாலும், குறைந்ததுரூ. 1.25 லட்சம் செலவாகிறது. அரசு தரும்ரூ. 75,000க்கு ஆசைப்பட்டு, மீதித்தொகையை கிராமப்புறங்களில் கடன் வாங்கி வீடு கட்டிக் கொண்டிருக்கிறார்கள். பலருக்கு இது சக்திக்கு மீறிய செலவு. அடுத்த இரு ஆண்டுகளில் இந்த வீட்டுக் கடன், வட்டியோடு பூதாகரமாக நிற்கப்போகிறது.

ஏற்கெனவே நஷ்டத்தில் சிக்கியிருக்கும் ஏழை விவசாயிக்கு இந்த வீட்டுக்கடன் பெரும் பிரச்னையாக உருவெடுக்கும்போது, இவர்களைக் காப்பாற்றப் போவது யார்?

"இந்தியா ஒரு விவசாய நாடு. விவசாயிகள்தான் இந்த நாட்டின் முதுகெலும்பு' என்று காகிதத்தில் எழுதிப்பிடித்துக் கொள்ளத்தான் வேண்டும். ஏட்டுச் சுரைக்காய்...!

http://dinamani.com

கம்பெனி செகரட்டரிஷிப் படித்தால் வேலை கொட்டிக் கிடக்குது - இந்த உண்மை தெரியுமா?



என்ஜினீயரிங் படிப்பில் ஐ.டி., கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் -கம்யூனிகேஷன் படித்த பிறகும் வேலையில்லாதவர்கள் உண்டு. ஆனால், கம்பெனி செகரட்டரிஷிப் படித்து வேலையில்லாதவர்கள் இல்லை என்பது மட்டுமல்ல, இன்னும் எத்தனை பேர் வந்தாலும் வேலைவாய்ப்பு திறந்தே கிடக்கிறது என்பது வியப்பான உண்மை.

அப்படியென்ன வேலைவாய்ப்பு இருக்கிறது?

ரூ. 2 கோடிக்கு மேல் செலுத்திய முதலீடு (Paidup Capital) செய்துள்ள நிறுவனங்கள் தகுதி பெற்ற கம்பெனி செகரட்டரியை நியமிக்க வேண்டும் என்பது சட்டப்படி முக்கியம்.

ரூ.2 கோடிக்குக் கீழே முதலீடு செய்தவர்கள் இன்டர்மீடியட் தேர்ச்சி பெற்றவர்களை உதவி கம்பெனி செகரட்டரியாக அமர்த்தலாம்.பங்குச் சந்தையில் பதிவு செய்துள்ள அனைத்து நிறுவனங்களும் கம்பெனி செகரட்டரியை நியமிக்கவேண்டும்.

இந்தப் படிப்பை முடித்தவர்களை மத்திய அரசின் உயர் பதவியில் அமர்த்தலாம் என கல்வி அமைச்சகம் அங்கீகாரம் அளித்துள்ளது. இப் படிப்பு முடித்தவர்கள் நிர்வாக இயக்குநர்களாக முழு நேர இயக்குநர்களாக, கம்பெனி தலைவர்களாக, துணைத் தலைவர்களாக பணியமர்த்தலாம். இவ்வாறு கம்பெனியில் சேர்ந்து பணியாற்றாமல், வழக்கறிஞர், மருத்துவர், பொறியாளர் போல் தனியாகவும் தொழில்முறை பணியை மேற்கொள்ளலாம்.

இவை மட்டுமின்றி ஒன்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு கம்பெனி செயலர் ஆலோசகர்களாகப் பணியாற்றவும் செய்யலாம். இந்திய நிறுவனங்கள் வெளிநாடுகளில் கிளைகளைத் தொடங்குகின்றன. அதுபோல், உலக நிறுவனங்கள் இந்தியாவில் கிளைகளைத் தொடங்குகின்றன.

எனவே, வேலைவாய்ப்பும் விரிவடைந்து வருகிறது.

மேலும், பல்வேறு நாடுகளுடன் இணைந்து ஒரு கூட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் திட்டங்கள், செயல்பாடுகள் பரஸ்பரம் பரிமாறிக் கொள்ளப்படும். மேலும், பிரிட்டனின் "ஐ.சி.எஸ்.ஏ. -யு.கே.' என்ற நிறுவனத்துடன் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

கம்பெனி செகரட்டரி படிப்புக்கான தேர்வு ஆண்டுக்கு இரு முறை நடத்தப்படும். ஜூன், டிசம்பர் ஆகிய மாதங்களில் இத்தேர்வுகள் நடைபெறும். மார்ச் 31-ம் தேதி பதிவு செய்தால், டிசம்பரில் தேர்வு எழுதலாம். செப்டம்பர் 30-ம் தேதிக்குள் பதிவு செய்தால் அடுத்து வரும் ஜூனில் தேர்வு எழுதலாம்.

இப்படிப்பில் சேர என்ன வழி?

12-ம் வகுப்பு முடித்திருந்தால் போதும். யார் வேண்டுமானாலும் "கம்பெனி செகரட்டரிஷிப்' படிப்பில் சேரலாம். இது போல் பட்டம் படித்தவர்களுக்கும், முதுநிலை படித்தவர்களுக்கும் படிப்புகள் உண்டு. வயது வரம்பு இல்லை.

தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கு 50 சதவீத கட்டணச் சலுகை உண்டு. சிறந்த முறையில் தேர்ச்சி பெற்றவர்களுக்குப் பரிசுகள், பதக்கங்கள், உதவித் தொகைகள் உண்டு.

நிர்வாகவியல், தொழில்முறை பயிற்சி பெறுவோருக்கு இந்நிறுவனம் வேலைவாய்ப்பு வசதி செய்து தரும். அடிப்படைத் தேர்வு எழுதியவர்களும், பட்டப்படிப்பு முடித்தவர்களும் மேலாண்மையியல் படிப்பில் சேரலாம். பிறகு இறுதித் தேர்வு எழுதலாம்.

இறுதித் தேர்வு முடித்த பின் 16 மாத மேலாண்மைப் பயிற்சி (Management Training) பெறவேண்டும். அதன் பிறகு இன்ஸ்டிடியூட்டில் பதிவு செய்தால், ஏ.சி.எஸ். (Associate Company Secretary) முடித்ததற்கான சான்றிதழ் வழங்கப்படும்.

கம்பெனிகள் ஆரம்பித்தல், கம்பெனிகள் பல்வேறு துறைகளில் அளிக்க வேண்டிய ஆவணங்களைச் சமர்ப்பித்தல், கம்பெனி நீதிமன்றங்களில் ஆஜர் ஆகுதல் ஆகிய பல்வேறு பணிகளில் ஈடுபடுகிறார்.

இது தவிர, பல்வேறு சட்டங்களின் கீழ் அறிவுசார் சொத்துரிமை (Intellectual Property Rights) கீழும் தொழில் புரியலாம். ""தற்போது நாடு முழுவதும் 21 ஆயிரம் பேர்தான் கம்பெனி செயலர்களாக இருக்கின்றனர். இன்னும் ஏழு ஆண்டுகளில் இதை 50 ஆயிரமாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது'' என்கிறார் இந்திய கம்பெனி செயலர் பயிற்சி நிறுவனத்தைச் சேர்ந்த (The Institute of Company Secretaries of India) கெய்யூர் பக்ஷி.

தகவல் தொழில்நுட்பம், சட்டம் ஆகிய படிப்புகளைப் போல் கம்பெனி செயலர் படிப்பு குறித்து கிராமப்புற மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்றார் அவர்.முதல் கட்டமாக கம்பெனி செயலர் கல்வித் திட்டத்தில் புதிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

உலகமயமாதல் சூழ்நிலையில், இந்திய நிறுவனங்களிலும், வெளிநாட்டு நிறுவனங்களிலும் கம்பெனி செயலர் பணியிடங்கள் அதிகரிக்க வாய்ப்பு உருவாகி வருகிறது. கம்பெனிகள் பதிவாளர் அலுவலகம், செபி, ரிசர்வ் வங்கி ஆகிய அமைப்புகளின் வரைமுறைகளை கம்பெனிகள் சரியாகப் பின்பற்றுகின்றனவா என்பதைக் கண்காணித்து நடைமுறைப்படுத்தும் முக்கியமான பணியையும் மேற்கொள்கின்றனர்.

கம்பெனிகள் சட்டம், பங்குகள் பரிமாற்றம் குறித்த சட்டங்களில் கம்பெனி செகரட்டரி வல்லுநராக இருப்பார். நிறுவனத்தின் சட்டம், நிதி, கணக்கு, பணியாளர் நிர்வாகம், பொது நிர்வாகம் ஆகிய பல்வேறு துறைகளில் தொடர்புகொண்டு நிறுவனத்தை நடத்துகிறார்.

அத்துடன் இயக்குநர்கள் குழு, பங்குதாரர்கள், அரசு, பொதுமக்கள், கம்பெனி ஊழியர்கள் ஆகியோர்களிடையே பாலமாகச் செயல்படுகிறார். கம்பெனி செகரட்டரிஷிப் படிப்பை இந்திய கம்பெனி செகரட்டரி நிறுவனம் நடத்துகிறது. இது நாடாளுமன்றச் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்டு மத்திய கம்பெனி விவகார அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது.

அடிப்படைத் தேர்வு ((Foundation Course) 4 தாள்கள் (கட்டணம் ரூ.3,600); மேலாண்மை நிலை (Executive Programme) 6 தாள்கள், (கட்டணம் ரூ. 7,750); தொழில்முறைப் படிப்பு (Professional Programme) 8 தாள்கள் (கட்டணம் ரூ.7,500).

கம்பெனி செகரட்டரி படிப்பின் அடிப்படைத் தேர்வு இணையவழிக் கல்வியாக (E-learning) நடப்பு ஆண்டில் நடத்தப்படும். கலந்துரையாடல், வினாடி-வினா ஆகிய பல்வேறு நூதன வழிகளில் கல்வி கற்பிக்கப்படும். பாடத் திட்டங்கள் மாற்றப்பட்டுள்ளன. அடிப்படைத் தேர்வில் 4 தாள்கள், நிர்வாகத் தேர்வில் 6 தாள்கள், தொழில்முறைத் தேர்வில் 8 தாள்கள் இருக்கும்.

இத்தொழிலில் சேருவோர் தொடக்கத்திலேயே மாதந்தோறும் ரூ.50 ஆயிரம் வரை ஊதியம் பெறலாம். கம்பெனி செயலர் பயிற்சி நிறுவனத்தின் கிளைகள் நாட்டின் 71 நகரங்களில் உள்ளன. சென்னை, மும்பை, கோல்கத்தா, தில்லி என நான்கு மண்டலங்கள் இயங்கி வருகின்றன. இது மேலும் விரிவடைய இருக்கிறது.

இப்படிப்பில் ஆண்டுமுழுவதும் எப்போதும் சேரலாம். தபால் வழி கல்விக் கட்டாயம். மண்டல அலுவலகம், கிளை அலுவலகங்களில் நடக்கும் வாய்மொழி வழிப் பயிற்சியிலும் சேரலாம். இந்திய கம்பெனி செயலர் பயிற்சி நிறுவனத்தின் பெயரை "இந்திய பட்டயச் செயலர் பயிற்சி நிறுவனம்'(The Institute of Charted Secretaries of India) எனப் பெயர் மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தென்னிந்திய மண்டல அலுவலகத்தில் விண்ணப்பப் படிவங்கள், முந்தைய ஆண்டுக்கான கேள்வி -பதில் புத்தகம், இன்ஸ்டிடியூட் வெளியிடும் புத்ககம் கிடைக்கிறது. மாணவர்களை நேரடியாகச் சேர்க்கும் முறையும் உண்டு. மாணவர் சேர்க்கையில் உடனடி சேர்க்கையும் உண்டு.

Deputy Director,

The Insititted of Company secretaries of India,

No:9, ‘ICSI-SIRC House,’ 9, Wheat Crofts Road,

Nungakbakkam chennai. 34.

Teld: 044- 2827 9898, 2826 8685. fax 044 2826 8685.

www.icsi.edu; Email: icsisirc@md3.vsnl.net.in

http://dinamani.com


Monday, December 27, 2010

A Few questions for Congress’ Prince Charming

After what happened in Mumbai on 26 November 2008, I felt crestfallen and humiliated. I was naturally angry against the terrorists and their sympathisers across the border. But what they succeeded in doing to us with their small number made me more angry against our government and its agencies. I was aghast at their incompetence. I resolved to record my real feelings and not act like a polite flatterer. My survey of the domestic situation and careful scrutiny of government's conduct for more than a year have left no doubt in my mind that important sections of the government are busy lining their pockets, totally indifferent to the threats facing this unfortunate nation. It will be wrong to attack the Congress party as a whole. Even today it has some individuals of integrity and concern for national good. The president, the Prime Minister and the prime minister-in-waiting are the ones to blame.

On the morning after that tragic day, I shot off my angry epistle to Sonia Gandhi. Here are the relevant parts: "Today, I am writing this with great anguish because my conscience does not permit me to remain silent. I must at least record what I think. For a long time it is obvious to the meanest intelligence that all your intelligence agencies are a complete failure and a fraud on the taxpayers. Reliable sources tell me that the ISI has infiltrated even into the RAW. Bangladesh has become a hotbed of anti-Indian activities. This requires the resignation and removal of some political heads but they are reported to enjoy your support.

"Yesterday's incidents in Bombay are proof of your government's incompetence. The names of your corrupt Ministers are freely circulating. Don't think that you are not yourself the target. The country is on fire and it needs consolation and security... Neither you nor your son whom you are projecting as the future Prime Minister of India are the solution or even a ray of hope...

"I know this will annoy you but frankly I do not care since you show no concern for the country. I have respect for the Prime Minister and his integrity. But that is not enough. I know his limitations of which you are the main source and cause.

"I hope and pray that this evokes the kind of response which the grim situation of the country urgently requires".

Things did not register any significant change. I watched with dismay how the party of illustrious statesmen who led India into freedom has virtually turned into a party of dumb, driven cattle, without courage to call their leaders to account. I was more contemptuous of large sections of the press, which had lost its critical faculty and wholly jettisoned the obligation to disseminate the truth, however unpleasant, to keep the political sovereign updated and informed.

No one could have failed to notice how much space and exposure were provided to Rahul Gandhi as one day the press gleefully reported that the "Baton has passed to Rahul". "Manmohan is dead and long live Rahul" was even exalted to the level of divine prophesy on the authority of a little known astrologer, who claimed to have glanced at the horoscopes of the two men, but had not bothered to see the natal chart of the Congress party.

I expected that some sections of the press would have the temerity to stand up and ask a few simple questions from the Prince Charming, the answers to which would have helped the citizens to assess the qualifications of their future ruler.

Some questions are too obvious. Let me give a few samples.

1. We have no objection to your mother's ambition to see you installed as India's Prime Minister. Obviously she did not entertain this ambition either for herself or any of her children in 1991. Are you prepared to take the nation into confidence and disclose the qualifications you have acquired since then to take into your hands the destiny of this complex and most populous and poverty stricken democracy?

2. Do you agree that the best available statesman in the country should fill that post? If yes, how have you convinced yourself that you are the one? We would not mind if your mother answers this question. We hope you will not turn to our dear friends Mani Shankar Aiyar or Abhishek Singhvi to ghost write the answers.

3. We are highly appreciative of the Election Commission which compels candidates for public office to disclose their material assets.

We wish they logically mandate the disclosure of intellectual assets as well. But if democracy is all about transparency, would you kindly let the nation know what academic qualifications you have acquired, when, how and from which institutions. It will help if you also tell the curious Indian nation what books you have read during the last five years; have you published any articles or any readable material on politics, economics, terrorism, war and peace? Is there any speech in Parliament, to the local Rotary Club or to a bunch of tiny toddlers with a single quotable quote that illumines or inspires and gives us some clue to your intellectual attainments? We know quite a few talented young men in the Congress party and naturally people would like to be satisfied that you are better endowed than them all. That your mother is Soniaji or your father was Rajivji is not enough evidence.

4. There have been oft-repeated charges of financial impropriety and worse against your family, including by the president of Janata Party, Subramanian Swamy, Swiss magazines and, most unusually in a book on the KGB. Why have you not responded?

If you plead ignorance of all the stuff mentioned in the questions you do not deserve to be India's Prime Minister any way.

Will the free press look into this serious business and make effective the People's Right to Know?

http://www.sunday-guardian.com/a/1109