Wednesday, January 5, 2011

காங்கிரஸ்-போயஸ்!விஜய் அரசியல் வண்டி ரெடி

விஜய்யின் அரசியல் வண்டி கிட்டத்தட்ட ரெடி! அநேகமாக வரும் 28, 29-ம் தேதிகளில் எலுமிச்சம் பழம் நசுக்கி வண்டியை நகர்த்திவிடுவார் விஜய் என்கிறார்கள் கோடம்பாக்கத்துக்காரர்கள்!

இலங்கைப் பிரச்னை தீவிரம் அடைந்து இருந்த காலக் கட்டத்தில் தனது ரசிகர்களுக்கு கறுப்புச் சட்டை அணி வித்து உண்ணாவிரதம் இருக்கவைத்தார் விஜய். 'விஜய்க்கு அரசியல் ஆசை வந்துவிட்டது!’ என்று எல்லோரையும் சொல்லவைத்தது அந்தச் சம்பவம். அதற்கு ஏற்ப விஜய்க்கு காங்கிரஸ் தலைவர் ராகுலிடம் இருந்து அழைப்பு வந்தது. தமிழ்நாட்டில் காங்கிரஸை வளர்க்க வேண்டும் என்று நினைத்த ராகுல், அதற்கு தமிழகத்தில் பிரபலமானசிலரை காங்கிரஸுக்குள் இழுத்துப் போட முயற்சித்தார். தமிழ் நாட்டில் செல்வாக்கான இளைய வி.ஐ.பி-க்களின் பட்டி யலில் அப்போது விஜய்க்கு முக்கிய இடம் இருந்தது. உடனடியாக, விஜய்யைச் சந்திக்க விரும்பினார் ராகுல். டெல்லியில் நிகழந்தது சந்திப்பு. காங்கிரஸ் கட்சியில் விஜய் இணைய, ராகுல் கோரிக்கை வைத்ததாகவும் அப்படி இணைந்தால் இளைஞர் காங்கிரஸில் முக்கியப் பதவி தர வேண்டும் என்று விஜய் கேட்டதாகவும் அப்போது செய்தி பரவியது. ஆனால், பத்திரிகையாளர் சந்திப்பில் 'இளைஞர் காங்கிரஸில் சேர்க்கும் வயதை விஜய் கடந்துவிட்டார்!’ என்று வெளிப்படையாகவே ராகுல் கமென்ட் அடித்தார். அதன் பிறகு, அந்தப் பேச்சும் அடங்கியது. இந்நிலையில் தி.மு.க. ஆதரவுப் பிரமுகர்களின் சினிமா நிறுவனங்களில் விஜய் நடிக்க ஆரம்பித்தார். அவரது அரசியல் ஆர்வம் தொடர்பான ஊகங்களும் மங்கி மறைந்தன என்றே சொல்ல லாம்!

இந் நிலையில் அ.தி.மு.க. பிரமுகர் சைதை துரைசாமி இல்லத் திருமணத்தில் ஜெயலலிதாவை எதிர்பாராத விதமாக விஜய்சந்தித்தார். வெறும் நல விசாரிப்பாக மட்டும்தான் அது அமைந்திருந்தது. இதைத் தொடர்ந்து மதுரை கூட்டத்தில் பேசிய ஜெயலலிதா, 'அரசியலுக்கு வரப்போவ தாக ஒரு நடிகர் அறிவித் ததும் அவரைத் தங்களது கம்பெனி படங்களில் நடிக்கவைத்து கபளீகரம் செய்துவிட்டார்கள்’ என்ற அர்த்தத்தில் சொன் னது விஜய்யை மனதில் வைத்துத்தான் என்று அந்தச் சந்திப்பின் பின்னணியை நீட்டினார் கள். ஜெயலலிதா - விஜய் சந்திப்புக்குப் பிறகு, சினிமா பிரமுகர்கள் சிலர் ஜெயலலிதாவைச் சந்தித்தார்கள். தமிழ் சினிமாவின் அப்போ தைய நிலை குறித்து விசாரித்த ஜெயலலிதா விடம், விஜய்யின் தர்ம சங்கட சூழ்நிலையையும் அப்போது குறிப் பிட்டார்கள் என்றும் ஒரு தகவல் பரவிக் கிடக்கிறது அ.தி.மு.க. வட்டாரத்தில்.

எது எப்படியோ, ஆனால் ஜெயலலிதாவின் மதுரைப் பேச்சு விஜய் மனதில் சில அதிர்வு அலைகளை ஏற்படுத்தி உள்ளது என்பது உண்மை. அந்த மதுரைக் கூட்டத்துக்குப் பிறகு, தனது ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த மூன்று மாவட்டத் தலைவர்களை அழைத்துப் பேசி உள்ளார் விஜய். சமீபத்தில் வெளியான படங்களின் வெற்றி, தோல்விகள்பற்றிப் பேசி முடித்த பின், அரசிய லையும் அலசி இருக்கிறார்கள். ''நீங்களும் ரஜினி சார் மாதிரி வர்றேன்... வர்றேன்னு ஏமாத்திடு வீங்கன்னுதான் எல்லாரும் பேசு றாங்க'' என்று ஒருவர் சொல்ல, சிரித்துவைத்தாராம் விஜய். ''புதுக் கோட்டை மீட்டிங்லயே அதுக்கான யோசனையில இருக்கேன்னுதானே சொல்லியிருக்கேன். பிறகு ஏன் சந்தேகப்படுறீங்க'' என்று விஜய் கேட்க... ''உங்க தலைவர் ராகுலை பார்க்கிறார்... ஜெயலலிதாவை மீட் பண்றார்... கருணாநிதி குடும்ப கம்பெனி படத்தில் நடிக்கிறார். அதனால தெளிவான முடிவை எடுக்க முடியாது!'' என்று ரசிகர்கள் மத்தியில் உலவும் பேச்சுகளை அவர்கள் சொல்லச் சொல்ல, தீவிர யோசனையில் ஆழ்ந்திருக்கிறார் விஜய். பிறகு மௌனம் உடைத்து, ''நானே தேதி சொல்றேன். விரைவில் நல்ல செய்தி எதிர்பாருங்கள்!'' என்று சொல்லி அனுப்பிவைத்திருக்கிறார். ''தேர்தல் வரப் போகுது. அதனால பொங்கலுக்கு முன்னால் உங்களது அறிவிப்பு இருக்க வேண்டும்!'' என்பதை மட்டும் தனது கோரிக்கையாக வைத்து வெளியேறி இருக்கிறார்கள், அந்த மூன்று மாவட்டத் தலைவர்கள்.

'காவலன்’ படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் முடிந்து, 'வேலாயுதம்’ பட ஷூட்டிங் காரண மாக பொள்ளாச்சியில் இருக்கும் விஜய், இந்த மாதக் கடைசியில் அனைத்து மாவட்டத் தலைவர்களையும் சென்னைக்கு அழைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தவிருக்கிறார்.

தன்னுடைய ரசிகர் மன்றத்தை அரசியல் கட்சியாக மாற்றுவதில் தொடங்கி, கட்சித் தலைமை அலுவலகத்தை அமைப்பது வரை அனைத்து காரியங்களையும் டிசம்பர் மாதத்தில் முடுக்கிவிட இருக்கிறாராம். விஜய்யின் இந்த மூவ்களைத் தெரிந்துகொண்டு, காங்கிரஸ் மற்றும் அ.தி.மு.க-வினர் அவருக்கு வலை வீசி வரும் காட்சிகளையும் உன்னிப்பாகக் கவனிக்க முடிகிறது. ''ராகுலை திரும்பவும் மீட் பண்ணுங்க. உங்களுக்கு உரிய மரியாதை கிடைக்கும்!'' என்று சொல்லி வருகிறார்கள் கதர் ஆதரவாளர்கள். ''உங்களது ஆதரவை எங்கள் பக்கமாகத் திருப்புங்கள்!'' என்று அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் சிலர் கோரிக்கை வைத்து வருகி றார்கள். 'இணைந்தால் காங்கிரஸ்... கூட்டணி போட்டால் போயஸ்!’ என்று விஜய் மனசு அலைபாய்ந்துகொண்டு இருப்பதாகச் சொல்கிறார் சென்னை மாவட்ட விஜய் ரசிகர் மன்ற நிர்வாகி ஒருவர்.

'விஜய் கட்சி ஆரம்பிக்கப் போகிறாரே?’ என்று சில மாதங்களுக்கு முன்னால் விஜய காந்த்திடம் கேட்டபோது, ''அவர் ஆரம்பிக்க வேண்டும். அப்போதுதான் கருணாநிதியைப் பற்றி முழுமையாக அவரால் அறிந்துகொள்ள முடியும்!'' என்று பதில் அளித்தார்.

சொகுசான சினிமா வாழ்க்கையை மட்டுமே அனுபவித்து வந்த விஜய், இந்த மாதிரியான அரசியல் வெப்பத்தை எப்படித் தாங்கிக்கொள் வார் என்பதும் யோசித்தாக வேண்டிய விஷயம்.

புதிய வரவுகள் நாட்டுக்கு நல்லதுதான்!

http://www.rishas.com/space.php?uid=2&do=blog&id=760


ராஜா - ராஜாதி ராஜா

தி.மு.க-வுக்கு அழிக்க முடியாத 'கறுப்பு அடையாள'த்தை உருவாக்கித் தந்துவிட்டு, ஒருவழியாக பதவி விலகி இருக்கிறார் ஆ.ராசா.

'தி.மு.க-வுக்கும் தன்னைத் தேர்ந்தெடுத்த மக்களுக் கும் நம்பிக்கைக்கு உரியவராக ஆ.ராசா இருந்தார். அவர் ஏற்றுக்கொண்ட பணியில் நேர்மை, நியாயம், கடமை உணர்வு ஆகிவற்றைத் தொடர்ந்து கடைப் பிடித்து, தலித் இனத்தின் கதிரவனாக விளங்குபவர்' என்று கட்சித் தலைவர் கருணாநிதி தனது விளக்க அறிக்கையில் சொல்லியிருக்கும் வார்த்தைகள், உடைந்து நொறுங்கிய பதவி நாற்காலிக்குப் போடப் பட்ட தற்காலிக ஒட்டு வேலைகளாக மட்டுமே தி.மு.க-வின் உண்மைத் தொண்டர்களால் பார்க்கப்படுகின்றன.

நேற்றைக்கு பிரச்னை தொடங்கி... இன்றைக்கு ராசாவை ராஜினாமா செய்யச் சொன்னார்கள்... என்ற கதியில் அவசர அவசரமாக நடந்து முடிந்த விவகாரம் அல்ல இது. சுமார் இரண்டு ஆண்டு காலமாகப் பலரும் பலவிதமான குற்றச்சாட்டுகளை ஸ்பெக்ட்ரம் தொடர்பாக வைத்தார்கள். அப்போதுஎல்லாம் அமைச்சர் ஆ.ராசாவும் அவரின் தலைவர் கருணாநிதியும் சொன்ன பதில்கள் என்ன?

"ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் விதிமுறைகள் மீறப்படவில்லை. 99-ம் ஆண்டு விதிமுறையைத்தான் நாங்களும் பின்பற்றினோம். பிரமோத் மகாஜனும் அருண் ஷோரியும் எதைக் கடைப்பிடித்தார்களோ அதைத்தான் நாங்களும் செய்தோம். பிரதமர் அலுவலகத்துக்கு இது தொடர்பான அனைத்துத் தகவல்களையும் கொடுத்துவிட்டுத்தான் நாங்கள் செயல்படுத்தினோம். இதில் முறைகேடு நடக்கத் துளியும் சாத்தியம் இல்லை. என்னைப் பதவி விலகச் சொல்வது, சில அரசியல்வாதிகளும் மீடியாக்களும் செய்யும் சதி" என்று ஆ.ராசா சொன்னார். இதையேதான் கருணாநிதியும் வழிமொழிந்தார்.

பதவி விலகலுக்கு மூன்று நாட்களுக்கு முன்னதாக பத்திரிகையாளர்களைச் சந்தித்த கருணாநிதி, "ராசா எந்தத் தவறும் செய்யவில்லை. அவர் பதவி விலக மாட்டார்" என்று அடித்துச் சொன்னார். வழக்கம்போல சாதிக் கத்தியை உயர்த்திக் காட்டினார். காமன்வெல்த் ஊழல் புகாரில் சிக்கிய சுரேஷ் கல்மாடி யும், மகாராஷ்டிரா ஆதர்ஷ் வீடு ஒதுக்கீட்டு முறைகேட்டில் ஊடகங் களால் கிழிக்கப்பட்ட அந்த மாநில முதலமைச்சர் அசோக் சவானும்கூட சாதிரீதியாகத்தான் குறிவைக்கப்பட்டார்களா என்பதை தி.மு.க-தான் கண்டுபிடித்துச் சொல்ல வேண்டும்!

ஸ்பெக்ட்ரம் அலை வரிசை ஒதுக்கீட்டில் விதிமுறைகள் பின்பற்றப் பட்டனவா, அதனால் அரசாங்கத்துக்கு இழப்பு ஏற்பட்டதா என்ற இரண்டு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், இதை அனைவரும் பார்க்கிறார்கள். இந்த விவகாரத்தின் ஆரம்பகர்த்தா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவரான சீத்தாராம் யெச்சூரி. ஆ.ராசா தொலைத் தொடர்புத் துறையின் அமைச்சராக ஆனதற்குப் பின்னால், இந்தத் துறைக்குச் சம்பந்தம் இல்லாத கம்பெனிகள் உள்ளே நுழைந்து, கான்ட்ராக்ட் பெற்றதைப் பார்த்து 'இதில் ஏதோ கோல்மால் நடக்கிறது' என்று யெச்சூரி, பிரதமருக்கு கடிதம் அனுப்பினார். கூட்டணியில் இருக்கும் முக்கியக் கட்சியான தி.மு.க-வுக்குக் கசப்பை ஏற்படுத்தும் என்பதால், மன்மோகன் அப்போது மௌனம் சாதித்தார்.

உடனே, சில சமூக ஆர்வலர்கள் டெல்லி உயர் நீதிமன்றத்தின் கவனத்துக்கு இதைக் கொண்டுபோனார்கள். "எல்லா டெண்டர்களும் யார் தகுதியானவர் என்று பார்த்துத்தானே தரப்படுகிறது? இதில் மட்டும் முதலில் வந்தவர்களுக்கு முன்னுரிமை என்று தந்து இருப்பது தவறானது. சினிமா டிக்கெட்டைக் கொடுப்பதுபோல டெண்டர் தருவது தவறு" என்று டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் கண்டித்தார்கள். உச்ச நீதிமன்றத்தின் கவனத்துக்கும் இது சென்றது. அவர்கள் சுழற்றிச் சுழற்றி அடிக்க ஆரம்பித்ததுதான், இன்று ராசாவை ராஜினாமா கடிதம் எழுதவைத்து இருக்கிறது.

ஆறு மாதங்களுக்கு முன்னரே, "ஆ.ராசாவை ராஜினாமா செய்யச் சொல்லுங்கள். தி.மு.க-வில் இருந்து இன்னொருவரை மந்திரி ஆக்கிக்கொள்ளுங்கள்" என்று சோனியா தரப்பில் இருந்து கருணாநிதிக்குத் தகவல் தரப்பட்டதாக டெல்லி உள் விஷயங்களை அறிந்தவர்கள் சொல்கிறார்கள். 'அப்படிச் செய்தால், குற்றத்தை ஒப்புக் கொண்டதாக ஆகிவிடும்' என்று சென்னையில் இருந்து தகவல் தரப்பட்டுள்ளது.

"சி.பி.ஐ. இந்த வழக்கை முறைப்படி விசாரித்தபோது கிடைத்த முதல்கட்ட ஆவணங்களே தவறு நடந்திருப்பதை நிரூபிப்பதாக உள்ளன. மேலும், சில நேரடி சாட்சிகளையும் சி.பி.ஐ. ஏற்பாடு செய்து விட்டது. குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்ய இந்த சாட்சிகளே போதுமானது. அடுத்ததாக, மத்திய கணக்கு தணிக்கை அதிகாரியின் அறிக்கையில் ஏராளமான சந்தேகங்கள் கிளப்பப்பட்டு உள்ளன. முறைப்படி 2ஜி டெண்டரை விட்டிருந்தால், மேலும் 1.76 லட்சம் கோடிக்கு லாபம் பார்த்திருக்க முடியும் என்று இந்த அறிக்கை சொல்கிறது. இந்த டெண்டரை எடுத்த சில கம்பெனிகள், தொலைத் தொடர்புத் துறைக்குச் சம்பந்தம் இல்லாத பில்டிங் கான்ட்ராக்ட் வேலை பார்க்கும் கம்பெனிகள். இவர்கள் யார் மூலமாக இந்தத் துறைக்குள் வந்தார்கள்? என்று இந்த அறிக்கை கேட்கிறது.

சி.பி.ஐ வைத்துள்ள தொலைபேசி, ஆடியோ டேப் உள்ளிட்ட தகவல்கள், கணக்குத் தணிக்கைத் துறை யின் அறிக்கை இரண்டுமே இப்போதைக்கு சுப்ரீம் கோர்ட் விசாரணைக்குப் போதுமானதாக இருக்கின்றன. எனவே, இதில் சம்பந்தப்பட்ட ராசாவை மந்திரியாக வைத்துக்கொண்டு விசாரணையை நடத்த முடியாது. நடத்தினால் நியாயமாக இருக்காது. இதை சுப்ரீம் கோர்ட் ஏற்காது. எனவே, ராஜினாமா செய்யச் சொல்லுங் கள்' என்று சோனியா சார்பாகச் சொல்லப்பட்ட காரணங்களை தி.மு.க. தரப்பு கடந்த மூன்று மாதங்களாக மறுத்து வந்தது.

இந்த நிலையில், டெல்லியில் நடந்த ஒரு சம்பவம், சோனியாவின் நம்பர் 10, ஜன்பத் இல்லத்தில் அதிர்ச்சியைக் கிளப்பியது. காமன் வெல்த் போட்டிகள் நடத்துவதற்காக டெல்லியில் எத்தனையோ உள் கட்டமைப்புப் பணிகள் செய்யப்பட்டதும், அதில் ஊழல் தலைவிரித்து ஆடியதும் அனைவரும் அறிந்த விஷயம்தான். இந்தப் போட்டிகளுக்காகக் கட்டப்பட்ட பாலம் ஒன்று உடைந்து நொறுங்கியதைப் பார்த்த பிரியங்கா, அன்றைய தினம் அம்மா சோனியாவையும் அண்ணன் ராகுலையும் அழைத்துக் கோபமாகப் பேசியிருக்கிறார்.

"இந்த முறைகேட்டுக்கு யார் காரணமோ, அவர்களை இன்றைக்கே டிஸ்மிஸ் பண்ணுங்கள். காங்கிரஸ் கட்சியின் இமேஜ் இந்த விளையாட்டுப் போட்டியோடு முடியப்போகிறது. என்னுடைய தோழிகள் இதுபற்றிச் சொல்லும் தகவல்கள் என்னையே வெட்கப்பட வைத்தன" என்று கோபமாகச் சொன்னாராம்.

"ஊழல் நடந்திருப்பது உண்மை. அதற்காக சம்பந்தப்பட்டவர்களை உடனே டிஸ்மிஸ் பண்ண முடியாது. இது விளையாட்டுப் போட்டியை மட்டும் அல்ல; தேசத்தின் இமேஜையே பாதிக்கும். போட்டிகள் முடிந்த பிறகு செய்கிறேன்" என்று சோனியா சொன்னதாகவும் சொல்கிறார்கள்.

"ஊழல் குற்றச்சாட்டுகள் யார் மீது வந்தாலும், அவர்களை உடனடியாக டிஸ்மிஸ் செய்யுங்கள். அதைத் செய்தாலே, காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு எல்லா மாநிலங்களிலும் வளரும்" என்று அப்போதே பேசப்பட்டதாம். சுரேஷ் கல்மாடி நீக்கப்பட்டதன் பின்னணியும் இதுதான். மகாராஷ்டிரா முறைகேடு தொடர்பாக அசோக் சவான், வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டதற்கும் இதுதான் காரணம். "இவர்கள் இருவரும் ராஜினாமா செய்வதற்கு முந்தைய நாளே தி.மு.க. தரப்புக்கும் ராசாவை ராஜினாமா செய்யச் சொல்லிவிட்டார்கள். கருணாநிதி நடத்திய போராட்டத்தால்தான் மேலும் 10 நாட்கள் நீடித்தன. எனவே, இவை அனைத்துக்கும் பிள்ளையார் சுழி போட்டதே பிரியங்காதான்" என்கிறார்கள் டெல்லியில்.

அசோக் சவானுக்கு அடுத்ததாக யார் முதலமைச்சராக வருவார்கள் என்று ராகுலிடம் கேட்டபோது, "ஊழல் இல்லாத ஒரு நபர்" என்று அவர் பதில் அளிக்கத் தூண்டுதலாகஅமைந்ததாம் பிரியங்கா சொல்லிய வார்த்தைகள். "சிறு கறையுடனும் நான் பதவி விலகத் தயார் இல்லை" என்று ஆ.ராசா கிளிப்பிள்ளையைப் போலத் திரும்பத் திரும்பச் சொன்னாலும், அதை காங்கிரஸ் மேலிடம் ஏற்கத் தயாராக இல்லை. ராசா ராஜினாமா செய்வாரா என்று காங்கிரஸ் பொறுப்பாளர்களிடம் பத்திரிகையாளர்கள் கேட்டபோது எல்லாம், "அது, தி.மு.க. எடுக்க வேண்டிய முடிவு" என்று சொன்னார்கள். அதாவது, கருணாநிதி சம்மதித்தால் எப்போது வேண்டுமானாலும் அது நடக்கலாம் என்பதுதான் நிஜமாக இருந்தது.

'வடக்கு வாழ்கிறது' என்பது தி.மு.க-வின் ஆதி முழக்கங்களில் ஒன்று. 'வடக்கு வறுக்கிறது' என்பதே இன்று தி.மு.க. வெளியிட முடியாத முழக்கம்!

http://www.rishas.com/space.php?uid=2&do=blog&id=699

கிரி-கிரி அசெம்ப்ளி!



அப்பாவுடன் ஒருவர்
அப்பாவியாய் ஒருவர்!
தப்பாகப் போகும் கணக்கு
தப்பினால் வரும் பிணக்கு!
தொடரும் நீலகிரி
மருந்தாய் ஏலகிரி
துரத்தும் அழகிரி
காப்பது எந்தகிரி?



Tuesday, January 4, 2011

குவாத்ரோச்சி வழக்கு குறித்து அரசிடமிருந்து புதிய உத்தரவு எதுவும் வரவில்லை: சிபிஐ

புதுதில்லி, ஜன.4: போபர்ஸ் பீரங்கி பேர வழக்கில் இத்தாலியத் தொழிலதிபர் ஒட்டாவியோ குவாத்ரோச்சிக்கு எதிரான வழக்கை திரும்பப் பெற்றுக் கொள்வதாக மத்திய குற்றப்புலனாய்வுத் துறை நீதிமன்றத்தில் தெரிவித்ததது. தலைமை மெட்ரோபாலிடன் நீதிபதி வினோத் யாதவ் முன்பு இதற்கான நடைமுறைகள் தொடங்கியபோது, சிபிஐயின் இந்த முடிவுக்கு உச்சநீதிமன்ற வழக்கறிஞர் அஜய் அகர்வால் எதிர்ப்பு தெரிவித்தார். வருமான வரித் தீர்ப்பாயத்தின் சமீபத்திய உத்தரவைத் தொடர்ந்து இந்த விவகாரத்தை மறுஆய்வு செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

இதையடுத்து நீதிபதி வினோத் யாதவ், இந்த விவகாரத்தில் அரசிடம் இருந்து புதிதாக அறிவுரைகள் ஏதும் வந்ததா என சிபிஐ சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பி.பி.மல்ஹோத்ராவிடம் கேட்டார்.

அதற்கு பதிலளித்த மல்ஹோத்ரா, அரசிடம் இருந்து அறிவுரைகள் ஏதும் வரவில்லை என்று தெரிவித்தார்.

வருமான வரித்தீர்ப்பாயத்தின் தீர்ப்பு வெளியானதையடுத்து இந்த விவகாரத்தை அரசு மறு ஆய்வு செய்யும் என சட்ட அமைச்சர் வீரப்பமொய்லி கூறியிருந்ததை அகர்வால் நீதிபதி வினோ்த் யாதவிடம் சுட்டிக்காட்டினார்.

அகர்வாலின் வாதங்களுக்குப் பிறகு, சட்ட அமைச்சரின் அறிக்கை தொடர்பாக உங்களது கருத்தை அறிய விரும்புவதாக மல்ஹோத்ராவிடம் நீதிபதி தெரிவித்தார்.

சட்ட அமைச்சரின் அறிக்கை குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும், குவாத்ரோச்சிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறுவது தொடர்பாக அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்தபின்னர் மனுத்தாக்கல் செய்யப்பட்டதாகவும் மல்ஹோத்ரா நீதிபதியிடம் தெரிவித்தார்.

www.dinamani.com

அறிவியலாளர்கள் புதுமையாகச் சிந்திக்க வேண்டும்: பிரதமர் மன்மோகன்

அறிவியலாளர்கள் புதுமையாகச் சிந்திக்க வேண்டும்: பிரதமர் மன்மோகன்



சென்னை, ஜன. 3: இந்திய அறிவியலாளர்கள் புதுமையாகச் சிந்திக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கேட்டுக் கொண்டார்.

இந்திய அறிவியல் மாநாட்டுக் கழகத்தின் நூற்றாண்டு விழாவையொட்டி, 2012-13 ஆம் ஆண்டை அறிவியல் ஆண்டாகக் கொண்டாட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

சென்னையை அடுத்த காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் 98-வது இந்திய அறிவியல் மாநாட்டை திங்கள்கிழமை தொடங்கி வைத்து அவர் பேசியது:

இந்திய அறிவியலாளர்கள் மிகப் பெரியதாகவும், புதுமையாகவும் சிந்திக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது. அவர்களது சிந்தனை காலத்தை மீறியதாக இருக்க வேண்டும்.

21-ம் நூற்றாண்டின் ராமன்களையும் (நோபல் விஞ்ஞானி), ராமானுஜன்களையும் (கணித மேதை) இந்தியா உருவாக்க வேண்டிய நேரம் இது.

தரமான கல்வி, இந்தியப் பல்கலைக்கழகங்களில் அறிவியல் ஆராய்ச்சிகளின் தரத்தை மேம்படுத்துதல் என்ற தலைப்பில் இந்த மாநாடு நடத்தப்படுவது மகிழ்ச்சியளிக்கிறது.

அறிவியல் கல்விக்கும், அறிவியல் ஆராய்ச்சிக்கும் முக்கிய இணைப்புச் சங்கிலியாக பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன. நமது கல்விமுறையைப் பலப்படுத்தாமல், ஆராய்ச்சிகளில் சிறப்பிடம் பெற முடியாது.

அதேபோன்று, பல்கலைக்கழகங்களில் புதுமைகளைச் செய்வதற்கான சூழலை உருவாக்க வேண்டியுள்ளது. பல்கலைக்கழக அமைப்புகளின் வளர்ச்சிக்காக அரசு சிறப்புக் கவனம் செலுத்தி வருகிறது.

கடந்த 5 ஆண்டுகளில் புதிதாக 8 இந்திய தொழில்நுட்பக் கழகங்களையும், 5 இந்திய அறிவியல் ஆராய்ச்சி நிறுவனங்களை அரசு ஏற்படுத்தியுள்ளது. அறிவியல் ஆராய்ச்சிகளில் ஈடுபடவும், உயர் கல்வியை வழங்கவும் இந்த மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் ஆயிரம் ஆராய்ச்சி முனைவர்களை உருவாக்கும் வகையில் அறிவியல் ஆராய்ச்சி அகாதெமி ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

பல்கலைக்கழகங்கள் புதுமையான எண்ணங்களுக்கும், அறிவுஜீவிகளுக்கும் வரவேற்பு அளிக்கும் இடங்களாக மாற வேண்டும். அதற்கேற்ற வகையில், அதிகார வர்க்கத்தின் பிடியிலிருந்தும், நடைமுறைகளிலிருந்தும் பல்கலைக்கழகங்களை விடுவிக்க வேண்டும்.

நமது பொருளாதார வளர்ச்சி, மக்களின் சுகாதாரம், நாட்டின் பாதுகாப்பு ஆகியவை நமது அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சியைச் சார்ந்தவையாக உள்ளன. இதன் காரணமாகவே, அறிவியல் ஆராய்ச்சிகளுக்கு அரசு அதிக அளவில் நிதியுதவி அளித்து வருகிறது.

அறிவியல் துறையில் இந்தியா உலகில் முதன்மையான நாடாக மாறுவதற்குரிய வழிமுறைகள் குறித்து அறிவியல் ஆலோசனைக் குழு சில பரிந்துரைகளைச் செய்துள்ளது.

அதன்படி, சிறந்த மாணவர்களை அறிவியல் துறை பக்கம் ஈர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. எனவே, இளைஞர்களை அறிவியல் படிப்புகள் பக்கம் ஈர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவியல், தொழில்நுட்பம், மனித ஆற்றல் மேம்பாட்டுத் துறைகளை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

இந்திய அறிவியல் மாநாட்டுக் கழகத்தின் நூற்றாண்டு விழாவையொட்டி, 2012-13 ஆம் ஆண்டை இந்திய அறிவியல் ஆண்டாக அறிவிக்க வேண்டும். அறிவியல் ஆண்டில் புதிய தலைமுறையினர் அறிவியல் பக்கம் ஈர்க்கப்படுவார்கள் என்று நம்புகிறேன். நோபல் விஞ்ஞானி சந்திரசேகரின் நூற்றாண்டு விழாவையும் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்று அறிவியல், தொழில்நுட்பத் துறைக்கு உத்தரவிட்டுள்ளேன்.

நோபல் விஞ்ஞானி ராமனின் கண்டுபிடிப்பின் அடிப்படையில் வெளிநாட்டு நிறுவனங்கள் தயாரித்துள்ள பொருள்களை நாம் பயன்படுத்துகிறோம். அறிவியல் ஆராய்ச்சிகளின் முடிவுகளைக் கொண்டு இந்தியாவில் பொருள்கள் தயாரிக்கப்படுவதில்லையே ஏன்? பல்கலைக்கழகங்கள், ஆய்வுக்கூடங்கள், தொழில்துறையினருக்கான தொடர்பை வலுப்படுத்துவது எப்படி உள்ளிட்டவை குறித்து இந்த மாநாட்டில் விவாதித்து அரசுக்குப் பரிந்துரைகளை அனுப்ப வேண்டும் என்றார் மன்மோகன் சிங்.

மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல், துணை முதல்வர் மு.க. ஸ்டாலின், 98-வது இந்திய அறிவியல் மாநாட்டின் தலைவர் கே.சி.பாண்டே, எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் வேந்தர் டி.ஆர்.பச்சமுத்து உள்ளிட்டோர் பேசினர்.

நோபல் விஞ்ஞானி வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் உள்பட அறிவியல் துறையில் சிறந்து விளங்கும் 27 பேருக்கு பிரதமர் விருதுகளை வழங்கினார்.

wwww.dinamani.com

Monday, January 3, 2011

நான் ஏன் குத்தாட்டத்தை ரசிக்கிறேன்? உடன்பிறப்புகளுக்கு கருணாநிதி பதில்.

(கற்பனை ஆனாலும் உண்மை)

உடன்பிறப்பே! தந்தை பெரியாரால் ஈர்க்கப்பட்டு அறிஞர் அண்ணாவால் வளர்க்கப்பட்டு, உடன்பிறப்புகளால் நான் அரசியலுக்கும் பதவிக்கும் வந்தவன் நான் என்பதை நீங்கள் அறியாதவர்கள் அல்ல‌. தமிழ் மக்களுக்கும் தமிழ் மொழிக்கும் நான் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டு வருகிறேன் என்பதை உலகறியும்.

650 கோடி ரூபாய் செலவில் நாம் நட்டத்திய செம்மொழி மாநாட்டை உலகம் மறந்துவிடுமா? இல்லை 100 நாட்களில் 4 தொலைக்காட்சி அலைவரிசைகளை கலைஞர் தொலைக்காட்சிக்காக துவங்கியதை மக்கள்சாதனை என்று சொல்லகூடாதா? இந்த வயதிலும் மிக கடுமையாக நான் உழைக்கிறேன் என்றால் அதை சில விஷ‌மிகளும், திராவிட பன்பாட்டு எதிரிகளும் தவறாக பேசுகிறார்கள், பொய் பிர‌ச்சாரம் செய்கிறார்கள்.



ஷாருக் கான் போன்ற நடிகர்கள் மராட்டிய முதல் மந்திரியை பார்பதற்க்கு கூட அனுமதி மறுக்கப்படுகிற வேலையில் தமிழக முதல்வர் அலுவலக கதவு சின்னதிரை மற்றும் வெள்ளிதிரை கலைஞர்களுக்காக எப்போழுதுமே திறந்தே இருக்கிறது என்பதை கலையுலகம் நன்கறியும். எத்தனை சலுகைகள், எத்தனை எத்தனை பாராட்டு விழாக்கள்! இப்படி நடிகர்கள் மற்றும் நடிகைகள் புடைசூழ இருப்பதையே நான் பெருமையாக நினைக்கிறேன்.

சின்னதிரை கலைஞர்களுக்கு தனி நலவாரியம், சின்ன மற்றும் வெள்ளிதிரை நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் போன்றோர்களுக்கு 75 ஆயிரம் இலவச வீடு திட்டம் என இந்த அரசின் சாதனைப்பட்டியல் நீள்கிறது.

இப்படி மக்களின் வரிபணத்தை வாரி வழங்குவதால் தான் அவர்கள் பாராட்டு விழா என்ற பெயரில் நல்ல குத்தாட்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்கிறார்கள், இதை ஏதோ நான் மட்டும்தான் கண்டுகளிப்பதுபோல சில பத்திரிக்கைகள் எழுதுகின்றன, அதே குத்தாட்டத்தை நமது கலைஞர் தொலக்காட்சியில் பல்வேறு வர்த்தக விளப்பரங்களுக்கிடையில் ஒளிபரப்பு செய்யவில்லையா, அல்லது அதை தமிழக மக்கள் தி.மு.க அரசு கொடுத்த இலவச டி.வியில் பார்க்கவில்லை -யா, ஏதோ இதுபோண்ற குத்தாட்டங்கள் பாராட்டுவிழாக்கள் என்ற பெயரில் நடத்துவதை ஒருசிலர் குறை கூறினாலும் அது மக்களுக்காவே என்பதை என் போண்ற திராவிட சிந்தனை உள்ளோர்கள் புரிந்துள்ளார்கள்.


ஏதோ இந்தியாவில் உள்ள அரசியல்வாதிகளில் நான் மட்டும்தான் சின்ன திரைக்கும் வெள்ளிதிரைக்கும் அதிக நேரம் செலவிடுவதாக சிலர் நினைக்கிறார்கள், அவர்கள் நினைத்திவிட்டு போகட்டும்,தமிழில் வெளிவரும் எல்லா திரைப்படத்தையும் நமது அமைச்சர் பெருமக்களோடு திரையரங்கிற்க்கே சென்று நான் பார்கிறேனே ஏன்? திராவிட இயக்கத்தை வளர்த்ததே கலையும் இலக்கியமும் தான் என்பதை அறிஞர் அண்ணா போண்றோர் எத்தனையோ மேடையில் பேசியிருக்கிறார்கள் என்பதை நீ நினைவில்கொள்ளவேண்டும்.


இன்று நேற்றல்ல கடந்த 60 ஆண்டுகளாக எனக்கு தமிழ் திரைஉலகோடு தொடர்புன்டு, என்னையும் இயக்கத்தையும் வளர்த்த தமிழ் திரைஉலகை சிறப்பாக வளர்க்க என்குடும்பத்தார்கள் எவ்வளவு பாடுபடுகிறார்கள் என்பதை நன்கறிவீர்கள்.

முரசொலி மாறனால் ஏற்படுத்தப்பட்ட சன் குழுமம் இன்று 22 தொலைக்காட்சி அலைவரிசையோடு தென் இந்தியா முழுவதும் கலைசேவை செய்துவருகிறது, மாறன் சகோதரர்களால் ஏற்பட்ட மனகசப்பால் உதயமான நமது கலைஞர் தொலைக்காட்சி தற்போது 5 அலைவரிசையோடு தமிழக மக்களுக்கு அல்லும் பகலுமாக‌ சேவை செய்துவருகிறது, அது மட்டுமா இன்று தமிழில் எடுக்ப்படும் பெரும்பான்மையான திரைப்படத்தை தயாரிப்பவர்களும், நடிப்பவர்களும் என் பேரன்களான உதயநிதியும், துறை தயாநிதியும் போண்றோர்கள்தான், இப்படி இந்த வெள்ளி மற்றும் சின்னதிரையை நாங்கள் ஆக்கிரமித்துள்ளதை கண்டு பொருக்கமுடியாத சிலர் அரசிற்க்கு எதிராக பேசுகிறார்கள், எமது நல்லாட்சிக்கு கலங்கம் ஏற்படுத்த எதிர்கட்சிகள் முயல்கின்றன.

பேசுபவர் பேசட்டும் ஏசுபவர் ஏசட்டும், இந்த தள்ளாத வயதில் குத்தாட்டத்தை கண்டுகளிப்பதை நிருத்தமுடியாது, அதுவும் நமிதா போன்றோர் ஆடும் ஆட்டம் என் மனதையும் தொடும்படியாக அமைந்துள்ளது.

கண்டுகளிப்பது குத்தாட்டமானாலும், கலைவளர்ப்பது நாமல்லவா! பலன் பெறுவது கலைஞர்கள் ஆனாலும் பயனடைவது தமிழக மக்கள் அல்லவா!! ஆகையால் உடன்பிறப்பே உன் தலைவனுக்கு பாராட்டு விழா என்றால் பற‌ந்துவா, நீ கழக‌ அரசு கொடுத்த இலவச டி.வியில் பார்ப்பதைவிட நேரில் பார்க்க வேண்டும் என்பதே என்விருப்பம். வாழ்க தமிழ்! வளர்க திராவிடம்!!



http://linganpages.blogspot.com/2010/09/blog-post_03.html

கருணாநிதி - ருத்ராட்ச பூனையின் மூட நம்பிக்கைகள்

ருத்ராட்ச பூனை கருணாநிதி....

இனி வரும் காலங்களில் கருணாநிதி என்ற வார்த்தைக்கு தமிழில் அர்த்தம் தேடினால் ஏராளமான விளக்கங்கள் கிடைக்கும் என்பதில் சந்தேகமே கிடையாது. முரண்பாட்டு மூட்டையாக காட்சி அளிக்கும் அந்த மனிதரின் (மன்னிக்கவும்) செயல்களை அலசி பார்த்தால் வெட்கக் கேடு. எனினும், தமிழனின் தலைவிதி, அந்த மனிதனை பற்றி பேச வேண்டிய கட்டாய சூழ்நிலை உள்ளது.

பண்டாரம். ரதேசி என்று சகட்டுமேனிக்கு திட்டிய கும்பலோடு கைகோர்த்து அதிகாரத்தில் பங்கு எடுத்தும், 'நான் இருக்கும் இடத்தில மதவாதம் இருக்காது' என்று உறுதி கூறினார். சுமார் எட்டு ஆண்டு காலம் மத்தியில் அதிகாரத்தை சுவைத்த பிறகு, அந்த கும்பலால் ஆட்சிக்கு வர முடியாது என தெரிந்ததும் 'மதவாத சக்திகளுடன் கூட்டணி முறிந்தது' என்றார்.

கருணாநிதியின் அந்தர் பல்டிக்கு 'இது ஒரு சின்ன உதாரணம்'. ஆனால், சில கொள்கைகளில் மட்டும் அவர் விடாப்பிடியாக இருந்து வருகிறார். 'ஆட்சி-அதிகாரத்தில் இல்லா விட்டால் தமிழனுக்காக போராடுவது, ஆட்சியில் இருந்தால் தன்னுடைய குடும்பத்துக்காக போராடுவது, சினிமா நடிகைகளின் குத்தாட்டத்தை பல மணி நேரம் ஆனாலும் 'ஜொள்ளு' விட்டு ரசிப்பது' இப்படி சில கொள்கைகள் அவருக்கு உண்டு.

ஒரு விஷயம். எந்த நேரமும் அவர் பேசிக்கொண்டு இருக்கும் நாத்திக கொள்கைகளில் அவருக்கு ஈடுபாடு உண்டு என்று யாராவது நினைத்தால் அது மிகவும் தப்பு. மஞ்சள் துண்டு போடுவதில் இருந்து அவருடைய மூட நம்பிக்கைகளை பட்டியல் இட்டால் கணக்கில் அடங்காது. எனினும். அது பற்றி கொஞ்சம் பேச விட்டால் நன்றாக இருக்காது. அவற்றை இப்போது பேச விட்டால் எப்போது பேசுவது?

ஜெயலலிதா என்றால் பச்சை நிறம், 9 என்ற எண் பற்றி அனைவரும் பேசுவது வழக்கமாகி விட்டது. இந்த காரணநிதி கூட, தன்னை நல்லவர் போலவும் மூட நம்பிக்கைகளை ஒழிக்க வந்தவர் போலவும் காட்டிக் கொண்டு ஜெயலலிதாவை விமர்சித்தது உண்டு. ஆனால், கருணாநிதி பற்றிய ரகசியம் தெரியுமா?

உலக அளவில் அனைத்து மக்களும் அஞ்சி நடுங்கும் எண்கள் எது வென்றால் 8 மற்றும் 13 . மேலும், இந்தியாவை பொறுத்தவரை சனிக்கிழமை என்றால் யாருக்கும் ஆகாது. இந்த எண்களும், கிழமையும் கருணாநிதிக்கு பிடித்த ராசியனவை ஆகும்.

கடந்த 5 ஆண்டுகளாக அவர் தொடங்கும் எந்த முக்கிய காரியமாக இருந்தாலும் இந்த எண்கள் அல்லது சனிக்கிழமை வருமாறு அமைப்பதே வழக்கமாக வைத்துள்ளார். 2006 -ம ஆண்டு அவர் பதவி ஏற்ற நாள் (சனிக்கிழமை) முதல் ஒவ்வொரு முக்கிய நிகழ்ச்சியும் (அவருடைய பதவியை காப்பாற்றுவது தொடர்பான நிகழ்வுகள்) எட்டு அல்லது பதிமூன்றாம் தேதியில் இருக்கும் அல்லது சனிக்கிழமையில் இருக்கும்.

ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத்தொடர், கவர்னர் உரை, பட்ஜெட் தாக்கல் இப்படி ஏராளமான உதாரணங்கள் உள்ளன.

தேர்தல் தேதிகளில் கூட, அவருக்கு ராசியாக அமையுமாறு பார்த்துக்கொள்கிராரோ என்ற சந்தேகம் உள்ளது. இத்தாலி அம்மையாரின் ஆசியுடன் எதுவும் நடக்கலாம்.

பாராளுமன்ற தேர்தலின்போது தமிழ்நாட்டில் வாக்குபதிவு நடந்த நாள் அல்லது வாக்கு எண்ணிக்கை நாள். சமீப காலமாக தமிழ் நாட்டையே கலக்கி கொண்டு இருக்கும் ஒவ்வொரு இடை தேர்தலின் வாக்குபதிவு நாள் அல்லது வாக்கு எண்ணிக்கை இவற்றை ஆய்வு செய்து பார்த்தால் இந்த உண்மை புரியும். எட்டு அல்லது பதிமூன்றாம் தேதியில் இருக்கும் அல்லது சனிக்கிழமையில் இருக்கும்.

இவை எல்லாம் முடிந்து போனவை. தற்போதைய சூழ்நிலையில் ஒரு முக்கிய நிகழ்வை பார்த்தால் என்னுடைய கருத்து நிதர்சனமான உண்மை என்பது விளங்கும். புதிய சட்டசபை கட்டிடம் திறப்பு விழா - மார்ச் 13 (சனிக்கிழமை) நிரந்தர முதல்வராக இருக்கலாம் என்பதற்காக இந்த திட்டமோ என்னவோ?

அந்த கட்டத்தை கட்ட தொடங்கும்பொது நவரத்னா கற்களை பூமியில் கொட்டி பூஜை போட்டதும இங்கே குறிப்பிடத்தக்கது.

அதே நேரத்தில், அண்ணா பல்கலை வளாகத்தில் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் பூமி பூஜை போடப்பட்ட்ட பொது இந்த நிகழ்வுகள் எல்லாம் நடை பெற்றதக்கு கடும் கண்டனம் எழுப்பியது இந்த கருணாநிதி தான். அப்போது பகிரங்கமாக நடந்ததும், தற்போது கமுக்கமாக நடந்ததும் தான் வித்தியாசம்.

அதாவது, எதை பகிரங்கமாக வெளியிட்டு விளம்பரம் தேடிக்கொள்ள வேண்டும் என்பதை அறிந்து வைத்துக் கொண்டு அதற்கு ஏற்றவாறு பத்திரிகைகளை அன்பாக (?) வேண்டி கொள்பவர் கருணாநிதி. தமிழ் நடிக பட்டாளம் சார்பாக. அவரோட சாதனைகளை (?) பாராட்டி சென்னையில் பிப்ரவரி 7 -ம தேதி பாராட்டு விழா நடந்தது. அட அது கூட, சனிக்கிழமை தாங்க.

இந்த ருத்ராட்ச பூனையின் மூட நம்பிக்கைகள் பற்றி இனிமேலாவது அனைவரும் அறிந்து கொண்டால் சரி.

http://thileeban-ravi.blogspot.com/2010/03/blog-post_1971.html