சித்த மருத்துவ குறிப்புகள் - 2
21. இருமல், சளியுடன் வரும் இரதத்ததத்தை நிறுத்த:
ஆடாதோடா இலையை பொடி செய்து 5 கிராம் தேன் கலந்து சாப்பிட்டு வர 3 நாளில் குணமாகும்.
22. சுவாசகுழாய் அலர்ஜி குணமாக:
குங்கும பூவுடன், தேன் கலந்து சாப்பிட்டு வர 3 நாட்கள் தினசா¢ 2 வேளை உட்கொள்ள குணமாகும்.
23. இருமல் தொண்டைவலி குணமாக:
மிளகு, திப்பிலி, சுக்கு சமஅளவு, பொடி 2 கிராம் தேனில் கலந்து 3 வேளை சாப்பிட இருமல், தொண்டைவலி குணமாகும்.
24. மழைக்காலங்களில் வரும் சளி, இருமல் குணமாக:
முசுமுசுக்கை இலையை சாப்பிட்டு வரை சளி, இருமல் வராமல் தடுக்க முடியும்.
25. மூச்சு வாங்குதல்: தூதுவளை உண்பதால் குணமாகும்.
26. நெஞ்சு தடுமன் குணமாக:
வெற்றிலை சாறு, இஞ்சி சாறு கலந்து கண்ணாடி டம்ளா¢ல் வைத்து தெளிந்த நீரை மட்டும் எடுத்து தேன் சேர்ந்து 3 வேளை கொடுக்க குணமாகும்.
27. ஜலதோஷம்:
மாதுளம்பழம் சாப்பிட ஜலதோஷம் குணமாகும்.
28. தலைவலி குணமாக:
விரலி மஞ்சளை விளக்கெண்ணையில் மூக்கி விளக்கில் காட்டி சுட்டு அதன் புகையை மூக்கின் வழியாக உ¡¢ஞ்ச தலைவலி, நெஞ்சுவலி முதலியன அகலும்.
29. வரட்டு இருமல் குணமாக:
சுடுக்காய் தோலை சுட்டு ஒரு துண்டை வாயில் அடக்கினால் வறட்டு இருமல் குணமாகும்.
30. மூச்சுத்திணறல்: தேள் கொடுக்குச் செடியின் காயை நசுக்கி துளசி இலையைச் சேர்த்து கஷயாமாக்கி தினம் ஒரு வேளை சாப்பிட்டு வர மூச்சுத் திணறல் குணமாகும்.
31. வாந்தி நிறுத்த:
வேப்பம் பூவை வறுத்து பொடிசெய்து பருப்பு ரசத்துடன் கலந்து சாப்பிட வாந்தி நிற்கும்.
32. ஒற்றைத் தலைவலி:
துளசி இலை, நல்வேளை இலை, அருகம்புல், வெற்றிலை இலைகளை கைப்பிடி அளவு சேகா¢த்து கச்கிப் பிழிந்து எந்தப் பக்கம் தலை வலிக்கிறதோ அதற்கு எதிர்ப்பக்கம் காதில் விட வேண்டும். தொடர்ந்து மூன்று நாட்கள் செய்து வந்தால் ஒற்றைத் தலைவலி அகலும்.
33. இருமல் குணமாக:
காய்ச்சிய பசுவின் பாலில் சிறிதளவு மிளகுத் தூளைப் போட்டுக் கலந்து குடித்தால் இருமல் நிற்கும்.
34. சளி, இருமல், இளைப்பு நோய்கள் வராமல் தடுக்க:
நத்தை சூ¡¢ விதைகளை வறுத்து பொடியாக்கி சமஅளவு கல் கண்டு அல்லது பனங்கல் கண்டு சேர்த்து 5 கிராம் வீதம் காலை மாலை சாப்பிட சளி, இருமல் வராமல் தடுக்கலாம்.
35. மார்புசளி நீங்க:
ஏலப்பொடியை நெய்யில் கலந்து காலை மாலை வெறும் வயிற்றில் சாப்பிட மார்புசளி குணமாகும்.
36. தலை பாரம் குணமாக:
நல்லெண்ணெயில் 10 கருஞ்செம்பைப்பூவும், கஸ்தூ¡¢ மஞ்சள், சாம்பிராணி சேர்த்து இளஞ்சூட்டில் தலையில் வைத்து அரைமணிநேரம் கழித்து குளித்தால் வாரம் 2 முறை தலைபாரம் தீரும்.
37. பித்த வாந்தியை நிறுத்த:
வேப்பம் பூவை வறுத்து பொடி செய்து பருப்பு ரசத்துடள் கலந்து சாப்பிட வாந்தி நிற்கும்.
38. சளி தொல்லை தீர:
மாதுளம் பழச்சாறு, எலுமிச்சை சாறு கலந்து குடித்து வந்தால் சளி தொல்லை குணமாகும்.
39. மூக்கில் நீர்வடிதல் குணமாக:
ஒரு டம்ளர் அகத்தி இலை சாறு, ஒரு டம்ளர் பசும்பால் சேர்த்து சிவக்க காய்ச்சி இறக்கி வடிக்கட்டி ஆறவைத்து வாரம் இருமுறை தலைக்கு தேய்த்து வர குணமாகும்.
40. தொடர் இருமல் குணமாக:
கண்டங்கத்தி¡¢ வேரை அரைத்து வெள்ளாட்டுப்பாலில் காய்ச்சி கொடுக்க குணமாகும்.
(S. ஆறுமுகம், B.Sc.,B.S,M.S.,)
Source: http://www.moderntamilworld.com/health/siddha_tips_2.asp
No comments:
Post a Comment