ஈரோடு: ""மேம்பாலம் பணியை நிறுத்த முடியாது,'' என, எம்.எல்.ஏ., ராஜா கூறினார். ஈரோடு மாநகராட்சி கூட்டம் நேற்று நடந்தது.
சிறப்பு அழைப்பாளராக ஈரோடு எம்.எல்.ஏ., ராஜா பங்கேற்றார்.""தீர்மானம் முதலில் நிறைவேற்றப்படும்,'' என, மேயர் அறிவித்தார். "கேள்வி நேரம் இல்லையா?'' என, கவுன்சிலர்கள் கேட்டனர்.""பார்வையாளர்கள் பலர் வந்துள்ளனர்; ராஜா வந்துள்ளார். அவர்களுக்கெல்லாம் வேலை இருக்கும். முதலில் தீர்மானத்தை நிறைவேற்றி விட்டு, பிறகு கேள்வி நேரத்தை வைத் -துக்கொள்ளலாம்,'' என்றார் மேயர்.
கவுன்சிலர் ராதாமணி பாரதி, ""பாதாள சாக்கடைக்கு பயன்படுத்தப்படும் குழாய் சிறியதாக உள்ளது. அதில், பாத்ரூம் கழிவு செல்ல வழியில்லை. முன்னாள் அமைச்சர் பெரியசாமி காலத்தில் கட்டப்பட்ட பாதாள மழை நீர் தொட்டி வீணாகி விட்டது. அதுபோல், பாதாள சாக்கடை திட்டமும் வீணாகும். தீர்மானத்தை கண்டித்து வெளிநடப்பு செய்கிறேன்,'' எனக் கூறி, வாசற்படி வரை சென்று விட்டு, மீண்டும் வந்தார்.
மேயர்: பாதாள சாக்கடை திட்டம் பல பொறியாளர்களை கொண்டு ஆய்வு செய்த பிறகே கட்டப்படுகிறது. 40 ஆண்டுக்கு கணக்கில் கொண்டுதான் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
முருகன்: மேம்பாலத்தால் போக்குவரத்து நெரிசல் குறையாது. மேம்பாலம் தேவையா? என பரிசீலனை செய்ய வேண்டும்.
ராஜா: ஈரோடு நகரில் 10 ஆண்டுக்கு பிறகு போக்குவரத்து நெரிசல் எவ்வாறு இருக்கும் என்பதை கணக்கிட்டு, மேம்பாலம் கட்டப்படுகிறது. மேம்பாலம் கட்டுவதால் பெரிய மாரியம்மன் கோவிலுக்கு சிறிதும் பாதிப்பு வராது. மேம் -பாலம் குறித்து கவுன்சிலர்களுக்கு சரியான விளக்கம் இல்லை போல் தெரி -கிறது. மேயர், அதிகாரிகள், கவுன்சிலர்கள் கொண்ட ஒரு கூட்டத்தை நடத்த -லாம். கூட்டத்தில் கேட்கப்படும் கருத்துகளை மக்களிடம் தெரிவியுங்கள். இக்கோரிக்கை பற்றி மேலும் சில கவுன்சிலர்கள் பேச வந்தனர்.
"இதுபற்றியே பேச வேண்டாம். தனியாக கூட்டம் நடத்தலாம்,'' என ராஜா, அவர்களை கட்டுப்படுத்தினார். பெரியமாரியம்மன் கோவில் இயக்கத்தின -ருக்கு பதிலளித்து ராஜா பேசியதாவது:
ஈரோடு 80 அடி அகல சாலை 60 நாட்கள் கழித்து கட்டாயம் திறக்கப்படும். அதற்கான நடவடிக்கை எடுத்து வருகிறோம். மேம்பாலம் மக்கள் பயன்பாட் -டுக்காக கட்டப்படுகிறது. இன்னும் ஓராண்டில் மேம்பாலத்தின் பயனை நீங் -களே தெரிந்து கொள்வீர்கள். மேம்பாலம் பணியை நிறுத்த முடியாது. இவ் -வாறு அவர் கூறினார்.
இயக்கத்தை சேர்ந்த ஒருவர், ""மேயர் சிரித்துக்கொண்டே பதில் சொல்கிறார்,'' என்றார்.ஆத்திரமடைந்த ராஜா, ""சிரிக்காமல்; அழுது கொண்டே பதில் சொல்ல முடியுமா?'' என்றார் கோபமாக. நிலமீட்பு இயக்கத்தை சேர்ந்த பெண் ஒருவரை, பெண் கவுன்சிலர் ஒருவர் திட்டினார். மற்ற பெண்கள், அந்த கவுன்சிலரை தேடினர். அதற்குள், மாநகராட்சியின் பின்வாசல் வழியாக கவுன்சிலர் தப்பிவிட்டார்.
Source: http://www.dinamalar.com/district_detail.asp?id=51360
No comments:
Post a Comment