Friday, July 30, 2010

வட்டி கட்டினால் தான் கல்விக் கடன் : மாணவர்கள் பரிதவிப்பு

சிவகங்கை : கல்விக் கடனுக்கான வட்டி கட்டினால் மட்டுமே, அடுத்தகட்ட படிப்பிற்கு கடன் தரப்படும் என, வங்கி அதிகாரிகள் கண்டிப்பாக கூறுவதால், உயர்கல்விக்கு கடன் பெறமுடியாமல் மாணவர்கள் பரிதவிக்கின்றனர்.

நாடுமுழுவதும் உயர்கல்வி பெறுவோரின் எண்ணிக்கையை உயர்த்தும் நோக்கில், தொழிற்கல்வி மற்றும் பிற கல்விக்கு வங்கிகளில் கடன் வழங்க -ப்படுகிறது. இந்தியாவிற்குள் படிக்க ஏழு லட்சம், வெளிநாடுகளில் படிக்க 20 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படுகிறது.இதன்படி, கல்வி ஆண்டு துவக்கத்தில் வங்கிக் கடன் பெற்று உயர்கல்வியை தொடரும் மாணவர்கள், அடுத்த ஆண்டு படிப்பிற்கான கடனை பெற வங்கிகளை நாடுகின்றனர். ஆனால், வங்கி அதிகாரிகள் முதல் ஆண்டு பெற்ற கடனுக்கான வட்டியை கட்டினால் மட்டுமே, அடுத்த ஆண்டுக்கு கடன் தரமுடியும், என கண்டிப்பாக கூறுகின்றனர். இதனால், கல்விக் கடன் பெறமுடியாமல் மாணவர்கள் தவிக்கின்றனர்.

மத்திய அமைச்சர் சிதம்பரம், மாணவர்களின் பணச்சுமையை கருத்தில் கொண்டு, 4.5 லட்ச ரூபாய் வரை ஆண்டு வருமானம் பெறும் பெற்றோர்க -ளின் குழந்தைகளுக்கான கல்வி கடனுக்கான வட்டியை அரசே ஏற்கும், என தெரிவித்தார். ஆனால், மத்திய அரசு தீர்க்கமான அறிவிப்பு வெளியிடாத -தால், மாணவர்கள் வங்கிகளில் கடன் பெற முடியாமல் அலைக்கழிக்கப்படு -கின்றனர்.

இது குறித்து முன்னோடி வங்கி அதிகாரி ஒருவர் கூறுகையில்," கல்விக் கடன் வட்டி தள்ளுபடி குறித்து நிதி அமைச்சரோ, ரிசர்வ் வங்கியோ அறிவிப்பு வெளியிடவில்லை. அமைச்சர் சிதம்பரம் தான் பேசி வருகிறார். ரிசர்வ் வங்கியில் இருந்து வட்டி தள்ளுபடி குறித்து அறிவிப்பு வந்தால், வசூலித்த வட்டியை கடன் பாக்கியில் கழித்துக் கொள்வோம், என்றார்.

Source: http://www.tamizharuvi.com/contentdesc.php?subtopic_id=1&cont_id=734

3 comments: