ஈரோடு, ஜூலை. 29-
சட்டமன்ற பேரவை உறுதிமொழி குழுவினர் பீட்டர் அல்போன்ஸ் எம்.எல்.ஏ. தலைமையில் இன்று ஈரோடு வந்தனர். அந்த குழுவினர் சித்தோடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்தில் செயல்படும் கலப்பட தீவன உற்பத்தி ஆலையை பார்வையிட்டனர். அப்போது அவர்களிடம் மின்தட்டுப்பாடு காரணமாக தீவன உற்பத்தி மிகவும் குறைந்து விட்டது என்று கூறினர்.
அதன் பிறகு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு வந்த குழுவினர் அங்கு செயல்படும் ரத்த சுத்திகரிப்பு எந்திரம் மற்றும் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் போன்றவற்றை பார்த்து ஆய்வு செய்தனர். இதில் சுகாதாரப் பணிகளின் இணை இயக்குனர் நாகராஜன், ஈரோடு அரசு ஆஸ்பத்திரி சூப்பிரண்டு கிருஷ்ணகுமார் மற்றும் டாக்டர்கள் கலந்து கொண்டனர்.
ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் அருகே கட்டப்படும் மேம்பாலம் கட்டும் பணியை பார்வையிட்டனர். அப்போது அங்கு வந்த பெரிய மாரியம்மன் கோவில் நிலமீட்பு குழுவினர் இங்கு கட்டப்படும் மேம்பாலத்தினால் போக்குவரத்து நெரிசல் குறையாது. மேலும் இங்கு மேம்பாலம் கட்டுவதினால் ஈரோட்டில் புகழ்மிக்க பெரிய மாரியம்மன் கோவில் பாதிப்பு ஏற்படும் என்று கூறினர்.
இதன் பிறகு பெரிய மாரியம்மன் கோவிலுக்கு வந்த உறுதிமொழி குழுவினர் கோவிலில் சாமி கும்பிட்டனர். இதில் இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் அசோக், உதவி ஆணையர் அழகர்சாமி, அலுவலர் பழனி குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதையடுத்து ஈரோடு பெரிய அக்ரகாரம் பகுதியில் தோல் மற்றும் சாயக்கழிவுநீர் காளிங்கராயன் வாய்க்காலில் கலப்பதை தவிர்க்க கட்டப்படும் தடுப்புச் சுவரை பார்வையிட்டனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் சுடலைக் கண்ணன், மாவட்ட வருவாய் அதிகாரி குமாரவேல் பாண்டியன், எம்.எல்.ஏ.க்கள் ஆர்.எம். பழனிச்சாமி, விடியல்சேகர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Source: http://www.maalaimalar.com/2010/07/29172129/today-team-saw-the-bridge-work.html
Source: http://www.maalaimalar.com/2010/07/29172129/today-team-saw-the-bridge-work.html
No comments:
Post a Comment