சொன்னது நம்மாளு!
இன்றைக்கு, டாக்டர்கள் உலகம் முழுவதும் வெள்ளையுடை அணிவது ஒரு கட்டாயமாகவே ஆகிவிட்டது. கலர் சட்டையில் ஒரு டாக்டரோ, நர்ஸோ வந்தால் நாம் ஒப்புக் கொள்வதில்லை. என்ன ஆச்சரியம் தெரியுமா? பத்ம புராணத்தில் தன்வந்திரி என்ற ஆதர்ச மருத்துவர் பாற்கடலில் இருந்து வெண்ணிற ஆடையுடன் உதித்ததாகக் கூறப்பட்டிருக்கிறது.
அறுவை சிகிச்சை (சர்ஜரி) கண்டுபிடிக்கப்பட்டது என்று நாம் நம்புவது சில நூற்றாண்டுகளுக்கு முன்னால். ஆனால், தன்வந்திரி நான்கு கரங்களுடன் அமைந்தவர் - ஒன்று அபய ஹஸ்தம் (அருள்பாலிக்கும் கரம்). மற்ற மூன்றில் - தாமரை, அமுத கலசம் (மருந்து), அறுவைக் கருவி. 4000 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய ஆயுர்வேதம், அதர்வண வேதத்தின் ஒரு பகுதியாக இருந்து, பின் ஒரு உப வேதமாகப் பிரிக்கப்பட்டது.
வேத காலத்துக்கு முன் தோன்றிய இந்த தன்வந்திரிக்குப் பிறகு, வேத காலத்துக்குப் பின்னர் - புராண காலத்துக்கு முன் இன்னொரு தன்வந்திரி என்ற மருத்துவர் இருந்தார் என்று பல புராணங்கள் சொல்கின்றன. பல தன்வந்திரிகள் பல காலங்களில் தோன்றினர். விக்ரமாதித்ய மன்னனின் ஆஸ்தான மருத்துவரான மூன்றாம் தன்வந்திரி ‘தன்வந்திரி நிகண்டு’ (விமீபீவீநீணீறீ மீஸீநீஹ்நீறீஷீஜீமீபீவீணீ) எழுதியவர்.
பண்டைய ஆயுர்வேதம் எட்டுப் பிரிவுகள் கொண்டது:
1) காய சிகிச்சை (Accident / Injury)
2) கௌமார ப்ரிதியா - பாலர் சிகிச்சை (Child Specialist)
3) சாலாகய வித்யா - கண்நோய் சிகிச்சை (Opthamology)
4) சல்யதந்த்ரா - அறுவை சிகிச்சை (Surgery)
5) விஷதந்த்ரா - விஷக்கடி சிகிச்சை (Poison - Cure)
6) ரஸாயன தந்த்ரா - நீரிழிவு, முதியோர் சிகிச்சை (Diabetes & Old age Medicine)
7) வஜுகரண தந்த்ரா --- காயகல்ப சிகிச்சை (Longevity Medicine)
1) காய சிகிச்சை (Accident / Injury)
2) கௌமார ப்ரிதியா - பாலர் சிகிச்சை (Child Specialist)
3) சாலாகய வித்யா - கண்நோய் சிகிச்சை (Opthamology)
4) சல்யதந்த்ரா - அறுவை சிகிச்சை (Surgery)
5) விஷதந்த்ரா - விஷக்கடி சிகிச்சை (Poison - Cure)
6) ரஸாயன தந்த்ரா - நீரிழிவு, முதியோர் சிகிச்சை (Diabetes & Old age Medicine)
7) வஜுகரண தந்த்ரா --- காயகல்ப சிகிச்சை (Longevity Medicine)
பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னாலேயே இத்தனை வகை மருத்துவத்தையும் எழுதிவைத்துப் போனார்கள் நம் தன்வந்திரிகள். இவர்கள் மட்டுமில்லாமல், இவர்களுடைய சிஷ்யர்களும் ஒவ்வொரு ஆயுர்வேதப் பிரிவுகளைப் பற்றி விரிவாக எழுதியுள்ளார்கள். Veterinary எனப்படும் கால்நடை மருத்துவமும் இவர்களுடைய நூல்களில் காணப்படுகிறது.
நம் பண்டைய மருத்துவர்களில் (ஆயிரத்திலிருந்து நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன் வரை) மிகச் சிறந்தவர்களாக மாதவகரர் (வியாதியின் காரணங்களைக் கண்டறிந்தவர்), வாக்படர் (வியாதியின் விளைவுகள், பரிகாரம் கண்டவர்), சுச்ருதர் (அறுவை சிகிச்சை - உடல் உறுப்புகளின் செயல்பாடுகள்), சரகர் (சிறந்த - தகுந்த மருத்துவம்) ஆகியோர் கருதப்படுகின்றனர்.
மொத்த வியாதிகள் 4448 எனவும், அவற்றுக்கு ‘முப்பு’ என்ற மூலப்பொருளே வைத்தியம் என்றும் கண்டுபிடித்தவர்கள் தமிழ்நாட்டில் தோன்றிய பதினெ -ட்டு சித்தர்கள். இவர்களுடைய மருத்துவ முறைக்கு சித்த மருத்துவம் என்று பெயர். நந்தி, காகபுஜண்டர், அகஸ்தியர், போகர், திருமூலர், புலஸ்தி -யர், கொங்கணவர் இவர்களடங்கிய பதினெட்டு சித்தர்கள். மருத்துவம், ஜோதிடம், ஆன்மிகம் இவை மூன்றும் ஒருங்கிணைந்த மகா புருஷர்கள். இதில் பல சித்தர்கள் ஜீவ சமாதியடைந்ததாகச் சரித்திரம் கூறுகிறது.
நமது கடவுள் வழிபாட்டு முறையிலும், மருத்துவம் கலந்திருப்பதைக் காணலாம். நோய்களைப் போக்கும் கடவுளான வைத்தீஸ்வரர் (வைத்தீஸ்வரன்-கோவில்), சுரம் தீர்க்கும் விநாயகர் (திருநாகேஸ்வரம்), கர்ப்பரட்சாம்பிகை (திருக்கருகாவூர்), மனநோய் தீர்க்கும் திருவிடை -மருதூர், குணசீலம் - இப்படி வியாதிகளுக்குத் தீர்வாக மருத்துவத்தையும் ஆன்மிகத்தையும் பிணைத்து வைத்தனர்.
அப்படிப்பட்ட மருத்துவ தெய்வங்களுக்கு நைவேத்தியமாக மிளகு, சுக்கு இவற்றைச் சொல்லி வைத்தார்கள். மிளகில் இருக்கும் கிருமிநாசினி (antibiotic) குணமும், சுக்கில் இருக்கும் மருத்துவ குணங்களுமே இதற்குக் காரணம். சுக்குடன் சேர்த்து வெல்லத்தையும், நெய்யையும் ஒன்றாக நைவேத்தியம் செய்வார்கள். சுக்கு அதிக வெப்பத்தை உண்டு செய்யும் என்பதால், அதைத் தணிக்க நெய்யும், அதன் காரத்தைக் குறைக்க வெல்லமும் சேர்த்தார்கள். எவ்வளவு சாதுர்யமாக விஞ்ஞானத்தை, ஆன்மிகத் தேனில் குழைத்துக் கொடுத்திருக்கிறார்கள் நம் பெரியவர்கள்!
Source: http://www.trisakthi.com/ActionPages/Content.aspx?bid=536&rid=24
No comments:
Post a Comment