நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலை களில் தனியார், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், சுங்கச்சாவடி மையம் அமைத்துள்ளது. அதில், பயணிக்கும் லாரி, பஸ் உள்ளிட்ட வாகனங் களில் சுங்கவரி வசூலிக்கப்படுகிறது. அவ்வாறு வசூலிக்கப்படும் கட்டண ம் சீரானதாக இல்லை. சுங்கச்சாவடி மையத்துக்கு மையம் கட்டணம் மாறுப டுகிறது. "லாரி உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்' என, ஆல் இண்டியா மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் குற்றம்சாட்டி, ஆக ஸ்ட் 6ம் தேதி முதல் நாடு முழுவதும் லாரி ஸ்டிரைக் செய்யப்போவதாக அறிவித்தது. தென் மாநில லாரி உரிமையாளர்கள் சங்கம், தென் மாநில அளவில் ஆகஸ்ட் 2ம் தேதி (நாளை) முதல் லாரி ஸ்டிரைக் நடக்கும் என அறிவித்தது.
இது தொடர்பாக டில்லியில் மத்திய தரைவழிப் போக்குவரத்துத் துறை செய லர் முன்னிலையில், ஆல் இண்டியா மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிர ஸ் நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் முடிவு எதுவும் எட்டப் படாமல் தோல்வியில் முடிந்தது. திட்டமிட்டபடி, அகில இந்திய அளவிலும் காலவரையற்ற லாரி வேலைநிறுத்தப் போராட்டம் நடத்துவது உறுதியான து. இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் தென் மாநிலம் முழுவதும் 22 லட்சம் லாரிகள் ஈடுபடும். அதன்மூலம் நாளொன்றுக்கு 1,250 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என, ஆல் இண்டியா மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் நிர்வாகிகள் அறிவித்தனர்.நேற்று இரவு டில்லியில் மத்திய தரைவழிப் போ க்குவரத்துத் துறை செயலர் குஜரால், துணை செயலர் முன்னிலையில், ஆல் இண்டியா மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் தலைவர் சண்முக ப்பா தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது."வரும் 10ம் தேதிக்குள் சுங்கவரி தொடர்பான பிரச்னைக்கு தீர்வு காணப்படும்' என, எழுத்துப்பூர்வாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து, நாளை தென் மாநில அளவிலும், 6ம் தேதி அகில இந்திய அள விலும் நடக்க இருந்த லாரி வேலைநிறுத்தப் போராட்டம், "வாபஸ்' பெறப் பட்டுள்ளது. தமிழக லாரி உரிமையாளர் சம்மேளனத் தலைவர் நல்லதம்பி கூறுகையில், "டில்லியில் நேற்று இரவு நடந்த பேச்சுவார்த்தையில், வரும் 10ம் தேதிக்குள் சுங்கவரி தொடர்பான பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என எழுத்துப்பூர்வமாக உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து நாளை தென் மாநி ல அளவிலும், 6ம் தேதி அகில இந்திய அளவிலும் நடக்கயிருந்த லாரி வேலைநிறுத்தப் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது,'' என்றார்.
No comments:
Post a Comment