ஈரோடு, ஜூலை 26: ஈரோட்டில் 80 அடி சாலையை விரைவில் அமைக்க வேண்டும் என்று கிராமக் கோயில் பூசாரிகள் பேரவை வலியுறுத்தியுள் -ளது.
விஷ்வ ஹிந்து பரிஷத் இளைஞரணி அமைப்பாளர் ஆர்.ஆர்.கோபால்ஜி, மாவட்டச் செயலர் கே.எஸ்.இளங்கோவன், பூசாரிகள் பேரவை மாவட்ட அமைப்பாளர் ஏ.வெள்ளியங்கிரி, மாநில அமைப்பாளர் ஜெகதீசன், பாரதிய ஜனதா கட்சி மாநில பிரசார அணித் தலைவர் ஆ.சரவணன், பெரிய மாரியம்மன் கோயில் நிலமீட்பு இயக்க அமைப்பாளர் ஈஆர்எம்.சந்திரசேக -ரன், ஆர்எஸ்எஸ் அமைப்பாளர் ஜெகதீஷ் மற்றும் பூசாரிகள் பேரவையினர், ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை அளித்த மனு விவரம்: ஈரோடு பெரிய மாரியம்மன் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை மீட்கவும், 80 அடி சாலையை விரைவில் அமைக்கவும், பன்னீர்செல்வம் பூங்கா அருகில் மேம்பாலம் கட்டும் திட்டத்தைக் கைவிடவும் மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும்.
தமிழகத்தில் இதுவரை 3 ஆயிரம் பூசாரிகளுக்கு மட்டுமே ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. ஆனால் ஏராளமான பூசாரிகள் வறுமையில் வாடி வருகின்றனர். எனவே அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்க அரசு நடவடி -க்கை எடுக்க வேண்டும். ஓய்வூதியத் தொகையை ரூ.750-லிருந்து ரூ,1,000- -ஆக உயர்த்த வேண்டும். அரசு கட்டுப்பாட்டிற்கு கீழ் உள்ள கோவில்களில் பணிபுரியும் பூசாரிகளுக்கும் நலவாரியத்தின் சலுகைகள் கிடைக்க நடவடி -க்கை எடுக்க வேண்டும். மேலும் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கி, விண்ணப்பத்தவர்களுக்கு நலவாரிய சலுகைகள் தர வேண்டும். ஒருகால பூஜை திட்டத்திற்கான நிதியுதவியை ரூ.1 லட்சமாக உயர்த்தி, அத்தொகையை டெபாசிட் செய்து, அதன் மூலம் வரும் வட்டித் தொகையை நித்ய பூஜைக்கு வழங்க வேண்டும். அனைத்து கிராமக் கோவில்களுக்கும் இலவச மின்சாரம் வழங்க வேண்டும். இலவச வீட்டுமனைப்பட்டா, தொகுப்பு வீடுகள் திட்டத்தில் பூசாரிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தியிருந்தனர். அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
Source: http://dinamani.com/edition/story.aspx?SectionName=Edition-Coimbatore&artid=278453

No comments:
Post a Comment