கச்சா விலையேற்றத்தால் மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகியவற்றிற்கு ஏற்பட்டு -வரும் இழப்பை நிரந்தரமாகத் தடுக்க அரசின் விலை கட்டுப்பாட்டில் (Administered Pricing) இருந்து பெட்ரோல் டீசல் உள்ளிட்ட எண்ணெய் பொருட்களை நீக்க விடலாமா என்று முடிவெடுக்க மத்திய அரசின் அதிகாரமிக்க அமைச்சரவைக் குழு அடுத்த மாதம் 7ஆம் தேதி கூடும் என்று செய்தி வெளியாகியுள்ளது.
பெட்ரோல் டீசல் விலைகளை தற்போது மத்திய அரசே நிருணயித்து வருகிறது. இந்த விலைக் கட்டுப்பாட்டை நீக்கிவிட்டால், எந்த அளவிற்கு கச்சா எண்ணெய் விலை சர்வதேசச் சந்தையில் உயருகிறதோ அதற்கு இணையாக பெட்ரோல் டீசல் உள்ளிட்ட எண்ணெய் பொருட்களின் விலையை மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்கள் உயர்த்திக் கொள்ளலாம். இம்முடிவை எடுப்பதற்காகவே அடுத்த மாதம் அதிகாரமிக்க அமைச்சரவைக் குழு (Empowered Group of Minister - EGoP) கூடுகிறது.
“தற்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை பீப்பாய் ஒன்றிற்கு 70 டாலர்க -ளாக உள்ளது. ஆனால் அதற்குத் தக்கவாறு தற்போது நிருணயிக்கப்பட்டுள்ள பெட்ரோல் டீசல் விலைகள் இல்லை. இதனால் மத்திய அரசின் மூன்று பொதுத் துறை எண்ணெய் நிறுவ -னங்களுக்கு ஒவ்வொரு நாளும் ரூ.2,555 கோடி இழப்பு ஏற்படுகிறது. இது இந்த நிதியாண்டின் இறுதியில் ரூ.90,000 கோடியாக உயரும். எனவே பெட்ரோல் டீசல் உள்ளிட்ட எண்ணெய் பொருட்களின் விலை நிருணயித்தின் மீதான அரசின் கட்டுப்பாட்டை நீக்க வேண்டும்” என்று எண்ணெய் நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. இந்தக் கோரிக் -கை புதிதல்ல, மன்மோ -கன் சிங் பதவியேற்றக் காலத்தில் இருந்தே தொடர்ந்து எழுப்பப்பட்டு வருவதுதான். மத்திய நிதியமைச்சகம் அமைத்த நிதிச் சீர்த்திருத்தக் குழுக்களும் இந்த ஆலோசனையை தொடர் -ந்து கூறி வருகின்றன.
பெட்ரோல் டீசல் ஆகியவற்றின் விலைகளை உயர்த்தினால் அதனால் அத்வாசியப் பொருட் -களின் விலைகள் உயரும். இரு சக்கர வாகனங்களைப் பயன்படுத்தும் நடுத்தர மக்கள் பாதிக்கப்படுவர் என்பதால், சர்வதேச்ச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரும் அளிவிற்கு விலைகளை உயர்த்தாமல், அதனால் ஏற்படும் கூடுதல் செலவில் பாதியளவிற் -கு வருவாய் உயரத்தக்க வகையில் லிட்டருக்கு 2 முதல் 3 ரூபாய் விலை உயர்த்தி மத்திய அரசு சில்லரை விலை நிருணயம் செய்து வருகிறது.
இந்த நிலைக்கு விடைகொடுக்கலாமா என்பதை முடிவு செய்யவே ஜூன் 7ஆம் தேதி அமைச்சரவைக் கூட்டம் கூடுகிறது. அப்போது விலைக் கட்டுப்பாட்டை நீக்குவது என்று முடிவெடுத்ததால் பெட்ரோல், டீசல் விலைகள் லிட்டருக்கு ரூ.6 வரை உயரும் (பார்க்க செய்தி).
முதலில் பெட்ரோல் விலை மீதான விலைக்கட்டுபாட்டை நீக்குவது, பிறகு டீசல், அதன் பிறகு சமையல் எரிவாயு, கடைசியாக ஏழை எளிய மக்கள் பயன்படுத்தும் மண்ணெண்ணை என்று படிப்படியாக விலைக் கட்டுப்பாட்டை விலக்கிக் கொள்வது என்று திட்டமிடப்படுள்ள -தாகத் தகவல்கள் கூறுகின்றன.
ஸ்பெக்ட்ரம் இழப்பை கண்டுகொள்ளாதது ஏன்?
மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பை தடுத்து நிறுத்த இந்த அளவிற்கு சுறுசுறுப்பாக செயல்படும் மத்திய அரசு, தொலைத் தொடர்பு அமைச்சகத்தின் (அமைச்சரின்) முறைகேடான அலைக்கற்றை ஒதுக்கீட்டால் (Spectrum allocation) மத்திய அரசிற்கு ஏற்பட்ட ரூ.60,000 கோடி இழப்பை கண்டுகொள்ளாமல் இருப்பதேன் என்பதே கேள்வி.
கடந்த செவ்வாய்க் கிழமை, 3 ஜி என்றழைக்கப்படும் மூன்றாவது தலைமுறை தொலைத் தொடர்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி செல்பேசி சேவைகள் அளிக்கும் உரிமங்களை ஏலம் விட்டதில் மட்டும் (எதிர்கால பயன்பாட்டு வருவாயை கணக்கில் கொள்ளாமல்) ரூ.67,710 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. ஆனால் கடந்த 2008ஆம் ஆண்டில் 2 ஜி தொழில் நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட செல்பேசி சேவைகளை ஒவ்வொரு நிறுவனத்திடமி -ருந்தும் ரூ.1,650 கோடியை மட்டும் பெற்றுக்கொண்டு அவைகளுக்கு தொலைத் தொடர்புத் துறை உரிமம் வழங்கியது. இதனால் அரசிற்கு ரூ.60,000 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது என்று கடந்த 2 ஆண்டுகளாக அரசியல் கட்சிகளும் பொது நல அமைப்புகளும் தொடர்ந்து குரலெழிப்பியும் மன்மோகன் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
Ps: You can not expect anything good from Congress as there is no one from their side to speak for the larger interest of common man. Our Prime Minister Dr. Manmohan Singh is one the best Economist and the Genius that Indian history has scarcely seen so far. But, what's the use of him for Indians? He has to act on behalf of so many "Self-interested" black-sheep in Congress. Nothing we can do, other than to sigh sadly....!!!
Source: http://tamil.webdunia.com/newsworld/news/currentaffairs/1005/21/1100521094_1.htm
No comments:
Post a Comment