தமிழகத்தில் தி.மு.க., ஆட்சி அகற்றப்படுவதற்கா -ன முதற்கட்ட எழுச்சி ஏற்பட்டு விட்டது என மாநில பொதுச்செயலாளர் தமிழிசை சவுந்தர்- ராஜன், நாகர்கோவிலில் குமரிமாவட்ட பா.ஜ., சார்பில் நடந்த போராட்டத்தில் கூறினார். குமரி மாவட்ட பா.ஜ., சார்பில் அணைவருக்கும் கல்வி உதவித்தொகை வழங்ககோரி நாகர்கோவில் ஸ்டேடியம் முன் போராட்டம் நடந்தது.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாநில துணை தலைவர் ராஜா கூறியதாவது;-
ஜூலை போராட்டம் நடைபெறுவது எங்களுக்கும் கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தான். சிறுபான்மை மாணவர் -களுக்கு கொடுக்கும் கல்வி உதவித்தொகை எங்களுக்கும் வேண்டும் என கேட்டு போராட வந்துள்ளோம்.
சோனியாவின் ஆட்சி ஏற்பட்டவுடன் தான் இது போன்று பிரித்தாளும் சூழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அமைச்சர் சுரேஷ்ராஜன் இந்து குழந்தைகளுக்கும் கல்விஉதவித்தொகை கொடுத்து வுருகிறோம் என கூறுகிறார். இதனை அவர் நிருபிக்க வேண்டும். தி.மு.க., அரசு இந்து சமுதாய மக்களுக்கு அநீதி இழைத்து வருகிறார். தற்போதைய சூழ்நிலையில் மாணவர்கள் மத்தியில் பாகுபாட்டை காட்டி வருகிறார். காங், தி.மு.க., கூட்டணி ஆட்சியை அப்புறப்படுத்த வேண்டும் என்பதை நிருபிக்கும் வகையில் மாணவர்கள் கூட்டம் அலைமோதியுள்ளது. இந்த போராட்டம் குமரியில் எழுச்சியுடன் துவங்கியுள்ளது. ஜூலை போராட்டம் ஜூலை மாதத்துடன் முடிந்து விடுவதில்லை. ஆகஸ்ட், செப்டம்பர். டிசம்பர் தொடர்ந்து மேமாதம் வரை நடைபெறும் அப்போது தி.மு.க., ஆட்சியும் அகலும், தாமரையும் மலரும். இவ்வாறு ராஜா கூறினார்.
தமிழிசைசவுந்தர்ராஜன்: நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமிழிசை சவுந்தர் -ராஜன் போயதாவது;-
தமிழகத்தில் எழுச்சியோடு நடைபெறும் போராட்டத்தின் ஒரு பகுதியாக இன்று நாகர்கோவிலில் போராட்டம் நடக்கிறது. இயற்கையே நம்மை வரவேற்கம் விதமாக சூரியனை மறைத்து நமக்கு மாலை நேர தென்றலை தந்து கொண்டு இருக்கிறது. பிரதமர் மன்மோகனுக்கு ஆட்சி செய்ய தெரியாவிட்டால் வாஜ்பாயிடம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள். இங்கு எழுச்சியுடன் காணப்படும் கூட்டம் தி.மு.க., அரசை வீழ்த்தும் கூட்டமாக அமையும். இவ்வாறு அவர் கூறினார்.
Source: http://www.dinamalar.com/district_main.asp?id=295#47215
No comments:
Post a Comment