இந்தியாவில் 2020-ல் கடும் தண்ணீர் பற்றாக்குறை: அமெரிக்கா எச்சரிக்கை
இந்தியாவில் இன்னும் 10 ஆண்டுகளில் கடும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படு -ம் என அமெரிக்க அமைச்சர் ராபர்ட் பிளேக் எச்சரித்துள்ளார்.தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்க வெளியுறவுத் துறை துணை அமைச்சரான ராபர்ட் பிளேக் வாஷிங்டனில் நடைபெற்ற நிகழ்ச்சியி -ல் மேலும் பேசியதாவது:
மக்கள் தொகை பெருக்கம் மற்றும் நகரமயமாக்கல் ஆகியவற்றால் அனைவ -ருக்கும் பாதுகாப்பான குடிநீர் என்பது இந்தியாவில் சவாலாக உருவெடுத்து -ள்ளது. மாநிலங்களுக்கு இடையே மோதல் மற்றும் எல்லைப் பிரச்னைகளு -க்கு தண்ணீர் ஒரு காரணமாக ஆகிவருகிறது. இந்தியாவில் 12 சதவீதம் பேருக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைக்கவில்லை. நாட்டில் மொத்தம் உள்ள 626 மாவட்டங்களில் பாதிக்கும் மேற்பட்டவை 2009-ல் வறட்சியால் பாதிக் -கப்பட்டன.
இந்தியாவின் தண்ணீர்த் தேவையில் 75 சதவீதம் 3 மாதங்களில் பெய்யும் மழை மூலம் கிடைக்கிறது. ஆனால், அதை தேக்கிவைக்க போதுமான வசதி -கள் இல்லை.
நகரப் பகுதிகளில், எல்லா வருவாய் தரப்பினரும் தண்ணீரை பணம் கொடு -த்து வாங்கும் நிலையே உள்ளது. நகரங்களில் 40 சதவீத குடும்பங்களுக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதில்லை. 36 சதவீதம் குடும்பங்களுக்கு மட்டு -மே கழிப்பிட வசதி உள்ளது.
அசுத்தமான குடிநீர் காரணமாக பலவிதமான நோய்களுக்கு மக்கள் ஆளாகி -றார்கள். இதனால் குழந்தை இறப்பு விகிதமும் அதிகரிக்கிறது.
நாட்டின் பல பகுதிகளில் விவசாயத்துக்கு போதுமான நீர் கிடைப்பதில்லை. 2025-ல் உலகில் மூன்றில் இரண்டு பங்கு நாடுகளில் கடும் தண்ணீர் பற்றாக் -குறை ஏற்படும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
மக்கள் தொகை பெருக்கம், பருவநிலை மாற்றத்தால் பனிமலைகள் உருகுத -ல் உள்ளிட்டவையால் தோன்றும் இதுபோன்ற சவால்களை அரசாங்கத் -தால் மட்டுமே எதிர்கொள்ள முடியாது. மக்களும் ஒத்துழைக்க வேண்டும் என்றார் பிளேக்.
Source: http://tamilkurinji.com/TN_news_index.php?id=12575
No comments:
Post a Comment