Friday, July 30, 2010

Siddha Medicines 3

சித்த மருத்துவ குறிப்புகள் 3

41. மூக்கு சம்பந்தமான நோய் குணமாக :

நாயுறுவி செடி விதைகளை பொடி செய்து உட்கொண்டால் குணமாகும்.

42. மூக்கில் இரத்தம் வடிதல் குணமாக :

மாதுளம் பழச்சாறு, அருகம்புல் சாறு சமஅளவு கலந்து 30 மி.லி. 3 வேளை சாப்பிட குணமாகும்.


43. சளி தொல்லை நீங்க :

தூதுவளை செடியில் ரசம் வைத்து, சாப்பிட குணமாகும்.


44. தலைவலி குணமாக :

கீழாநெல்லிச்சாறு, உத்தாமணிச்சாறு, குப்பைமேனிச் சாறு சமன் கலந்து நல்லெண்ணெயில் எ¡¢த்து நசியமிட ஓயாத தலைவலி தீரும்.


45. தலைச்சுற்றல் குணமாக :

கீழாநெல்லி தைலத்தை பூசி குளித்து வந்தால் தலைசுற்றல் நிற்கும்.


46. தலைவலி குணமாக :

திருநீற்று பச்சிலை சாறு, தும்பை சாறு இரண்டும் கலந்து பச்சை கற்பூரம் சேர்த்து மூக்கில் உறிஞ்ச தலைவலி பாரம் குணமாகும். குப்பைமேனி சாறும் தலைவலிக்கு நல்ல குணம் தரும்.


47. ஒற்றை தலைவலி குணமாக :

தேத்தாங் கொட்டையுடன் பச்சை கற்பூரத்தையும் சேர்த்து தாய்பால் விட்டு அரைத்து நெற்றியில் பற்று போட ஒற்றை தலைவலி குணமாகும்.


48. இருமல் நிற்க :

முற்றிய வெண்டைக்காயை சூப் செய்து குடித்து வந்தால் இருமல் உடனே நிற்கும்.


49. வரட்டு இருமல் குணமாக :

மஞ்சள் துண்டுகளை சுண்ணாம்புத் தெளிவு நீ¡¢ல் ஊற வைத்து உலர்த்தி இடித்துத் தூள் செய்து தேக்கரண்டி பாலில் கலந்து கொடுக்க குணமாகும்.


50. குழந்தைகளுக்கு ஏற்படும் தொடர் இருமல் குணமாக :

குழந்தைகளுக்கு ஏற்படும் தொடர் இருமல் குணமாக சுண்டங்கத்தி¡¢ வேரை மைய அரைத்து வெள்ளாட்டுப்பாலில் காய்ச்சி கொடுக்க தொடர் இருமல் உடனே நிற்கும்.


(S. ஆறுமுகம், B.Sc.,B.S,M.S.,)

http://www.moderntamilworld.com/health/siddha_tips_3.asp

No comments:

Post a Comment