அயன்புரம் : உதவியாளர்களாக வேலை செய்து வந்த பெண்களுக்கு பாலியல் "டார்ச்சர்' கொடுத்த பாதிரியாரை போலீசார் கைது செய்தனர்.அயன்புரம் பழனி ஆண்டவர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ்(52). இவர் வீட்டின் மாடியில் சர்ச் நடத்தி வந்தார்.அங்கு வார நாட்களில் பிரார்த்தனைக்காக நூற்றுக்கும் மேற்பட்டோர் வருவது வழக்கம். அதே பகுதியைச் சேர்ந்த மெர்சிமரியா(36) செல்வராஜின் உதவியாளராக இருந்தார்.சர்ச் தொடர்பான கணக்கு வழக்குகளை கவனிக்க, அயன்புரம் முத்தம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ரமேஷ் பாபு மனைவி சுகந்தி யும்(34) செல்வராஜிடம் வேலை செய்து வந்தார்.
இந்நிலையில் செல்வராஜ் தனது ஆசைக்கு இணங்கும்படி, சுகந்திக்கு அடிக்கடி "செக்ஸ் டார்ச்சர்' கொடுத்ததாக கூறப்படுகிறது. அவரிடம் இருந்து பல முறை தப்பிய சுகந்தி, வேறு வழியின்றி இது குறித்து மெர்சிமரியாவிடம் தனது நிலை குறித்து தெரிவித்தார்.அப்போது மெர்சிமரியா, தானும் இதுபோன்ற பிரச்னைக்கு ஆளாகி தவிப்பதாக கூறியிருக்கிறார். இதையடுத்து இருவரும் நேற்று அயன்புரம் போலீசில் புகார் செய்தனர்.அதில் செல்வராஜ் தங்களுக்கு "செக்ஸ் டார்ச்சர்' கொடுப்பதுடன், சர்ச் கட்டட விரிவாக்கத்திற்காக, தங்களை மிரட்டி மொத்தம் 5 லட்சம் ரூபாய் மற்றும் 5 சவரன் நகை ஆகியவற்றை பறித்ததாகவும் தெரிவித்துள்ளனர்.இது குறித்து இன்ஸ்பெக்டர் ரமேஷ், பாதிரியார் செல்வராஜை கைது செய்து விசாரிக்கிறார்.
http://www.dinamalar.com/district_main.asp?id=267#47349Regarding this pentecostal church, you might read one more information as follows:
faith assembly, palani andavar koil street, ayanavaram (Chennai)
This is an Independent Church. The Pastor is a Hindu Convert. It is a family Trust. Outsiders can come and attend and go. The regular management rests with the Pastor and his family. Handling of offertories and donations received is always kept as secret. Many times what is preached is not practised by the Pastor. People are encouraged to do soul winning. Only the 'yes men' survive. Those who think rationally and raise genuine questions are shown the door. But a good Church for new believers. Any one coming to Ayanavaram in Chennai can attend this church. Lot of loopholes need to be plugged. Management need to be streamlined. ACCOUNTABILITY in all areas should become the norm. Family control should give way to common management... THEN ONLY this Church could really grow to be one of the beacons of Christ's Gospel. All the best Faith Assembly, Ayanavaram, Chennai.
Source: http://wikimapia.org/11557404/faith-assembly-palani-andavar-koil-street-ayanavaram
No comments:
Post a Comment