Monday, July 26, 2010

Fake Pastor Arrested in Chennai

சென்னை, ஜூலை 26-

சென்னை அயனாவரம் பழனி ஆண்டவர் கோவில் தெருவில் பெயித் அசம்பிளி என்ற பெயரில் பெந்தே கோஸ்தே கிறிஸ்தவ சபை உள்ளது.இதன் போதகராக இருந்து வருபவர் செல்வராஜன், இவர் மீது சபையில் உறுப்பி னர்களாக உள்ள 2 பெண்கள் அயனாவரம் போலீசில் புகார் கொடுத்தனர்.

அதில் செல்வராஜ் தங்களை ஏமாற்றி கற்பழித் ததாகவும், லட்சக் கணக்கில் பண மோசடி செய்து விட்ட தாகவும் கூறி இருந்தனர்.

இதையடுத்து போலீசார் செல்வராஜை கைது செய்தனர். அவர் மீது கற்பழிப்பு மற்றும் பண மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

அவரை இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். நீதி பதி காவலில் வைக்க உத்தர விட்டார். இதை யடுத்து செல்வராஜன் புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் செல்வராஜன் மீது இன்று மேலும் 2 பெண்கள் புகார் கொடுத்தனர். அயனாவரம் போலீஸ் நிலையத்துக்கு வந்த அவர்கள் செல்வராஜன் எங்களிடம் கர்த்தர் பெயரை சொல்லி பல்வேறு வகையில் மோசடி செய்தார். அவரிடம் ஏராளமான பணத்தை இழந்து விட்டோம் என்று கூறினார்கள். அவர்கள் கூறிய புகாரையும் போலீசார் பதிவு செய்தனர்.

இந்த சபையில் மொத்தம் 150 உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களில் 50-க்கும் மேற்பட்ட பெண்களிடம் அவர் மோசடி செய்திருப்பதாக தகவல் கிடைத்து உள்ளது.

எனவே அவரிடம் ஏமாந்த பெண் உறுப்பினர்கள் பட்டியலை போலீசார் சேகரித்து உள்ளனர். அவர்கள் அனைவரிடமும் ரகசிய விசாரணை நடந்து வருகிறது.

செல்வராஜனிடம் ஏமாந்த சிலர் புகார் கொடுக்க தயக்கம் காட்டி வருகின்றனர். அவர்களிடமும் புகார் பெறும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.

Source: http://www.maalaimalar.com/2010/07/26152355/cash-cheat-again-two-ladys-com.html

Ps: Nobody knows how many such Pastors are there across India - It is easy to carry a Bible and preach to others. But, the Missionary personalities should prove themselves beyond doubt. All the Hindus who are following these fake "Pastors" should take this a "Warning" and stop going to Gospel Meetings.

No comments:

Post a Comment