Friday, July 30, 2010

Justice for Hindu Students - BJP's Rally in Nagarkoil

நாகர்கோவில் : தமிழகத்தில் காவி கொடி ஆட்சி கொண்டு வந்தே தீருவோம் என நாகர்கோவிலில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக பா.ஜ. தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் பேசினார்.

நாகர்கோவில் அண்ணா ஸ்டேடியம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அலைக -டலென திரண்ட பா.ஜ.வினர் மத்தியில் மாநில தலைவர் பொன் ராதாகிரு -ஷ்ணன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

பா.ஜ. நடத்தி வரும் ஜூலை போராட்டத்தின் 22வது போராட்டம் இது. இது -வரை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் 21 போராட்டங்கள் நடத்தப் -பட்டுள்ளன. அனைத்து மாவட்டங்களிலும் கலந்து கொண்டவர்கள் 86 ஆயிரம் பேர். ஆனால் குமரி மாவட்டத்தில் மட்டும் லட்சம் பேர் கலந்து -ள்ளனர்.

அதிகாரத்திற்கு வருவதற்கு ஒட்டுமொத்த கிறிஸ்தவர்களின் ஓட்டுக்களை -யும் பெறவேண்டுமானால் சிறப்பு சலுகை வழங்க வேண்டும் என்பதற்காக இந்துக்கள் வாயில் மண்ணை அள்ளி போடுகிறார்கள்.

எங்கள் கொள்கையில் வெற்றி பெறுவதற்காக தெருதெருவாக மட்டுமல்ல ஒவ்வொரு பா.ஜ. தொண்டனின் வீடு வீடாகவும் செல்வேன். குமரி மாவட்ட -த்தில் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் செல்வேன். ஏழை இந்து குழந்தை -களுக்கு கல்வி உதவித்தொகை வாங்கும் வரை ஓய மாட்டோம்.

முதன்முறையாக ஆட்சிக்கு வந்த தி.மு.க. இந்துக்களின் ஓட்டுக்களை வாங்கிதான் ஆட்சியை பிடித்தது. இப்போது ஓட்டு போட்ட இந்துக்களையே தி.மு.க. ஏமாற்றுகிறது. இனிமேலும் தி.மு.க.விற்கு ஓட்டு போட குமரி மாவட்டத்தில் மக்களும், இந்துக்களும் தயாராக இல்லை. தேர்தல் நேரத்தில் பணம் கொடுத்து ஓட்டு வாங்கி விடலாம் என நினைக்கிறார்கள். நாங்கள் ஏமாளிகள் இல்லை என்பதை வரும் தேர்தலில் நிரூபிக்க போகிறோம்.

ஏழை இந்து குழந்தைகளை புறக்கணிக்க அனுமதிக்க மாட்டோம் என தமிழகத்தில் யுக புரட்சி வருகிறது. அதன் ஒரு அங்கமாக இங்கு அமர்ந்து இருப்பவர்கள் உள்ளனர். கர்நாடகாவில் எடியூரப்பா பா.ஜ. ஆட்சியை கொண் -டு வந்ததுபோல் தமிழகத்திலும் காவிக் கொடி ஆட்சி கொண்டு வந்தே தீரு -வோம். எந்த ஒரு காலத்திலும், எந்த ஒரு இந்துவும் விலை போக மாட்டோ -ம் என சவால் விடுகிறோம். இவ்வாறு பொன் ராதாகிருஷ்ணன் பேசினார்.

தினமலர் செய்தியிலிருந்து

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாநில துணை தலைவர் ராஜா கூறியதாவது

சோனியாவின் ஆட்சி ஏற்பட்டவுடன் தான் இது போன்று பிரித்தாளும் சூழ்ச்சி ஏற்பட்டுள்ளது… காங்கிரஸ் தி.மு.க., கூட்டணி ஆட்சியை அப்புறப் -படுத்த வேண்டும் என்பதை நிருபிக்கும் வகையில் மாணவர்கள் கூட்டம் அலைமோதியுள்ளது. இந்த போராட்டம் குமரியில் எழுச்சியுடன் துவங்கி -யுள்ளது. ஜூலை போராட்டம் ஜூலை மாதத்துடன் முடிந்து விடுவதில் -லை. ஆகஸ்ட், செப்டம்பர். டிசம்பர் தொடர்ந்து மே மாதம் வரை நடைபெறு -ம். அப்போது தி.மு.க., ஆட்சியும் அகலும், தாமரையும் மலரும். இவ்வாறு ராஜா கூறினார்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமிழிசை சவுந்தர்ராஜன் பேசியதாவது -

இயற்கையே நம்மை வரவேற்கும் விதமாக சூரியனை மறைத்து நமக்கு மாலை நேர தென்றலை தந்து கொண்டு இருக்கிறது. பிரதமர் மன்மோகனு -க்கு ஆட்சி செய்ய தெரியாவிட்டால் வாஜ்பாயிடம் கேட்டு தெரிந்துகொள்ளு -ங்கள். இங்கு எழுச்சியுடன் காணப்படும் கூட்டம் தி.மு.க., அரசை வீழ்த்தும் கூட்டமாக அமையும். இவ்வாறு அவர் கூறினார்.

Source: http://www.tamilhindu.com/2010/07/nagerkovil-bjp-protest-july-2010-a-report/

No comments:

Post a Comment