ஈரோடு : மதமாற்றம் பிரசாரத்தால் ஈரோட்டில், நேற்று முன்தினம் நடந்த மோதல் காரணமாக, எட்டு பேர் கைது செய்யப்பட்ட நிலையில், நேற்று இரு தரப்பைச் சேர்ந்த ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.
"தினந்தோறும் நற்செய்தி' ஜெபக்கூட பாதிரியார் சாலமன்(30), ஈரோடு விடுதலைச் சிறுத்தை சமூக நல்லிணக்க பேரவை மாவட்ட செயலர் ஜோஸ்வாவும்(30), நாடார்மேடு பாரதிபுரத்தில் நேற்று முன்தினம், மதமாற்ற பிரசாரம் செய்தனர். மூலப்பாளையம் ஆர்.எஸ்.எஸ்., காசிபாளையம் மண்டல செயலர் ஈஸ்வரமூர்த்தி(30), பசும்பொன் தேவர் மக்கள் இயக்க மாவட்ட செயலர் போஸ்முருகன் (30) ஆகியோர், பொது மக்கள் உதவியுடன் பாதிரியார் சாலமனை பிடித்தனர். ஜோஸ்வா தப்பி ஓடிவிட்டார். நாடார்மேட்டில் உள்ள செல்வம் என்பவரது போட்டோ ஸ்டூடியோவில், பாதிரியார் சாலமன் சிறை வைக்கப்பட்டார்.தப்பி ஓடிய ஜோஸ்வா, விடுதலைச் சிறுத்தை அமைப்பினரை அழைத்து வந்து, பாதிரியாரை மீட்க முயற்சி செய்தார். இதில், போட்டோ ஸ்டூடியோ உடைக்கப்பட்டு, இரு தரப்புக்கிடையே மோதல் உண்டானது. சூரம்பட்டி போலீசார், இருதரப்பினரையும் போலீஸ் ஸ்டேஷன் அழைத்து வந்தனர். போலீஸ் ஸ்டேஷன் அருகில் இருந்த வி.சி., அமைப்பின் கார் உடைக்கப்ப -ட்டது. பிரச்னை தொடர்பாக பாதிரியார் சாலமன், வி.சி., அமைப்பைச் சேர்ந்த ஐந்து பேர் மற்றும் ஆர்.எஸ்.எஸ்., பசும்பொன் தேவர் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த இருவர் என, எட்டு பேர் கைது செய்யப்பட்டனர். வி.சி., அமைப்பின் காரை உடைத்ததாக, காசிபாளையம் பாரதிபுரத்தை சேர்ந்த சுப்பிரமணி (48), போட்டோ ஸ்டூடியோ உரிமையாளர் செல்வம் (36), வி.சி., பெருந்துறை ஒன்றிய செயலர் விஜயபாலன் (33), அவரது நண்பர் பிரபாகரன் (32), குணாளன்(43) ஆகிய ஐந்து பேரை நேற்று, சூரப்பட்டி போலீசார் கைது செய்தனர்.
Source: http://www.dinamalar.com/News_Detail.asp?Id=49383
No comments:
Post a Comment