Monday, July 26, 2010

Diminishing Hindu Reservation and their Civil Rights

பறிக்கப்படும் இந்துக்களின் இடஒதுக்கீடும் வாழ்வுரிமைகளும்

ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் அறிக்கை—


திருப்திபடுத்தும் தன்மையில் வளரும் அரக்கத்தன்மை!

மூலம் : பேராசிரியர் ராகேஷ் சின்ஹா
தமிழில்: பி. சிவகுமார், பத்மனாபபுரம்

வரலாற்றில் ஏற்படும் தவறுகள், பிரமைகள், பயங்கரவாதச் செயல்கள் ஆகியவற்றை நாம் ஆண்மையோடு எதிர்க்கவில்லையெனில் அது மீண்டும் தலைதூக்க நேரிடும். நாம் விட்டொழிக்க வேண்டியதை விடாததால் தேசப்பிரிவினை வரை நாம் ஏற்க வேண்டியதாயிற்று.

தேசப் பிரிவினைக்குப் பின் எல்லா தலைவர்களும் வருத்தப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது. முஸ்லிம் லீக் அல்லது முஸ்லிம் சமுதாயத்தைத் திருப்திப்படுத்தும் நோக்கு காலனி ஆதிக்கத்திலிருந்தே வளர்ந்து வந்துள்ளது. மதத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு செய்வது அதில் ஒன்று. முஸ்லிம்கள் ஏழைகள்; கல்வி அறிவு இல்லை; பின்தங்கிய நிலையில் உள்ளனர் என்பதைப் போன்ற விஷயங்கள் காரணங்களாகக் கூறப்பட்டன. 1909 ல் துவங்கி சிறிது சிறிதாக 1947ல் பிரிவினையில் முடிந்தது. பாரதம் சுதந்திரம் அடைந்தபின் காஜி செய்யது கரிமுதின் முஸ்லிம்களுக்கு மத அடிப்படையில் தனி இடம் ஒதுக்க வேண்டும் என்று கேட்டபோது சர்தார் பட்டேல் அதற்கு பின்வருமாறு பதிலளித்தார்.

sardar-vallabai-patel-iron-man’அன்பு நண்பருக்கு,

தாங்கள் உங்கள் கண்ணோட்டத்தை மாற்றிக்கொள்ளுங்கள். மாறிவரும் சூழ்நிலைகளைச் சாதகமாக மாற்றிக்கொள்ளுங்கள். நீங்கள் விரும்பியதை பெற்று விட்டீர்கள். உங்களுக்கு தனிநாடு கிடைத்துவிட்டது. அத் தனிநாடு உருவாவதற்கு பாகிஸ்தானில் உள்ளவர்கள் மட்டுமல்ல, நீங்களும் அதற்குப் பொறுப்பாளி -கள்தான். இதற்காக தான் நீங்கள் போராட்டத்திற்குத் தலைமை ஏற்றுக் கொண்டீர்கள். நீங்கள் விரும்பியது கிடைத்தபின்பு, இனி உங்களுக்கு என்னதான் வேண்டும்? ஹிந்துக்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் சிறுபான்மையினரான நீங்கள் பிரிவினைக்காக போராட்டம் நடத்த தலைமை தாங்குவது விசித்திரமாக உள்ளது. இது ஏன் என்றே புரியவில்லை. நீங்கள் விரும்பிய பிரிவினை உங்களுக்கு கிடைத்துவிட்டது. இளைய சகோதரனின் அன்பைப் பெறுவதற்காக அவனுக்கு தேவையான பொருள்கள் கொடுத்த -பின்பும் கூட மீண்டும் மீண்டும் கேட்பதை நான் ஏற்றுக்கொள்ள -வா? ஒரு பிரிவினை வேண்டும் என்று கேட்டு, என்னை அதற்கு பதில் அளிக்கத் தூண்டியுள்ளீர்கள். எங்களுக்கும் சிறிது விவேகம் இருக்கிறது. இறைவனின் விருப்பம் இதுவே என்பதைப் புரிந்துகொ -ள்ளுங்கள்.’

1947, ஆகஸ்ட் 28 ஆம் தேதி சர்தார் பட்டேல் நாடாளுமன்றத்தில் தனது உறுதியான தீர்மானத்தை சபையில் முன்வைத்தார். ஆனால் இன்று அதே மாமன்றத்தில் மதத்தின் அடிப்படையில் பிரிவினைவாத இட ஒதுக்கீடு அறிக்கை சமர்ப்பிக்கப்படுகிறது. ஓட்டுக்காக, பேராசைப்பட்டு நாடாளு -மன்ற நெறிமுறைகள் மறந்து செயல்படுகின்ற சூழல் உருவாகியுள்ளது. ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் அறிக்கையை முஸ்லிம் தலைமையை விட செக்யூலரிஸம் பேசுவபவர்கள்தான் நடைமுறைப்படுத்த தீவிரம் காட்டு -கின்றனர். 13% ஓட்டுக்காக பாரதத்தின் நிகழ்கால, கடந்தகால, எதிர்கால வரலாறு புறந்தள்ளப்படுகிறது. ஒரு கமிஷனுக்குப்பின் அடுத்து ஒன்று என அறிக்கைகள் தயாரிக்கப்படுகின்றன. ரங்கநாத் மிஸ்ரா கமிஷன், சச்சார் கமிட்டி ஆகியவற்றின் நோக்கமும், செயற்பாடுகளும், அறிக்கைகளும் கிட்டத்தட்ட ஒன்றாகத்தான் இருக்கின்றன.

சச்சார் கமிட்டியின் அறிக்கை நாடாளுமன்றத்தில் முழுஅளவில் விவாதம் செய்யாமலே நடைமுறைப் படுத்தப்பட்டது. சச்சார் கமிட்டியின் அறிக்கை -களை ஏற்றுக் கொள்ளவில்லை. எனினும் அதன்பின் ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் அறிக்கையும் வந்துவிட்டது. நாடாளுமன்றத்தில் கடந்த டிசம்பர் 18ல் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால் இந்த அறிக்கை 2007, மே 22ல் அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. இதில் பரிந்துரைக்கப்பட்டவைகள் அப்போ -திலிருந்தே வெளிப்பட்டுவிட்டது. சச்சார் கமிட்டி மாநிலத் தலைநகர -ங்களில் இரண்டு நாள்கள் முகாமிட்டு முஸ்லிம்களின் உண்மை நிலை அறிந்துகொண்டதாம், முஸ்லிம் சமுதாயத்தை ‘பின்தங்கிய வகுப்பினர்’ என்று அறிவித்தது. கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் மிகவும் பின்தங்கி -யதாக இருப்பதாக பாரத சமுதாயத்தைக் குற்றவாளியாக்கி குறை கூறிற்று. இவ்வாறு கூறப்பட்டது கூட நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படவில்லை.

சச்சார் கமிட்டி ‘செழிப்பான பூமி’ என்ற திட்டத்தின் கீழ் மதத்தின் அடிப்படை -யில் இட ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று பரிந்துரைத்தது. ரங்கநாத் மிஸ்ரா கமிஷன், சச்சார் கமிட்டியை பின்தொடர்ந்து தனது வேலையை ஆரம்பித்தது.

hindus-statusரங்கநாத் மிஸ்ரா கமிஷன், அரசு வேலைகளில் 15% இட ஒதுக்கீடு சிறுபான்மையினருக்கு தரவேண்டும் என்று கூறியிருக்கிறது. இதில் 10% முஸ்லிம்களுக்கும் 5% ஏனைய சிறுபான்மை சமூகத்தினருக்கும் கொடுக்க சிபாரிசு செய்திருக்கிறது. இந்த இட ஒதுக்கீடு பின்தங்கிய வகுப்பினருக்கு வழங்கப்பட்ட 27% இட ஒதுக்கீட்டிலிருந்து தரவேண்டும் என்றும் பரிந்துரை செய்யதிருக்கிறது. 27% இட ஒதுக்கீட்டில் 8.4% சிறுபான்மையினருக்கும் தரவேண்டும். எனவும், அதில் 6% முஸ்லிம்களுக்கும், 2.4% அந்நிய சிறுபான்மையினருக்கும் தரவேண்டும். பாரத நாட்டு அரசியல் அமைப்புச் சட்டத்தில் மதத்தின் அடிப்படையில் சிறப்பு ஒதுக்கீடு என்பது சொல்லப்படவில்லை. அவ்வாறு செய்யப்பட வேண்டுமாயின் அரசியல் அமைப்புச் சட்டம் மறு ஆய்வு செய்ய வேண்டிய நிலை ஏற்படும்.

முஸ்லிம்களுக்கு, பின்வாசல் வழியாக அதிக உதவி செய்ய வேண்டும் என சச்சார் கமிட்டியும், ரங்கநாத் மிஸ்ரா கமிஷனும் கூட்டாகச் சேர்ந்து முயற்சிக்கிறது. பொருளாதாரத்தில் அவர்கள் பின்தங்கி இருப்பதாகவும், கடந்த சில வருடங்களாக முஸ்லிம்கள் வஞ்சிக்கப்படுவதாகவும், சமூக அந்தஸ்து தாழ்ந்து இருப்பதாகவும் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

திரு. அலி அன்வர்தலித் முஸல்மான்’ என்ற நூலை எழுதினார். 2005 ஆம் ஆண்டு ‘ஜென்ரிக் போல் பவுண்டேசன்’ இந்நூலை வெளியிட்டது. 15% முஸ்லிம்களின் முன்னோர்கள் ஹிந்துக்கள் எனவும் தங்களின் அடிப்படை இங்கேதான் எனவும், சொந்த மண்ணில்தான் தனக்கு உரிமை தேடுகிறார்கள்; ஆனால் சில பேர்கள் தங்களின் முன்னோர்கள் அரேபியர்கள் எனவும், பாரதம் என்பது தங்களுக்கு வாடகைவீடு போன்றுதான் எனவும் பலவிதமான விவாதங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த விவாதங்கள் நேர்மறையாக இருந்தால் இதற்குத் தீர்வு காணமுடியும் என்று தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்லாம், ஜாதி மற்றும் தீண்டாமையை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் முஸ்லிம் மதத் தலைவர்கள் மற்றும் பரம்பரையான அரசியல் ஆட்சியாளர்களும் கூட இதை ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் சொல்லப் படுகிறது. அவ்வாறு எனில் ‘பின் தங்கிய ஜாதி’ என எப்படி வந்தது? ‘தலித் முஸ்லிம்’ எப்படி வந்தது? இந்த இரண்டிற்கும் என்ன அடிப்படை உண்மை இருக்கிறது?

முஸ்லிம் சமுதாயம் மூன்று விதமாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. அஸரஃப் செய்யது, பட்டாணி, மல்லிக், முகல் ஆகிய பிரிவைச் சார்ந்தவர்கள் உயர்ந்த ஜாதிப் பிரிவினராகக் கருதப்படுகிறார்கள்.

அஜலஃப் - இவர்கள் பின்தங்கிய ஜாதிகளாக கருதப்படுகின்றனர்.

முகலாயரின் ஆட்சிக் காலத்தில்தான் துப்புரவு பணி மற்றும் ஆடைகள் சுத்தம் செய்வதற்காக தனி ஜாதிப் பிரிவு உருவாக்கப்பட்டதாக எழுத்தாளர் அலி அன்வர் குறிப்பிடுகிறார்.

இடைக்காலங்களில் கூட மேல்ஜாதி, கீழ்ஜாதி என்ற பாகுபாடு உருவாயிற்று. இதற்குச் சான்றாக தில்லியை முகம்மது-பின்- துக்ளக் ஆட்சி செய்தார். அவருடைய ஆட்சிக் காலத்தில் அவரது சபையில் பணியாற்றிய ஜியாவுதீன் பர்னி (த பத்வா - எ - ஜஹாங்தாரி) மூலமாக மதமாற்றம் செய்யப்பட்டவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று முகம்மது-பின்- துக்களக்கிற்கு ஆலோசனை வழங்கியுள்ளார். இவர்கள் (கீழ்ஜாதியிலிருந்து முஸ்லிம்களாக மதம் மாற்றம் செய்யப்பட்டவர்கள் ) கல்வி அறிவு பெற தகுதியற்றவர்கள் எனவும், கல்வி புகட்டல் இவர்களுக்கு முற்றிலும் மறுக்கப்படுகிறது எனவும், அறிவு ஆற்றல் பெற கீழ்ஜாதிகள் தகுதியற்றவர்களாக சித்தரிக்கப்பட்டனர். குரானில் கூறப்பட்டுள்ள இறைவனை வழிபட மட்டும்தான் இவர்களுக்கு உரிமை தவிர அது படிக்கவோ, அல்லது கல்வி அறிவு பெற முயற்சித்தாலோ கடுமையான தண்டனைகளுக்கு ஆட்படுவர் எனவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

தாழ்த்தப்பட்ட ஹிந்துக்களோடு, மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் பிரிவில் முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்க்க நினைப்பது மிகவும் தந்திரமான சூழ்ச்சியாகும், இட ஒதுக்கீடு என்ற போர்வையை வைத்துக்கொண்டு வசதியாக வாழ வழிவகை செய்வதுதான். பர்னி, அன்வர். எலாஜ் அலி இவர்கள் கூறுவது போன்று முஸ்லிம் சமுதாயத்திற்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்று நினைப்பு இருப்பின் மக்கள் தொகைக் கணக்கீட்டின் படி உண்மை நிலவரம் என்ன என்பதறிந்து கொண்டு, அதன் அடிப்படையில் ஏதேனும் செய்யலாம். உண்மையில் முஸ்லிம் சமூக அமைப்பில் சாதிப் பிரிவுகள் உண்டா? தீண்டாமை அவர்களிடமும் இருக்கிறதா? அவ்வாறு இருப்பின் சட்டத்தின் உதவியுடன் அவர்கள் கடைபிடிக்கும் தீண்டாமையை மாற்றுவது அவசியம் தானே? மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் போது முஸ்லிம்கள் தங்களின் ஜாதி, பிரிவு, தலித் இவைகள் பற்றி குறிப்பிட்டிருக்கிறார்களா? முஸ்லிம் சமூகத்தில் பெண்களின் உண்மையான நிலை என்ன? அவர்கள் கல்வி அறிவு பெறுவதும், வேலைகளுக்குச் செல்வதும் சுயமாகச் சிந்தனை செய்து தன்னிறைவு அடைவதற்கும் ஏன் மதத்தில் அடிப்படையில் கடுமையான தடைகள் ஏற்படுத்தப்படுகின்றன? திருமணம், மணமுறிவு, சொத்துகள் சேர்த்தல் போன்றவற்றில் அவர்களின் முடிவுகள் ஏன் ஏற்கப்படுவதில்லை? இதுபோன்ற பெரும் பிரச்சினைகளை ஆராய்ந்து ஜனநாயக மரபுப்படி இவற்றிற்கு உரிய தீர்வு காண்பது தேச நலனுக்கு மிகுந்த தேவையாகும்.

ஜாதி, இன, பேதங்கள் பற்றி ஒரு முடிவுக்கு வராமல் இருக்கும் பட்சத்தில் அவர்கள் கோரும் சிறுபான்மை வாதம் முழுவதும் ஓட்டு வங்கியை மையமாக வைத்துதான் செயல்படுகிறது. ஆகவே சச்சார் கமிட்டியும், ரங்கநாத் மிஸ்ரா கமிஷனும் கொஞ்சமேனும் நேர்மையாக அறிக்கை தாக்கல் செய்ய விரும்பினால் முஸ்லிம்களின் சமுதாய அமைப்பு, பண்பாடு போன்ற கேள்விகளுக்கு விடை காண முயன்றால் உண்மை நிலவரம் நிச்சயம் வெளிச்சத்திற்கு வந்துவிடும். இவ்வாறு செய்தால் போலி மதச்சார்பின்மை பேசும் அரசியல்வாதிகளின் ஓட்டு வங்கித் திட்டம் தோல்வியுற்றுவிடும்.

acharya-kripalani1955 ஆம் ஆண்டு ஆச்சார்ய கிருபளானி நாடாளுமன்றத்தில் ஹிந்து சட்ட மசோதா மீதான விவாதம் நடைபெற்றபோது எடுத்துக்கூறிய வார்த்தைகளை இன்று நாம் கவனிக்க வேண்டும். “நமது நாடு ஜனநாயக மரபுகளை கடைப்பிடித்து வாழும் நாடாக இருந்தால், ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினருக்கு மட்டும் சட்டம் இயற்றப்படக்கூடாது. ‘நமது சட்ட அமைச்சர், ஒருவருக்கு மேல் திருமணம் செய்யக்கூடாது என்பதை எல்லா சமுதாயத்தினருக்கும் அமல்படுத்த தயாராக இருக்கிறாரா? இது உண்மையில் மதச்சார்பற்ற நாடாக இருப்பின் ஏன் இந்தப் பாகுபாடு? ஒரு சமுதாயத்தினருக்கு ஜனநாயக மரபும், இன்னொரு சாராருக்கு மதத்தின் அடிப்படையிலான வழியுமா? பெருவாரியாக வாழும் சமுதாயம் மட்டும் மரபை கடைப்பிடித்தால் போதாது? அரசும் அவசியம், அரசிற்குரிய மரபும் கூட எது நேர்ந்தாலும் கடைப்பிடித்தே ஆகவேண்டும்.”

திரு. கிருபளானி அவர்கள் அரசு கடைபிடிக்க வேண்டிய மரபுகள் குறித்து குறுப்பிட்டுள்ளார். அது எக்காலத்திற்கும் பொருத்தமாக இருக்கும் சிறப்புடையது. ஆனால் தற்போது மரபுகள் யாது என கேள்வி கேட்பதே மரபாகக் கருதப்படுகிறது.

ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் தாழ்த்தப்பட்ட, பிற்பட்ட வகுப்பினருக்கு அளிக்கும் இட ஒதுக்கீட்டில் சிறுபான்மை சமுதாயத்தினருக்கும் உரிமை அளிக்க வேண்டும் எனவும், இது சம்பந்தமாக குடியரசுத் தலைவரின் ஆணை 1950, பத்தி - 3ஐ ரத்து செய்யப் பரிந்துரைக்கிறது. இந்தப் பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள பிற்பட்ட மக்களின் தற்போதைய சமூக நிலைப்பாடு, பொருளாதார நிலை, பண்பாடு, கலாசாரம் ஆகியவற்றின் அளவுகோல்கள் என்ன என்று அறிந்து கொள்ளவேண்டும் எனவும் பத்தி 3 நீக்கப்பட்டு அவற்றில் ’தலித்துகள்’ என்று கூறப்படுகின்ற முஸ்லிம், கிறிஸ்தவர்களையும் சேர்த்து, அவர்களுக்கும் இட ஒதுக்கீடு தரவேண்டும் எனவும் பரிந்துரைக்கிறது.

ரங்கநாத் மிஸ்ரா கமிஷனின் அறிக்கை பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை மக்களின் மத்தியில் பிரிவினைகள், வேற்றுமைகள், ஒத்துழையாமை போன்றவை ஏற்படுத்தும்.

ஓர் எடுத்துக்காட்டு தருகிறேன். தேசிய அளவில் பல்நோக்குக் குழு அமைக்கப்பட வேண்டும். நாட்டுடைமை ஆக்கப்பட்ட வங்கிகளில் அவர்களின் பிரதிநிதித்துவம் இருக்கும்போது சிறுபான்மையினருக்கும் எளிதில் கடன் கிடைக்கும். முஸ்லிம் சமுதாயத்திற்கு மத அடிப்படையில் சலுகைகள் வழங்கவேண்டும் என்றும் இஸ்லாம் கூறியுள்ளபடி கடன் வழங்கவும், வசூல் செய்தலும் வேண்டும். ஆகவே கமிஷன் மதத்தின் பேரில் அநீதியை பெரும்பான்மைச் சமுதாயத்திற்கு இழைக்க நினைக்கிறது. மதச்சார்பின்மை என்பதைக் காட்ட பாடத்திட்டங்களும், கல்விக்கூடங்களும் சமமாக அமைய வேண்டும்.

சச்சார் கமிட்டியின் பரிந்துரையைத் தொடர்ந்து இக்கமிஷனும் அதே பரிந்துரைகளை முன்வைக்கிறது. சுனிந்தா நிலையங்கள், அலிகார் பல்கலைக்கழகம், ஜாமியாமிலியா இஸ்லாமியா போன்ற பல்கலைக்கழகங்களில் பயிலும் முஸ்லிம் மாணவர்களுக்கு கல்வி பிரச்சாரம் செய்யவும், அவர்களை கல்விக்கு அதிக அளவில் ஊக்குவிக்க வேண்டிய நடைமுறைகளும் அரசு செய்ய வேண்டும். முஸ்லிம்கள் நடத்தும் எல்லா பள்ளி, கல்லூரிகளுக்கும் மிக அதிக அளவில் பொருளாதார உதவிகள் செய்தல் வேண்டும். உணவு பழக்கங்கள் கூட மத அடிப்படையில்தான் அமையவேண்டும். நகர்ப்புறங்களில் நடக்கும் மதச்சடங்குகள் கிராமப் பகுதிகளுக்குக் கொண்டுசெல்வதற்காக ‘நரேகா’ என்ற சிறப்புத் திட்டத்தின் கீழ் முஸ்லிம்களுக்கு 10% இட ஒதுக்கீடும், ஏனைய சிறுபான்மையினருக்கு 5% இட ஒதுக்கீடும் அரசுதான் செய்ய வேண்டும் எனவும் பரிந்துரைக்கிறது.

இஸ்லாமியர்களின் வளர்ச்சி விகிதத்தை கருத்தூன்றி கமிஷன் ஆய்வுசெய்து நோக்கின் பாரதத்தில் முஸ்லிம்களின் நிலை என்ன என்று அறிய முடியும். 53 உறுப்பு நாடுகளில், இந்தோனேஷியா, பங்களாதேஷ், பாகிஸ்தான், நைஜீரியா, எகிப்து ஆகிய முஸ்லிம் நாடுகளில் 50 கோடி முஸ்லிம் மக்கள் ஏழைகளாக வாழ்கின்றனர்.

ஆப்கானிஸ்தான், சூடான், மொசாம்பிக், துருக்கி, நைஜர் போன்ற நாடுகளில் 60 கோடி ஏழை முஸ்லிம்கள் வசிக்கிறார்கள். ஆனால் பாரதத்தில் 1953 ஆம் ஆண்டு முதல் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்று வரம்பு முறை மீறிய கோரிக்கை எழுந்து வருகிறது.

டி. இ. ஸ்மித் குறிப்பிடுவதாவது:

“பாரதம் ஒரு மதச்சார்பற்ற நாடு. பாரதத்தில் அரசு ஊழியர் பணிகளுக்கு தேர்வு வாரியங்கள் மூலமாக தேர்ந்து எடுப்பது மிகவும் சிறப்பானதாகும். மைசூரில் 20% முஸ்லிம்கள் வாழ்கிறார்கள். ஆனால் அரசு வேலைவாய்ப்பில் 23% முஸ்லிம்கள் பெற்றிருக்கிறார்கள். ஆகவே பாரத நாடு மதச்சார்பற்ற தன்மையாக நடந்து கொள்கிறது என்பதற்கு இது சிறந்த சான்றாகும்.”

ஆனால் இம்மாதிரிப்பட்ட சிறந்த உதாரணங்களை ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் கருத்தில் கொள்ளவேயில்லை. ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் மற்றும் சச்சார் கமிட்டி தேசத்தின் பாதுகாப்பு, வசதிகள், உள்கட்டமைப்புகள், தேச நலன் ஆகியவற்றைப் பற்றி சிறிதும் சிந்தியாமல் மத அடிப்படையில் எதிர்விளைவை உருவாக்கும் தூண்டுதலோடு அளித்திருக்கும் அறிக்கை, தேச நலனுக்கு விடுத்துள்ள மாபெரும் சவாலான கேள்வியாகும். இன்று முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பகுதியில் தங்களுக்கு தனி நாடு பிரித்துக்கேட்கும் நிலை உருவாகியிருக்கிறது.

முஸ்லிம் திராவிட முன்னேற்ற கழகத் தலைவர் இபனிஸ் முகமது, பாரதத்தில் எங்களுக்கு என்று ஒரு தனி நிலை வேண்டும். அதாவது பாரதத்தில் 15% நாங்கள் வாழ்வதால் 15% நிலப்பகுதி எங்களுக்குத்தான் சொந்தம் என்ற மாறுபாடுடைய மனநிலை இருப்பதுடன், சமூக, பொருளாதார நிதிகூட தங்களுக்கு என்று தனியாக இருக்க வேண்டும்’ என்று விரும்புகிறார்.

‘இந்த தேசத்தில் எவரும் சிறுபான்மையினர் அல்லர். இத்தேசத்தின் நடைமுறையில் உள்ள் தேர்தல் நிலவரங்களினால் இடர்ப்பாடுகள் ஏற்படுகின்றன. தேசத்தில் உள்ள அனைவரும் ஒன்றுதான். ஆட்சிமுறைப் போராட்டங்களினால் தான் இம்மாதிரி நிலைகள் ஏற்படுகின்றன’ என்றார் தஜ்முல் ஹுஸைன். அவரது உண்மை கூற்றுக்கள் முஸ்லிம்களுக்கு விரோதமானது என்று தவறாகச் சுட்டப்படுகிறது. ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் அறிக்கைகளை நாம் நல்ல முறையில் செவிமடுக்கவில்லையெனில், மீண்டும் ஒரு 1947 போராட்டத்திற்குத் தயாராக வேண்டிய தருணம் ஏற்பட்டு தத்தளிக்கக்கூடும்.

[பேராசிரியர் ராகேஷ் சின்ஹா, தில்லிப் பல்கலைக் கழகத்தில் அரசியல் துறை (political science) பேராசிரியர். India Policy Foundation என்ற அமைப்பின் இயக்குனரும் ஆவார்.]

Source: http://www.tamilhindu.com/2010/02/hindhus-reservations-and-living-rights-are-being-robbe/

No comments:

Post a Comment