Contd from the previous article....
வாரன் ஆண்டர்சன் இந்தியா வந்து பாதுகாப்பாக மீண்டும் நாடு திரும்ப உறுதியளிக்கப்பட் -டது அன்றைய பிரதமர் ராஜீவ் காந்திக்கும் தெரியப்படுத்தப்பட்டது என்றும், அதற்கு அவர் எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லையென்றும் ராஸ்கோத்ரா கூறியுள்ளார். ஆனால், வாரன் ஆண்டர்சனை இந்தியா (போபால்) வந்ததும் கைது செய்யப்பட்டார். பிறகு பிணைய விடுதலை அளிப்பபட்டிருந்த நிலையில் அவர் நாட்டை விட்டு, ஏற்கனவே அளிக்கப்பட்டி -ருந்த உறுதிமொழியின் அடிப்படையில், எவ்வித சிக்கலுமின்றி வெளியேறியுள்ளார். இதுதான் நடந்துள்ளது. பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் உயிரிழக்கக் காரணமான ஒரு நிறுவனத்தின் தலைவரை, அவர் கைது செய்யப்பட்டு பிறகு பிணையில் விடுதலைப் பெற்றிருந்த நிலையில், நீதிமன்றத்தின் ஒப்புதலின்றி நாட்டை விட்டு வெளியேற அனுமதித் -தது மத்திய அரசே என்பதும், அது அப்போது பிரதமராக இருந்த ராஜீவ் காந்தியின் ஒப்புதலு -டனும்தான் நடந்துள்ளது என்பதும் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபனமாகியுள்ளது.
அது மட்டுமல்ல, இந்தியா வந்த ஆண்டர்சனை கைது செய்தது தவறு என்கிறார் அன்றைய அயலுறவுச் செயலர் ராஸ்கோத்ரா! கொல்லப்பட்டது அப்பாவி மக்களென்பதால்தானே அவரால் அப்படி கூற முடிகிறது? விஷ வாயுக் கசிவு அந்த தொழிற்சாலையின் அருகில் வாழ்ந்துவந்த ஏழை, எளிய மக்களைத் தாக்கிக் கொன்றதால்தானே பாதிப்பிற்குப் பொறுபே -ற்க வேண்டிய நபரை கைது செய்வதற்கே எதிர்ப்பு தெரிவிக்கச் சொல்கிறது? அன்றைய மத்திய, மாநில அரசுகளும், அதன் தலைவர்களும், நிர்வாகமும் இதை ஒரு சாதாரண சாலை விபத்தைப்போலத்தான் பார்த்துள்ளன என்பதற்கு இதை விட வேறு சான்றென்ன தேவை?
இந்தியாவின் சட்டங்களும், நீதிமன்ற நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டவர்களின் தன்மையைப் பொறுத்தே செயல்படுகின்றன என்று மூத்த வழக்கறிஞரும், மக்கள் சமூக உரிமைச் சங்கத்தின் தலைவருமான கண்ணபிரான் கூறியுள்ளது எவ்வளவு பெரிய உண்மை!
அந்த விஷ வாயுக் கசிவால் கொல்லப்பட்டவர்கள் மேட்டுக்குடி மக்களாக இருந்திருந்தால், அங்கு வாழ்ந்தோரில் தலைவர் எவராவது இருந்து இறந்திருந்திருந்தால், அவர்களின் குடும்பம் பாதிக்கப்பட்டிருந்தால் அப்போது இப்படி சாதாரண ஒரு விபத்தாக பார்க்கும் மன நிலை இவர்களுக்கு இருந்திருக்குமா? அல்லது அப்படிப்பட்ட நிறுவனத்திற்கு சட்ட ஆலோ -சனை சொல்லி சம்பாதிக்கத்தாம் இந்த காங்கிரஸ்காரர்கள் முன்வந்திருப்பார்களா?
ஆக, போபால் விஷ வாயுக் கசிவு சாதாரண மக்களின் வாழ்வைத் தாக்கியதால் அது ஒரு ‘விபத்தாக’ கருதப்படுகிறது. அதுவே இந்த நாட்டின் அரசியல் தலைவர்களைத் தாக்கி அழித்திருந்தால் அது தேசத்தின் அழிவாகவும், ஜனநாயகத்திற்கு விடப்பட்ட அச்சுறுத்தலாக -வும் பேசப்பட்டிருக்கும். இதைத்தான் இந்திய மக்களாகிய நாம் புரிந்துகொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி எதிர்ப்பார்கிறது போல.
மற்றபடி, குற்றவாளிகளை, குற்றம் சாற்றப்பட்டவர்களை தப்பிக்க வைப்பதில் காங்கிரஸ் அரசை யாராலும் ஜெயிக்க முடியாது. போபர்ஸ் பீரங்கி பேர வழக்கின் முக்கியக் குற்றவாளி -யான ஒட்டோவியோ குட்ரோக்கியை ஆதாரம் ஏதுமில்லை என்று கூறி வழக்கில் இருந்தே விடுவிக்கத் தெரிந்தவர்களுக்கு, வாரன் ஆண்டர்சன்களை உறுதி மொழி கொடுத்து தப்ப வைப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை.
Source: http://tamil.webdunia.com/newsworld/news/currentaffairs/1006/18/1100618039_2.htm
No comments:
Post a Comment