23,000 அப்பாவி உயிர்களை பலிகொண்ட போபால் விஷ வாயுக் கசிவு வழக்கின் முக்கிய குற்றவாளி -யாகச் சேர்க்கப்பட்ட யூனியன் கார் -பைட் நிறுவனத்தின் தலைவர் வாரன் ஆண்டர்சனை இந்தியாவிலி -ருந்து பாதுகாப்பாக தப்பிச் செல்ல விட்டது காங்கிரஸ் அரசுதான் என்பது ஒரு வழியாக உறுதியாகி -விட்டது.
1984ஆம் ஆண்டு, டிசம்பர் 3ஆம் தேதி இரவு போபாலில் யூனியன் கார்பைட் நிறுவனத்தின் பூச்சி மருந்து தொழிற்சாலையில் இருந்து மீதைல் ஐசோசயனைட் என்கிற விஷ வாயு வெளியேறி, போபால் நகரின் ஒரு பகுதியையே மரணக் காடாக்கியத -ற்குப் பிறகு, மக்கள் நலனில் காங்கிரஸ் கட்சி எந்த அளவி்ற்கு ‘அக்கரை’யுடன் செயல்பட்டது என்பது சமீப நாட்களில் அதன் தலைவர்கள் பேசிய பேச்சுகளில் இருந்து நன்றாக நாட்டு மக்கள் புரிந்துகொண்டார்கள்.
விபத்து நடந்த 3 நாட்கள் கழித்து, யூனியன் கார்பைட் தொழிற் -சாலைக்கு அருகில் மக்களிடம் உரையாற்றிய அன்றைய மத்தியப் பிரதேச முதலமைச்சர் அர்ஜூன் சிங், இந்த விபத்திற்காக யாரையும் தண்டிக்கவோ, துன்புறுத்தவோ போவதில்லை என்று கூறியதில் இருந்து, எப்படிப்பட்ட மன நிலையில் காங்கிரஸ் அரசு செயல்பட்டது என்பது உறுதியாகியுள்ளது.
இதுமட்டுமல்ல, ஆண்டர்சனை தப்பிக்க விட்டது ஏன் என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு, காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைமைக் குழுவின் உறுப்பினர் ஒருவர் (அவர் பெயரை காங்கிரஸ் கட்சி வெளியிடவில்லை) தயாரித்துள்ள அறிக்கையில், போபாலில் அப்போது வாரன் ஆண்டர்சன் இருந்திருந்தால் அவர் கொல்லப்பட்டிருப்பார். அதனால் மிகப் பெரிய சட்டம் ஒழுங்குப் பிரச்சனை உருவாகியிருக்கும் என்று கூறியுள்ளார்.
பல்லாயிரக் -கணக்கில் மக்கள் கொல்லப்பட்ட விஷ வாயு வெளியேற்றத்திற்குக் காரணமான ஒரு நிறுவனத்தின் தலைவர் மீது பாதிக்கப்பட்ட மக்களின் கோபம் திரும்பும் என்பது எதிர்பார்க் -கப்படுவதே. எனவே, பாதிப்பிற்குப் பொறுப்பான அந்த நபரை நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தும் பொருட்டு, கைது செய்து சிறையில் வைப்பது கூட பாதுகாப்பு நடவடிக்கைதான் என்பதை காங்கிரஸ் கட்சி உணராமல் பேசுகிறது. ஆண்டர்சனை கைது செய்து காவலில் வைத்திருந்தால், அது விசாரணைக்கும் உதவியிருக்கும், அவருக்கும் பாதுகாப்பாக இருந்திருக்கும். ஆனால், அதையே காரணமாக்கி அவரை நாட்டை விட்டு பாதுகாப்பாக வெளியேற அனுமதிக்கப்பட்டதை எப்படி நியாயப்படுத்த முடியும்?
முன்னரே அளிக்கப்பட்ட உறுதிமொழி! எல்லாவற்றிற்கும் மேலாக நேற்று சி.என்.என்.-ஐ.பி.என். தொலைக்காட்சியில் கரன் தாப்பர் நேர்காணலில், அப்போது அயலுறவு செயலராக இருந்த எம்.கே.ராஸ்கோத்ரா கூறியதுதான் உச்ச கட்ட அதிர்ச்சியாக உள்ளது.
இதுநாள்வரை, வாரன் ஆண்டர்சனை இந்தியாவி்ற்கு கொண்டுவரும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டது போல் காங்கிரஸ் கட்சி பேசிவந்தது. அவரை நாடுகடத்த அமெரிக்க மறுத் -ததுபோல் கூறியும் வந்தது. ஆனால், போபால் விஷ வாயு வெளியேற்றத் துயரத்திற்குப் பிறகு இந்தியா வந்த ஆண்டர்சன், பாதுகாப்பாக நாட்டை விட்டுச் செல்வதற்கு மத்திய அரசு முன்னரே உறுதி அளித்தது என்ற உண்மையை எம்.கே.ராஸ்கோத்ரா நேற்றைய பேட்டியில் கூறியுள்ளார்.
வாரண் ஆண்டர்சன் இந்தியா வந்த போபால் விஷ வாயு கசிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறவும், நடந்தது என்னவென்று நேரில் அறியவும் இந்தியா வர விரும்புகிறார். அப்படி அவர் வந்தால், எவ்வித சட்டச் சிக்கலுன் இன்றி, அவர் மீண்டும் நாட்டை விட்டு வெளியேற அனுமதிப்பீர்களா என்று தன்னிடம் இந்தியாவிற்கான அமெரிக்கத் தூதர் கேட்டதையும், அதனடிப்படையில் உள்துறை அமைச்சகத்துடன் பேசி, அதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டதையும் எம்.கே.ராஸ்கோத்ரா உறுதிப்படுத்தியுள்ளார்.
Source: http://tamil.webdunia.com/newsworld/news/currentaffairs/1006/18/1100618039_1.htm
No comments:
Post a Comment