Friday, August 19, 2011

நெருக்கடி நிலை ?

நெருக்கடி நிலை ? அச்சிடுக மின்-அஞ்சல்
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு
செவ்வாய்க்கிழமை, 16 ஆகஸ்ட் 2011 19:04

5605168488_a49df5c585_b

1968ல் முதன் முதலாக அறிமுகப் படுத்தப் பட்ட மசோதா 45 ஆண்டுகள் கடந்தும் சட்டமாகாமல் இருப்பது அன்னா ஹசாரேவின் குற்றமா ? இன்று காங்கிரஸ் சார்பாக பேட்டியளிக்கும் தலைவர்கள் சட்டம் இயற்றுவது பாராளுமன்றத்தின் வேலை, அதை ஒரு பூங்காவில் போராட்டம் நடத்துவதன் மூலமாக முடிவு செய்ய முடியாது என்று கூறுகிறார்களே…. 1968 முதல் ஒரு 10 ஆண்டுகளைத் தவிர்த்து, தொடர்ந்து ஆட்சியில் இருந்தது காங்கிரஸ் தானே ? என்ன செய்து கொண்டிருந்தார்கள் இத்தனை ஆண்டுகளாக ?

காங்கிரஸ் எத்தனை பெரிய தீய சக்தி என்பதை நாம் ஏற்கனவே பல முறை விவாதித்திருக்கிறோம். அதன் கோர வடிவத்தைத் தான் இப்போது பார்க்கிறோம். இந்திரா காந்தி கொல்லப் பட்ட பிறகு, டெல்லி வீதிகளில் 3000த்துக்கும் மேற்பட்ட சீக்கியர்கள் படுகொலை செய்யப் பட்டதற்கு காரணமான தலைவர்களுக்கு பதவி கொடுத்து அழகு பார்க்கும் அளவுக்கு வக்கிர புத்தியுடையது காங்கிரஸ் கட்சி. அந்த வக்கிர புத்தியின் ஒரு வடிவமே இன்றைய கைது நடவடிக்கை.

ஏன் இந்த லோக் பால் மசோதாவைப் பார்த்து காங்கிரஸ் கட்சி அஞ்சுகிறது ? ஏனென்றால், இந்த மசோதா சட்டமானால், பெரும்பாலான காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் சிறைக்குள்ளே இருக்க வேண்டும் என்ற அச்சமே…. ஒவ்வொரு தேர்தலை சந்திப்பதற்கும், கார்ப்பரேட்டுகளிடம் லஞ்சம் வாங்கி, அதற்கு கை மாறாக, பதவிக்கு வந்ததும், கார்ப்பரேட்டுகளின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு இத்தனை ஆண்டுகளாக கட்சி நடத்திக் கொண்டிருந்த காங்கிரஸ் கட்சிக்கு, இந்த லோக்பால் மசோதா, பயத்தை உருவாக்கியுள்ளது.

இந்த மசோதாவை சட்டமாக்காமல், அதற்கு பதிலாக வலுவற்ற ஒரு சட்டத்தை உருவாக்கும் தீய நோக்கத்தில் காங்கிரஸ் கட்சி அத்தனை அயோக்கியத்தனங்களையும் அரங்கேற்றியிருக்கிறது. மார்ச் மாதத்தில் அன்னா ஹசாரே உண்ணாவிரதத்தை துவக்கிய போது, நாடு முழுவதும் திரண்ட ஆதரவைப் பார்த்து ஆடித்தான் போனது காங்கிரஸ் கட்சி. அந்த அச்சத்தின் காரணமாகத் தான், அன்னா ஹசாரேவோடு பேச்சுவார்த்தை நடத்தி, அவர் உண்ணாவிரதத்தை முடிவுக்கு கொண்டு வந்து, கலந்து ஆலோசனை நடத்தி சட்ட வரைவை உருவாக்குவது என்று முடிவெடுக்கப் பட்டது.

அரசு சார்பில், அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, ப.சிதம்பரம், வீரப்ப மொய்லி, கபில் சிபல் மற்றும், சல்மான் குர்ஷீத் ஆகியோரும், மக்கள் சார்பாக சாந்தி பூஷண், பிரசாந்த் பூஷண், சந்தோஷ் ஹெக்டே, அன்னா ஹசாரே, மற்றும் அர்விந்த் கேஜ்ரிவால் ஆகியோரும் இருப்பது என்று முடிவெடுக்கப் பட்ட முதலாகவே, மக்கள் சார்பாக இருந்த குழுவை சிதைக்க அத்தனை நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர் காங்கிரஸ் கட்சியினர். முதலில், தந்தையும் மகனும் ஒரு குழுவில் இருக்கக் கூடாது என்றனர். பின்னர் சாந்தி பூஷண் மீது குற்றம் சுமத்தும் வகையில் அவர் பேசியதாக ஒரு ஆடியோ உரையாடலை தயாரித்து, டெல்லி பத்திரிக்கைகளுக்கு ரகசியமாக அனுப்பி வைத்தனர். அந்த உரையாடல் பொய் என்று சாந்தி பூஷண் மறுத்ததும், ஒரு சோதனைக் கூடம், அதை சோதித்து உண்மையான சிடி என்று அறிக்கை வெளியிட வைத்தனர். பின்னர் சாந்தி பூஷண் நொய்டா மாகாணத்தில் அரசு நிலத்தை குறைந்த விலைக்கு வாங்கினார் என்று ஒரு குற்றச் சாட்டுகளை சுமத்தினர். இந்த தந்திரங்கள் எதுவுமே பலிக்காமல் போனதும், இந்த குழுவின் முக்கிய பரிந்துரைகளை நிராகரித்து, பேச்சுவார்த்தையை முடிவுக்கு வந்தனர். பேச்சு வார்த்தை நடப்பதை அப்படியே தொலைக்காட்சியில் ஒளிபரப்பலாம் என்று மக்கள் குழு கோரியதை, நிராகரித்து, அந்த பேச்சுவார்த்தைகளையும் ரகசியமாக நடத்தினர்.

இன்னும் ஒரு படி கீழே போய், அன்னா ஹசாரே ராணுவத்தில் பணியாற்றிய காலத்தில் அவர் மீது ஏதேனும் குற்றச் சாட்டுகள் உள்ளதா என்று விசாரித்தார்கள். அன்னா ஹசாரே ராணுவத்தில் அப்பழுக்கில்லாமல் பணியாற்றினார் என்பது தெரிய வந்ததும் அதை கைவிட்டார்கள்.

இன்று பத்திரிக்கையாளர்களிடம் பேசிய கபில் சிபலும், ப.சிதம்பரமும், ஒரு சிலவற்றைத் தவிர அன்னா ஹசாரே கேட்டுக் கொண்ட அத்தனை ஷரத்துக்களையும் உள்ளடக்கியே லோக்பால் மசோதா தயாரிக்கப்பட்டிருக்கிறது என்றார். அவர் குறிப்பிட்ட அந்த ஒரு சில தானே முக்கியமானவை ?

மக்கள் மசோதா பிரதமரை விசாரணை வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என்கிறது, அரசு மசோதா கூடாது என்கிறது. மக்களவை மற்றும் மாநிலங்களவை சபாநாயகர்கள் அனுப்பும் புகார்களை மட்டுமே லோக்பால் விசாரிக்க வேண்டும் என்று அரசு மசோதா கூறுகிறது. மக்கள் மசோதா, தானாகவே முன்வந்து நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் லோக்பால் அமைப்புக்கு வழங்க வேண்டும் என்கிறது. லோக்பால் ஆலோசனை கூறும் ஒரு அமைப்பாக இருக்க வேண்டும் என்கிறது அரசு மசோதா. மக்கள் மசோதா, லோக் பால் அமைப்புக்கு வழக்கு தொடரவும், நீதிமன்றத்தில் வழக்கை நடத்தவும் அதிகாரம் வேண்டும் என்கிறது. அரசு மசோதா, லோக்பாலுக்கு எப்ஐஆர் போடும் அதிகாரம் கூடாது என்கிறது. மக்கள் மசோதா, எப்ஐஆர் போடும் அதிகாரம் வேண்டும் என்கிறது. லோக்பால் அமைப்பு தனியாகவும், சிபிஐ தனியாகவும் வேண்டும் என்கிறது அரசு மசோதா. இரண்டையும் ஒன்றாக்க வேண்டும் என்கிறது மக்கள் மசோதா. குறைந்த பட்ச தண்டனை 6 மாதங்கள் என்றும் அதிகபட்ச தண்டனை 7 வருடங்கள் எனவும் கூறுகிறது அரசு மசோதா. குறைந்த பட்ச தண்டனை 10 வருடங்கள் எனவும், அதிக பட்ச தண்டனை ஆயுள் தண்டனை என்றும் மக்கள் மசோதா கூறுகிறது.

இவைதான் ப.சிதம்பரம் குறிப்பிட்ட ‘ஒரு சில’. இந்த ஷரத்துக்கள் மொத்த சட்டத்தையுமே அல்லவா மாற்றி விடுகிறது ? அதிக பட்ச தண்டனை 7 ஆண்டுகள் என்று இப்போது உள்ள லஞ்ச ஒழிப்புச் சட்டமே சொல்கிறதே… பிறகு எதற்கு புதிய சட்டம் ? சிபிஐ போன்ற அமைப்புகளை தனியாக வைத்திருந்தால் தான், தங்களுக்கு பிடிக்காதவர்கள் மீது வழக்கு போட்டு மிரட்டவும், வேண்டியவர்களை குற்றச் சாட்டுகளில் இருந்து காப்பாற்றவும் முடியும் என காங்கிரஸ் அரசு நினைப்பதே, சிபிஐ அமைப்பு தனியாக இருக்க வேண்டும் என்பது.

3528675790_d50293b1dc_z

காங்கிரஸ் தலைவர்கள் புரிந்து கொள்ளத் தவறிய ஒரு விஷயம் என்னவென்றால், அவர்களைப் போல பெரும்பான்மையான மக்கள் ஊழல் பேர்விழிகள் அல்ல என்பதே…. ஸ்பெக்ட்ரம், காமன் வெல்த் விளையாட்டு ஊழல்களைப் பார்த்த மக்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். நாட்டை சுரண்டும் இந்த ஊழலை ஒழிக்கும் காலம் வந்து விட்டதாகவே கருதுகிறார்கள். அதனால் தான் அன்னா ஹசாரே கைது செய்யப் பட்டவுடன், நாடு முழுவதும் தன்னிச்சையான போராட்டங்கள் நடைபெறுகின்றன.

மக்கள் காங்கிரஸ் கட்சியின் அயோக்கியத்தனங்களை தெளிவாகவே புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்பது நிதர்சனம். இன்று வீதிக்கு வந்து போராடும், மக்களில் பெரும்பாலானோர் இளைஞர்கள். படித்த இளைஞர்கள். வாழ்க்கையின் பல்வேறு தளங்களில் இருந்து தன்னிச்சையாக போராட வீதிக்கு வந்து சிறைக்கும் செல்கிற இந்த இளைஞர்கள் காங்கிரஸ் கட்சியை மன்னிக்க மாட்டார்கள் என்பதை உணரத் தவறியதே, இன்றைய அன்னா ஹசாரேவின் கைது நடவடிக்கை.

ar

உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன் என்று அனுமதி கேட்டு கடிதம் கொடுத்த உடனேயே 5000 பேருக்கு மேல் இருக்கக் கூடாது என்றும் 3 நாளைக்கு மேல் உண்ணா விரதம் இருக்கக் கூடாது என்றும் நடைமுறைச் சாத்தியம் இல்லாத நிபந்தனைகளை விதித்தால், யார்தான் அதை ஏற்றுக் கொள்ள முடியும் ? ஒரு ஜனநாயக நாட்டில், வன்முறையில் ஈடுபடாமல் அமைதியாக ஒரு போராட்டம் நடத்துவதை விட, வேறு எந்த முறை சிறந்த முறையாக இருக்க முடியும் ? இப்படிப்பட்ட போராட்டங்களை நடத்தித் தானே காந்தி சுதந்திரம் பெற்றார் ? காந்தி தனது ஒவ்வொரு போராட்டத்துக்கும் பிரிட்டிஷாரிடம் எழுத்து பூர்வமாக அனுமதி பெற்ற பின்பா நடத்தினார் ? காந்தியின் பெயரை கூறிக் கொள்ளும் இந்த காங்கிரஸ் தலைவர்கள், இந்தப் போராட்டத்தை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க நினைப்பது ஒரு வகையில், காங்கிரஸின் அசல் முகத்தை அடையாளம் காட்டியிருக்கிறது. இது காங்கிரஸை தனிமைப் படுத்துவதற்கு உதவவே செய்யும்.

இந்தியாவையே மாற்றப் போகிறேன் என்று கச்சைக் கட்டிக் கொண்டு கிளம்பிய ராகுல் காந்தியின் கனத்த மவுனம், அவர் எப்படி மாற்றப் போகிறார் என்பதை உணர்த்துவதாகவே உள்ளது.

கொள்கை மாறுபாடுகளை மறந்து, ஒரு நியாயமான நோக்கத்துக்காக, இடது சாரிக் கட்சிகள், தெலுங்கு தேசம், ராஷ்டிரிய ஜனதா தளம், சமாஜ்வாடிக் கட்சி மற்றும் பிஜேபி ஆகிய கட்சிகள் ஒன்றாக ஒரு அணியில் நின்று காங்கிரஸ் கட்சியை நெருக்கடிக்கு ஆளாக்க முயன்றிருப்பது, வரவேற்கத் தக்க விஷயம். மீண்டும் ஒரு நெருக்கடி நிலையை அமலுக்கு கொண்டு வர முனையும் காங்கிரஸ் கட்சியை, ஒழித்துக் கட்டுவதற்கு, நாம் அனைவரும், நம்மால் முடிந்த அனைத்தையும் செய்வோம்.

தமிழினத்தை அழித்த காங்கிரஸ் கட்சியை கருவறுக்கும் பணி, தமிழர்களாகிய நமக்கு கூடுதலாகவே இருக்கிறது.


Tuesday, August 16, 2011

அவசியம் பார்க்க வேண்டிய சில புகைப்படங்கள் …..

அவசியம் பார்க்க வேண்டிய சில புகைப்படங்கள் …..

இந்தப் படங்களை கொஞ்சம் பாருங்கள் ……

இது இந்தியா தான் …

இவர்கள் நம் மக்கள் தான் ….

ஆனால் அவர்கள் கதியைப் பாருங்கள்.
சேற்றில் உழலும் பன்றி கூட வசிக்கத்
தயங்கும் இடங்களில் குடி இருக்கிறார்கள்.

….

இப்போது இந்தப் படங்களையும் பாருங்கள் -
புருஷன், பெண்டாட்டி, 3 பிள்ளைகள்
அடங்கிய – ஆக மொத்தம் 5 பேர் மட்டும்
கொண்ட ஒரு குடும்பத்திற்காக கட்டப்பட்டுள்ள
மாளிகை – 27 அடுக்கு மாடி வசந்த மாளிகை !

இதை எல்லாம் உள்ளே போய் பார்ப்பதற்கு
நமக்கு எல்லாம் சந்தர்ப்பம் கிடைக்காது.எனவே
புகைப்படத்திலாவது பார்ப்போம் !!

வெளித்தோற்றம்

வெளி வராந்தா

இது பால் ரூம் …. !

இது பாத் ரூம்

இது டிரெடிஷனல் லவுஞ்ச் !

இது மாடர்ன் லவுஞ்ச்

இது ஹோம் தியேட்டர் !

(வீட்டுக்குள்ளேயே திரை அரங்கம் )

இது ஹெல்த் ப்ளேஸ் - நீச்சல் குளம், ஜிம் வகையறா

இது வாகனங்களை நிறுத்தும் இடம் …

எங்கே என்று கேட்கிறீர்களா ? 1 முதல் 6 மாடி வரை !

இது தான் கடைசி (மொட்டை) – 27 வது மாடி ..!!!!!!!!

மீண்டும் ஒரு முறை முழுசாக ஆசை தீர – பார்க்க …

இந்த மாளிகை யாருடையது என்கிறீர்களா ?

உங்களுக்கே ஓரளவு தெரிநதிருக்கும்


http://vimarisanam.wordpress.com/2011/08/12/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF/

நிறைய இருக்கிறது சொல்ல -

- மீண்டும் சந்திப்போம் ……