Tuesday, April 14, 2015

குழந்தை பாலியல் பலாத்காரம்

படவுன், ஏப். 14-

பாலியல் குற்றங்கள் அன்றாட நடைமுறையாகி விட்ட நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தின் படவுன் மாவட்டத்தில், 18 மாதப் பெண் குழந்தை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம், மிருகங்களை விடவும் கொடூரமானவர்களுடன் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ற அச்சத்தை மேலும் அதிகரித்துள்ளது.

படவுன் மாவட்டத்தில் உள்ள சதர் பகுதியில் நேற்றிரவு, 18 மாத குழந்தையை கடத்திச்சென்ற நந்தா என்கிற காமக்கொடூரன், மறைவான இடத்தில் வைத்து  பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். பின்னர் அந்த சிறுமியை வீட்டில் கொண்டு வந்து விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி விட்டான்.

இரவெல்லாம் அந்த பச்சிளம் குழந்தை வலியால் அழுது கொண்டே இருந்தது. சந்தேகமடைந்த பெற்றோர்கள் இன்று காலை மருத்துவர்களிடம் அழைத்துச்சென்றனர். அப்போது மருத்துவர்கள் தெரிவித்த தகவலைக்கேட்டு குழந்தையின் பெற்றோரின் இதயமே நின்று விட்டது. துளியும் மனிதத்தன்மை இல்லாத ஒருவனால் மட்டுமே இப்படி ஒரு காரியத்தை செய்ய முடியும்.

உடனடியாக காவல் துறையில் அவர்கள் புகாரளித்ததையடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. இந்த படுபாதகச் செயலில் ஈடுபட்ட சஞ்சீவ் ஜோஷி (எ) நந்தாவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
http://www.maalaimalar.com/2015/04/14163239/18-month-old-girl-molested.html