Saturday, December 25, 2010

பெந்தகோஸ்தே சர்ச்சில் ஊழல்கள்-கணக்கில்லாத பணம்

18_11_2010_007_003-hosur-7th-day-adventist-fraud.jpg?w=640&h=362

20_11_2010_006_047-church-fight.jpg?w=371&h=567

23_11_2010_161_021-kaappagam.jpg?w=640&h=216

29_11_2010_003_054-sex-hostels1.jpg?w=1024&h=436

பாஜக தலைவர் சின்காவிடம் ராடியா பேச்சு எடுபடவில்லை

காங்கிரஸ் தலைமையில் கடந்த ஆண்டு மந்திரிசபை அமைந்தபோது, இலாகா ஒதுக்கீட்டில் அரசியல் தரகர் நீரா ராடியா தலையிட்டு முக்கிய முடிவுகள் எடுத்தார். அவரது டெலிபோன் உரையாடல் பதிவுகள் மூலம் இது உறுதியானது. இது காங்கிரஸ் தலைவர்களை நெருக்கடிக்குள்ளாக்கி உள்ளது. நீரா ராடியா விவகாரத்தால் காங்கிரசின் இமேஜ் சரிந்துள்ளது. எனவே நீரா ராடியாவுக்கும் பா.ஜ.க. தலைவர்களுக்கும் தொடர்பு இருப்பதாக காங்கிரஸ் தலைவர்கள் சொல்லத் தொடங்கியுள்ளனர்.

பாரதீய ஜனதா ஆட்சியின் போது சிவில் விமான போக்குவரத்து மந்திரியாக இருந்த அனந்தகுமாருக்கும், ராடியாவுக்கும் தொடர்பு இருந்தது. எனவே ஊழலுக்கு எதிராக போராடி வரும் பா.ஜ.க.வினர் அனந்தகுமார் வீட்டு முன்பு போராட்டம் நடத்துவார்களா? என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிசேக் சிங்வி கூறினார்.

ஆனால் நீரா ராடியாவுக்கு பா.ஜ.க. தலைவர்கள் யாரும் சாதகமாக செயல்படவில்லை என்பது தெரிய வந்துள்ளது. நீரா ராடியா சொந்தமாக கிரவுன் ஏர்லைன்ஸ் என்ற விமான நிறுவனத்தை தொடங்க திட்டமிட்டார். ஆனால் பா.ஜ.க. தலைவர்கள் அவருக்கு லைசென்சு கொடுக்கவில்லை.

இதையடுத்து நீரா ராடியா மோடிலுப்ட்ஸ் விமான நிறுவனத்தின் ஆலோசகராக சேர்ந்தார். அப்போது 1998- 99-ம் ஆண்டுக்கு அந்த விமான நிறுவனத்துக்கு ரூ.12 கோடி வரி நிர்ணயிக்கப்பட்டது.

இந்த வரியை மோடி லுப்ட்ஸ் நிறுவனம் செலுத்த வில்லை. இதனால் சுங்க அதிகாரிகள் மோடி லுப்ட்ஸ் விமானத்தை பறிமுதல் செய்தனர்.

இந்த 12 கோடி ரூபாய் வரியை தவிர்க்க செய்ய நீரா ராடியா பல வழிகளில் முயன்றார். அப்போதைய பா.ஜ.க. நிதி மந்திரி யஷ்வந்த் சின்காவை நேரில் சந்தித்து பேசினர்.

ஆனால் நீரா ராடியாவின் பேச்சில், பா.ஜ.க. தலைவர் யஷ்வந்த் சின்கா மயங்கி விடவில்லை. நீராராடியாவுக்கு சாதகமாக செயல்பட மறுத்து விட்டார்.

ரூ.12 கோடி வரியை கட்டியே தீர வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும் இது தொடர்பாக சட்ட அமைச்ச கத்திடம் ஆலோசனை கேட்டார். இதன் மூலம் பா.ஜ.க. மந்திரிகள் தன்னிச் சையாக செயல்படாதது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

http://newindianews.com

Friday, December 24, 2010

புலி வருது ! புலி வருது !



நேற்று இந்தச் செய்தியினைப் படித்து சிரிப்பதா? இல்லை பரிதாபப் படுவதா என நினைத்தேன். இந்தியாவின் உளவுப்படைக் கூறுகிறது. 2008ல் மாபெரும் தோல்விக் கண்டு இன்று இயங்கா நிலையில் இருக்கும் விடுதலைப் புலிகளால் இந்தியாப் பிரதமருக்கும், உள்குத்து அமைச்சர் மன்னிக்கவும் உள்துறை அமைச்சர் பா.சிதம்பரத்துக்கும், ஏழைகளின் தலைவைன் கலைஞருக்கும் உயிருக்கு ஆபத்தாம். இலங்கையில் தோல்விக் கண்ட புலிகள் இந்தியாவில் ஒருங்கிணைந்து மீண்டும் எழப் போகிறார்களாம். அப்படி எழுவதால் மேற்சொன்ன மூவருக்கும் உயிர் ஆபத்தாம். பயங்கரமான தாக்குதல்களை தமிழ்நாட்டில் நடத்தப் போகிறார்களாம். எனக்கு ஒரு சந்தேகம். பெரிய தலைவர்களை இழந்துவிட்டு, ஆயிரக்கணக்கான போராளிகள் கொல்லப்பட்டும், இருபதாயிரம் போராளிகள் சிங்கள அரசினால் கைதுசெய்யப்பட்டு சிறையில் உள்ள நிலையில் ஓரிரு உறுப்பினர்கள் இந்தியாவுக்கு தப்பி மீள் இணையப் போகிறார்கள் என்பது பெரிய புரூடா?

அப்படியே இணைந்தாலும், ஏன் இந்த தலைவர்களைத் தாக்க வேண்டும். அதனால் என்ன லாபம்? ஏற்கனவே எங்கும் ஆதரவு இல்லாத நிலையில் ஒடுங்கிய ஒரு இயக்கம் இப்படி செய்யுமா?

உண்மையில் லாபம் யாருக்கு? இப்படியான புலி வருது கதையால், 75 லட்சம் கோடி ஊழல் செய்த திமுகவும், அவர்களின் கூட்டுக் களவாணியான காங்கிரசும் தங்களது குற்றத்தை தமிழ்நாட்டு மக்களிடம் இருந்த திசைத் திருப்பவும், பரம்பரை காங்கிரஸ் ஆதரவாளர்களும், திமுக ஆதரவாளர்களுமே அவர்களை வெறுத்துவிட்ட நிலையில். அவர்களின் ஓட்டையாவது காப்பாற்றிக் கொள்ள ஒரு ”சப்பை”யான அறிக்கையை வெளியிடுகிறது நமது உளவர்கள். பாகிஸ்தான் தீவிரவாதிகள் நாட்டுக்குள் புகுந்து மும்பையைக் கலக்கும் போது சாயாக் குடிக்க சென்றுவிட்டு இப்போது ஊசிப் போன போண்டாவை நம்ம தலையில் கட்டுகிறது.

இப்போது கலைஞர் பயந்துப் போனது தமிழ்நாட்டு புலியான சீமானுக்குத் தான். எப்படியாவது புலிக் கதைகளைக் கூறி சீமானை ஒதுக்கிவிடத்தான் இந்தக் அறைக்கூவலோ. ஏற்கனவே சீமான் எதிர்கட்சிகளின் பொது வேட்பாளாராக நின்று கலைஞரைத் தோற்கடிப்பேன் என்றுக் கூறியதைக் கேட்டு கிலி கிளம்பி ஏழைகளின் ஊட்டியாம் ஏலகிரி சென்று மண்டைச் சூட்டை தணித்து வந்துள்ளார், ஏழைகளின் தலைவன் திரு. மு.கருணாநிதி அவர்கள்.

முதலில் கூட சீமானின் பேச்சை சாதரணமாக எண்ணினேன், இப்போது தான் புரிகிறது உண்மையில் பயந்து தான் போயிருக்கிறார் ஏழைகளின் தலைவன் எனக் கூறிக்க் கொள்ளும் கலைஞர்.

வரும் தேர்தலில் அதிமுக மற்றும் இதர கட்சிகளின் பொது வேட்பாளராக சீமான் கருணாநிதுக்கு எதிராக இறங்கும் பட்சத்தில் கருணாநிதியின் ஐம்பதாண்டுக் கால அரசியல் வாழ்க்கைக்கு ”பெப்பே”த் தான் போலிருக்கிறது.

http://ww5.pondicherryblog.com/2010/12/%

30 நாட்களில் கூட்டணி முறியும்!

புதன்கிழமை, 22 டிசம்பர் 2010 22:59

சோனியா, யாரும் எதிர்பாராத ஓர் அவதாரத்தை டெல்லி காங்கிரஸ் மகாசபைக் கூட்டத்தில் எடுத்திருக்கிறார். ''காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் மத்தியிலும் சரி, எந்த மாநிலத்திலும் சரி... ஊழல் குற்றச்சாட்டில் சம்பந்தப்பட்டால், அவர்கள் தொடர்ந்து பதவி வகிக்க அனுமதி இல்லை. காங்கிரஸ் கட்சி ஒருபோதும் ஊழலை ஊக்குவிக்காது. அதில் சமரசத்துக்கு இடமே இல்லை. காங்கிரஸ், தொடர்ந்து ஊழலை எதிர்த்துப் போராடும்!'' என்று சோனியா சொல்லச் சொல்ல, பலருக்கும் பைஜாமா வேர்க்க ஆரம்பித்தது.

இந்தப் பேச்சுக்குப் பின்னால் நம்மைச் சந்தித்த காங்கிரஸ் பிரமுகர் ஒருவர், ''ஸ்பெக்ட்ரம் விவகாரம் வெடித்து இருக்கும் நேரத்தில் ஊழலை எதிர்த்து சோனியா பேசுவதைப் பார்த்தால், தி.மு.க-வுக்கு எதிரான பிரசார உத்தியே இதுவாகத்தான் இருக்கும்!'' என்று சொல்லிச் சிரித்தார்.

மிகச் சரியாக, சில நிமிடங்களுக்குள் சோனியாவிடம் இருந்து தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்கு அவசர அழைப்பு வந்தது. ப.சிதம்பரம், ஜி.கே.வாசன், தங்கபாலு, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், கிருஷ்ணசாமி, ஜெயந்தி நடராஜன், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் மேடைக்குப் பின்னால் அழைக்கப்பட்டனர்.

''மேடம்! இந்த முறை நீங்கள் எடுக்கும் முடிவு, சிறந்த முடிவாக இருக்க வேண்டும். இதில்தான் தமிழக காங்கிரஸின் எதிர்காலம் இருக்கிறது. நாம் இந்தத் தேர்தலில் வெற்றி பெறாவிட்டால், தமிழக மக்கள் நம்மைப் புறக்கணித்துவிடுவார்கள். அதற்குத் தகுந்தவாறு முடிவுகளை எடுங்கள்'' என்று சொல்லிய ப.சிதம்பரம், ''இப்போதைய சூழ்நிலையில் இன்றைய கூட்டணி ஆரோக்கியமானதாக இல்லை!'' என்று சொன்னதாகச் சொல்கிறார்கள்.

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், ''2ஜி விவகாரம் மக்கள் மத்தியில் நன்றாகப் பதிந்துவிட்டது. இந்தச் சூழலில் தி.மு.க-வோடு கூட்டணி வந்தால், அது காங்கிரஸுக்கு நல்லது அல்ல!'' என்றாராம். அப்போது சோனியா, ''பொறுத்திருங்கள், இன்னும் ஒரு மாதம்தான்...'' என்று எதையோ மனதில் வைத்துக்கொண்டு சொன்னாராம்.

ஜி.கே.வாசன், தங்கபாலு, பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் அதிகம் பேசவில்லை. கோவை செல்வராஜ் போன்ற சிலர் காரசாரமாகப் பேசினார்களாம். ''2ஜி விவகாரத்தில் தி.மு.க. பதில் சொல்ல வேண்டிய நிலையில் உள்ளது. மக்களும் இந்த விஷயத்தில் தி.மு.க. மீது அதிருப்தியில் உள்ளனர். இந்த சமயத்தில் நாம் அவர்களோடு சேர்ந்து இருந்தால் நம் மீதும் கேள்விகளை எழுப்புவார்கள்'' என்றார்களாம். ''நாமே கர்நாடக முதல்வர் எடியூரப்பாவை வீட்டு மனை ஒதுக்கீட்டில் பதவியை ராஜினாமா செய்யக் கோருகின்றோம். அதே மாதிரியான ஒரு ஊழல் தமிழகத்திலும் நடந்துள்ளது. தமிழக முதல்வரையும் நாம் பதவியில் இருந்து ராஜினாமா செய்யச் சொல்ல வேண்டிய நிலைதான் அங்கே...'' என்று இன்னொருவர் கூறினாராம்.

இந்த ரியாக்ஷன்களை எல்லாம் உற்று நோக்கிய சோனியா இறுதியில், ''உங்களுடைய கருத்துகள் குறித்து யோசிக்கப்படும். மத்தியத் தலைமை எல்லாவற்றையும் கவனித்து வருகிறது. நீங்கள் எதைப்பற்றியும் கவலைப்படாமல், கட்சியைத் தேர்தலுக்குத் தயார்படுத்துங்கள். கட்சியினரைக் களத்துக்குக் கொண்டுவர பாடுபடுங்கள். மற்றவற்றை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்!'' என்று உறுதியாகச் சொன்னாராம்.

இந்தக் கூட்டத்தில் சோனியாவை சந்தித்துவிட்டு வந்தவர்கள் சிலரை சந்தித்தோம். தி.மு.க-வை தினமும் மைக்கில் சாடும் ஒரு பிரமுகர், ''மேடம் அ.தி.மு.க. விஷயத்தில் பாஸிட்டிவ்வாக இருக்காங்க. ஆனா, அவங்க முடிவை இப்ப சொல்ல மாட்டாங்க. நாங்க பிரதமரை வரும் ஜனவரி 3-ம் தேதி விழாவுக்கு அனுப்பக் கூடாது என்று கேட்டுக்கிட்டோம். தங்கபாலு எதுவும் பேசலை. பேசினால், ஆளும் கட்சியினால் பிரச்னை வரும் என்பதால் மௌனமாக இருந்தார்'' என்றார். முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஒருவர் நம்மிடம் சொன்னது இன்னும் அதிர்ச்சியாக இருந்தது. ''தி.மு.க-வுடன் கூட்டணி தொடரக் கூடாது என்று மேடத்திடம் உறுதியாகச் சொல்லிட்டோம். இப்போது நாங்கள் எதிர்பார்ப்பது, தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி வருமா என்பதுதான். ஆ.ராசாவைக் கைது செய்தால், தி.மு.க-வே கூட்டணியில் இருந்து விலகிவிடும். அ.தி.மு.க-வும் காங்கிரஸுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தைக்கு நெருங்கிட்டு இருக்கு. எம்.நடராஜனும் ஓ.பன்னீர்செல்வமும் கடந்த மாதமே அகமது பட்டேலை சந்தித்து கூட்டணி சம்பந்தமாக பேசிட்டாங்க!'' என்று சொல்லி அதிர்ச்சியூட்டினார்.

ஆனால், தி.மு.க. ஆதரவு காங்கிரஸ் பிரமுகரோ, ''இப்போதைக்கு எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இப்போது தி.மு.க. - காங்கிரஸுக்கு என்ன பிரச்னை? இந்த 2ஜி விவகாரத்தைத் தவிர, வேறு எதாவது பிரச்னை இருக்கா? 2ஜி விவகாரத்தில் சட்டத்துக்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்க தி.மு.க-வும் ஓ.கே. சொல்லிவிட்டது. இப்படித் தனிப்பட்ட முறையில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கூட்டணி குறுக்கே இல்லை!'' என்றார்.

ப.சிதம்பரம் கோஷ்டியைச் சேர்ந்த ஒருவர் நம்மிடம் பேசும்போது, ''தி.மு.க., அ.தி.மு.க இல்லாத கூட்டணியை காங்கிரஸ் அமைக்கும் என்றுதான் தெரிகிறது. நடிகர் விஜய் உள்ளே வந்தோ அல்லது வெளியே இருந்தோ, அ.தி.மு.க-வுக்கு ஆதரவு கொடுப்பார். விஜயகாந்த்தும் எங்கள் கூட்டணியுடன்தான் சேருவார். பா.ம.க-வும் எங்கள் கூட்டணிக்கு வரும். இதனால் எங்கள் கூட்டணி கணிசமான இடங்களில் வெற்றி பெறும்!'' என்கிறார்.

''அநேகமாக பொங்கல் முடிந்த பிறகு, காங்கிரஸ் கட்சி தனது புதுப் பாதையைத் தொடங்கியாக வேண்டும் என்று சோனியா நினைக்கிறார். தமிழ்நாட்டுப் பத்திரிகைகளின் அனைத்துச் செய்திகளும் அவருக்கு மொழிபெயர்த்து வைக்கப்பட்டு உள்ளன. 'ஒரு மாதம் பொறுத்திருங்கள்’ என்று 30 நாட்கள் கால அவகாசம் கொடுத்திருப்பது கூட்டணியை முறிக்கத்தான்!'' என்று காங்கிரஸ் உள்விவகாரங்களைக் கவனித்து வருபவர்கள் உறுதியாகச் சொல்கிறார்கள்!

நன்றி ஜுனியர் விகடன்

கருணாவின் அரசியல் கூத்து


















இந்த கூத்தப் பாத்த சிரிப்பை அடக்கமுடியலே!



அடக்கருமமே ஏன்யா இந்த ஆளு இப்படி இருக்காரு?


டிரவுசர் கிழியுற மாதிரி இருக்கு ... அதான் :(

கலைஞர் கருணாநிதிக்கு எப்போதுமே.வெட்கம்,மானம்,சூட்டு சொரணை, லஜ்ஜை,கூச்சக் கருமாந்திரங்கள் கிடையேவே கிடையாது,என்று அவர்களே கூப்பாடு போட்டுச் சொன்னாலும்,மட்டி,மடையர்களாலான எங்களைப் போன்ற சொற்ப சிலர் 'அவருக்கு இதில ஏதாவது ஒன்றாவது இருக்கும் அப்படி இல்லையன்னா அவரு மனுஷனாவே இருக்க முடியாது' என்று விவரம் புரியாமல் தெரியாத்தனமா பேசி வந்தோம்.

கலைஞர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. இன்னிக்குத் தானே எனக்கு எதுவும் கிடையாதப்பான்னு சொல்லிட்டாரு!..வயசுக்கும் அறிவுக்கும், சம்மந்தமில்லைங்கறத கலைஞரப் பாத்து ஜனங்க கத்துக்கணும். இன்னொன்னையும் கத்துக்கலாம்!.. மனிதனோட சுயநலங்கறது எப்பவுமே முடியாததுன்னு,அதுக்காக எந்த வயசிலேயும் மானத்தை இழக்கலாம்ங்கிறதை!.

எப்பவுமே சுணங்கி சுணங்கி வேலை செய்யும் கலைஞர்,எந்த முடிவு எடுக்கவும், (தம் சொந்த பந்தங்களை பதவியில் அமர்த்துவது தவிர) காலத்தை ஒத்திப் போடும் கலைஞர்,இந்த பா.ம.க விஷயத்தில அவர்களின் காலில் இவ்வளவு வேகமா விழுவுறது நமக்கு ஆச்சரியமா இருந்தாலும், கலைஞரோட அரசியலை அன்றாடம் பாத்துட்டு இருக்கறவங்களுக்கு,இதெல்லாம் ஒரு அதிர்ச்சியையும் கொடுக்காது!.கலைஞர் இதவிட ஜெகஜ்ஜால வித்தையை எல்லாம் முன்னெயே காட்டி இருக்காருன்னுதான் நினைச்சிக்குவாங்க!.

ஏன்னா பாஜக வோட ஆட்சியில பங்கு வகிச்சப்போ கலைஞருக்கு ஆட்சி முடிய கடைசி இரண்டு மாசத்துக்கு முன்னே தானே அது மதவாத கட்சின்னு தெரிஞ்சது!.(இதுல முரசொலிமாறன் கருமாதிக்கு அத்வானி வரலேங்கிற அல்பகாரணம் வேற.அன்னிக்கு பிரதமரா இருந்த வாஜ்பாஜ்யே கருமாதிக்கு வந்த போதும்,ப.ஜ.க வை கழட்டிவிட்டு, காங்கிரஸோட சேரக் காரணம் தேடிய லட்சணம் இது!).

இப்ப பா.ம.க.வ ஏன் கழட்டிவிடாங்கன்னு ஜனங்களுக்குத் தெரியும்.ஆனா கலைஞர், மக்களுக்கு உதவுற திட்டங்களுக்கு பா.ம.க. தடையா இருக்குதுன்னு கழட்டிவிட்டமாதிரி பில்டப் கொடுத்தாரு நம்ம கலைஞரு.

அப்படியே வெச்சிக்கிட்டாலும் இப்ப அவங்க மக்களுக்கு உதவுற திட்டங்களுக்கு முன்ன சொன்ன எதிர்ப்புகளைக் கை விட்டுட்டாங்களா?... கலைஞருக்கே வெளிச்சம்!.

செருப்படி வாங்கிக்கிட்டு தியாகத் திலகம் பா.ம.க. கலைஞரோட வீட்டு வாசலில காத்திருக்கப் போகுதா?.அல்லது அடுத்த செருப்படி வாங்க அ.தி.மு.க வாசலுக்குப் போகப் போகுதா?. ஆனா பா.ம.கவுக்கு இந்த ரெண்டு வூட்டத் தவிர எங்க போனாலும்,அடுத்தது காட்டைத்தான் தேடிப் போகோணும்.

வந்த செய்திகள் கீழே!

ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக்கு மீண்டும் பாமக திரும்பினால் கூட்டணி வலுப்பெறும் என முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். இதையடுத்து மீண்டும் திமுக அணிக்கு பாமக திரும்பவுள்ளதாக தெரிகிறது. கடந்த சட்டசபைத் தேர்தலில் திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் இடம் பெற்றிருந்தது பாமக. திமுகவுக்கு பெரும்பான்மை பலம் கிடைக்காததால் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. அப்போது அமைச்சரவையில் பங்கு கேட்க மாட்டோம் என பாமக அறிவித்தது. அதன்படி அமைச்சரவையில் பங்கு கேட்காமல் இருந்து வந்தது.

ஆனால் திமுக ஆட்சி பதவியேற்ற சில மாதங்களிலேயே பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக பாமகவுக்கும், திமுகவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் இரு தரப்பினரும் அறிக்கைப் போர், விமர்சனப் போர்களில் ஈடுபட்டு வந்தனர்.இந்த நிலையில் பாமக பொருளாளரும், வன்னியர் சங்கத் தலைவருமான காடுவெட்டி குரு, முதல்வர் கருணாநிதி உள்ளிட்டோரை மிகக் கடுமையாக தாக்கிப் பேசியது திமுகவை கொதிப்படைய வைத்தது.

இதையடுத்து ஜனநாயக முற்போக்குக் கூட்டணியிலிருந்து பாமகவை நீக்கியது திமுக.இந்த நிலையில், திடீர் திருப்பமாக கம்யூனிஸ்ட் கட்சிகள் திமுகவுடன் முரண்பட்டு போக ஆரம்பித்துள்ளன. திமுக கூட்டணியை விட்டு விலகவும் அவை தீர்மானித்து விட்டன.இதன் காரணமாக ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் மட்டுமே இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.இதற்கிடையே, தமிழகத்தில் புதிதாக 3வது அணியை உருவாக்கப் போவதாக கம்யூனிஸ்ட் கட்சிகள் தெரிவித்துள்ளன. இந்த மூன்றாவது அணியில் பாமக, தேமுதிக உள்ளிட்ட வலுவான கட்சிகள் இடம்பெறும் எனக் கூறப்படுகிறது.இதனால் திமுக தரப்பு கலக்கமடைந்தது.

இந்தப் பின்னணியில், ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு முதல்வர் கருணாநிதி முக்கியத்துவம் வாய்ந்த பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக்கு பாமக திரும்பி வந்தால் கூட்டணி வலுவடையும் என்று அவர் கூறியுள்ளார்.

இதனால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணியிலிருந்து விலகும் சூழ்நிலையில் திமுக கூட்டணியை பலப்படுத்த பாமகவுக்கு முதல்வர் விடுத்துள்ள அழைப்புதான் இது என்று கூறப்படுகிறது. இதுகுறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கூறுகையில், முதல்வரின் கருத்து விடுதலைச் சிறுத்தைகளுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. எமது முயற்சிகளுக்கு ஊக்கம் ஊட்டுகிற வகையில் முதல்வரின் கருத்து வெளிப்பட்டிருக்கிறது.பாமக இதுகுறித்து என்ன கருதுகிறது என்பதை பொறுத்து எங்களது முடிவை அறிவிக்கிறோம். டாக்டர் ராமதாஸையும் சந்திக்க திட்டமிட்டுள்ளேன் என்றார் அவர்.இதன் மூலம் திமுக கூட்டணிக்கு மீண்டும் பாமக திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தமிழக அரசியல் களம் மறுபடியும் சூடு பிடித்துள்ளது.

அடுத்த செய்தி!

"பா.ம.க., இருந்திருந்தால், கூட்டணி இன்னும் வலுவாக இருந்திருக்கும்' என முதல்வர் கருணாநிதி கருத்தை தெரிவித்துள் ளார். "தி.மு.க., தலைமையிலான கூட்டணியில் பா.ம.க., மீண்டும் இடம் பெறுவதால் வலுவாக இருக்கும்' என்ற கருத்தை முதல்வர் கருணாநிதியைச் சந்தித்த பின் மத்திய நிதியமைச்சர் சிதம்பரமும் நேற்று வெளிப்படுத்தியுள்ளார்.

மத்திய நிதியமைச்சர் சிதம்பரம், நேற்று காலை 11 மணியளவில் முதல்வர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்துப் பேசினார். அவருடன் எல் அண்ட் டி நிறுவன தலைவர் நாயக், செயல் தலைவர் ரங்கசாமி, துணைத் தலைவர் சிவராமன் ஆகியோரும் சந்தித்துப் பேசினர். அரை மணி நேரம் இச்சந்திப்பு நடந்தது.

முதல்வரை சந்தித்துப் பேசிய பின் மத்திய அமைச்சர் சிதம்பரம், பா.ம.க., மீண்டும் சேர வாய்ப்பு இருப்பதைப் போன்ற சாதகமான பதிலை தெரிவித்துள்ளது, தமிழக அரசியலில் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் கருணாநிதி நேற்று முன்தினம் அளித்த பேட்டியிலும் பா.ம.க., தொடர்பாக சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்."தி.மு.க., கூட்டணியில் இருந்து பா.ம.க., வெளியேறியது அவர்களாக ஏற்படுத்திய நிர்பந்தம். நாங்களாக அவர்களை வெளியேற்றவில்லை.ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் பா.ம.க., இருந்திருந்தால், கூட்டணி இன்னும் வலுவாக இருந்திருக்கும்' (இது எப்படி இருக்கு?)என அந்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஜூனில், பா.ம.க.,வை வெளியேற்றிய போது தி.மு.க., காட்டிய வேகமும், கோபமும் தற்போது குறைந்துள்ளதையே முதல்வரின் கருத்துக்கள் வெளிப்படுத்துகின்றன. அதற்கேற்ப "நாளையே மீண்டும் பா.ம.க., சேரலாம்' என்று அவர் கூறியிருப்பது, இக்கூட்டணி பிளவு ஏதுமின்றி இருக்க வேண்டும் என்று ஆசைப்படும் கருத்தை வெளிப்படுத்தியிருக்கிறது. தமிழக அரசியல் கூட்டணிக் கட்சிகள் இடையே பெரிய அளவில் திருப்பமும், பரபரப்பும் கொண்டதாக இக்கருத்து அமையும் என்ற சூழ்நிலையை ஏற்படுத்தியிருக்கிறது.

http://thanthii.blogspot.com/search/label/

கலைஞரின் தகிடு தத்தம் - (ஆமாம், தகிடு ததம்ன்னா என்னங்க..?)


1. கலைஞர் அய்யா ஸ்டாலினை மதுரை ஒருவர் கொல்லப் பாய்ந்தார், அதுனால ஸ்டாலின் அவர்களோட பாதுகாப்பு பூனைப்படை, ஆனைப்படையெல்லாம் போட்டீங்க சரி... அப்புறம் அந்த ஒருவரு என்ன ஆனாருங்க!. அவரைக் கண்டு பிடிக்கப் போட்ட போலீஸ் அதிகாரி என்ன ஆனாருங்க?.

2. அதே மதுரையில தினகரன் பத்திரிக்கைய யாரோ அடிச்சி நொறுக்கி தீ வெச்சாங்களே!. அதுலகூட ஒரு மூணு பேரு செத்தாங்களே. அதுக்கப்புறம்... அந்த பத்திரிக்கை ஆபீஸெ ஏன் நொறுக்குனாங்க, ஏன் அந்த மூணு பேரக் கொன்னாங்க அப்படின்னு நம்ம போலீசுகாரங்க கண்டு பிடிக்க ரொம்ப திணறுராங்கன்னு அனுதாபப் பட்டு சிபிஐ இதை விசாரிக்கட்டும்னு சொல்லி சிபிஐ கிட்ட ஒப்படைச்சீங்களே சிபிஐ காரங்க எதாவது கண்டுபிடிச்சி உங்கக்கிட்ட சொன்னாங்களா?

3. ஒகேனக்கல் பிரச்சனையில் முதுகெலும்பை முறிச்சாலும் விடமாட்டோமன்னு சொல்லி சில நடிகர்களோட முதுகையும், சில டைரக்டருங்க முதுகையும் கர்நாடகாப் பக்கம் போக விடாம நீங்க முறிச்சீங்களே!. அதுக்கப்புறம் கர்நாடகாவில எலக்‌ஷன் முடிஞ்சதும் ஒகேனக்கல் திட்டத்தை முடிப்போமுன்னு சொன்னீங்களே கர்நாடகாவில எலக்‌ஷன் முடிஞ்சி ஒரு வருஷம் ஆகப்போகுதே, இன்னும் எலக்‌ஷன் முடிஞ்ச தகவல் இன்னும் உங்களுக்குக் கிடைக்கலையா?

4. ஜனாதிபதி எலக்‌ஷனப்போ திருமதி.பிரதீபா பாட்டிலை நிறுத்த முடிவு செஞ்சப்போ, தமிழனான திரு.அப்துல் கலாமுக்கு ஆதரவு தராம இருக்க, பிரதீப் பாட்டீல் இன்ன இன்ன செய்வார் அப்படின்னு பட்டியல் போட்டீங்க. அதுல பிரதீப் பாட்டீல் ஜனதிபதியா ஆனா “மகளீர் இட ஒதுக்கீடு” மசோதாவிலதான் முதல் கையெழுத்து போடுவாருன்னு சொன்னீங்க. பிரதீப் பாட்டீல் இன்னும் முதல் கையெழுத்து போடலையா?. அதில எதாவது தகவல் உங்களுக்குத் தெரியுமா?

5. உங்க அமைச்சரவையில அமைச்சரா இருந்தாரே தா.கிருட்டிணன். அவரு கொலையில உங்க மகன் உட்பட பல பேர் குற்றவாளிகளா இருந்தாங்க. என்ன நடந்திச்சின்னு தெரியலைங்க. அதில யாருக்கும் சம்பந்தமில்லையன்னு எல்லோரும் விடுதலையாயிட்டாங்க. அப்போ தா.கிருட்டிணன் நடு ரோட்டில அரிவாளாலாலே தன்னைத் தானே வெட்டிக் கிட்டு தற்கொலை செஞ்சிக்கிட்டாராங்க?

5. ஸ்பெக்ட்ரம் ஊழல் பிரச்சனை முடிஞ்சு போன விஷயம் அப்படின்னு நீங்க சொன்னவுடனே பத்திரிக்கைகாரங்களும் நம்பிக்கிட்டு இப்போ அதைப் பத்தியெல்லாம் பேசறதே இல்லை. நிஜமாவே ஸ்பெக்ட்ரம் பிரச்சனை முடிஞ்சு போச்சா?. இவ்வளவு வேகமா பிரச்சனையை தீர்க்கிற நீங்க இலங்கைப் பிரச்சனையும் முடிஞ்சி போச்சு அப்படின்னு சொல்லிட்டா பத்திரிக்கைகாரங்க நம்ப மாட்டாங்களா?. ஏங்க இன்னும் சொல்லாம இருக்கீங்க?

6. அழகிரியும் முரசொலி மாறனுடைய மகன்களும் அடிச்சிக் கிட்டு இருந்தப்போ குடும்ப விஷயத்தைப் பக்கம்பக்கமா பத்திரிக்கையில கவிதையாவும், கட்டுரையாவும் அழுதுகிட்டும் மாறன் கும்பலை திட்டிகிட்டும் எழுதினீங்க, இப்போ அவங்க ரெண்டு பேரும் எந்த விஷயத்தால ஒண்ணு சேந்தாங்கன்னு ஏங்க எழுத மாட்டேங்கிறீங்க?

7. பூங்கோதை அப்படின்னு ஒரு அமைச்சர், வழக்கம் போல அவர் அமைச்சரின் அன்றாட பணியைச் செய்ததால நீக்கினீங்க. அவருடைய செயல் உங்களை மிகவும் அவமானப் படுத்துவதாகவும் சொன்னீங்க. திரும்பவும் உங்க அமைச்சரவையில சேர்த்துக் கிட்டு இருக்கீங்க்களே!. அவர் செஞ்ச செயலால உங்களுக்கு ஏற்பட்ட அவமானம் போயிடுச்சாங்களா?. அந்த அவமானத்தை கழுவ அவர் உபயோகிச்ச “சோப் ”என்னாங்க?

8. தமிழைச் செம்மொழியாக்குவோம் அப்படின்னு அடிக்கடி ஜனங்களை உசுப்பேத்துவீங்களே, இப்போ தமிழ் செம்மொழியாகி ரெண்டு, மூணு வருசமாயிடுச்சீங்களே. அதனால தமிழுக்கு என்ன நன்மை கிடைச்சதுன்னு இன்னிய வரைக்கும் யாருக்கும் தெரியலைங்க?. உங்களுக்கு எதாவது நன்மை கிடைச்சுதாங்களா?

9. முல்லைப் பெரியாறு, பாலாறுன்னு அடிக்கடி பேசுவீங்களே, இப்போ வாயையே நீங்க திறக்கரதில்லையே? ஏங்க!... பாலாற்றில ஆந்திர காங்கிரஸ் அரசு எல்லாத் தடுப்பணையையும் கட்டி முடிச்சப்புறம் தான் பேசுவீங்களா?

10. கடைசியா .. நீங்க சில விஷயத்துக்கு உயிரை கொடுக்கிறேன்னு சொல்லும் போது எனக்கே சிரிப்பாயிடுதுங்க. நீங்க உங்களோட அறிக்கையை எழுதும் போது நீங்க மட்டும் சிரிப்பீங்களா? அல்லது அதை நம்புற தமிழர்களை நினைச்சி உங்க வீடே சிரிப்பாச் சிரிக்குமா?

http://thanthii.blogspot.com/2009/03/blog-post_22.html

கிறிஸ்துவர்களுக்கு ஜெருசலேம் யாத்திரை நிதி - ஜெயலலிதா ஓட்டு பிச்சை


சென்னை: மதமாற்றத் தடைச் சட்டத்தைக் கொண்டு வந்த ஜெயலலிதா, பின்னர் கிருஸ்தவர்களின் ஓட்டுக்காக அதைக் கைவிட்டு இந்துக்களுக்குத் துரோகம் இழைத்துவிட்டார் என்று இந்து முன்னணி நிறுவனர் ராம.கோபாலன் கூறினார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிருஸ்துமஸ் விழாவில் கலந்துகொண்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும், முதல்வர் கருணாநிதியும் கிருஸ்தவர்களின் புகழாரத்தில் மயங்கி இந்து தாழ்த்தப்பட்டோர் சலுகையை மதம் மாறிய தாழ்த்தப்பட்டோருக்கும் வழங்குவோம் எனப் பேசியுள்ளனர். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இது இந்து தாழ்த்தப்பட்டோருக்கு இழைக்கப்படும் அநீதி!.

கிருஸ்தவர்கள் எங்கள் மதத்தில் தீண்டாமை, ஜாதிக் கொடுமை இல்லை என்று கூறித்தான் இந்துக்களை மதம் மாற்றுகின்றனர். ஆனால் இந்துக்களின் சமூக நீதிக்காக அளிக்கப்பட்ட தாழ்த்தப்பட்டோர் சலுகை மதம் மாறிய பின்னரும் வேண்டும் என்பது தன்மானத்தோடு, சுயமரியாதையோடு வாழ்கின்ற தாழ்த்தப்பட்ட இந்துக்களை மதமாற்ற நடக்கிற சதி!.

ஜெயலலிதா மதமாற்றத் தடைச் சட்டத்தைக் கொண்டு வந்தார். கிருஸ்தவர்களின் ஓட்டிற்காக அதனைக் கைவிட்டு இந்துக்களுக்குத் துரோகம் இழைத்தார்.

மதமாற்றத் தடைச் சட்டத்தின் அவசியத்திற்கு ஜெயலலிதா என்னென்ன காரணம் சொன்னாரோ அதுவெல்லாம் இன்றும் தொடர்கிறது!. ஆனால் இந்துக்களின் நலன் பற்றி இவர் எதுவும் பேசவில்லை!

முதல்வர் கருணாநிதியோ தற்போதைய அவரது ஆட்சியில், கடந்த 4 ஆண்டுகளில் சிறுபான்மையினருக்குக் கல்வி உதவித் தொகை என்ற பெயரில் அரசு நிதியைக் வாரிக் கொடுத்துள்ளார்.

இந்துக்களுக்குக் குறிப்பாக தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட இந்துக்களுக்கு எந்தச் சலுகையையும் கொடுக்கவில்லை!.

அரசின் உதவியால் நடைபெறும் சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் இந்துக்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படுவதில்லை.

லயோலா கல்லூரி உள்பட முஸ்லீம், கிருஸ்தவர்களின் 21 கல்லூரிகள் பற்றி சென்ற ஆண்டு வெளியான செய்தியில் விரிவுரையாளர் பதவியில்கூட தாழ்த்தப்பட்டோர் ஒருவரும் நியமிக்கப்படவில்லை.

இந்து முன்னணி அரசியல் இயக்கம் அல்ல. ஆனால் இந்துக்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராகப் போர்க் குரல் கொடுத்துப் போராடும் இயக்கம். வரும் தேர்தலில் இந்துக்களுக்கு எதிராகச் செயல்படும் இத்தகைய செயல்பாட்டை, திட்டங்களை மக்களுக்கு விளக்கி இந்து முன்னணி பிரச்சாரத்தில் இறங்கும்.

தாழ்த்தப்பட்ட இந்துக்களின் சலுகையை மதம் மாறிய கிருஸ்தவர்களுக்கு வழங்க இவர்கள் முயற்சித்தால், கிருஸ்தவ நிறுவனங்களில் இந்துக்களுக்கும் பங்குகொடுக்க வேண்டும்; கிருஸ்தவ பள்ளி, கல்லூரிகளில் இந்துக்களுக்கும் இட ஒதுக்கீடும், வெளிநாட்டிலிருந்து வரும் நன்கொடையை எல்லோருக்கும் பிரித்து வழங்கக் கோரியும் இந்துக்கள் சார்பாக இந்து முன்னணி போராட்டத்தில் இறங்கும் என்று எச்சரிக்கிறோம் என்று கூறியுள்ளார்.

http://www.santhai.com/

Wednesday, December 22, 2010

தமிழகத்தின் மகா கோடீஸ்வரர் கலாநிதி மாறன்!

kalanidhi%2B%2520dayanidhi%2520Maran.jpg

பெங்களூர்: ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் சொத்துக்கள் கொண்ட பெரும் கோடீஸ்வரர் பட்டியலில் தமிழகத்தில் முதலிடத்திலும், இந்திய வரிசையில் 18வது இடத்திலும், உலக அளவில் 342வது இடத்திலும் சன் டிவி கலாநிதி மாறன் உள்ளார் என ஃபோர்ப்ஸ் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு பில்லியன் அமெரிக்க டாலருக்கு மேல் சொத்து வைத்துள்ளவர்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் பத்திரிகை கடந்த மாதம் வெளியிட்டது.

ஒரு பில்லியன் டாலர், அதாவது ரூ.4 ஆயிரத்து 700 கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ளவர்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் தயாரித்து வெளியிட்டது.

உலகலவில் சுமார் ஆயிரம் பெயர்கள் கொண்ட இந்த பட்டியலில் 49 இந்தியர்கள் உள்ளனர். சன் டிவி கலாநிதி மாறன், 342வது இடத்தைப் பெற்று பில்லியனர் பட்டியலில் இடம்பெற்ற தமிழ்நாட்டுக்காரர் ஆகியுள்ளார்.

இந்தியாவில் உள்ள இந்த 49 பில்லியனர்களின் சொத்து மதிப்பையும் போர்ப்ஸ் தனித்தனியே கணக்கிட்டு கூறியுள்ளது.

இதன் அடிப்படையில் இந்த 49 இந்திய பெரும் கோடீஸ்வரர்களின் மொத்த சொத்துக்களை சேர்த்து மதிப்பிட்டால் 222.1 பில்லியன் அமெரிக்க டாலர் என கணிக்கப்படுகிறது.

அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 10 லட்சத்து 43 ஆயிரத்து 870 கோடி!

இந்திய அரசாங்கத்தின் 2010-11ம் ஆண்டுக்கான ஒட்டுமொத்த வரி மற்றும் வரியல்லாத வருவாய் மதிப்பீட்டு அளவு ரூ.8 லட்சத்து 94 ஆயிரத்து 769 என பட்ஜெட்டில் வாசிக்கப்பட்டது.

இந்திய அரசாங்கத்தின் வரி வருமானத்தை விட, 49 பணக்காரர்களின் சொத்து மதிப்பும் அதிகம்.

கடந்த 2009ம் ஆண்டு டிசம்பர் மாத நிலவரப்படி இந்தியாவின் ஒட்டுமொத்த கடன் தொகை 251.4 பில்லியன் டாலர்.

இந்திய கோடீஸ்வரர்களின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு, இந்தியாவின் ஒட்டுமொத்த கடன் தொகையில் சுமார் 88.34 சதவீதம்.

அந்த 49 பெருங்கோடீஸ்வரர்கள்...!

உலக பணக்காரர்கள் வரிசையில் நான்காம் இடத்திலும் இந்தியாவில் முதல் இடத்திலும் இருப்பவர் முகேஷ் அம்பானி. சொத்து மதிப்பு 2,900 கோடி டாலர்.

அம்பானிக்கு அடுத்தபடியாக உலக வரிசையில் 5ம் இடத்தை பிடித்து இந்தியாவில் இரண்டாவது பெரிய கோடீஸ்வரராக ஆர்சிலர் மிட்டல் லட்சுமி மிட்டல் (2870 கோடி டாலர்).

இந்தியாவின் 3வது பெரிய பணக்காரர் விப்ரோ அசிம் பிரேம்ஜி (1700 கோடி டாலர்). அம்பானி சகோதரர்களில் ஒருவர் உலக வரிசையில் 4வதும், மற்றொருவர் இந்திய வரிசையில் 4வது இடத்தையும் பிடித்துவிட்டனர்.

1370 கோடி டாலருடன் உலக பட்டியலில் 36வது இடத்தில் உள்ளார் அனில் அம்பானி.

இவர்களைத் தொடர்ந்து எஸ்ஸார் குரூப்ஸ் ஷாஷி அண்ட் ரவி ரூஜா சகோதரர்கள், சாவித்திரி ஜிண்டால், டிஎல்எஃப் குஷால் பால் சிங், ஆதித்யா பிர்லா குழுமத்தின் குமார் பிர்லா, பாரதி ஏர்டெல்லின் சுனில் மிட்டல், வேதாந்தா அணில் அகர்வால் உள்ளனர்.

இந்தியாவில் 11வது இடத்தில் கோத்ரெஜ் குழுமத்தின் ஆதி கோத்ரெஜ்ஜும் அவரைத் தொடர்ந்து, கவுதம் அதானி, சன் பார்மாவின் திலிப் சங்க்வி, எச்சிஎல் ஷிவ் நாடார், ஜிஎம்ஆர் ஜி.எம்.ராவ், ரான்பாக்ஸியின் மால்விந்தர் அண்ட் ஷிவிந்தர் சிங் சகோதரர்கள், கோடக் மஹிந்தரா உதய் கோடக் உள்ளனர்.

தமிழகத்தின் நம்பர் ஒன் பணக்காரர் கலாநிதி மாறன்

தமிழகத்தில் முதலிடத்திலும், இந்திய கோடீஸ்வரர்கள் வரிசையில் 18வது இடத்திலும், உலக அளவில் 342வது இடத்திலும் சன் டிவி கலாநிதி மாறன் உள்ளார்.

44 வயதான கலாநிதி மாறனின் சொத்து 290 பில்லியன் என ஃபோர்ப்ஸ் தெரிவிக்கிறது. அதாவது சுமார் ரூ.13 ஆயிரத்து 630 கோடி.

தமிழ்நாடு அரசின் மொத்த வரி வருவாயில் (ரூ.63,091.74 கோடி) 21.6 சதவீதம் கலாநிதி மாறனின் சொத்து. தமிழக அரசின் கடன் தொகையுடன் ஒப்பிட்டால் (ரூ.74,858 கோடி) 19 சதவீதம்.

மாநிலம் முழுவதும் வீடில்லாதோருக்கு 21 லட்சம் குடியிருப்புகள் கட்டித்தர தமிழக அரசு செலவழிக்கும் தொகையை விட கூடுதலானது கலாநிதியின் இந்த சொத்து மதிப்பு.

சன் நெட்வொர்க்கின் 77 சதவீத பங்குகளை இவர் தன் வசம் வைத்துள்ளார். சன் டிவி நெட்வொர்க்கின் கீழ் 20 டிவி சேனல்கள், 46 எஃப் எம் ரேடியோ நிலையங்களை நடத்தி வருகிறார்.

அதோடு சன் டைரக்ட் டிடிஎச் சேவைகளை மலேசிய பெருங்கோடீஸ்வரர் அனந்த கிருஷ்ணனின் அஸ்ட்ரோ குழுமத்துடன் இணைந்து நடத்தி வருகிறார். இதில் 45 லட்சம் சந்தாதாரர்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் சன் பிக்சர்ஸ் மூலம் மெகா பட்ஜெட் படங்களையும் எடுத்து வருகிறார். இவை அல்லாமல் பல்வேறு தொழிலகங்களில் முதலீடு செய்திருக்கும் கலாநிதி மாறன், அடுத்ததாக விமான போக்குவரத்துத் துறையில் கால் பதிக்க உள்ளார்.

இவருக்கு அடுத்தபடியாக எஸ்ஸெல் குழுமத்தின் சுபாஷ் சந்திரா (ஜீ என்டெர்டெயின்மென்ட்), பென்னட், கோல்மன் அண்ட் கோ நிறுவனத்தின் தலைவர் இந்து ஜெயின், 'லேண்ட்மார்க்' மிக்கி ஜக்தியானி, டோரென்ட் பவர் நிறுவனத்தின் சுதிர் சமீர் மேத்தா சகோதரர்கள் போன்றவர்கள் உள்ளனர்.

பெருகும் பணக்காரர்கள்...

இந்தியாவில் கடந்த பத்தாண்டு காலத்தில் பணக்காரர்கள் எண்ணிக்கை மிக வேகமாக வளர்ந்து வந்திருப்பதாக பெயின் அண்ட் கோ கன்சல்டன்ஸி நிறுவனம் தெரிவிக்கிறது.

அந்நிறுவனம் நடத்திய ஆய்வில், 2000ம் ஆண்டுக்கு பின்னர் இந்தியாவில் பணக்காரரர்கள் எண்ணிக்கை ஆண்டுக்கு 11 சதவீதம் என்ற அளவில் வளர்ந்து வருவது தெரிய வந்துள்ளது.

ஆனால் இந்திய மக்கள்தொகையில் 40 சதவீதம் பேர் தினசரி 50 ரூபாய்க்கும் கீழான வருமானத்தில் வாழ்வதாக மதிப்பிடப்படுகிறது.

பணக்காரர்கள் தாங்கள் சிரமப்பட்டு சேர்த்த பணத்தை மற்றவர்களுக்கு கொடுக்க தயாராக இருப்பதில்லை.

இயற்கை பேரிடர் போன்ற சிக்கலான தருணங்களில் சக மக்களுக்கு உதவுவதில் இந்தியாவில், அரசாங்கங்கள் தான் முன்னணியில் உள்ளன.

இதுபோன்ற சமயங்களில் மத்திய, மாநில அரசுகள் மூலம் 65 சதவீதத்துக்கும் மேல் நிதி திரட்டப்படுகிறது. தொண்டு நிறுவனங்கள் மூலம் எஞ்சிய தொகை திரட்டப்படுகிறது. மிகவும் சொற்ப அளவுக்கே பணக்காரர்கள் மற்றும் கார்ப்பொரேட் நிறுவனங்களின் தனிப்பட்ட பங்களிப்பு இருப்பதாக பெயின் அண்ட் கோ நிறுவனம் தெரிவிக்கிறது.

ஆனால் அமெரிக்காவில் இதுபோன்ற பேரிடர் நிவாரண நிதிகளில் தனி நபர்கள், கார்பொரேட் நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைகள் மூலம் 75 சதவீத நிதி திரட்டப்படுகிறது.

http://www.activeboard.com/forum.spark?aBID=134804&p=3&topicID=35211542


அன்பழகனுக்கு முதல்வர் பதவியை விட்டுத் தருவாரா கருணாநிதி?????

நெல்லை கண்ணன்... முன்னாள் காங்கிரஸ் பொதுச்செயலாளர். இலக்கியமாகட்டும் அரசியலாகட்டும் குடும்ப உறவுகளாகட்டும் மேடையிலேறிப் பேச ஆரம்பித்தால் குற்றால அருவியென ஜிலுஜிலு தமிழ் துள்ளி விழும். நடு நடுவே நகைச்சுவைப் பட்டாசுகள்... காங்கிரஸ்காரரான இவர் சமீபத்தில் முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்தார். அதன்பிறகு, தி.மு.க. கூட்டணிக்கு எதிராக அ.தி.மு.க. மேடைகளில் ஏறி பிரசாரம் செய்யப் போகிறார். இது பலரையும் இவர் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. இவரைச் சந்தித்தபோது, பீரங்கியாய் வெடித்தார்.

"அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்திக்குத் தமிழ்நாட்டில் காங்கிரஸ் என்கிற ஒன்று இருப்பதாகவே தெரியவில்லை. அதனால்தான், அவர் தமிழ்நாடு குறித்து எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும் தி.மு.க தலைவர் கருணாநிதியிடம் ஆலோசனை கேட்கிறார்.

மத்திய அமைச்சராக இருக்கின்ற தமிழகத்தைச் சேர்ந்த ஈ.வி.கே எஸ். இளங்கோவன், ஜி.கே.வாசன், மணி சங்கர் ஐயர் _ இவர்களுக்கெல்லாம் இது குறித்து கொஞ்சம்கூட மானமோ, வெட்கமோ, சூடு சொரணையோ இல்லை. இவர்களுக்கு மந்திரி பதவி மட்டும் இருந்தால் போதும்.

நண்பர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், தந்தை பெரியாரின் பேரன் என்று சொல்லுவார். ஆனால், இவர் பெரியாரின் நேரடி பேரன் இல்லை. பெரியாரின் தம்பி பேரன்தான் இவர். இளங்கோவன் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவரான உடன் தமிழ்நாடு முழுவதும் அவரோடு நான்தான் சுற்றுப்பயணம் செய்தேன். அப்போது சோனியாகாந்தியை கோவைக்கு அழைத்து வந்தோம். கூட்டத்திற்கான அத்தனை செலவையும் முன்னாள் மத்திய அமைச்சர் பிரபு ஏற்றுக் கொண்டார். இளங்கோவனின் செலவுக்கும் அவரே பணம் தந்தார்.

அந்த நிகழ்ச்சி முடிந்து மறுநாளே, தமிழ்நாடு முழுக்க பயணம் செய்த நான், ஒரு சாலை விபத்தில் உயிருக்குப் போராடிய நிலையில் சேலம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டேன். இளங்கோவன் என்னை வந்து பார்க்கவில்லை. ஆனால், பெரியவர் கருணாநிதி உடல் நலம் சரியில்லை என்பதால் அவரைப் போய் பார்த்தார்.

பெரியவர் கருணாநிதியின் தயவு அவருக்குத் தேவையாக இருந்தது. காங்கிரஸில் நாடாளுமன்ற சீட் வாங்குவதற்கும், மத்திய அமைச்சராவதற்கும் அவர் கருணாநிதியை பயன்படுத்திக் கொண்டார். மத்திய அமைச்சரானவுடன், கருணாநிதியை எதிர்க்கிற வீரனாகத் தன்னைக் காட்டிக் கொண்டார். ஆனால், டெல்லி காங்கிரஸ் தலைமை கூப்பிட்டுச் சொன்னவுடன் நேராக கோபாலபுரம் சென்று மன்னிப்பு கேட்டு பல்டியடித்து மத்திய மந்திரி பதவியை காப்பாற்றிக் கொண்டார்.

பெரியார் எதைச் சொன்னாலும் கடைசி வரை அதில் உறுதியாக இருப்பார். ஆனால், தினம் ஒரு கருத்து முடிவெடுக்கும் இவர் எப்படி பெரியாரின் பேரனாக இருக்க முடியும்?

ஜி.கே. வாசன் பெரிய வீட்டுப் பிள்ளை. எந்த உழைப்பும் இல்லாமல் மூப்பனாரின் மகன் என்பதனாலேயே தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராகி, மாநிலங்களவை உறுப்பினராகி, இன்றைக்கு மத்திய அமைச்சராகியிருக்கிறார்.

என்னைப் போல் அனுபவம் கொண்டவர்களும் கட்சியில், மூத்த சேவை செய்தவர்களும், அவரிடம் போய் கை கட்டி நிற்க வேண்டும் என்ற பண்ணையார் மனோபாவம் இன்னும் இவரிடம் இருக்கிறது.

இன்றைக்கு காங்கிரஸ் கட்சியில் வேட்பாளர் தேர்வுக்குப் பணமே வாங்காமல் விண்ணப்பம் இலவசமாக விநியோகிக்கப்படுகிறது. ஏனென்றால், இந்த விண்ணப்பங்கள் எதுவுமே டெல்லியில் செல்லாது என்பது அவர்களுக்குத் தெரியும். தலைவர்களுக்கும், அவர்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கும் உள்ளேயே அந்த இடங்கள் பங்கிடப்பட்டு விடும். இலவச விண்ணப்பம் கொடுத்த ஏழை தொண்டர்கள் அத்தனை பேரும் வழக்கம் போல் ஏமாளிகளாகி தெருவில் திரிவார்கள்.

காங்கிரஸ் வேட்பாளராக ஒரே தகுதி இந்தக் கட்சி மாறி தலைவர்களின் எடுபிடியாக இருக்கவேண்டும். அல்லது கோடீஸ்வரர்களின் மகனாக இருக்க வேண்டும். அதுவும் இல்லையென்றால் டெல்லித் தலைவர்களைக் குளிப்பாட்டுகிற வித்தை தெரிந்திருக்க வேண்டும்.

சோனியாகாந்தி பிரதம மந்திரி பதவியைத் தியாகம் செய்தார் என்று சொல்லுகின்ற இவர்கள் குறைந்த பட்சம் தி.மு.க. போட்டு இருக்கிற பிச்சையான 48 தொகுதிகளிலும் புதிய தொண்டர்களை நிறுத்துவார்களா? கருணாநிதியைவிட மூத்த திராவிட இயக்கத் தலைவர் பேராசிரியர் அன்பழகன் கடைசி காலத்தில் ஒருமுறை முதலமைச்சராகட்டும் என்று, கருணாநிதி முதல்வர் பதவியை விட்டுத் தருவாரா? சோனியா காந்தியின் மகன் ராகுல் காந்தி எம்.பி. பதவியிலேயே இன்னும் பத்து வருடம் பயிற்சி வேண்டும் என்கிறார்கள். ஆனால், கருணாநிதியின் பேரன் தயாநிதியும், ராமதாஸின் மகன் அன்பு மணியும், மூப்பனாரின் மகன் வாசனும் எடுத்தவுடனேயே நேரடியாக மத்திய அமைச்சராகி விட்டார்களே...

கருணாநிதி முரசொலியில் எழுதுகிறார். மலை உச்சியில் ஏறவேண்டுமென்றால் முயன்று, முயன்று, ஏற வேண்டுமாம். அது தொண்டர்களுக்குதான். தயாநிதி ஹெலிகாப்டரில் இமயமலையில் இறங்கிவிட்டார்.

கோபால்சாமி பெற்ற தாயின் சொல்லை தட்டிவிட்டதாக கருணாநிதி குற்றம் சாட்டுகிறார். தாய் என்று பேசுகிற பெரியவர் கருணாநிதியின் கட்சிக்காரர்கள், அன்னை இந்திரா காந்தியை என்னவெல்லாம் பேசியிருக்கிறார்கள் என்று நினைக்கிறபோது என் நெஞ்சம் பதறுகிறது. விதவைக்கு மறு வாழ்வுத் திட்டம் கொண்டு வந்திருக்கிறார் கலைஞர். இந்திராகாந்தி விண்ணப்பித்தால் உதவுகிறோம் என்று பேசியவர்கள்தானே இந்த தி.மு.க.காரர்கள்.

1967_68_ல் நான் சாமான்யன் என்று சொன்ன கருணாநிதி, இன்று சொல்லவில்லையே... ஏன்? ஆசியாவில் 5வது பணக்கார குடும்பம் அவர் குடும்பம். இன்று 18 தொலைக்காட்சிகளின் வருட வருமானம் பல கோடி. எல்லா தொழிலிலும் தங்கள் குடும்பமே வர வேண்டும் என்று கருணாநிதியும் அவருடைய பேரன்களும் நினைக்கிறார்கள். தமிழின் பேராலும், தமிழ் இனத்தின் பேராலும், தமிழ்நாட்டின் நெடுங்காலமாக நடந்து வருகிற ஒரே குடும்பத்தின் கொள்ளையை நல்ல தமிழனாக, தமிழறிஞனாக, நான் எதிர்க்க வேண்டும் என்று முழுமையாக முடிவு எடுத்திருப்பதால் கருணாநிதியை களத்தில் சந்திப்பேன்." தனது தி.மு.க. கூட்டணி எதிர்ப்புப் பிரசாரத்தின் முன்னோட்டம் போல பேசி முடித்தார் நெல்லை கண்ணன்.

_ திருவேங்கிமலை சரவணன்
படம்: ஆர். சண்முகம்

http://www.kumudam.com/kumudam/mainpage.php

தமிழுக்கு பாராட்டு விழா - டெண்டுல்கர் சிறப்பு விருந்தினர்


ஏறக்குறைய அனைத்து தலைப்புகளிலும் கருணாநிதிக்கு பாராட்டு விழா நடத்தி முடித்து விட்டதால் இப்பொழுது கருணாநிதியை எதற்காக பாராட்டுவது என்று “கருணாநிதியை பாராட்டும் துறையின்“ அமைச்சர் ஜெகதரட்சகனும், துணை அமைச்சர் துரை முருகனும் உட்கார்ந்து யோசிக்கின்றனர்.


திடீரென்று அவர்களுக்கு தோன்றிய யோசனை, ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இரட்டை சதம் அடித்த டெண்டுல்கரை பாராட்டிய கருணாநிதிக்கு பாராட்டு விழா நடத்தினால் என்ன என்று யோசனை செய்ததும், அருமையான ஒரு யோசனையாக தோன்ற, உடனடியாக விழா ஏற்பாட்டில் இறங்கினர்.

விழாவுக்கு டெண்டுல்கரை அழைப்பது என்று முடிவெடுக்கப் பட்டது. டெண்டுல்கரை அழைக்கும் பொறுப்பு வி.சி.குகநாதனிடம் ஒப்படைக்கப் பட்டது. ஆஸ்திரேலியாவில் ஒரு நாள் தொடரில் இருந்த டெண்டுல்கர் வர இயலாது என்று தெரிவித்ததும், சிவசேனா கட்சித் தலைவர் பால் தாக்கரேயைத் தொடர்பு கொண்டு, டெண்டுல்கரை விழாவுக்கு அழைத்ததும், டெண்டுல்கர் உடனடியாக ஒப்புக் கொண்டார். இனி விழா காட்சிகள்.

விழாவுக்கு, வழக்கமான ஜால்ரா கம்பேனிகளான ரஜினிகாந்த், கமலஹாசன், ஜெகதரட்சகன், துரைமுருகன், வாலி, வைரமுத்து, ஆகியோர் வருகை தந்திருந்தனர். டெண்டுல்கர் ஒன்றுமே புரியாமல் பேந்த பேந்த விழித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார்.

முதலில் விழாவுக்கு தலைமையேற்று, ஜெகதரட்சகன் பேசினார்.

“திருப்புகழை பாடப்பாட வாய் மணக்கும் என்பார்கள். அது பொய் வாக்கு. என் தலைவனை பாடப் பாட வாய் மட்டுமல்ல, என் உடலே மணக்கிறது.

எங்கோ தெருவில் ஏழையாய் ஒரு இன்ஜினியரிங் காலேஜும், மெடிக்கல் காலேஜும் நடத்திக் கொண்டிருந்த என்னை இன்று மந்திரியாக்கி அழகு பார்தது என் தலைவன் தான்.
இந்தியாவிலே எங்கேயாவது ஒரு இடத்திலாவது முதலமைச்சரின் தொகுதியிலே கிரிக்கெட் ஸ்டேடியம் இருக்கிறதா ?

ஆனால் என் தலைவனின் தொகுதியிலே கிரிக்கெட் ஸ்டேடியம் இருக்கிறது. இருபதுக்கு இருபது கிரிக்கேட் போட்டி நடைபெறும் நாட்களில் என் தலைவன், சட்டமன்றத்துக்கு செல்வதைக் கூட தவிர்த்து விட்டு டிவி முன்னால் உட்கார்ந்திருப்பார் என்பதை எத்தனை பேர் அறிவீர்கள் ?


செம்மொழி மாநாடு நடைபெறும் கொடீசியா அரங்கிலே மாநாட்டு தொடங்கும் முன், அங்கே ஒரு கிரிக்கெட் போட்டியை நடத்தி விட்டுத்தான் மாநாட்டை தொடங்க வேண்டும் என்பதை இன்றைய தினத்திலே என் தலைவனிடம் கோரிக்கையாக வைக்கிறேன். அந்த விழாவிலே மானாட மயிலாட நிகழ்ச்சியில் ஆடும் நாட்டிய நங்கைகளை அரங்கத்திலே கிரிக்கெட் போட்டி நடைபெறும் வேளையில் ஆட அனுமதிக்க வேண்டும் என்பதையும் கேட்டுக் கொள்கிறேன். “


அடுத்து துரை முருகன். “ அப்போல்லாம், இந்தி எதிர்ப்பு போராட்ட காலம். நானு, தலைவரு எல்லாம் இந்தி எதிர்ப்பு போராட்டத்துலே கலந்து கிட்டு சிறையிலே இருந்தப்போவே, சிறைக்குள்ளேயே கிரிக்கெட் விளையாடியிருக்கோம் என்பதை இங்கே சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

கழகத்தில், இளைஞர் அணி, மகளிர் அணி, இலக்கிய அணி, வழக்கறிஞர் அணி போல, கிரிக்கெட் அணியும் ஒன்று உருவாக்க வேண்டும் என்பதை இந்த நேரத்திலே வேண்டுகோளாய் வைக்கிறேன். அந்த கிரிக்கெட் அணிக்கு துணை முதல்வரே தலைமை தாங்க வேண்டும் என்பதையும் வேண்டுகோளாய் வைக்கிறேன்.

தலைவருக்கு கிரிக்கெட் விளையாட்டில் இருந்த ஆர்வத்தின் காரணமாகவே, சட்டசபை கலவரத்தில், பட்ஜெட் புத்தகங்கள் அவர் மீது தூக்கி வீசப்பட்ட போதெல்லாம் அருமையாக கேட்ச் பிடித்து தன் விளையாட்டுத் திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார். கிராமத்துப் பள்ளிக்கூடத்தில் படித்தாலும் தலைவர் கிரிக்கெட் விளையாட்டில் சூரர்.

ஆனால் கான்வென்ட்டில் படித்த சில திமிர் பிடித்தவர்களுக்கு, கிரிக்கெட் என்றால் என்னவென்று தெரியுமா ? டெண்டுல்கர் இரட்டைச் சதம் அடித்தாலும் என் தலைவரைப் போல இரண்டு மனைவிகள் உண்டா அவருக்கு. என் தலைவரின் சாதனைகளுக்கு முன்னால் டெண்டுல்கரின் இரட்டைச் சதம் ஜுஜுபி என்று சொல்லிக் கொள்கிறேன்.“ (இதைக் கேட்டதும் கருணாநிதி விழுந்து விழுந்து சிரிக்கிறார்.)

அடுத்து வாலிபக் கவிஞர் வாலி.


“ கிரிக்கெட்டு கிரிக்கெட்டு
உன் குடும்ப பிரச்சினைய நீ சரிக்கட்டு !

நீ நடந்தாலே ஜல்லிக்கட்டு
தேர்தல்ல நீ நடத்துவ மல்லுக்கட்டு

உன் விழாவுக்கு நான் வந்திருக்கேன் மெனக்கெட்டு..
உன்னைப் பார்த்ததும் என் மனசு ஓடுது தறிக்கெட்டு

அரசியல் உனக்கு ஒரு விளையாட்டு
உனக்காக நான் பாடுறேன் தமிழ்ப்பாட்டு

புடவைக்கு மேச்சிங் ஜாக்கெட்டு
உன்னால நிரம்புது என் பாக்கெட்டு

தேர்தல்ல நீ எடுத்த பல விக்கெட்டு
உன்னை எதுத்தவங்க உடைஞ்ச பக்கெட்டு

கிரிக்கெட்டு கிரிக்கெட்டு
உன் குடும்ப பிரச்சினைய நீ சரிக்கட்டு ! “

அடுத்து வைரக் கவிஞர் வைரமுத்து.


“ டெண்டுல்கருக்கு வாழ்த்து தெரிவித்த சிவப்புச் சூரியனே
உன்னைக் கண்டு ஓடுவான் கைபர் கணவாய் ஆரியனே

நீ டெண்டுல்கருக்கு தெரிவித்தது வாழ்த்து அல்ல… …
நீ தெரிவிக்காதது எதுவுமே வாழ்த்தும் அல்ல

உன் பெயரைச் சொன்னாலே பிட்ச் அதிரும்
ஸ்டெம்பு எகிரும் மைதானம் நடுநடுங்கும்

எல்லோரும் மேட்ச் ஃபிக்சிங்தான் செய்வார்கள்
நீ மைதானத்தில் உள்ளவர்களுக்கு கவர் கொடுத்து
மைதானத்தையே ஃபிக்ஸ் செய்தாய்.

மொத்தத்தில் நீ ஒரு புலிக்குட்டி
உனக்கு முன்னால் டெண்டுல்கள் ஒரு எலிக்குட்டி

அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.


கலைஞர்ஜி இன்னக்கி நீங்க டெண்டுல்கருக்கு வாழ்த்து சொல்லிருக்கீங்க. அதை நான் வரவேற்கிறேன். ஏன்னா நான் உங்களுக்கு வாழ்த்து சொல்றேன். நான் எப்போ வாழ்த்து சொல்வேன், எதுக்கு வாழ்த்து சொல்வேன்னு எனக்கே தெரியாது. ஆனா உங்களுக்கு டெய்லி நூறு வாழ்த்தாவது வரும்.

பாபாஜி கூட இமயமலேல்ல கிரிக்கெட் விளையாடுவார். நான் அடிக்கடி இமயமலேக்கு ஏன் போறேன்னு நெறய பேருக்கு தெரியாது. அங்கே கிரிக்கெட் விளையாடத்தான் நான் போறேன். நான் இமயமலைலே கிரிக்கெட் விளையாடும்போது கூட கலைஞர்ஜி எனக்கு போன் போட்டு கேம் எப்படிப் போகுதுன்னு கேட்பார்.

கலைஞர்ஜிக்கு கிரிக்கெட் மேலே இருக்க ஆர்வத்த பாத்து நான் கூட எந்திரன் படத்துல ரோபோ கிரிக்கெட் விளையாடுற மாதிரி ஒரு சீன் வெக்கலாம்னு யோசிச்சுருக்கேன். கிரிக்கெட் கேமே இந்தியாலேர்ந்து போனதுதான். நம்ம வேதத்துலேயும், உபநிஷத்துக்கள்ளேயும், கிரிக்கெட் பத்தி நெறய செய்தி இருக்கு.

கலைஞர்ஜிக்கு ஆண்டவனோட அருள் இருக்கறதாலத்தான் இன்னைக்கு டெண்டுல்கர பாராட்டிருக்கார்.

அடுத்து கமலஹாசன்.

மதிப்பிற்குரிய கலைஞர் அவர்கள், டெண்டுல்கருக்கு பாராட்டு தெரிவித்ததை பாராட்டுவதற்காக இன்று ஒரு விழா நடந்து கொண்டிருக்கிறது. இந்த விழா ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த விழா. இந்த விழாவை நாங்கள் எங்கள் பேரப்பிள்ளைகளிடம் ஒரு தமிழன் எப்படி இன்னொரு கிரிக்கெட் வீரனை பாராட்டினான் என்று கூறி பெருமை படத் தக்கதொரு நிகழ்வு.


மராட்டிய மண்ணில் பிறந்த ஒரு வீரனை பாராட்டும் பண்பு கலைஞருக்கு இருக்கிறது. அதற்காக நானும் தமிழன் என்ற முறையில் கர்வம் கொள்கிறேன்.

நான் பராசக்தி படம் பார்த்து தமிழ் கற்றுக் கொண்டேன். அந்தப் படத்தில் ஒரு வசனம் வரும். நான் தென்றலைத் தீண்டியதில்லை. தீயைத் தாண்டியிருக்கிறேன் என்று. தாண்டியிருக்கிறேன் என்ற சொல்லாடலை கலைஞர் பயன்படுத்தியதே விரைவாக ரன் எடுக்கையில் க்ரீசை தாண்டுவதைத்தான் என்பது எத்தனை பேருக்கு தெரியும் ?


இந்தத் தமிழனின் பண்பை கண்டு நான் வணங்குகிறேன். கலைஞர் மட்டும் அரசியலுக்கு வராமல் கிரிக்கெட் விளையாடப் போயிருந்தால், 50 ஓவர்கள் மட்டுமல்லாமல், 100 ஓவர்களையும் இவரே விளையாடி 4 சதங்கள் அடித்திருப்பார் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை.

கருணாநிதி ஏற்புரை

என் அருமைத் தம்பி துரை முருகன் அவர்களே, அன்பு இளவல் ஜெகதரட்சகன் அவர்களே, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களே, கலைஞானி கமலஹாசன் அவர்களே, “கிரிக்கெட்டின் கில்லி” டெண்டுல்கர் அவர்களே, என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புக்களே.

இந்த விழா, இவ்வளவு சிறப்பாக நடைபெறும் என்று நான் எதிர்ப்பார்க்கவேயில்லை. நேற்று கூட, அமைச்சரவைக் கூட்டத்தை பாதியிலேயே முடித்து விட்டு, தலைமைச் செயலக கட்டுமானப் பணிகளை பார்த்து விட்டு இந்த விழா நடக்கும் அரங்கை பார்வையிட வந்தேன். அப்பொழுது, நாளை மாலைக்குள் இந்த வேலைகள் முடிவு பெறுமா என்ற அய்யம் எனக்கு இருந்தது.


ஆனால் தம்பி உடையான், படைக்கு அஞ்சான் என்ற வாக்கிற்கேற்ப என் தம்பிகள் இவ்விழாவை சிறப்பாக நடத்தியிருக்கிறார்கள். எனக்கு பாராட்டு விழா என்பதே பிடிக்காது. அந்த நேரத்திலே, வீட்டில் உட்கார்ந்து ”ராணி 6, ராஜா யாரு ? ” அல்லது எனக்கு மிகவும் பிடித்த ”மானாட மயிலாட” பார்க்கலாம் என்று நினைத்திருந்தேன்.

ஆனால், அந்த நிகழ்ச்சிகளில் இருக்கும் அனைத்து நடனங்களும் இந்த நிகழ்ச்சியிலும் நடைபெறும் என்று என் அன்புத் தம்பிகள் அளித்த வாக்கிற்கிணங்கவே இவ்விழாவில் கலந்து கொள்ளச் சம்மதித்தேன்.


எனக்கா இப்படி பாராட்டு ? ஒரு கிரிக்கெட் வீரருக்கு வாழ்த்து தெரிவித்ததற்காக ஒரு பாராட்டு விழாவா என்று சில அறிக்கை வீராங்கனைகள் அறிக்கை வெளியிடக் கூடும். அவ்வாறு அவர்கள் அறிக்கை வெளியிடுவார்களேயானால் அது, நான் தமிழனாக, பிற்பட்ட சமுதாயத்தில் பிறந்தேன் என்பதை சுட்டிக் காட்டுவதற்காகவன்றி வேறு எதற்காக ? ஆனால் அதையெல்லாம் கண்டு துவள மாட்டான் இந்தக் கருணாநிதி.

அறிஞர் அண்ணா எதையும் தாங்கும் இதயம் வேண்டும் (மானங்கெட்டவன், சூடு சுரணை இல்லாதவன் என்பதற்கு வேறு வார்த்தைகள்) என்பதை கற்றுக் கொடுத்திருக்கிறார்.

டெண்டுல்கர் இரட்டைச் சதம் அடித்தவுடன் அவருக்கு நான் வாழ்த்து தெரிவித்தேன். அதைக் கண்ட என் அன்புத் தம்பிகள் துரை முருகனும் ஜெகதரட்சகனும் இதற்கு ஒரு விழா எடுக்க வேண்டும் என்றார்கள். நான் வேண்டாம், மக்கள் பணி இருக்கிறது என்று சொன்ன போதும் மிகவும் வற்புறுத்தினார்கள்.

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் என்ற அய்யன் வள்ளுவனின் வாக்கை ஏற்று இவ்விழாவிலே கலந்து கொள்ள சம்மதித்தேன்.

என் தம்பிகள், இவ்விழாவிற்கு, இந்திய கிரிக்கெட் அணியில் உள்ள அனைத்து வீரர்களையும், அம்பயர்களையும் அழைக்க வேண்டும் என்ற அவாவினை தெரிவித்தனர். அனைவரும் பொறாமைத் தீயில் கனன்று போவார்கள். இந்தத் தமிழனுக்கா இவ்வளவு அங்கீகாரம் என்று சினந்து போவார்கள் என்பதாலேயே தம்பி டெண்டுல்கரை மட்டும் அழைத்தால் போதும் என்று தன்னடக்கத்துடன் தெரிவித்தேன்.

தம்பி விஜய் கில்லி படத்தில் எதிரிகளை துவம்சம் செய்தது போல, தம்பி டெண்டுல்கர், எதிராளிகளின் பந்து வீச்சை துவம்சம் செய்ததாலேயே, அவரை ”கிரிக்கெட் கில்லி” என்று அழைத்தேன்.

அடுத்து, ஹாக்கி விளையாட்டு வீரர்களை பாராட்டலாம் என்று உத்தேசிக்கும் போதே, என் தம்பிகள் அடுத்த விழாவுக்கு தயாராவது எனக்குப் புரிகிறது. என் தம்பிகளின் அன்புக்கு தடை விதிக்க நான் யார் ?

இவ்வாறு கருணாநிதி பேசினார்.

விழா ஹைலைட்.

விழா நாயகன் கருணாநிதிக்கு தங்கத்தாலான பேட்டும், தங்கத்தாலான மூன்று ஸ்டெம்ப்புகளும் வழங்கப் பட்டன.

டெண்டுல்கருக்கு,



சமத்துவபுரத்தில் ஒரு வீட்டு மனையும்,

25 கிலோ 'ஒரு' ரூபாய் அரிசியும்,

இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டியும்,

கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் உறுப்பினர் அட்டையும்


வழங்கப் பட்டது.



பின் குறிப்பு.

கலைஞர் நூறு கோப்புகளில் கையொப்பம் இட்டதை பாராட்டும் விதமாகவும், 100 நாட்கள் தலைமைச் செயலகம் சென்றதை பாராட்டும் விதமாகவும், பிரதமருக்கு ஒரு லட்சம் கடிதம் எழுதியதை பாராட்டும் விதமாகவும், அடுத்தடுத்து விழாக்கள் நடைபெற உள்ளதால், விழா மேடையை பிரிக்க வேண்டாம் என்று உத்தரவிடப் பட்டது.

http://www.savukku.net/index.php?option=com_content&view=article&id=158:2010-11-12-01-23-33&catid=1:2010-07-12-16-58-06&Itemid=2