Sunday, December 19, 2010

தி மு க வின் ஊழல் - ஒரு பார்வை

திராவிடர்கள் தங்களது ஊழல்களை[7] மறைப்பதேன்? இப்படி திராவிடர்கள் ஏன் ஊழலில் ஈடுபட வேண்டும்?

ராஜாவின் நண்பருடைய கம்பெனிகள்[8]:

1. WiExpert Communications,

2. SV Telecom Systems,

3. Digitelco Communications,

4. Spectrus Communications and

5. Technotial Infoways.

இந்த கம்பெனிகள் கொடுத்துள்ள விலாசங்களில் சென்று பார்த்தபோது, அவை வீடுகளாக இருந்தனவாம். அதுமட்டுமல்லாது அவை நவம்பர் 5, 2007 அன்றுதான் பதிவு செய்யப்பட்டதாம்! ஆக, அவசர-அவசரமாக ரிஜிஸ்ட்ரர் ஆஃப் கம்பனியில் பதிவு செய்யப் பட்டு, இந்த ஏலத்தில் பங்கு கொள்ளவே உருவாக்கப் பட்ட கம்பெனிகள் என்று தெரிகிறது. மேலும் கருணாநிதியின் கீழுள்ள, திராவிட அமைச்சர்களுக்கு கோடிகளில் ஊழல் செய்வது, வங்கிகளில் துணையோடு, வங்கிகளையே ஏமாற்றூவது முதலியனவெல்லாம் கைவந்த கலையே எனலாம். இதோ சில உதாரணங்களைப் பார்க்கலாம்:

ரஹ்மான் கானின் ரூ 105 கோடி வங்கி மோசடி: இப்பொழுது, ரஹ்மான் கான் என்ற திமுக அமைச்சரின் ரூ.105 கோடி வங்கி மோசடி பற்றிய செய்திகள் வெளிவருகின்றன. கருணாநிதியே தனக்கு ரூ. 22 கோடி சொத்துதான் உள்ளது எனும்போது, எப்படி அவருடைய நண்பருக்கு கோடிக்கணக்கில் கடன் கொடுத்து ஏமாறுகிறார்கள்.

பெங்களுர் மர்மமும் மர்மமாகவே உள்ளது: முன்பு, சென்னை பல்கலைக் கழக வங்கிப்பணம் ஏதோ பெங்களூரில் இருக்கும் ஒரு கூட்டுறவு வங்கிக்கு உதவ மாற்றப் பட்டது என்று செய்தி வந்துள்ளது. கருணாநிதி குடும்பத்தினர், ஏற்கெனவே அங்கு சொத்துக்களை வாங்கிக் குவித்துள்ளனர். கருணாநிதியும் அடிக்கடி பெங்களூர் சென்றுதான் “ஓய்வெடுக்கிறார்”!

நெப்போலியனும் சொத்துக்களை வாங்கித் தள்ளுகிறாராம்!ஏற்கெனெவே தொழிற்சாலைகள், மென்பொருள் உற்பத்தி என்றிருந்த நெப்போலியன் அமைதியாக அமைச்சராகி விட்டார்! அவரும் அசையும்-அசையாச் சொத்துகளை வாங்குவதாக செய்திகள் வர்த்தக சுற்றுப்புரங்களில் உள்ளன.

சி.பி.ஐ., தாக்கல் செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில்கூறப்பட்டுள்ளதாவது[9]: தொலை தொடர்புத் துறையில் உள்ள சில அதிகாரிகளும், தனி நபர்களும் அல்லது நிறுவனங்களும் ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் விவகாரத்தில் கிரிமினல் சதியில் ஈடுபட்டுள்ளனர். இதன்மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட சில கம்பெனிகளுக்கு குறைவான கட்டணத்தில் தொலை தொடர்புத் துறை அதிகாரிகள் லைசென்ஸ் வழங்கியுள்ளனர். அரசுக்கு 22 ஆயிரம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. அது தனியார் நிறுவனங்களுக்கு லாபமாக அமைந்துள்ளது. இந்த விஷயத்தில் டிராய் விதிமுறைகளுக்கு எதிராக விண்ணப்பதாரர் எண்ணிக்கையில் அளவு நிர்ணயித்துள்ளனர். ஏலம் விடாமல், 2001ல் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தின் அடிப்படையில், “முதலில் வந்தவர்களுக்கு முன்னுரிமை” என்ற அடிப்படையில் லைசென்ஸ் வழங்கியுள்ளனர். இவ்வாறு முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆ.ராசா பதவி விலக தேவையில்லை: பிரதமர் ஒப்புதலுடன் நடந்தது: உண்மையை உரைக்கும் வீரமணி: திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, ’’மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ஆ. ராசா பதவி விலக வேண்டியது அவசியமில்லை[10]. 3ஜி அலைவரிசையில் அரசிற்கு ரூ.36 ஆயிரம் கோடி மட்டுமே வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது அரசிற்கு ரூ.66 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்துள்ளது. மேலும், பிரதமரின்ஒப்புதல் இல்லாமல் எதுவும் நடைபெறமுடியாது. எனவே தவறுகள் நடைபெற்றிருக்க வாய்ப்பில்லை’’ என்று தெரிவித்துள்ளார். அதாவது, பிரதமருக்குத் தெரிந்துதான், அதாவது சோனியா காந்தியின் ஒப்பொதலுடன் தான் இநத விவகாரம் நடந்துள்ளது.

ஆக வீரமணிக்குத் தெரிந்திருப்பது மன்மோஹனுக்குத் தெரியாமல் இருப்பது ஆச்சரியமே: ஊழல் நீதிபதி தினகரன் கர்நாடகத்தில் பதவி கொடுத்தது, வீரமணிக்கு முன்னமே தெரியும். கே. ஜி. பாலகிருஷ்ணன் உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்படுவதும் தெரியும். இப்பொழுது, உறுதியாகச் சொல்கிறார்: “மேலும், பிரதமரின் ஒப்புதல் இல்லாமல் எதுவும்நடைபெறமுடியாது.” ஆக, அவர்களுக்கெல்லாம் தெரிந்திருக்கிறது, பிறகு, மற்றவர்கள் என்ன, கொசுக்கள், புழுக்கள், அவஎர்களையா, இவர்கள் மதிக்கப் போகிறார்கள். சில ஊடகங்கள் வேண்டுமானால், கத்திக் கொண்டேயிருக்கும். பிறகு, எங்கேயாவது, இழுத்துவிட்டால், அடங்கிவிடும். அப்படியொரு போக்கில்தான் காங்கிரஸ் கட்சி இயங்கி வருகிறது.

நாடகமாடும் பெரிய புள்ளிகள்[11]: மவுண்ட் ரோடு மஹாவிஷ்ணு என்று கருணாநிதியால் செல்லமாக அழைக்கப் படும் “தி ஹிந்து”வும் கருணநிதிக்கே ஆதரவாக செயல்பட்டது[12]. என்ன செய்வது, அந்த பிரியா – தயாநிதியின் மனைவியே, ஹிந்து ராமின் மச்சினி-முறையாயிற்றே? பிரியா ரங்கராஜன் சும்மாவா இருந்திருப்பார்? அதுமட்டுமல்லாது, அந்த செய்தியும் இணைத்தளத்திலிருந்தே நீக்கப்பட்டு விட்டது[13]. இப்படி ஒட்டுமொய்த்தமாக, கோடானுகோடி மெகா ஊழலை மறைக்க இந்த ப்நெரிய புள்ளிகள் எல்லாம் செயல்படுகிறார்கள். வெளியிலே “பார்ப்பனீயம்” ஒழிக என்று, இப்படி பார்ப்பன மனைவிகளை வைத்துக் கொண்டு வேடமிடவதும், இவர்களுக்கு வெட்கமாகப் படவில்லை. ஆனால், சமயம் பார்த்த கருணநிதிம் திடீரென்று, ராஜா ஒரு “தலித்” என்பதால்தான், அனைவரும் எதிர்க்கிறார்கள் என்று கேவலமாகக் குற்றஞ்சாட்டினார். பிறகு அந்த பாப்பாத்திகளை விரட்டியடுத்துவிடுவதுதானே? மானங்கெட்ட கருணாநிதியே அந்த சாவியிடம், ஒரு பிராமண பெண்ணைப் பார்க்குமாறு சொன்னதை மக்கள் மறந்து விட்டிருப்பார்கள்[14].

ராஜா ஊழலிலும் அழகான பெண்கள், கோடிகள், இத்யாதி – I &II[15]: நீரா ராடியா என்ற என்.ஆர்.ஐ பெண்மணிக்கும் ராஜாவுக்கும் என்ன தொடர்பு என்று ஆச்சரியமாக இருக்கிறது. மேலும் வேடிக்கை என்னவென்றால், கனிமொழிதான் அந்த பெண்ணை ராஜாவிற்கு அறிமுகப் படுத்தினார் என்பதுதான்! மற்ற விஷயங்களில் ஊடகங்கள் குதிக்கும் அளவில், இதில் அமைதி காப்பதும் மர்மமாகவே உள்ளது. சசி தரூர் – மோடி விவகாரங்களில் பெண்கள் – செக்ஸ் – கோடிக்கணக்கான பணம் இவைத்தான் விவகாரங்களாக இருந்தன. அவ்வாறு இருக்கும் போது, இங்கும் ஒரு பெண், அதே மாதிரி கோடிக் கணாக்கான ஊழலில் சம்பந்தம் கொண்டிதிருக்கின்றாள் என்றால் என்ன அர்த்தம்? அனைத்தையும் அறிந்து கொண்டு சோனியா மைனோவும் அமைதி காப்பது, நிச்சயமாக இது கூட்டுக் கொள்ளை என்று நன்றாகவே தெரிகிறது. முன்னமே நீராவிற்கு ஒரு விமான கம்பெனி ஆரம்பிப்பதற்கு உதவியுள்ளதாக விவரங்கள் உள்ளன. பிறகு அந்த அளவிற்கு, ராஜாவிற்கு என்ன தொடர்பு?

நீரா ராடியா அரசியல் ஏஜென்டா, மந்திரிகளை நியமிக்கும்ஒப்பந்தக்காரரா? கனிமொழி-நீரா ராடியா-ராஜா பேச்சுகள் திராவிட அரசியல் எந்த அளவிற்கு நீசத்தனமாகி விட்டது என்பதைக் காட்டுகிறது[16]. அரசியலில் மந்திரிகள் நியமிக்கப் படும் அளவில் காங்கிரஸ்காரர்களை தன்னுடைய செல்வாக்கில் வைத்திருக்கிறார்கள் என்றால், எப்படி சாத்தியம்? சோனியா மெய்னோ இன்றும் அந்த அளவிற்கு லேசுபட்ட ஆள் இல்லை. பல்வேறு கன்சல்டன்சி ஏஜென்சிகளை நடத்தி வரும் பெண் ஒருவர், அரசு அதிகார மட்டத்தில் தொடர்பு வைத்துக் கொண்டு ஸ்பெக்ட்ரம் 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் புரோக்கராக செயல்பட்டு வந்ததாகவும், அந்த பெண் தொலை தொடர்பு துறை அமைச்சர் ராசாவுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வந்ததாகவும், தொலைபேசி ஒட்டுக்கேட்பு மூலம் இருவரும் அடிக்கடி பேசி வந்ததது தெரிய வந்ததாகவும், இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்ததி வருவதாகவும் செய்தி வெளியானது. இணைதளங்களில் அந்த ஆவணங்கள் வெளிவந்தவுடனே, அரசாங்கம் அவற்றை மறுத்தது. தி ஹிந்து பத்திரிக்கையும் எடுத்துவிட்டது. ஆனால், அந்த வினித் அகர்வால் ஏன் இடம்-மாற்றம் செய்யப் பட்டார் என்று சொல்லவில்லை. சி.பி.ஐ அதிகாரி நீரா ராடியா மற்றும் அவரது கம்பெனி நோயிஸிஸ் இவற்றை விசாரிக்க உத்தரவிட்ட கடிதங்கள், கருணாநிதி, அவரது மனைவியின் ஆடிட்டர், ராடியா முதலியோருக்குள்ள தொடர்புகள் முதலியவற்றை இங்கே காணவும்:

http://www.scribd.com/doc/30674787/CBI-IT-Letters-on-Spectrum-Scam

மக்கள் பணமான – கோடிகளைத் திரும்பப் பெறுவது எப்படி? இப்பணம், இந்திய மக்களின் பணம். கோடானுக்க்கோடி மக்கள், தங்களது வயிற்றைக் கட்டி, வாயைக்கட்டி, செல்லுத்திய பணம். அப்படியிருக்கும்போது, அந்நியர்களோ, இந்த காங்கிரஸ்-திமுகக் கூட்டுக் கொள்ளைக்காரர்களுக்கோ சொந்தமானது கிடையாது. ஆகவேம் அது, மக்களுக்குத் திருப்பிக் கொடுக்கப் படவேண்டியாதாகிறது. எப்படி, ஏமாற்றி பறித்தப் பணம், பறிமுதல் செய்யப் பட்டு, திரும்ப சொந்தக்காரர்களுக்குக் கொடூக்கப் படுகிறதோ, அதுபோல, இப்பணம் இந்த கூட்டுக்கொள்ளைக்காரர்களிடமிருந்து வசூலித்து மக்களுக்குக் கொடுக்கப் படவேண்டும்.

ராஜாவை மந்திரி பதவிலிருந்து நீக்கிவிட்டு வாயை மூடிவிடமுடியாது: ராஜா ராஜினாமா செய்வது அல்லது மன்மோஹன் ராஜாவின் இலாக்காவை மாற்றுவது என்ற நாடகத்தினால், ஊழல் பணம் கோடிகள் திரும்பி வராது. ஆகவே, ராஜாவின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அந்த கோடிகள் பறிக்கப்படவேண்டும். சன்-தொலைகாட்சி முன்னமே தன்னுடைய குழுமம் “பொதுவாகிறது” என்று காட்டிக்கொண்டு, கோடிகளை அள்ளியது[17]. தயாளு அம்மாள் தன்னுடைய 20% பங்குகளை விட்டுத்தருவதாக கருணாநிதியே (Nov 08, 2005) அறிவித்தார்[18]. ஆனால், உண்மையில், தங்களைப் பலப்படுத்திக் கொள்ளவே, நாடகமாடி, கலைஞர் டிவி உருவாக்கப் பட்டது. வெளியில் சண்டைப் போட்டுக்க்கொள்வதுபோலக் காட்டிக் கொண்டு, கோடிகளை பரிமாற்றம் செய்துகொள்ளப்பட்டன. புதிய கம்பெனிகள் உருவாகின, புதிய வருமானங்களும் பெறுகின[19]. டிசம்பர் 2008ல் இந்த கோஷ்டிகள் ஒன்றக சேர்ந்துவிட்டன[20]. டிவி வியாபாரத்தில் எவ்வாறு இக்குடும்பங்கள் வலுவடைகின்றன, அரசியல் ஆதிக்கம் பெறுகின்றன என்று பலர் எடுத்துக் காட்டியுள்ளனர்[21].

வேதபிரகாஷ்

03-06-2010.

http://corruptioninindia.wordpress.com/tag/%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF/

No comments:

Post a Comment