Friday, July 8, 2011

ஊழலில் கருணாநிதி - 2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் கருணாநிதியையும் சேர்க்க வேண்டும்…!!! ஜெயலலிதா

2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் கருணாநிதியையும் சேர்க்க வேண்டும்…!!! ஜெயலலிதா
சென்னை,பிப்.11: 2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் முதல்வர் கருணாநிதி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களையும் சேர்க்க வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

ஊழல் விஷயத்தில் 1969 முதல் இன்று வரை ஒரே மாதிரியான கொள்கையைந்க் கடைபிடித்து வருகிறார் முதல்வர் கருணாநிதி.

அவரது துணைவி தர்மா என்ற ராசாத்தியம்மாள், சென்னை, ராஜா அண்ணாமலைபுரம் முதல் குறுக்குத் தெருவில் கதவு எண் 9-ல் உள்ள வீட்டினை வாங்கியது தொடர்பாக சர்க்காரியா விசாரணை ஆணையம் தகவல்களை வெளியிட்டுள்ளது.

28 குற்றச்சாட்டுகளில் இது போன்ற குழப்பமான புள்ளிவிவரங்களை அலசி ஆராய வேண்டிய நிலைமை நீதிபதி சர்க்காரியாவுக்கு ஏற்பட்டது. இதற்காக அவர் மீது அனுதாபப்படத் தான் முடியும். எனவே, விஞ்ஞானப் பூர்வமாக ஊழல் செய்வதில் வல்லவர் என்று கருணாநிதிக்கு நீதிபதி சர்க்காரியா சான்றிதழ் கொடுத்ததில் ஆச்சரியம் இல்லை.

2ஜி அலைக்கற்றை ஊழல் விசாரணையிலும் இதே போன்ற விஞ்ஞானப் பூர்வமான ஊழல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. மும்பை கட்டுமானத் துறையைச் சேர்ந்த “டைனமிக்ஸ் பால்வா’ என்ற நிறுவனத்தால் புதிதாக தொடங்கப்பட்ட “ஸ்வான்’ டெலிகாம் நிறுவனத்துக்குகு, அரிதான 2ஜி அலைக்கற்றையை அடிமாட்டு

விலையான ரூ.1,537 கோடிக்கு முன்னாள் தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ராசா அளித்துள்ளார். அதன் பிறகு, டைனமிக்ஸ் பால்வா நிறுவனம் தனது 45 சதவீத பங்குகளை யு.ஏ.இ. நாட்டைச் சேர்ந்த “எடிசலாட்’ நிறுவனத்துக்கு ரூ.4,200 கோடிக்கு விற்றது. இந்த அளவுக்கு லாபம் பெற உதவி புரிந்ததற்காக, ராசாவின் குருவான கருணாநிதிக்கு டைனமிக்ஸ் பால்வா அதிபர் பால்வா லஞ்சம் கொடுத்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இந்தப் பணம் நேரடியாகக் கொடுக்கப்படவில்லையாம். வருமான வரித் துறையினரின் கண்களிலிருந்து தப்புவதற்காக, தன்னுடைய கட்டுப்பாட்டில் வரும் 11 நிறுவனங்களிலிருந்து ரூ.25 லட்சம் முதல் ரூ.100 கோடி வரை மொத்தம் ரூ.209.25 கோடியை ஆசிப் பால்வா மற்றும் ராஜிவ் அகர்வால் ஆகியோருக்கு சொந்தமான “குசேகான் ஃப்ரூட்ஸ், வெஜிடெபிள்ஸ்’ என்ற நிறுவனத்துக்கு பால்வா மாற்றியிருக்கிறாராம்.

குசேகான் நிறுவனம் இதிலிருந்து ரூ.206.25 கோடியை பால்வாஸ் மற்றும் மொரானிக்கு சொந்தமான சினியுக் ஃபிலிம்ஸ் என்ற நிறுவனத்திற்கு கொடுத்துள்ளதாம்.

இந்த சினியுக் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் 2009-2010-ம் ஆண்டின் இருப்புநிலைக் குறிப்பை பார்க்கும்போது, கருணாநிதியின் மனைவி தயாளு, மகள் கனிமொழி ஆகியோர் 80 சதவீத பங்குகளைப் பெற்றுள்ள கலைஞர் டி.வி.க்கு, உத்தரவாதமற்ற கடனாக ரூ. 206 கோடி கொடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளதாம்.

முதல்வர் கருணாநிதி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் சிலரும் 2ஜி அலைக்கற்றை ஊழலில் குற்றவாளிகளாகச் சேர்க்கப்படுவதற்கு தகுதியானவர்களே. இதைச் செய்தால் மட்டுமே அனைத்து உண்மைகளும் வெளிவரும். அப்போதுதான் நீதி நிலைநாட்டப்படும்’ என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

ஊழலில் ஒரே மாதிரியான கொள்கையை கடைப்பிடிக்கிறார் கருணாநிதி…???
சென்னை, பிப்.11: விஞ்ஞானப் பூர்வமான ஊழல் என்று வரும்போது 1969-ம் ஆண்டு முதல்வராகப் பதவி ஏற்றதில் இருந்து இன்று வரை ஒரு மாதிரியான கொள்கையை முதல்வர் கருணாநிதி கடைப்பிடித்து வருவதாக அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

தி.மு.க. அரசின் முதல்வர் கருணாநிதி ஒரு விஷயத்தில் மட்டும் பாராட்டுப் பெற தகுதியுடையவர் ஆகிறார். விஞ்ஞானப் பூர்வமான ஊழல் என்று வருகிற போது, 1969-ஆம் ஆண்டு முதன் முறையாக முதல்வராகப் பதவி ஏற்றதில் இருந்து இன்று வரை, அனைவரும் வியக்கும் வகையில் ஒரே மாதிரியான கொள்கையை கடைபிடித்து வருகிறார் கருணாநிதி. ஒரு சிறிய உதாரணத்தை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ராசாத்தி என்று தற்போது அழைக்கப்படும் கருணாநிதியின் மனைவி, திருமதி தர்மா வாங்கிய வீடு தொடர்பான ஏழாவது குற்றச்சாட்டு குறித்து சர்க்காரியா விசாரணை ஆணைய அறிக்கையின் முதல் தொகுப்பில், பக்கம் 52 மற்றும் 53-லிருந்து ஒரு சில பகுதிகளை குறிப்பிட விரும்புகிறேன்.

கதவு எண். 9, முதல் குறுக்குத் தெரு, ராசா அண்ணாமலைபுரம், சென்னை என்ற முகவரியைக் கொண்ட வீட்டினை திருமதி இ.எல். விஸ்வாசம் என்பவரிடமிருந்து 20.1.1969 அன்று ரூ 57,000 விலை கொடுத்து வாங்கி இருக்கிறார் தர்மா. இந்த வீட்டை 21.8.1970 தேதியிட்ட ஆவண எண் 1523/70 மூலம் தன்னுடைய பாதுகாவலர் டி.கே. கபாலிக்கு விற்றுவிட்டார் தர்மா. இந்த வீட்டை வாங்கிய

டி.கே. கபாலி, விற்பனையாளரான ராசாத்தி என்கிற தர்மாவுக்கு ரூ 14 ஆயிரத்தைத்தான் தன் முன் கொடுத்தார் என்று பதிவாளர் மேற்படி ஆவணத்தில் குறிப்பினை எழுதியுள்ளார். அதே நாளன்று, டி.கே. கபாலியின் பெயரில் பதிவு செய்யப்படாத குத்தகை ஆவணத்தை தயாரித்து இருக்கிறார் தர்மா. இதன்படி, மாதாந்திர வாடகை ரூ. 300 என்கிற அடிப்படையில் அதே வீடு தர்மாவிற்கு வாடகைக்கு விடப்படுகிறது. அதாவது, தான் விற்ற வீட்டிலேயே தர்மா தொடர்ந்து வாடகைக்கு குடியிருந்து வருகிறார். 30.1.1972 அன்று மேற்படி வீட்டை கபாலி, திருமதி சிவபாக்யம் என்பவருக்கு ரூ 45 ஆயிரத்துக்கு விற்றுவிட்டார். அதாவது, ரூ 12,000 நஷ்டத்திற்கு விற்றுவிட்டார். தர்மாவின் தாயார் தான் இந்த சிவபாக்யம்!! இந்த விற்பனைக்கு பதிவு செய்யப்பட்ட ஆவணம் இருக்கிறது. 20.3.1972 அன்று இதே வீட்டை தனது மகள் தர்மா மற்றும் பேத்தி கனிமொழி பெயரில் எழுதி வைத்துவிட்டார் சிவபாக்யம். தனது காலத்திற்குப் பிறகு இந்த வீடு தனது மகளுக்கும், பேத்திக்கும் போய் சேரும் என்று மேற்படி ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

13.3.1973 அன்று தாக்கல் செய்யப்பட்ட தன்னுடைய வருமான வரி அறிக்கையில், இந்த வீட்டை வாங்குவதற்காக கபாலியிடம் இருந்து ரூ 40,000 கடனாகப் பெற்றேன் என்றும், சொந்த சேமிப்பு ரூ 23,000 என்றும், மொத்தம் ரூ 63,000 என்றும் தர்மா குறிப்பிட்டு இருக்கிறார். ஆனால், பதிவு செய்யப்பட்ட ஆவணத்தின்படி, ரூ. 57,000 கொடுத்து தான் வீடு வாங்கப்பட்டு இருக்கிறது. கடனாக பெற்றதற்கு 11.1.1970 தேதியிட்ட பதிவு செய்யப்படாத ஆவணம் ஆதாரமாக காட்டப்பட்டு இருக்கிறது. இந்த ஆவணத்தின்படி,

கடன் வாங்கப்பட்ட பணம், ரூ. 15,000/-, ரூ. 15,000/- மற்றும் ரூ. 10,000/- என்று மூன்று தவணைகளில் திருப்பி செலுத்தப்பட வேண்டும். இவ்வாறு திருப்பி செலுத்தப்படவில்லையெனில், மேற்படி வீடு கபாலிக்கே விற்கப்பட வேண்டும். இது சம்பந்தமான வாக்குறுதி பத்திரம் தயாரிக்கப்பட்டு அதில் 21.8.1970 அன்று தர்மா கையெழுத்து இட்டு இருக்கிறார். பின்னர், அந்த வாக்குறுதி சீட்டில் தர்மாவிடமிருந்து ரூ 40 ஆயிரத்தை பெற்றுக்கொண்டு விட்டேன் என்று எழுதியிருக்கிறார் கபாலி. இந்த வாக்குறுதி சீட்டு 23.3.1976 அன்று வருமான வரித் துறையினரால் கைப்பற்றப்பட்டது.

11.4.1973 அன்று கபாலியால் தாக்கல் செய்யப்பட்ட வருமான வரி அறிக்கையில், தர்மாவிற்கு ரூ 40,000 கொடுப்பதற்காக சிவபாக்கியத்திடமிருந்து ரூ 20,000 கடனாகப் பெற்றேன் என்று குறிப்பிட்டு இருக்கிறார் கபாலி. அதாவது, ராசாத்திக்கு கடன் கொடுப்பதற்காக ராசாத்தியின் தாயாரிடமிருந்து பணம் வாங்கியதாக ராசாத்தியின் பாதுகாவலர் கபாலி குறிப்பிட்டு இருக்கிறார்.!!

நீதிபதி சர்க்காரியா மீது அனுதாபப்படத் தான் முடியும். 28 குற்றச்சாட்டுகளில் இது போன்ற குழப்பமான புள்ளிவிவரங்களை அலசி ஆராய வேண்டிய நிலைமை நீதிபதிக்கு ஏற்பட்டது! எனவே, “விஞ்ஞானப் பூர்வமாக ஊழல் செய்வதில் வல்லவர்” என்று கருணாநிதிக்கு நீதிபதி சர்க்காரியா சான்றிதழ் கொடுத்ததில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

http://www.athirady.info/?p=154199&sess=129b860275e16ad0b113c1c05f78ecab

தலையங்கம்: ஆமாம், விதிவிலக்கல்ல!





எப்போதோ நடந்திருக்க வேண்டியது, காலதாமதமாக இப்போது நடந்திருக்கிறது. மத்தியப் புலனாய்வுத் துறை ஐயம்திரிபற மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறனின் செயல்பாடுகளில் இருந்த தவறை உச்ச நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டிய பிறகுதான் வேறு வழியே இல்லாமல் அவரது பதவி விலகல் கடிதத்தைக் கேட்டுப் பெற்றிருக்கிறார் என்பதிலிருந்தே தனது கடமையைப் பிரதமர் நன்கு செய்யவில்லை என்பது உறுதியாகிறது.

2004 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் அங்கம் வகிக்க திமுக முன்வைத்த நிபந்தனைகளில் முக்கியமானது, தயாநிதி மாறனுக்குத் தகவல் மற்றும் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் பதவி. அந்தப் பேராசைதான் இப்போது அந்தக் குடும்பத்தினர் ஒருவர்பின் ஒருவராக திகார் சிறைச்சாலைக்குள் அடைக்கப்பட வழிகோலியிருக்கிறது.

அப்படி என்னதான் தவறு செய்துவிட்டார் தயாநிதி மாறன்? 2004 முதல் 2007 வரை தயாநிதி மாறன் மத்திய தகவல் மற்றும் தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக இருந்த காலகட்டத்தில்தான் அலைக்கற்றை ஒதுக்கீடு என்பது லாபம் கொழிக்கும் ஒன்றாக மாறத் தொடங்கியது. அதுவரை குறைந்த அளவிலான செல்பேசிகள் இருந்ததுபோய், ரிக்ஷா ஓட்டுநரும், காய்கறி வியாபாரியும், விவசாயியும், கட்டடத் தொழிலாளியும்கூட செல்பேசியும் கையுமாக இந்தியாவை ஒளிரச் செய்யத் தொடங்கிய காலகட்டம் அது.

1994-ல் செல்பேசி சேவையில் ஈடுபடத் தொடங்கிய சிவசங்கரன் என்பவரின் "ஏர்செல்' நிறுவனம் 1999 முதல் சென்னையைத் தவிர, தமிழகத்தின் ஏனைய பகுதிகளின் சேவைக்காக உரிமம் பெற்றது. 2003-ல் சென்னையிலும் சேவையில் ஈடுபட உரிமம் பெற்றதுடன், 2004-ல் விண்ணப்பித்திருந்த இந்தியாவின் 10 வெவ்வேறு பகுதிகளில் 7 பகுதிகளுக்கான உரிமத்தையும் பெற்றது. இதற்குள் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தயாநிதி மாறன் 2004-ல் மத்திய தகவல் மற்றும் தொலைத்தொடர்புத்துறை அமைச்சராகிறார்.

தான் விண்ணப்பித்திருந்த மீதமுள்ள 3 பகுதிகளுக்கு உரிமம் பெற தலைகீழாக நின்றும் சிவசங்கரனின் ஏர்செல் நிறுவனத்துக்கு உரிமம் தராமல் வேண்டுமென்றே தள்ளிப்போடுகிறார் அமைச்சர் தயாநிதி மாறன். ஏர்செல் நிறுவனம் மீதமுள்ள 3 உரிமங்களையும் பெற்றுவிட்டால் தொலைக்காட்சி டிடிஎச் சேவையைத் தொடங்கக்கூடும், அதனால் தங்களது குடும்ப நிறுவனமான சுமங்கலி கேபிள் விஷன் பாதிக்கப்படக்கூடும் என்பதுதான் தயாநிதி மாறனின் தயக்கத்துக்கான பின்னணி.

அரசியல் சட்டத்தின் மீது விருப்பு வெறுப்பில்லாமல், சுயநல மனமாச்சரியங்களுக்கு இடம்கொடுக்காமல் பணியாற்றுவேன் என்று கூறி பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்ட தயாநிதி மாறனின் அடுத்தகட்ட நடவடிக்கை அதைவிட மோசமானது. ஏர்செல் நிறுவனத்துக்கு உரிமம் தராமல் இழுத்தடித்து சிவசங்கரனை உருட்டி மிரட்டி ஏர்செல் நிறுவனத்தின் பங்குகளை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் என்கிற நிறுவனத்துக்கு விற்றுவிடச் செய்திருக்கிறார் அமைச்சர் தயாநிதி மாறன்.

ரூ. 36,000 கோடி விலை மதிப்புள்ள ஏர்செல் நிறுவனத்தின் பங்குகள் வெறும் ரூ. 3,600 கோடிக்கு மேக்சிஸ் நிறுவனத்துக்கும் (74%), அப்போலோ குழுமத்துக்கும் (26%) வலுக்கட்டாயமாகப் பெறப்பட்டன. இந்த விற்பனை முடிந்ததுதான் தாமதம், முறையான கட்டணத்தைப் பெறுவதற்குக்கூட காத்திராமல் ஏர்செல் நிறுவனத்துக்கு மீதமுள்ள 3 உரிமங்களும் வழங்கப்பட்டன. இதன்மூலம், இந்தியாவிலுள்ள 62 கோடி செல்பேசி வாடிக்கையாளர்களின் வியாபாரத்தைப் பெறும் வாய்ப்பை புதிய நிர்வாகத்தின்கீழ் உள்ள ஏர்செல் நிறுவனம் பெற்றது. இதற்குப் பிரதியுபகாரமாக மேக்சிஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஆஸ்ட்ரோ என்கிற நிறுவனம் சன் குழுமத்தின் டிடிஎச் சேவையிலும் எப்எம் சேவையிலும் ரூ. 600 கோடி முதலீடு செய்திருக்கிறது என்பது சிவசங்கரனின் குற்றச்சாட்டு.

அத்துடன் நின்றுவிடவில்லை தயாநிதி மாறனின் முறைகேடுகள். 2006-ல் அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கான கட்டண நிர்ணயம் அமைச்சர்களின் குழுவிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்கிற நிதியமைச்சகத்தின் கருத்தைப் பிடிவாதமாக எதிர்த்து, அது தகவல் மற்றும் தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் என்கிற முறையில் தனது தனிப்பட்ட உரிமையாகத்தான் இருக்க வேண்டும் என்று கேட்டுப் பெற்றிருக்கிறார் தயாநிதி மாறன். ஒருவேளை, அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கான கட்டண நிர்ணயம் அமைச்சர் குழுவால் தீர்மானிக்கப்பட்டிருந்தால் ஒதுக்கீட்டில் முறைகேடுகளுக்கு இடமே இல்லாமல் போயிருக்கும்.

மாறன் சகோதரர்களின் முறைகேடான வியாபார வழிமுறைகள் என்றாவது ஒருநாள் அவர்களைச் சட்டத்தின் பிடியில் சிக்க வைக்கும் என்பது எதிர்பார்த்த ஒன்றுதான். ஆனால், எதிர்பாராத ஒன்றும் நடந்திருக்கிறது. மாறன் சகோதரர்களின் தாத்தாவான முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதியின் விசித்திரமான வியாக்கியானம்தான் அது.

"உலகிலேயே, குறிப்பாக இந்தியாவில் மீடியாக்களின் ஆட்சி நடைபெறுகிறது. அவர்கள் நினைத்தால் யாரையும் இழிவுபடுத்திவிட முடியும். அதற்குத் தயாநிதி மாறன் விதிவிலக்கல்ல' என்று கருத்துத் தெரிவித்திருக்கிறார் கருணாநிதி. ஊடகத்தின் மூலம் தனக்கு வேண்டாதவர்களை இழிவுபடுத்தும் வழிமுறைக்கு வித்திட்டதே கருணாநிதியும் அவர் சார்ந்த இயக்கமும்தானே. காமராஜ், பக்தவத்சலத்தில் தொடங்கி யார் யாரையெல்லாமோ, ஊடகம் கையிலிருக்கிறது என்கிற மமதையிலும் இறுமாப்பிலும் இழிவுபடுத்தி அரசியல் ஆதாயம் தேடியபோது கிடைக்காத ஞானோதயம் இப்போது தனது மகளும், பேரனும் "மெகா' ஊழலில் ஈடுபட்டு சட்டத்தின் பிடியில் சிக்கும்போதுதான் கருணாநிதிக்கு ஏற்பட்டிருக்கிறது!