Saturday, January 15, 2011

ஸ்பெக்ட்ரம் ஊழலே வெட்கப்படக்கூடிய (திமுக அமைச்சர்களின்) மெகா ஊழல்!

(டெஹல்கா இணையத்தில் வெளிவந்த ஆங்கில கட்டுரையின் தமிழாக்கம்)


திராவிட முன்னேற்றக் கழகம் மத்திய அரசில் இரண்டு கூட்டணிகளையும், மூன்று பதவிக்காலங்களையும் ஆக்கிரமித்து நிற்கும் நிலையில் ஸ்பெக்ட்ரம் ஊழல் ஊடகங்களாலும், மக்களாலும் பேசப்படும் நிலையில் மற்றொரு பிரமாண்ட ஊழலை மறைக்க முடிந்திருப்பது ஆச்சரியம்தான். மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர்களாக திமுகவைச் சேர்ந்த டி. ஆர். பாலுவும், ஆ. ராசாவும் பதவி வகித்த காலத்தில் மேற்கொண்ட தவறான கொள்கை முடிவுகளால் இந்தியாவின் சுற்றுச்சூழலுக்கும், இயற்கை வளங்களுக்கும் கணக்கெடுக்கப்படாத மற்றும் சரிசெய்ய முடியாத பேரிழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இருவராலும் செய்யப்பட்ட சுற்றுச்சூழல் மற்றும் மாசுபடுத்தும் குற்றங்கள் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும்.

பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அமைச்சரவையில், டி.ஆர். பாலு கடந்த 1999 அக்டோபர் 13ம் தேதி முதல் 2003 டிசம்பர் 21 வரை சுற்றுச்சூழல் அமைச்சராக பதவி வகித்தார். பாலுவைத் தொடர்ந்து ஆ. ராசா 2004 மே 23 முதல் 2007 மே 17 வரை சுற்றுச்சூழல் அமைச்சராக பதவி வகித்தார். இதற்கிடையிலான 2006 ஜனவரி மாதத்தில் ஆ. ராசாவின் அறிமுகம், பிரபல தொழில் தரகர் நீரா ராடியாவுக்கு கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து நீரா ராடியாவிற்கு நெருக்கமான தொழிலதிபர்களின் பல திட்டங்களுக்கும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதி எளிதாக கிடைத்தது. சுற்றுச்சூழல் அமைச்சகத்தில் நீரா ராடியாவிற்கு இருந்த செல்வாக்கு அனைவரும் அறிந்த ரகசியம்.


ஆ. ராசா சுற்றுச்சூழல் அமைச்சராக பதவி வகித்தபோது அவருக்கும், சுற்றுச்சூழல் அனுமதிக்காக அவரை அணுகிய நிறுவனங்களுக்கும் இடையே ஏற்பட்ட தொடர்புகளே ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கான வேர்களாகும். சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் திட்டமிடுதல் மற்றும் ஒருங்கிணைத்தல் பிரிவின் இயக்குனராக ஆர்.கே.சந்தோலியா இருந்தபோது நீரா ராடியாவிற்கு வேண்டப்பட்டவர்களுக்கு சுற்றுச்சூழல் தடைநீக்கச் சான்றிதழ்கள் அதிவேகத்தில் வழங்கப்பட்டன. (பின்னர் ஆ.ராசா தொலைத்தொடர்பு அமைச்சராக பதவியேற்றபோது அங்கேயும் ராசாவின் உதவியாளராக இருந்த ஆர்.கே. சந்தாலியாவிடம் ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து அமலாக்கப்பிரிவு தற்போது விசாரணை நடத்துகிறது)

சுற்றுச்சூழல் அமைச்சராக ஆ.ராசா இருந்த காலத்தை சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் “இருண்ட காலம்” என்றே சுற்றுச்சூழல் அமைப்புகள் குறிப்பிடுகின்றன. சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் 1986ன் கீழ் “சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு(Environment Impact Assessment)க்கான அறிக்கை” 1994ம் ஆண்டில் வெளியிடப்பட்டன. சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டான 1986 முதல் 2006 வரையிலான 20 ஆண்டுகளில் சுற்றுச்சூழல் அமைச்சகம் 4016 பெரும் தொழில் திட்டங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது.

சுற்றுச்சூழலை பாதிக்கக்கூடிய பெரும் தொழில் திட்டங்கள் விரிவாக்கம் செய்யப்படும்போதும், நவீனப்படுத்தப்படும்போதும் சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் தடையில்லா சான்றிதழ் பெறவேண்டும் என்ற விதி சுற்றுச்சூழல் சட்டங்களில் இருந்தது.


திமுகவைச் சேர்ந்த ஆ.ராசா சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்தபோது 2006ம் ஆண்டில் இந்த விதி திருத்தப்பட்டது. இதன்படி விரிவாக்கம் அல்லது நவீனப்படுத்தப்படும் தொழிற்சாலை மத்திய அரசிடம் தடையில்லா சான்றிதழ் பெறவேண்டிய தேவையில்லை; அதற்கு பதிலாக தங்களுக்கு தாங்களே சான்றளித்துக் கொள்ளலாம்! என சுற்றுச்சூழல் சட்டங்கள் வீரியம் இழக்கச் செய்யப்பட்டன.

2006ம் ஆண்டில் திருத்தம் என்ற பெயரில் வீரியம் இழக்கப்பட்ட புதிய சுற்றுச்சூழல் விதிகளின்படி 2006 – 2008 ஆண்டுகளில் மட்டும் 2016 திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. அதாவது இந்தத் தொழிற்சாலைகளால் சுற்றுச்சூழலிலும், சமூகத்திலும் ஏற்படும் பாதிப்புகளை ஆய்வு செய்து மாதம் ஒன்றுக்கு 80 முதல் 100 தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதாவது சராசரியாக நாளொன்றுக்கு நான்கு அனுமதிகள்! இந்த தொழிற்சாலைகளுக்கு எதன் அடிப்படையில் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்பட்டன என்பது போன்ற எந்த விவரங்களும் சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் இல்லை. இந்த அனைத்து தகவல்களும் கல்ப விருட்சம் என்ற சுற்றுச்சூழல் அமைப்பு 2009ம் ஆண்டு வெளியிட்ட “சுற்றுச்சூழல் அனுமதிக்கான நிபந்தனைகளை கண்காணித்தலும், பின்பற்றுதலும் – மோசடி” என்ற வெளியீட்டில் கூறப்பட்டுள்ளது. ஆ. ராசாவின் பதவிக்காலத்தில் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்பட்ட அனைத்து தொழில் திட்டங்களையும் தற்போது தீவிரமாக மறு பரிசீலனை செய்ய வேண்டும்.

2006ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு விதிகளின்படி சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை (EIA Report) தயாரித்தல், பொதுமக்கள் கருத்தறியும் நிகழ்ச்சி (Public Hearing) ஆகியவற்றுக்கு பின் மதிப்பீட்டு நிபுணர் குழு(Expert Appraisal Committee)விற்கு அந்த அறிக்கைகள் அனுப்பப்படவேண்டும். குறிப்பாக நீர் மூலமான புனல் மின் உற்பத்தி, நிலக்கரி மூலமான அனல் மின் உற்பத்தி, சுரங்கம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்த விதிகள் கண்டிப்பாக கடைபிடிக்கப்பட வேண்டும். 2005ம் ஆண்டில் பல்வேறு மதிப்பீட்டு நிபுணர் குழுக்களிலும் பங்கேற்ற 64 பேரில் மூன்றில் இரண்டு பங்கினர் டெல்லியை அல்லது தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். திமுக அமைச்சரவை பொறுப்பில் இருக்கும் போது சுற்றுச்சூழல் குறித்த நிபுணர்களும்கூட திமுகவிற்கு ஆதரவானவர்களே!

ஆ. ராசாவால் 2007ம் ஆண்டில் நதிப்பள்ளதாக்கு மற்றும் நீர்மின்நிலையம் குறித்த மதிப்பீட்டு நிபுணர் குழுவின் தலைவராக பி. ஆப்ரஹாம் என்பவர் நியமிக்கப்பட்டார். இந்த ஆப்ரஹாம் இதற்கு முன்பு மத்திய அரசின் ஆற்றல்துறை அமைச்சரகத்தில் மத்திய அரசுச் செயலாளராக இருந்தவர். மேலும் நீர்மின்நிலைய திட்டங்களின் ஆதரவாளராகவும் செயல்பட்டவர். எனவே இவரை சுற்றுச்சூழல் மதிப்பீட்டு நிபுணர் குழுவின் தலைவராக நியமனம் செய்ததற்கு சுற்றுச்சூழல் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இறுதியாக இன்றைய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெயராம் ரமேஷ் பதவியேற்றபின் ஆபிரஹாம் தமது பதவியை விட்டு விலகுமாறு நிர்பந்திக்கப்பட்டார். ஆனால் அவர் சுற்றுச்சூழல் மதிப்பீட்டு நிபுணர் குழுவின் தலைவராக இருந்தபோது அனுமதி அளித்த திட்டங்களை மறு விசாரணை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்படவில்லை.

சுற்றுச்சூழல் அமைச்சராக ஆ.ராசா பதவி வகித்த காலம் நாட்டின் சுற்றுச்சூழலில் பேரழிவு ஏற்படுத்தியது என்றால், அவரது முன்னோடியான டி.ஆர். பாலுவின் பதவிக்காலமும் இதற்கு சற்றும் சளைத்ததல்ல. தொழில் நிறுவனங்கள் செய்யும் சுற்றுச்சூழல் குற்றங்களுக்கு அந்த நிறுவனமே பொறுப்பாக்கப்படவேண்டும். ஆனால் டி.ஆர்.பாலு 2003 மார்ச் 13ம் தேதி சர்ச்சைக்குரிய வகையில் “சுற்றுச்சூழல் பாதுகாப்பில் வணிக நிறுவனங்களின் பொறுப்பு குறித்த அரசு அறிவிப்பு” (Government’s Charter on Corporate Responsibility for Environment Protection – CREP) ஒன்றை வெளியிட்டார். அதன்படி சுற்றுச்சூழலை மிக அதிகம் பாதிக்கக்கூடிய சிவப்பு பிரிவில் சேர்க்கப்பட்டிருந்த 64 தொழில்களிலிருந்து 17 தொழில்களுக்கு டி.ஆர்.பாலு விலக்களித்தார். (தொழிற்சாலைகள் சூழலை அதிகம் பாதித்தால் அது சிவப்புப் பிரிவிலும், நடுத்தரமாக பாதித்தால் ஆரஞ்சு பிரிவிலும், குறைந்த அளவு பாதித்தால் பச்சைப் பிரிவிலும் சேர்க்கப்படுகிறது) 2003ம் ஆண்டில் வரவிருந்த தேர்தலுக்கான நிதியை திரட்டுவதற்காக மேற்கண்ட முடிவு எடுக்கப்பட்டதாக பெயர் தெரிவிக்க விரும்பாத சுற்றுச்சூழல் அமைச்சக அதிகாரி ஒருவர் கூறினார்.

“சுற்றுச்சூழல் பாதுகாப்பில் வணிக நிறுவனங்களின் பொறுப்பு குறித்த அரசு அறிவிப்பு” வெளியிடுவதற்கு முன்னதாக 2002 டிசம்பர் 5 முதல் 2003 ஜனவரி 10ம் தேதிக்குள் 17 கூட்டங்கள் நடைபெற்றன. ஒரே நாளில் நான்கு கூட்டங்கள் வரை நடந்துள்ளன. சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு எதிரான இந்த ஆபத்தான அறிவிப்பு தொடர்பான பேரங்கள் 2003 மார்ச் 12ம் தேதி வரை நடந்துள்ளது. இதனை பெயர் குறிப்பிட விரும்பாத மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சுற்றுச்சூழல் விதிமுறைகளை நடைமுறைப்படுத்தல், அதை கண்காணித்தல் குறித்த எந்த விவரமும் இல்லாத இந்த அறிக்கையை வெளியிட்ட டி. ஆர். பாலு, “இந்த அறிக்கையின் அம்சங்கள் அனைத்தும் வணிக நிறுவனங்கள் தாமாகவே முன் வந்து செயல்படுத்த வேண்டியவை. அந்த நிறுவனங்கள் அவ்வாறு செய்யத்தவறினால் அதற்காக அந்த நிறுவனங்களை தண்டிக்க மாட்டோம்” என்று மீடியாக்களிடம் கூறினார்.
இவ்வாறு சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் எந்த பயனுமற்ற ஒரு அறிக்கையை வெளியிட்ட டி.ஆர்.பாலு, வணிக நிறுவனங்களிலிருந்து வெளியாகும் மாசு குறித்து ஆய்வு செய்வதில் அந்த நிறுவன அதிகாரிகளும், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளும் இணைந்து செயல்படுவார்கள் என்று தெரிவித்தார்.

சுற்றுச்சூழலை மிகமோசமாக பாதிக்கக்கூடிய சிவப்பு பிரிவில் இருந்து விலக்களிக்கப்பட்ட 17 தொழில்களும் டி.ஆர். பாலு அறிவித்த “சுற்றுச்சூழல் பாதுகாப்பில் வணிக நிறுவனங்களின் பொறுப்பு குறித்த அரசு அறிவிப்பு” திட்டத்தின் கீழ் வந்தன. இந்த 17 பிரிவுகளில் 2098 தொழிற்சாலைகள் இயங்கின. சுற்றுச்சூழலுக்கு பேராபத்து ஏற்படுத்தக்கூடிய 525 சர்க்கரை ஆலைகள், 397 மருந்து நிறுவனங்கள், 232 சாராய ஆலைகள், 150 தோல் தொழிற்சாலைகள், 150 பூச்சி மருந்து தொழிற்சாலைகள், 126 சிமென்ட் ஆலைகள், 111 ரசாயன உரத்தொழிற்சாலைகள், 100 சாயத் தொழிற்சாலைகள், 96 காகிதம் மற்றும் காகிதக்கூழ் தொழிற்சாலைகள், 83 அனல் மின் நிலையங்கள், 51 பெட்ரோலிய நிறுவனங்கள், 35 காஸ்டிக் சோடா நிறுவனங்கள், 17 எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள், 8 இரும்பு ஆலைகள், 14 அலுமினிய ஆலைகள், 6 தாமிர ஆலைகள், 4 துத்தநாக ஆலைகள் ஆகியவை இந்த திட்டத்தின் கீழ் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிகளிலிருந்து விலக்களிக்கப்பட்டன. இந்த “சுற்றுச்சூழல் பாதுகாப்பில் வணிக நிறுவனங்களின் பொறுப்பு குறித்த அரசு அறிவிப்பு” அனைத்து கழிவுப் பொருட்களையும் எரிஉலைகளில் எரிக்கும் ஆபத்து மிகுந்த ஒரு வழிமுறையை பரிந்துரை செய்தது. கழிவுப்பொருட்கள் எரிஉலைகளில் எரிக்கப்படும்போது மிகுந்த நச்சுத்தன்மை வாய்ந்த டையாக்ஸின் வாயு வெளிப்படும் என்ற ஆபத்தை புறக்கணித்து, எரிஉலைகளை வரியின்றி இறக்குமதி செய்யவும் இந்த அறிவிப்பு வழி வகுத்தது.

இதற்கிடையில் சுமார் 150 பூச்சிக்கொல்லி நிறுவனங்கள் அவற்றின் கழிவுகளை பிரித்தெடுத்து, நச்சுப்பொருட்களை நீக்கும் முறையை கையாள முன்வந்தன. இதுபோல சிமென்ட் தயாரிக்கும் ஆலைகளில் ஒரு பொதுக்கருத்து உருவாகவில்லை. சிமென்ட் ஆலைகள் மிகுந்த அளவில் சுற்றுச்சூழல் சீர்கேட்டை ஏற்படுத்த வல்லவை. ஒரு சிமென்ட் ஆலையால் ஏற்படும் சூழல் பாதிப்புக்கான எல்லை அந்த ஆலையிலிருந்து 3 கிலோ மீட்டரா அல்லது 7 கிலோ மீட்டரா என்ற பிரசினை எழுந்தபோது, சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் சிறப்புச் செயலாளர் விகே துக்கல் என்பவர் தமது தனிச்சிறப்பான கணித அறிவை பயன்படுத்தி அந்த அளவை 5 கிலோ மீட்டர் என்று நிர்ணயம் செய்தார்.

இந்த “சுற்றுச்சூழல் பாதுகாப்பில் வணிக நிறுவனங்களின் பொறுப்பு குறித்த அரசு அறிவிப்பா”ல் தொழில் நிறுவனங்களுக்கு ஏற்பட்ட மற்ற பிரசினைகளையும் களைவதற்கு சுற்றுச்சூழல் அமைச்சகம் ஒரு எளிய வழியை கண்டுபிடித்தது – தொல்லை தரும் அம்சங்களை அந்த அறிவிப்பிலிருந்து நீக்குவதே அந்த எளிய வழி! தோல் தொழிற்சாலைகள் அனைத்தும் டிசம்பர் 2004க்குள் ஐஎஸ்ஓ 14000 தரச்சான்று பெறவேண்டும் என்று அந்த அறிவிப்பில் முதலில் கூறப்பட்டிருந்தது. தோல் தொழில்அதிபர்களின் எதிர்ப்பையடுத்து இந்த அம்சம் பின்னர் நீக்கப்பட்டது. தோல் தொழிற்சாலை கழிவுகளில் இருந்து நச்சுப்பொருளான சல்பரை மறு பயன்பாட்டுக்காக பிரித்தெடுக்க வேண்டும் என்ற நிபந்தனையும் நீக்கப்பட்டது. எனவே நச்சுப்பொருளான சல்பர் கழிவுகளுடன் கலந்து நீர், நிலம், காற்று ஆகிய அனைத்தையும் மாசுபடுத்த சட்டரீதியாக அனுமதி வழங்கப்பட்டது.

சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் இதுபோன்ற செயல்பாடுகளால் குளோரின்-ஆல்கலி தொழில் நிறுவனங்களும் பெரும்பயன் அடைந்தன. இந்த ஆலைகள் அனைத்தும் நச்சுத்தன்மை அதிகம் உள்ள பாதரச செல் தொழில் நுட்பத்தில் இருந்து மெம்ப்ரேன் தொழில்நுட்பத்துக்கு 2005 டிசம்பருக்குள் மாற வேண்டும் என்று அரசு அறிவிப்பு கூறியது. தொழில் நிறுவனங்களின் அழுத்தம் காரணமாக இந்த கெடு தேதி நீக்கப்பட்டது. இந்த கெடு தொடர்ந்திருந்தால் மெம்ப்ரேன் தொழில்நுட்பத்திற்கு அனைவரும் மாறியிருப்பார்கள். இந்த மெம்பரேன் தொழில்நுட்பம் சார்ந்த கருவிகளுக்கான இறக்குமதி வரியில் 10 சதவீதம் தள்ளுபடிகூட வழங்கப்பட்டது.

அரசு அறிவித்த “சுற்றுச்சூழல் பாதுகாப்பில் வணிக நிறுவனங்களின் பொறுப்பு குறித்த அரசு அறிவிப்பு”-இன் படி பாதரசம் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் தொழில் நிறுவனங்களில் தயாரிக்கப்படும் ஒவ்வொரு பொருளுக்கும் 50 கிராமுக்கும் குறைவான பாதரசம் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று வரையறை நிர்ணயிக்கப்பட்டது. மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இது மிக அதிக அளவாகும். நம் நாட்டில் 5 லட்சம் முதல் 6 லட்சம் வரை காஸ்டிக் சோடா தயாரிக்கும்போது சுமார் 25 முதல் 30 டன் பாதரசம் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் இதே அளவு காஸ்டிக் சோடா தயாரிக்கும்போது மேற்கொள்ளப்படும் சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளால் நச்சுப்பொருளான பாதரசம் 9 டன்னைவிட குறைவாகவே பயன்படுத்தப்படுகிறது.

இதேபோல பெட்ரோகெமிக்கல் மற்றும் சுத்திகரிப்பு போன்ற அதிக சுற்றுச்சூழல் சீர்கேட்டை ஏற்படுத்தக்கூடிய தொழில்களும் எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் மிகவும் மென்மையாக நடத்தப்பட்டன. சுற்றுச்சூழலை சீரழிக்கும் தொழில்நிறுவனங்களை ஏன் தண்டிக்கவில்லை என அன்றைய சுற்றுச்சூழல் அமைச்சர் டி.ஆர். பாலுவிடம் கேட்டபோது, “சுற்றுச்சூழல் பாதுகாப்பில் வணிக நிறுவனங்களின் பொறுப்பு குறித்த அரசு அறிவிப்பு, தொழில் நிறுவனங்கள் தாமாகவே முன்வந்து சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதை வலியுறுத்துகிறது. எனவே தொழிற்துறை தாமாகவே தன்னை சீரமைத்துக் கொள்ளும்” என்று குறிப்பிட்டார்.

இந்த “சுற்றுச்சூழல் பாதுகாப்பில் வணிக நிறுவனங்களின் பொறுப்பு குறித்த அரசு அறிவிப்பு”-ஐ தயாரிப்பதில் சுற்றுச்சூழல் அமைப்புகளிடமோ, மற்ற மக்கள் அமைப்புகளிடமோ எந்த வித கருத்தும் கோரப்படவில்லை. இந்த அறிவிப்பை வெளியிடுவதற்காக டெல்லி அசோகா ஹோட்டலில் இரண்டு நாட்கள் நடந்த கருத்தரங்குகூட வணிக நிறுவனங்களின் நிகழ்ச்சியாகவே நடந்தது.

2003ம் ஆண்டில் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்பட்ட 203 திட்டங்களில் சரிபாதிக்கும் குறைவான திட்டங்களுக்கே சுற்றுச்சூழல் அமைச்சகத்தால் சூழல் கண்காணிப்பு அறிக்கைகள் (Monitoring Reports) தயாரிக்கப்பட்டன. 150 திட்டங்களுக்கு மட்டுமே அத்திட்ட நிர்வாகிகளால் சுற்றுச்சூழல் விதிமுறைகளை நடைமுறைப்படுத்துவதற்கான அறிக்கைகள் (Compliance Report) சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

திமுகவைச் சேர்ந்த அமைச்சர்கள் டி.ஆர்.பாலு மற்றும் ஆ.ராசா ஆகியோரின் பதவிக்காலத்தில் சுற்றுச்சூழல் ஆய்வில் மண் அரிப்பு, நிலவளம் குறைதல் போன்ற அம்சங்கள் பரிசீலிக்கப்படாமலேயே புறக்கணிக்கப்பட்டன. இதனால் நாட்டில் உள்ள மொத்த விவசாய நிலப்பரப்பான 328.60 மில்லியன் ஹெக்டேரில் சுமார் 146.82 மில்லியன் ஹெக்டேர் நிலம் சீர்கேடு அடைந்தது. மேலும் இவர்களின் ஆட்சிக்காலத்தில் 4.4 மில்லியன் டன் அளவிற்கு ஆபத்துமிகுந்த கழிவுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. உணவுப் பொருட்கள் நஞ்சாயிற்று. பஞ்சாப் மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில் கருவுற்ற தாயின் வயிற்றிலிருக்கும் குழந்தைக்கு உணவு கொடுக்கும் தொப்பூள் கொடியில் 287 நச்சுத்தன்மை வாய்ந்த ரசாயனப் பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

திமுக அமைச்சர்கள் டி.ஆர்.பாலு மற்றும் ஆ.ராசா ஆகியோரின் பொறுப்பற்ற மற்றும் ஊழல்படிந்த கொள்கை முடிவுகளால் மனிதர்களுக்கு ஏற்பட்ட இழப்புகளை கணக்கிட்டால், ஸ்பெக்ட்ரம் ஊழலால் ஏற்பட்ட பொருளாதார ரீதியான இழப்பு மிகவும் சிறியதாகவே இருக்கும்.

-சாந்தனு குஹா ரே(டெஹல்கா இணையத்தில் வெளிவந்தது)

ஆங்கில மூலம்: http://www.tehelka.com/story_main47.asp?filename=Ws241110ENVIRONMENT.asp

(ஊழல்களின் தன்மையையும், சுமாரான எண்ணிக்கையையும் மட்டுமே கட்டுரை ஆசிரியரால் எழுத முடிந்திருக்கிறது. இந்த ஊழல்களில் கைமாறிய பணம் குறித்தோ, இந்த ஊழல் காரணமாக சுற்றுச்சூழலுக்கும், இந்தியர்களுக்கும் ஏற்பட்டுள்ள இழப்புகள் குறித்தோ கணக்கிடுவதற்கான சூப்பர் கம்ப்யூட்டர்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை – மொழிபெயர்ப்பாளர்)

http://blog.balabharathi.net/?p=799

ஜூனியர் விகடனை மிரட்டிய அழகிரி

ஜூனியர் விகடன் இதழில் அரசல்புரசலாக வெளியான ஒரு செய்தியை முன்வைத்து அப்பத்திரிகை அலுவலகம் முன் சட்டம் - ஒழுங்குக்கு சவால் விடும் வகையில் முற்றுகைப் போராட்டம் நடத்தப்போவதாக சில அமைப்புகள் அறிவித்துள்ளன. பலரும் தொலைபேசியில் அச்சுறுத்தி மிரட்டுகிறார்கள்.

இதையடுத்து, சென்னைப் பத்திரிகையாளர்கள் மன்றத்தில் இன்று பத்திரிகையாளர்களின் அவசரக் கூட்டம் நடைபெற்றது.
இந்த அவசரக் கூட்டத்தில், பல்வேறு பத்திரிகைகளையும், செய்தித் தொலைக்காட்சி சேனல்களையும் சேர்ந்த பத்திரிகையாளர்கள், புகைப்பட பத்திரிகையாளர்கள் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டு ஆலோசனை நடத்தினர்.

தமிழகத்தில் தொடர்ச்சியாக நிலவி வரும் செய்தி ஊடகங்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் குறித்தும், ஜூனியர் விகடன் பத்திரிகையாளர்களுக்கு விடுக்கப்பட்ட மிரட்டல்கள் தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவித்து, ஜூனியர் விகடன் ஆசிரியர் வாசித்த கடிதத்தின் விவரம் வருமாறு:

மதிப்புக்குரிய ஊடக நண்பர்களுக்கு,
வணக்கம்...

ஜூனியர் விகடன் 8.8.2010 தேதியிட்ட இதழில் 'மிஸ்டர் கழுகு' பகுதியில் 'மடக்கப்பட்ட மதுரை திலகம்' என்ற செய்திக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக 10.8.2010 அன்று காலை நாளிதழ் ஒன்றில் தமிழகத்தின் சட்டம் ஒழுங்குக்கு சவால் விடும் வகையில் மிகப்பெரிய போராட்டம் ஒன்றை சென்னையில் உள்ள ஜூனியர் விகடன் பத்திரிக்கை அலுவலகம் முன்பு நடத்தப்போவதாக வெளியான விளம்பரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

குறிப்பிட்ட செய்தியால் பாதிக்கப்பட்டதாக கூறப்படுபவர்களுக்கு ஆதரவாக சட்டம் ஒழுங்கிற்கு இத்தகைய சவாலை ஏற்படுத்தப்போவதாக இவர்கள் கூறியிருப்பது, இந்திய தேசத்தின் அரசமைப்புச் சட்டத்துக்கும், அடிப்படை கருத்துரிமைக்கும் எதிரானது மட்டுமல்ல - பத்திரிகையாளர்கள் அத்தனை பேருக்கும் விடுக்கப்படும் மறைமுக மிரட்டலாகவே அமைந்துள்ளது.

இதற்கிடையே செய்தியை எழுதியவர்கள் இன்னார்தான் என்று தாங்களாகவே முடிவு செய்த சிலர் பத்துக்கும் மேற்பட்ட வகையில் மிரட்டல் போஸ்டர்கள் அடித்து மதுரை நகரமெங்கும் ஒட்டியுள்ளனர். அதில் நிருபர்களின் பெயர்களையும் குறிப்பிட்டு, அவர்களின் பாதுகாப்புக்கு குந்தகம் ஏற்படக் காரணமாகியுள்ளனர்.

தொலைபேசி வாயிலாக முகம் தெரியாத மனிதர்களின் அச்சுறுத்தலும் தொடர்கிறது. இந்நிலையில், தமிழக காவல்துறை இயக்குநர், சென்னை மாநகர கமிஷனர் ஆகியோரிடமும் அச்சுறுத்தல் குறித்து முறைப்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூனியர் விகடன் அலுவலக ஊழியர்களின் பாதுகாப்புக்கும், அலுவலகத்தின் அச்சமற்ற செயல்பாட்டுக்கும், வழியேற்படுத்த வேண்டி தமிழக முதல்வர் மாண்புமிகு டாக்டர் கலைஞர் அவர்களிடம் மனு அளிக்க உள்ளோம்.

தமிழக காவல்துறை இயக்குநர், சென்னை மாநகர கமிஷனர் ஆகியோரிடமும் அச்சுறுத்தல் குறித்து முறைப்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விஷயத்தை தனிப்பட்ட ஒரு பத்திரிகைக்கு ஏற்பட்ட அச்சுறுத்தலாக எண்ணிவிடாமல் ஒட்டு மொத்த ஊடக சுகந்திரத்துக்குமான மிரட்டலாக கருதி ஊடக நண்பர்கள் அனைவரும் ஒன்று திரண்டு கண்டனக்குரல் எழுப்பியிருப்பதை நன்றியோடு வரவேற்கிறோம். குறிப்பிட்ட அந்தச் செய்தி தொடர்பாக சட்டரீதியாக விடுக்கப்படும் சவால்களை சந்திப்பதற்கான ஏற்பாடுகளிலும் முறைப்படி இறங்கியுள்ளோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

ஊடக சுகந்திரத்துக்கும் ஒற்றுமைக்கும் பாதுகாப்புக்கும் குரல் கொடுத்து திரண்ட அத்தனை நண்பர்களுக்கும் ஊடக நிறுவனங்களுக்கும் எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
சென்னைப் பத்திரிகையாளர் மன்றத்தில் கூடிய பத்திரிகையாளர்கள் அவசர கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

1. ஜூனியர் விகடன் இதழில் அரசல்புரசலாக வெளியான ஒரு செய்தியை முன்வைத்து அப்பத்திரிகை அலுவலகம் முன் சட்டம் - ஒழுங்குக்கு சவால் விடும் வகையில் முற்றுகைப் போராட்டம் நடத்தப்போவதாக சில அமைப்புகள் அறிவித்துள்ளன. அப்பத்திரிகையில் பணியாற்றும் ஊழியர்களின் பெயரைக் குறிப்பிட்டு மதுரையில் சுவரொட்டிகள் ஒட்டப்படுகின்றன. பலரும் தொலைபேசியில் அச்சுறுத்தி மிரட்டுகிறார்கள். இந்த ஜனநாயக விரோதச் செயலை இக்கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது.

2. ஜூனியர் விகடன் சார்பில் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு கேட்டு காவல்துறை டி.ஜி.பி. மற்றும் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஆகியோருக்கு தரப்பட்ட மனுவை - சென்னை பத்திரிகையாளர் மன்றம் டி.ஜி.பி.க்கு, மாநகர காவல்துறை ஆணையருக்கு வழங்க வேண்டும்.

3. இன்று காவல்துறையிடம் எழுத்துப்பூர்வமாக புகார் கொடுத்தும் பத்திரிகை அலுவலகத்தில் உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை. இதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

4. தமிழகத்தில் பத்திரிகையாளர்களின் உயிருக்கும் உடைமைக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள சூழ்நிலையை சென்னை உயர் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய பாதுகாப்புக்கு உத்தரவாதம் பெறுவோம்.

5. பத்திரிகையாளர்களின் உயிருக்கும் உடைமைக்கும் பகிங்கரமாக அச்சுறுத்தல் விடுத்த நபர்கள், சங்கங்களின் அமைப்புகள் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முதல்வரை நேரில் சந்தித்து கோரிக்கைகள் வைப்போம்.

6. பத்திரிகைகளை விமர்சித்து மிரட்டி வெளியான விளம்பரத்தை சில பத்திரிகைகள் வெளியிட்டது பத்திரிகையாளர்களுக்கு மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்துகிறது. இது தொடர்பான பத்திரிகை உரிமையாளர்களை சந்தித்து நமது வருத்தத்தை பதிவு செய்வோம்.

7. ஜூனியர் விகடன் சம்பவம் உள்ளிட்ட பத்திரிகையாளர்களுக்கு எதிரான சம்பவங்களை அனைத்துக் கட்சித் தலைவர்கள், பிரஸ் கவுன்சில் மற்றும் அகில இந்திய பத்திரிகையாளார் அமைப்புகளின் கவனத்திற்கு கொண்டு செல்வோம்.

8. பத்திரிகை உரிமையாளர்கள், அனைத்துக் கட்சித் தலைவர்களையும் சந்திப்பது என அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுத்துச் செல்ல ஒரு குழு அமைக்கப்படும்.

9. பத்திரிகையாளர் மீதான பொய் வழக்குகளை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

இவ்வாறு அந்தத் தீர்மானங்களில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தக் கூட்டத்துக்குப் பிறகு, சென்னை பத்திரிகையாளர் மன்ற வளாகத்துக்கு முன்பு கூடிய நூற்றுக்கணக்கான பத்திரிகையாளர்கள், "பத்திரிகை அலுவகத்துக்கு மிரட்டல் விடுத்தவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும், பத்திரிகையாளர்கள் மீதான பொய்ப் புகார்களை திரும்பப் பெற வேண்டும், பத்திரிகையாளர்களுக்கு உரிய பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும்" என்பன உள்ளிட்ட கோஷங்களை எழுப்பி அடையாள ஆர்ப்பாட்டத்திலும் சிறிது நேரம் ஈடுபட்டனர்.

பத்திரிக்கையாளரின் நண்பர் என தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் கலைஞர் ஆட்சியில் இப்படி நடக்கலாமா என பத்திரிக்கைத்துறை நண்பர்கள் தங்களூக்குள் அங்கலாய்த்துக்கொள்கின்றன.

http://adrasaka.blogspot.com/2010/08/blog-post_4563.html

கருணாநிதியின் நாளைய வரலாறு

வரலாறு மிக முக்கியம் அமைச்சரே...

வரலாற்றை திருத்தி எழுத முடியுமா?

இம்சை அரசன் 23-ம் புலிகேசி படத்தில் ஒரு ஓவியர் வடிவேலுவை படம் வரைந்து கொண்டிருப்பார். வடிவேலுவின் தலையும், இன்னொருவருடைய உடலையும் சேர்த்து, ஏதோ புஜ பல பராக்கிரமசாலியை போல ஓவியம் அருமையாக வரையப்பட்டிருக்கும். பார்ப்பதற்கே பிரமிப்பாக இருக்கும்.

அப்போது, வடிவேலுவிடம் அமைச்சர் மங்குணி பாண்டியன் (அமைச்சர் அன்பழகன் மாதிரி) கேட்பார். எதற்காக அரசே இப்படி செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று. அதற்கு வடிவேலு சொல்லுவார், இன்னும் 100 ஆண்டுகளுக்கு பிறகு வரப்போகும் மாங்கா மடையர்களுக்கு என்ன தெரியப் போகிறது. அவர்கள் அனைவரும் மாமன்னர் 23-ம் புலிகேசி ஒரு மாவீரச் சக்கரவர்த்தி என்று நினைப்பார்கள். வரலாறு மிக முக்கியம் அமைச்சரே என்று சொல்லுவார்.

அப்படித்தான் இன்று தமிழ்நாட்டிலும் வரலாறு மிக முக்கியம் என்று ஒரு புலிகேசி செய்து கொண்டிருக்கிறார்.

அவர் வேறு யாரும் இல்லை. நமது தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் முத்துவேல் கருணாநிதிதான்.


தி.மு.க. என்று ஒரு பெரிய கொள்ளை கும்பலை அண்ணாத்துரை ஆரம்பித்தார். இது எல்லோருக்கும் தெரிந்த வரலாறு. ஆனால் அந்த கொள்ளை கும்பலை கருணாநிதி எப்படி கைப்பற்றினார் என்பது கருணாநிதிக்கு மட்டுமே தெரிந்த வரலாறு.

தமிழகத்தை விஞ்ஞானப்பூர்வமாக கொள்ளையடித்து சொத்துக்களை குவித்து விட்டார். ஆனால் வரலாற்றை பொறுத்த வரையில் இலவச திட்டங்கள், 1 ரூபாய் அரிசி என்று மக்களை ஏமாற்றி, தன்னை ஒரு கொடை வள்ளல் போலவே காட்டிக் கொள்கிறார்.

தி.மு.க. கொள்ளை கூட்ட தலைவர் அண்ணா இறந்தபொழுது, அவருக்கு அடுத்தபடியாக நெடுஞ்செழியன் தான் அந்த கொள்ளை கூட்டத்தில், முதல் அமைச்சர் பொறுப்புக்கு தகுதியானவராக இருந்தார். தற்காலிக முதல்-மந்திரியாகவும் பொறுப்பேற்றார். அந்த காலத்தில், கட்சியில் அண்ணாவுக்கு அடுத்தபடியாக இருந்த ஐம்பெரும் தலைவர்களில் கூட கருணாநிதியின் பெயர் கிடையாது. இன்று அந்த கட்சியின் பெரும் தலைவர்கள் பட்டியலில் இவருடைய குடும்பத்தினரை தவிர வேறு யாருமே கிடையாது.

கட்சியில் நல்ல செல்வாக்குடன் இருந்த எம்.ஜி.ஆரை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு நெடுஞ்செழியனை ஏமாற்றி விட்டு குறுக்கு வழியில் ஆட்சிக்கு வந்தார். இப்போது, அதைப்பற்றி கேட்டால், ஆட்சிக்கு வரவேண்டும் என்று தனக்கு விருப்பமே கிடையாது என்று வாய்கூசாமல் பொய் சொல்லுவார். நான் ஆட்சிக்க வரவேண்டும் என்று பெரியார் விரும்பினார், நெடுஞ்செழியன் விரும்பினார், எம்.ஜி.ஆர். விரும்பினார் என்று தனது பட்டியலை நீட்டிக்கொண்டே போவார். இந்த தகவல் பெரும்பாலான மக்களுக்கு தெரிந்து விடாமல் மிகவும் கவனமாக பார்த்துக் கொண்டார்.




இலங்கையில் தமிழர்கள் கொத்து கொத்தாக இறந்து கொண்டிருந்தபோது, இவர் இங்கிருந்து கடிதம் எழுதிக் கொண்டு இருந்தார். எதற்காக, பிற்காலத்தில் நான் இலங்கை தமிழர்களுக்காக இத்தனை கடிதம் எழுதினேன் என்று எடுத்துக் காட்டுவதற்காகத் தான். பேச்சுகள் நாளடைவில் மறைந்து விடும். ஆனால் கடிதங்கள் ஒரு அத்தாட்சியாக எப்பொழுதும் பயன்படும் என்பதை நன்றாகவே புரிந்து வைத்துள்ளார்.

இதைவிட கொடுமை என்னவென்றால், இலங்கையில் இறுதிகட்ட போரின்போது, காலை சாப்பாட்டுக்கும் மதியசாப்பாட்டுக்கும் இடையில் ஒரு உண்ணாவிரத போராட்டத்தை அருமையாக நடத்தினார்.

அந்த போராட்டத்தைக் கூட, உண்மையில் இலங்கை தமிழர்களுக்காக நடத்தி இருந்தால் அவரை பாராட்டுவதில் தவறில்லை. 86 வயது முதியவர், சுடுகாட்டுக்கு போகும் வயதில், தள்ளுவண்டியில் வந்து உண்ணாவிரதம் இருந்தார் என்றால் ஆச்சரியப்படக் கூடியது தான். பாராளுமன்ற தேர்தல் சமயத்தில் தனது அரசியல் லாபத்துக்காக அந்த நாடகத்தை நடத்தினார். இதுகூட உண்மையா என்பது சந்தேகமே.

வீட்டில் நடந்த பிரச்சினைக்காக தனது பொண்டாட்டி, பிள்ளைகளிடம் சண்டை போட்டுக் கொண்டு உண்ணாவிரதம் இருக்க வந்ததாக கூட ஒரு செய்தி உண்டு. எது எப்படியோ? அப்போதைக்கு அவருடைய மானத்தைக் காப்பாற்றிக் கொள்ள இலங்கை தமிழர்கள் கிடைத்து விட்டனர். அதை வைத்து அரசியலும் நடத்தி விட்டார்.

மொத்தத்தில், தனது வீட்டு பிரச்சினைக்காக, உண்ணாவிரதம் என்ற பெயரில் அருமையான நாடகம் ஒன்றை நடத்தி ஒட்டு மொத்த தமிழ் மக்களையும், முட்டாள் ஆக்கி விட்டார்.


யாராவது இவரை குறை சொல்லி விட்டால், நான் அந்த காலத்தில் இலங்கை தமிழர்களுக்காக எப்படி எல்லாம் போராடினேன் என்று புராணம் பாட ஆரம்பித்து விடுவார். அதற்கு உதாரணமாக முரசொலியில் வெளிவந்த ஏதாவது ஒரு செய்தியின் பழைய பேப்பர் கட்டிங்கை எடுத்து காட்டி, முழு பக்கத்துக்கு அறிக்கை கொடுக்க ஆரம்பித்து விடுவார்.


அந்த காலத்தில், மத்திய அரசு இவருடைய ஆட்சியை கலைத்ததற்கு காரணம், இவர் விஞ்ஞான பூர்வமான முறையில் ஊழல் செய்கிறார் என்று நீதிபதி சர்க்காரியா கமிஷன் கொடுத்த அறிக்கைதான். ஆனால் அதைக்கூட இலங்கை தமிழர்களுக்கு உதவி செய்ததால் தான் ஆட்சி போனது என்று எல்லோரையும் நம்ப வைத்து விட்டார். அதைப் பற்றி இன்றுவரை சொல்லிக் காட்டிக் கொண்டே இருக்கிறார்.

இதேபோல, சமீபத்தில் லயோலா கல்லூரியில் நடைபெற்ற விழாவில் இவர் பேசியபோது, நேருவைப் பற்றி தான் அந்த காலத்திலேயே எழுதி வைத்த கவிதையை பக்கம் பக்கமாக வாசித்தார். நேரு குடும்பத்துக்கும் தனக்கும் உள்ள உறவை யாராலும் பிரிக்க முடியாது என்று சொன்னார்.

ஆனால், மதுரையில் நேருவுக்கு கறுப்பு கொடி காட்டி, செருப்பை விட்டெறிந்ததை மட்டும் சொல்லாமல் விட்டு விட்டார்.

அவசர நிலைக்காலத்துக்குப் பின்னர் ஆட்சியை இழந்த காங்கிரஸ் தலைவி இந்திராகாந்தி, மதுரைக்கு வந்தபோது மதுரை தெற்குவாசலில் அவரைக் கொல்ல முயற்சித்த கொடுமையையும் இவர் சொல்லவில்லை. இவற்றையும் சொல்லி இருந்தால் தெரிந்திருக்கும் கருணாநிதிக்கும் நேரு குடும்பத்துக்கும் உள்ள உறவு.

இந்திராவின் உயிரைக் காப்பாற்றிய பழ.நெடுமாறனும், என்.எஸ்.வி. சித்தனும் நல்ல சில காங்கிரஸ்காரர்களும் இன்றும் அதற்குச் சாட்சியாக உள்ளனர். ஆனால், இந்த சம்பவம் இன்றைய தலைமுறையினர் நிறைய பேருக்கு தெரியாது.

ஒன்றும் வேண்டாம், கடந்த ஆண்டு சட்டசபை பொன்விழா மலர் வெளியிடப் பட்டது. அந்த பொன் விழா மலரில், சட்டசபையில் இவர் ஆற்றிய உரைகள் மட்டுமே இடம் பெற்றிருந்தன. இல்லையென்றால், இவரை பாராட்டி யாராவது புகழ்ந்து பேசியிருந்த உரைகளும் இடம் பெற்றிருந்தன. ஆனால் எதிர்கட்சி தலைவர்கள் யாருடைய உரைகளும் அந்த மலரில் வெளியிடப்படவில்லை.

இவருடைய 40 ஆண்டு கால நண்பர் எம்.ஜி.ஆர். பேசிய உரைகள் கூட இல்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அனைவருடைய பேச்சுக்களும் இருந்தால்தானே, வருங்கால தலைமுறைகளுக்கு உண்மை தெரியும். அதனால்தான் திட்டமிட்டே தனக்கு துதி பாடியவர்கள் தவிர மற்ற அனைவருடைய பேச்சுகளையும் நீக்கி விட்டார். அந்த அளவிற்கு அந்த காலத்திலிருந்தே வரலாறு மிக முக்கியம் என்று திருத்திக் கொண்டே வருகிறார். பச்சை நிறம் தான் இல்லையே ஒழிய பச்சோந்திக்கு உண்டான அத்தனை குணங்களும் இவருக்கு உண்டு.


ஆக, வரலாற்றை முற்றிலுமாக திருத்தி எழுதி தன்னை ஒரு புஜ பல பராக்கிரமசாலியை போல காட்டிக் கொள்ள முயன்று விட்டார் என்பது மட்டுமே தெளிவான உண்மை. பிற்காலத்தில் வரப்போகும் மாங்கா மடையர்களுக்கு என்ன தெரியப் போகிறது என்று வடிவேலு சொன்னதைப் போலவே, நடக்கப்போகிறது.

கருணாநிதிக்கு வரலாற்றை திருத்தி எழுதுவதற்கு நீண்ட காலம் கிடைத்திருக்கிறது. ஏறக்குறைய 5 முறை முதல் அமைச்சராகி விட்டார். ஒவ்வொரு முறையும் ஆட்சிக்கு வரும்போது, நிர்வாகத்தை சரியாக நடத்துகிறாரோ, இல்லையோ, வரலாற்றை மட்டும் நேர்த்தியாக திருத்திக் கொண்டிருக்கிறார்.

இதுவரையில் ஏறக்குறைய 90 சதவீதத்திற்கும் மேலாக வரலாற்றை திருத்தி எழுதி விட்டார். இன்னும் கொஞ்ச நாட்களில் மிச்சம் உள்ளதையும் முடித்து விடுவார்.

உதாரணமாக இவர்களுடைய கொள்ளை கம்பெனியின், அதிகாரப்பூர்வ செய்தித் தாளான முரசொலியை எடுத்துக் கொள்ளுங்கள். இன்றைய செய்தி நாளைய வரலாறு. இதுதான் இவங்க கம்பெனியோட கொள்கை. இதிலிருந்தே, இவர் எப்படிப்பட்டவர் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

எது எப்படி இருந்தாலும் வரலாறு மிக முக்கியம் அமைச்சரே...

http://kingsolomonraja.blogspot.com/2010/10/blog-post_28.html


என்னை கடலில் போட்டாலும், நான் தொல்லை கொடுப்பேன்-கருணாநிதி

தமிழர்களே, தமிழர்களே நீங்கள் கருணாநிதியின் கை, கால்களை கட்டி கடலில் தூக்கிப் போட்டாலும், அவர் உங்களுக்கு தொல்லை கொடுத்துக் கொண்டு தான் இருப்பார்.

அதற்கு உதாரணமாக மதுரை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஜெயலலிதா சொன்ன தீயசக்தி கருணாநிதியின் கதை.

இந்திய சுதந்திரத்திற்குப் பின்பு ஒரு மெல்லிய நீரோடையாக ஊருக்கே உழைக்க வேண்டும் என்கிற ஊழியச் சிந்தனையோடு ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரும்; அவருக்குப் பின் ராஜபாளையம் குமாரசாமி ராஜாவும்; மூதறிஞர் ராஜாஜியும்; பெருந்தலைவர் காமராஜரும்; பெரியவர் பக்தவத்சலமும்; அவருக்குப் பின் பேரறிஞர் அண்ணாவும்; அதன் பின் பூக்களுக்கும் புன்னகையை கற்றுத் தந்த நம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரும்; அதற்குப் பின் நானும் தமிழகத்தை ஆண்ட போது, இந்தத் தமிழகம் எப்படி இருந்தது என்பதை நீங்கள் பின்னோக்கிப் பாருங்கள். இதை விளக்குவதற்கு ஒரு கதையை இங்கே நான் சொல்ல ஆசைப்படுகிறேன்.

நான்கு புறமும் நீரால் சூழப்பட்ட ஒரு சிறிய கிராமம். அந்த கிராமத்தில் உள்ள மக்கள் அமைதியாக வாழ்ந்து வந்தனர். அந்த கிராமத்திற்கு யார் செல்ல வேண்டுமானாலும் அல்லது அந்த ஊர் மக்கள் மற்ற ஊர்களுக்குச் செல்ல வேண்டுமானாலும் பரிசல் மூலம் தான் பயணம் செய்ய முடியும். தினமும் காலையில் ஒரு பரிசல்காரன் அந்த கிராமத்தில் இருந்து பரிசல் ஓட்டி தன் பரிசலிலே ஆட்களை எல்லாம் ஏற்றிக் கொண்டு அக்கரைக்கு போவான்.

அது போல இருட்டுவதற்கு முன்பு மாலை 6 மணி அளவில் அதே பரிசல் ஓட்டி அக்கரையில் இருந்து அந்தக் கிராமத்திற்கு பரிசலை செலுத்துவான். அப்படித் தான் ஒரு நாள் பரிசலோட்டி பரிசலை கொண்டு வந்து நிறுத்தி ஆட்களை எல்லாம் ஏற்றிக் கொண்டு இருந்தான். அந்தக் கிராமத்தில் இருந்து வெளியூருக்குச் சென்று விளக்குமாறு விற்கும் பெண் ஒருத்தி தான் விற்றது போக மிச்சம் உள்ள விளக்குமாறு கற்றைகளை கையில் பிடித்துக் கொண்டு பரிசலில் ஏறி அமர்ந்தாள். அவள் அருகே குரங்கு வித்தை காட்டும் ஒருவன் குரங்கோடு பரிசலில் ஏறி அமர்ந்தான். அது போலவே பாம்பாட்டி ஒருவனும் கூடை நிறைய பாம்புகளை வைத்துக் கொண்டு பரிசலில் ஏறி உட்கார்ந்தான். இது போல அந்த கிராமத்தைச் சேர்ந்த மற்றவர்களும் பரிசலில் அமர்ந்துவிட்டார்கள். பரிசல் புறப்பட தயாரானது.

அப்போது ஒருவன் ஓடி வந்து பரிசலிலே ஏற முயற்சித்தான். ஆனால் பரிசல்காரன் அவனை ஏற்ற மறுத்து "ஒழுங்காக போய்விடு. உன்னை ஏற்ற முடியாது" என்று மறுத்தான். அவனோ, நானும் ஏறிக்கொள்வேன் என்று அடம் பிடித்தான்.

பரிசலில் இருந்த கிராமத்துக்காரர்கள் பரிசல் ஓட்டியிடம், அவனும் இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவன் தானே? உனக்குரிய கூலியைத்தான் தருகிறானே? அவனை ஏற்றிக் கொண்டால் என்ன? என்று கேட்டார்கள்.

உடனே பரிசல்காரன் சொன்னான் "அய்யோ, உங்களுக்கு அவனைப் பற்றித் தெரியாது. கொடூர புத்தியும் எந்நேரமும் பிறருக்கு தீங்கு செய்யக்கூடிய விஷமச் சிந்தனையும் கொண்ட மோசமான தீயசக்தி அவன். பரிசல் இங்கிருந்து ஊர் போய்ச் சேருவதற்குள் எதையாவது செய்து நமக்கு ஆபத்தை விளைவித்துவிடுவான். நீங்கள் அவனுக்கு ஆதரவாக பேசாதீர்கள்" என்று மன்றாடினான்.

ஆனால், அந்தப் பரிசலில் இருந்த கிராமத்துக்காரர்கள் "உனக்கு அந்த பயம் வேண்டாம். நாங்கள் வேண்டுமானால் அவனது கையையும் காலையும் கட்டி பரிசலிலே போட்டு விடுகிறோம். அவனால் அப்போது ஒன்றும் செய்ய முடியாது. நமது பயணத்திற்கும் ஆபத்து வராது" என்று பரிசல் ஓட்டியிடம் ஆலோசனை சொன்னார்கள்.

அப்போது பரிசல் ஓட்டி "அய்யோ! இவன் மிக மோசமானவன். கை, கால்களை கட்டிப் போட்டாலும் அவனால் கெட்டது செய்யாமல் இருக்க முடியாது" என்று முடிந்தவரை மறுத்தான்.

ஆனால், ஒட்டுமொத்த கிராமத்து மக்களும் ஒருவனை மட்டும் விட்டுவிட்டுப் போவதில் நியாயமில்லை என்று பரிசல்காரனை ஒருவழியாக சமாதானம் செய்துவிட்டு அந்த நபருடைய கைகளையும், கால்களையும் கட்டி அவனைத் தூக்கி உள்ளே போட்டுவிட்டு பரிசலை நகர்த்தச் சொன்னார்கள். பரிசல்காரன் அரைகுறை மனதோடு பரிசலை ஓட்டத் தொடங்கினான். ஏறத்தாழ இரண்டு மைல் அளவுக்கு பரிசல் கடந்து நடு ஆற்றைத் தொட்டது.

இன்னும் பாதி அளவு பயணத்தை கடக்க வேண்டும். மேகம் திரண்டு கொண்டு வந்தது. காற்றும், மழையும் தொடங்குவதற்கான அறிகுறிகள் தென்பட்டன.

இந்தத் தருணத்தில் ஏதாவது செய்ய வேண்டும் என்று சிந்திக்கத் தொடங்கினான் அந்தத் தீயசக்தி. விளக்குமாறு கற்றைகளை பக்கத்தில் வைத்த வண்ணம் அருகில் உட்கார்ந்து கொண்டு இருந்த பெண்ணிடமிருந்து ஒரு விளக்குமாறு குச்சியை தனது வாயாலே கடித்து உருவினான். வாயில் வைத்திருந்த குச்சியை வைத்து குரங்காட்டியின் மடியில் உட்கார்ந்திருந்த குரங்கின் கண்ணிலே கொண்டு போய் குத்தினான். குரங்கு மிரண்டு பாம்பாட்டி அடுக்கி வைத்திருந்த பாம்புக் கூடையின் மீது விழுந்தது. உடனே பாம்புக் கூடை சரிந்து உள்ளிருந்த பாம்புகள் அனைத்தும் பரிசலுக்குள்ளே விழுந்து ஓட, பரிசலில் பயணம் செய்த அனைவரும் அய்யோ!, அம்மா! என்று அலறி ஒரு புறமாய் ஒதுங்க பரிசல் கவிழ்ந்தது.
தீயசக்திக்கு பரிதாபம் காட்டியவர்கள் நீரினுள் மூழ்கிப் போனார்கள்.

பரிசலில் புகுந்த அந்த தீயசக்தி போல அமைதியான தமிழ்நாட்டு அரசியலில் புகுந்தவர் தான் திருக்குவளை தீயசக்தி என்னும் கருணாநிதி. பரிசல் ஓட்டி எப்படி அந்தத் தீய சக்தியை பரிசலில் ஏற வேண்டாம் என்று தடுத்தானோ; அது போலவே கருணாநிதியின் தீய குணங்களை அறிந்த காரணத்தால் தான் பேரறிஞர் அண்ணா கூட "தம்பி வா, தலைமையேற்க வா" என்று நாவலர் நெடுஞ்செழியன் அவர்களைப் பார்த்துத் தான் அழைத்தாரே தவிர கருணாநிதியை அப்படி அழைக்கவில்லை.

"நீ முகம் காட்டினால் முப்பது லட்சம் வாக்குகள் நிச்சயம்" என்று அண்ணா அவர்கள் நம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரை ஜாடையாக அடையாளம் காட்டினாரே தவிர கருணாநிதியை அப்படி அடையாளம் காட்டவில்லை. ஆனால், தமிழக மக்களின் பொல்லாத காலம் தமிழக அரசியலின் போதாத நேரம் கருணாநிதி என்னும் தீயசக்தியின் தந்திரங்கள் வென்றன. அதன் விளைவை நாம் சந்தித்துக் கொண்டு இருக்கிறோம்.

இவ்வாறு ஜெயலலிதா கூறினார்.

http://kingsolomonraja.blogspot.com/2010/10/blog-post.html
-------------

Maudany stands for secularism: Pinarayi




Pinarayi Vijayan says PDP’s support is accepted to strengthen secularism.

KOCHI: The Left Democratic Front (LDF) decided to accept the support of the likes of People’s Democratic Party leader Abdul Nasir Maudany in the coming Lok Sabha elections after they proved their secular credentials and came out in the open against communalism and religious extremism, Communist Party of India (Marxist) State secretary Pinarayi Vijayan has said.

Launching web sites seeking support for the LDF here on Saturday, Mr. Vijayan said the support was accepted to strengthen secularism.

He said that individuals and organisations had come forward in large numbers in support of the LDF from the very outset of the poll campaign. The support of some people could not have been imagined in the past. He cited the support extended by the Janapaksham led by former Bharatiya Janata Party leader K. Raman Pillai as an example. Ever since he quit the Bharatiya Janata Party in protest against the policies of that party, Mr. Raman Pillai had stood for secularism and it was only natural that he supported the LDF which had the strongest secular credentials.

Mr. Vijayan said the LDF had opposed Mr. Maudany strongly in the past. However, Mr. Maudany made it clear that he was in favour of secularism following his release from jail. He came out in the open against religious extremism and communalism and rightly approached political parties that followed similar principles. “We look at their present positions and policies,” he said.

Mr. Vijayan said the LDF government had never followed a policy of protecting anyone who went against the law of the land. Allegations were being raised against Mr. Maudany as part of a ploy to crucify him for his political stand.

Mr. Vijayan regarded the inquiry conducted by the State Home Ministry into extremism as a model one unlike the ones carried out in other parts of the country where such inquires had led to widespread allegations of targeting the Muslim community.

http://www.hindu.com/2009/03/22/stories/2009032250430100.htm

கருணாநிதியின் அரசியல் நாடகம்

தி.மு.க தலைவரும் தமிழக முதலமைச்சரும் சிறந்த திரைக்கதை வசனகர்த்தாவுமான மு.கருணாநிதியின் நெறியாள்கை மற்றும் திரைக்கதை வசனம், இயகத்தில் 'தமிழக மீனவருக்கான உண்ணாவிரதப் போராட்டம்' என்னும் திரைப்படமொன்று தமிழகமெங்கும நேற்று சனிக்கிழமை திரையிடப்பட்டது. இதன் மூலம் தமிழக மக்களை முட்டாள்களாக்கும் வல்லமை தற்போதும் கருணாநிதிக்கு உண்டென்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழக மீனவர்களை சுட்டுக் கொல்லும் இலங்கை கடற்படைக்கெதிராகவும் தமிழக மீனவர் பிரச்சினையை டில்லிக்கு உணர்த்தும் வகையிலுமே இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடத்தபட்டததாக தனது கதைக்கு கருணாநிதி முன்னுரை வழங்கியுள்ளார் இந்தக் கதையில் அமைச்சர்களான ஆற்காடு வீரசாமி, அன்பழகன், மு.க.ஸ்டாலின் ஆகியோர் தமது பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர்.

கச்ச தீவுப் பிரச்சினையை தீர்க்க அதிகார வாய்ப்புகள் இருந்த காலத்தில் அதனை செய்யாமல் இப்போது கச்சதீவில தமிழக மீனவரின் உரிமைகளை நிலைநாட்டும் நேரம் வந்து விட்டதென கூறி உண்ணாவிரதப் போராட்ட திரைப்படத்தை கருணாநிதி காண்பித்ததற்கு பின்னணிக் காரணிகளாக விஜயகாந்தின் பின்னால் அணி திரண்ட மீனவர்களும் மன்மோகன் சிங்கிடம் முறையிட்ட பா.ம.க வினருமே காணப்படுகின்றனர்.

1974ம் ஆண்டு கச்சதீவு இலங்கைக்கு தாரைவார்த்துக் கொடுக்கபட்டதிலிருந்து இன்று வரை நான்கு தடவைகள் முதலமைச்சராகவிருந்த கருணாநிதிக்கு தமிழக மீனவரின் உரிமைகளை கச்சதீவில் நிலைநாட்ட அப்போதெல்லாம் வராத நேரம் இப்போது மட்டும் வந்ததேப்படி?

மத்திய அரசின் முக்கிய பங்காளிக் கட்சியாக இருந்து கொண்டும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தாமல் தற்போது உண்ணாவிரத நாடகமாடியுள்ளார் கருணாநிதி.

தனது ஆட்சியதிகாரத்;தைப் பயன்படுத்தி அரசியல் எதிரிகளைப் பந்தாடும் கருணாநிதி அதே அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி தமிழக மீனவரின் உயிர்களைக் காப்பாற்ற பின்னடிக்கிறார்.

இந்த உண்ணாவிரதப் போரட்டத்தை கருணாநிதி டில்லியில் நடத்தியிருந்தால் கூட தமிழக மீனவர் மீது சிறிதளவேனும் அக்கறையிருக்கின்றதென்பதை ஏற்றுக் கொண்டிருக்க முடியும்.

அதைவிட தற்போது மத்திய அரசின் ஆட்சி ஊசலாடிக் கொண்டிருக்கின்றது. 22ம் திகதி அது தப்புமா அல்லது சாகுமா என்பது தெரிந்துவிடும். இவ்வாறான நிலையில் மத்திய அரசுடன் சுண்டைக்காய் கட்சிகள் கூட பேரம் பேசி தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்கின்றன. தன்னைக் காப்பாற்றிக் கொள்ள எதைக் கேட்டாலும் கொடுக்கும் நிலையிலலேயே மத்திய அரசும் உள்ளது.

இந்நிலையில் மத்திய அரசில் தனது 6 உறுப்பினர்களை வைத்திருக்கும் கருணாநிதி எவ்வித கோரிக்கைகள், நிபந்தனைகளுமின்றி தனது விசுவாசத்தைக் காடடுகின்றார். 2,3 உறுப்பினர்களை வைத்துள்ள கட்சிகள் கூட, மத்திய அரசிடமிருந்து பல சலுகைகளை பெறுகின்றன. இவ்வாறான நெருக்கடியான நிலையைக் கூட தனது குடிமக்களின் உயிர்ப்பிரச்சினைக்கு பயன்படுத்த கருணாநிதி தயாரில்லை. சிலவேளைகளில் தனது குடும்ப நலனுக்கு பயன்படுத்த நினைக்கின்றாறோ தெரியவில்லை.

தற்போது மத்திய அரசின் வாழ்வா சாவா என்ற போரட்டத்தில், இலங்கையுடனான கச்சதீவு ஒப்பந்தத்தை ரத்துச் செய்யுமாறு கருணாநிதி கோருவதுடன் அவ்வாறு ரத்தாக்காவிட்டால் 6 உறுனர்களும் நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ளமாட்டார்களென அறிவித்தால் போதும் தமிழக மீனவர் பிரச்சினைக்கு அடுத்த நிமிடமே முற்றுப்புள்ளி வைத்துவிடலாம்.

ஆனால் இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தாமல் உண்ணாவிரதப் போரட்டத் திரைப்படத்தை கருணாநிதி காட்டியமை அவரின் சுயநல அரசியலின் வெளிப்பாடேயாகும்

இராமேஸ்வரத்தில் தே.தி.மு.க. தலைவர் விஜயகாந்த் நடத்திய இலங்கை கடற்படைக்கெதிரான ஆர்ப்பாட்டத்தில் திரண்ட மீனவர்களைப் பார்த்த கருணாநிதி அரண்டுவிட்டாh. தி.மு.க.வுக்கு உள்ள வாக்கு வங்கிகளில் மீனவர் சமூகங்களின் வாக்கு வங்கி கணிசமானது அதற்கு ஆபத்து வந்துவிடுமோ என்ற அச்சம் கருணாநிதிக்கு ஏற்பட்டது.

அடுத்ததாக தி.மு.க.வுடன் உறவை முறித்துக் கொண்ட பாட்டாளி மக்கள் கட்சியினர் டில்லிக்குச் சென்று தமிழக மீனவர் பிரச்சினை தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கிடம் நேரில் முறையிட்டனர். இதற்கு சார்க் மாநாட்டுக்காக இலங்கை செல்லும் பொது தமிழக மீனவர் பிரச்சினை தொடர்பாக இலங்கை ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுப்பதாக பிரதமர் உறுதியளித்தார். இந்த சந்திப்பும் கருணாநிதிக்கு அவமானத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் 19ம் திகதி இலங்கை கடற்படைக்கெதிராக நாகபட்டடினத்தில் பெரும் ஆர்ப்பாட்டம் இடம் பெறுமென அ.தி.மு.க ஜெயலலிதா அறிவித்தார். நிலைமை கட்டு மீறிப் போவதையும் மீனவர்களின் உணர்வுகள் தமக்கு எதிராக திரும்புவதையும் உணர்ந்து கொண்டதாலே வேறு வழியின்றி மீனவர் பிரதிநிதிகளை சந்தித்த கருணாநிதி பின்னர் தனது உயர்மட்டக் குழுவுடன் ஆராய்ந்துவிட்டு உண்ணாவிரதப் போராட்ட அறிவிப்பபை வெளியிட்டார்.

இந்த உண்ணாவிரதப் போராட்டம் தமிழக மீனவர்களின் நலன்களை விட தி.மு.க.வின் நலன்களுக்காகவே நடத்தப்பட்டது. இந்த உண்ணாவிரதப் போராட்டத்தினால் சரிந்த தனது செல்வாக்கை கருணாநிதி தக்க வதை;துக் கொள்ள முடியுமே தவிர, தமிழக மீனவர்களுக்கு எந்த விமோசனமும் ஏற்பட்டு விடப்போவதில்லை.

இதனை கருணாநிதியையும் மத்திய அரசையும் நன்குணர்ந்தவர்கள் புரிந்து கொள்ள முடியும்.

ஏனேனில் கச்சதீவு தாரைவார்க்கப்பட்டதும் இந்த முதல்வரின் ஆட்சியில் தான்.

இது வரை 800 மீனவர்களை இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லபட்டதும் இதே கருணாநிதியின் ஆட்சியில் தான். இதைவிட இரண்டாயிரம் பேர் காயப்பட்டதுடன் பலர் காணாமற் போயுள்ளனர். பலர் இலங்கை சிறையில் வாடுகின்றனர்.

ஆனால் கருணாநிதியோ தமிழர்கள் தன்னை கடலில் தூக்கிப் போட்டாலும் நான் கட்டுமரமாக மிதப்பேன் அதில் தமிழாகள் ஏறிப் பயணிக்கலாம், கவிழ்த்து விடமாட்டேன் என்று தனது தொலைக்காட்சியில் கவிதை வடிக்கிறார். இன்னும் எவ்வளவு காலத்துக்குத்தான்; தமிழ், தமிழர்கள் என்று கலைஞர் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கப் போகின்றார்.

4 தடவையாக முதலமைச்சராக பதிவி சுகம் அனுபவித்த போதும் தற்போதும் அவர் பதவி வெறி, பணவெறியில்தான் அலைகிறார். தினகரன் அலுவலகத்தை தீயிட்ட போது 3 ஊழியர்கள் பலியான சம்பவத்துடன் தனது மகன் அழகிரி தொடர்பு பட்டிருந்தபோது மகனைக் காப்பதற்காக டில்லி வரை ஓடிய கருணாநிதிக்கு பாக்குநீரிணையில் தினமும் பலியாகும் தமிழக மீனவரின் உயிர் பெரிதாகத் தெரியவில்லை.

இந்தக் கச்ச தீவு இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்;ட போது முதலமைச்சராகவிருந்த கருணாநிதி அன்றைக்கு இந்த ஒப்பந்தத்தை எதிhத்திருந்தால் எத்தனையோ தமிழக மீனவர்களின் உயிர்கள் பாதுகாப்பட்டிருக்கும். தமிழக மீனவர்களின் வாழ்வும் வளம் பெற்றிருக்கும். ஆனால் அன்றும், அப்பபோதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியின் சுயநல அரசியலுக்கு கருணாநிதி துணைபோய் தமிழகத்தின் உரிமையை விட்டுக் கொடுத்தார்.

தற்போதாவது அந்த ஒப்பந்தத்தை கிழித்தெறியுமாறு கேட்டால் இந்திய-இலங்கை நட்புறவை பறிக்கும் என்கிறாh. தமிழக மீனவர் உயிருக்கு உத்தரவாதமில்லாத அந்த ஒப்பந்தம் எதற்கு. இந்தியாவுடன் 1989 ஆம் ஆண்டு இலங்கை செய்து கொண்ட ஒப்பந்தத்தை தன்னிஷ்டப்படி அந்த நாடு ரத்தாக்கியது. அதற்கு என்ன செய்தீர்கள்? உங்கள் நட்புறவு சீர்கெட்டு விட்டதா? இல்லையே இன்னும் பலமாகியுள்ளது.

இமயமலையில் இல்லாத ஒப்பந்தங்களா? காஷமீரில் கையெழுத்திடாத ஒப்பந்தங்களா? அதையெல்லாம் மீறியவர்கள் ஏன் கச்சதீவு ஒப்பந்தத்;தை மட்டும் பாதுகாக்க முற்பட வேண்டும். இதனால் கருணாநிதிக்கு என்ன லாபம்?

தொட்டதற்கெல்லாம் சோனியாவுடனும் மன்மோகன் சிங்குடனும் தொலைபேசியில் பேசும் இந்தக் கருணாநிதி தமிழக மீனவருக்காக எத்தனை தடவை தொலைபேசியில் பேசினார்?

விடுதலைப் புலிகளின் ஊடுருவலைத் தடுப்பதற்கெனக் கூறி 24 மணி நேரமும் இந்தியக் கடலோர காவல்படை கண்காணிப்பை மேற்கொண்டுள்ளது. ஆனால் ஒரு முறை கூட அத்துமீறி இந்திய எல்லைக்குள் நுழைந்த தமிழக மீனவர்களை சுட்டுத்தள்ளும் இலங்கை கடற்படைப் படகுகளை இந்திய கடலோர காவல்படை வழிமறித்தாதாகவோ எச்சரித்ததாகவோ அல்லது தமிழக மீனவர்களை பாதுகாத்ததாகவோ தகவல்கள் இல்லை.

சௌராஷ்டிரா கடலோரப்பகுதி இந்திய-பாகிஸ்தான் கடற்பகுதியில் மிக நெருக்கமாக உள்ள பகுதியாகும். சௌராஷ்டிரப் பகுதி மீனவர்கள் எல்லையறியாமல் வழிதவறிச் செல்லும் போதேல்லாம் அவர்களை பாகிஸ்தான் கடற்படையினர் கைது செய்துள்ளனரே தவிர ஒருவரைக் கூட சுட்டுக் கொன்றதில்லை.

பாகிஸ்தான் இந்தியாவின் பரம விரோதியாக இருந்த போதும் அவர்க்ள மனிதாபிமானத்தோடு நடக்கின்றார்கள்.

ஆனால், மாங்காய் அளவு இருக்கும் இலங்கையின் கடற்படை தமிழ்நாட்டு மீனவர்களைப் படுகொலை செய்கின்றது. ஒவ்வொரு முறையும் கருணாநநிதி கடிதம் எழுதுவார். மத்திய அரசு மௌனம் காக்கும். இது தான் நடைமுறை. ஒரு தொலைபேசி அழைப்பில் இலங்கை அரசைக் கட்டுப்படுத்தும் வல்லமை பெற்ற மத்திய அரசு தமிழக மீனவர்களையே குற்றம் சாட்டுகிறது.

இலங்கை அரசோ கச்சதீவு பூர்வீகமாவும் பூகோள ரீதியாகவும் தங்களுக்குத் தான் சொந்தமென உரிமை கொண்டாடத் தொடங்கியுள்ளது. ஆனால், கச்சதீவு இந்தியாவுக்கே சொந்தமானது.

1922ம் ஆண்டு கிழக்கிந்திக் கம்பனி கச்சதீவை குத்தகைக்கு கேட்டு ராமாநாதபுரம் சமஸ்தானத்தோடுதான் ஒப்பந்தம் செய்து கொண்டது. இலங்கையோடு அல்ல. பேரரசி விக்டோரியா மகாராணி காலத்தில் இலங்கையின் அமைச்சு செயலாளராக இருந்தவர் பி.வி.பியர்ஸ்.

இந்த பியர்ஸ் தயாரித்த வரைபடத்தில் கச்சதீவு ராமநாதபுரம் ராஜவுக்குச் சொந்தமானது. இலங்கைக்கு சொந்தமானதல்லவெனக் குறிப்பட்டுள்ளார்.

1968ம் ஆண்டு கச்சதீவில் இலங்கை இராணுவம் போர்ப் பயிற்சி நடத்தியபோது அதைக் கண்டித்து இந்திய பாராளுமன்றத்தில் கண்டனத் தீர்மானமி நிறைவேற்றபட்டடுள்ளது. எனவே, கச்சதீவு இந்தியவின் ப+ர்வீகச் சொத்து.

காலத்தின் கட்டாயத்தினாலலேயே கச்சதீவு இலங்கைக்குத் தாரைவாhக்கப்பட்டது.. இந்தியாவின் பூகோள அமைப்பே தமிழழக மீனவர்களுக்கு எமனாக அமைந்து விட்டது. 1971ம் ஆண்டு இந்திய பாகிஸ்தான் போரின் போது பங்களதேஷ் உருவானது. அதனை விரும்பாத அமெரிக்கா, இந்தியாவை அச்சுறுத்த 'என்டர் பிரைஸ்' என்ற அணுவாயுதம் தாங்கிய கப்பலை அனுப்பியது.

கொல்கத்தாவைத் தாக்குவதே அவர்களின் இலக்கு. அந்த நேரத்தில் அமெரிக்காவுக்கு சிம்ம சொப்பனமாயிருந்த ரஷ்யா இந்தியாவுக் ஆதரவாக களமிறயங்கியதால் அமெரிக்கா பின்வாங்கியது. அதன் பின் ஐ.நாவில் உலக நாடுகள் இந்துமா கடலில் நின்று கொகொண்டோ. பறந்தகொண்டோ எந்த நாடும் கடலோரப் பகுதி நாடுகளை அச்சுறுத்தக் கூடாதென்ற தீர்மானத்தை நிறைவேற்றன.

இந்த நிலையில்தான் இந்தியா யோசிக்கத் தொடங்கியது. இந்தியவின் வடக்கே தரைப்பகுதி. அங்கே, பாகிதஸ்தானும் சீனாவும், கிழக்கும் மேற்கும் கடல்பகுதிகள். ஆபத்தில்லை. தெற்கிலுள்ள ஒரே தரைப்பகுதி இலங்கை மட்டும்தான். இவ்வாறான நிலையில் பங்களதேஷ் போரின் பின் இலங்கையில் விமானத்தளம் அமைக்க பாகிஸ்தான் கேட்டக் கொண்டிருந்தது.

இதைத் தடுக்க அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி இலங்கைப் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவுடன் பேசி பாகிஸ்தானுக்கு தளம் கொடுப்பதை தடுக்க முயன்றார். கச்சதீவை எங்களுக்குத் தந்துவிட்டால் தளம் அமைக்க பாகிஸ்தானுக்கு இடம் கொடுக்கமாட்டோம் என்று இலங்கை பிரதமர் பேரம் Nசியபோது இந்திரா காந்தியினால் அதனை மறுக்க முடியவில்லை.

எனவே, இந்தியாவைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக தமிழக தமிழர்களை பலிகடாவாக்கி கச்சதீவு 1974ம் ஆண்டில் ஒப்பந்த மூலம் இலங்கைக்குத் தாரைவார்த்தக் கொடுக்கபட்டது. பின்னர், இரு வருடஙகள் கழித்து 1976ம் ஆண்டில் மீண்டும் ஒரு ஒப்பந்தம். தமிழக மீனவர் கச்சதீவில் தங்கி ஓய்வெடுக்கலாம். வலைகளைக் காயப் போடலாம். ஆண்டுக்கு ஒருமுறை அங்கே நடக்கும் அந்தோனியார் தேவாலயத் திருவிழாவுக்குச் சென்று வரலாம் என்பதே அந்த ஒப்பந்தம்.

ஆனால், ஒப்பந்தப்படி இலங்கை அரசு நடந்து கொள்ளவில்லை. இந்த ஒப்பந்தத்தின் பின் 800 க்கும் அதிகமான தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை சுட்டுக் கொன்றது. இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோரைக் காயப்படுத்தியது. பலரைத் தனது நாட்டில் சிறை வைத்துள்ளது. பல மீனவர்கள் காணாமல் போயுள்ளனர். மீனவர்ரன்; உபகரணங்கள், வலைகள் அழிக்கபட்டன.

இலங்கை அரசினதும் அதன் கடற்படையினதும் அட்டூழியங்களைப் பார்த்துக் கொண்டு இந்திய அரசு மௌனம் சாதிக்கின்றது. ஏனெனில், இலங்கையைப் பகைத்துக் கொண்டால் சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் தளம் அமைக்க இலங்கை இடம் கொடுத்து விடுமென்ற பயம் இந்தியாவுக்குள்ளது.

அதனால்தான் தமிழக தமிழர்கள் கொல்லப்பட்டாலும் பரவாயில்லை தேசத்தைக் காக்க வேண்டும்மென மத்திய அரசு நினைக்கிறது.

1965ம் ஆண்டு இந்திய பாகிஸ்தான் போர் நடந்த போது இலங்கையிலுள்ள கட்டுநாயக்கா விமானத் தளத்தை பாகிஸ்தான் படைகள் பயன்படுத்த இலங்கைப் பிரதமர் ஸ்ரீமாவோ அனுமதி வழங்கினார். இதனால் பதறியடித்த லால் பாகதூர் சாஸ்திரி இலங்கையிடம் பாகிஸ்தானுக்கு தளம் கொடுக்க வேண்டாமென வேண்டினார்.

பாகிஸ்தானுக்கு விமானத்தளத்தை கொடுக்காமல் இருப்பதானால் அதற்கு பதிலாக இலங்கையிலுள்ள 5 இலட்சம் மலையகத் தமிழர்களை இந்தியாவுக்கு கப்பலேற்ற சம்மதமாவென இலங்கை கேட்டது. வேறு வழியில்லாமல் லால் பகதூர் தலையசைத்தார்.

இதேபோன்றே திருகோணமலையில் படைத்தளம் அமைக்க அமெரிக்க அனுமதி கேட்ட போது அப்படி நடந்து விடக்கூடாது என்பதற்காகவே 1987 ஆம் ஆண்டு இந்திய அமைதிப் படையை அப்போதைய இந்தியப் பிரதமர் ராதஜீவ் இலங்கைக்கு அனுப்பி வைத்தார். இத்தகவலை இலங்கைக்கு அமைதிப்படை தலைமை தாங்கிச் சென்ற தளபதி ஒருவரே தனது புத்தகமொன்றில் எழுதியுள்ளர்ர். எனவே இந்தியாவின் பாதுகாப்புக்காக தமிழகத் தமிழர்களையும் இலங்கைத் தமிழர்களையும் பலிகொடுக்க இந்திய அரசு எப்பவுமே பின்னிற்கப் போவதில்லை.

அண்மையில் கூட இலங்கையரசுக்கு நூறு கோடி டொலர் வரை இந்திய அரசு வழங்கிள்ளது. இந்தப் பணத்தில் இலங்கை அரசு பாகிஸ்தானிடமும் சீனாவிடமும் ஆயுதங்களை வாங்கி இலங்கைத் தமிழர்களையும் தமிழக மீனவர்களையும் அழிக்கப் போகின்றது. ஆனால் இவ்விடயத்தில் இந்திய அரசு தலையிடாது. ஏனேனில் அதற்கு தனது நாட்டுப்பாதுகாப்பு முக்கியமானது.

ஆனால், இந்த விடயத்தைத் தமிழக அரசியல் கட்சிகள் தமது சுயநலன்களுக்காக பயன்படுத்திக் கொண்டிருக்கின்றன. தமிழக மீனவர்களின் உயிர், உடைமை குறித்து கவலைப்படாத இந்த அரசியல் கட்சிகள் தமது வாக்கு வங்கியை இலக்கு வைத்து வெற்று அறிக்கைகளை வெளியிட்டுக் கொண்டும் கண்துடைப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்திக் கொண்டும் இருக்கின்றன.

தமிழகத்தில் ஆட்சியல் உள்ள கட்சியின் சொல்லைத் தவிர வேறு கட்சிகளின் கூச்சல்களை மத்தி ஒரு போது காதில் போட்டுக் கொண்டதில்லை. அவ்வாறான நிலையில் ஏனைய கட்சிகள் நடத்தும் ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதங்கள் எவ்வித நலன்களையும் ஏற்படுத்தப் போவதில்லை. ஆட்சியிலுள்ள தி.மு.க தான் எதையாவது செய்ய வேண்டும்.

தமிழக மீனவர்களின்; பிரச்சினையைத் தீர்க்க வேண்டிய தி.மு.க அரசு, அதை விடுத்து உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தியமை முற்றும் முழுதான அரசியல் நாடகமாகும். தமிழர்களை விட மத்திய அரசுக்கு எவ்வித நெருக்கடியும் ஏற்பட்டு விடக்கூடதென்பதில் தி.மு.க அரசு உறுதியாகவுள்ளது.

தனது குடும்ப நலனுக்கு மட்டுமே மத்திய அரசை மிரட்டும் கருணாநிதி தன் குடிமக்கள் பிரச்சனைக்கு மத்திய அரசை மிரட்டவோ, அடிபணிய வைக்கவோ தயாரில்லை..

தமிழக மீனவர் பிரச்சினையை முற்று முழுதாக தீர்க்கக்கூடிய சந்தர்ப்பத்தை தவற, விட்டு விட்டு சந்தர்ப்பவாத அரசியல் நடத்தும் கருணாநிதி இருக்கும் வரை தமிழ் மக்களுக்கோ தமிழக மீனவர்களுக்கோ விடிவு கிடைக்கப் போவதிலையென்பது தற்போது வெளிபட்டு வருகின்றது.

ஈழப்பிரச்சனையும் இந்தியாவும்
ஆக்கம் :கலைஞன்
நன்றி : தினக்குரல்

கலைஞரின் இளைஞன் கதை - படிங்க ரசிங்க

படமே இன்னும் ரிலீஸ் ஆகலை. அதுக்குள்ள எப்படி அந்தப் படத்தின் கதையை சவுக்கு எழுதுகிறது என்று பார்க்கிறீர்களா ?

அந்தப் படத்தில் கதை என்று ஒன்று இருக்கிறதா என்ன ? ஆனாலும், மீண்டும் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி வந்தால் (நடக்காது பயப்படாதீங்க… ஒரு பேச்சுக்கு) 2011ம் ஆண்டின் சிறந்த திரைப்படமாகவும், சிறந்த கதை வசனமாகவும், இளைஞனும், கருணாநிதியும் தேர்ந்தெடுக்கப் படுவார்கள் என்பதில் ஐயம் ஏது.

image013

(சாரி பாஸ் படம் தப்பாயிடுச்சு)

ஆனால் இந்தப் பதிவு இளைஞன் கதைப் பற்றியதல்ல. இளைஞனின் பின்னால் உள்ள கதையைப் பற்றியது. அது மிக மிக சுவராஸ்யமாக இருக்கிறது. படித்து விட்டு நீங்களே சொல்லுங்களேன். சுவராஸ்யமா இல்லையா என்று.

pa-vijay-ilaignan-movie-wallpapers-stills-pics-photos-01

இளைஞன் படத்தின் தயாரிப்பாளர் யார் ? சான் டியாகோ மார்ட்டின். யார் இந்த சான்டியாகோ மார்ட்டின் ? இவரை சான் டியாகோ மார்ட்டின் என்று சொல்லுவதை விட, ‘லாட்டரி மார்ட்டின்‘ என்றே பிரபலமாக அழைக்கப் படுகிறார்.

மார்ட்டின் பிறந்த அன்றே யோகம் தான். ஆம் தோழர்களே… பர்மாவில் சான்டியாகோ மார்ட்டின் பிறந்த அன்றே, மாட்டினின் பெற்றோர்களுக்கு லாட்டரியில் 1000 டாலர் விழுந்தது. இதை சொல்லிச் சொல்லியே வளர்த்ததனால் மார்ட்டினுக்கு லாட்டரி மீது தீராத காதல் உருவாகி, லாட்டரி சாம்ராஜ்யத்தையே கட்ட வைத்தது.

21-10-2010-7214-2-9

இப்படித்தான் மார்ட்டினின் வாழ்க்கை தொடங்கியது. பள்ளிப் படிப்பை கூட முடிக்காத மார்ட்டின் இன்று 4000 கோடி ரூபாய் லாட்டரி தொழில் நிறுவனத்துக்கு அதிபதி.

பர்மாவில் யாங்கோன் நகரில் தனது தொழிலை துவக்கினார். அங்கே சிறிய அளவில் லாட்டரி டிக்கட்டுகளின் ஏஜென்டாக தன் வாழ்க்கையை தொடங்கினார். பர்மாவில் சட்டவிரோத லாட்டரி டிக்கெட்டுகள் பெரும் அரசியல் சூறாவளியைக் கிளப்ப, மார்ட்டின் தப்பித்து அருணாச்சலப் பிரதேசத்துக்கு வருகிறார். அங்கிருந்து, அஸ்ஸாம், நாகாலாந்து, போன்ற அனைத்து வடகிழக்கு மாகாணங்களுக்கும் தனது சாம்ராஜ்யத்தை விரிவு படுத்தினார்.

சில வருடங்கள் கழித்து தனது மொத்த சாம்ராஜ்யத்தையும், தமிழகத்துக்கு கொண்டு வருகிறார். மார்ட்டினின் சாம்ராஜ்யத்தை உருவாக்கி கட்டமைத்ததில் பின்னாளில் அவருக்கு எதிரியான உஸ்மான் பயாஸ் பெரும் பங்கு வகிக்ககிறார். கோவை மாவட்டத்தில் தனது சாம்ராஜ்யத்தை நிறுவுகிறார் மார்ட்டின்.

அதன் பிறகு, ஜெயலலிதா அரசாங்கம் லாட்டரிகளை தடை செய்ததும், மார்ட்டினுக்கு பின்னடைவு என்று அனைவரும் எண்ணிக் கொண்டிருந்த வேளையில், இந்தத் தடையே, மார்ட்டினை வளம் கொழிக்க வைத்தது.

21-10-2010-7214-1-4

மார்ட்டினின் நிறுவனத்தில் உஸ்மான் பயாஸ் என்ற ஒரு நபர் மிக நெருக்கமான அரசியல் தொடர்புகளை உருவாக்குகிறார். தமிழகத்தில் மார்ட்டினின் சட்டவிரோத கள்ள லாட்டரிகள் தாறுமாறாக விற்கத் தொடங்குகின்றன. மார்ட்டினின் கோயம்பத்தூர், காந்திபுரம் 6வது தெரு, டெய்சி ப்ளாஸா, எண் 355-359 என்ற முகவரியில் மார்ட்னின் லாட்டரி ஏஜென்சி இன்னும் இயங்கிக் கொண்டிருக்கிறது.

மார்ட்னின் செல்வாக்கு போகாத இடங்களே இல்லை எனலாம். மார்ட்டினின் செல்வாக்குக்கு ஒரு உதாரணம் சொல்ல வேண்டும் என்றால், கேரளாவில் சிபிஎம் கட்சிக்கு சொந்தமான தேசாபிமானி என்று ஒரு நாளிதழ் வருகிறது. நம் தமிழ்நாட்டில் தீக்கதிர் போல என்று வைத்துக் கொள்ளுங்களேன். 2005ம் ஆண்டில் மார்ட்டின் கொடுத்த இரண்டு கோடி ரூபாயை நன்கொடையாக பெற்றுக் கொண்டது தேசாபிமானி என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். விஷயம் வெளியே வந்து சர்ச்சை ஆனதும், தேசாபிமானி, அந்தத் தொகையை மார்ட்டினிடம் திருப்பி அளித்தது.

தமிழ்நாட்டில் தனது செல்வாக்கை வளர்த்துக் கொண்டே வந்த மார்ட்டின், எஸ்எஸ் ம்யூசிக் என்ற சேனலை விலைக்கு வாங்குகிறார். தமிழ்நாட்டில் மட்டும் ஒரு நாளைக்கு மார்ட்டினின் சட்டவிரோத லாட்டரிகளின் விற்பனைத் தொகை 1.5 கோடி ரூபாய்.

ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் மார்ட்டின் சட்டவிரோத லாட்டரிகள் விற்றதற்காக வழக்கு ஒன்று பதிவு செய்யப் படுகிறது. அந்த வழக்கில் மார்ட்டின் முன்ஜாமீன் பெறுகிறார். இன்றும் மார்ட்டின் முன்ஜாமீனில்தான் உள்ளார்.

இப்படியே இயல்பாக போய்க் கொண்டிருந்த மார்ட்டினின் வாழ்க்கையில் ஒரு திருப்பம். மார்ட்டினின் நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றி வந்த உஸ்மான் பயாஸ், ஒரு பெரும் தொகையை ஆட்டையை போட்டு விட்டு, மார்ட்டினிடமிருந்து பிரிகிறார். பிரிந்தவுடன், மார்ட்டின் தனது பண பலத்தால் பயாஸூக்கு நெருக்கடி தருகிறார். ஏற்கனவே, பல்வேறு அரசியல் தொடர்புகளோடு இருந்த பயாஸ், துணை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நெருக்கமாகிறார். பயாஸ் மீது மார்ட்டின் கடும் கோபத்தில் இருக்கிறார்.

பயாஸுக்கு எப்படி நெருக்கடி கொடுக்கலாம் என்று மார்ட்டின் யோசித்துக் கொண்டிருந்த வேளையில், தமிழகத்தில் மார்ட்டினின் கள்ள லாட்டரிகள் விற்கும் இடங்களில் காவல்துறை சோதனையிட பயாஸ் ஏற்பாடு செய்கிறார்.

தொடர்ந்து சோதனைகள் நடந்ததும், மார்ட்டினின் கள்ள லாட்டரித் தொழில் அடி வாங்குகிறது. பணம் நஷ்டமாகிறது.

அரசியல் தொடர்புகள் அனைத்துக்கும், பயாஸையே நம்பி இருந்த மார்ட்டின் அரசியல் தொடர்புகள் இல்லாததால் ஏற்படும் விளைவுகளை நம்பி தொடர்புகளை வளர்த்துக் கொள்ள முயல்கிறார். மார்ட்டின் முதலில் அணுகியது, கருணாநிதியின் மகள் செல்வி. செல்வியோடு தொடர்பு ஏற்பட்டாலும், மார்ட்டினால் காவல்துறையின் சோதனைகளை நிறுத்த முடியவில்லை.

illaignan_Audio-Launch15

ரஜினிகாந்துடன் மார்ட்டின்

அப்போதுதான், மார்ட்டினுக்கு கவிஞர் பா.விஜயின் நட்பு கிடைக்கிறது. பா.விஜய்யை அணுகிய மார்ட்டின் தனது கோரிக்கையை சொல்கிறார். அதற்கு பா.விஜய், நான் கருணாநிதியிடம் அழைத்துச் செல்கிறேன். தேவையான உதவிகளைச் செய்கிறேன், இதற்கு கைமாறாக நீங்கள் என்ன செய்வீர்கள் என்று கேட்கிறார்.

மார்ட்டின் உங்களுக்கு என்ன வேண்டும் என்று சொல்லுங்கள் என்றதும், நான் ஹீரோவாக நடிக்க வேண்டும், என்னை ஹீரோவாக வைத்து, கருணாநிதி கதை வசனத்தில் படம் தயாரியுங்கள், நான் உங்கள் பிரச்சினையை பார்த்துக் கொள்கிறேன் என்கிறார்.

மார்ட்டின் சம்மதித்ததும், அறிவிப்போடு நின்று விட்ட இளைஞன் படம் மீண்டும் உயிர் பெறுகிறது. இப்படி உருவானதுதான் இளைஞன்.

கருணாநிதி, தன்னுடைய சொத்துக்கணக்கை வெளியிட்டு அளித்த அறிக்கையில், ‘தற்போது தயாரிக்கப் பட்டு வரும் இளைஞன் படத்துக்கு கதை வசனம் எழுதுவதற்காக எனக்கு அளிக்கப் பட்ட ஊதியம் 45 லட்சம் ரூபாய்‘ என்றார். இந்த 45 லட்ச ரூபாயும் கதை வசனத்திற்கு அளித்த ஊதியம் அல்ல….. கள்ள லாட்டரி விற்பனையை கண்டு கொள்ளாமல் இருப்பதற்கு கொடுத்த லஞ்சம்.

illaignan_Audio-Launch09

இது தொடர்பாக மற்றொரு செய்தியைச் சொன்ன கருணாநிதி, இளைஞன் படம், ஒரு லோ பட்ஜெட் படம் என்றார். உண்மையில் இந்த படத்தின் பட்ஜெட் என்ன தெரியுமா… ? 50 முதல் 60 கோடி என்கிறார்கள். இந்தப் படத்தில் வரும் கப்பல் செட் போட மட்டும் 14 கோடி ரூபாய் செலவிடப் பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

21-10-2010-7214-4-3_1

இந்தப் பின்னணியில் தான் கேரளாவில் நடந்த சம்பவத்தை பார்க்க வேண்டும். கேரள நாட்டில் இஷாக் என்பவர், பூட்டான் மாநில லாட்டரிகள் 10 வாங்குகிறார். அந்த லாட்டரிகளை பரிசீலித்ததில், அத்தனையும் போலி என்று அறிந்த இஷாக், மார்ட்டின் மீது கொடுத்த புகார் மீது நடவடிக்கை இல்லாததால் கேரள மாநிலத்தின் ஒரு நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறார். அந்த வழக்கில் போதுமான முகாந்திரம் இருப்பதால், நீதித்துறை நடுவர், கோட்டை காவல் நிலையத்திற்கு மார்ட்டின் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிடுகிறார்.

அடுத்த வழக்கை கேரள முதலமைச்சர் அச்சுதானந்தனே பதிவு செய்ய உத்தரவிடுகிறார். இதையடுத்துதான், மார்ட்டின் முன் ஜாமீன் கோரி, கேரள உயர்நீதிமன்றத்தை அணுகுகிறார். அந்த வழக்கில் தான் முதலில், காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் மனு சிங்க்வி ஆஜராகிரார். கேரளா முழுவதும் எழுந்த எதிர்ப்பலைகளை அடுத்து, சிங்வி வழக்கிலிருந்து வாபஸ் வாங்கிக் கொள்கிறார். அடுத்ததாக மார்ட்டினுக்காக ஆஜரானவர் தான் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன். கருணாநிதி சொல்லாமல் பி.எஸ்.ராமன் கேரளா சென்றிருக்க மாட்டார். ஆனால் மார்ட்டினுக்காக தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ராமன் ஆஜரானதும், எழுந்த கடும் சர்ச்சையை ஒட்டி, கேரள முதலமைச்சர் அச்சுதானந்தன், ராமன் எப்படி மார்ட்டினுக்காக ஆஜராகலாம் என்று கருணாநிதிக்கு கடிதமே எழுதினார்.

illaignan_Audio-Launch20

ஆனால், இந்தக் கடிதத்தையும் கண்டு கொள்ளாத கருணாநிதி, அரசுத் தலைமை வழக்கறிஞர் ராமன் செய்தது தவறே அல்ல என்று உடனடியாக அறிக்கை வெளியிட்டார். அது தவறு என்று கருணாநிதி எப்படி சொல்ல முடியும் ? அனுப்பியதே கருணாநிதி அல்லவா ?

இந்தப் படத்தின் விநியோகஸ்த உரிமையை வாங்கியிருக்கும் சிவப்பு பூதம் நிறுவனம் (அதாங்க ரெட் ஜெயன்ட் பிக்சர்ஸ்) படத்திற்காக பத்து பைசாவை மார்ட்டினுக்கு கொடுக்கவில்லை என்பது கொசுறு செய்தி. இந்தப் படத்தை எப்படியாவது வெற்றிப் படம் ஆக்க வேண்டும் என்று அனைத்து மாவட்டச் செயலாளர்களுக்கும் கருணாநிதி உத்தரவிட்டிருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

illaignan_Audio-Launch08

மேடம் அடுத்து நீங்க மார்ட்டின் தயாரிப்புல, "அலைக்கற்றை வாங்கிய அபூர்வ சிந்தாமணி" ன்னு ஒரு படம் எடுங்க மேடம்.

அருமையான ஆடு ஒன்னு சிக்கிருக்கு. வேஸ்ட் பண்ணக் கூடாது மேடம்

இது தவிர, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மார்ட்டின் மீது 15க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

இப்படிப் பட்ட ஒரு மோசமான குற்றவாளி ஒரு படத்தை தயாரிக்கிறார், அதில் ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் கதை வசனம் எழுதுகிறார், அவனோடு சேர்ந்து விழாவில் கலந்து கொள்கிறார், அவனிடம் 45 லட்சம் ஊதியம் பெற்றேன் என்கிறார்.. …. இதையெல்லாம் கருணாநிதியால் செய்ய முடியும். ஆனால் இலங்கைத் தமிழருக்காக குரல் கொடுங்கள் என்றால், ‘ஒரு அடிமை இன்னொரு அடிமையிடம் என்ன கேட்க முடியும்‘ என்கிறார்.

மார்ட்டின் கருணாநிதி உறவு, இத்தோடு முடியவில்லை. கருணாநிதியின் கதை வசனத்தில் வெளி வரும் அடுத்த படமான "பொன்னர் சங்கருக்கும்" மார்ட்டின் தான் தயாரிப்பாளர்.

இந்த அக்கிரமம் உலகில் எங்காவது நடக்குமா ?

http://www.ilakku.in/index.php?option=com_content&view=article&id=302:2011-01-11-02-13-04&catid=1:2010-07-12-16-58-06&Itemid=2


ஓட்டுக்காக எதையம் செய்யலாம் - அட, நம்ம எருமை தோல் தமிழன் தான .....!!!

முட்டாள்தனத்தின் உச்ச கட்டம் I

உங்களிடம் ஒரு கேள்வி…அல்லது புதிர் – உங்களுடைய வருட வருமானம் சுமார் 1 லட்சம் என்று வைத்துக் கொள்வோம் – வரும் வருடம் உங்களுக்கு இன்னும் 50,000/- ரூபாய் அதிக வருமானம் கிடைக்க வாய்ப்புண்டு – ஆக வரும் வருடம் உங்கள் வருமானம் சுமார் 1.5 லட்சம் ஆகின்றது – சரி வரும் வருடத்திற்கு நீங்கள் 3 லட்ச ரூபாய்க்கு உங்கள் குடும்ப பட்ஜெட் போடுவதாக வைத்துக் கொள்வோம்….

என்னைய்யா இது முட்டாள் தனமாக இருக்கிறது என்று கேட்கத் தோன்றுகிறது அல்லவா?

இந்த முட்டாள் தனமான காரியத்தைத் தான் நம் மத்திய, மாநில அரசுகள் செய்து கொண்டிருக்கின்றன. பற்றாக் குறை பட்ஜெட் போடுவதே இவர்களது வேலையாகிப் போய்விட்டது. இப்படி முட்டாள்தனத்தின் உச்ச கட்டமாக பற்றாக் குறை பட்ஜெட் போடுவதற்கென்று ஒரு பிரதம மந்திரி, முதல் மந்திரி, நிதி அமைச்சர், ஏனைய அமைச்சர்கள் கும்பல் – இப்படி ஒரு பட்ஜெட் போடுவதற்கு இத்தனை பேர் எதற்கு – ரோட்டில் திரியும் யார் வேண்டுமானாலும் போடலாமே.

இதை விடக் கொடுமை – இப்படி பற்றாக்குறை பட்ஜெட் போட்டுவிட்டு – அந்தப் புண்ணாக்கு பட்ஜெட்டை ஆளும் கட்சியினர் “அடடா….அற்புதமான பட்ஜெட்” என்று புகழாரம் சூட்டி, கை தட்டி மகிழ்ந்து கொள்வார்கள்! தலையெழுத்துடா சாமி.

தமிழக அரசு கிட்டத்தட்ட திவாலான நிலைமையில்தான் உள்ளது. சில புள்ளி விவரங்களைப் பார்க்கலாமா?

தமிழக அரசுக்கு உள்ள கடன் தொகை எவ்வளவு தெரியுமா?

சுமார் 71 ஆயிரத்து 668 கோடி. அதற்கு கடந்த ஆண்டு கட்டிய வட்டித் தொகை எவ்வளவு தெரியுமா? 6,227 கோடி ரூபாய்.

2008ம் ஆண்டு ஜீன் மாதம் நம்முடைய அதி புத்திசாலியான (!) அரசு 59 லட்சத்து 55 ஆயிரம் குடும்பங்களுக்கு இலவச கலர் டிவி வழங்க அனுமதி அளித்துள்ளது.

ஒரு கலர் டிவி ரூ.2,000/- என்று வைத்துக் கொண்டால் கூட, 59,55,000 கலர் டிவிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகை எவ்வளவு தெரியுமா?அதிர்ச்சி அடைந்து விடாதீர்கள்! மூச்சை இழுத்துப் பிடித்துக் கொள்ளுங்கள்

அந்தத் தொகை.ரூபாய் 1,191 கோடி.

அடுத்து இலவச வேட்டி சேலை, இலவச அடுப்பு, இலவச கோவணம், இலவச திருவோடு என்று அள்ளி எறிந்து கொண்டிருக்கின்றார். நமதருமை முதல்வர் டாக்டர்ர்ர்ர்ர் கலைஞர் கருணாநிதி.

விளங்கும் தமிழ்நாடு!

http://karunanidhispolitics.roudhrampazhagu.com/?paged=2

இலவசம் என்கிற தூண்டில் - ஏமாற தயாராகும் மக்கள்


தமிழகத்தில் ஏழைகள் இருக்கும்வரை
இலவசங்கள் தொடரும் - தமிழக முதல்வர்


இலவசத்தை நம்பும் தமிழன்!

ஈயென இரத்தல் இழிந்தன்று, அதனெதிர் ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று' என்பதை ஏட்டில் படித்தவர்கள் தமிழர்கள். அதனாலோ என்னவோ, அவர்கள் தாவெனக் கேட்கும் முன்பே எதையும் இலவசமாகக் கொடுத்துவிட வேண்டும் என தமிழக அரசு முடிவு செய்துவிட்டதுபோலும்.

பல்வேறு பொருள்களை அரசு இலவசமாய் வழங்கிக் கொண்டிருக்கிறது. இலவசங்கள் தொடரும் என அண்மையில் தமிழக முதல்வரும் தெரிவித்துள்ளார்.

அதன் வெளிப்பாடாய், "என்ன கொடுப்பார், எவை கொடுப்பார்?' என தமிழக மக்கள் எண்ணும் முன்னே "டிவி, மின்சாரம், மோட்டார், வேட்டி, சேலை என பலவும் கொடுப்பேன். போதாது போதாதென்றால் இலவசப் பொங்கல் பொருள்களும் கொடுப்பேன்' என வரிந்துகட்டிக் கொண்டு, தமிழர் திருநாளாம் தைப் பொங்கலை முன்னிட்டு ஏழைகள் பொங்கல் வைத்து உண்டு மகிழ, இலவசப் பொங்கல் பொருள்கள் உண்டு எனத் தமிழக அரசு அறிவித்தது.

அரைக் கிலோ பச்சரிசி, 100 கிராம் பாசிப்பருப்பு, அரைக் கிலோ வெல்லம், முந்திரி 10 கிராம், உலர் திராட்சை, ஏலக்காய் தலா 5 கிராம் ஆகியவை அடங்கிய பையை இலவசமாகப் பெறலாம் என்றது அரசு.

"நாளொரு பொருள், பொழுதொரு விலை' என விலை உயர்வு பாதித்து விழி பிதுங்கிக் கொண்டிருப்பதால், இப்படி ஏதேனும் இலவசமாய் கிடைத்தால்தான் தைப் பொங்கலையும் கொண்டாடிக் களிக்க முடியும் என்ற நிலை என்பதால் ரேஷன் அட்டை தமிழர்களும் பொங்கல் பொருள்களை எதிர்பார்த்திருந்தனர்.

இம் மாதத்தின் முதல் தேதியிலிருந்து பொருள்களை பொதுமக்கள் நியாயவிலைக் கடைகளில் அனைத்து நாள்களிலும் பெறலாம் என அரசு அறிவித்தது. முதல் நாளில் தமிழகம் முழுவதும் முதல்வரும், அமைச்சர்களும் இலவசப் பொருள்கள் விநியோகத்தைத் தொடங்கிவைத்தனர்.

அன்றைய தினம் பொருள்கள் அனைத்தும் தரமாக இருந்ததால் தொடர்ந்து வரும் நாள்களிலும் அதே தரத்தில் பொருள்கள் கிடைக்கும் என நினைத்திருந்தோருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. காரணம் பொருள்களின் தரம்.

நியாயவிலைக் கடைகளில் குடும்ப அட்டைகளுக்கு எப்போதேனும் 2 கிலோ பச்சரிசி வழங்கப்படும். அவை பெரும்பாலும் பழுப்பு நிறத்திலேயே இருக்கும். இலவசப் பொங்கல் பையிலிருந்த பச்சரியும் அதே நிறத்திலும், தரத்திலும்தான் இருந்தது. ஆனால், இம் முறை பச்சரிசி சற்று உயிர்ச்சத்துடன் இருந்தது எனலாம் (உபயம்-பச்சரியில் மேய்ந்துகொண்டிருந்த சின்னச்சின்னப் பூச்சிகள்).

மந்திரிகள் பங்கேற்ற நிகழ்ச்சிகளில் கொடுக்கப்பட்ட இலவச பைகளில் முந்திரி பாக்கெட்டுகள் இருந்ததாகச் செய்திகள் கூறுகின்றன. ஆனால், அதன் பின்பு வழங்கப்பட்ட பைகளில் முந்திரிகள் ஒன்றிரண்டு கிராம்வரை குறைந்திருப்பதைக் காண முடிந்தது. ஆனால், பெரும்பாலான பாக்கெட்டுகளில் முந்திரிகளைக் காணவே முடியவில்லை. விற்பனையாளர்களின் மற்றுமொரு கைவண்ணம்தான் என பொதுமக்கள் புலம்புவதைக் கேட்க முடிந்தது.

இலவசப் பொருள்களில் வெல்லத்தைப் பொறுத்தவரை மக்களின் கஷ்டத்தை அரசு சிறிது குறைத்திருந்தது எனக் கூற வேண்டும்.

பொங்கல் வைக்கும்போது வெல்லம் உடைக்க கடினமானதாக இருந்தால், மக்கள் சிரமப்படலாம் என நினைத்து, திட நிலையிலும் இல்லாமல் திரவ நிலையிலும் இல்லாமல் இரண்டுக்கும் இடைப்பட்ட நிலையில் உள்ள வெல்லத்தை அரசு வழங்கியிருந்தது.

இதற்காக வெல்லத்தை அரசு மொத்தமாய் கொள்முதல் செய்யத் தொடங்கியதால் தமிழகம் முழுவதும் வெல்லத்தின் விலை திடீரென உயர்ந்தது.

இதுகுறித்து பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும் செய்திகள் வெளியாயின. இலவச வெல்லத்தால் வெளிச்சந்தையில் வெல்லம் விலை உயர்ந்ததுதான் மிச்சம்!

ஆனால், அரைக்கிலோ பச்சரியை பொங்கல் வைத்தால் தெருவுக்கே மணக்க வேண்டும் என 0 ஏலக்காய்கள்வரை (5 கிராம்) வழங்கப்பட்டிருந்தது சிறப்பு.

இலவசப் பொருள்களில் உருப்படியாய் எதுவுமேயில்லையா எனக் கேட்போருக்கு இல்லை என பதில் சொல்லவைக்காதவண்ணம் உருப்படியாய் இருந்தது பாசிப்பருப்பு மட்டுமே. ஐந்துக்கு இரண்டு பழுதில்லை என்பார்கள், இங்கு ஆறுக்கு ஒன்று பழுதில்லை எனத் திருப்திபட்டுக் கொள்ளலாம். இதற்கிடையே, இந்தப் பொருள்கள்கூட பலருக்கும் கிடைக்காத நிலை. நியாயவிலைக் கடைக்கு இலவசப் பொங்கல் பைக்காக சென்றால், அதிக பணிப்பளு (?) காரணமாக விற்பனையாளரின் பதிலோ "இன்று போய் நாளை வாராய்!' என்பதாக இருந்தது. ஒருவேளை, "பையக் கொடு, பையக் கொடு' எனக் கேட்டதால் அவசரமில்லாமல் கொடுத்தால் போதும் என அவர் நினைத்திருக்கலாம்.

அதையும் மீறி இலவசமாய் இப் பொருள்களைப் பெற்றுவிட்டனர் என்பதற்காக, ஊதியம் உயர்ந்துள்ள கொத்தனார் தொடங்கி ஏழை, எளியோர், அன்றாடங்காய்ச்சிகள், நடுத்தர மக்கள் தங்கள் கூலியையும், ஊதியத்தையும் சேமித்து வைத்துவிடவில்லை. ஏனெனில், காய்கனிகளின் விலை அப்படி!

வழக்கமாக காய்கனிகளின் விலை இப்படித்தான் எனச் சமாதானப்படுத்திக்கொண்டு, அரசு இலவசமாக வழங்காவிட்டாலும்கூட பொதுமக்களே சிரமப்பட்டு காய்கனிகளை வாங்கி பொங்கலைக் கொண்டாடிவிடலாம் என்றால் ஆண்டுக்கு ஒருமுறை வீட்டுக்கு வரும் கரும்புக்கும், மஞ்சள் குலைக்கும் என்ன நேர்ந்தது? விலை, கடந்த ஆண்டைப்போல பல மடங்கு. மஞ்சள் குலையின் விலையே ஈரல்குலையை நடுங்க வைத்தது என்றால் மற்றவற்றை என்ன சொல்ல!

இலவசங்களில் பல குறைகள் இருக்கலாம். ஆனால், அரசு வழங்கிய டி.வி.க்காக தனியாருக்கு மாதந்தோறும் ரூ. 150 செலுத்தி நாம் பார்க்கப்போகும் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு எந்த சேனலிலும் குறைவிருக்காது.

தமிழ் தெரியாத நடிக, நடிகையரின் "பொங்கள் வாள்த்துகளை' நாள்முழுவதும் ரசிக்கலாம்; உலகத் தொலைக்காட்சி வரலாற்றில் முதன்முறையாகத் திரைக்கு வந்தேயிராத திரைப்படங்கள் பலவற்றையும் பார்க்கலாம். விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் விழி பிதுங்கினாலும் டிவி நிகழ்ச்சிகளை வாய் பிளந்து பார்த்து மகிழலாம்.

பின்னே, சும்மாவா சொன்னார் கவிஞர் ""தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அவர்க்கொரு குணமுண்டு'' என்று?

www.dinamani.com

Friday, January 14, 2011

ராஜா ராஜா தான்

பெரம்பலூர் டூ டெல்லி 5
ஸ்பெக்ட்ரம் ராஜா
மெருகேற்றிய செல்லமுத்து வாத்தியார்!

புத்தருக்குள் ஞானம் வளர்த்தது கயாவிலுள்ள போதிமரம் என்றால், ராசாவிற்குள் திராவிடம் வளர்த்தது பாடாலூரிலுள்ள அரசுப் பள்ளி வளாகம்தான். திருச்சி டூ சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூருக்கு 20 கி.மீ. முன்னதாகவே அமைந்திருக்கிறது பாடாலூர். இந்த ஊருக்கு பெயர் தோன்றிய கதையே சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பதிவுதான்.

16-ம் நூற்றாண்டின் இறுதிக்காலத்தில் தென்னகத்து ஜான்ஸி ராணியாகப் போற்றப்படும் ராணி மங்கம்மாவின் ஆளுகையின் கட்டுப்பாட்டில்தான் திருச்சி சமஸ்தானம் இருந்து வந்திருக்கிறது. அந்த சமயத்தில் வட பகுதிகளிலுள்ள சிவ ஆலயங்களை தரிசிக்கச் செல்லும் சிவனடியார்கள் தங்குவதற்கு சத்திரமோ, மடமோ இல்லாமல் பெரும் அவதிப்பட்ட காலம் அது. இந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட ராணி மங்கம்மாள் சிவனடியார்களின் துயரத்தைப் போக்கும் விதமாக திருச்சியைத் தாண்டி நாற்பது காத தூரத்தில் நிறைய சத்திரங்களையும், மடங்களையும் நிர்மாணித்திருக்கிறார். இந்த வழியாக சிவ யாத்திரை மேற்கொள்ளும் சிவனடியார்கள் இந்த சத்திரங்களிலும், மடங்களிலும் உண்டு, உறங்கி, இளைப்பாற வேண்டிய ஏற்பாடுகளையும் செய்திருக்கிறார் ராணி மங்கம்மாள்.

ராணியின் இந்த சேவையினால் நெகிழ்ந்து போன சிவனடியார்கள் ராணியைச் சந்தித்து, இந்த சேவைக்கு பிரதியுபகாரமாக ஏதாவது வரத்தை வேண்டும்படி அருளாசி வழங்கியிருக்கிறார்கள். பதிலுக்கு ராணியோ, ‘அடியார்கள் அடியவளுக்கு வரம் அருளுவதை விட ஈசனின் அருளை கானமெடுத்து பாடுவதுதான் என் செவிகளுக்கு பாக்கியம். இந்த சத்திரங்களில் எந்நேரமும் சிவ கீதங்கள் ஒலித்துக் கொண்டே இருப்பதுதான் இறைவனுக்கு நாம் செய்யும் தொண்டு’ என சிவனடியார்களிடம் பணிந்து வேண்டியிருக்கிறார். அன்றிலிருந்து அந்த இடத்தில் இருபத்து நான்கு மணி நேரமும் சிவனைப் போற்றி பாடல்களை பல்வேறு சிவனடியார்கள் இசைத்திருக்கிறார்கள். ஓயாமல் பாடல்கள் ஒலித்துக் கொண்டேயிருந்ததால் அந்த இடத்திற்கு பாடலூர் என்று பெயர் வந்திருக்கிறது.

அந்தப் பாடலூர்தான் காலப்போக்கில் மருவி தற்போது பாடாலூராய் வழங்கப்படுகிறது.

பெயர் காரணத்தைத் தவிர, வேறெந்த முக்கியத்துவமும் இல்லாத சாதாரணமான ஊர்தான் பாடாலூர். இருந்தாலும், சுற்று வட்டாரத்தில் உள்ள 30 கிராமங்களை இணைக்கும் மையப்புள்ளி என்பதாலும், திருச்சி & சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்திருப்பதாலும் இந்த ஊர் சற்றே முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. 1960-களில் இந்த ஊரில் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமையன்று கூடும் சந்தைதான் சுற்றுவட்டாரக் கிராம மக்களின் தேவைகளை நிறைவு செய்யும் சூப்பர் மார்க்கெட். இதையெல்லாம் விட பெரம்பலூர் வட்டாரத்திலேயே இந்த ஊர் பெயர் பெறக் காரணம் இங்கே, ‘பாடாலூர் அரசு மேல்நிலைப்பள்ளி’ இருந்ததுதான். சுற்று வட்டாரத்தில் எங்குமே மேல்நிலைக் கல்வி வழங்கும் பள்ளிகள் இல்லாமலிருந்த நிலையில் இந்த வட்டார மக்களின் எழுத்துக் கனவை நிஜமாக்கியது இந்தப் பள்ளிதான்.

பாடாலூர் பள்ளியில் படிக்கும் போதே ராசா துறுதுறுப்பான ஆள்தான். படிப்பில் ரொம்பவும் சூப்பர் என்று சொல்லமுடியாவிட்டாலும்கூட ஆசிரியர்களின் கவனத்தை ஈர்க்கும் அளவிற்கு ஓரளவு நன்றாகவே படித்திருக்கிறார் ராசா. அதிலும் தன்னுடைய சமயோசித புத்தியாலும், தனித்திறமைகளாலும் பல ஆசிரியர்களை கவர்ந்திழுத்திருக்கிறார் ராசா. அப்படி ராசாவால் ஈர்க்கப்பட்ட ஒருவர்தான் செல்லமுத்து வாத்தியார். பாடாலூர் பள்ளியில் ராசா சேர்ந்ததில் இருந்து படிப்பு முடித்து செல்லும் வரை செல்லமுத்து வாத்தியார்தான் ராசாவுக்கான காட்ஃபாதர். பெரியாரின் மீதும், அவருடைய கருத்துக்கள் மீதும், குறிப்பாக பெரியாரின் சுயமரியாதைக் கொள்கைகள் மீதும் ஆழ்ந்த பற்றுக் கொண்டிருந்தவர் செல்லமுத்து வாத்தியார். வகுப்பறையில் மாணவர்களுக்கு பாடம் நடத்தும்போதே அவ்வப்-போது பெரியாரின் சுயமரியாதைக் கருத்துக்களையும் பாடத்துடன் சேர்த்து மாணவர்களின் மனதில் பதிய வைப்பதில் கில்லாடியானவர் செல்லமுத்து வாத்தியார்.

அவர் மூலமாகத்தான் ராசாவுக்கு பெரியாரின் அறிமுகம் நூல் வடிவில் கிடைக்கிறது. படிப்பில் இருக்கும் ஆர்வத்தைவிட பேச்சிலும், எழுத்திலும் தீராத காதல் கொண்டிருந்தவர் ராசா. அதிலும் பேச்சுப் போட்டிகளில் கலந்து கொள்வதில் ராசாவுக்கு அலாதி ஆர்வம் இருந்திருக்கிறது. அப்படி ஒருமுறை பேச்சுப் போட்டியில் பெரியாரைப் பற்றிய தலைப்பு வர, செல்லமுத்து வாத்தியாரிடம் பெரியாரைப் பற்றிய புத்தகங்களும், குறிப்புகளும் வாங்கி அந்தப் போட்டியில் அசத்தியிருக்கிறார் ராசா. ஆனால், எதிர்பாராதவிதமாக அந்தப் போட்டியில் ராசாவின் நெருங்கிய நண்பரான கலைசேகர் முதலிடத்தை வென்றுவிட, ராசாவுக்கு இரண்டாவது இடம்தான் கிடைத்திருக்கிறது. அதன்பின்னர் நடந்த பல போட்டிகளில் ராசாவே முதலிடத்தை வென்றாலும்கூட கலைசேகருக்கும் ராசாவுக்குமான நட்பு மட்டும் இணைபிரியாமலேயே இருந்திருக்கிறது. பள்ளிக்கூட காலங்களில் நட்பிற்கு அதிகமாகவே முக்கியத்துவம் கொடுக்கும் ராசா, எப்போதுமே நாலைந்து நண்பர்களுடன் சேர்ந்துதான் சுற்றிக் கொண்டிருப்பாராம். அதிலும் பள்ளி நேரங்கள் தவிர்த்து ஓய்வு நேரங்களில் அருகிலுள்ள பெருமாள் மலைக்கு சென்று பொழுதைக் கழிப்பதில் அலாதி ஆர்வமாம் ராசாவுக்கு.

கருங்கல்கள் வைத்துக் கட்டப்பட்டிருந்த காரை கட்டடம், முன்புறம் இறக்கி வேயப்பட்டிருந்த கீற்று முற்றம், நாலைந்து தேய்ந்து போன பெஞ்சுகள் என மிகச் சாதாரணமான உணவகம்தான் பாடாலூர் குமார் ஓட்டல். அந்தக் காலத்தில் திருச்சியிலிருந்து சென்னைக்கு சாலை வழியாக பயணிப்பவர்களுக்கு இடையில் வயிற்றுப் பசியை போக்கும் ‘நளன் கூடம்’ இந்த குமார் ஓட்டல்தான். செல்லமுத்து வாத்தியார் மூலமாக ராசாவின் மனதில் விழுந்த திராவிட விதையை ஆழமாய் விதைத்து விறுவிறுவென வளர வைத்தது இந்த ஓட்டல்தான்.

அப்போதெல்லாம் பள்ளிப்படிப்பு, கல்லூரிப் படிப்பு, கல்லூரி மேல்படிப்பு என எல்லா கால கட்டங்களிலுமே அரசின் நல விடுதிகளில் தங்கி படிப்பதுதான் ராசாவின் வழக்கம். அப்பா, அம்மாவிற்கு பொருளாதார ரீதியாக நெருக்கடி கொடுக்கக்கூடாது என்பதாலேயே இம்மாதிரி அரசின் நல விடுதிகளில் தங்கும் வழக்கத்தை வைத்திருந்திருக்கிறார் ராசா. அப்படித்தான் பாடாலூரிலும் குமார் ஓட்டலுக்கு அருகாமையில் இருந்த அரசு விடுதியில் தங்கி படித்துக் கொண்டிருந்திருந்திருக்கிறார். அப்படி விடுதியில் இருக்கும் போது ஒருநாள் அதிகாலையிலேயே எழுந்த ராசாவின் காதுகளில் கணீரென வந்து விழுந்திருக்கிறது அந்தக் குரல்.

‘அர்ச்சகர்கள் பொறுக்கித் தின்ன ஆலயம், அயோக்-கியர்கள் பொறுக்-கித் தின்ன அரசியல், அதிகாரிகள் பொறுக்கித் தின்ன அரசாங்கம் இப்படியாக இருக்கிற போலி ஜனநாயகத்தில்தான் மானமும், அறிவும் உள்ள மக்களாக நீங்கள் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் & வேறு யாரும் செய்ய முன்வராததால் நான் இந்தப் பணியை செய்து வருகிறேன்’ & ஏற்கனவே புத்தகத்தில் படித்திருந்த பெரியாரின் வார்த்தைகள் அவருடைய குரலிலேயே கணீரென வெளிப்பட, குரல் வந்த திசைநோக்கி ஓடியிருக்கிறார் ராசா. விடுதிக்கு அருகாமையில் இருக்கும் குமார் ஓட்டலில் இருந்துதான் பெரியாரின் குரல் ரிகார்டர் ப்ளேயரில் ஒலித்திருக்கிறது. அப்போது சிறுவனாக இருந்த ராசாவுக்கு அந்தக் குரல் யாருடைய குரல் என்று தெரிந்திருக்கவில்லை.

‘அண்ணே, இதுல பேசறது யாருண்ணே..?’ ஓட்டலில் இருந்தவரிடம் ஆர்வமும், ஆச்சர்யமுமாக ராசா கேட்க, ‘இது யாருன்னு தெரியலியா? வைக்கம் வீரர் பெரியாருடைய குரல்தான். அவர்தான் பேசறார்’ என சொல்லவும், ராசாவுக்கு ஆச்சரியமான ஆச்சரியம். அங்கேயே உட்கார்ந்து முப்பது நிமிடங்கள் முழுதாக பெரியாரின் உரையைக் கேட்டு விட்டுத்தான் விடுதிக்குப் போயிருக்கிறார். அன்றிலிருந்து தினமும் குமார் ஓட்டலுக்கு வந்து, அரை மணிநேரம் பெரியாரின் உரையைக் கேட்ட பிறகுதான் தினசரி வேலைகளே தொடங்கும் ராசாவுக்கு. பெரியாரை நோக்கி ராசா ரொம்பவும் ஆர்வமாக மாறியதைப் பார்த்த செல்லமுத்து வாத்தியார் ஒருநாள் ராசாவை அழைத்திருக்கிறார்.

‘பெரியார் மேல உனக்கு ரொம்ப ஆசையா ராசா?’ வாத்தியாரின் வார்த்தைகள் முடியும் முன்பே பெரியார் மீது தனக்கிருக்கும் ஆர்வம், தினசரி பெரியாரின் உரைகளைக் கேட்டு கேட்டு தனக்குள் ஊறிய சுயமரியாதைக் கருத்துக்கள் உள்ளிட்ட பல விஷயங்களையும் வாத்தியாரின் முன் பவ்யமாய் எடுத்து வைத்திருக்கிறார் ராசா. எல்லாவற்றையும் பொறுமையாய் கேட்ட வாத்தியார், ‘பெரியாருடைய திராவிடக் கருத்துக்கள் சமூகத்தைச் சுத்திகரிக்கும் ஒரு கருவி. எதிர்காலத்தில் அந்தத் திராவிடப் பாதையில் பயணிப்பதற்கான ஆர்வமும், துடிப்பும் உன்னிடம் இருக்கு. உன்னை திராவிடப் பாதையில் பொருத்திக் கொள்ள உனக்கு கூடுதல் பயிற்சிகள் தேவை. நான் சொல்லும் இடத்திற்கு சென்று பெரியாரைப் பற்றியும், திராவிடக் கருத்துக்களைப் பற்றியும் முறையாகத் தெரிந்து கொள்கிறாயா?’ போர்க்களத்தில் அர்ஜுனனுக்கு கிருஷ்ணன் உபதேசித்த கீதா உபதேசம் கணக்காய்த்தான் வாத்தியாரின் வார்த்தைகள் காதுகளில் விழுந்தது ராசாவுக்கு.

கண்களில் ஆர்வமும், உதடுகளில் துடிப்பும், வார்த்தைகளில் ஆசையும் சேர்த்து, ‘நீங்க சொல்ற எடத்துக்கு போறேங்கய்யா...’ பவ்யமாய் சொன்னார் ராசா.

அந்த இடம் எது? சொன்னபடி ராசா அங்கே போனாரா? அங்கே நடந்தது என்ன?

-அலைக்கற்றை ஓய்வதில்லை

http://www.tamilagaarasiyal.com/ActionPages/Content.aspx?bid=2222&rid=101