Thursday, January 13, 2011

கம்ப்யூட்டர் பாதுகாப்பு



கம்ப்யூட்டரில் நாம் பயன்படுத்தும் தகவல்கள், ஆவணங்கள், நிழற்படங்களைப் பல வேளைகளில் பாதுகாக்க வேண்டியுள்ளது. இவற்றிற்கான தொழில் நுட்பங்கள் பல வகையில் நமக்குக் கிடைக்கின்றன. அவை குறித்து இப்பகுதியில் விரிவாக எழுதப் பட்டுள்ளது. உங்களுடைய நினைவில் உள்ள அவற்றை, இந்த வினாடி வினா மூலம் புதுப்பித்துக் கொள்வோம்.
1.தகவல்களைத் தனிப்பட்ட முறையில் சுருக்கி, அதனை அதற்கான கீ உள்ள ஒருவர் மட்டுமே படிக்கும் முறையில் அமைக்கும் தொழில் நுட்பத்திற்கான பெயர் என்ன?
அ. Compression
ஆ.Systematic Variation
இ.Encryption
2.கம்ப்யூட்டர் பாதுகாப்பு குறித்த சொற்களில் Hash என்பது எதனைக் குறிக்கிறது?
அ. குக்கீஸ் அழிக்கும் தொழில் நுட்பம்
ஆ.சுருக்கப்பட்ட ஒன்றின் மதிப்பு (Encrypted Value)
இ. ரகசியமாகச் சுருக்கப்பட்ட ஒன்றினைத் திறக்கும் கீ (Encrypted Key)
3. SSL என்பது எதனைக் குறிக்கிறது?
அ. Secure Sockets Layer
ஆ. Secret Service Logrithm
இ.Systematic Security Level
4. Firewall என்பது என்ன?
அ.ஒரு ஆண்ட்டி வைரஸ் சாப்ட்வேர் தொகுப்பு
ஆ.இன்டர்நெட் பயன்பாட்டினைத் தொகுக்கும் ஒரு சாப்ட்வேர்
இ.இன்டர்நெட் இணைப்பு செயல்படுகையில் ஒரு வடிகட்டியாகச் (Filter) செயல்படும் ஒரு புரோகிராம்.
5. Proxy Server என்பது என்ன?
அ.முதன்மை சர்வர்களிலிருந்து கம்ப்யூட்டருக்குத் தகவல் செல்லும் முன், அவற்றைப் பெற்று கம்ப்யூட்டருக்கு அனுப்பும் ஒரு சர்வர்
ஆ.மெயில் சர்வர் போலச் செயல்படும் ஒரு சர்வர்
இ. உணவு விடுதிகளில் சாப்பிடுகையில், நம் டம்ளர்களில் தண்ணீர் இல்லாத போது, அதைப் பார்த்தவாறே வேறு ஒரு இடத்திற்கு, ஒரு வேலையும் இல்லாமல் செல்லும் பணியாளர்.
6. DDosஎன்பது எதனைக் குறிக்கிறது?
அ.Dangerous DOS open Security
ஆ.Digital Default of Servers
இ.Distributed Denial of Service
விடைகள்:
1. Encryption : தகவல்களை இவ்வழியில் சுருக்கி அமைக்கும்போது, அதற்கான கீ உள்ள ஒருவர் மட்டுமே, அதனைத் திறந்து விரித்துப் பார்க்க முடியும். இதனையும் கூட எப்படியாவது தெரிந்து கொண்டு, கீயை அமைக்கும் திருடர்கள் உள்ளனர். ஆனால் அது எப்போதாவது மட்டுமே நடைபெறும் ஒன்றாகும்.

2. Encrypted Value. Hash அல்லது Hash Value என்பது, ரகசியமான குறியீடுகளில் சுருக்கப்பட்ட ஒரு தகவலைக் காட்டும், பல கேரக்டர்கள் அடங்கிய தொகுப்பு. Hashing Algorithm என்பதன் வழியாக தகவல்களைக் கொண்டு சென்று இதனை உருவாக்கலாம்.

3. Secure Sockets Layer: தகவல்களை ரகசியக் குறியீடுகளில் பொதுவான முறையில் சுருக்குவது.

4.C. Firewall இண்டர்நெட் இணைப்பில் ஒரு வடிகட்டியாகச் செயல்படுகிறது.

5.A. Proxy Server கள் இன்டர்நெட்டில் இடைத் தரகர்கள் போலச் செயல்படுபவை. அவை, இணையத் தளங்களை மற்றும் பக்கங்களை, அவை உள்ள சர்வர்களிலிருந்து பெற்று, தேவை எனக் கேட்ட்கும் கம்ப்யூட்டருக்கு அனுப்பும்.

6.C.Distributed Denial of Service: சர்வர் ஒன்று ஒரு நேரத்தில், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கேள்விகளை மட்டுமே கையாள முடியும். இந்த சர்வரை வேண்டுமென்றே இயங்காமல் செய்திட, அந்த எண்ணிக்கைக்கு மேலாக, பல லட்சக்கணக்கில் கேள்விகளை அனுப்பலாம். மிகப் பெரிய அளவில், பல கோடிக் கணக்கில் கேள்விகள் ஒரு சர்வருக்குச் சென்றால், பன்னாட்டளவில் இன்டர்நெட் செயல்பாடே திணறத் தொடங்கிவிடும்.

http://ta.wordpress.com/

No comments:

Post a Comment