Saturday, March 19, 2011

எவ்ளோ அடிச்சாலும் தாங்குவோம்ல...


* எவ்ளோ அடிச்சாலும் தாங்குவோம்ல...

வடிவேலு பாணியில சொல்லப்போனா எவ்ளோ அடிச்சாலும் தாங்குற ஒருவரைத்தான் நாம இப்பவும் பிரதமரா வெச்சி வேடிக்கை பாத்துக்கிட்டு இருக்கோம்.ஒரு மனுஷன் ஒருதடவை அசிங்கப்பட்டான்னா அடுத்த தடவை ச்சே.. போன தடவ தான் அசிங்கப் பட்டோம்.இந்த தடவை அசிங்கப் படக்கூடாதுன்னு தான் நெனைப்பாய்ங்க...ஆனா நம்ம பிரதமர் அப்படியெல்லாம் இல்ல,உச்சநீதிமன்றம் எவ்ளோ திட்டினாலும் கொஞ்சம் கூட காதுல வாங்கிக்காம நாங்கெல்லாம் அடி வாங்காத எடமே...கிடையாது,”எவ்ளோ அடிச்சாலும் தாங்குவோம்”கிற கதையா எதைப்பத்தி கேட்டாலும் எனக்கு எதுவுமே தெரியாதுன்னு சொல்லி மழுப்புறதையே வாடிக்கையா வெச்சிக்கிட்டிருக்கார்.

“ஸார்...என்ன ஸார்...உங்க துறையில உள்ளவங்க இவ்ளோ ஊழல் பண்ணிருக்காங்க இதப் பத்தி நீங்க என்ன நெனைக்கிறீங்கன்னு கேட்டா “அப்டியா...எனக்கு எதுவுமே தெரியாதே..? ன்னு ரொம்ப கூலா சொல்லிட்டி கெளம்பிடுறாரு...நேத்திக்கு கூட அணுசக்தி ஒப்பந்தத்துல மெஜாரிட்டி வேணும்கிறதுக்காக சகட்டுமேனிக்கு எல்லா கட்சி எம்.பி.க்களுக்கும் காசை வாரி இறைக்கிறதா விக்கிலீக்ஸ் இணையதளம் ஆதாரப்பூர்வமான செய்திகளை வெளியிட,கொதிச்சுப்போன எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தை வழக்கம் போல நடத்த விடல...

சரி இந்த குற்றச்சாட்டைப் பத்தி நீங்க என்ன நெனைக்கிறீங்கன்னு பிரதமர்கிட்ட கேட்டா அவரும் வழக்கம் போல இதப்பத்தி எனக்கு ஒன்னும் தெரியாதுன்னு சொல்லிட்டார்.அதுவுமில்லாம முடிஞ்சி போன ஒரு விஷயத்தை மறுபடியும் கிளர்றது ரொம்ப வருத்தமளிக்குதுன்னு சொல்றார்.அதாவது நாங்க பணமே கொடுத்து நம்பிக்கை வாக்கெடுப்புல ஜெயிச்சிருந்தாலும் அது பழைய விஷயம் அதனால முடிஞ்சி போன அதை நீங்க கிளறக்கூடாதுன்னு சொல்றார். இதெப்படி இருக்கு? இப்படிப்பட்டவங்களை எல்லாம் ஆட்சியில உட்கார வெச்சி அழகு பாக்குற நம்ம நாட்டு மக்களை உச்சிமோந்துல பாராட்டணும்.

http://oruvaarthai.blogspot.com/feeds/posts/default?alt=rss

மதுரை தினகரன் பத்திரிகை எறிப்பு வழக்கு?

“நீதியே நீ இன்னும் இருக்கின்றாயா? நீயும் அந்த கொலைக்களத்தில் மாண்டு விட்டாயா?” பூம்புகார் படத்தில் வரும் கோவலன் கொலையுண்ட காட்சியில் ஒலிக்கும் பாடல் இது.

இப்போது மதுரை தினகரன் அலுவலகம் எரிக்கப்பட்டு 3 ஊழியர்கள் பலியான வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை என்ற செய்தியைப் பார்க்கும்போது பூம்புகார் படப்பாடல்தான் நினைவுக்கு வருகிறது. திமுகவின் அடுத்த வாரிசு யார் என்ற கருத்துக் கணிப்பு முடிவு தினகரன் நாளேட்டில் வெளியானதைத் தொடர்ந்து, மதுரையில் உள்ள அந்த அலுவலகம் தாக்கப்பட்டது. மதுரை மேயர் உள்பட இந்த தாக்குதலில் ஈடுபட்ட காட்சி தினகரன் உள்ளிட்ட பத்திரிகைகளில் வெளியானதோடு சன் தொலைக்காட்சியிலும் திரும்பத் திரும்ப ஒளிபரப்பானது. இந்தத் தாக்குதலின் போது அலுவலகம் தீக்கிரையாக்கப்பட்டதில் 3 அப்பாவி ஊழியர்கள் பலியானார்கள். அப்போது மதுரைக்கு வந்த சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறன், நீதி கிடைக்கும் வரை ஓயமாட்டேன் என்று சூளுரைத்தார். ஆனால் இன்றைக்கு தினகரன், தமிழ்முரசு பத்திரிகைகளிலோ, சன் தொலைக்காட்சியிலோ தினகரன் எரிப்பு வழக்கில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு செய்தி கூட வெளியாகவில்லை. கலாநிதி மாறன் கூறிய நீதியை நிலைநாட்டும் விதம் இதுதானோ என்று எண்ணத்தோன்றுகிறது. தினகரன் ஊழியர்கள் கொலை என்பது யாருக்கும் தெரியாமல் நடந்த ஒன்றல்ல. பட்டப் பகலில் நடந்த ஒன்று. தாக்குதலில் ஈடுபட்டவர்கள் குறித்து வீடியோ ஆதாரம் உள்பட விரிவான ஆதாரம் உண்டு. ஆனாலும், சர்வசாதாரணமாக குற்றம் சாட்டப்பட்ட 16 பேரும் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

புகார் மனு கொடுத்தவரிலிருந்து, முதல் சாட்சியம் அளித்த காவல்துறை அதிகாரி உள்பட அனைவரும் பிறழ்சாட்சியாக மாற்றப்பட்டுள்ளனர். இந்த வழக்கை நடத்திய மத்திய புலனாய்வுத்துறை எந்த லட்சணத்தில் அல்லது எத்தகைய உள்நோக்கத்துடன் நடந்து கொண்டுள்ளது என்பது சொல்லித் தெரிய வேண்டிய ஒன்றல்ல. தினகரன் எரிப்பைத் தொடர்ந்து முதல்வர் குடும்பத்தில் விரிசல் ஏற்பட்டது. மத்திய அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் பதவி பறிக்கப்பட்டது. சுமங்கலி கேபிள் விஷனுக்கு போட்டியாக ராயல் கேபிள் விஷன் உருவாக்கப்பட்டது. திடீரென அரசு கேபிள் டி.வி.யும் துவக்கப்பட்டது.

இடையில் கண்கள் பணித்திட, இதயம் மகிழ்ந்திட குடும்ப இணைப்பு ஏற்பட்டது. தயாநிதி மாறன் மீண்டும் மத்திய அமைச்சராக்கப் பட்டார். அரசு கேபிள் டி.வி. அறுத்துவிடப்பட்டது என்பதெல்லாம் வரலாறு அல்ல. நேற்றைக்கு நடந்த நிஜம். இதன் தொடர்ச்சியாகவே தினகரன் எரிப்பு வழக்கு ஒன்றுமில்லாமல் போய்விட்டது. முன்னாள் அமைச்சர் தா.கிருஷ்ணன் கொல்லப்பட்ட வழக்கிலும் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இப்போது தினகரன் எரிப்பு வழக்கிற்கும் அதே கதி ஏற்பட்டுள்ளது. ஒரு சாதாரண கொலை வழக்கில் கூட அரசின் சார்பில் மேல்முறையீடு செய்யப்படும். ஆனால், தா.கிருஷ்ணன் கொலை வழக்கில் எத்தகைய மேல்முறையீடும் செய்யப்படவில்லை. இப்போது தினகரன் எரிப்பு வழக்கில் அரசு என்ன செய்யப் போகிறது என்பது மிகப் பெரிய கேள்விக்குறி. பதில் சொல்லவேண்டிய பொறுப்பு வழக்கை நடத்திய மத்திய புலனாய்வுத்துறைக்கும், தமிழக அரசுக்கும் உண்டு.

http://www.hindu.com/thehindu/holnus/000200705092201.htm

http://www.hindu.com/2007/05/16/stories/2007051610270100.htm

http://www.telegraphindia.com/1070516/asp/nation/story_7783947.asp

http://www.deccanherald.com/content/40500/17-accused-acquitted-dinakaran-attack.html

http://lightink.wordpress.com/2009/12/13/

தலையங்கம்: பொறுப்பில்லாத பிரதமர்!



தான் செய்த தவறுக்கான பழியை அடுத்தவர் மேல் போட்டுத் தப்பித்துக் கொள்வது என்பது அதிகார வர்க்கத்துக்கே உரித்தான "உயரிய' பண்புகளில் ஒன்று. இந்தியாவின் இந்நாள் பிரதமரான மன்மோகன் சிங், ஒரு முன்னாள் அரசு உயரதிகாரி என்பதால், அவரது அடிப்படை மனோபாவம் மாறாமல் இருப்பதில் வியப்பொன்றும் இல்லை.

பிரதமரின் தலைமையிலான உயர்மட்டக் குழுவின் பரிந்துரையின் பேரில் ஊழல் கண்காணிப்பு ஆணையராக பி.ஜே. தாமஸ் நியமிக்கப்பட்டது செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது முதலே பிரதமரின் முடிவு சர்ச்சைக்குரியதாகி இருக்கிறது. நமது தலையங்கத்தில் முன்பே குறிப்பிட்டிருந்ததுபோல, ஒரு பிரதமர் தனக்கு எதுவுமே தெரியாது என்றோ, தனக்குத் தெரியாமல் நடந்துவிட்ட தவறு என்றோ குறிப்பிட்டுத் தப்பித்துக் கொள்ள முடியாது, கூடாது. நூறு கோடி இந்தியர்களின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் பதவியில் இருப்பவர், அந்தப் பதவிக்கே உரித்தான பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும் என்பதை யாரும் சொல்லித் தெரியவேண்டியதில்லை.

பி.ஜே. தாமûஸ ஊழல் கண்காணிப்பு ஆணையராக நியமிக்கப் பரிந்துரைக்கப்பட்டபோதே ஊடகங்களில் பலத்த எதிர்ப்பும் கண்டனமும் எழுந்தவண்ணம் இருந்தன. கேரள மாநிலத்தில் நடைபெற்ற பாமாயில் இறக்குமதி ஊழலில் பி.ஜே. தாமஸ் சம்பந்தப்பட்டிருப்பதும், அவர் மீது விசாரணை நடைபெற்று வருவதும் அநேகமாக இந்தியாவிலுள்ள அத்தனை தினசரி பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிச் சேனல்களிலும் பரபரப்பான செய்தியாக வெளியானது. தாமஸ் மீது அப்படி ஒரு விசாரணை இருப்பது பற்றியே தெரியாமல் இருந்திருப்பதாகப் பிரதமர் கூறுவது உண்மையானால், நமது பிரதமர் இந்தியப் பத்திரிகைகளைப் படிக்கிற, தொலைக்காட்சிச் சேனல்களைப் பார்க்கிற பழக்கமில்லாதவர் என்றுதான் கருத வேண்டியிருக்கிறது. ஒருவேளை, லண்டன் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட் போன்ற மேலைநாட்டுப் பத்திரிகைகளைத்தான் படிக்கிறாரோ என்னவோ, யார் கண்டது?

""தாமஸ் நியமனத்தில் ஏற்பட்ட தவறுக்கு உயர்மட்டத் தேர்வுக் குழுவின் தலைவர் என்பதாலும், பிரதமர் என்ற முறையிலும் நான் முழுப் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்'' என்று பவ்யமாக ஒத்துக்கொள்வதுடன் பிரதமர் நிறுத்தியிருந்தால், "மறப்போம், மன்னிப்போம்' என்று விட்டுவிட்டிருக்கலாம். அடுத்தாற்போல அவர் அவிழ்த்து விட்டிருக்கும் அண்டப்புளுகுகளைத்தான் நம்மால் சகித்துக் கொள்ள முடியவில்லை.

செப்டம்பர் 3-ம் தேதி நடந்த ஊழல் கண்காணிப்பு ஆணையர் நியமனத்துக்கான உயர்மட்டக் குழுவின் கூட்டத்துக்கு வருவதுவரை, அந்தப் பதவிக்காகப் பரிந்துரைக்கப்பட்டிருந்த மூன்று நபர்களில் ஒருவரான பி.ஜே. தாமஸ் மீது விசாரணை நடந்து கொண்டிருப்பது பற்றித் தனக்குத் தெரியாது என்று நா கூசாமல் சொல்லித் தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறார் பிரதமர். இதற்கு அவர் கூறும் காரணம் என்ன தெரியுமா?

""பி.ஜே. தாமஸ் கேரள மாநிலத்தின் தலைமைச் செயலராக இருந்தவர். மத்திய அரசின் செயலராகப் பணியாற்றியவர். இந்தப் பணி நியமனங்களுக்கு முன்னால் அவரது பின்னணி கண்காணிப்புத் துறையால் பரிசீலிக்கப்பட்டிருக்கும் என்று நினைத்தேன். உயர்மட்டக் குழுவின் கூட்டத்தில், மூன்று உறுப்பினர்களில் ஒருவரான எதிர்க்கட்சித் தலைவி சுஷ்மா ஸ்வராஜ், பி.ஜே. தாமûஸ நியமிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தபோதுதான், தாமஸ் மீது ஊழல் விசாரணை நடைபெறுவது பற்றிய விவரமே எனக்குத் தெரியும்'' - இது மாநிலங்களவையில் நேற்று பிரதமர் அளித்திருக்கும் தன்னிலை விளக்கம்.

அது உண்மை என்றே நம்புவோம். இப்படி ஒரு குற்றச்சாட்டை எதிர்க்கட்சித் தலைவியும், மூன்று பேர் குழுவில் ஒருவருமான சுஷ்மா ஸ்வராஜ் முன்வைத்தவுடன், பிரதமர் என்ன செய்திருக்க வேண்டும்? கூட்டத்தைத் தள்ளி வைத்துவிட்டு, பி.ஜே. தாமஸின் பின்னணியைப் பற்றித் தீர விசாரித்த பிறகு, நியமனத்தை உறுதிப்படுத்துவதுதானே நியாயம்? ஏன் செய்யவில்லை?

தொலைத்தொடர்புத் துறையில் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக ஒரு "மெகா' ஊழல் நடைபெற்றிருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. அந்தத் துறையின் செயலராக இருந்தவர் பி.ஜே. தாமஸ். தனது துறையில் நடந்த ஊழலைப் பற்றி விசாரிக்க ஊழல் கண்காணிப்பு ஆணையத்துக்கு அதிகாரமில்லை என்று அறிவித்தவர் பி.ஜே. தாமஸ். அவசர அவசரமாக அதே பி.ஜே. தாமûஸ ஊழல் கண்காணிப்பு ஆணையராக நியமிக்க வேண்டிய அவசியம் என்ன? இதுகூடப் பிரதமருக்குத் தெரியாது என்று நம்மை நம்பச் சொன்னால் எப்படி?

அதையெல்லாம்விட மிகப்பெரிய வேடிக்கை பிரதமர் மன்மோகன் சிங், பழியைத் தனது பிரதமர் அலுவலக இணையமைச்சராக இருந்து இப்போது மராட்டிய மாநில முதல்வராக இருக்கும் பிருதிவிராஜ் சவாண் மீது போடுவதுதான். ""இதுபோன்ற கூட்டங்களுக்கான குறிப்புகளைத் தயார் செய்வது, பணியாளர் நியமனத் துறையின் இணையமைச்சர்தான். அவர் தயாரித்துத் தந்த குறிப்பில் தாமஸ் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருப்பது பற்றி எதுவும் இருக்கவில்லை'' என்கிறார் பிரதமர்.

அப்படியானால் நமது பிரதமர் சுயமாகச் சிந்தித்துச் செயல்படுபவர் அல்லவா? தனக்கு யாரோ தரும் குறிப்புகளின் அடிப்படையிலும் வேறு யாரோ வழங்கும் வழிகாட்டுதலின் அடிப்படையிலும் செயல்படுபவரா? வேறு யாராவது கூறியிருந்தால், ""இப்படிப் பேச உங்களுக்கு வெட்கமாக இல்லையா என்று கேட்கலாம். பிரதமரை எப்படிக் கேட்பது?''

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு பற்றிக் கேட்டால், அது அமைச்சர் ஆ. ராசாவின் முடிவு, தனக்கு எதுவும் தெரியாது என்று கைவிரிக்கிறார். காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பல கோடி கொள்ளை போயிருக்கிறதே என்றால், ""அப்படியா? தவறு செய்தவர்களைத் தண்டிக்காமல் விடமாட்டோம்'' என்றுகூறித் தனக்குத் தொடர்பே இல்லை என்று நழுவப் பார்க்கிறார். தாமஸ் நியமனம் பற்றிக் கேட்டால் அவர் மீது விசாரணை இருப்பதே தெரியாது என்று மாநிலங்களவையில் வாக்குமூலம் அளிக்கிறார். அப்படியானால், நமது பிரதமருக்குப் பதவி சுகத்தை அனுபவிப்பதைத் தவிர, வேறு ஒன்றுமே தெரியாதா?

கடைசியாக ஒரு கேள்வி. இன்றைய இந்தியாவைப் பிடித்திருக்கும் மிகப்பெரிய கேடு என்று கருதப்படும் ஊழலைத் தடுப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட ஊழல் தடுப்பு ஆணையர் என்கிற பொறுப்பான அரசியல் சட்ட நியமனப் பதவிக்கான தேர்வு நடைபெறுகிறது. அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளச் செல்வதற்கு முன்னால், சம்பந்தப்பட்ட கோப்புகளைப் படித்து, பட்டியலிலுள்ள நபர்களைப் பற்றி விசாரித்துத் தெரிந்து கொண்டு கூட்டத்தில் கலந்துகொள்வதுதானே முறை! அதைக்கூடச் செய்யாத பொறுப்பற்றதனம் ஒரு பிரதமருக்கு இருக்கலாமா?

கனிமொழியின் தாயார் தர்மா என்கிற ராஜாத்தி அம்மாள்

புதன்கிழமை, 02 மார்ச் 2011 09:02

ராஜேந்தர் சிங் சர்க்காரியா… இந்தப் பெயரில் சர்க்கரை இருந்தாலும், கருணாநிதிக்கு இந்தப் பெயர் வேப்பங்காயாகவே கசக்கும். கருணாநிதியின் ஊழல்களையும், அவர் ஊழல் செய்யும் முறைகளையும், மிகச் சிறப்பான புலனாய்வு அதிகாரிகளைக் கொண்டு ஆராய்ந்து, கருணாநிதியின் வண்டவாளங்களை தண்டவாளத்தில் ஏற்றிய பெருமை, இந்த நீதிபதி சர்க்காரியாவையே சாரும்.

அந்த சர்க்காரியா கமிஷனின் அறிக்கை ஒரு அரசு ஆவணமாகும். வழக்கமான அரசு ஆவணங்கள், தவறாமல் இருக்கக் கூடிய இடங்கள், சென்னை கன்னிமரா நூலகம், ஆவணக்காப்பகம், தலைமைச் செயலக நூலகம் மற்றும் சட்டப் பேரவை நூலகம். இந்த அத்தனை இடங்களிலும் இந்த நூல் திடீரென்று காணாமல் போவது தற்செயல் நிகழ்வாக எடுத்துக் கொள்ள முடியுமா ? ஆனால் இதுதான் நடந்துள்ளது. என்னதான் நடந்துள்ளது என்று சென்னை கன்னிமரா நூலகத்தில் விசாரித்த போது, தலைமைச் செயலகத்தில் அமைச்சர் அலுவலகத்தில் இருந்து அனைத்து நகல்களும் வாங்கிச் செல்லப் பட்டு விட்டன என்ற தகவல் தெரிய வந்தது. யார் வாங்கிச் சென்றார்கள் என்று கேட்டால், ‘மினிஷ்டர் ஆபீஸ்லேர்ந்து வாங்கிகினு போனாங்க சார்… அத்தோட அவ்ளோதான்….’ என்று கூறினார்.

Karunanidhi_with_3rd_wife_Rajathi_Ammal_by_HKR

இது போல ஆவணங்களை மறைப்பதன் மூலம், வரலாற்றை திரித்து, உத்தம சீலர் வேஷம் போட நினைக்கிறார் கருணாநிதி. ஆனால் கருணாநிதியின் கணக்கை பொய்யாக்க வேண்டாமா ? சவுக்கும் அதன் வாசகர்களும், பெரிய தில்லாலங்கடி இல்லையா ? சாம்பிளுக்காக ஒரே ஒரு பகுதி மட்டும், என் அன்பு சவுக்கு வாசகர்களுக்காக இதோ…..

தர்மாம்பாள் என்ற அல்லது இராஜாத்தி என்னும் திருமதி தர்மா தென்னாற்காடு மாவட்டத்தில் ஸ்ரீமுஷ்ணத்தில் திருமதி சிவபாக்கியம் அம்மாளுக்குப் பிறற்த கடைசி மகள் ஆவார். திருமதி சிவபாக்கியம் அம்மாள் முதலில் கருப்பையா நாடார் என்பவரை மணந்தார். அவர் மரணத்திற்குப் பின்னர் ஸ்ரீமுஷ்ணத்தைச் சேர்ந்த முத்துக்குமாரசாமி நாடார் என்பவரை மறுமணம் செய்து கொண்டார். இரண்டாவது திருமணத்திற்குப் பின்னர் அவருக்கு இராஜலட்சுமி, சுப்ரமணியம், தர்மா என்ற மூன்று பிள்ளைகள் பிறந்தனர். இரண்டாவது கணவரும் இறந்து விட்டார். அதன் பின்னர் சிவபாக்கியம் அம்மாள் அந்த கிராமத்தை விட்டு சிதம்பரம் வந்து அங்கு தன் மூன்று பிள்ளைகளுடன் தங்கியிருந்தார். அதன் பிறகு அவர் தனது இருப்பிடத்தை சென்னைக்கு மாற்றிக் கொண்டார். அவர் வசதியான நிலையில் இல்லை. அவருடைய மூன்று குழந்தைகளில் யாரும் தொடக்கக் கல்வியைத் தவிர உயர்கல்வி படிக்க முடியவில்லை. சென்னையில் சிவகாக்கியமும் அவர் குழந்தைகளும், இராயப்பேட்டையில் 62, முத்துமுதலி தெருவில் உள்ள ஓர் அறையில் தங்கியிருந்தனர். அதற்கு மாதம் ரூ.18 வாடகை கொடுத்து வந்தார். திருமதி தர்மா நாடகத்தில் நடிப்பதை தன் வாழ்க்கைத் தொழிலாக மேற்கொண்டார். அவர் சகோதரர் சுப்ரமணியம் எம்.பி.டி லாரி சர்வீசில் கூலியாக வேலை பார்த்து வந்தார். 1962ல் மயிலாப்பூர், விவேகானந்தா கல்லூரிக்கு எதிரேயுள்ள ஒரு வீட்டை மாதம் ரூ.75 வாடகைக்கு எடுத்துக் கொண்டு அங்கு அவர் குடியேறினர்.

1966ல் “காகிதப்பூ“ என்னும் நாடகத்தில் திருமதி தர்மாவும் திரு.மு.கருணாநிதியும் ஒன்றாக இணைந்து நடித்த போது அவர்கள் இருவரும் சந்திக்க நேரிட்டது. திரு.கருணாநிதி கூறியுள்ளபடி, அவர் திருமதி.தர்மாவை 1966ல் செப்டம்பர் மாதம் 23ந் தேதி சமயச் சார்பற்ற முறையில் (இதுக்குப் பேர்தான் சுயமரியாதைத் திருமணமா ? … கருமம். கருமம்) திருமணம் செய்து கொண்டார். அது முதற்கொண்டு இருவரும் கணவன் மனைவியாகவே வாழ்ந்து வருகின்றனர். 1966ம் ஆண்டு மார்ச் 10ல் திருமதி தர்மா, சென்னை.17, தியாகராய நகரில், 24.A, திருமூர்த்தி தெருவில் மாதம் ரூ.100 வாடகைக்கு வீடு ஒன்றை எடுத்து அதில் வசித்து வந்தார். இந்த வீட்டுக்கான வாடகையை கருணாநிதி கொடுத்து வந்தார். திருமதி தர்மாவுடன் அவர் தாயார், சகோதரர், சகோதரி ஆகியோரும் அதே வீட்டில் வசித்து வந்தனர். திரு கருணாநிதிக்கு 1968ம் ஆண்டு ஜனவரி மாதம் 5ம் நாளில் ஒரு பெண் குழந்தைக் பிறந்தது (அப்போ ஜாதகம் பாத்திருந்தா, ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடியை இந்தப் பிள்ளை ஆட்டையைப் போடும் என்று சொல்லியிருப்பார்களோ… நமக்கு இந்த மேட்டர் தெரிஞ்சுருந்தா அப்போவே ஏதாவது பண்ணியிருக்கலாம் பாஸ்) என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

kani_3

சென்னை தியாகராய நகர் திருமூர்த்தி தெருவில் உள்ள அவரது வீட்டில் தொலைபேசி ஒன்றும் நிறுவப்பட்டுள்ளது. திரு கருணாநிதி தர்மாவை பார்க்க அவ்வீட்டிற்கு அடிக்கடி வருவது வழக்கம். அதன் பின்னர் 1969ம் ஆண்டு ஜனவரி மாதம் 20ம் நாளில் திருமதி தர்மா, சென்னை இராஜா அண்ணாமலைபுரத்தில் எண் 9, முதல் குறுக்குத் தெருவில் உள்ள வீட்டை திருமதி ஈ.எல்.விசுவாசம் என்பவரிடமிருந்து 57 ஆயிரத்திற்கு கிரயத்திற்கு வாங்கியதாக கூறப்படுகிறது.

சாம்பிள் எப்பூடி…. ? தமிழில் மிக முக்கியமான பங்கை வகிக்கும் நாடகத் துறை ஒரு காதலை அரங்கேற்றியிருக்கிறது… அதற்கு போய் பய புள்ளைக என்னமா பேசுறாங்க பாஸ்… அதுவும் இந்த எதிர்க்கட்சிக் காரய்ங்க இருக்காங்களே….

2

காதல் வயப்பட்டிருக்கும் காதலர்கள், அப்போது வெளியாகியுள்ள திரைப்படங்களில் உள்ள பாடல்களை தங்கள் காதலியிடம் / காதலரிடம் பாடி, மகிழ்வது வழக்கம். இவர்களுக்கு திருமணமானது 1966ம் ஆண்டு. அந்த ஆண்டு வெளியான திரைப்படங்களில் உள்ள பாடல்களில், இந்த சிறப்பான ஜோடிக்கு பொருத்தமான பாடல் எது என்று சவுக்கு ஆராய்ந்ததில், முகராசி படத்தில் இடம் பெற்ற, இந்தப் பாடலே மிக மிக பொருத்தமாக இருக்கிறது.

“எனக்கும் உனக்கும் தான் பொருத்தம்..

இதில் எத்தனை கண்களுக்கு வருத்தம்…

நம் இருவருக்கும் உள்ள நெருக்கம்….

இதில் யாருக்கு இங்கே கிடைக்கும்…”

60களில் 75 ரூபாய் வாடகைக்கு இருந்த ராஜாத்தி என்கிற தர்மாம்பாள் தற்போது ராஜாத்தி கருணாநிதியாக மாறி இருக்கிறார். இவருக்குத் தான் இன்று எத்தனை சொத்துக்கள் தோழர்களே…..

வெஸ்ட் கேட் லாஜிஸ்டிக்ஸ் என்ற பல கோடி ரூபாய் கப்பல் போக்குவரத்து நிறுவனம், சிஐடி காலனி வீடு, பினாமி பெயரில் அண்ணாசாலை வோல்டாஸ் கட்டிடம், ஊட்டியில் 535 ஏக்கர் எஸ்டேட், விலையுயர்ந்த கார், மாட மாளிகை, கூட கோபுரம்…..

rajathi

என் அன்பு உறவுகளே…. சவுக்கை படிக்கும் நீங்கள் இணையத்தில் எத்தனை வல்லவர்கள் என்பது நன்கு தெரியும்…. உங்களிடம் சவுக்கு உரிமையோடு அன்புக் கட்டளை இடுகிறது. இணையத்தை பயன்படுத்தும் தமிழர் ஒருவர் கூட, இந்த விபரத்தை படிக்காமல் இருக்கக் கூடாது. நகலெடுத்து, அத்தனை பேருக்கும் மெயிலில் இதை அனுப்புங்கள். இறந்து போன ஈழத் தமிழர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி, துரோகிகளை துகிலுரிப்பதுதான். சவுக்கை ஏமாற்ற மாட்டீர்கள் தானே… ?

http://www.savukku.net/index.php?option=com_content&view=article&id=467:2011-03-02-03-47-36&catid=1:2010-07-12-16-58-06&Itemid=2

2ஜி ஊழலில், கனிமொழி மற்றும் தயாளு மீது குற்றப் பத்திரிக்கை

வெள்ளிக்கிழமை, 18 மார்ச் 2011 20:25

2ஜி விவகாரத்தில் வருகின்ற மார்ச் 31ம் தேதிக்குள், குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த விவகாரத்தில், ஆ.ராசா, ஷாகீத் பல்வா, மற்றும் உயர் அதிகாரிகள் கைது செய்யப் பட்டு திஹார் சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர்.

2 ஜி லைசென்ஸ் ஒதுக்கிய விவகாரத்தில், லைசென்ஸுக்கு கைமாறாக, ராசாத்தி அம்மாளுக்கு சென்னை அண்ணா சாலையில் உள்ள டாடா நிறுவனத்துக்கு சொந்தமான, வோல்டாஸ் கட்டிடத்தை டாடா நிறுவனம் வழங்கியுள்ள தகவல் வெளியானது. இதையடுத்து, கருணாநிதியின் இரண்டாவது மனைவி தயாளு அம்மாள் 60 சதவிகித பங்குகளை வைத்திருக்கும், கலைஞர் டிவிக்கு ஸ்வான் டெலிகாமின் துணை நிறுவனத்தால் கொடுக்கப் பட்ட 216 கோடி ரூபாயை சிபிஐ லஞ்சப் பணமாகவே கருதியுள்ளது.

Kanimozhi-Pic-by-HK-Rajashekar

உன் குத்தமா.... ? எங் குத்தமா.... ? யாரை நான் குத்தம் சொல்ல ?

இந்த இரண்டு கைமாறுகளையும் வைத்து, 2ஜி விவகாரத்தில் நேரடியாக ஆதாயம் பெற்றதாக, சிபிஐ ஆல், இந்த இருவரும் குற்றம் சாட்டப் பட்டு, இந்திய தண்டனைச் சட்டத்தின் படி, கூட்டுச் சதி, ஏமாற்றுதல், மோசடி ஆகிய குற்றங்களுக்காக, இவர்கள் மீது குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்ய உள்ளதாக சிஎன்என் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

31922609

இப்படி மாட்டி விட்டுட்டியே படுபாவி.... நல்லா இருப்பியா........ நீயும் திஹாருக்கு வா.......

மார்ச் 31 அன்று சிபிஐ தயாளு அம்மாள் மீதும், கனிமொழி மீதும் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்தால், ஏப்ரல் 13 அன்று நடக்கவுள்ள தேர்தலில், திமுகவுக்கு பலத்த அடியாக இது அமையும் என்று கருதப் படுகிறது.

ராசாத்தி அம்மாள் வோல்டாஸ் கட்டிடத்தை வாங்கிய விவகாரத்தை, சவுக்குதான் முதன் முதலாக தொழில் அதிபர் ராசாத்தி அம்மாள் என்ற கட்டுரையில் வெளிப்படுத்தியது என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறது.

http://www.savukku.net/index.php?option=com_content&view=article&id=564:2-&catid=1:2010-07-12-16-58-06&Itemid=2

super comedy

குமுதம் VS கலைஞர் பேட்டி - காமெடி கும்மி & உட்டாலக்கடி கலாட்டா

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhwNUEquDTiznjhdzaDb89GT-JalDR0Yudf7kH-5Dq7bMuo9qgauZJpkRncSl0Szw04y2jK4acizshWuzTlvUhV-rEGImOuNaba5R_cNdrqRy7V4nw15WOwMn_4oY0PxjZlM_COM-0wt5rN/s1600/Karunanidhi+cartoon.jpg
தமி்ழ்நாட்டின் நெம்பர் ஒன் தமிழ் வார இதழான குமுதம் (2.3.2011) இன்று கலைஞரைப்பேட்டி எடுத்து போட்டிருக்கிறது.ஸ்பெக்ட்ரம் பிரச்சனை வெற்றியைப்பாதிக்குமா? என சென்சேஷனல் டைட்டிலுடன் வந்துள்ள பேட்டி படிக்க செம காமெடியாக இருந்தது.அதன் ஒரிஜினல் பதிப்பை லைப்ரரியிலோ. நண்பர்களிடம் ஓ சி புக் வாங்கியோ படித்து ரசியுங்கள். ( நாம எந்தக்காலத்துல காசு குடுத்து புக் வாங்கி இருக்கோம்?).இப்போது இங்கே கேள்வி மட்டும் குமுதம் கேட்டது ,பதில் கலைஞர் சொன்னதை போடாமல் கலைஞரின் மனசாட்சி என்ன சொல்லி இருக்கும் என ஒரு கற்பனை.

1.” வரப்போகும் தேர்தலில் தி மு க வின் வியூகம் எப்படி இருக்கும்??”

இதுல புதுசா சொல்ல என்ன இருக்கு?எப்பவும் போலத்தான்.வர்றவங்க எல்லாம் வாங்கன்னு எல்லாரையும் கூட்டணில சேர்த்திக்க வேண்டியது. அப்புறம் தொகுதி பிரிக்கறப்ப பிரச்சனை வந்தா “உங்களுக்கு என் இதயத்தில் கண்டிப்பாக இடம் உண்டு என மழுப்புவது...

2. கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் தி மு க சாதித்தது என்ன?

என்ன இப்படி கேட்டுட்டீங்க?.கடந்த 64 வருட காலங்களிலேயே யாராலும் பண்ண முடியாத டார்கெட் ஒண்ணே முக்கால் லட்சம் கோடி ஊழல் அச்சீவ் பண்ணி இருக்கோமில்ல..ஸ்டாலின் -அழகிரி சண்டை வராம பேலன்ஸ் பண்றதே பெரிய சாதனையா இருக்கு.. எனக்கு.


3.நீங்க இது வரைக்கும் பல தேர்தலை சந்தித்து இருக்கீங்க. அந்த தேர்தலுக்கும், இந்த தேர்தலுக்கும் என்ன வித்தியாசம்?

அப்போவெல்லாம் குங்குமச்சிமிழ் அல்லது பனை ஓலை விசிறி குடுப்போம்,ஏமாளி ஜனங்க அதுக்கே ஆளுக்கு 2 ஓட்டு போடுவாங்க. இப்போ எல்லாரும் உஷார் ஆகிட்டாங்க. ஒரு ஓட்டுக்கு ரூ 2000, என் கிட்டே 4 ஓட்டு இருக்குன்னு கணக்கு போட்டு கேக்கறாங்க.. ஹூம் குடுத்துத்தொலைப்போம், சின்ன மீனைப்போட்டு பெரிய மீனை எடுக்க வேண்டியதுதான்.

http://athikalai.files.wordpress.com/2010/12/mathi_cartoon-1.jpg

4. எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் சிக்கல்கள் வந்தாலும் தேர்தலை உற்சாகமாகவே சந்திக்கிறீர்கள்.அதற்கான பலம் எங்கே இருந்து கிடைக்குது?

உள்ளுக்குள்ள பயம் இருக்கு, அதை வெளில காட்ட முடியுமா? 60 சீட் தான் ஜெயிப்போம்னு தெரிஞ்சாக்கூட “உடன் பிறப்பே ,நாம் 234 தொகுதிகள்லயும் வெற்றி பெறுவது உறுதி”அப்படின்னு உதார் விட்டுத்தானே பழக்கம்?

5. தி மு க தொண்டர்களை எப்படி எப்போதும் உற்சாகமாய் வைத்திருக்கிறீர்கள்?அவர்களை நினைக்கும்போது உங்களுக்கு என்ன தோன்றுகிறது?
1000 ஊழல்களை கட்சி பண்ணுனாலும்,தி மு க ஊழலில் ஊறிய கட்சிங்கறதை நம்ப மாட்டாங்க பாசக்காரப்பய புள்ளைக... ஏதாவது சந்தேகம் வந்தாக்கூட முரசொலில உடன்பிறப்பே...அப்படின்னு ஆரம்பிச்சு எதை எழுதுனாலும் நம்பிடறாங்க.. அவங்களை எல்லாம் நினைச்சா எனக்கு பாவமா இருக்கு....

6. இப்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் ஸ்பெக்ட்ரம் ஊழல் பிரச்சனை தி மு க வின் வெற்றி வாய்ப்பை பாதிக்குமா?

ம். அதனாலதான் பல்லைக்கடிச்சுக்கிட்டு ராம்தாஸ் கூட எல்லாம் கூட்டணி வைக்க வேண்டியதா இருக்கு. 10 சீட்டுக்கு பம்புன ஆள் கூட இப்போ 30 சீட்டுக்கு மேல வாங்கிட்டாரு.காங்கிரஸ் வேற ஆட்சில பங்குனு குண்டைத்தூக்கிப்போடறாங்க... பார்ப்போம்.முடிஞ்சவரை அடுத்த ஊழல் பண்ண சான்ஸ் கிடைக்குமா?ன்னு பார்க்கறேன். முடியலைன்னா இதுவரைக்கும் பண்ணுன ஊழல் பணத்தினை வெச்சு 5 வருஷம் தாட்ட வேண்டியதுதான்.

http://www.vinavu.com/wp-content/uploads/2010/06/karunanidhi.jpg
7. ஆ ராசாவை கைது பண்றப்ப உங்களுக்கு தகவலை சொல்லிட்டுத்தான் கைது பண்ணுனாங்களாமே...

ஆமா.. கூட்டணி தர்மம்னு ஒண்ணு இருக்கில்ல?

8. வரப்போகும் தேர்தலில் எந்தப்பிரச்சனை மையமா இருக்கும்?உங்க பிரச்சாரம் எதை முன்னிறுத்தி இருக்கும்?

எல்லாத்தேர்தல்லயும் சி எம் சீட்டு யாருக்கு? இதுதான் மையமா இருக்கும். நாடு எக்கேடு கெட்டு நாசமாப்போனா நமக்கென்ன?பதவிதானே நமக்கு முக்கியம்.மேடைல பேசறப்ப ஊழல் அற்ற ஆட்சின்னு உதார் விடுவோம். தனியா வீடு வீடா போய் ஒரு ஓட்டுக்கு ரூ 2000 தர்றோம்னு வாக்கு குடுப்போம்.

9. உங்க குடும்பமே சினி ஃபீல்டை ஆக்ரமிச்சு இருக்கறதா குற்றச்சாட்டு இருக்கே?

அட.. அறிவு கெட்ட ஜனங்களே...சினிமாத்துறைக்கு சலுகைகளை வாரி வாரி தர்றேனே எதுக்கு? மக்கள் வரிப்பணத்துல கிடைச்ச பணத்தை தமிழ் டைட்டிலுக்கு வரி விலக்குனு அள்ளி விடறது எதுக்கு..? எல்லாம் சுய நலம் தான்.அதுவுமில்லாம சினி ஃபீல்டை மட்டுமா நாங்க ஆக்ரமிச்சு இருக்கோம்?டி வி மீடியா கூட எங்க கட்டுப்பாட்டுல தான்.அவ்வளவு ஏன் ?இப்போ பேட்டி எடுக்கற குமுதமே கூட இப்போ என் பினாமி தானே....

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjOgklqPViRX-eroqDueWtQPI3kxnT5ksVBcDTMzkwX91kmFFnLyy9GhhQ9SAa3fdsj944VUFitLTFY2ZsEU1USRdGQSzxqCb09zWUYdqGFPIvYNnQUMZkzpcoMECisltEDpYQmsg7b6hNf/s1600/tamilmakkalkural_kalavanigal_anbucartoons.jpg

10. இலங்கைத்தமிழர்கள். மீனவர்கள் பிரச்சனை பற்றி என்ன நினைக்கறீங்க..?

அந்தப்பிரச்சனைகள் எல்லாம் தீர்க்கப்படாமல் அப்படியே இருக்கனும்.அப்போத்தான் தேர்தல் வாக்குறுதி தர்றப்ப 6-வது முறையாக நான் ஆட்சிக்கு வந்தால் இலங்கைத்தமிழர்கள். மீனவர்கள் பிரச்சனைஅனைத்தையும் தீர்ப்போம்னு சொல்ல முடியும்.இப்பவே தீர்த்துட்டா எதை வெச்சு பிழைப்பை ஓட்டறது?

11. மு க ஸ்டாலின் அண்மைக்காலமாக அபாரமாக உழைத்து வருகிறாரே...
அவரு கவலை அவருக்கு.. ஆட்சி அழகிரி கைக்குப்போயிடக்கூடாதுன்னு பார்க்கறார்.

12. கனி மொழியும் இப்போது அரசியல் பணி ஆற்றி வருகிறார்,அதைப்பற்றி?

எப்படியோ.. தமிழ்நாட்டை எங்க பரம்பரை இன்னும் 100 வருஷம் ஆனாலும் விடாம சுரண்டுவாங்க..

13. நீங்க ஓய்வின்றி உழைக்கிறீர்களே... அது ஏன்?

இதென்ன கேள்வி,, கொஞ்சம் ஏமாந்தா வேற யாராவது ஊழல் பண்ணிடுவாங்க.. முழுக்க முழுக்க எல்லா ஊழலையும் நாங்க தான் பண்ணனும்.

14. நீங்க 75 வருஷமா சினி ஃபீல்டுல இருக்கீங்க.. அப்போ.. இப்போ என்ன வித்தியாசம்?

அப்போவெல்லாம் என் வசனத்திற்காகவே படம் ஓடுச்சு. இப்போ என் வசனம்னு சொன்னாலே கட்சிக்காரன் கூட காத தூரம் ஓடறான். இளைஞன் படம் ரிலீஸ் ஆன 2 வது நாளே ஊத்திக்கிச்சு.. ஆனா ஒரு கவுரத்துக்காக பிரம்மாண்ட வெற்றின்னு கலைஞர் டி வி ல போட்டு ஒப்பேத்திட்டிருக்கோம்.

15. கலைஞர் சிறு குறிப்பு வரைகன்னு கேட்டா என்ன பதில் சொல்வீங்க?

உலக பணக்காரர் வரிசையில் முதல் இடம் லட்சியம்,ஆசியப்பணக்காரர் வரிசையில் முதல் இடம் நிச்சயம்.
16. பத்திரிக்கையாளர் சோ உங்க மேல கடுமையா தாக்குறாரே ஏன்?

நான் ஒரு தலித் என்பதால் இருக்கலாம்.என்னால சரியா பதிலடி கொடுக்க முடியாம போச்சுன்னா இந்த ஜாதி மேட்டரை கைல எடுத்துக்குவேன். ஒரு பய கேள்வி கேட்க முடியாது.


சன் டி வி பெண் ஊழியர் மர்ம மரணம் - குற்றம் நடந்தது என்ன?

http://www.cinemaexpress.com/Images/article/2010/3/17/15suntv.jpg

எனது சொந்த ஊரான சென்னிமலையில் ஊரின் செண்ட்டரான இடமான வண்டிப்பேட்டை பஸ் ஸ்டாப்பில் குமரன் சிலை எதிரே கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக ஃபேன்சி ஸ்டோர் & ஜவுளிக்கடை வைத்திருப்பவர் ஆறுமுகம் என்பவர்.ஆறுமுகம் கடை என்றால் ஊரில் தெரியாத ஆள் இல்லை. அந்தளவு ஃபேமஸ்.

இவரது மகன் நாகராஜன்.இவரது மகள் சங்கீதா. இவர் எம் எஸ் சி விசுவல் கம்யூனிகேஷன் ( VISUAL COMMUNICATION)படித்து சென்னையில் சன் டி வியில் நிருபராக வேலை பார்த்து வந்தார்.19.2.2011 சனி அன்று இவர் ரயிலில் அடிபட்டு மரணம் அடைந்ததாக 21.2.2011 தேதி இட்ட தினத்தந்தி நாளிதழில் படித்து அதிர்ச்சி அடைந்தேன்.( 2-ம் பக்கம்).

நான் விசாரித்த தகவல் மற்றும் எனது சந்தேகங்களை உங்கள் முன் வைக்கிறேன்.

1. சன் டி வி-யின் ஐ டி கார்டு TAG எப்போதும் இவர் அணிந்திருப்பார்,அல்லது இவரது கைப்பையில் அது இருக்கும்.விபத்து இரவு 7 மணிக்கு நடந்ததாக கூறப்படுகிறது.ரயில்வே போலீஸ் இவரது ஹேண்ட்பேக்கை பார்த்து அவரது அட்ரஸ்,வேலை பார்க்கும் நிறுவனம் என எங்கேயும் தகவல் சொல்லாமல் விட்டது ஏன்? இரவு 10 மணிக்கு அவரது அறைத்தோழிகள் விசாரித்த பிறகே செய்தி அவர்களுக்கு தெரிந்திருக்கிரது.

2. போலீஸ்-இன் F I R காப்பியில் (FIRST INFORMATION REPORT) விபத்தைப்பார்த்த ஆட்களின் சாட்சியம் பதிவு செய்யப்படவில்லை,ரயில்வே ஊழியர் ஒருவரின் கூற்றுப்படி செல் ஃபோனில் பேசியபடி வந்ததாகவும்,அது ரயில்வே டிராக்கில் விழுந்திருக்கலாம் எனவும்,அதை எடுக்க இவர் முயலும்போது அனந்தகிரி எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதாகவும் தெரிகிறது.ஆனால் எல்லாம் ஒரு அனுமானமே (ASSUMPTION). ஏன் ரயில் நிலையத்தில் உள்ள பொது மக்களிடம் ஸ்டேட்மெண்ட் வாங்கவில்லை?

3. சாதாரணமாக ஒரு யானை இறந்தாலே புகைப்படம் போடும் பத்திரிக்கைகளில் இந்த விபத்தில் ஏன் டெட் பாடியை ரயில்வே டிராக்கில் இருப்பது போல் காட்டவில்லை.?

4. செய்தியில் தனியார் தொலைக்காட்சி என்றுதான் போட்டு இருக்கிறார்கள். சன் டி வி பெயரை இருட்டடிப்பு செய்தது ஏன்?
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4vzsUVu7Sx-xfz_1Q10auMdGypVM_N5ECDcYH-o5As73xBF1zc9hwhy4QncnFP8knD-sPpC5HC6_8KdvAZX2uzQDgNMp7ml5clajNKBqOa8-W7RxTWs9sjW_e5-zBmcfsVUgLb9mRywFj/s1600/Train.jpg
5. கடைசியாக அவர் யாருடன் செல் ஃபோனில் பேசினார் என்பதை போலீஸ் ஏன் ட்ரேஸ் அவுட் செய்யவில்லை?

6. சங்கீதாவுக்கு வரும் மார்ச் மாதம் 7-ந்தேதி திருமணம் நடைபெற இருக்கிறது.அவர் மன ஒப்புதலுடனே இந்த மேரேஜ் நடக்கிறது என்பதற்கு ஆதாரம் உள்ளது.( கல்யாணப்பத்திரிக்கைகளை நண்பர்களுக்கு கொடுத்திருக்கிறார்,வருங்கால கணவருடன் ஃபோனில் அடிக்கடி பேசி இருக்கிறார்). எனவே தற்கொலையாக இருக்க வாய்ப்பே இல்லை.

7. மாதம் ரூ 30,000 சம்பளம் வாங்கும் இவர் ஏன் ரயிலில் பிரயாணம் செய்து ஆஃபீசுக்கு போறார்?பத்திரிக்கை செய்தியில் ஸ்கூட்டி வைத்திருப்பதாகவும் அவர் குடி இருக்கும் காவேரி நகரில் இருந்து சைதாப்பேட்டை வரை ஸ்கூட்டியில் போய் அங்கே வண்டியை பாஸ் போட்டு நிறுத்தி விட்டு ரயிலில் ஆஃபீசுக்கு போவார் என கூறுகிறார்கள்.இது பற்றி போலீஸ் ஏன் எதுவும் விசாரிக்கவில்லை?

8. பத்திரிக்கை செய்தியில் தனியார் டி வி சப் - எடிட்டர் மரணம் என உள்ளது.ஆனால் அதே பேப்பரில் இரங்கல் செய்தியில் அவர் நிருபர் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் எங்கும் சன் டி வி பெயர் இல்லை. இந்த முரண்பாடு ஏன்?நிருபர் என போடும்படி நிர்ப்பந்தம் ஏதாவது நடந்ததா?

http://adrasaka.blogspot.com/2011/02/blog-post_22.html

தமிழக முதலமைச்சர்கள் அன்றும் இன்றும்

இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரலாகப் பதவி வகித்தவர் சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் (ராஜாஜி). அதற்குப் பிறகு அவர் பண்டித் நேருவின் அமைச்சரவையில் பணியாற்றினார். வங்காளத்தின் ஆளுநராகப் பதவி ஏற்றார். ஓய்வு எடுத்துக் கொண்ட நிலையில் ஓர் இக்கட்டான காலகட்டத்தில் ஆந்திரம், கர்நாடகம், கேரள மாநிலத்தின் பகுதிகள் அடங்கிய சென்னை ராஜதானியின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். சென்னை தியாகராய நகர் பசுல்லா சாலையில் தான் அவரது வீடு இருந்தது. மிகவும் குறுகலானது மட்டுமல்ல சிறியதும் கூட.

பெருந்தலைவர் காமராஜ் தமிழக முதல்வராக அப்பழுக்கற்ற ஆட்சி நடத்தியவர். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்து ஒரு முறைக்கு இரண்டு முறை இந்தியாவின் பிரதமரைத் தேர்ந்தெடுத்தவர். அவர் வாழ்ந்த வீடு திருமலைப்பிள்ளை சாலையில் இப்போதும் நினைவு இல்லமாக இருக்கிறது. அது அவருக்குச் சொந்தமானதல்ல. வாடகை வீடுதான். இவரது மறைவுக்கு முன்பு அவர் குடியிருந்த வீட்டின் சொந்தக்காரர் வீட்டைக் காலி செய்யும்படி வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார். அவர் இறந்த பிறகு அந்த வீட்டை எம்.ஜி.ஆர். ஆட்சியில் விலை கொடுத்து வாங்கி காமராஜின் நினைவாலயமாக்கினார். அவர் வாழ்ந்த வீடு மிகவும் சிறியது. அந்த வீட்டில் இருந்து கொண்டுதான் உலகத் தலைவர்களையும் இந்தியத் தலைவர்களையும் சந்தித்தார். அவரைச் சந்தித்த தலைவர்கள் பெருமைப்பட்டார்களே தவிர அவரது வீடு சிறியது என்று எண்ணிக் கவலைப்படவில்லை.

முன்னாள் முதல்வர் பக்தவத்சலத்தின் வீடும் சிறியதுதான். அந்த வீட்டில் இருந்து கொண்டுதான் ஆட்சியும் நடத்தினார். தன்னைப் பார்க்க வந்த அனைத்துத் தலைவர்களையும் (அண்ணா, கருணாநிதி) உட்பட அவர் இருந்த சிறிய வீட்டில்தான் சந்தித்தார். காங்கிரஸ் அமைச்சர்கள் பலருக்கு சென்னையில் வீடே இருக்கவில்லை.

பிரதமர் பண்டித் நேருவின் மறைவுக்குப் பிறகு இந்திரா காந்திக்கு தம் பிள்ளைகள் ராஜீவ் காந்தி, சஞ்சய் காந்தியுடன் வசிப்பதற்கு டில்லியில் சொந்த வீடு கிடையாது. மோதிலால் நேருவால் கட்டப்பட்டு பரம்பரை உரிமையாகத் தனக்குக் கிடைத்த அலாகாபாத்திலுள்ள ஆனந்தபவனத்தையும் இந்திய அரசுக்கு நன்கொடையாக அளித்துவிட்டு அரசு வீட்டில்தான் கடைசிவரை வாடகைக்கு வாழ்ந்தவர் இந்திரா அம்மையார்.

இந்த நிலையில் நம்முடைய முதலமைச்சர் தாம் வசிக்கிற வீடு (கோபாலபுரம், சி.ஐ.டி.நகர்) குறைந்தபட்ச வசதிகள் கூட இல்லாதது என்று வேதனைப்படுவது புரிகிறது. அவரை விட எளிமையாக வாழ்ந்த முதலமைச்சர்கள் அந்தக் குறையை வெளிப்படுத்தியதில்லை. எனவே தான் வாழ்கிற வீட்டின் வசதி குறைவு எனக் கருதி நமது முதலமைச்சர் வேதனைப்படத் தேவையில்லை.

முதலமைச்சர் தான் ஏதோ சல்லிக் காசுகூட இல்லாமல் சென்னைக்கு வந்ததுபோல் எழுதுவதாகவும் தான் நடுத்தரக் குடும்பத்தைச் சார்ந்தவன் என்றும் அன்றைக்கே திருக்குவளையில் அல்லாமல் திருவாரூரில் தங்கிப் படித்ததாகவும் எழுதுகிறார். தம் வீட்டில் திருடன் புகும் அளவுக்கு வசதி இருந்தது என்கிறார். அவரை எவரும் குறைத்து மதிப்பிடவில்லை. சென்னைக்கு வரும்பொழுது அவர் திருட்டு ரயில் ஏறிவந்ததாக அவரும் அவரைச் சார்ந்தவர்களும்தான் மேடையில் பெருமையாகச் சொல்லிக் கொண்டார்கள்.

அதன் மூலம் தாங்கள் ஏழை எளியவர்கள், சாமானியர்கள் என்று மக்கள் மனதில் அனுதாபம் ஏற்படுத்த முயற்சித்தார்கள். எனவே அவரைப் பற்றி யாராவது வசதி இல்லாதவர் என்று சொல்லியிருந்தால் அதற்கு அவரும் அவரைச் சேர்ந்தவர்களும்தான் காரணம்.

திரைப்படத் துறையில் எப்படியெல்லாம் முன்னேறினேன் என்று விரிவாகச் சொல்லி இருக்கிறார். ஏனோ அவர் ஈரோட்டில் தங்கி தந்தை பெரியாரின் விடுதலை நாளிதழில் பணியாற்றி ஊதியம் பெற்றதைச் சொல்லத் தவறிவிட்டார்.

அவருடைய ஆழ்ந்த தமிழ் அறிவையோ சொல்லாற்றலையோ, எழுத்து வன்மையையோ இதுவரை எவரும் கேலி செய்ததும் இல்லை. எள்ளி நகையாடியதும் இல்லை. அவர் படிப்படியாகத் திரைப்படத் துறையில் முன்னுக்கு வந்தவர். மற்றவர்களைவிட அதிகம் ஊதியம் பெற்றவர்.

கூட்டாகச் சேர்ந்து சினிமாப்படம் தயாரித்து நஷ்டப்பட்டவர். சம்பாதிக்கவும் செய்தவர். திரைப்படத் துறையில் இருந்து அரசியலுக்குள் புகுந்து முதலமைச்சர் பொறுப்பு ஏற்ற பிறகு அறிஞர் அண்ணா, சினிமாத் துறையை விட்டு தானாக விலகிவிட்டார். எம்.ஜி.ஆர். முதலமைச்சர் ஆன பிறகு மிகப்பெரிய அளவில் அவர் சம்பாதித்துக் கொண்டிருந்த நடிப்புத் துறையைவிட்டு தாமாக ஒதுங்கிவிட்டார்.

முதலமைச்சர் பதவி ஏற்பதற்கு முன்பே ஜெயலலிதா நடிப்புத் துறையைவிட்டு விலகிவிட்டார். ஆனாலும் கருணாநிதி முதலமைச்சர் பதவியையும் திரைப்படத் துறையையும் இப்போதும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கிறார்.

அவருக்குக் கொடுக்கப்பட்ட ஊதியம் மற்ற எழுத்தாளர்களுக்குக் கொடுக்கப்படவில்லை என்பதை அவர் உணரவில்லை. முதலமைச்சராக கதை, வசனம் எழுத ஆரம்பித்த பிறகு அவருக்குக் கிடைத்த ஊதியம் பல இலட்சம். (25 இலட்சம் முதல் 50 இலட்சம்) வரை உயர்ந்தது.அவரோடு ஒப்பிட முடியாத அளவுக்கு மற்ற எழுத்தாளர்கள் குறைந்த ஊதியம் வாங்கிக் கொண்டிருக்கின்றனர்.

அந்தத் திரைப்படங்கள் வலிந்து ஓட்டப்படுகின்றன. ஓடுவதாகத் தெரியவில்லை. ஆனாலும் தொடர்ந்து அவரை வைத்துப் படமெடுத்து நஷ்டப்படத் தயாரிப்பாளர்கள் தயாராக இருக்கிறார்களே ஏன்? இவருக்குப் பல இலட்சங்களை அள்ளிவீச வரிசையில் நிற்கிறார்களே ஏன்? இவர் முதலமைச்சர் என்பதால்தானே?

அவர் பல இலட்சம் பெற்றுக் கொண்டு எழுதிய வசனம் எவருடைய மனதிலும் இன்று நிலைத்து நிற்கவில்லை. அவர் சில நூறுகள், சில ஆயிரங்கள் வாங்கிக் கொண்டு எழுதிய கதை வசனம் இன்னும் பார்த்தவர்கள் மனதில் பசுமையாக நிழலாடுகிறது.

படம் எடுப்பவர்களுக்கும் இது தெரியும். முதலமைச்சர் தான் திரைப்படத்துக்கு வசனம் எழுத எவ்வளவு பணம் வாங்குகிறேன் என்று தம்பட்டம் அடித்துக் கொள்வதைவிட ஏன் அவர்கள் பணத்தைக் கொட்டிக் கொடுக்கின்றனர் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். கோபாலபுரம் வீட்டைப் பற்றி இந்த ஒரே வீடுதான் என்னுடையது அதுவும் எனக்குப் பிறகு மருத்துவமனைக்குத் தானம் கொடுத்துவிட்டேன் என்கிறார். இன்று கோபாலபுரம் கருணாநிதிபுரமாக மாறிவிட்டது. அவர் வீட்டின் பின்புறம் பற்றி சட்டமன்றத்தில் பிரச்சினை எழுந்ததை அவர் மறந்துவிட்டார்.

முரசொலி பத்திரிகை துணைப் பத்திரிகைகளை எவ்வளவு சிரமங்களுக்கிடையே நடத்தி வந்தேன் என்று சொல்கிறார். ஆனால் அந்த முரசொலி பத்திரிகை படிப்பவர்கள் எண்ணிக்கை குறைந்துபோன நிலையில் கட்சித் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து நிதி சேர்த்ததை மறந்திருக்க மாட்டார்.

இன்றைக்கு அவர் சன் தொலைக்காட்சி நிறுவனம் தனக்கு நூறு கோடி பிரித்துக் கொடுத்ததைச் சொல்லியிருக்கிறார். ஆனால் சன் தொலைக்காட்சி நிறுவனம் தொடங்கிய பொழுது அதன் நிலை என்ன? யாருடைய ஆதரவில் வளர்ந்தது?

இவரும் இவரது அரசும் ஆதரவு அளித்து அதை வளர்க்கவில்லையா? ஒரு காலகட்டத்தில் அது தமிழக அரசின் செல்லப்பிள்ளையாக வலம் வரவில்லையா?

சன் தொலைக்காட்சி நிறுவனம் நூறு கோடி ரூபா அவருக்குப் பிரித்துக் கொடுத்துள்ளது. ஆனால் அதில் அவருடைய முதலீடு எவ்வளவு என்பதைச் சொல்லவில்லை. அவர் துணைவியாருக்கு எவ்வளவு பிரித்துக் கொடுக்கப்பட்டது என்பதைச் சொல்லவில்லை. மற்ற குடும்ப உறுப்பினர்களுக்கு எவ்வளவு கொடுக்கப்பட்டது என்பதைப் பற்றியும் சொல்லவில்லை.

அவரே சம்பாதித்த பணத்தை வங்கிகளில் வைத்து ஏழைகளுக்கும் இல்லாதவர்களுக்கும் உதவி செய்ய அறக்கட்டளை அமைத்து இருப்பதாகச் சொல்கிறார். அதில் எவ்வளவு பணத்துக்கு வருமானத்துறை விலக்களித்தது என்று சொல்லவில்லை.

ஆட்சிக்கு வருவதற்கு முன்னரும் ஆட்சிக்கு வந்த பின்பும் திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ் கட்சியை விமர்சித்தபோதெல்லாம் காங்கிரஸ் கட்சியிலிருந்த வடபாதி மங்கலம் தியாகராஜ முதலியார், குன்னியூர் சாம்பசிவ ஐயர், வலிவலம் தேசிகர், பூண்டி வாண்டையார், கபிஸ்தலம் மூப்பனார் ஆகிய பெரும் நிலம் படைத்தவர்களின் கட்சிதான் காங்கிரஸ் கட்சி என்றார்கள். இவர்களுக்காகவே காங்கிரஸ் கட்சி நில உச்சவரம்புச் சட்டம் கொண்டு வராமல் தவிர்க்கிறது என்று சொன்னார்கள். ஏன் முதல்வர் கருணாநிதியே பல மேடைகளில் பேசினார்.

இன்றைக்கு அந்தப் பெரும் நிலச் சுவான்தார்கள் அத்தனைபேர் நிலப்பரப்பையும் ஒருசேர கூட்டினால் எத்தனை ஏக்கர் நிலம் வருமோ அதைவிட அதிகமாக அவருடைய குடும்பத்தினர் எஸ்டேட்டுகளையும் நிலத்தையும் வாங்கி வைத்திருக்கிறார்களா இல்லையா? இவர்கள் ஆட்சிக்கு வந்த பின்பு நில உச்சவரம்புச் சட்டம் என்னவாயிற்று?

மிகப்பெரிதாக விளம்பரம் செய்து தம்பட்டம் அடித்துக் கொண்டு சட்டமன்றத்தின் முன்வைத்த நகர்ப்புற நிலஉச்சவரம்புச் சட்ட முன்வடிவு என்ன ஆயிற்று? அந்தச் சட்ட முன்வடிவு யாருக்காக கைவிடப்பட்டது என்பதை முதலமைச்சர் விளக்குவாரா? குறைந்தபட்சம் அந்தச் சட்ட முன்வடிவில் குறிப்பிட்டிருந்ததைவிட பல மடங்கு அதிக நிலத்தை சென்னை மாநகராட்சி எல்லையிலும் மற்ற மாநகராட்சி எல்லைகளிலும் அவர் குடும்பத்தினர் வைத்திருப்பதை இல்லை என்று சொல்வாரா?

எதையெதையோ தம்முடைய சொந்தக் கணக்கோடு சேர்த்து எழுதியிருக்கும் முதலமைச்சர் கடந்த காலத்தை நினைவுபடுத்திக் கொள்ளவேண்டும். காமராஜ் முதலமைச்சராக இருந்தபோது சிதம்பரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கோபாலகிருஷ்ணன் என்பவர் கொலை வழக்கில் சிக்கினார் என்பது தெரிந்தவுடன் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

சென்னை மாநகராட்சி ஊழலில் சிக்கிய காங்கிரஸ் கவுன்சிலர்களை உடனே கட்சியை விட்டு விலக்கினார். இன்றைக்கு கருணாநிதி ஈரோடு மாவட்டத்தில் பல கிரிமினல் வழக்கில் சிக்கிய எஸ்.கே.பி.ராசாவை என்ன செய்துள்ளார்? உலகையே வியக்கவைத்த ஊழலுக்கு காரணமான ராசாவை எப்படி கட்டி அணைக்கிறார் என்பதைப் பார்த்து ஊர் சிரிக்கிறது.

இந்திரா காந்தியும், ராஜீவ் காந்தியும் அவர்களுக்கு வந்த பணத்தை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக்குச் செலுத்திவிட்டு தங்களுக்குத் தேவையான ஆடை மற்றும் மளிகைக்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக்குச் சீட்டு அனுப்பிப் பெற்றுக் கொண்டார்கள் என்பது பலருக்கும் தெரிந்த உண்மை. பெருந்தலைவர் காமராஜ் பதவியில் இருந்தபோது அவர் பெற்ற ஊதியத்தையும் பொது நிகழ்ச்சிக்குச் செல்லும் பொழுது மாலைக்குப் பதிலாகக் கொடுத்த பணத்தையும் தமிழக காங்கிரஸ் கமிட்டிக்கு அனுப்பி வைத்தார்.

புதிய ஆடைகள் வேண்டுமென்றாலும் மளிகைப் பொருட்கள் வேண்டுமென்றாலும் அவரது பணியாளர் மறைந்த வைரவனிடம் சொல்லி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியிடம் பெற்றுக் கொள்வார். ஆனால் தனிநபர் கருணாநிதியின் குடும்பச் சொத்து மதிப்பீடு பல ஆயிரம் கோடி என்பதை மறுக்க முடியுமா?

ஒரு விரலால் மற்றவர்களைக் குற்றஞ்சாட்டும் போது மீதி நான்கு விரல்கள் அவரைச் சுட்டிக்காட்டுவதை முதல்வர் கருணாநிதி ஏனோ மறந்துவிடுகிறார். அவரைச் சாமானியன் என்று சொன்னாலும் கோபம் வருகிறது. கோடீஸ்வரர் என்று சொன்னாலும் கோபம் வருகிறது. பிறகு இவரை எப்படித்தான் வர்ணிப்பது?

ஆனாலும் இவர் தன்னை ராஜாஜியுடனும் காமராஜுடனும் அண்ணாவுடனும் ஒப்பிட்டுப் பேச நினைப்பதைத்தான் ஜீரணிக்க முடியவில்லை.

http://www.thinakkural.com/beta/index.php?option=com_content&view=article&id=3575:2010-12-16-23-35-57&catid=72:article&Itemid=100

Thursday, March 17, 2011

பில்டங் ஸ்ட்ராங்கு... பேஸ்மென்டு ரொம்பபப வீக்கு....

புதன்கிழமை, 09 மார்ச் 2011 15:42


building_strong_basement_weak

பில்டிங்கு ஸ்ட்ராங்கு.... பேஸ்மென்டு ரொம்பபபபபப வீக்கு.......

http://www.savukku.net/index.php?option=com_content&view=article&id=510:2011-03-09-10-29-22&catid=1:2010-07-12-16-58-06&Itemid=2

சூடும் இல்லை. சொரணையும் இல்லை.

யாருக்கு என்று கேட்கிறீர்களா ? தமிழ்நாட்டில் உள்ள அதிகாரிகளுக்குத் தான்.

ஒரு அரசாங்கம் தவறு செய்திருக்கிறது என்று நீதிமன்றம் சுட்டிக் காட்டினால், அதை திருத்திக் கொள்வதை விட்டு விட்டு, அந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்திலே மேல் முறையீடு செய்யும் ஒரு கேடு கெட்ட அரசாங்கத்தை என்னவென்று சொல்வீர்கள் ?

சிவில் சர்வீஸ் என்று அழைக்கப் படும், அகில இந்தியப் பணித் தேர்வானது, இருப்பதிலேயே மிக மிக கடினமான தேர்வு. அந்தத் தேர்வை ஏன் அவ்வளவு கடினமாக வைத்திருக்கிறார்கள் என்றால், அந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்று ஐஏஎஸ் ஆகவோ, ஐபிஎஸ் ஆகவோ பணிக்கு வருபவர்களிடம் ஒப்படைக்கப் பட இருக்கும் பொறுப்புகள் ஏராளம். பலரின் தலையெழுத்தை தீர்மானிக்கும் பொறுப்பு அந்த அதிகாரிகளுக்கு உண்டு. அதனால்தான் அவ்வாறு மிகப் பொறுப்பு வாய்ந்த பதவிகளுக்கு நியமிக்கப் பட இருப்பவர்கள், மிகுந்த கவனத்தோடும், அறிவோடும் பணியாற்ற வேண்டும் என்று கடினமான தேர்வாக இருக்கிறது.

ஆனால் அப்படிப் பட்ட தேர்வில் தேர்ச்சி அடைந்து மிகப் பெரிய பொறுப்பில் இருப்பவர்கள் தறுதலைகளாக இருந்தால் ? அதுதான் நடக்கிறது தமிழ்நாட்டில்.

letikha_saran

டிஜிபி பதவிக்கு லத்திக்கா சரணை நியமித்தது தவறு, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காமல் இந்த நியமனம் நடைபெற்று உள்ளது. உச்சநீதிமன்றத் தீர்ப்பானது, இந்நாட்டின் சட்டமாகும். அந்தச் சட்டத்தை மதிக்காமல் லத்திக்கா சரண் நியமனம் நடைபெற்றுள்ளது, இது போல உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்தாமல் இருந்தால், அதைச் செயல்படுத்துவது எங்களது கடமை என்று ஒரு நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. 26 அக்டோபருக்குள், புதிய டிஜிபி நியமிப்பதற்கான பட்டியலை மத்திய பணியாளர் தேர்வாணையத்திற்கு அனுப்ப வேண்டும் என்றும் உத்தரவிடுகிறது.

இதை அமல்படுத்துவார்கள் என்று பார்த்தால், இதை எதிர்த்து உச்ச நிதிமன்றத்திற்கு போகிறார்களே இந்த அறிவுக் கெட்டவர்கள் ? உயர்நீதிமன்றம் செருப்பால் அடித்தது போல, இந்த நியமனம் தவறு, செய்யக் கூடாது என்று உத்தரவு போட்டும், உச்ச நீதிமன்றத்திலும் சென்று செருப்படி வாங்கிக் கொண்டு வரும் இந்த அதிகாரிகளை எதால் அடிப்பது ?

26ந் தேதிக்குள் பட்டியலை மத்திய பணியாளர் தேர்வாணைத்திற்கு அனுப்ப வேண்டும் என்று அரசு வழக்கறிஞர் எடுத்துரைத்த போது, நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள், ஆனால் இதை அவசர வழக்காகக் கருதி விசாரிக்க முடியாது என்றுதானே உச்ச நீதிமன்றம் சொல்லியது… இப்படியொரு அவமானத்தை எதற்காக இழுத்துப் போட்டுக் கொண்டார்கள் இந்தக் கயவர்கள் ?

அப்படி என்ன லத்திக்கா சரண் ஊர் உலகத்தில் இல்லாத தெறம வாய்ந்த அதிகாரியா ? வேறு யாருமே இல்லையா ?

இந்த லத்திக்கா சரண், உதவி ஆய்வாளர்கள் பதவி உயர்வு விஷயத்தில் எவ்வளவு குளறுபடிகளை செய்திருக்கிறார் தெரியுமா ? 1999ம் ஆண்டு நேரடி பெண் உதவி ஆய்வாளர்களாக தேர்ந்தேடுக்கப் பட்டவர்களுக்கு ஆய்வாளர் பதவி உயர்வு வழங்காமல், 2003ல் தலைமைக் காவலராக இருந்து உதவி ஆய்வாளராக ஆன 10 பேருக்கு, விதிகளை மீறி ஆய்வாளர் பதவி உயர்வு கொடுத்திருக்கிறார். இதை எதிர்த்து நீதிமன்றம் சென்ற பெண் உதவி ஆய்வாளர்களை, அழைத்து நேரில் மிரட்டியிருக்கிறார். நீதிமன்றம் செல்வதற்கு உங்களுக்கு என்ன துணிச்சல் ? அரசாங்கத்தை எதிர்த்து வழக்கு போடும் அளவுக்கு துணிச்சல் வந்து விட்டதா என்று மிரட்டியிருக்கிறார்.

உதவி ஆய்வாளர்கள் தங்கள் பதவி உயர்வு தொடர்பாக வழக்கு போடக்கூடாதாம். இவர் மட்டும் ஜுனியர்களை முந்தி பதவி உயர்வு வாங்கிக் கொண்டு, அதை எதிர்த்து யாராவது நீதிமன்றம் சென்றால், அப்பீலுக்கு மேல் அப்பீல் செய்வாராம்.

உச்சநீதிமன்றத்துக்கு மேல் முறையீடு செய்கிறாரே ஞானதேசிகன்… அவருக்கு இது போல நடந்திருந்தால் வழக்கு போடாமல் இருப்பாரா.. ? எப்படியாவது, மாலதி உடல் நலம் குன்றி, விருப்ப ஓய்வில் செல்லுவார். அப்போது, தலைமைச் செயலாளர் பதவியை கைப்பற்றலாம் என்ற நப்பாசை தானே இன்று ஜாபர் சேட் சொல்லுகிற படியெல்லாம் ஆட வைக்கிறது… ?

ஞானதேசிகன் அவர்களே…. லத்திக்கா வழக்கில், சென்னை உயர்நீதிமன்றத்தில் நீங்கள் தாக்கல் செய்த மனு பச்சைப் பொய் என்பது நிரூபிக்கப் பட்டும் கூடவா உங்களுக்கு சொரணை இல்லாமல் போய் விட்டது ? புதிய காவல் பயிற்சிக் கல்லூரி அருகே உங்கள் தொழில் கூட்டுதாரர்களோடு நீங்கள் வாங்கியிருக்கும் 1000 ஏக்கர் நிலத்தை ஜாபர் அபகரித்துக் கொள்வார் என்ற பயமா ? இல்லை ஜாபரோடு கூட்டு சேர்ந்து நீங்கள் செய்யும் அட்டூழியங்களை வெளியில் சொல்லி விடுவார் என்ற பயமா ?

லத்திக்கா சரண்தான் வேண்டும் என்று ஜாபர் சேட், கே.ராதாகிருஷ்ணன், மாலதி, ஞானதேசிகன் ஆகிய அனைவரும் கங்கணம் கட்டிக் கொண்டு இருப்பதன் காரணம், லத்திக்கா சரண் டிஜிபியாக இருக்கும் வரை தாங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம், யார் மீது வேண்டுமானாலும் பொய் வழக்கு போடலாம், யாரை வேண்டுமானாலும் உள்ளே தள்ளலாம் என்பதுதான். லத்திக்கா ஒரு மங்குணி டிஜிபி என்பதால்தான் இவரே இருக்கட்டும் என்று அனைவரும் விரும்புகிறார்கள்.

இந்த அதிகாரிகள் தங்களுக்குள் இப்படி பதவிச் சண்டை போட்டுக் கொண்டு, நீதிமன்றம் சென்று கொண்டிருந்தால், இவர்களுக்குக் கீழே பணியாற்றும் மற்ற அதிகாரிகள் எப்படி இவர்களை மதிப்பார்கள்… ?

இவர்கள் இஷ்டத்துக்கு யாரை வேண்டுமானாலும் எந்தப் பதவியில் வேண்டுமானாலும் நியமித்துக் கொள்ளலாம் என்று இருக்கக் கூடாது என்பதற்காகத் தானே, நீதிமன்றங்கள் உள்ளன. அந்த நீதிமன்றங்களின் தீர்ப்பையும் மதிக்காமல் இழுத்தடித்துக் கொண்டு இருந்தால், மக்கள் மட்டும் சட்டத்தை மதிக்க வேண்டும் என்று எப்படி எதிர்ப்பார்கிறார்கள் ?

ஏதாவது ஒரு கட்டத்திலாவது தவறு செய்தவர்கள் தங்கள் தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும். அப்படி திருத்திக் கொள்ளாவிட்டால் திருத்தப் படுவார்கள்.

காவல்துறையில், துரை ஆடாத ஆட்டமா…. ? முத்துக் கருப்பன் ஆடாத ஆட்டமா ? சிவணான்டி ஆடாத ஆட்டமா ? கடைசியில் துரை எப்படிப் பட்ட மரணத்தை சந்தித்தார் தெரியுமா ?

அந்தக் கதி இன்று அதிகாரத்தின் உச்சாணிக் கொம்பில் உட்கார்ந்து கொண்டு ஆட்டம் போடும் ஜாபர் சேட்டுக்கும், கே.ராதாகிருஷ்ணனுக்கும், ஞானதேசிகனுக்கும் வராது என்று என்ன நிச்சயம் ?

மிக மிக கடினமான ஒரு நோயோடு போராடிக் கொண்டிருக்கும் தலைமைச் செயலாளர் மாலதியும், இந்த அநியாயங்களுக்கு ஒத்து ஊதிக் கொண்டிருப்பது தான் வேதனையிலும் வேதனை.

இந்த ஆட்சியில் இருந்த தலைமைச் செயலாளர்களில் ஒருவர் கூட உருப்படியானவர் இல்லை. திரிபாதி ஜெயலலிதாவை ஊழல் வழக்கில் சிக்க வைக்க முயற்சி செய்தார் என்றால், ஸ்ரீபதி ஊழல் வழக்கில் சிக்கிய இரண்டு திருடர்களை காப்பாற்ற முயற்சி செய்தார். அடுத்து தலைமைச் செயலாளர் மாலதி, ஊழல் வழக்கில் இருந்து ஜாபர் சேட் உதவியுடன் தன்னைக் காப்பாற்றிக் கொண்டவர்.

Malathy_S

தமிழகத்தில் உள்ள அதிகார வர்க்கம், காங்கிரசின் கோஷ்டிச் சண்டைகளை விட, மோசமான தெருச் சண்டையில் இறங்கியிருப்பது ஜனநாயகத்திற்கு ஒரு ஆபத்தான நிலையை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த அதிகாரப் போட்டிக்கான தீர்வு இப்போதைக்கு இல்லை என்பது மட்டும் தெளிவு.

http://savukku.net/index.php?option=com_content&view=article&id=131:2010-10-22-19-23-01&catid=1:2010-07-12-16-58-06&Itemid=2

ஆரியக்கூத்தாடினாலும் காரியத்தின் மேல் கை வைய்யடா தாண்டவக்கோணே...

செவ்வாய்க்கிழமை, 22 பிப்ரவரி 2011 05:44

Sources: http://www.savukku.net/index.php?option=com_content&view=article&id=440:2011-02-22-00-16-07&catid=9:2010-07-22-06-30-17&Itemid=7

2534562