Wednesday, February 26, 2014

மக்கள் தலைவர் ந-மோவின் அதிரடி திட்டம் :


வடகிழக்கு மாநிலங்களை பொருளாதார மையமாக மாற்ற திட்டம்: மோடி

வடகிழக்கு மாநிலங்களை நாட்டின் முக்கியப் பொருளாதார மையமாக மாற்றுவதற்குத் திட்டம் வகுத்துக் கொடுக்கும்படி பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி தனது ஆலோசகர்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து, தில்லியில் பாஜக வட்டாரங்கள் கூறியதாவது:

மக்களவைத் தேர்தலையொட்டி, வடகிழக்கு மாநிலங்களில் குஜராத் முதல்வரும், பாஜக பிரதமர் பதவி வேட்பாளருமான நரேந்திர மோடி கடந்த வாரம் இரண்டு நாள்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.

அப்போது மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, ஆட்சிக்கு வந்தால் காங்கிரஸ் அரசால் நிராகரிக்கப்பட்ட வடகிழக்கு பிராந்திய வளர்ச்சித்துறை அமைச்சகத்தை மீண்டும் சீரமைத்து அமல்படுத்துவது தொடர்பாக நிபுணர் குழு அமைக்க அவர் திட்டமிட்டுள்ளார்.

வடகிழக்கு மாநிலங்களின் நீர் வளத்தை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தும் விதமான திட்டம் ஒன்றைத் தீட்டும்படி தனது ஆலோசகர்களிடம் மோடி கேட்டுக் கொண்டுள்ளார் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.

அருணாசலப் பிரதேசத்தில் கடந்த சனிக்கிழமை நரேந்திர மோடி பேசுகையில், ""வடகிழக்கு மாநிலங்களின் நீர் மேலாண்மைத் திட்டம் இன்றைய காலகட்டத்திற்குத் தேவையாக உள்ளது. இதனால் நீண்டகால வெள்ளப் பெருக்கு பிரச்னை தீர்க்கப்படுவது மட்டுமின்றி, மின் பற்றாக்குறையையும் தீர்க்கப்படும்'' என்று குறிப்பிட்டார்.

மேலும், சமீபத்தில் நடைபெற்ற வடகிழக்கு மாநிலங்களின் முதல்வர் மாநாட்டில் கலந்து கொண்ட மோடி, இந்த மாநிலங்களின் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் விதமாகவும், இந்த மாநிலத்தவர்களின் கலாசாரம், பாரம்பரியம் ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக 16 ஆயிரம் பெண் காவலர்களை குஜராத்துக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.

மோடி பேச்சுக்கு சீனா கருத்து: அருணாசலப் பிரதேசத்தில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மோடி பேசுகையில்," சீனா தனது நாட்டை விரிவுபடுத்தும் கொள்கையைக் கைவிட்டு இந்தியாவுடன் உறவை பலப்படுத்திக் கொண்டு அமைதியையும், வளர்ச்சியையும் ஏற்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்' என்றார்.

இதுகுறித்து சீன ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான "குளோபல் டைம்ஸ்' புதன்கிழமை வெளியிட்ட கட்டுரையில் கூறப்பட்டிருப்பதாவது:

பாஜக பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடியின் தேர்தலுக்கு முந்தைய சீன எதிர்ப்புப் பேச்சால் இருநாட்டு உறவுகளிலும் பாதிப்பு ஏற்படாது. மேலும் இதைப் பெரிதுபடுத்த வேண்டிய அவசியமில்லை என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.dinamani.com/india/2014/02/27/வடகிழக்கு-மாநிலங்களை-பொருள/article2079437.ece

Na-Mo vision - A leader people trust & will vote for !!!


Modi to think tanks: make North East the next economic hub

In his latest bid to woo voters, BJP's prime ministerial candidate Narendra Modi has asked his think tanks to draw up a comprehensive plan to make the North East one of the economic hubs of the country.


Modi, who has accused the UPA government of neglecting the North East, made a couple of trips to the region part of his election campaign, is exploring setting up an expert group to advise him on how to revamp the Ministry of DONER (Development of North East Region) if NDA comes to power. 


Sources said the Gujarat Chief Minister has asked his think tanks to draw up a comprehensive plan to tap the potential of the huge water resources in the region. 

"North East water management is the need of the hour which will not only solve the perennial flood problem but will also solve the power crisis of the country," Modi had said at his one of the rallies in the region on Saturday. 


At a recent meeting of the Chief Ministers of the North East states, Modi had proposed sending 16,000 women police personnel to Gujarat so that they could create awareness about people on the region's rich culture and heritage, which in turn, would boost the tourism industry there. Modi had also asked party units in the North Eastern states to focus on the aspirations of more than 400 insular ethnic groups in the region, which has 25 Lok Sabha seats of which UPA holds 21. 


The DONER ministry, which was set up by the Vajpayee government, is responsible for matters relating to the planning, execution and monitoring of development schemes and projects in the North Eastern region.

Read more at: http://www.firstpost.com/politics/modi-to-think-tanks-make-north-east-the-next-economic-hub-1409325.html?utm_source=ref_article

Tuesday, February 25, 2014

பணியாற்றும் பெண்களுக்கு தேவை எச்சரிக்கை !!!


சாஃப்ட்வேர் என்ஜினீயர் கொலை: வட மாநில இளைஞர்கள் 2 பேர் கைது

சென்னை அருகே பெண் சாஃப்ட்வேர் என்ஜினீயர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தொடர்பாக வட மாநில இளைஞர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

சேலம் மாவட்டம், ஆத்தூர் ஜோதி நகரைச் சேர்ந்த பாலசுப்பிரமணியத்தின் மகள் உமா மகேஸ்வரி, சென்னை அருகே சிறுசேரி சிப்காட் வளாகத்தில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றி வந்தார். இதற்காக மேடவாக்கத்தில் ஒரு வீட்டில் தனது தோழிகளுடன் உமா தங்கியிருந்தார். இந்நிலையில் கடந்த 13-ஆம் தேதி வேலைக்கு சென்ற உமா, வீட்டுக்குத் திரும்பி வரவில்லை.

இது குறித்து உமாவின் தந்தை பாலசுப்பிரமணியம் கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அப் புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, உமாவை தேடி வந்தனர்.

இந்நிலையில், சிறுசேரி சிப்காட் வளாகத்தில் உள்ள புதரில் இருந்து உமா மகேஸ்வரி அழுகிய நிலையில் சடலமாக கடந்த சனிக்கிழமை மீட்கப்பட்டார். போலீஸார் விசாரணையில் உமா மகேஸ்வரி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு அங்கு வீசப்பட்டிருப்பது தெரியவந்தது.

இச் சம்பவம், குறித்து கேளம்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரித்தனர்.

இதற்கிடையே டி.ஜி.பி.ராமானுஜம், உமா மகேஸ்வரியின் கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி உத்தரவிட்டார். மேலும் இந்த கொலை குறித்து சரியான தகவல் அளிப்பவருக்கு ரூ.2 லட்சம் வரை பரிசுத் தொகை வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

கொலையாளிகள் கைது: சம்பவம் நடந்த இடம், உமா பணியாற்றிய இடம், சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 100-க்கும் மேற்பட்ட போலீஸார் விசாரணையில் ஈடுபட்டனர். இதில் பல தடயங்கள் கிடைத்தன.

மேலும் ஆளில்லாத விமானம் மூலம் அந்த பகுதி முழுவதையும் போலீஸார் புகைப்படம் எடுத்து, அந்தப் பகுதியின் அமைப்பை தெரிந்துகொண்டனர். அதேபோல உமா, கடந்த ஓர் ஆண்டாக செல்போனில் யார், யாருடன் பேசியுள்ளார், யாருடன் அதிகம் பேசியுள்ளார் போன்ற தகவல்களைச் சேகரித்தனர்.

சி.பி.சி.ஐ.டி. போலீஸாரின் தீவிர விசாரணையில் வட மாநிலத்தைச் சேர்ந்த உத்தம் மண்டல், ராம் மண்டல் ஆகிய இருவரும்தான் உமாவை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்திருப்பது தெரியவந்தது. மேலும் உமா வைத்திருந்த செல்போன், கிரடிட் கார்டு ஆகியவற்றையும் அவர்கள் எடுத்துச் சென்றது தெரிந்தது.

இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீஸார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து உமாவின் செல்போன், கிரேடிட் கார்டு ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இருவரும் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட இருவரும் புதன்கிழமை மாலை விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். பின்னர் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்படுகின்றனர்.

துப்பு துலக்க உதவிய செல்போன், கிரடிட் கார்டு: உமா மகேஸ்வரி கொலை செய்யப்பட்ட வழக்கில் கொலையாளிகளை துப்பு துலக்க செல்போன் உதவியாக இருந்துள்ளது. அதே சமயம் கொலையாளிகளைக் கைது செய்வதற்கு கிரேடிட் கார்டு பயன்பட்டுள்ளது.

கொலையாளிகள் உமாவிடம் இருந்து செல்போன் மற்றும் கிரெடிட் கார்டுகளை எடுத்துச் சென்றுள்ளனர். இதையடுத்து அந்த செல்போன், கிரடிட் கார்டு குறித்து போலீஸார் விசாரணை செய்தனர். இதில் கொலையாளிகள் அந்த செல்போனில் வேறு சிம்கார்டை பயன்படுத்தியதாகத் தெரிகிறது. இதை ஐ.எம்.இ. எண் மூலம் கண்டறிந்த போலீஸார், ஓரளவுக்கு கொலையாளிகளை நெருங்கினர்.

இதையடுத்து ஐ.எம்.இ. எண் கொடுத்த சிக்னல் அடிப்படையில் போலீஸார் விசாரணையில் ஈடுபட்டனர். இதில் அந்த வளாகத்தில் கட்டுமான வேலையில் ஈடுப்பட்டிருந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 4 பேர் கடந்த 13-ஆம் தேதி வேலைக்கு செல்லாமல் இருந்ததும், அவர்கள் தங்குமிடத்துக்கும் வராமல் இருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து அந்த 4 பேர் குறித்து அங்கு இருந்த பிற கட்டட தொழிலாளர்களிடம் போலீஸார் விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் 4 பேரும், உமாவை கொலை செய்திருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பது தெரியவந்தது. இந்நிலையில் அந்த கிரடிட் கார்டு மூலம் ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுத்திருப்பதாக செவ்வாய்க்கிழமை காலை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

அந்த தகவலின் அடிப்படையில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த உத்தம் மண்டல், ராம் மண்டல் ஆகிய இருவரையும் போலீஸார் கல்பாக்கம் அருகே கைது செய்தனர்.

போலீஸ் விசாரணையில் அவர் கூறியதாவது: நாங்கள் சிப்காட் வளாகத்தில் புதிதாக கட்டப்படும் கட்டடத்தில் வேலை செய்து வருகிறோம். சம்பவத்தன்று இரவு சிப்காட் வளாகம் வாயில் பகுதியில் நின்று கொண்டிருந்தோம். அப்போது அங்குள்ள ஏ.டி.எம். மையத்தில் உமா பணம் எடுத்துவிட்டு நடந்து வந்து கொண்டிருந்தார். இதைப் பார்த்த நாங்கள் 4 பேரும் அவரை அங்குள்ள புதருக்குள் தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு, அவர் வைத்திருந்த செல்போன், கிரடிட் கார்டு ஆகியவற்றை எடுத்துக் கொண்டு தப்பியோடிவிட்டோம் என்று அவர்கள் கூறியதாக போலீஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவத்துக்குப் பின்னர் தங்களுக்கு பயம் ஏற்பட்டதால் தலைமறைவாக இருந்ததாக கூறினர். இதில் நால்வரில் இருவர் ரயில் மூலம் மேற்கு வங்கத்துக்கு தப்பியோடியதாக போலீஸாரிடம் கூறியதாக தெரிகிறது.

இதையடுத்து தப்பியோடிய இருவரையும் கைது செய்ய சி.பி.சி.ஐ.டி. போலீஸார் மேற்கு வங்கத்துக்கு விரைந்துள்ளதாக கூறப்படுகிறது.

http://www.dinamani.com/edition_chennai/chennai/2014/02/26/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%80%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2/article2078224.ece







இந்திய வரலாற்றில் முதல் முறையாக 11 பிரதமர்கள் !!!


11 பிரதமர்கள் ஓரணியில் !!!

காங்கிரஸ், பாஜகவுக்கு மாற்றாக 11 கட்சி கூட்டணி


மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு மாற்றாக 11 கட்சிகள் அடங்கிய புதிய அணி தில்லியில் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.
இது தொடர்பாக ஐக்கிய ஜனதா தளம், இடதுசாரிக் கட்சிகள், சமாஜவாதி, அதிமுக, ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா உள்ளிட்ட 11 கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற இக்கூட்டத்துக்குப் பின், கட்சிகள் இணைந்து வெளியிட்ட அறிவிப்பில், "ஆட்சியிலிருந்து காங்கிரûஸ அகற்றும் நேரம் வந்து விட்டது. அதேபோல், பாஜக மற்றும் வகுப்புவாத சக்திகள் ஆட்சிக்கு வருவதையும் தடுக்க வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய அணி குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் பிரகாஷ் காரத் கூறியதாவது:
நாட்டில் விலைவாசி உயர்வு, ஊழல்களுக்கு காங்கிரஸ்தான் காரணம். பாஜகவின் ஊழல்கள், காங்கிரஸின் ஊழல்களை விட மோசமானவை. வகுப்புவாத அரசியலை முன்னெடுத்துச் செல்லும் பாஜக, நாட்டுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாகும். காங்கிரஸýம், பாஜகவும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்.
இந்த இரு கட்சிகளையும் தேர்தலில் தோற்கடிக்க புதிய அணி உருவாக்கப்பட்டுள்ளது. புதிய அணி முயற்சி வெற்றி பெற எங்களுடன் மதச்சார்பற்ற கட்சிகள் இணைய வேண்டும் என்று காரத் கூறினார்.
அப்போது, பிகார் முதல்வர் நிதீஷ் குமார், சமாஜவாதி கட்சித் தலைவர் முலாயம் சிங், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சித் தலைவர் தேவெ கெளடா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
ஆட்சி அமைப்பதற்குத் தேவையான 272 தொகுதிகளில் காங்கிரஸ் அல்லது பாஜக வெற்றி பெறாவிட்டால் நீங்கள் ஆதரவு தருவீர்களா என்ற கேள்விக்கு, "அதற்கு வாய்ப்பே இல்லை' என்று நிதீஷ் குமார் பதில் அளித்தார்.
புதிய அணி குறித்து முலாயம் சிங் கூறுகையில், "11 கட்சிகள் கொண்ட புதிய அணி விரைவில் 15 கட்சிகள் அடங்கிய அணியாக உருவெடுக்கும்.
அதனால், தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸின் ஆதரவு தேவையில்லை' என்றார்.
முக்கியமான கட்டத்தில் காங்கிரûஸ நீங்கள் ஆதரிப்பீர்களா என்ற கேள்விக்கு, "காங்கிரûஸ மக்களவையில் பல முறை எதிர்த்துள்ளேன்' என்று முலாயம் தெரிவித்தார். புதிய மாற்று அணியின் பிரதமர் பதவி வேட்பாளர் குறித்த கேள்விக்கு, "தேர்தலுக்குப் பின் அது குறித்து முடிவு செய்யப்படும்' என்று பிரகாஷ் காரத்தும், முலாயம் சிங்கும் இணைந்து பதில் அளித்தனர்.
"மொரார்ஜி தேசாய், வி.பி.சிங், ஹெச்.டி. தேவெ கெளடா, ஐ.கே. குஜரால் ஆகியோர் தேர்தலுக்குப் பிறகு ஒருமனதாக பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டனர்' என்று முலாயம் நினைவுகூர்ந்தார்.
என்சிபி வரவேற்பு: இதனிடையே, 11 கட்சிகள் அடங்கிய புதிய அணியை வரவேற்கிறோம் என்று தேசியவாத காங்கிரஸ் (என்சிபி) கட்சியின் செய்தித் தொடர்பாளர் டி.பி. திரிபாதி செவ்வாய்க்கிழமை கூறியுள்ளார்.
கடந்த அக்டோபர் மாதம் இடதுசாரிக் கட்சிகள் ஏற்பாடு செய்திருந்த வகுப்புவாத எதிர்ப்பு மாநாட்டில் என்சிபி பங்கேற்றது.
ஆனால், புதிய அணியில் இணைவது குறித்து என்சிபி கருத்து தெரிவிக்காமல் இருந்து வந்தது. இந்நிலையில், புதிய அணியை என்சிபி வரவேற்றுள்ளதால், அக்கட்சியும் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது
http://www.dinamani.com/india/2014/02/26/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1/article2078296.ece

Monday, February 24, 2014

மென்பொருள் பொறியாளர்கள் !!!


உலக அளவிலான சாப்ட்வேர் பொறியாளர்கள்

சாப்ட்வேர் புரோகிராம்களைத் தயாரிப்பவர்கள் இன்று உலகெங்கும் முக்கியமானவர்களாகக் கருதப்படுகிறார்கள். நம் அன்றாடப் பணிகள் பல டிஜிட்டல் சாதனங்களையே சார்ந்து இருப்பதால், இவர்களின் பணி நமக்கு அத்தியாவசிய ஒன்றாக இருந்து வருகிறது. 
அண்மையில், ஐ.டி.சி அமைப்பு எடுத்த ஓர் ஆய்வின்படி, சாப்ட்வேர் தயாரிப்பவர்களாக உலகில் இயங்குபவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 85 லட்சம் ஆகும். இவர்களில் ஒரு கோடியே 10 லட்சம் பேர், நிறுவனங்களில் பணியாற்றும் பொறியாளர்கள். மற்ற 75 லட்சம் பேர் பொழுது போக்கிறாக, சாப்ட்வேர் தயாரிக்கும் பணியில் ஆர்வத்துடன் ஈடுபடுபவர்களாக உள்ளனர். 
கம்ப்யூட்டர்களில் பணியாற்றுபவர்களின் எண்ணிக்கை, சாப்ட்வேர் புரோகிராமர்களையும் சேர்த்து, 2 கோடியே 90 லட்சம் என அறியப்பட்டுள்ளது. கம்ப்யூட்டர் இயக்குபவர் களாகவும், இந்தப் பணிகளை நிர்வகிப்பவர்களாகவும் ஒரு கோடியே 80 லட்சம் பேர் உள்ளனர். மொத்த சாப்ட்வேர் புரோகிராமர்களில், பொழுது போக்கிற்காக இதில் ஈடுபடுபவர்களையும் சேர்த்து, அமெரிக்காவில் 19 சதவீதம் பேர் உள்ளனர். சீனா இவர்களில் 10 சதவீதம் பேரைக் கொண்டுள்ளது. இந்தியாவில் இயங்குபவர்கள் 9.8 சதவீதம் பேர் ஆவார்கள். 
கம்ப்யூட்டர்களை இயக்கும் பணியாளர்கள் மற்றும் நிர்வகிப்போர் என எடுத்துக் கொண்டால், அமெரிக்கா 22 சதவீதம் பேரையும், இந்தியா 10.4 சதவீதம் பேரையும், சீனா 7.6 சதவீதம் @பரையும் கொண்டுள்ளது. 700 கோடி பேர் வாழும் இந்த பூமியில், தகவல் தொழில் நுட்ப துறையில் பணியாற்றுவோர் எண்ணிக்கை மிகவும் குறைவேயாகும் எனவும் இந்த ஆய்வு குறிப்பிடுகிறது.
http://senthilvayal.com/2014/02/22/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA/

Sunday, February 23, 2014

நல்லா கேட்டுக்கோங்க ...நான் தான் ஒரிஜினல் டீ கடைக்காரன் - புண்ணாக்கின் பிதற்றல் !


மோடிக்கு போட்டியாக டீக்கடைகளை திறந்த லாலு

பாட்னா: பா.ஜ., பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான, நரேந்திர மோடியின், டீக்கடை விவாதங்களுக்கு போட்டியாக, ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர், லாலு பிரசாத்தும், பீகாரின் பல நகரங்களில், டீக்கடைகளை துவக்கியுள்ளார்.

நரேந்திர மோடி, துவக்கத்தில், டீக்கடை வைத்திருந்தார். அதை, காங்கிரஸ் ஏளனமாக கூறியதால், அதையே தங்கள் பிரசார ஆயுதமாக, பா.ஜ., மாற்றியது. அதன் அடிப்படையில், நாடு முழுவதும், ஆயிரக்கணக்கான டீக்கடைகள், நரேந்திர மோடி பெயரில் துவக்கப்பட்டுள்ளன. 'சாய் பே சர்ச்சா' என்ற பெயரில், டீக்கடை விவாதங்களை, மோடி நடத்தி வருகிறார். இதனால், அவருக்கு வரவேற்பு அதிகரித்து வருகிறது. 

இதை அறிந்த லாலு பிரசாத், 'மோடி, தன்னை டீக்கடைக்காரர் என சொல்வது பொய். நான் தான் உண்மையான, டீக்கடைக்காரன். சிறு வயதில், பாட்னாவில், டீக்கடை நடத்தியுள்ளேன்' என்றார். மேலும், 'லாலு சாய் துகான்' என்ற பெயரில், பீகாரின் சில நகரங்களில், டீக்கடைகளை, அவரின் கட்சியினர் நடத்தி வருகின்றனர். இந்த தற்காலிக டீக்கடைகளில், பொதுமக்களுக்கு இலவசமாக டீ கொடுக்கப்படுகிறது. கூடவே, பிஸ்கட்டும் தரப்படுகிறது. அத்துடன், லாலு தான், உண்மையான டீக்கடைக்காரர் என, அவர் கட்சியினர், பொதுமக்களிடம் எடுத்துரைக்கின்றனர்.

இதற்கான பொறுப்புகளை ஏற்று நடத்தி வரும், லாலு கட்சி பிரமுகர், இக்பால் ஷாமி கூறும் போது, 
''முதற்கட்டமாக, மிதிலாஞ்சல், சமஸ்திபூர் போன்ற இடங்களில், டீக்கடைகள் துவக்கப்பட்டுள்ளன. வரும் நாட்களில், பல கிராமங்களிலும், லாலு டீக்கடை துவக்கப்படும். இந்த கடைகள், மோடி, பீகாருக்கு, தேர்தல் பிரசாரத்திற்கு வரும், மார்ச், 3ம் தேதி வரை நடத்தப்படும்,'' என்றார். 


இதை, பீகார் மாநில, பா.ஜ., தலைவர்களில் ஒருவரான, சுஷில்குமார் மோடி கிண்டலடித்துள்ளார். ''மோடிக்கு எதிரான லாலுவின் இந்த கோமாளித்தனத்தை, மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்,'' என, அவர் கூறியுள்ளார்.


இந்த ஆண்டிற்கான சிறந்த நகைச்சுவை நடிகர் - ஆஸ்கார் விருது பெரும் லாலு !!!


நான் தான் உண்மையான டீ வியாபாரி :சொல்கிறார் லாலு

பாஜ பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி நாடு முழுவதும், 300 நகரங்களில் ஆயிரம் டீக்கடையில் டி.விக்களை அமைத்து பொதுமக்களுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நேரடியாக உரையாடும் பிரசார உத்தியை மேற்கொண்டுள்ளார். இது குறித்து, ராஷ்டீரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவ் கூறியதாவது: 

நான் சிறுவயதில் கால்நடைக் கல்லூரியில் இருந்த போலீஸ் குடியிருப்பில் எனது மூத்த சகோதரருடன் சேர்ந்து டீ விற்பனை செய்துள்ளேன். மேலும், படிக்கும் காலங்களில் பிஸ்கட்களையும், டீயும் விற்பனை செய்துள்ளேன். நான்தான் உண்மையான டீ வியாபாரி. எப்போதும் எனது சிறுவயது நாட்களை வெளிப்படுத்த விரும்புவதில்லை’ என்று கூறினார். மேலும், மோடி எப்படி டீ விற்பனை செய்ய முடியும். ரத்தங்களையும், கலவரங்களையும்தான் விற்பனை செய்ய முடியும் என்று கடுமையாக தாக்கினார். 

கலவரம் நடந்த முஷாபர் நகரில் மார்ச் 3ம் தேதி நடைபெறும் நரேந்திர மோடியின் பேரணிக்கு இணையாக ராஷ்டீரிய ஜனதா தளமும் பேரணி நடத்த அனுமதி கேட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நமோ டீ கடை பிரசாரம் மூலம் வாக்காளர்களை கவர்ந்து வரும் பா.ஜ.வைப் பார்த்து மற்ற கட்சிகளும் தேர்தல் பிரசாரத்தை எப்படி நடத்துவது என்று இப்போது ஆலோசித்து வருவதாக பரபரப்பாக பேசப்படுகிறது. 

See more at: http://election.dinakaran.com/Election_NewsDetail.asp?Nid=124#sthash.s2kgG9QD.dpuf

தொங்கு பாராளுமன்றமா ??? நோ சான்ஸ் > தொங்கு காங்கிரஸ் மட்டுமே வரலாறு கூறவிருக்கும் உண்மை !


தொங்கு நாடாளுமன்றம் பேச்சுக்கே இடமில்லை சொல்கிறார் அத்வானி !

தொங்கு நாடாளுமன்றம் பேச்சுக்கே இடமில்லை சொல்கிறார் அத்வானி 
புதுடெல்ல: இந்த மக்களவை பொதுத் தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆட்சி அமைக்கக் கூடிய அளவுக்கு பெரும்பான்மை கிடைக்காது; தொங்கு நாடாளுமன்றம் அமையும் என்ற கணிப்புகள் உண்மையை பிரதிபலிப்பதாக இல்லை. 

தொங்கு நாடாளுமன்றம் அமையும் என்ற பேச்சுக்கே இடமில்லை. இதுவரையில் இல்லாத அளவுக்கு பா.ஜ. கட்சி அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று தனி பெரும் கட்சியாக ஆட்சி அமைக்கும் என்று பா.ஜ. மூத்த தலைவர் அத்வானி தெரிவித்தார். தவறான நிர்வாகம், ஊழல் ஆகியவை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணயில் மலிந்துள்ளன என்று குற்றஞ்சாட்டிய அத்வானி, சுதந்திர இந்தியாவில் இதுவரையில் எந்த ஒரு தேசிய கட்சியும் பெறாத அளவுக்கு அதிக தொகுதிகளில் பா.ஜ. வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார். 

மக்களவை தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்று கேட்டதற்கு, தொங்கு நாடாளுமன்றம் அமையும் என்று கூறப்பபடுவதை நிராகரித்தார். 

நிலைமையில் மாற்றம் ஏற்பட்டு, நாடு முழுவதும் பா.ஜ.வுக்கு ஆதரவான அலை வீசுகிறது. இந்த அளவுக்கு இதற்கு முன்பு கட்சிக்கு ஆதரவை இருந்ததை தான் பார்க்கவில்லை என்றும் அத்வானி குறிப்பிட்டார். பா.ஜ.வுக்கு ஆதரவான அலையும் காங்கிரசுக்கு எதிரான மோசமான நிலைமையும் உள்ளது. 

இந்த தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்திக்கும். இதற்கு முன்பு அது இந்த அளவுக்கு தோற்றது இல்லை என்று சொல்லும் அளவுக்கு அதன் தோல்வி இருக்கும். இது வரலாற்றிலும் இடம்பெறும். 

தவறான நிர்வாகம், பெருமளவில் ஊழல், அரசின் பிற்போக்கான கொள்கைகள் ஆகியவையே இந்த அளவுக்கு காங்கிரஸ் கட்சியை கொண்டு சென்றுள்ளது என்றார். டெல்லியில் பா.ஜ. கட்சி தலைமையகத்தில் செய்தியாளர்களுக்கு அத்வானி பேட்டியளித்தார். அப்போது மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜிம் உடன் இருந் தார்.

See more at: http://election.dinakaran.com/Election_NewsDetail.asp?Nid=150#sthash.s1Gw7HSC.dpuf

பிஜேபி - யின் வெற்றி வாய்ப்பு பிரகாசம்: ந-மோ தலைமையில் அரசு அமைவது உறுதி


கருத்துக்கணிப்பில் பரபரப்பு தகவல்கள்: பா.ஜ. கூட்டணி 236 ;காங்கிரஸ் கூட்டணி 92 

ஏப்ரல்  மே மாதங்களில் நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் எந்த கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என்பது பற்றிய கருத்துக்கணிப்பை ஏபிபி நியூஸ் மற்றும் ஏசி நீல்சன் ஆகியவை இணைந்து நடத்தின. இதில் வெளியான தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. 

நாடு முழுவதும் பரவலாக பா.ஜ. கூட்டணிக்கு ஆதரவு அலை வீசுகிறது. காங்கிரஸ் கூட்டணிக்கு மக்கள் செல்வாக்கு சரிந்துள்ளது. நாடு முழுவதும் மக்களவைக்கு மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. இதில், பா.ஜ. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மொத்தம் 236 இடங்களில் வெற்றி பெறும் என்றும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி மொத்தம் 92 இடங்களில் மட்டுமே வெற்றி பெறும் என்று தெரியவந்துள்ளது. 

தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜ. கட்சி மட்டுமே 217 தொகுகளில் வெற்றி பெறும் என்றும் கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. இதற்கு முந்தைய தேர்தல்களில் பெற்ற வெற்றியைவிட இந்த முறை கூடுதல் இடங்களில் பா.ஜ. வெற்றி பெறும் என்றும் கூறப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி மொத்தம் 92 இடங்களில் மட்டுமே வெற்றி பெறும் என்றும், அதற்கு மக்களிடம் செல்வாக்கு வெகுவாகக் குறைந்துவிட்டது என்றும் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டணியைத் தவிர்த்து காங்கிரஸ் மட்டும் 73 தொகுதிகளில்தான் வெற்றி பெறும் நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. 


கடந்த 2009ம் ஆண்டு தேர்தலில் பெற்ற வெற்றியைவிட இந்த முறை கூடுதல் இடங்களில் வெற்றி பெறும் நிலைக்கு இடதுசாரிகள் முன்னேற்றம் அடைந்துள்ளனர். அதாவது 29 இடங்களில் அவர்களுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது தெரியவந்துள்ளது.

திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன்சமாஜ், ஐக்கிய ஜனதாதளம், பிஜு ஜனதா தளம், திமுக, அதிமுக உள்ளிட்ட பிராந்திய கட்சிகள் மொத்தம் 186 இடங்களில் வெற்றி பெறுவார்கள் என்று தெரியவந்துள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வடக்கு மற்றும் மேற்கு பிராந்தியங்களில் தலா 88 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு உள்ளது. அதேபோல், தெற்கில் 21 தொகுதிகளிலும் கிழக்கில் 39 தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பு இருப்பது தெரியவந்துள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு வடக்கில் 23 தொகுதிகளிலும் மேற்கில் 22 தொகுதிகளிலும் தெற்கில் 26 தொகுதிகளிலும் கிழக்கில் 21 தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. 


இந்த கருத்துக்கணிப்பில் பா.ஜ. தலைமையிலான கூட்டணிக்கு ஆட்சி அமைப்பதற்கு தேவையான இடங்களைவிட 36 இடங்கள்தான் குறைவாக உள்ளன. மக்களவையில் மொத்த இடங்கள் 543. ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மை 272 இடங்கள். 

See more at: http://election.dinakaran.com/Election_NewsDetail.asp?Nid=163#sthash.COjvYtG9.dpuf