Wednesday, February 26, 2014

மக்கள் தலைவர் ந-மோவின் அதிரடி திட்டம் :


வடகிழக்கு மாநிலங்களை பொருளாதார மையமாக மாற்ற திட்டம்: மோடி

வடகிழக்கு மாநிலங்களை நாட்டின் முக்கியப் பொருளாதார மையமாக மாற்றுவதற்குத் திட்டம் வகுத்துக் கொடுக்கும்படி பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி தனது ஆலோசகர்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து, தில்லியில் பாஜக வட்டாரங்கள் கூறியதாவது:

மக்களவைத் தேர்தலையொட்டி, வடகிழக்கு மாநிலங்களில் குஜராத் முதல்வரும், பாஜக பிரதமர் பதவி வேட்பாளருமான நரேந்திர மோடி கடந்த வாரம் இரண்டு நாள்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.

அப்போது மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, ஆட்சிக்கு வந்தால் காங்கிரஸ் அரசால் நிராகரிக்கப்பட்ட வடகிழக்கு பிராந்திய வளர்ச்சித்துறை அமைச்சகத்தை மீண்டும் சீரமைத்து அமல்படுத்துவது தொடர்பாக நிபுணர் குழு அமைக்க அவர் திட்டமிட்டுள்ளார்.

வடகிழக்கு மாநிலங்களின் நீர் வளத்தை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தும் விதமான திட்டம் ஒன்றைத் தீட்டும்படி தனது ஆலோசகர்களிடம் மோடி கேட்டுக் கொண்டுள்ளார் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.

அருணாசலப் பிரதேசத்தில் கடந்த சனிக்கிழமை நரேந்திர மோடி பேசுகையில், ""வடகிழக்கு மாநிலங்களின் நீர் மேலாண்மைத் திட்டம் இன்றைய காலகட்டத்திற்குத் தேவையாக உள்ளது. இதனால் நீண்டகால வெள்ளப் பெருக்கு பிரச்னை தீர்க்கப்படுவது மட்டுமின்றி, மின் பற்றாக்குறையையும் தீர்க்கப்படும்'' என்று குறிப்பிட்டார்.

மேலும், சமீபத்தில் நடைபெற்ற வடகிழக்கு மாநிலங்களின் முதல்வர் மாநாட்டில் கலந்து கொண்ட மோடி, இந்த மாநிலங்களின் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் விதமாகவும், இந்த மாநிலத்தவர்களின் கலாசாரம், பாரம்பரியம் ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக 16 ஆயிரம் பெண் காவலர்களை குஜராத்துக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.

மோடி பேச்சுக்கு சீனா கருத்து: அருணாசலப் பிரதேசத்தில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மோடி பேசுகையில்," சீனா தனது நாட்டை விரிவுபடுத்தும் கொள்கையைக் கைவிட்டு இந்தியாவுடன் உறவை பலப்படுத்திக் கொண்டு அமைதியையும், வளர்ச்சியையும் ஏற்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்' என்றார்.

இதுகுறித்து சீன ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான "குளோபல் டைம்ஸ்' புதன்கிழமை வெளியிட்ட கட்டுரையில் கூறப்பட்டிருப்பதாவது:

பாஜக பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடியின் தேர்தலுக்கு முந்தைய சீன எதிர்ப்புப் பேச்சால் இருநாட்டு உறவுகளிலும் பாதிப்பு ஏற்படாது. மேலும் இதைப் பெரிதுபடுத்த வேண்டிய அவசியமில்லை என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.dinamani.com/india/2014/02/27/வடகிழக்கு-மாநிலங்களை-பொருள/article2079437.ece

No comments:

Post a Comment