Saturday, February 19, 2011

பிராடு தாத்தா கருன்ஸ்

இந்தியாவில் இதுவரை நடைபெறாத வரலாறு காணாத ஊழல்'' என்று அனைத்துத் தரப்பு ஊடகங்களும் செய்தி வெளியிட்டு வருகின்றன. ""இதனை நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்'' என்று அனைத்து எதிர்க்கட்சி எம்.பி.க்களும் ஒன்றுகூடி, முழக்கமிட்டு, தொடர்ந்து நாடாளுமன்ற நடவடிக்கையையே முடக்கிவிட்டனர்.

அரசுக்கு 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டு விவகாரத்தில் ரூ. 1.76 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ள நிகழ்வில், தமிழக முதல்வரின் துணைவி ராஜாத்தியம்மாள், மகள் கனிமொழி ஆகியோரின் பங்களிப்பும் உண்டு என்கிற செய்தி காட்டுத் தீயாய் பரவி வருகிறது. பிரபலமான கார்பரேட் தரகர் நீரா ராடியாவின் ரகசிய தொலைபேசிப் பரிவர்த்தனைகளில் முதல்வர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளின் பெயரும் அடிபட்டு பரபரப்புக்குத் தீனி போட்டு வருகிறது. போதாக்குறைக்கு நாடு தழுவிய அளவில் புலனாய்வுத்துறையின் சோதனைகள் வேறு. இத்தனை களேபரத்துக்கும் ஆ. ராசா ஒரு "தலித்' என்பதுதான் காரணம் என்று தமிழக முதல்வர் கூறி வருவது கேலிக்குரியது மட்டுமல்ல, காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை வாழும் 25 கோடிக்கும் மேற்பட்ட "தலித்' மக்களைத் திட்டமிட்டுக் கேவலப்படுத்துவதாகவும் அல்லவா இருக்கிறது. இது தன்னையும், தன் குடும்பம், கட்சி, ஆட்சி அனைத்தையும் அவமானத்திலிருந்து தப்பிக்கவைக்கக் கையாண்ட கடைந்தெடுத்த சுயநலத்தனம்.

தனது கட்சியைச் சார்ந்த ஓர் அமைச்சர் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறப்படும்போது, அந்தப் பிரச்னைக்கு அப்பாற்பட்ட, இன்னும் சொல்லப்போனால் தேவையேயில்லாத "சாதி'யை ஒரு போர்வையாக்கி பதிலளிப்பது என்பது எந்த வகை நியாயம்?

இது ஒரு தனிமனிதனின் தவறை, ஒரு சமூகத்தின் மீதே திணிக்கின்ற ஈவு இரக்கமற்ற கொடுமையல்லவா? சொல்லப்போனால், இதுவும் ஒரு வன்கொடுமைதான். இப்படி ஆ. ராசா ஒரு "தலித்' என்பதால்தான் இந்தக் குற்றச்சாட்டு எழுகிறது என்று முதலைக் கண்ணீர் வடிக்கும் கருணாநிதி, அப்படி என்ன "தலித்' மக்கள் மீது தீராத பாசம் கொண்டவரா, இல்லை தாழ்த்தப்பட்ட சமுதாயத்துக்காகத் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட தியாகியா? அவரது தலித் விரோத நடவடிக்கைகளை அவரது கடந்த காலச் சரித்திரம் தோலுரித்துக் காட்டி விடுகிறதே..

1969-ல் அண்ணா மறைந்தவுடன், அடுத்த முதலமைச்சராக இந்தக் கருணாநிதி தான் வரவேண்டும் என்று வழி மொழிந்தவர் சத்தியவாணிமுத்து அம்மையார். தி.மு.க.வின் எழுபெரும் தலைவர்களில் ஒருவரான இவர், தலித் சமூகத்தைச் சார்ந்தவர் என்பது உலகறிந்த உண்மை. ஆனால், இவரைத் தனது அமைச்சரவையிலிருந்து திடீரென தூக்கி எறிந்தவர்தானே கருணாநிதி? காரணம் தனது தலைமைக்குப் போட்டியாக வந்துவிடக் கூடாதென்ற உள் பயம்தானே காரணம்? முதலமைச்சரின் இவ்வஞ்சகச் சூழ்ச்சியை சத்தியவாணிமுத்து அம்மையார் "எனது போராட்டம்' என்ற நூலில் விவரமாகவே எழுதியிருக்கிறார்.

இந்தியாவையே அதிர்ச்சியில் உறைய வைத்த வெண்மணிச் சம்பவத்தில் 44 தலித் மக்களை துடிக்கத் துடிக்க உயிரோடு கொளுத்திய கொலைக் குற்றவாளிகள் அனைவரும் இவரது ஆட்சியில் தானே விடுதலையானார்கள்? இப்போது தலித் என்று பரிந்து பேசும் கருணாநிதி, அப்போது என்ன செய்து கொண்டிருந்தார்?

1,76,645 கோடி ரூபாய் ஊழலில் தொடர்புடைய ஆ. ராசா, கருணாநிதிக்கு தலித்தாகத் தெரிகிறார். வெண்மணியில் உயிரோடு கொளுத்தப்பட்ட அப்பாவிகள் "தலித்'துகளாகத் தெரியவில்லையே, ஏன்?

எவர் ஒருவர் ஐந்து லட்ச ரூபாய் நன்கொடை தந்தாலும் அவரது பெயரையே ஓர் அரசுக் கல்லூரிக்குச் சூட்டலாம் என்ற அரசாணையின் அடிப்படையில், மறைந்த முன்னாள் அமைச்சர் தலித் வீராங்கனை சத்தியவாணிமுத்து அம்மையார் முன் முயற்சி எடுத்து நன்கொடை திரட்டி, மும்பையில் அண்ணல் அம்பேத்கர் நிறுவிய சித்தார்த்தா கல்வி அறக்கட்டளையிடம்கூட பதினேழாயிரம் ரூபாய் நன்கொடை பெற்று, நட்சத்திர கிரிக்கெட் நடத்தியும், சிறுகச்சிறுக வசூலித்தும் ஐந்து லட்ச ரூபாயை அரசுக்குச் செலுத்தி, அதன்படி பொறிக்கப்பட்டதுதான் வியாசர்பாடி கலைக்கல்லூரிக்கு அம்பேத்கரின் பெயர். ஆனால் கருணாநிதியோ, பாபா சாகேபின் பெயரை இவர் சூட்டியதாகத் தற்பெருமை பேசி வருவது எவ்வளவு கடைந்தெடுத்த ஏமாற்றுத்தனம்.

சுற்றுலாத் துறை அமைச்சராக இருந்த அருந்ததியர் சமூகத்தைச் சார்ந்த அந்தியூர் செல்வராஜ், தனது குடும்ப நிகழ்வாக பன்னாரியம்மன் கோயில் தீ மிதி திருவிழாவுக்குப் போனார் என்ற ஒரே காரணத்துக்காக கண்டன அறிக்கை விட்டு அவரைக் கேவலப்படுத்தியவர் கருணாநிதி. ஆனால், துணை முதல்வரான இவரது மகன் ஸ்டாலினின் குடும்பம் மட்டும் மயிலாப்பூர் முண்டகக் கண்ணியம்மன் கோயிலுக்குப் போய் கூழ் ஊற்றி சாமி கும்பிடலாம். மகன் அழகிரியின் மனைவி திருப்பரங்குன்றத்தில் தங்கத்தேர் இழுக்கலாம். இவர் மஞ்சள் துண்டுடன் பவனி வரலாம். இவரது மனைவி தயாளு அம்மாள் சாய்பாபா காலில் விழுந்து வணங்கலாம். இதெல்லாம் எந்த ஊர் பகுத்தறிவுப் பண்பாடோ, பெரியாருக்குத்தான் வெளிச்சம்.

இவர் முதலமைச்சரானவுடன் செய்த முதல் வேலையே அன்றைக்கு டி.ஐ.ஜி. பதவி வகித்த எஸ். தயா சங்கர் - கே. காளியப்பன் ஆகிய இரு தலித் அதிகாரிகளை திறமையின்மை என்று காரணம் கூறி தாற்காலிகப் பணிநீக்கம் செய்ததுதான். இதில், தயா சங்கர், அண்ணல் அம்பேத்கரின் அடியொற்றி நடைபோட்டு, அவரது இந்தியக் குடியரசுக் கட்சியின் முதல் தலைவராயிருந்த சிவராஜின் மகன் என்பது மிகுந்த வேதனைக்குரிய செய்தியாகும். எஸ். தயாசங்கரின் அன்னை மீனாம்பாள் சிவராஜ், ஆயிரம் விளக்குத் தொகுதியில் திமுகவை எதிர்த்துப் போட்டியிட்டார் என்ற காழ்ப்புணர்ச்சி காரணமாக கருணாநிதி எடுத்த கீழ்த்தரமான நடவடிக்கைதான் இது என்பதைச் சொல்லித் தெரியவேண்டுமா என்ன?

தலித் அதிகாரிகளைத் தேவையின்றி பந்தாடிய கருணாநிதியின் செயல்பாடுகளின் தொடர்ச்சிதான், சமீபத்தில் தலித் ஐ.ஏ.எஸ். அதிகாரி உமாசங்கரை நடத்திய விதமாகும். நிர்வாகத் திறன்மிக்க நேர்மையான அதிகாரி என்று பலராலும் ஏன் இவராலும் கூட பாராட்டப்பட்ட உமாசங்கர், இவரது குடும்ப வியாபாரத்துக்கு இடையூறாக இயங்கினார் என்றவுடன் அவரைப் பொய்க் காரணம் கூறி தாற்காலிகப் பணிநீக்கம் செய்தபோது தெரியவில்லையா அவர் தலித் என்று????

இப்போது மட்டும் ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளான ராசாவை தலித் என்று காரணம் காட்டி வக்காலத்து வாங்கும் முதல்வர் கருணாநிதி, ஓர் ஊழலை அம்பலப்படுத்த முற்பட்ட உமாசங்கரை "திறமைமிக்க தலித்' என்றல்லவா பாராட்டியிருக்க வேண்டும்?

இதற்கு முன்னர், மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்டக் காவல் துறை அதிகாரி ஆகியோர் முன்னிலையிலேயே குமரி மாவட்ட வருவாய் அலுவலர் ஜனார்த்தனம் என்ற தலித் அதிகாரியை ஒரு விழா மேடையில் சாதியைக் கூறித் திட்டி, கன்னத்திலடித்த சுற்றுலாத் துறை அமைச்சர் சுரேஷ்ராஜனை பதவி நீக்கம் செய்ய வேண்டுமென்று இன்று வரை போராடி வருகிறோமே, அதற்குக் கருணாநிதி எடுத்த நடவடிக்கை என்ன? இந்த அமைச்சர் மீது காவல் துறை வழக்குப் பதிவு செய்த பின்னரும் கூட அது கைவிடப்பட்டதே, இதுதான் இவரது தலித் பாசமா?

கடந்த இரு மாதங்களுக்கு முன், திருநெல்வேலி அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகத் துணைவேந்தர் தலித் சமூக டாக்டர் எஸ். காளியப்பனை தி.மு.க. எம்.எல்.ஏ. மாலை ராஜா, சாதியைக் கூறி தாக்கிய சம்பவத்துக்கு இவர் எடுத்த நடவடிக்கைதான் என்ன?

"தலித்' அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு கூடாதென்ற மண்டல் கமிஷன் தீர்ப்பிலிருந்து விதிவிலக்கு பெறுவதற்காக, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத் திருத்தத்துக்கு இன்னும் அங்கீகாரம் தராத ஒரே ஒரு மாநிலம் இவர் முதலமைச்சராக இருக்கும் தமிழ்நாடு தான் என்கின்றபோது வரும் வேதனை, இவர் "தலித்' பற்றி போலித்தனமாகப் பேசும்போது அதிகரிக்காமல் என்ன செய்யும்?

மத்திய அமைச்சரவையில் உள்ள ஏழு தலித் சமூக அமைச்சர்களில் ஆ. ராசா மீது மட்டும் ஊழல் புகார் வருகிறதென்றால் அதன் உண்மையறிய வேண்டும். அதை விட்டுவிட்டு, அவரை சாதியப் போர்வைக்குள் இழுத்துக் காப்பாற்றப் பார்ப்பது மோசடித்தனம்.

தமிழக அரசியலில் நேர்மைக்கும், தூய்மைக்கும் அடையாளமாகக் கருதப்படுபவர் "தலித்' சமுதாயத்தைச் சேர்ந்த கக்கன்தான். கக்கனின் அடியொற்றி தாழ்த்தப்பட்ட சமுதாயத்துக்குப் பெருமை தேடித் தருவதற்குப் பதிலாக, இழிவைத் தேடித் தந்திருக்கும் ஆ.ராசாவை ஒரு "தலித்' என்று முதல்வர் கருணாநிதி அடையாளம் காட்டுவது, அந்தச் சமுதாயத்தைக் கேவலப்படுத்துவதற்குத் தானே? ஆ. ராசாவைக் காப்பாற்றி அதன் மூலம் "ஸ்பெக்ட்ரம்' முறைகேடுகளால் அரசுக்கு ஏற்பட்ட பல லட்சம் கோடி இழப்பை நியாயப்படுத்துவதற்கு "தலித்' கேடயத்தைத் தூக்கியிருப்பதன் மூலம், ஒட்டுமொத்த தாழ்த்தப்பட்ட சமுதாயத்தையே ஊழல் பேர்வழிகளாகச் சித்திரிக்க முற்படுகிறாரே, இந்த "தலித்' விரோதியின் கபட நாடகத்தைத் தோலுரித்துக் காட்டாமல் இருந்தால் எப்படி?

தாழ்த்தப்பட்ட சமுதாயத்தின் காவலர்கள் என்று கூறிக் கொள்பவர்கள், கருணாநிதி என்கிற "தலித்' இன விரோதியுடன் கைகோத்து, கூட்டணி தர்மம் என்று நியாயம் பேசி மெüனம் சாதித்தால், அவர்களும்கூட "தலித்' விரோதிகள்தான்!

http://truetamilans.blogspot.com/

சோனியா, கருணாநிதி மீதும் கிரிமினல் வழக்கு! தயாராகிறார் சுவாமி

SSwamy%203.jpg
இந்தியாவையே மலைக்க வைக்கும் அளவுக்கு நடந்திருக்கும் ஸ்பெக்ட்ரம் ஊழல் மூலம் கிடைத்த அறுபதாயிரம் கோடி ரூபாயை சோனியா காந்தி, ஆ.ராசா, கருணாநிதி ஆகியோர் பங்கு போட்டிருக்கிறார்கள். அதனால் இந்த ஊழல் வழக்கில் மூவரையும் வரிசையாக கைது செய்ய வேண்டும்...’’ என்று சொல்லி அதிர்ச்சி குண்டை வீச ஆரம்பித்திருக்கிறார், ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி. இந்த அதிரடி, புதிரடிகள் காங்கிரஸ் மற்றும் தி.மு.க. தரப்பில் கடுமையான அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்நிலையில், சுப்பிரமணியன் சுவாமியை சந்தித்துப் பேசினோம்.

S%20swamy%207.jpg
ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் சோனியா காந்தியையும், கருணாநிதியையும் குற்றவாளிகள் என்று சொல்ல ஆரம்பித்திருக்கிறீர்களே...

நான் எதையும் ஆதாரம் இல்லாமல் சொல்ல மாட்டேன். ஆரம்பத்தில் இந்த விவகாரத்தை கையில் எடுத்து தவறு நடந்திருக்கிறது என்று நான் சொன்னபோதுகூட இப்படித்தான் பலரும் நம்ப மறுத்தார்கள். ஆனால், என்ன நடந்தது? மத்திய தலைமை தணிக்கை அதிகாரி தன்னுடைய விசாரணை அறிக்கையில் 1.76 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு அரசுக்கு வருமான இழப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதை தெள்ளத் தெளிவாக சொல்லிவிட்டார். விசாரணை தீவிரமாகும்போது சோனியா காந்தியும் கருணாநிதியும் கடுமையாக சிக்கிக் கொள்வார்கள். உடனே, ‘அன்று சுப்பிரமணியன் சுவாமி சொன்னதுதான் நடந்திருக்கிறது...’ என்று சொல்லப் போகிறார்கள்.

எந்த ஆதாரத்தின் அடிப்படையில் இப்படி குற்றம் சாட்டுகிறீர்கள்?

பிரதமருக்கு இது தொடர்பாக நான் ஒரு கடிதம் அனுப்பி இருக்கிறேன். அந்த கடிதத்தில் மிகவும் தெளிவாக எல்லாவற்றையும் குறிப்பிட்டிருக்கிறேன். கிட்டத்தட்ட ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு மூலமாக 60 ஆயிரம் கோடி ரூபாயை கொள்ளையடித்திருக்கிறார் ஆ.ராசா. அந்தப் பணம் முழுவதையும் அவர் மட்டுமே எடுத்துக் கொள்ளவில்லை. பத்து சதவீதத்தை மட்டுமே தனக்காக எடுத்துக் கொண்டு விட்டு, மீதப்பணத்தை கருணாநிதிக்கும் சோனியா காந்திக்கும் பங்கிட்டுக் கொடுத்திருக்கிறார். முப்பது சதவீதம் கருணாநிதி குடும்பத்துக்கும் அறுபது சதவீதம் சோனியா காந்தி குடும்பத்துக்கும் போயிருக்கிறது. இதை கருணாநிதியோ, சோனியா காந்தியோ இல்லை என்று மறுக்கட்டும். அல்லது என் மீது வழக்குப் போடட்டும்.

சோனியா காந்தியின் குடும்பத்தினரை ஏன் இந்த விவகாரத்துக்குள் இழுக்கிறீர்கள்?


தொடர்பு இருக்கும்போது இழுக்கத்தானே வேண்டும்? சோனியா காந்தியின் சகோதரிகள் அனுஷ்கா, நாடியா இருவருக்கும் இந்த ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தொடர்பு உண்டு. ஆ.ராசா ஊழல் மூலம் கொள்ளையடித்துக் கொடுத்த பணத்தை சோனியா காந்தி தன்னுடைய இரு சகோதரிகள் மூலமாகத்தான் பல்வேறு இடங்களில் பதுக்கி வைத்திருக்கிறார்.

S%20swamy%204.jpgகணவரால் கைவிடப்பட்ட அந்த இரண்டு சகோதரிகளுக்கும் மலேசியா, ஹாங்காங், லண்டன், அமெரிக்கா, பாகிஸ்தான் என்று பல நாடுகளிலும் நண்பர்கள் உண்டு. ஸ்பெக்ட்ரம் ஊழல் மூலம் கொள்ளையடித்த பணத்தை இந்த நாடுகளில்தான் அவர்கள் முடக்கி இருக்கிறார்கள். இதற்காக துபாயைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஏற்பாடு செய்து கொடுத்த தனியார் விமானம் ஒன்றின் மூலமாக அவர்கள் பல்வேறு நாடுகளுக்கும் சென்று வந்திருக்கிறார்கள். சீனாவுக்கும் கூட அவர்கள் சென்று வந்திருக்கிறார்கள். அருகிலிருக்கும் மக்காவ் தீவு வங்கியில் பெரும்பாலான பணம் டெபாஸிட் செய்யப்பட்டிருப்பதாக எனக்குத் தகவல்கள் கிடைத்திருக்கின்றன.

ஆன்-லைன் மூலமாகவே இந்தியா-விலிருந்து ஆயிரக்கணக்கான கோடிகளை வெளிநாடுகளுக்கு டிரான்ஸ்பர் செய்திருக்-கிறார்கள். இதில் அன்னிய செலாவணி மோசடியும் நடந்திருக்கிறது. அதனால்தான் அமலாக்கப் பிரிவு அதிகாரிகளும் தீவிரமாக இறங்கி விசாரித்துக் கொண்டிருக்-கிறார்கள்.

இந்தப் பணமெல்லாம் வெளிநாட்டில் டெபாஸிட் செய்யப்பட்டது ஒருபக்கம் இருக்கட்டும். இந்தப் பணம் தீவிர-வாதத்-துக்கோ, மதமாற்றத்துக்கோ, இந்தியாவுக்கு எதிரான பிரசாரத்துக்கோ, இந்திய இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தவோ பயன்-படுத்தப்பட மாட்டாது என்பதற்கான எந்த உறுதியும் இல்லை.

இதனையெல்லாம் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் தெளிவாக குறிப்பிட்டிருக்கிறேன். பிரதமரிடம் இது தொடர்பாக பேசியும் இருக்கிறேன்.

S%20swamy%203.jpgஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டுக்கு அரசு அனுமதி இல்லாமல் ஆன்-லைன் மூலமாக பணம் பரி-மாற்றம் செய்யப்பட்டால், அது யாருக்கு எவ்வளவு செய்யப்பட்டது என்கிற விவரத்தையெல்லாம் நொடியில் அமெரிக்காவில் இருக்கும் ஒரு அமைப்பு மூலமாக கண்டறிந்து-விடலாம். அதற்கு ஒபாமா உதவக்கூடும். அதற்காக ஒபாமாவிடம் பிரதமர் பேச வேண்டும்.

கூடவே, உலக அளவில் நடந்திருக்கும் இந்த பணப் பரிவர்த்தனைகள் தொடர்பாக சர்வதேச அளவில் விசாரணை நடத்தப்பட வேண்டும். அப்படி செய்யும் பட்சத்தில், ஊழலில் ஊறித் திளைக்கும் சோனியா குடும்பத்தினர் வசமாகச் சிக்கிக் கொள்வார்கள். கருணாநிதியும் அவருடைய குடும்பத்தினரும் கட்டாயம் கம்பி எண்ணி, களி திங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

இல்லையென்றால், என்னிடம் இருக்கும் ஆதாரங்களையெல்லாம் வைத்து நானே ராசாவைத் தொடர்ந்து சோனியா காந்தி மற்றும் கருணாநிதி மீதும் கிரிமினல் வழக்குத் தொடர்ந்து, நடவடிக்கை எடுக்க வைப்பேன். இந்தியாவின் உளவு அமைப்புகள் சி.பி.ஐ., ரா, அமலாக்கப் பிரிவு எல்லாம் ஒன்றாக சேர்ந்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டிய மிகப் பெரிய ஊழல், இந்த ஸ்பெக்ட்ரம் ஊழல். எல்லாம் சரி, இந்த விவகாரத்தில் பிரதமர் மன்மோகன் சிங்குக்குத் தொடர்பில்லாதது போல பேசுகிறீர்களே...

‘சட்ட அமைச்சகம் மற்றும் நிதி அமைச்சகத்தின் ஒப்புதலோடுதான் அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ய வேண்டும்...’ என்று தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த ஆ.ராசாவிடம் பிரதமர் தெளிவாகச் சொல்லியிருக்கிறார். ஆ.ராசாவும் இது தொடர்பாக சட்ட அமைச்சகத்திடம் விசாரித்திருக்கிறார். அவருடைய எண்ணங்களுக்கு சட்ட அமைச்சகம் உடன்படவில்லை என்றதும், கடந்த 2007&ம் ஆண்டு நவம்பர் 2&ம் தேதி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக பிரதமருக்கு ஒரு கடிதம் அனுப்புகிறார் ஆ.ராசா. அதில் முழுக்க முழுக்க சட்ட அமைச்சகத்தைப் பற்றி புகார் சொல்லியிருக்கிறார். அதற்கு அன்றைக்கு மதியமே பதில் அனுப்பி இருக்கிறார் பிரதமர். ‘இரண்டு அமைச்சரவைக்குள் பிரச்னை என்றால், அமைச்சரவை கூடி முடிவெடுக்க வேண்டும். அதேபோல, அதிகாரம் படைத்த அமைச்சர்கள் குழுவிடமும் பேசி இது தொடர்பாக முடிவெடுத்து செயல்படுவதே நல்லது...’ என்று அந்தக் கடிதத்தில் சொல்லியிருக்கிறார்.

பிறகு ஒருமாதம் கழித்து 26.12.2007&-ல், அப்போது வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜியும், சொலிசிட்டர் ஜெனரலாக இருந்த வாகன்வதியும் அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் அளித்துவிட்டதாக கடிதம் மூலம் பிரதமருக்குத் தெரிவித்திருக்கிறார்.

ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு மன்மோகன் சிங் ஆதரவாக இருந்ததாகவும் பிரணாப் முகர்ஜி எதிர்ப்பாக இருந்ததாகவும் எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்-கிறார்கள். அதில்லை. ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு ஆரம்பத்திலிருந்தே பிரணாப் முகர்ஜிதான் ஆதரவாக இருந்திருக்கிறார். உச்ச நீதிமன்றம் கடுமையான அழுத்தத்தை மத்திய அரசுக்குக் கொடுத்ததும், சோனியா காந்தியிடம் மன்மோகன் சிங் கடுமையாக ரியாக்ட் செய்ய ஆரம்பித்துவிட்டார். உடனே காங்கிரஸ் கட்சியின் ஒருங்கிணைப்பு கமிட்டி கூட்டத்தைக் கூட்டி சோனியா காந்தி ஆலோசனை நடத்தினார். அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட பிரணாப் முகர்ஜி, அகமது பட்டேல், சோனியா காந்தி, ஏ.கே. அந்தோணி ஆகியோர், ராசாவை பதவி விலக்கத் தேவையில்லை என்று வாதிட்டிருக்கிறார்கள். ஆனால், அதற்கு பிரதமர் சம்மதிக்கவில்லை. அதன்பிறகுதான், ராசாவை பதவி விலக வைத்திருக்கிறார்கள். இப்பப் புரியுதா... சோனியா காந்தி கடைசிவரையில் ராசாவுக்கு ஆதரவாக நின்றிருப்பது?

S%20swamy%206.jpgதற்போதைய நிலையில் ஆ.ராசா சிறையில் இருப்பதுதான் அவருக்கு நல்லது என்று சொல்லி-இருக்கிறீர்களே...

ஆமாம். ஊழலில் கொள்ளையடித்த பணத்தை அவர் கருணாநிதி குடும்பத்துக்குத்தான் கொடுத்திருக்கிறார். இப்போது அவர் வசமாக சிக்கிவிட்டார். சி.பி.ஐ. விரைவில் அவரை வளைத்துவிடும். அவர் உண்மைகளை கக்குவார். இதனால், கருணாநிதி குடும்பத்துக்கு சிக்கல் வரும். அப்படியொரு நிலையை கருணாநிதி அனுமதிப்பாரா? அதனால்தான் ராசா பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று சொல்கிறேன். ‘என் உயிருக்கு ஆபத்து இருக்கிறது...’ என்று, அவர் தன்னுடைய நண்பர்களிடம் பதட்டமாகச் சொன்ன செய்தி எனக்கு வந்தது. பிறகுதான், ராசாவுக்கு பாதுகாப்புக் கோரி பிரதமருக்கு கடிதம் அனுப்பினேன்.

ஊழலுக்கென்று யாரும் பெரிதாக இதுவரை தண்டிக்கப்படவில்லையே...

அப்படிச் சொல்ல முடியாது. அந்த வாதத்துக்கு ராசா விஷயம் முற்றுப்புள்ளி வைக்கும். ராசா விரை-விலேயே ஜெயிலுக்குப் போவார். டிசம்பர் முதல்வாரத்திலேயே அவர் மீது ஊழல் தொடர்பாக கிரிமினல் வழக்குப் போட்டுவிடுவேன். விசாரித்து தண்டனையும் வாங்கித் தருவேன். விசா-ரணையில் சோனியா காந்தி, கருணாநிதி, கனிமொழி, ராசாத்தியம்மாள் ஆகியோர் கட்டாயம் சிக்கலுக்கு ஆளாவார்கள். முடிவில் கருணாநிதியும் ஜெயிலுக்குப் போவார். டெல்லியில் உங்களை சந்தித்த கனிமொழி, ‘ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை பெரிதுபடுத்த வேண்டாம்’ என்று கேட்டுக் கொண்டாராமே...

யார் என்னை சந்தித்தாலும் சரி... இந்த ஊழல் விவகாரத்தில் யாரிடமும் எதற்காகவும் காம்ப்ரமைஸ் கிடையாது. இது தொடர்பாக என்னை சந்தித்த எல்லோரிடமும் நான் இதையேதான் சொல்லி வந்திருக்கிறேன். இதற்காக நிறைய பேர் என்னை சந்தித்திருக்கிறார்கள். அவர்கள் பெயரையெல்லாம் சொல்வது நாகரிகமல்ல.

தலித் இனத்தைச் சேர்ந்தவர் என்பதால், பிராமணர்கள் ஒன்று சேர்ந்து ராசாவை ஒழித்துக்கட்ட முயற்சிக்கிறார்கள் என்கிறாரே கலைஞர்..?

அவர் வாதப்படியே வைத்துக் கொள்வோம். ‘தலித்’ என்பதால் ஊழல் செய்ய சட்டம் அனுமதித்திருக்கிறதா? சரி, இந்தியாவின் சட்டமேதையாக இருந்த தலித் தலைவர் டாக்டர் அம்பேத்கர் இப்படித்தான் ஊழல் செய்தாரா? இதில் சாதி எங்கேயிருந்து வந்தது? ஊழலைப் பொறுத்தவரையில் ஊழல் ஒரு சாதி என்றால், ஊழலுக்கு எதிரானவர்கள் இன்னொரு சாதி. மற்றபடி, சாதிப் பிரச்னையை கிளப்பி அல்ப அரசியல் நடத்தக் கூடாது. ஏற்கனவே ராமகிருஷ்ண ஹெக்டே என்கிற உயர் சாதி இந்துவை பதவி இறக்கம் செய்தேன். அதேபோல, ஜெயலலிதாவுக்கு எதிராக வழக்குப் போட்டேன். ஒரு வழக்கில் அவருக்கு தண்டனையும் வாங்கிக் கொடுத்தேன். அப்படியிருக்க, இதில் சாதி எங்கே வருகிறது? ஜெயலலிதா மீது போட்ட வழக்குகளை அரசுத் தரப்பில் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று சொன்ன கருணாநிதி, ஜெயலலிதாவுக்கு ஒரு வழக்கிலும் தண்டனை வாங்கித் தரவில்லையே? அப்ப, கருணாநிதி பிராமண இனத்து ஜெயலலிதாவுக்கு சாதகமாக நடக்கிறாரா? கருணாநிதி வாயில் சனி புகுந்து விட்டது. இனி, அவர் இப்படித்தான் கண்டதையும் பேசுவார். கைது பயத்தில் உளறுகிறார்.

அ.தி.மு.க. தொண்டர்கள் நடத்திக் காட்டிய ‘சாகச’க் காட்சிகளையெல்லாம் சுவாமி மறந்திருக்கலாம். ஆனால், தமிழக மக்கள் மறக்கவில்லை என்று சொல்லியிருக்கிறாரே கலைஞர்...

ஆடு நனையுதுன்னு ஓநாய் ஏன் அழ வேண்டும்? நாகரிகத்தைப் பொறுத்த வரையில் அ.தி.மு.க. என்ன? தி.மு.க. என்ன? எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான். அந்த சம்பவங்களெல்லாம் இப்போது எதற்காக சொல்கிறார் கருணாநிதி? ஸ்பெக்ட்ரம் ஊழலில் பங்குண்டா என்று கேட்டால், அதற்கு பதில் சொல்ல முடியாமல் பிரச்னையை திசை திருப்புகிறார்.

http://devapriyaji.activeboard.com/index.spark?aBID=134804&p=3&topicID=35211647&page=4&sort=oldestFirst

சேலத்தில் அண்ணன் அஞ்சா நெஞ்சன் பேசியவை.




தமிழகத்தில், தி.மு.க., ஆட்சியின் திட்டங்களை எல்லாம் இழிவுபடுத்தும் வகையில் ஒரு அம்மா, ஊருக்கு ஊரு போய், "மைனாரிட்டி' அரசு என்று பேசி வருகிறார்.முதல்வர் கருணாநிதி 4 மணிக்கு எழுந்து, பேப்பர் படித்து, முரசொலிக்கு எழுதுகிறார்; கட்சிக்காரர்களை பார்க்கிறார்; பின், தலைமைச் செயலகத்துக்கு சென்று, மக்களுக்கு திட்டங்களை தீட்டுகிறார்; தினந்தோறும் மக்களை சந்திக்கிறார்.ஆனால், அவரோ (ஜெயலலிதா) ஊட்டிக்கு போய் விடுகிறார். கட்சி அலுவலகத்துக்கு வரும் தலைவருக்கு வரவேற்பு கொடுக்கும் கட்சி அ.தி.மு.க., மட்டுமே. தெய்வத்தாய், பராசக்தி, தர்மத் தாய் என்றெல்லாம் கட்-அவுட் வைப்பவர்கள், ஜெயலலிதாவை, "கன்னித்தாய்' என்று குறிப்பிட்டு கட்-அவுட், போஸ்டர் அடிக்க முடியுமா? அது போன்று அவரை அழைக்கவாவது முடிகிறதா? இவ்வாறு அழகிரி பேசினார்.

இதனை பற்றி மக்களின் சிலரின் கருத்து.




1.அப்பனுக்குப் பிள்ளை தப்பாமல் பிறந்துள்ளது என்று சொல்லுவார்கள். அந்த வார்த்தையை மு.க.அழகிரி இன்று நிரூபித்துள்ளார். ஒருவனுக்கு ஒருத்தி என்றுதான் சட்டம் சொல்கிறது. அதுவும் அரசுப் பணியாற்றும் ஒருவருக்கு கட்டாயம் இச்சட்டம் பொருந்தும். தமிழக முதல்வர் என்கின்ற வகையிலும், தமிழக அரசின் மாத சம்பளம் பெரும் ஊழியர் என்கின்ற முறையிலும் உங்கள் தந்தைக்கும் இச்சட்டம் பொருந்தும். ஊரறிய ஒரு தவறு செய்தால் அது "வீரச்" செயல் ஆகாது. மத்திய அமைச்சரவையிலே மந்திரி பதவி பெற்ற பிறகு எத்துனை முறை நீங்கள் பாராளுமன்றத்திற்கு சென்றீர்கள், உங்கள் இலாகா சம்பந்தப்பட்ட எத்துனை கேள்விகளுக்கு நீங்களே ஆஜராகி பதில் சொல்லியிருக்கிறீர்கள் என்று புள்ளி விவரத்துடன் பேச முடியுமா?? அரசு விழாக்களுக்கு செல்லும்பொழுது ஒரு மனைவி, உண்ணாவிரதம் இருக்கும்பொழுது ஒரு மனைவி, திரைப்படத்துறை விழாக்களில் கலந்துகொள்ள என்று இப்படி மனைவியையும், துணைவியையும் அழைத்துக்கொண்டு சுற்றும் உங்கள் தந்தைக்கு தயவு செய்து "வக்காலத்து" வாங்க வேண்டாம். தங்களுக்கு அளித்துள்ள மத்திய அமைச்சரவைப் பதவிக்கு முக்கியத்துவம் அளித்து அதற்குப் பதில் பேசுங்கள். வெட்கக்கேடான விசயம், சமீபத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஊதிய உயர்வு. உங்கள் "லாவணி" சண்டைகளுக்கு நாங்கள் வாக்களிக்கவில்லை. மக்கள் நலனில் நீங்கள் காட்டப்போகும் "அக்கறைக்குத்" தான் வாக்களித்துள்ளோம். முதலில் இதனை உணர்ந்துகொண்டு அதற்கேற்றாற்போல் நடந்துகொள்ளுங்கள்.


2.அண்ணே ரொம்போ தெளிவா பேசறோம்னு வாய்க்கு வந்தது அல்லகைகள் சொல்றத கேட்டு பேசிடாதிங்க. அப்புறம் அவங்க திரும்பி கேட்டா என்ன பதில் சொல்லுவீங்க? சோ கொஞ்சம் அடக்கி வாசிங்க....

3.பெண்களின் அந்தரங்க வாழ்க்கையை பற்றி இதை விட கேவலமாக வேறு யாரும் விமர்சிக்க முடியாது ! அதுவும் ஒரு முன்னால் முதல்வரை பற்றி,காசு கொடுத்து ஒட்டு வாங்கி ஜெய்த்து பாராளுமன்றத்தில் ஒரு வருடத்திற்கு "ஒன்றை நாள்" மட்டுமே வருகை தந்த "மாண்புமிகு மானங்கெட்ட மத்திய அமைச்சர்" பேசி இருப்பது - தமிழ்நாட்டுகே பெருத்த அவமானம்! இவரோட அப்பாவும்,குடும்ப உறுபினர்களும் "கூடி சேர்ந்து கோடி சேர்த்த" கொள்ளைகளை கேள்வி கேட்டதற்கு பதில் சொல்ல தெரியாமல்,இப்படி தனது "தன்மான அப்பாவை" போல தனயன் "நாகரிகமாக" விமர்சனம் பண்ணி இருப்பதை எந்த ஒரு தி.மு.க அடிவருடிகள் கூட ஏற்றுகொள்ள மாட்டார்கள்!.

4.கன்னித் தாய் என்ற புனித வார்த்தையை நீ கண்ணியமற்ற முறையில் பயன்படுத்தியதற்க்காக...எனது ஆழ்ந்த வருத்தத்தையும் கடும் கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் ! அடுத்து நீ சுத்த கூமுட்டை !!! புரட்சித் தலைவிய பராசக்தி என்று சொன்னதற்கு அர்த்தம் சொன்னால் உனக்கு புரியாது ! வாயப் பொத்திக்கிட்டு பேசாமப் போ !!!

5.பெண்கள இழிவா பேசாதே. இன்னிக்கு கூட்டம் கூட்டமா மக்கள் அந்தம்மா பின்னால ஓடுறத பாத்து வயிதெரிச்ச்சள்ள பொது இடத்தில இவளோ கேவலமா பேசுற நீ, நாளைக்கே தேர்தல்ல தோத்து போய்ட்டா ஒட்டு போடலேன்னு எங்க ஊட்டு பொண்ணுகள கேவலமா பேச மாட்டேன்னு என்ன நிச்சயம்?. இன்னிக்கு எங்க பொம்பளைங்க ஒட்டு போடுறாங்க, நீ வந்தா ஆரத்தி எடுக்கிறாங்க, நீ ஜெயிச்சுட்ட, அதனால அவங்கள பத்தி ஒன்னும் பேச மாட்டேன்கிற. நாளைக்கே பொம்பளைங்க ஒட்டு கம்மியா போயி தோத்து போய்ட்டா, அப்போ எங்களையும் இப்படிதான் எங்க போன, எவன் கூட போனான்னு கேவலமா பேசுவியா? இன்னிக்கு அந்தமாவ இவளோ கேவலமா பேசுற நீ, நாளைக்கே உனக்கு ஒட்டு போடுற பொம்பளைங்கள அசிங்கபடுத்த மாட்டேன்னு என்ன நிச்சயம்? சொல்லு. அது சரி, எங்கள கேவலமா பேசின குஷ்பூ கூட உறவு வெச்சுக்கிட்ட ஆளுங்கதான நீங்க. அப்புறம் உங்ககிட்ட வேற என்னத்த எதிர்பாக்க முடியும். இங்க இவளோ பெண் வாசகிகள் இத படிக்கிறீங்களே, உங்களுக்கெல்லாம் சொரனையே இல்லியா? எதாச்சும் சொல்லுங்களேன் பார்ப்போம். பொம்பள நெனச்ச பிரபஞ்சத்தையே மாத்த முடியும்ன்னு வாய்கிழிய பேசுறீங்களே, எதாச்சும் சொல்லுங்க. ஆயிரம்தான் இருந்தாலும் ஒரு பெண்ணை இப்படி தரகுறைவா பேசுவதை ஒத்துக்குறீங்களா? சொல்லுங்க. நீங்களும் ஒரு பொம்பளதான. வாயத்தொறந்து சொல்லுங்க. அட ச்சை, பரவல்ல, கடைசிக்கு ஓட்டு சீட்லயாச்சும் சொல்லுங்க..

6.அய்யா அழகிரி! நான் ஒரு கட்சியும் சாராதவன்! ஆனாலும் தங்கள் பேச்சில் ஒரு மத்திய மந்திரிக்கான நளினம் இல்லை அய்யா. தயை கூர்ந்து தங்களின் மதிப்பை உயர்த்தி கொள்ளுங்கள்.. நீங்கள் இப்படியே பேசினால் உங்கள் ஒருத்தர் மூலமாகவே அனுதாப அலை பெற்று அந்த அம்மையார் பதவி பெறுவது உறுதி!

7.மத்திய அமைச்சருக்கு பொதுமக்கள் சார்பாக ஒரு வேண்டுகோள் . 'அமைச்சராக இருக்கிறீர்கள் கொஞ்சம் கண்ணியமாக பேசுங்கள் , உங்கள் அப்பாவை போல் கண்ணிய குறைவாக யாரையும் பேசாதீர்கள் '. ஓ இதுதான் 'தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாயும் ' கதையா ? ரொம்ப கேவலமா இருக்கு . இவர்கள் பேச்சை கேட்டால் காதை பொத்திக்கொள்ள வேண்டியது தான் ..

8.ஒரு மத்திய அமைச்சர் இவ்வளவு இழிவாக ஒரு பெண்ணை பேசுவது மிகவும் கண்டிக்க தக்கது . என்ன செய்வார், இவர் வந்த குளம் அந்த மாதிரி . அதான் மந்திரி இப்படி புலம்புகிறார் .


அண்ணே நம்ம குடும்பமே சரியில்லதா போது உங்களுக்கு எதுக்கு இந்த வேலை..

கருணாநிதி பாராட்டு விழாவில் ஆட மறுத்த நடிகைகளுக்கு தமிழ் திரையுலகம் தடை விதித்துள்ளது.

தமிழக முதல்வர் கருணாநிதி தமிழக திரை உலகினருக்கு பல் வேறு சலுகைகளையும் வாரி வழங்கிவருகிறார். கடுமையான விலைவாசி உயர்வால் மக்கள் திண்டாடி வருவதும், விவ்சாயம், பின்னலாடை, உள்ளிட்ட பல் வேறு தொழில் துறையும் தனியார் மயம் காரணமாக வீழ்ச்சியடைந்து வரும் நிலையில், சினிமா நடிகர்கள் மட்டும் உச்சக்கட்ட சந்தோசத்தில் இருக்கிறார்கள். காரணம் கருணாநிதி அரசு மக்களின் வரிப்பணத்தை அவர்களுக்கு வாரி வழங்கிவதுதான் காரணம்.

இந்நிலையில் ரஜினி, கமல் தலைமையில் கருணாநிதியை குஷிப்படுத்தும் வகையில் இந்தி நடிகர் அமிதாப்பச்சனை வைத்து பிரமாண்ட பாராட்டு விழாவை இன்று மாலை நான்கு மணிக்கு சென்னையில் நடத்துகிறார்கள். நடிகைகளின் குத்துப்பாட்டை கருணாநிதி பல மணிநேரம் அமர்ந்து ரசிக்கிறார். ரஜினி கருணாநிதியைப் புகழ்ந்து வாலி எழுதிய பாடல் ஒன்றைப் பாடுகிறார். இந்த நிகழ்வில் நடனமாட மறுத்த பிரபல தமிழ் நடிகைகளான த்ரிஷா, ஸ்ரேயா, ப்ரியாமணி ஆகியோருக்கு தமிழ் திரயுலகினர் சினிமாவில் ஒத்துழைப்பு வழங்கப் போவதில்லை என்றூ மறுப்பு தெரிவித்துள்ளனர். தவிறவும் கருணாநிதியின் பேரன்கள் திடீர தயாரிப்பாளர்களாகவும், ஹீரோக்களாகவும் குதித்து ஒட்டு மொத்த கோடம்பாக்கத்தையே கபளீகரம் செய்யும் நிலையும் கோடம்பாகத்தில் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது.

ரஜினி, கமல் பொன்ற பணககர நடிகர்கள் கருணாநிதியின் பின்னால் அணி திரண்டிருக்கும் அதே வேளையில் இன்னமும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் சினிமாக் கனவுகளோடு வந்து அதில் வெற்றி பெற முடியாமல் ஏதோ ஒரு நடிகரின் கால்ஷீட்டிற்காக காலம் காலமாக தவம் கிடக்கும் அதே வேளையில் பிரபல நடிகர்கள் அனைவரையுமே வளைத்துப் போட்டு சினிமாவை தனது குடும்பக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருக்கிறார் கருணாநிதி.

http://inioru.com/?p=10353

சின்ன "ஆபாசவாணர்" விவேக் - Actor Vivek

சின்னக் கலைவாணர், ஜனங்களின் கலைஞன் என்று அழைக்கப்படும்! நடிகர் விவேக் அதற்கான தகுதியை எப்போதோ இழந்து விட்டார்...வடிவேலுவின் அசுர வளர்ச்சிக்குப் பின் என்ன செய்வது என்று தெரியாத நிலையில் தான் இத்தனை நாளாய் போட்டிருந்த சமூக சேவகன், கருத்து சொல்பவன், நல்லவன் போன்ற முகமூடிகளை சமீப கால படங்களில் கழட்டி வருகிறார்(விட்டார்)...




நடிகர் வடிவேலு ஒரு பேட்டியில் "MGR, சிவாஜி எல்லாம் சொல்லி கேக்காத பயபுள்ளைங்களா நாம சொல்லி கேக்க போகுதுங்க? அதனால தான் நான் இந்த கருத்து எல்லாம் சொல்றத விட்டுட்டு மக்களை சிரிக்க வெக்கறது மட்டுமே நம்ம வேலன்னு செய்றேன்"னு சொன்னார்...இதில் இருந்து மாறுபடுவதாய் காட்டிக்கொண்ட விவேக் தான் நடிக்கும் படங்களில் பல தத்துவங்களை அவிழ்த்து விட்டார்(பல விஷயங்கள் நல்லது தான் சொன்னார், என்ன ஒரு மதத்தை சார்ந்தவர்களுக்கு மட்டுமே அவர் அட்வைஸ் எல்லாம்)...சில காலம் அதை வைத்து கல்லாக் கட்ட முயன்ற அவரை உடனே கலைவாணர் ரேஞ்சுக்கு தூக்கி வைத்து சிலர் கொடுத்த பில்ட்அப் பலரையும் அவர் மிகவும் நல்லவர் தான் போல என்று நம்ப வைத்து விட்டது. இது பத்தாது என்று அப்துல் கலாம் வேறு மாட்டிக் கொண்டார். இவரின் புகழ்ச்சியை தாங்காமல் அவரும் இவரை பாராட்டி வைக்க இவர் தன் ரேஞ்சை இன்னும் மேலே ஏத்திக்கொண்டார். அதன் கொடுமையான வெளிப்பாடு இவர் கவிதைகள் எழுத ஆரம்பித்தது...இவரின் கவிதைகள் படிக்கும் போது என்னைப் போல் கிறுக்கல்கள் எழுதுபவர்களுக்கே வெறுப்பாகும் போது கவிதைகளே உயிரென வாழ்ந்துக்கொண்டு இருப்பவர்களுக்கு எப்படி இருக்கும்?


சமீப கால படங்களில் தன் கருத்து மூட்டைகளை கோடௌனில் போட்டு பூட்டி வைத்த விவேக் தன் ஆபாச முகத்தை காண்பிக்க ஆரம்பித்து விட்டார்...இவரின் இப்போதைய லேட்டஸ்ட் காமெடி என்னவென்றால் "தக்காளி பிதிங்கிடுச்சு, பல்பு உடைஞ்சிருச்சு" போன்ற மட்டகரமான செயல்கள் தான்...பல படங்களாய் இவர் செய்ய ஆரம்பித்த இந்த கலைச் சேவை சமீபத்திய சிங்கம் திரைப்படத்தில் உச்சக்கட்டத்தை எட்டி உள்ளது... இவர் அறிமுகம் ஆகும் முதல் காட்சியில் அடிப்பட்டு எழுந்திருக்கும் அவரிடம் அவர் சக காவலாளி "சார் முன்னால உங்க சூ(shoe) கிழிஞ்சிருக்கு பாக்கலையா? என்று கேக்க அதற்கு இவர் "பின்னால கூட "சூ" கிழிஞ்சிருக்கு பாக்கலையா" என்று கேட்கிறார்... இன்னொரு சீனில் படத்தில் புலி வேஷம் இட்டுச் செல்லும் அனுஷ்காவை பார்த்து இவர் சொல்லும் வசனம் மட்டும் போதும் நான் ஏன் இவரை பற்றி இப்படி சொல்லிக் கொண்டு இருக்கிறேன் என்று "புலியின் வாலே இவ்வளவு பெருசா இருக்குனா....புலியோட பு...பு....பு...பு...பல்லு எவ்வளவு பெருசா இருக்கும்?" இந்த டயலாக் கேட்ட போது குடும்பத்துடன் படம் பார்த்த யாரும் சிரிக்கவில்லை...




இவர் மட்டும் தான் இன்றைய திரைப்படங்களில் டபுள் மீனிங்(ஓபனாவே) பேசுகிறார் என்று சொல்லவில்லை இவருக்கு அடுத்து சந்தானம்(சிலம்பாட்டம் ஒன்றே போதும் இவர் புகழ் சொல்ல) மற்றும் சிலர் உள்ளனர்...ஆனால் அவர்கள் யாரும் இவரைப் போல பெரிய கலைஞர்களின் பெயரை பட்டமாக வைத்துக் கொண்டு இந்த மாதிரி கீழ்த்தரமான வேலையை செய்யவில்லை...நான் ஒன்றும் விவேக்கின் எதிரி அல்ல சொல்லப் போனால் பல விஷயங்களில் அவரை ரசித்திருக்கிறேன் ஆனால் அவரின் இந்த அருவருப்பான, ஆபாசமான வசனங்களையும் நடிப்பையும் எதிர்க்கிறேன் அதுவும் அவர் கலைவாணரின் பட்டத்தை வைத்து செய்வதால்...அன்புள்ள விவேக் அவர்களே பட்டத்திற்கு ஏற்றார் போல நடியுங்கள் இல்லையேல் தயவு செய்து உங்கள் பட்டங்களை எடுத்து விடுங்கள்...


எக்ஸ்ட்ரா இன்பர்மேஷன்: ஆபாச வசங்கள் பெரும்பாலும் காமெடி சீனிலேயும், பாடல்களிலேயுமே இடம்பெறுகின்றன...இவற்றை சென்சார் கண்டுகொள்வதில்லை...பாடல் வரிகளை எத்தனை பேர்கள் உன்னிப்பாக கவனிக்கிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை...பல பாடல் வரிகள் மிக ஆபாசமாக இருப்பதை நான் கேட்கிறேன்...சமீபத்தில் மாஞ்சா வேலு திரைப்படத்தில் இடம் பெற்ற "மாஞ்சா வேலு பலே ஆளு" என்ற பாடலை நீங்கள் எல்லோரும் கேட்டிருப்பீர்கள்...படத்தில் பாஸ்ட் பீட்டில் இடம் பெற்ற பாடலை மட்டுமே கேட்டவர்களுக்கு அதன் வரிகள் புரிந்திருக்காது ஆனால் ஸ்லொவர் வெர்ஷன் கேட்டவர்களுக்கு புரிந்த்திருக்கும் அதன் ஆபாச வரிகள்...எனக்கு அந்த பாடல் மிகவும் பிடிக்கும் இரு விஷயங்களுக்காக ஒன்று பழைய காலத்து இசையில் அமைந்திருப்பது இரண்டாவது முகேஷ் மற்றும் பிரியா சுப்ரமணியன் பாடும் அழகு...மற்ற படி பாடல் வரிகள் அனைத்தும் "A" கிளாஸ்...எழுதியவர் வாலிபக் கவிஞர் வாலி...

http://www.parthichezhian.com/2010/08/blog-post_21.html

Friday, February 18, 2011

ஸ்பெக்டரம் 2ஜி’ ஊழல் வழக்கில் கைதாவதை தடுக்கவே மீனவர் போராட்டத்தில் கனிமொழி எம்.பி கைது:ஜெயலலிதா



ஸ்பெக்டரம் 2ஜி’ ஊழல் வழக்கில் கைதாவதை தடுக்கவே மீனவர் போராட்டத்தில் கனிமொழி எம்.பி கைது:ஜெயலலிதா

ஸ்பெக்டரம் 2ஜி ஊழல் வழக்கில் கனிமொழி கைது செய்யப்படுவதைத் தடுப்பதற்கான ஜோதிட பரிகாரமே, மீனவர் போராட்டத்தில் கனிமொழி எம்.பி கைதானமைக்கான உண்மைக் காரணம் என, அதிமுக செயலர் ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டது தொடர்பில். நேற்றுக் காலை சென்னையில், திமுகவினர் நடத்திய இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டத்திற்குத் தலைமையேற்ற நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, ஆயிரக்கணக்கான திமுக உறுப்பினர்களுடன் காவல்துறையால் கைது செய்யப்பட்டார். இது தொடர்பில் பல்வேறு அரசியற் காரணங்களும், பலராலும் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தனக்கே உரிய பாணியில், இந்த அறிக்கையில் வித்தியாசமான காரணத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்;

கருணாநிதியின் மகள் கனிமொழி 16.2.2011 அன்று காலையில் ‘கைது’ செய்யப்பட்டார். ஸ்பெக்ட்ரம் ஊழல் பணம் பதுக்கப்பட்டதில் கனிமொழிக்கு பங்கு உள்ளதாக கூறப்படுவது குறித்து மத்திய புலனாய்வுத் துறையால் கனிமொழி கைது செய்யப்படவில்லை. தனது தந்தையான கருணாநிதியின் காவல் படையால் கைது செய்யப்பட்டார் கனிமொழி. இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் நிலையை வெளிப்படுத்தும் வகையில் சென்னையில் உள்ள இலங்கைத் தூதரகம் முன்பு ‘மறியல்’ செய்த காரணத்திற்காக கனிமொழி கைது செய்யப்பட்டார்.

இலங்கைக் கடற்படையினரால் மனிதாபிமானமற்ற முறையில் நடுக்கடலில் தாக்கப்பட்டதன் காரணமாக இது வரை கிட்டத்தட்ட 540 தமிழக மீனவர்கள் உயிரிழந்துள்ளனர். தமிழக மீனவர்களுக்காக ஒரு முறை கூட கனிமொழி தனது சுண்டு விரலை அசைக்கவில்லை. ஓராண்டிற்கு முன்பு இலங்கை அதிபர் மாளிகையில் நடைபெற்ற விருந்தில் இலங்கை அதிபர் மஹிந்தா ராஜபக்ஷேவை சந்தித்து, அவரிடமிருந்து பரிசுப் பொருட்களை பெற்ற போது கூட, இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் வசைபாடப்படுவது, துன்புறுத்தப்படுவது, கொலை செய்யப்படுவது குறித்த பிரச்சினைகளை கனிமொழி எழுப்பவில்லை.

15 நாட்களுக்கு முன்பு, மேலும் ஒரு விலையுயர்ந்த மீனவரின் உயிரை இலங்கைக் கடற்படை பலி வாங்கியது. அப்பொழுதும் கனிமொழி வாய்மூடி மவுனியாகத்தான் இருந்தார். மீனவர் பிரச்சினையில் கனிமொழியின் நிலைப்பாடு இவ்வாறு இருக்கையில், திடீரென்று உணர்ச்சி வசப்பட்டு, மீனவர்கள் பிரச்சினையில் இலங்கை அரசை குற்றம் சாட்டி, இலங்கைத் தூதரகம் முன்பு ‘மறியல்’ செய்யும் முடிவை ஏன் எடுத்தார்?

உண்மையிலேயே கனிமொழிக்கு மீனவர்களின் மீது அக்கறை இருக்கிறதா? அல்லது, ஏதோ கபட நாடகம் நடத்த வேண்டுமென்ற நோக்கத்தில், இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான போர் உச்சகட்டத்தில் இருக்கும் போது, போரை ஒரு முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதற்காக ‘மூன்று மணி நேர உண்ணாவிரதம் ’ நடத்திய பிரசித்தி பெற்ற தனது தந்தையின் அடிச்சுவடுகளை பின்பற்றுகிறாரா?

இதற்கான விடை கிடைக்க பெரிய ஆராய்ச்சி ஒன்றும் தேவையில்லை.

ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் 2ஜி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழல் தொடர்பாக கனிமொழி மத்திய புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்படுவார் என்று தொடர்ந்து குழப்பமான செய்திகள் யூகத்தின் அடிப்படையில் வந்து கொண்டிருப்பதையடுத்து ஆழ்ந்த வருத்தத்தில் இருந்தார் கனிமொழியின் “பகுத்தறிவு” தந்தை கருணாநிதி.

எனவே, இது குறித்து தனது குடும்ப ஜோதிடரின் ஆலோசனையை கேட்டுப் பெற்று இருக்கிறார். அதன்படி, கனிமொழியின் ஜாதகத்தில், கிரகங்களினால் வகுக்கப்பட்டுள்ள தலையெழுத்தை மாற்றி அமைப்பதற்காக, தனக்கே உரிய பாணியில் ஒரு சதித் திட்டத்தை தீட்டினார் கருணாநிதி. பொதுப் பிரச்சினைக்காக “ஒரு போராட்டத்திற்கு தலைமை தாங்கி” அதற்காக ‘கைது’ ஆவதன் மூலம், தனது கைது குறித்து தன்னுடைய ஜாதகத்தில் முன்கூட்டியே கூறியிருப்பதை கனிமொழி பூர்த்தி செய்துவிடுவார். இதன் மூலம் கிரிமினல் குற்றத்திற்காக மத்திய புலனாய்வுத் துறையால் கனிமொழி கைது செய்யப்படுவதை தடுத்து நிறுத்த முடியும் என்பது கருணாநிதியின் யுக்தி!

இரவோடு இரவாக, மீனவர் பிரச்சினைக்கான போராட்டம் நடத்துவது குறித்து திட்டம் தீட்டப்பட்டது. போராட்டம் துவங்க இருந்த இடத்திலிருந்து போராட்டக்காரர்கள் புறப்படுவதற்கு முன்பே போராட்டக்காரர்களும், போராட்டத்தின் “தலைவர்” கனிமொழியும், கனிமொழியின் தந்தை கருணாநிதி அனுப்பிய காவல் படையினரால் சம்பிரதாயத்திற்காக கைது செய்யப்பட்டனர். ‘ஒரே கல்லில் இரு மாங்காய் அடித்தது போல’, கனிமொழியின் ஜாதகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விதியை பூர்த்தி செய்ததோடு மட்டுமல்லாமல், கனிமொழிக்கும், தி.மு.க.விற்கும் தமிழக மீனவர்கள் மீது மிகுந்த அக்கறை உள்ளது என்பதை மீனவர்களுக்கு உணர்த்தும் வகையில் இரண்டு நோக்கங்கள் கருணாநிதியின் நாடகத்தின் மூலம் நிறைவேற்றப்பட்டு இருக்கின்றன!

என்ன நயவஞ்சகமானத் திட்டம்!

ஆனால், இது போன்ற கபட நாடகங்களை தமிழக மக்கள் புரிந்து கொள்ள ஆரம்பித்துவிட்டார்கள் என்பதை கனிமொழியும் அவரது தந்தை கருணாநிதியும் உணர வேண்டும். போலியான கைது உண்மையான கைதுக்கு ஈடாகாது. சட்டத்தின் நீளமான கைகள் நிச்சயமாக வீடு தேடி வரும். அப்பொழுது பெருமளவுக்கு சுருட்டப்பட்ட ஸ்பெக்ட்ரம் பணம் தாங்க முடியாத பாரமாக அமையும்.

கருணாநிதி குடும்பத்தினரின் இது போன்ற கபட நாடகங்களால் அன்றாடம் மீனவர்கள் சந்தித்து வரும் முக்கியத்துவமான பிரச்சினை கொச்சைப்படுத்தப்படுகிறது. தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவது குறித்து “கடுமையான எதிர்ப்புகள்” வெளியுறவுத் துறைச் செயலாளர் திருமதி நிரூபமா ராவ் மூலம் ராஜபக்ஷே அரசுக்கு இந்திய அரசு தெரிவித்து ஒரு வாரம் கூட முடிவடையாத சூழ்நிலையில், இலங்கை கடற்பகுதிக்குள் தமிழக மீனவர்கள் நுழைந்ததாக ஒரு குற்றச்சாட்டினை சுமத்தி, நூற்றுக்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்து கைது செய்துள்ளனர்.

16.2.2011 அன்று மீண்டும் இந்திய மீன்பிடி படகுகளை தாக்கி, அதன் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி 24 மீனவர்களை இலங்கை கடற்படை பிடித்து வைத்துள்ளது. வெறும் கடிதங்களை சென்னையிலிருந்து டெல்லிக்கு அனுப்புவதன் மூலமோ, அல்லது டெல்லியிலிருந்து கொலம்போவிற்கு தூதுவர்களை அனுப்புவதன் மூலமோ எந்தப் பயனும் ஏற்படாது. கருணாநிதியால் அனுப்பப்படும் கடிதங்களை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கண்டு கொள்வதில்லை என்பது வரிசையாக நடக்கும் நிகழ்வுகளைப் பார்க்கும் போது தெளிவாகிறது. இதே போன்று, இந்தியாவின் எச்சரிக்கையையும் இலங்கை அரசு அலட்சியம் செய்து வருகிறது.

கடுமையான நடவடிக்கைகள் தேவை. முதல் நடவடிக்கையாக, இலங்கை விமானப் படையின் பதினாறாவது ஆண்டு விழாவிற்கு இந்திய விமானப் படையின் சுகோய் விமானம் அனுப்பப்படுவது நிறுத்தப்பட வேண்டும். இந்தியாவின் கடல் எல்லையை தனது முந்தைய நிலைக்கு எடுத்துவரும் வகையில், இந்திய வரைபடத்தில் கச்சத்தீவினை மீண்டும் சேர்க்க, இலங்கை அரசுடனான கச்சத்தீவு உடன்படிக்கை ரத்து செய்யப்பட வேண்டும்.

தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் இந்தியாவின் கடற்படை கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட வேண்டும். இந்திய மீனவர்களுக்கு எதிரான தாக்குதல் உடனடியாக நிறுத்தப்படவில்லை என்றால், கடுமையான விளைவுகளை இலங்கை அரசு சந்திக்க நேரிடும் என்ற எச்சரிக்கையை பாரதப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களே தொலைபேசி மூலம் மஹிந்தா ராஜபக்ஷேவிடம் தெரிவிக்க வேண்டும் – எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.tamilnews.cc/news.php?id=7913


கோடீஸ்வர எம்.பி.க்கள் சாப்பிட மானியம். ஏழை மக்கள் சாப்பிட வரி. விலைவாசிகளின் முரண்பாடு


ஸ்பெக்ட்ரம் விவகாரத்தையும் தாண்டி, வரும் தேர்தலில் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பது விலைவாசி உயர்வாகத்தான் இருக்கும் என்கின்றனர், மக்கள்.

இம்மாத தொடக்கத்தில் பெட்ரோல் விலை ஏற்றத்தால் காய்கறிகளின் விலையும் கூடியது. வெங்காய விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து தாய்மார்களின் கண்களில் கண்ணீரை வரவழைத்து விட்டது. கோயம்பேடு மார்க்கெட் ஆலோசகர் சவுந்தர்ராஜன், “உரவிலை ஏற்றம், அரசின் நூறு நாள் வேலைத் திட்டம், மழை மற்றும் டீசல் விலையேற்றம் போன்றவையே விலையேற்றத்தின் காரணங்கள்’’ என்கிறார்.

பெட்ரோல் விலை ஏற்றப்படும்போது, நாடாளுமன்றத்தில் அதுகுறித்து விவாதிக்கப்படும். தற்போது பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் அதிகாரம் எ ண்ணெய் நிறுவனங்களுக்கு அநியாயமாக தாரை வார்க்கப்பட்டது. லாபம் மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்படும் எண்ணெய் நிறுவனங்கள் மக்களின் எதிர்ப்பை மீறி, பெட்ரோல், டீசல் விலையைத் தாறுமாறாக உயர்த்தி வருகிறது.

கடந்த வாரம்கூட முன்னறிவிப்பின்றி பெட்ரோல் விலை மூன்று ரூபாய் உயர்த்தப்பட்டது. இதுபோல், கடந்த ஒரு வருடத்தில் மட்டும் சுமார் 8 முறை பெ ட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு, லிட்டர் பெட்ரோல் 48 ரூபாயிலிருந்து 60 ரூபாய் ஆகிவிட்டது. 32 ரூபாய்க்கு விற்கப்பட்ட டீசல் விலையில் 10 ரூபாய் கூடிவிட்டது. இருசக்கர வாகனங்கள் இல்லாத வீடுகளே இல்லை என்ற நிலையில், நடுத்தர வர்க்கமும் பெட்ரோல் விலையேற்றத்தால் பெரிய அளவில் பாதிக்கப்படுகிறது. மென்பொருள் நிறுவன ஊழியர்களுக்குக்கூட கடந்த சில ஆண்டுகளாக சம்பள உயர்வில்லாத நிலையில் சாமானியர்களைப் பற்றிக் கேட்க வேண்டியதே இல்லை! இதனாலேயே நாட்டின் உணவுப் பாதுகாப்பு கேள்விக் குறியாகியிருக்கிறது.

தூத்துக்குடி மாவட்ட அண்ணா பொதுதொழிற்சங்க செயலாளரும், காமராஜர் காய்கறி மார்க்கெட்டின் மொத்த வாழைக்காய் வியாபாரியுமான சி.த.செல்லப்பாண் டியன், “தூத்துக்குடி மக்களைப் பொறுத்தவரை 50 சதவிகிதத்திற்கும் அதிகமானவர்கள் வாரத்தில் 5 நாட்கள் வரை மீன்களையே உணவாகப் பயன்படுத்து வார்கள். காய்கறிகள் விலை விண்ணை முட்டி நிற்கிறது என்றால் மீன் விலையோ அதையும் தாண்டி நிற்கிறது. கிலோ 400 ரூபாய்க்கு விற்கப்பட்ட சீலா மீன் 500 ரூபாய்க்கு விற்கிறது. 200 ரூபாய்க்கு விற்கும் ஊளி மீன் தற்போது 300 ரூபாய்’’ என்றார். ஆட்டிறைச்சி, கோழிக்கறி விலைகளும் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துவிட்டன. ஆட்டிறைச்சி கிலோ 320-க்கும், நாட்டுக்கோழி 200-க்கும், ப்ராய்லர் கோழி 140-க்கும் விற்கப்படுகின்றன. காய்கறி விலைகளை ஒப்பிடும்போது இறைச்சிகளின் விலை பரவாயில்லை என்றே நினைக்கத் தோன்றுகிறது.

பொருளாதார மந்த நிலையால் கட்டுமானப் பணிகள் பெரிய அளவில் இல்லாத நிலையில், கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தால் கட்டுமானப் பொருட்கள் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இத்திட்டம் அறிவிக்கப்பட்ட பின்பு, 160 ரூபாய்க்கு விற்கப்பட்ட சிமெண்ட் மூட்டை 290 ரூபாய் என்றானது. அரசு கேட்டுக் கொண்டதால், சிமெண்ட் உற்பத்தியாளர்கள் ‘பெரிய மனசு வைத்து’ அதை 260 ரூபாயாகக் குறைத்திருக்கிறார்கள். அது போல், செங்கல் ஒரு லோடு (3000 செல்கல்கள்) 24 ஆயிரம் ஆகிவிட்டது. மணல் ஒரு லோடு (4 யூனிட்) 24 ஆயிரம் ரூபாய்!

வரலாறு காணாத காய்கறிப் பொருட்களின் விலையேற்றத்திற்கு கமிஷன் ஏஜெண்டுகள்தான் முக்கியக் காரணம் என்கின்றனர் விஷயமறிந்தவர்கள். காய்கறி லோடுகளை வெளிமாநிலங்களுக்குத் திருப்பி விட்டு செயற்கையாக தட்டுப்பாட்டை உருவாக்கி விலையே உயர்த்துகிறார்களாம்.

சென்னையில் சில்லறைக் கடைகளில் விற்கப்படும் விலையையொட்டியே, தமிழகம் முழுக்க விற்பனையாகிறது. தக்காளி கிலோ அறுபது ரூபாய், கோஸ் 30 ரூபாய், உருளைக் கிழங்கு 25 ரூபாய், கேரட் அறுபது ரூபாய், பீட்ரூட் 35 ரூபாய், முள்ளங்கி முப்பது ரூபாய், நூல்கோல் 28 ரூபாய், பீன்ஸ் 60 ரூபாய், அவரைக் காய் 60 ரூபாய், பச்சை பட்டாணி 30 ரூபாய், சேனைக் கிழங்கு 25 ரூபாய், சேப்பங்கிழங்கு 25 ரூபாய், வெண்டைக்காய் 52 ரூபாய், முருங்கை 90 ரூபாய் இவையெல்லாம் இந்த வார நிலவரம். பொங்கல் பண்டிகையையொட்டி காய்கறிகளின் விலை இன்னமும் எகிறும் என அச்சம் தெரிவிக்கின்றனர் விவசாயிகள்.

சாதாரணமாக சென்னையில் 15 ரூபாய்க்கு விற்ற வெங்காயம், கடந்த வாரம் கிலோ 100 ரூபாயைத் தொட்டது. மலிவாகக் கிடைக்கும் சத்து உணவான கீரை கூட ஒரு கட்டு 15 ரூபாயைத் தொட்டு விட்டது. மல்லி ஒரு கட்டு 7 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. பூண்டு ரூ. 300க்கும் புளி ரூ.100க்கும் விற்கப்படுகிறது. சாதாரணமாக காய்கறிகளை கிலோ கணக்கில் வாங்கிக் கொண்டிருந்த குடும்பஸ்தர்கள் தற்போது ஒவ்வொன்றிலும் கால்கிலோ மட்டுமே வாங்கிச் செல்கின்றனர்.

உயர்ரக அரிசியின் விலை ரூ.60 ஆகவும் சாதாரண ரக அரிசியின் விலை ரூ. 30 வரையும் விற்கப்படுகிறது. அனைத்து வகையான பருப்புகளின் விலையும் விண்ணைத் தொட்டு வருகிறது.


சில மாதங்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் விலைவாசி உயர்வு குறித்து பதிலளித்த நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, ‘‘நுகர்வோரின் சந்தை வருகை கூடியதால், பணவீக்கம் ஏற்பட்டு விலைவாசி அதிகரித்துள்ளது’’ என்றார்.


நாடாளுமன்ற வளாகத்திலுள்ள கேண்டீனில் ஒரு டீ விலை ஒரு ரூபாய். தமிழ்நாட்டில் பேருந்துகள் போகாத ஊர்களில் கூட இன்றைக்கு இந்த விலைக்கு டீ கிடைக்குமா? நாடாளுமன்றத்தில் மதியச் சாப்பாடு (4 சப்பாத்தி, சோறு, காய்கறி, தயிர்) ரூ. 12.50. அங்கே மீன் கறியோடு சோறு ரூ.14.


இது எப்படி சாத்தியம் என்கிறீர்களா? நாடாளுமன்ற கேண்டீனுக்கு அரசின் மானியம் ஆண்டுக்கு ஐந்தரைக் கோடி. எம்.பி.க்கள் ஒரு ரூபாய்க்கு டீ சாப்பிட அரசு இந்த மானியத்தை வழங்குகிறது.


சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் என்ற பெயரில் விளை நிலங்கள் கார் கம்பெனிகளுக்கும், டயர் கம்பெனிகளுக்கும் தாரை வார்க்கப்படுகின்றன. விமான நிலைய விரிவாக்கத்துக்காக விளைநிலங்கள் அபகரிக்கப்படுகின்றன. விவசாயத்துக்கு எதிரான இந்த போக்கால் விளைநிலங்கள் விலை நிலங்களாகிவிட்டன. இதனால் விவசாயம் பாதிக்கப்பட்டு, உற்பத்தி குறைந்துவிட்டது. இதனாலேயே விலையேற்றம் கூடிவிட்டது. வெங்காய உற்பத்தி நிலப்பரப்பு குறைந்ததால் கடந்த வாரம் ஒரு கிலோ வெங்காயம் 100 ரூபாய்க்குப் போனதைப் பார்த்தோமே!


கார் உற்பத்தியில் கவனம் செலுத்திய அரசு விவசாயத்தை மறந்துவிட்டது. மக்கள் அனுபவிக்கிறார்கள். தேர்தல் வந்தால் இந்த அரசும் அனுபவிக்கும்!!

நன்றி குமுதம்.காம் மற்றும்

அறியா ஜனமும், அரியாசனமும்!

மா. ஆறுமுககண்ணன்

டாஸ்மாக் நிறுவனம் மூலம் மதுபானங்களை விற்ற வகையில் தமிழக அரசுக்கு இவ்வாண்டு ரூ. 14,152 கோடி கிடைக்கும் என்றும், இது கடந்த ஆண்டைவிட ரூ. 3 ஆயிரம் கோடி அதிகம் என்றும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இத் தொகை மாநில மக்களுக்கான நலத்திட்டங்களைச் செயல்படுத்தவே செலவழிக்கப்படுகிறது என அரசு தொடர்ந்து தெளிவாகக் கூறிவருகிறது. மது குறித்துப் பேசினால் மெüனத்தையே பதிலாக்குகிறது. எது நல்லது என மக்களுக்குக் காட்ட வேண்டிய அரசு, மது நல்லது எனக் கூறுவதைப்போல இருக்கிறது. இத்தகைய செயலுக்கும், மானத்தை விற்று உடலில் பட்டாடைகளும், பகட்டான நகைகளும் அணிந்துகொள்ளும் செயலுக்கும் அதிக வேறுபாடில்லை என்பதே உண்மை.

தெருவெங்கும் தமிழ் முழக்கம் வேண்டும் என்றார் பாரதி. தமிழ் மீது தீராத பற்று எனக் கூறிக் கொள்வோர் ஆட்சியிலோ தெருவெங்கும் மது முழக்கமே கேட்கிறது!

அரசின் இலவசத் திட்டங்களால் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் ஏதேனும் ஒரு விதத்தில் பயனடைகிறது என ஆட்சியாளர்கள் அறிக்கை வெளியிட்டு அகமகிழ்ந்து கொள்கிறார்கள். அதை முழுக்க முழுக்க உண்மை எனக் கொண்டால், டாஸ்மாக் மதுக்கடைகளால் எத்தனை குடும்பங்கள் தள்ளாடிக் கொண்டிருக்கின்றன என அறிவிக்க அவர்கள் முன்வருவார்களா?

குடும்பத்தில் உள்ளோர் அனைவரும் உழைப்பதால் கிடைக்கும் பொருளைச் சேர்த்து வைத்தால்தான் அக் குடும்பம் பொருளாதாரரீதியாக முன்னேற்றம் அடைந்ததாகக் கூற முடியும். மாறாக கிடைக்கும் ஊதியத்தைச் செலவழித்து ஆண் உறுப்பினர்களைக் குடிக்கவைத்து அழிவை நோக்கி அழைத்துச் செல்வதும், பெண்களை பொருளாதாரத்தில் முன்னேற்றிவிட்டோம் என பெருமைப்பட்டுக் கொள்வதும் முறைதானா என்பதை ஆட்சியாளர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.

குடும்பத்தின் ஆண் உறுப்பினரிடமிருந்து நிரந்தரமாகப் பறிக்கப்படும் பெரும் தொகையில் ஒரு சிறு பகுதியை அக் குடும்பத்தின் பெண் உறுப்பினர்களுக்குக் கடன் என்ற பெயரிலோ, நலத்திட்ட உதவி என்ற பெயரிலோ, இலவசம் என்ற பெயரிலோ வழங்குவதில் என்ன சிறப்பு? வைரங்களை வலுக்கட்டாயமாகப் பறித்துக் கொண்டு கூழாங்கற்களைக் கொடுத்து குஷிப்படுத்துவதுபோலத்தானே!

ஆண்கள் மது குடித்துவிட்டுத் தன்னினைவு இழந்து விழுந்துகிடக்க, அவர்களின் மனைவிகளை பொருளாதாரத்தில் தன்னிறைவு அடையச் செய்துவிட்டோம் என வீதிக்கு வீதி முழங்கிக் கொள்வதில் என்ன நன்மை கண்டது அரசு? ஒரு கண்ணைக் குருடாக்கி மறுகண்ணுக்கு மை அலங்காரமா?

தன் தந்தையோ, சகோதரனோ, கணவரோ இந்த ஆண்டாவது குடிப்பழக்கத்தை நிறுத்துவாரா என குடும்ப உறுப்பினர்கள் கவலையும் கண்ணீருமாய் இருக்க, மது விற்பனை தங்குதடையின்றி நடைபெற்று இலவசத் திட்டங்களைச் செயல்படுத்த இந்த ஆண்டும் கஜானா வழக்கத்தைவிட கூடுதலாய் நிரம்பி வழிய வேண்டும் என நினைத்து அதற்கான அத்தனை கதவுகளையும் திறந்துவைப்பதா பொறுப்பான அரசின் பணி?

அமோகமான மது விற்பனையும் உண்டு. மது குடித்துவிட்டு வாகனங்களில் செல்வோர் விபத்தில் சிக்கி குற்றுயிரும் குலையுயிருமாய் வீதிகளில் கிடந்தால் அவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு ஏற்றிச் செல்ல 108 ஆம்புலன்ஸ் சேவையும் உண்டு.

தன் குடும்பத் தலைவனின் நிலைமையையும், குடும்பத்தின் நிலையையும் நினைத்துப் பார்த்து ரத்தம் கொதித்து பல்வேறு நோய்களுக்கு குடும்ப உறுப்பினர்கள் உள்ளானால் வீட்டுக்கே வந்து அவர்களைப் பரிசோதனை செய்ய நலமான தமிழகம் திட்டமும் உண்டு. இது, பிள்ளையைக் கிள்ளிவிட்டுத் தொட்டிலை ஆட்டும் முயற்சியா, பிரச்னைகளை ஏற்படுத்திவிட்டு தீர்வு சொல்லும் முயற்சியா?

மது விற்ற தொகையில் அரசு ஊழியர்களுக்கு ஊதியம், போனஸ், பலவித படிகள் என ஆயிரக்கணக்கில் அள்ளிக் கொடுக்கும் அரசு, மது குடித்துச் சீரழியும் ஏழைகளின் குடும்பங்களுக்கு ஒரு ரூபாய் அரிசி போதும் என நினைத்திருப்பதுபோலத் தோன்றுகிறது.

தேர்தலில் தோற்றுவிட்டால் தமிழக மக்களை "சோற்றால் அடித்த பிண்டங்கள்' என வர்ணித்து வயிற்றெரிச்சலைத் தணிப்பது சிலரது குணம். இப்போது அவர்கள் ஏழைகளை "அரிசியால் அடித்த பிண்டங்கள்' என நினைத்துக் கொண்டார்கள்போலும்!

பொன்னை வைக்கும் இடத்தில் பூவை வைக்க வேண்டும் என்பார்கள். ஆட்சியாளர்களோ, கள் இருந்த இடத்தில் டாஸ்மாக் மதுவை வைத்துவிட்டு, பொதுமக்களின் காதுகளில் பலவித இலவசங்கள் என்னும் பூவை வைக்க முயல்கிறார்கள்.

ஆட்சியாளர்களைப் பொறுத்தவரை மது மட்டுமல்ல, இலவசங்களும் ஒருவித போதைதான். அதனால்தான் இரண்டையும் நிறுத்தாமல் இன்னும் வாரி வழங்குவேன் என்கிறார்கள்.

எதையாவது பெற்று, வாக்குகளை விற்று இன்றைய பொழுதைக் கழித்தால் போதும் என்ற மன நிலைதான் இன்றைக்கு மக்களிடமும் நிலவுவதாகத் தெரிகிறது.

எது சொன்னாலும் நம்பிக்கொண்டு, மதுவுக்கு அடிமைப்பட்ட ஆண்களும், எலும்புத்துண்டு இலவசங்களுக்கு அடிமைப்பட்ட பெண்களும் எனப் பெரும்பான்மையான அறியா ஜனங்கள் இருக்கும் வரைதான், அரியாசனங்கள் தங்கள் குடும்பச் சொத்தாகவும், ஏகபோக உரிமையாகவும் இருக்கும் என்பது ஆட்சியாளர்களின் கணக்கு. அறியா ஜனங்கள் உண்மைகளை அறிந்து, சரியான ஜனங்களாக மாறினால்தான் அரியாசனங்கள் நாட்டு மக்களுக்கு நன்மைகளை மட்டுமே செய்யும் சரியாசனங்களாகும்!

Courtesy: www.dinamani.com

பிரதமருக்குத் தெரிந்துதான் எல்லாமே நடந்தது

ஒன்றும் தெரியாத பாப்பா! உள்ளே போனதும் போடுவாள் ......
ஊமைக்கோட்டான் போலிருந்து கொண்டு.....

இந்தப் பழமொழிகளுக்கெல்லாம் ஏதேனும் உதாரணம் தேவையா?

சுதந்திர இந்திய அரசியல் சரித்திரத்தில், எதிர்க்கட்சிகளால் பிரதமர்கள் விமர்சிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால், இதுவரை மன்மோகன் சிங்கைப்போல எந்தப் பிரதமரும் உச்ச நீதிமன்றத்தால் செயல்திறன் கேள்வி கேட்கப்பட்டு அவமானப்பட்டதாகத் தெரியவில்லை. கறைபடியாத கரங்களுக்குச் சொந்தக்காரர் என்று கருதப்பட்டவர் கறுப்பு ஆடுகளின் காவல்காரர் என்று அடையாளம் காணப்பட்டிருக்கும் கபட நாடகம் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

"ஸ்பெக்ட்ரம்' ஊழல் ஒருபுறம் இருக்கட்டும். காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் நடந்தேறியிருக்கும் முறைகேடுகளும், ஊழல்களும் ஒன்றன்பின் ஒன்றாக வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. இந்த ஊழல்களிலும், முறைகேடுகளிலும் தொடர்புடையவர்கள் பலரும் பிரதமர் மன்மோகன் சிங்கின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்களாகவும், அவரால் தேர்ந்து எடுத்து நியமிக்கப் பட்டவர்களுமாக இருக்கிறார்களே, அதுதான் நம்மை எல்லாம் வியப்படையச் செய்கிறது. இந்திய அரசுப் பணி அதிகாரியாகவும் தலைமைத் தேர்தல் ஆணையராகவும் இருந்த எம்.எஸ். கில், உணவு மற்றும் விவசாயப் பிரச்னைகளில் தேர்ந்தவர் என்று கருதப்படுபவர். காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்கான ஒப்பந்தப்புள்ளிகள் வெளியிடும் நேரத்தில், அப்போதைய விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்த மணிசங்கர் அய்யர் மாற்றப்பட்டு, அந்தத் துறைக்குச் சம்பந்தமே இல்லாத எம்.எஸ்.கில் விளையாட்டுத் துறை அமைச்சராக்கப்பட்டது ஏன் என்கிற சந்தேகம் அப்போது ஏற்படவில்லை. இப்போது ஏற்படுகிறது.

எம்மார் எம்.ஜி.எஃப் என்றொரு நிறுவனம். இந்த நிறுவனத்திற்குத்தான் தில்லி வளர்ச்சிக் குழுமம் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்காகக் கட்டப்பட்ட சர்வதேச அடுக்குமாடிக் குடியிருப்புகளைக் கட்டுவதற்கான ஒப்பந்தத்தை அளித்தது. இந்த நிறுவனம் முன்னாள் ராஜஸ்தான் ஆளுநர் எஸ்.கே. சிங்கின் மகனும், ராகுல் காந்தியின் நெருங்கிய ஆலோசகருமான கனிஷ்க் சிங்கின் குடும்பத்துடன் சம்பந்தப்பட்டிருக்கிறது. கடைசி நேரத்தில், உடனடியாகக் கட்டி முடிப்பதற்காக, இந்த நிறுவனத்துககு முறையே ரூ 750 கோடியும், ரூ 827 கோடியும் முன்பணமாக, ஏற்றுக்கொண்ட ஒப்பந்தத் தொகைக்கும் அதிகமாக அளிக்கப்பட்டிருக்கிறதே, அது ஏன்? எதற்காக? யாருடைய பரிந்துரையில் அல்லது நிர்பந்தத்தின் பேரில்?

பல்ஜித்சிங் லல்லி என்பவர், எம்.எஸ். கில்லைப் போலவே பஞ்சாபியரான இன்னொரு இந்திய அரசுப்பணி அதிகாரி. மத்திய உள்துறையின் செயலர்களில் ஒருவராக இருந்த பல்ஜித்சிங் லல்லி, பிரதமர் மன்மோகன் சிங்கின் குடும்ப நண்பர். பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியும் பிரதமருக்கு நெருக்கமானவர் என்பதால் எதிலும் சிக்கிக் கொள்ளாதவர். இவர் பிரசார் பாரதி குழுமத்தின் செயல் தலைவராக நியமிக்கப்படுகிறார். இவரது நேரடிப் பார்வையில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் பெயரில் பிரசார் பாரதி சார்பில் நடந்தேறியிருக்கும் ஊழல், தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையத்தால் வெளிக்கொணரப்பட்டிருக்கிறது.

பிரசார் பாரதி குழுமம், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை ஒலிபரப்பவும், ஒளிபரப்பவுமான உரிமையை லண்டனைச் சேர்ந்த எஸ்.ஐ.எஸ். லைவ் என்கிற நிறுவனத்துக்கு 246 கோடிக்கு வழங்கியது. இந்த ஒப்பந்தப்படி உரிமையை இன்னொருவருக்கு மாற்றிக் கொடுப்பதற்கோ அல்லது துணை ஒப்பந்தம் மூலம் வேறு நிறுவனத்தைப் பயன்படுத்தவோ எஸ்.ஐ.எஸ். லைவ் நிறுவனத்துக்கு அனுமதி கிடையாது. ஆனால் நடந்தேறியிருப்பது என்ன தெரியுமா? எஸ்.ஐ.எஸ். லைவ் நிறுவனம் மார்ச் 5, 2010 அன்று பிரசார் பாரதியால் ரூ 246 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட அதே நாளில், "ஜும்' என்கிற நிறுவனத்தை ரூ 177.30 கோடிக்கு காமன்வெல்த் போட்டிகளை ஒலிபரப்பவும், ஒளிபரப்பவும் ஒப்பந்தம் செய்திருக்கிறது. இடைத்தரகராகச் செயல்பட்டு ரூ 68.70 கோடி லாபம் சம்பாதித்துவிட்டது எஸ்.ஐ.எஸ். லைவ். பிரசார் பாரதிக்கு மட்டுமல்ல, இந்திய அரசுக்கும் சேர்த்து "ஜும்' காட்டிவிட்டனர். இதன் பின்னணியில் செயல்பட்டவர் வேறு யாருமல்ல, பிரசார் பாரதியின் செயல் தலைவர் பல்ஜித்சிங் லல்லிதான்.

மத்திய நிதியமைச்சகம், எஸ்.ஐ.எஸ். லைவ் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் அளிப்பதை ஆரம்பத்திலேயே எதிர்த்திருக்கிறது. அந்த நிறுவனத்துக்கு முறையான பின்னணியோ, சேவை வரி செலுத்திய பதிவு எண்ணோ, முன் அனுபவமோ இல்லை என்று சுட்டிக்காட்டி இருக்கிறது. ஒப்பந்தங்கள் பெறப்பட்டு நான்கு மாதங்கள் கழிந்த பிறகுதான், 2010 ஜனவரி மாதத்தில் எஸ்.ஐ.எஸ். லைவ் என்கிற நிறுவனமே தொடங்கப்பட்டிருக்கிறது என்று கூறி நிதியமைச்சகம் பிரசார் பாரதியை எச்சரித்திருக்கிறது. இதையெல்லாம் மீறி, அந்த நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது மட்டுமல்லாமல், அவசர அவசரமாக ஒப்பந்தத் தொகையான ரூ 246 கோடியில் 80% உடனடியாக அந்த நிறுவனத்துக்கு முன்பணமாக வழங்கவும் செய்திருக்கிறார் பிரதமர் மன்மோகன் சிங்கின் நம்பிக்கைக்குப் பாத்திரமான பல்ஜித்சிங் லல்லி!

ஒன்றன்பின் ஒன்றாகப் பார்த்தால், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஊழலிலும், முறைகேடுகளிலும் சம்பந்தப்பட்டவர்கள் அனைவருமே ஏதாவது ஒருவகையில் பிரதமர் மன்மோகன் சிங்குடனோ அல்லது காங்கிரஸ் கட்சித் தலைமையுடனோ நெருக்கமாக இருப்பவர்களாக இருக்கிறார்கள். பிரதமர் மன்மோகன் சிங், விளையாட்டுத்துறை அமைச்சர் எம்.எஸ். கில், நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டி, தில்லி முதலமைச்சர் ஷீலா தீட்சித் என்று எல்லோருமே இந்த "மெகா' கொள்ளையில் தொடர்புடையவர்களாக இருப்பதால், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக் கமிட்டித் தலைவர் சுரேஷ் கல்மாடி பலிகடா ஆக்கப்பட்டு, பிரச்னையை மூடி மறைக்கும் முயற்சி நடக்கிறதோ என்று தோன்றுகிறது. பிரதமர் ஏன் இத்தனை நாளாக மௌனம் சாதித்தார் என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருக்கிறது. அவரால் பதில் சொல்ல முடியாததுதான் காரணம் என்று நம்ப வழியில்லை. மௌனம் சம்மதத்துக்கு அறிகுறி என்று சொல்வார்கள். அவருக்குத் தெரியாமல் இதெல்லாம் நடந்திருக்கக் கூடுமா என்ன? சமீபத்தில் பதவி விலகி இருக்கும் முன்னாள் மத்திய தகவல் தொலைத்தொடர்பு அமைச்சர் ஆ. ராசாவின் கூற்றுப்படி

"பிரதமருக்குத் தெரிந்துதான் எல்லாமே நடந்தது"

தினமணி - தலையங்கம்: தெரியாமலா நடந்தது? 20 Nov 2010

ஆன்மிகம் என்னும் பெயரில் ......

நித்யானந்தா ஆபாச சிடி வெளியானது எப்படி ? அதிர்ச்சியூட்டும் தகவல்கள்.


பொதுவாக, தமிழ்நாட்டுக்கென ஒரு ‘ட்ரென்ட்’ உண்டு. அது பத்திரிக்கையாளர்கள் மீதான புகார்களைப் பற்றி மூச்சு விடாதது. பத்திரிக்கையாளர்களைப் பற்றி வண்டி வண்டியாக புகார்கள் இருந்தாலும், அதைப் பற்றி எந்த பத்திரிக்கையும் எழுதாதாம். அதுதான் பத்திரிக்கை தர்மமாம். இந்த தர்மத்தை மூத்த பத்திரிக்கையாளர்களும் கடை பிடிப்பது, தமிழகத்தின் சாபக்கேடு.

ஊரில் உள்ள ஊழல்களையெல்லாம் எழுதுவார்களாம். ஆனால், அதை விட முடை நாற்றமெடுக்கும் இவர்களின் ஊழலைப் பற்றி யாரும் எழுதக் கூடாதாம். ஆனால், இது சவுக்கு அய்யா. சவுக்கு. சவுக்குக்கு இந்த பத்திரிக்கை தர்மமெல்லாம் பொருந்தாது. ஊழல் செய்தவர்கள் யாராயிருந்தாலும், அவர்களின் முகத்திரையை கிழிப்பதே சவுக்கின் வேலை.

சுவாமி நித்யானந்தா… …. தமிழகத்தின் பட்டி தொட்டியெங்கும், அனைவராலும் உச்சரிக்கப் பட்ட ஒரு பெயர். தமிழ்நாட்டில் அனைத்துப் பிரச்சினைகளையும் பின்னுக்குத் தள்ளி ஏறக்குறைய ஒரு மாத காலத்துக்கும் மேலாக தலைப்புச் செய்திகளை ஆக்கிரமித்துக் கொண்டிருந்த பெயர். இந்த பிரச்சினையில் நுழையும் முன், இந்தியாவின் ஆன்மீக வியாபாரத்தை புரிந்து கொள்வது அவசியம்.

இந்தியாவில் எப்போதுமே, ஆன்மீக வியாபாரத்துக்கு நல்ல மதிப்பு இருந்தே வந்திருக்கிறது. 99 ரோல்ஸ் ராய்ஸ் கார்களை வைத்திருந்ததன் மூலம், ஓஷோ, இந்தியாவின் ஆன்மீக வியாபாரத்துக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தார்.


ஓஷோவின் கணக்கிலடங்காத சொத்துக்கள், இது எவ்வளவு பணம் புழங்கும் வியாபாரம் என்பதை உலகுக்கு உணர்த்தியது.

இவர் அளவுக்கு சம்பாதிக்க வில்லை என்றாலும், ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியின் “கிருஷ்ணமூர்த்தி பவுன்டேஷனும்“ பணம் புரளும் ஒரு ட்ரஸ்ட்தான்.

இவர்கள் இருவரின் மறைவுக்குப் பின் ஏற்பட்ட காலியிடத்தை நிரப்ப வந்தவர்கள் மூவர்.

ஒருவர் ஜக்கி வாசுதேவ். அடுத்தவர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்.



அடுத்தவர், இன்று கழன்ற டவுசரோடு (Caught with pants down) மாட்டிக் கொண்ட நித்யானந்தா.

இந்தியாவின் ஆன்மீக வியாபாரத்தை பங்கு போட்டுக் கொள்வதில் இந்த மூவருக்கும் தான் கடும் போட்டி. இவர்கள் மூவரைத் தவிர, மேல்மருவத்தூர் சாமியார் போன்றவர்கள் அல்லு சில்லுகள். இந்த மூவரைப் போல, வெளிநாட்டு பணத்தை வாங்கி பெரும் பணக்காரனாகும் வியாபார நுணுக்கம் தெரியாதவர்கள்.

இந்த மூவரும், தங்கள் வியாபாரத்தை மேம்படுத்திக் கொள்ள பகீரதப் பிரயத்தனங்களை செய்ய ஆரம்பித்தார்கள். ஒருவர் ஆனந்த விகடனில் தொடர் எழுதுவார். இன்னொருவர் குமுதத்தில் தொடர் எழுதுவார். ரவிசங்கர், இந்தியா டுடேவின் அட்டைப் படத்தில் வருவார்.

இது போக மின்னணு ஊடகங்களிலும் இடம் பிடிப்பதில் இவர்கள் மூவருக்கும் இடையே கடும போட்டி.

இந்த நிலையில் தான், நக்கீரன் பத்திரிக்கையில் 1993 94 ஆண்டுகளில் ஜக்கி வாசுதேவின் மனைவி தற்கொலை செய்து கொண்டதாக செய்தி வெளியிடுகிறது. இந்த செய்தியை எழுதியவர் மகரன் என்ற நிருபர்.

இதற்கு அடுத்து அதே ஆண்டுகளில் நக்கீரன் ஜக்கி வாசுதேவின் ஆசிரமத்தில் கஞ்சா சரளமாக புழங்குகிறது என்று ஒரு செய்தி வருகிறது. இதையும் மகரன் என்ற நிருபரே எழுதுகிறார்.

1994-95ம் ஆண்டுகளில் ஜக்கி வாசுதேவின், மாஹே மற்றும் ஏணம் பகுதிகளில் உள்ள ஆசிரமங்களில் பெண் விவகாரங்களில் கலாச்சார சீரழிவு என்று மீண்டும் செய்தி வருகிறது.
இந்நிலையில், ஜக்கி வாசுதேவ், 1996-97ம் ஆண்டுகளில் நக்கீரன் காமராஜை அழைக்கிறார்.

அப்போது கோவை சென்று ஜக்கியை சந்திக்கும் காமராஜ், அந்த ஆசிரமத்திலேயே ஒரு மாதம் தங்குகிறார். இந்த கால கட்டத்தில், ஜக்கியின் தேனொழுகும் பேச்சில் மயங்கிய காமராஜ், ஜக்கியின் பரம சீடனாக உருவெடுக்கிறார். ஜக்கிக்காக தமிழ்நாட்டில் பல காரியங்களை செய்து கொடுக்கும் பரம பக்தனாக காமராஜ் மாறுகிறார்.

இதையடுத்து, ஜக்கியின் ஆசிரமத்துக்காக சொத்தக்களை வாங்கிக் குவிப்பதிலும், இது தொடர்பாக அரசு அலுவலகங்களில் வேலைகளை சுலபமாக்குவதிலும், காமராஜ் பெரும் பங்கு வகிக்கிறார்.

ஜக்கியை அழைத்து வந்து, சென்னை அண்ணா பல்கலைகழகத்தின் உள்ளே கருணாநிதி தலைமையில் மரம் நடும் விழா நடத்தப் பட்டது அல்லவா. அந்த விழாவுக்கு ஏற்பாடு செய்ததே காமராஜ் தான்.

தன்னுடைய குருவான ஜக்கி வாசுதேவை கருணாநிதிக்கு அறிமுகம் செய்து வைக்க வேண்டும் என்ற முயற்சியை நிறைவேற்ற கருணாநிதியிடம் தனக்கு உள்ள செல்வாக்கை பயன்படுத்தியே இந்த ஏற்பாடுகளை செய்தார்.

காமராஜின் மகன், கோவையில் உள்ள ஜக்கி வாசுதேவின் உறைவிடப் பள்ளியில் படித்து வருகிறான் என்பதும் குறிப்பிடத் தகுந்த தகவல்.

இந்த மூன்று சாமியார்களுக்குள் ஏற்கனவே இருந்த தொழில் போட்டியை தன்னுடைய போட்டியாக காமராஜ் கருதத் தொடங்கினார். இதையொட்டியே, காமராஜுக்கு, நித்யானந்தாவின் சீடர், லெனின் என்கிற தர்மானந்தாவின் பழக்கம் ஏற்படுகிறது. இந்த தர்மானந்தா, நித்யானந்தாவின் பெண் தொடர்புகள் பற்றி காமராஜிடம் கூறுகிறார். இருவரும் சேர்ந்து ஒரு பெரிய சதித் திட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

நித்யானந்தாவை சிக்கலில் மாட்டுவது போன்ற ஒரு வீடியோ படத்தை தயாரிக்கத் திட்டமிடுகின்றனர். லெனினுக்கு தொழில்நுட்பம் பற்றிய விபரங்கள் ஏதும் தெரியாது என்பதால், இதற்கான வீடியோ கேமரா மற்றும் இதர உபகரணங்களையும் காமராஜே வாங்கிக் கொடுக்கிறார். திட்டமிட்டபடி வீடியோ உபகரணம் உரிய இடத்தில் பொருத்தப் படுகிறது என்று ஆசிரம வட்டாரங்கள் கூறுகின்றன.

பழம் நழுவிப் பாலில் விழுந்தது போல, நித்யானந்தாவோடு, நடிகை நெருக்கமாக இருக்கும் காட்சி பதிவாகிறது. இதைப் பார்த்த, காமராஜுக்கும், லெனினுக்கும் சாமியாரை மிரட்டி பணம் பறிக்கலாம் என்ற எண்ணம் வருகிறது.

இதையடுத்து, லெனினையே, நித்யானந்தாவோடு பேரம் பேச அனுப்புகிறார் காமராஜ். இவர்களின் பேரம் மூன்று கோடி ரூபாய். காமராஜுக்கு இரண்டு கோடியும், லெனினுக்கு ஒரு கோடியும் என்று முடிவாகிறது.

நித்யானந்தாவோடு பேரம் தொடங்கியதும், நித்யானந்தா இந்த விவகாரத்தைப் பற்றி, சேலத்தில் உள்ள ஒரு ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியிடம் ஆலோசனை கேட்கிறார். அந்த அதிகாரி, இது போல பணம் கொடுத்தால், இந்த ப்ளாக் மெயில் தொடரும் என்பதால், பணம் கொடுக்க மாட்டேன் என்று மறுக்க சொல்கிறார். அதன் படியே நித்யானந்தா பணம் கொடுக்க மறுக்க, இந்த வீடியோவை வெளியிடுவது என்று லெனினும் காமராஜும் முடிவெடுக்கின்றனர்.

அச்சு ஊடகங்களில் வந்தால் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த முடியாது என்று காட்சி ஊடகங்களிலும் வர வேண்டும் என்று முடிவெடுக்கப் பட, காமராஜ் சன் டிவியுடன் பேரம் பேசி, இந்த வீடியோவுக்கான பிரத்யேக ஒளிபரப்பு உரிமைகளைத் தர, ஒரு தொகையை பெற்றுக் கொள்கிறார்.

இது போல வீடியோ ஒளிபரப்பப் படுகிறது என்ற தகவல் அறிந்த ஒரு மூத்த பத்திரிக்கையாளர் சன் டிவியின் செய்தி ஆசிரியரை தொடர்பு கொண்டு வீடியோ நகல் ஒன்று வேண்டும் என்று கேட்க, மொத்த கன்ட்ரோலும் நக்கீரனிடம் உள்ளது என்றும் எந்த நகலையும் யாருக்கும் தர உரிமை இல்லை என்று பதில் அளித்தது குறிப்பிடத் தக்கது.


இந்த வீடியோவை வெளியிட்டதால் நக்கீரன் உட்பட அனைவருக்கும் லாபம் தான். இது தொடர்பான செய்தி முதலில் வெளி வரும் நேரத்தில் நக்கீரனின் சர்குலேஷன் எவ்வளவு தெரியுமா ? வெறும் 60,000. இந்த நேரத்தில் வாரம் இருமுறை இதழாக இருக்கும் நக்கீரனை மீண்டும் வார இதழாக மாற்றலாமா என்ற ஆலோசனை நடக்கும் அளவுக்கு நிலைமை பரிதாபமாக இருந்தது. நித்யானந்தா கதைக்குப் பிறகு, நக்கீரனின் சர்குலேஷன் 1.5 லட்சத்தை தொட்டிருக்கிறது.

இந்த செய்தியை முதன் முதலில் வெளியிட்டு, தொடர்ந்து மூன்று மாதங்களுக்கும் மேலாக, நக்கீரன் கவர் ஸ்டோரியாக, நித்யானந்தாவுக்கு சுய இன்பப் பழக்கம் உண்டு, நித்யானந்தா நீலப்படம் பார்ப்பார் என்று இந்தக் கதைகளையே வெளியிட்டு, சரோஜா தேவி கதைகளை மீண்டும், தமிழுக்கு கொண்டு வந்ததை யாரும் மறந்திருக்க முடியாது. நித்யானந்தா நக்கீரனை காப்பாற்றினார் என்றால் அது மிகையாகாது.

சென்னை காவல் துறையிடம் புகார் ஒன்னை கொடுத்த லெனின் என்கிற தர்மானந்தாவை எந்த பத்திரிக்கையாளரையும் சந்திக்க அனுமதி வழங்கப் படவில்லை என்பதும் குறிப்பிடத் தக்கது.

சென்னை மாநகர காவல்துறை இந்த விவகாரத்தை கையாண்ட விதம் ஒரு பெரிய தமாசு. முதலில் நாலு வழக்கறிஞர்கள் சென்று கமிஷனரிடம் புகார் கொடுக்கிறார்கள். உடனே நித்யானந்தா மேல் வழக்கு பதிவு செய்கிறார் கமிஷனர்.

இந்த ஆபாச வீடியோவை மீண்டும் மீண்டும் ஒளிபரப்பி குழந்தைகளோடு டிவி பார்க்க விடாமல் நெருக்கடிக்கு உள்ளாக்கிய சன் டிவி மீதும், வாரமிருமுறை இதழாக சட்ட விரோதமாக விற்கப் படும் “போர்னோ“ பத்திரிக்கையான நக்கீரன் மீதும் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று பதிவுத் தபாலில், கல்யாணி என்ற வழக்கறிஞர் அனுப்பிய புகார் ஏன் கமிஷனர் ராஜேந்திரன் கண்ணுக்குத் தெரியவில்லை ?

ஏனென்றால், இது அத்தனையையும் ஆட்டி வைப்பது காமராஜ். அவர் சொன்னால் வழக்கு பதியப் படும். வேண்டாம் என்றால் மூடப்படும். முதலில் வழக்கு பதிவு செய்த சென்னை காவல்துறை, உடனடியாக வழக்கை பெங்களூருக்கு மாற்றம் செய்ததும் குறிப்பிடத் தக்கது. நித்யானந்தா கைது செய்யப் பட்டதும், ஒரு தனிப்படை பெங்களுர் சென்று நித்யானந்தாவை விசாரிக்கும் என்று கமிஷனர் ராஜேந்திரன் சொன்னது இன்னொரு தமாஷ்.

ஏற்கனவே மாற்றம் செய்யப் பட்ட வழக்கு தொடர்பாக எப்படி விசாரிக்க முடியும் ?

இந்த சதித் திட்டத்தின் ஒரு பகுதியாகவே, ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரின் ஆசிரமத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டை, நித்யானந்தா விவகாரத்தோடு முடிச்சு போட்டு கவர் ஸ்டோரி வெளியிட்டது.
பெரிய வியாபாரிகள் மூன்று பேரில் ஒருவரை ஒழித்துக் கட்டியாகி விட்டது. இன்னும் ஜக்கிக்கு போட்டியாக ஒருவன் இருக்கிறானல்லவா ?

அவனையும் ஒழித்துக் கட்ட வேண்டும் என்பதற்காகவே இந்த கவர் ஸ்டோரி. மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரமே, அந்த துப்பாக்கிச் சூடு, ரவிசங்கரை குறி வைத்து நடத்தப் பட்டதல்ல என்று பேட்டியளித்த பின்பும் கூட இந்த சம்பவங்கள் இரண்டையும் முடிச்சு போட்டு கவர் ஸ்டோரி வெளியிடப் படுகிறது என்றால் ஜக்கியை தூக்கிப் பிடிக்க காமராஜ் எடுக்கும் முயற்சியை பாருங்கள்.

இந்தியாவின் ஒரே ஆன்மீக வியாபாரியாக ஜக்கி வாசுதேவை, ஒரு Monopoly வியாபாரி ஆக்கிவிட்டார் காமராஜ் என்றால், அது மிகையாகாது.

எல்லாம் ஆன்மீகம் அய்யா ஆன்மீகம்.

பிச்சை பாத்திரம் ஏந்த வந்தோம். அய்னே.. எங்கள் அய்யனே...

பிச்சை பாத்திரம் ஏந்த வந்தோம். அய்னே.. எங்கள் அய்யனே...

செவ்வாய்க்கிழமை, 15 பிப்ரவரி 2011 08:41

3163978

பெயரைச் சொல்லவும் தகுதி வேண்டும்!

வியாழக்கிழமை, 17 பிப்ரவரி 2011 19:09

சமீபத்தில் தோழர் ப. ஜீவானந்தத்தின் பேத்தி திருமணத்தை நடத்தி வைத்த முதல்வர் கருணாநிதி வெளிப்படுத்தியிருக்கும் ஒரு கருத்து நகைப்பை வரவழைத்தது. அவர் பேசும்போது, தனக்கும் தோழர் ப. ஜீவானந்தத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்று கூறித் தன்னைத் தோழர் ஜீவாவுக்கு நிகராக, தோழர் ஜீவாவின் தோழராக முதல்வர் கருணாநிதி நிலைநிறுத்த முயன்றிருப்பது அப்பட்டமான சரித்திரப் புரட்டு.

தொடர்பு என்றால் நெருங்கிய பழக்கமா? அல்லது அவரது வாழ்வுக்கும் இவரது வாழ்வுக்கும் ஒருமைப்பாடு உள்ளது போல் தோற்றமா? ஜீவா 1906-ம் ஆண்டு பிறந்தவர். இவரோ 1924-ம் ஆண்டு பிறந்தவர். வயது அளவில் 18 ஆண்டுகள் மூத்தவர் ஜீவா. அப்படியிருக்க பழக்கம் நெருங்கிய தொடர்பாக இருக்க வாய்ப்பில்லை. ஜீவாவுடைய வாழ்வுக்கும் கருணாநிதியின் வாழ்வுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்பதுபோல் பேசியிருப்பதன் மூலம் எவ்வளவு பெரிய பொய்யை சர்வசாதாரணமாக அவிழ்த்துவிட முயல்கிறார் முதல்வர் கருணாநிதி.

Jeevanandham1

இன்று இவர் ஆட்சி அதிகாரத்தில் இருப்பதாலும், இவர் நாவசைந்தால் அதில் வரும் அத்துணை வார்த்தைகளும், பத்திரிகைகளிலே அச்சேறுவதாலும், தனது குடும்பச் சொத்தாக இரண்டு தொலைக்காட்சிச் சேனல்களை வைத்துக் கொண்டிருப்பதாலும் இவர் சொல்வதெல்லாம் உண்மையாகிவிடுமோ? இவர் கூறினால் நான்கும் மூன்றும் எட்டாகி விடுமா என்ன?

தோழர் ஜீவாவோ தியாகத்தின் இமயம். முதல்வர் கருணாநிதியோ குடும்பப்பாசம் என்கிற சுயநலத்தின் ஒட்டுமொத்த உருவம். பொது வாழ்க்கையைப் பொறுத்தமட்டில் இருவருடைய வாழ்க்கையும் ஒன்று சேர்த்துப் பார்க்க முடியாத இரு வேறு துருவங்கள்.

இன்று ஜீவா இல்லை என்பதாலும், இன்றைய தலைமுறையினர் பலருக்கும் ஜீவாவைப் பற்றித் தெரியாது என்பதாலும் ஜீவாவுக்கும், எனக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்று கூறித் தன்னை ஜீவாவுடன் ஒப்பிட முதல்வர் கருணாநிதி துடிப்பது, பரங்கிமலை தன்னை இமயத்துடன் ஒப்பிட்டு மகிழ்வது போலல்லவா இருக்கிறது.

1927-ம் ஆண்டு மகாத்மா காந்தி, இலங்கை சுற்றுப் பயணம் செல்லும் முன், காரைக்குடி அருகே சிராவயல் என்ற கிராமத்தில் "காந்தி ஆசிரமம்' என்ற பெயரில் ஜீவா ஒரு ஆசிரமம் நடத்துவதாகக் கேள்விப்பட்டார். சுப்பிரமணிய சிவாவுடன் மகாத்மா காந்தி சிராவயலுக்கு விஜயம் செய்தார். ஆசிரமம் நடத்தி வரும் ஜீவாவிடம் ஆசிரமத்தைப் பற்றிக் கேட்டுத் தெரிந்து கொண்டார்.

காந்தியாரிடம், "சபர்மதி ஆசிரமத்தில் நோயால் அவதிப்பட்ட கன்றுக் குட்டியை விஷ ஊசி போட்டுக் கொன்றதாக ஒரு செய்தி சுதேசமித்திரனில் பார்த்தேன். தாங்கள்தான் அந்தக் காரியத்தைச் செய்யச் சொன்னதாகக் கேள்விப்பட்டேன். அஹிம்சையே உருவான தாங்கள் அதைச் செய்யலாமா?' என மகாத்மாவிடம் ஜீவா கேள்வி கேட்டார். இப்படி ஒரு கேள்வியைச் சற்றும் எதிர்பாராத மகாத்மா, ஜீவாவின் நேர்மையான, துணிச்சலான செயல்பாட்டால் கவரப்பட்டார். "இன்று நான் பரிசுத்தமான ஒரு மனிதரைச் சந்தித்தேன்' எனக் கூறினார் மகாத்மா.

அதற்குப் பிறகு தேசத்தைப் பற்றியே பல மணி நேரம் பேசிக் கொண்டிருந்த ஜீவாவைப் பற்றி, மகாத்மாவுக்கு ஒரு சந்தேகம்! முழுநேரத் தேசத்தொண்டு செய்கின்ற இவர் வசதி உள்ளவரா என்பதுதான் அந்தச் சந்தேகம்! எப்படிக் கேட்பது என ஒருவிதத் தயக்கம் மகாத்மாவுக்கு!

மகாத்மா, ஜீவாவிடம் "உங்களுக்குச் சொத்து அதிகம் இருக்கிறதா?' என்று கேட்டுவிட்டார். "நான் ஓர் எளியவன்' என்று சொல்ல ஜீவாவுக்கு ஏதோ ஓர் இனம்புரியாத கூச்சம். "இந்த இந்தியா தான் என் சொத்து' என்று பதிலளித்தார் ஜீவா.

மறுகணமே மகாத்மா, "இல்லை இல்லை, நீங்கள் தான் இந்த இந்தியாவுக்கே சொத்து' எனக் கூறி நெகிழ்ந்தார். இந்தியாவின் சொத்து என மகாத்மா பாராட்டினாரே அந்த ஜீவாவும் இந்தியாவின் சொத்தான ஸ்பெக்ட்ரத்தை தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு விற்று, தனது இரும்புப் பெட்டியை நிரப்பிய ஆட்சியின் தலைமகனான கருணாநிதியும் ஒன்றா? இவர் தன்னை ஜீவாவுடன் ஒப்பிடுவது எப்படிச் சரி?

ஒருசமயம் ஜனசக்தி அலுவலகத்தில் எழுத்துப் பணியில் மும்முரமாக இருந்த ஜீவாவைப் பார்க்க ஒரு பெண் வந்திருந்தார். ஜீவா இருக்கிறாரா? என அலுவலகப் பணியாளர்களிடம் கேட்க, அவரும் ஜீவா இருக்கிறார் என்று கூறி, அந்தப் பெண்மணியை ஜீவாவின் அறைக்கே அழைத்துச் சென்றார்.

எழுத்தில் முழு கவனத்துடன் இருந்த ஜீவா, அந்தப்பெண் வந்திருப்பதைக்கூட கவனிக்காமல் எழுதிக் கொண்டே இருந்தார். எழுதி முடித்தவுடன் ஜீவா இயல்பான பரிவுக்குரலுடன் "என்னம்மா வேண்டும்?' என்று கேட்டார்.

அந்தப் பெண்ணோ, "உங்களைத்தான் பார்க்க வந்தேன்' எனக் கூறினார்.

ஜீவாவோ, "நீ யாரம்மா?' எனக் கேட்டார்.

அந்தப் பெண் பதில் ஏதும் கூறாமல் கண்ணீர் மல்க ஜீவாவையே பார்த்துக்கொண்டு இருந்தார்.

ஜீவாவோ, "நான் என்னம்மா கேட்டுவிட்டேன்? நீ யார்?' என மறுபடியும் கேட்டவுடன் கண்ணீர்விட்ட அந்தப் பெண், ஒரு பேப்பரை எடுத்து, "என் தாத்தா பெயர் குலசேகரதாஸ், என் தாயின் பெயர் கண்ணம்மா' என்று எழுதி ஜீவாவிடம் கொடுத்தார்.

ஜீவாவின் கண்கள் குளமாகிவிட்டன. கண்ணாடியைக் கழற்றிவிட்டு தன் வேஷ்டியின் ஒரு முனையை கையில் எடுத்து கண்களைத் துடைத்துக் கொண்டே அதே பேப்பரின் பின் பக்கத்தைத் திருப்பி "நீ தான் என் மகள் குமுதா' என்று எழுதி அந்தப் பெண்ணிடம் கொடுத்தாராம்.

நெடுநாள்கள் சிறையில் இருந்து, கட்சிக்காகப் பல மாநிலங்களுக்குச் சென்று, பல காலம் கழித்து சென்னை வந்த ஜீவாவுக்கு குழந்தையாக இருந்த தன் மகள் பெரிய பெண்ணாக ஆனது கூடத் தெரியாமல் இருந்தது என்பதுதான் உண்மை.

இப்படி நாட்டுக்காக உழைத்துத் தனது குடும்பத்தையே மறந்த ஜீவாவும், தனது குடும்பம் செல்வச் செழிப்புடன் எல்லா துறைகளையும் ஆக்கிரமித்துக் கொடிகட்டிப்பறக்கவும், நாட்டின் சொத்தை விற்றுத் தனது குடும்பச் சொத்தை அதிகரிக்கவும் பொதுவாழ்க்கையைப் பயன்படுத்தும் கருணாநிதியும் ஒன்றா?

1957-ல் வண்ணார்பேட்டை தொகுதியில் ஜீவா கம்யூனிஸ்ட் சார்பாகப் போட்டியிட்டபோது, ஜீவரத்தினம் என்ற ஒருவரை நிறுத்தி, ஜீவாவைத் தோற்கடித்த பெருமை தி.மு.க.வுக்கு உண்டு. தி.மு.க. முதன்முதலில் பங்கேற்ற தேர்தல் அது. அப்போதெல்லாம் 234 தொகுதிகளிலும் தி.மு.க. நிற்காது. வெற்றி வாய்ப்பு உள்ள ஒரு சில தொகுதிகளில் மட்டுமே நிற்கும். தி.மு.க. போட்டியிடாத தொகுதிகளில் காங்கிரஸýக்கு எதிரான சுயேச்சைகளை ஆதரிக்கும்.

அந்தச் சமயத்தில் ஜீவாவை எதிர்த்து வேட்பாளர் யாரையும் நிறுத்த வேண்டாம் என்று இடதுசாரி இயக்கத்தினர் கெஞ்சிக் கேட்டபோதும்கூட, அதைப் பொருள்படுத்தாமல், ஜீவரத்தினத்தை தி.மு.க. சார்பில் நிறுத்தி, ஜீவாவைத் தோற்கடித்தது தி.மு.க. ஜீவரத்தினத்தை வண்ணார்பேட்டை தொகுதியில் நிறுத்த வேண்டும் என்று முடிவெடுத்ததில் கருணாநிதிக்கும் பங்கு உண்டு. இன்று ஜீவாவைப் பற்றிப் பேச தி.மு.க.வுக்கும் கருணாநிதிக்கும் என்ன தகுதி இருக்கிறது?

மொழி வழி மாகாணம் பிரிக்கும்போது, விடுபட்ட தமிழ்பேசும் சில பகுதிகளான தேவிகுளம், பீர்மேடு போன்ற பகுதிகள் கேரளத்தோடு இருந்தன. அதைத் தமிழகத்தோடு சேர்க்க வேண்டும் என போராட்டம் நடத்தியவர்களில் தோழர் ஜீவாவும் முக்கியமானவர். பின் அந்தப் பகுதிகள் தமிழகத்தோடு சேர்க்கப்பட்டது. அதற்குப் பாராட்டுக் கூட்டம் காமராஜ் தலைமையில் நாகர்கோவிலில் நடைபெற்றது. அப்போது காமராஜ் நாகர்கோவில் அருகேயுள்ள பூதப்பாண்டிக்குச் சென்று நிகழ்ச்சிக்குக் கூடவே அழைத்துச் செல்ல விரும்பி ஜீவாவின் வீட்டுக்குச் சென்றார்.

ஜீவா காமராஜை வரவேற்றார். தான் வந்த நோக்கத்தை காமராஜ் ஜீவாவிடம் கூறினார். ஜீவாவோ, ""இப்போது நான் உங்களுடன் வர இயலாது. சுமார் அரை மணி நேரமாவது ஆகும். நீங்கள் செல்லுங்கள். நான் பின்னாலே வந்து விடுவேன்'' என்று கூறினார்.

காமராஜ் விடுவதாக இல்லை. ஜீவா வராமல் இருந்துவிடக்கூடாது என்பதால், ""நான் அரைமணி நேரம் காத்திருக்கிறேன். இரண்டு பேரும் ஒன்றாகச் செல்வோம்'' எனக் கூறினார். ""இல்லை... இல்லை, அரை மணி நேரத்துக்கும் மேலே ஆகும். நீங்கள் போங்கள்'' என ஜீவா மறுக்கிறார்.

""என்ன காரணம்?'' என காமராஜ் கேட்க, அதற்கு ஜீவா, ""என்னிடம் இருப்பது இரண்டே இரண்டு உடைதான். ஒன்றை அணிந்து இருக்கிறேன். இன்னொன்றைத் துவைத்துக் காயப்போட்டு இருக்கிறேன். இன்றைக்குப் பார்த்து வெயில்கூட சரியாக அடிக்கவில்லை'' என வருத்தத்தோடு கூறினாராம். முதல்வராக இருந்த பெருந்தலைவர் காமராஜின் விழிகளில் கண்ணீர் ததும்பியது என்று நேரில் பார்த்தவர்கள் பதிவு செய்திருக்கிறார்கள். அந்த ஒப்பற்ற தியாகி ஜீவாவும் உலகக் கோடீஸ்வரர்கள் வரிசையில் தனது குடும்பத்தினரை உயர்த்தி மகிழ்ந்திருக்கும் கருணாநிதியும் ஒன்றா?

சரித்திரத்தைப் புரட்டிப்போட்ட இயக்கத்தைச் சேர்ந்த தோழர் ஜீவாவுடன் தன்னை முதல்வர் கருணாநிதி ஒப்பிட்டுக் கொள்வதன் மூலம் சரித்திரப் புரட்டை அவிழ்த்துவிட முயல்கிறார். கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழியின் கதையாக அல்லவா இருக்கிறது இது.

நன்றி: தினமணி