அண்ணாவின் கவிதை
பேராசைப் பெருந்தகையே போற்றி
பேசநா இரண்டுடையாய் போற்றி
தந்திர மூர்த்தி போற்றி
தாசர்தம் தலைவர் போற்றி
வஞ்சக வேந்தே போற்றி
வன்கண நாதா போற்றி
கொடுமைக் குணாளா போற்றி
கோழையே போற்றி
பயங்கொள்ளிப் பரமா போற்றி
படுமோசம் புரிவாய் போற்றி
சிண்டுமுடித் திடுவாய் போற்றி
சிரித்திடு நரியே போற்றி
ஒட்டுவித்தை கற்றோய் போற்றி
உயர் அநீதி உணர்வோய் போற்றி
எமது இனம் கெடுத்தோய் போற்றி
ஈடில்லாக் கேடே போற்றி
இரை இதோ போற்றி! போற்றி
எத்தினேன் போற்றி போற்றி
பேசநா இரண்டுடையாய் போற்றி
தந்திர மூர்த்தி போற்றி
தாசர்தம் தலைவர் போற்றி
வஞ்சக வேந்தே போற்றி
வன்கண நாதா போற்றி
கொடுமைக் குணாளா போற்றி
கோழையே போற்றி
பயங்கொள்ளிப் பரமா போற்றி
படுமோசம் புரிவாய் போற்றி
சிண்டுமுடித் திடுவாய் போற்றி
சிரித்திடு நரியே போற்றி
ஒட்டுவித்தை கற்றோய் போற்றி
உயர் அநீதி உணர்வோய் போற்றி
எமது இனம் கெடுத்தோய் போற்றி
ஈடில்லாக் கேடே போற்றி
இரை இதோ போற்றி! போற்றி
எத்தினேன் போற்றி போற்றி
இந்தக் கவிதை, 1945 ம் ஆண்டு அறிஞர் அண்ணாவால் எழுதப்பட்டது. சற்றேறக்குறைய 60 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய இந்த கவிதையில் அண்ணாவின் துணிச்சல், தெளிவு, கருத்துச் செறிவு தெளிவாகத் தெரிகிறது. மனித மேம்பாடு பேணப்படுவதற்கான போராட்டமே தனது இயக்கம் என்றும் அந்த போராட்டத்தை புனிதப் போர் என்றும் அறிவித்த அண்ணா, இத்தகைய கவிதையை எழுதியிருக்கிறார்.
குறிப்பு:- யாருக்கோ அண்ணா எழுதிய இந்தக் கவிதை, 65 ஆண்டுகள் கழிந்த நிலையில், அவருடைய சீடருக்கு பொருத்தமாக இருப்பது மிகவும் விந்தையாக உள்ளது.
http://thileeban-ravi.blogspot.com/2010/09/blog-post_5011.html
http://thileeban-ravi.blogspot.com/2010/09/blog-post_5011.html
No comments:
Post a Comment