நடிகர் வடிவேலு ஒரு பேட்டியில் "MGR, சிவாஜி எல்லாம் சொல்லி கேக்காத பயபுள்ளைங்களா நாம சொல்லி கேக்க போகுதுங்க? அதனால தான் நான் இந்த கருத்து எல்லாம் சொல்றத விட்டுட்டு மக்களை சிரிக்க வெக்கறது மட்டுமே நம்ம வேலன்னு செய்றேன்"னு சொன்னார்...இதில் இருந்து மாறுபடுவதாய் காட்டிக்கொண்ட விவேக் தான் நடிக்கும் படங்களில் பல தத்துவங்களை அவிழ்த்து விட்டார்(பல விஷயங்கள் நல்லது தான் சொன்னார், என்ன ஒரு மதத்தை சார்ந்தவர்களுக்கு மட்டுமே அவர் அட்வைஸ் எல்லாம்)...சில காலம் அதை வைத்து கல்லாக் கட்ட முயன்ற அவரை உடனே கலைவாணர் ரேஞ்சுக்கு தூக்கி வைத்து சிலர் கொடுத்த பில்ட்அப் பலரையும் அவர் மிகவும் நல்லவர் தான் போல என்று நம்ப வைத்து விட்டது. இது பத்தாது என்று அப்துல் கலாம் வேறு மாட்டிக் கொண்டார். இவரின் புகழ்ச்சியை தாங்காமல் அவரும் இவரை பாராட்டி வைக்க இவர் தன் ரேஞ்சை இன்னும் மேலே ஏத்திக்கொண்டார். அதன் கொடுமையான வெளிப்பாடு இவர் கவிதைகள் எழுத ஆரம்பித்தது...இவரின் கவிதைகள் படிக்கும் போது என்னைப் போல் கிறுக்கல்கள் எழுதுபவர்களுக்கே வெறுப்பாகும் போது கவிதைகளே உயிரென வாழ்ந்துக்கொண்டு இருப்பவர்களுக்கு எப்படி இருக்கும்?
சமீப கால படங்களில் தன் கருத்து மூட்டைகளை கோடௌனில் போட்டு பூட்டி வைத்த விவேக் தன் ஆபாச முகத்தை காண்பிக்க ஆரம்பித்து விட்டார்...இவரின் இப்போதைய லேட்டஸ்ட் காமெடி என்னவென்றால் "தக்காளி பிதிங்கிடுச்சு, பல்பு உடைஞ்சிருச்சு" போன்ற மட்டகரமான செயல்கள் தான்...பல படங்களாய் இவர் செய்ய ஆரம்பித்த இந்த கலைச் சேவை சமீபத்திய சிங்கம் திரைப்படத்தில் உச்சக்கட்டத்தை எட்டி உள்ளது... இவர் அறிமுகம் ஆகும் முதல் காட்சியில் அடிப்பட்டு எழுந்திருக்கும் அவரிடம் அவர் சக காவலாளி "சார் முன்னால உங்க சூ(shoe) கிழிஞ்சிருக்கு பாக்கலையா? என்று கேக்க அதற்கு இவர் "பின்னால கூட "சூ" கிழிஞ்சிருக்கு பாக்கலையா" என்று கேட்கிறார்... இன்னொரு சீனில் படத்தில் புலி வேஷம் இட்டுச் செல்லும் அனுஷ்காவை பார்த்து இவர் சொல்லும் வசனம் மட்டும் போதும் நான் ஏன் இவரை பற்றி இப்படி சொல்லிக் கொண்டு இருக்கிறேன் என்று "புலியின் வாலே இவ்வளவு பெருசா இருக்குனா....புலியோட பு...பு....பு...பு...பல்லு எவ்வளவு பெருசா இருக்கும்?" இந்த டயலாக் கேட்ட போது குடும்பத்துடன் படம் பார்த்த யாரும் சிரிக்கவில்லை...
இவர் மட்டும் தான் இன்றைய திரைப்படங்களில் டபுள் மீனிங்(ஓபனாவே) பேசுகிறார் என்று சொல்லவில்லை இவருக்கு அடுத்து சந்தானம்(சிலம்பாட்டம் ஒன்றே போதும் இவர் புகழ் சொல்ல) மற்றும் சிலர் உள்ளனர்...ஆனால் அவர்கள் யாரும் இவரைப் போல பெரிய கலைஞர்களின் பெயரை பட்டமாக வைத்துக் கொண்டு இந்த மாதிரி கீழ்த்தரமான வேலையை செய்யவில்லை...நான் ஒன்றும் விவேக்கின் எதிரி அல்ல சொல்லப் போனால் பல விஷயங்களில் அவரை ரசித்திருக்கிறேன் ஆனால் அவரின் இந்த அருவருப்பான, ஆபாசமான வசனங்களையும் நடிப்பையும் எதிர்க்கிறேன் அதுவும் அவர் கலைவாணரின் பட்டத்தை வைத்து செய்வதால்...அன்புள்ள விவேக் அவர்களே பட்டத்திற்கு ஏற்றார் போல நடியுங்கள் இல்லையேல் தயவு செய்து உங்கள் பட்டங்களை எடுத்து விடுங்கள்...
எக்ஸ்ட்ரா இன்பர்மேஷன்: ஆபாச வசங்கள் பெரும்பாலும் காமெடி சீனிலேயும், பாடல்களிலேயுமே இடம்பெறுகின்றன...இவற்றை சென்சார் கண்டுகொள்வதில்லை...பாடல் வரிகளை எத்தனை பேர்கள் உன்னிப்பாக கவனிக்கிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை...பல பாடல் வரிகள் மிக ஆபாசமாக இருப்பதை நான் கேட்கிறேன்...சமீபத்தில் மாஞ்சா வேலு திரைப்படத்தில் இடம் பெற்ற "மாஞ்சா வேலு பலே ஆளு" என்ற பாடலை நீங்கள் எல்லோரும் கேட்டிருப்பீர்கள்...படத்தில் பாஸ்ட் பீட்டில் இடம் பெற்ற பாடலை மட்டுமே கேட்டவர்களுக்கு அதன் வரிகள் புரிந்திருக்காது ஆனால் ஸ்லொவர் வெர்ஷன் கேட்டவர்களுக்கு புரிந்த்திருக்கும் அதன் ஆபாச வரிகள்...எனக்கு அந்த பாடல் மிகவும் பிடிக்கும் இரு விஷயங்களுக்காக ஒன்று பழைய காலத்து இசையில் அமைந்திருப்பது இரண்டாவது முகேஷ் மற்றும் பிரியா சுப்ரமணியன் பாடும் அழகு...மற்ற படி பாடல் வரிகள் அனைத்தும் "A" கிளாஸ்...எழுதியவர் வாலிபக் கவிஞர் வாலி...
http://www.parthichezhian.com/2010/08/blog-post_21.html
No comments:
Post a Comment