Saturday, January 8, 2011

மணல் விலை கடும் ஏற்றம்

ஒரு லாரி மணல் விலை ரூ.19,500 : பேரை கேட்டாலே மயக்கம் வருது

சேலம்:மணல் விலை இருமடங்கு உயர்ந்துள்ளதால், மணல் கிடைக்காமல் தமிழகத்தில் கட்டுமான பணிகள் முற்றிலுமாக ஸ்தம்பித்து விட்டது.

தமிழகத்தில் ஏற்கனவே கட்டுமான பொருட்களான சிமென்ட், இரும்பு உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்ந்துள்ளதால், கட்டுமான பணி தள்ளாடி வருகிறது. இந்நிலையில், ஒரு வாரத்தில் மணல் விலையும் இரு மடங்கு உயர்ந்துவிட்டதால் கட்டுமான பணிகள் முற்றிலுமாக முடங்கிவிட்டது.திருச்சி மாவட்டம் சீனிவாசநல்லூர், மணல்மேடு, முசிறி, நொச்சியம், வாத்தலை, குளித்தலை, லாலாப்பேட்டை, வாங்கல் போன்ற இடங்களில் உள்ள மணல் குவாரிகளில் இருந்து நாள்தோறும் மணல் எடுக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான லாரிகள் மூலம் தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் அனுப்பப்பட்டு வரப்படுகிறது.சென்னை, மதுரை, திருப்பூர், கோவை, சேலம், ஈரோடு உள்ளிட்ட ஊர்களில் இருந்து 7,000 லாரிகள் மூலம் தினம்தோறும் மணல் எடுத்து, தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் விநியோகம் செய்வது வழக்கம். கடந்த டிசம்பர் மாதம் 29ம் தேதி, இந்த பகுதிகளில் பொக்லைன் மூலம் மணல் எடுக்க சென்னை ஹைகோர்ட் தடை உத்தரவு பிறப்பித்தது.

இதனால், ஆட்கள் மூலம் மட்டுமே மணல் அள்ளப்படுகிறது. இதில் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 20 முதல் 30 லாரிகளுக்கு மட்டுமே லோடு ஏற்றப்படுகிறது. இப்படி ஏற்றப்படும் லோடு, கட்டுமான பணிகளுக்கு போதுமானதாக இல்லாமல் பற்றாக்குறை ஏற்பட்டது.கடந்த மாதம் ஒரு லாரி மணல்( 3யூனிட்) 6, 200 ரூபாய்க்கு விற்றது. கடந்த மாதம் தொடர் மழை பெய்ததால் இன்னும் கொஞ்சம் அதிகரித்து ஒரு லாரி மணல் 7, 500 ரூபாய்க்கு விற்கப்பட்டது. தற்பொழுது குவாரிகளில் மணல் எடுப்பது நிறுத்தப்பட்டதால், ஒரு லாரி மணல் விலை 15 ஆயிரம் ரூபாயில் இருந்து 19 ஆயிரம் 500 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது. ஏற்கனவே இருப்பு வைத்துள்ள மணல் வியாபாரிகள் தான், தற்பொழுது விற்பனை செய்து வருகின்றனர். இந்த இருப்பும் குறைந்த நாட்களுக்கு மட்டுமே தாக்குபிடிக்கும். இந்த பற்றாக்குறையினால் தமிழகம் முழுவதும் கட்டுமான பணிகள் முற்றிலுமாக பாதிப்படைந்துள்ளது. அதோடு மட்டுமல்லாமல் கட்டுமான துறையை சார்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பின்றி தவிக்கின்றனர்.இப்பிரச்னைக்கு தீர்வு காண, தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் கட்டுமானப் பணிகள் மீண்டும் துவங்கும்.

மதுரையில் மணலுக்கு திடீர் “மவுசு’: ரூ.10 ஆயிரம் என்றாலும் “ம்ஹூம்’: கட்டடம் கட்டுவதில் சிக்கல் : மதுரையில் மணல் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளதால், மணலுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டு உள்ளது. ஏற்கனவே இருப்பு வைத்திருக்கும் மணல் ஒரு லோடு(10 டன்) 4 ஆயிரம் என்பது 10 ஆயிரம் ரூபாய் வரை உயர்ந்து உள்ளது. இத்தொகையை கொடுக்க தயாராக இருந்தாலும், மணல் கிடைப்பது அரிதாக உள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியில் இருந்து இயந்திரத்தின் மூலம் மணல் அள்ளப்பட்டு, மதுரை கொண்டு வரப்படுகிறது. இத்தொழிலை நம்பி 436 அரைபாடி லாரிகள் உள்ளன. இரண்டு யூனிட் (10 டன்) கொண்ட ஒரு லோடு மணலை 1700 ரூபாய்க்கு எடுத்துக் கொண்டு வரும் லாரி உரிமையாளர்கள், போக்குவரத்து செலவு 1300 ரூபாய், லோடுமேன் கூலி 150 ரூபாய், டிரைவர் படி 350 ரூபாய் , லாபம் 500 ரூபாய் என 4 ஆயிரம் ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கின்றனர்.

இந்நிலையில், “இயந்திரத்தின் மூலம் ஆற்றில் மணல் அள்ளுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கிறது. ஆட்களை வைத்து அள்ள வேண்டும்’ என மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதுகுறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்ட நிலையில், நான்கு நாட்களாக பரமக்குடியில் இருந்து இயந்திரத்தில் மணல் அள்ளும் பணி நிறுத்தப்பட்டது. தமிழகம் முழுவதும் இதே நிலை நீடிப்பதால், நேற்று முதல் அரைபாடி லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர். மதுரை மணல் லாரி உரிமையாளர்களும் இதில் பங்கேற்றுள்ளனர்.

சங்கத் தலைவர் ரவிராஜன் கூறியதாவது : ஆள் வைத்து மணல் அள்ளுவது முடியாதகாரியம். ஆட்கள் கிடைப்பது கஷ்டமாக உள்ளது. பரமக்குடியில் இருந்து இயந்திரத்தின் மூலம் மணல் கொண்டு வந்து, மதுரையில் இறக்க ஆட்கள் கிடைப்பதில்லை. ஆட்களை வைத்து மணல் அள்ளுவதால் காலதாமதம் மற்றும் மணல் அள்ளும் கூலி ஆகியவற்றை கணக்கிடும்போது, பொதுமக்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்க வேண்டிய நிலை ஏற்படும். ஏற்கனவே, இப்பிரச்னையால் 50 லாரிகள் முடங்கி உள்ளன. இதுகுறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

ஏற்கனவே செங்கல், இரும்பு, சிமென்ட் என கட்டுமான பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், மணல் விலையும் 10 ஆயிரம் ரூபாய் வரை உயர்ந்துள்ளதால், கட்டடம், வீடு கட்டும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. இத்தொகையை கொடுக்க பொதுமக்கள் தயாராக இருந்தாலும், மணல் தட்டுப்பாட்டால் “கிராக்கி’ ஏற்பட்டுள்ளது.

http://www.tamilolli.com/2011/01/07/16685/#more-16685

ஊழலும் கருணாநிதியும் வேறு வேறல்ல

தனிமையிலே ‘இனிமை’ காணமுடியுமா? — ஞாநி


ஒரு லட்சத்து 76 ஆயிரத்து 356 கோடி ரூபாய் முறை கேட்டை ஆ.ராசாவால் தனியாகச் செய்திருக்க முடியாது என்று தான் நான் நினைக்கிறேன். முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியும் அப்படித்தான் நினைக்கிறார் என்று இப்போது தெரியவந்திருப்பது எனக்குப் புல்லரிக்கிறது. இப்படி ஓர் ஒப்புதல் வாக்குமூலத்தை இதற்கு முன்பு யாரும் கொடுத்ததில்லை.

இளைஞன்’ பட விழாவில் பேசிய கருணாநிதி, ஊமைப்படக் காலத்தில் பகாசுரன் வதைக் காட்சிகளை தாம் பார்த்தபோது எப்படி அசுரனைப் பற்றி மிகைப்படுத்தப்பட்ட வர்ணனைகள் சொல்லப்பட்டன என்று விவரித்துவிட்டு, அதேபோல ஒரு தனி நபர் ஒரு லட்சத்து 76 ஆயிரத்து 356 கோடி ரூபாய்களைத் தனியாக அபகரித்திருக்க முடியுமா என்று சிந்திக்காமல், படித்தவர்களும் நம்புகிறார்களே என்று கேட்டிருக்கிறார்.

அடுத்தபடி அவர் சொன்னதைத்தான் ஆங்கிலத்தில் உளவியலில் ஃப்ராய்டியன் ஸ்லிப் என்பார்கள். தன்னையறியாமலே அடி மனத்தில் இருக்கும் உண்மையை உளறிவிடுவதுதான் அது. “எதை வேண்டுமானாலும் சொல்வார்கள். ஆனால் இன்றைக்கு ஒரு மனிதன் அந்தக் காரியத்தைச் செய்கிறான் என்றால் அவன் விஞ்ஞான ரீதியாகத்தான் செய்யமுடியும். ‘எந்திரன்’ படத்தில் ரஜினி எப்படி ரோபோவாக வந்து இந்தக் காரியங்களைச் செய்கிறாரோ, அதைப்போல செய்ய முடியுமே தவிர, தனியாக ஒரு மனிதன் அப்படிச் செய்யமுடியாது என்பதை அறிவுபூர்வமாக இன்றைக்கு உணர்கிறோம்,” என்கிறார் கருணாநிதி!

புராண பகாசுரன் வேலைகளை இன்று விஞ்ஞான பூர்வமாகச் செய்ய முடியும் என்று கருணாநிதி சொன்னால், சரியாகத்தான் இருக்கும். ஏனென்றால் விஞ்ஞானபூர்வமாக ஊழல்கள் செய்பவர் என்று 35 வருடங்களுக்கு முன்பே நீதிபதி சர்க்காரியாவால் வர்ணிக்கப்பட்டவர் அவர்!

ராசாவோடு ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் சம்பந்தப்பட்டவர்கள் யார் யாராக இருக்கும் என்று யூகிக்கும் வசதியை, நமக்கு நீரா ராடியா டேப்கள் அளிக்கின்றன. அவற்றைப் பற்றி ஒருபோதும் கருணாநிதி ஒரு வார்த்தை கூட சொல்லப்போவதே இல்லை.

தி.மு.க. சம்பந்தப்பட்ட முறைகேடு ஸ்பெக்ட்ரம் என்பது மட்டும் அல்ல. பல ஊழல்களில் அது ஒன்று. மிகப் பெரும் தொகைகளும், மிகப் பெரிய சூழ்ச்சிகளும் சம்பந்தப்பட்டிருப்பதால் அதைப் பற்றி அதிகம் பேசுகிறோம்.

ஆ.ராசாவும் டி.ஆர்.பாலுவும் தொடர்புடைய இன்னொரு மிகப் பெரும் முறை கேடினை தெஹல்கா இதழ் அம்பலப்படுத்தியிருக்கிறது. ராசா டெலிகாம் அமைச்சராவதற்கு முன்பு சுற்றுச் சூழல் அமைச்சராக இருந்தார். அவருக்கு முன்பு அந்தப் பொறுப்பில் பாலு இருந்தார். இருவர் கீழுமாக ஏழு வருடங்கள் அந்த அமைச்சகம் இருந்திருக்கிறது.

புதிய தொழில் திட்டங்களுக்கான விண்ணப்பங்கள் வரும்போது அவற்றால் ஏற்படக்கூடிய சுற்றுச் சூழல் பாதிப்பு பற்றி மதிப்பிட்டுவிட்டு அனுமதி தருவதும்/ மறுப்பதும் அமைச்சகத்தின் முக்கியப் பணிகளில் ஒன்று. அதற்கு முன்பு 20 வருடங்களில் நான்காயிரம் தொழில் திட்டங்களுக்கு அனுமதி தரப்பட்டது. ஆனால் பாலு, ராசா இருந்த சமயத்தில் மாதம் 100 திட்டங்களுக்கு க்ளியரன்ஸ்…! இரண்டே வருடங்களில் 2000 திட்டங்களுக்கு ஒப்புதல்.

ராசாவின் தனிச் செயலாளராக இருந்து இப்போது விசாரிக்கப்படும் ஆர்.கே.சந்தோலியா, முதலில் அவருடன் சுற்றுச் சூழல் துறையில் இருந்தவர். ராசா- நீரா ராடியா நட்பு அப்போதுதான் ஆரம் பம். நாட்டின் இன்னொரு மூலையில் இருக்கும் ராசாத்தி அம்மாள், அவர் ஆடிட்டர் ரத்தினம் ஆகியோரின் நட்பு எல்லாம் ராடியாவுக்கு ஏற்படுவதற்கான வித்து, சுற்றுச் சூழல் துறையில் தொடங்குகிறது.

பாலு-ராசா ஆட்சியில் சுற்றுச் சூழல் பாதிப்பு அறிக்கைகள் தருவதில் பெரும் முறைகேடுகள் நடந்திருப்பதாக சூழல் பாதுகாப்பு இயக்கங்கள் கூறுகின்றன. சூழல் பாதுகாப்பை மதிப்பிடுவதற்கான குழு உறுப்பினர்களாக, தமிழ்நாட்டிலிருந்து தமக்கு வேண்டியவர்களையே ராசா நியமித்த தாகக் குற்றம் சாட்டப்படுகிறது.

பாலு காலத்தில் ஒவ்வொரு தொழிலுக்கும் நடத்தைக் கோட்பாடுகள் வகுக்கப்பட்டன. இவற்றை வகுப்பதில் தொழில் அதிபர்களுக்குச் சாதகமாக, பல முறைகேடுகளை பாலு செய்திருப்பதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. நடத்தைக் கோட்பாட்டை மீறினால் தண்டனை எதுவும் இல்லை. அது சுயக்கட்டுப்பாட்டுக் கோட்பாடு அவ்வளவுதான். ஸ்பெக்ட்ரம் முறைகேட்டைவிடப் பல மடங்கு அதிகமான பாதிப்பை சுற்றுச்சூழல் துறையில் நாட்டுக்கு தி.மு.க அமைச்சர்கள் ஏற்படுத்தியிருப்பதாக தெஹல்கா குற்றம் சாட்டியிருக்கிறது.

மன்மோகன்சிங் இரண்டாம் முறை பிரதமரானபோது பாலு, ராசா இருவரையும் அமைச்சரவையில் சேர்க்க விரும்பவில்லை என்று கூறப்பட்டது. இது தயாநிதி மாறனின் விஷமப் பிரசாரம் என்று நீரா ராடியாவிடம் கனிமொழி சொல்கிறார். மாறனையும் பாலுவையும்தான் மன்மோகன் விரும்பவில்லை என்பது அவர் தரப்பு வாதம்.

ஆனால் பிரதமர் மன்மோகன்சிங்கால் எதுவும் செய்ய முடியவில்லை. அவரால் அதிகபட்சம் செய்ய முடிந்ததெல்லாம் பாலுவை அடுத்த முறை அமைச்சரவையில் சேர்க்காமல் விட்டதுதான். ராசா ஒரு வழியாக விலகியதும் அந்தத் துறையை எந்த தி.மு.க. காரரிடமும் ஒப்படைக்காமல் தம் கட்சிக்காரரிடமே கொடுக்க முடிந்ததுதான்.

காங்கிரசும் தி.மு.க.வும் கூட்டணியில் இருந்தாலும், காங்கிரசால் தன் முதலமைச்சர் மீது நடவடிக்கை எடுப்பது போல, தி.மு.க அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடிவதில்லை. காரணம் கருணாநிதி சொன்னதாகத்தான் இருக்க முடியும்.“யாரும் தனி மனிதனாக அவ்வளவு பெரிய தொகையை எல்லாம் அபகரித்துவிட முடியாது” என்பது எவ்வளவு ஆழ்ந்த அனுபவத்தின் விளைவாக உதிர்ந்த பொன்மொழியாக இருக்க வேண்டும்! இந்தப் பகுத்தறிவு முடிவிலிருந்துதான் கூட்டணி தர்மம் என்ற கோட்பாடே உருவாகியிருக்க முடியும்.

கூட்டணி தர்மம் என்ற ஒன்று இல்லாவிட்டால், காங்கிரஸ் மகா ராஷ்டிரத்தில் தம் முதலமைச்சரை ஆதர்ஷ் வீட்டு ஒதுக்கீடு ஊழலுக்காக விலக வைத்ததுபோல, தமிழகத்தில் கருணாநிதியை வீட்டு வசதி வாரிய ஊழலுக்காக விலகச் சொல்லலாம். ம்ஹூம் முடியாது. கருணாநிதி கூட்டணி தர்மத்தில் ஆழ்ந்த நம்பிக்கையுள்ளவர். அதனால்தான் தமிழக வீட்டு வசதி வாரிய ஒதுக்கீடு முறைகேட்டில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கும் உரிய பங்கு கொடுத்துவிடுகிறார். சென்னையில் சொந்த வீடு இருக்கும் காங்கிரஸ் பெண் எம்.எல். ஏ.வுக்கு, விதிகளை மீறி வீட்டு வசதி வாரிய நிலம் ஒதுக்கப்படுகிறது.

தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சமூக ஆர்வலர் கோபாலகிருஷ்ணன் வெளிக் கொணர்ந்திருக்கும் இந்தத் தகவல்கள் அதிர்ச்சியூட்டுகின்றன….. என்று சொல்லமாட்டேன். இந்த ஆட்சியில் இப்படியெல்லாம் நடக்காமல் இருந்தால்தான் நமக்கு அதிர்ச்சி.

கருணாநிதி ஆட்சியில் சமூக சேவகர்களின் எண்ணிக்கை ஒரேயடியாக எகிறிவிட்டது. அண்ணா அறிவாலயத்தில் வேலை செய்யும் ஒருவர் சமூக சேவகராம். உடனே வீடு ஒதுக்கீடு. ஓர் அமைச்சரின் மருமகள், பேத்தி எல்லோரும் சமூக சேவகர்கள்! சட்ட மன்ற தி.மு.க. கொறடாவின் மனைவி சமூக சேவகி! முதல்வரின் செயலாளர் மகள் சமூக சேவகி! ஐ.ஏ.எஸ். அதிகாரியின் மகன், ஐ.பி.எஸ். அதிகாரியின் மனைவி, மகள் எல்லோரும் சமூக சேவகர்கள்!! முதலமைச் சருக்கு செக்யூரிட்டி வேலை செய்தால் அவர்கள் “அப்பழுக்கற்ற அரசு ஊழியர்கள்!”

இப்படிக் கோடிக்கணக்கான ரூபாய்கள் மதிப்புள்ள வீட்டு மனை, வீடுகளை கருணா நிதியின் அரசு, தமக்கு வேண்டியவர்களுக்கெல்லாம் சுண்டல் மாதிரி விநியோகித்திருக்கிறது. இத்துடன் ஒப்பிட்டால் மும்பையின் ஆதர்ஷ் வீடு ஒதுக்கீடு ஊழல் ஜுஜூபி.

ஆனால், தான் ஏழையாகப் பிறந்து ஏழையாக வளர்ந்து, ஏழைகளோடே பழகி ஏழைகளுக்காகவே வாழ்ந்து கொண்டிருப்பவன் என்று கூசாமல் பேசுகிறார் கருணாநிதி.

சொத்துக் கணக்கு கேட்டால், உடனே தான் ஒன்றும் ஏழையாகப் பிறக்கவில்லை என்றும் அந்தக் காலத்திலேயே பக்கத்து ஊர் பள்ளியில் சேர்த்துப் படிக்க வைக்கும் வசதியுடன் பிறந்ததாகவும் சொல்லிக் கொள்கிறார்.

கருணாநிதியின் சமீப பேச்சுகள் ஒரு பக்கம் சிரிப்பையும் இன்னொரு பக்கம் எரிச்சலையும் ஏற்படுத்துகின்றன. அவருடைய மொத்த சொத்து மதிப்பு வெறும் ஆறு கோடி ரூபாய்தானாம். அப்படியானால் எப்படி அவர் மகன் அழகிரியின் சொத்து மதிப்பு 13 கோடியாக ஆயிற்று? ஸ்டாலினின் சொத்து மதிப்பு 13 கோடியாயிற்று? இருவரும் படித்த காலத்திலிருந்து ஒரு வேலைகூட பார்த்ததில்லை. எங்கேயும் பெரிய சம்பளம் வாங்கியதில்லை. என்ன தொழில் செய்தார்கள்? முதலீடுகள் எங்கிருந்து வந்தன? கனி மொழிக்குச் சொத்து மதிப்பு எப்படி 8 கோடி 45 லட்சம் ஆயிற்று? அவர் பார்த்த வேலை, வாங்கிய சம்பளம் என்ன? பாட்ஷா, அண்ணாமலை, சிவாஜி, எந்திரன் வசனகர்த்தாக்களுக்குத் தருவதைவிடப் பல மடங்கு அதிகமாக வசனகர்த்தா கருணாநிதிக்கு 50 லட்சம் சம்பளம் தரும் தயாரிப்பாளர்கள் இருக்கிறார்கள். கனிமொழியின் கவிதைக்கு 5 லட்சம் யாராவது தருகிறார்களா என்ன? கருணாநிதியின் பேரன்கள் எல்லாம் கல்லூரியிலிருந்து வந்த உடனே கோடிக்கணக்கான ரூபாய் முதலீட்டில் வரிசையாக சினிமா எடுத்துக்கொண்டே இருக்கிறார்கள்… எப்படி?

கருணாநிதி எழுதவேண்டிய அடுத்த புத்தகம்: ‘நூறே நாட்களில் கோடீஸ்வரனாவது எப்படி?’ தனியே தன்னந்தனியே ஒரு கோடீஸ்வரக் குடும்பத்தை உருவாக்கிய அந்தச் சாதனை ரகசியத்தை மட்டும் தமிழக மக்களுக்கு அவர் தெரிவித்துவிட்டால், உலகம் அழியும்வரை அவருக்கு நன்றி விசுவாசத்தோடு அத்தனை தமிழர்களும் இருப்பார்கள்.

நன்றி: கல்கி

http://balhanuman.wordpress.com/2010/12/14/

2010 - மெகா ஊழல் வருடம்

21010-ம் வருடத்தை ஸ்பெக்ட்ரம் வருடம் என்று சொல்லுமளவுக்கு இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றியிருக்கிறது இந்த மெகா ஊழல்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நித்யானந்தாதான் Man of the year ஆக இருந்தார். கடைசி நிமிடத்தில் அவரைப் புறந்தள்ளிவிட்டு, டி.வி. சானல் பாஷையில் ‘இந்திய தொலைக்காட்சி வரலாற்றில் முதன் முதலாக’ ஒரு ஊழல் கதை தினமும் செய்தியாகிற பெருமையைக் கொடுத்தவர் ஆ.ராசா. இந்த ஊழல் மகாத்மியத்தைப் பார்த்து ‘ஆ’ வென்று வாயைப் பிளந்த திருவாளர் பொதுஜனம் இன்றும் திறந்த வாய் மூட முடியாமல் தவிக்கிறார். 125 கோடி ரூபாய் GSLV ராக்கெட் புஸ்வாணமானது கூட மக்களுக்குப் பெரிதாகத் தெரியவில்லை இப்போது.
ஸ்பெக்ட்ரம், கல்மாடி ஊழல்களில் தும்பை வேண்டுமென்றே விட்டுவிட்டு வாலைப் பிடிக்கும் அல்லது பிடிக்கிறாற்போல் நடிக்கும் வேலையைக் காங்கிரஸும், அதன் தலைவியும் செவ்வனே செய்து கொண்டிருக்கிறார்கள். சி.பி.ஐ. இத்தனை மாதங்களுக்குப் பிறகு 27 இடங்களில் ரெய்டுகள் & 9 மணிநேர ‘கிரில்லிங்’ என்றெல்லாம் பரபரப்பு மூட்டுகிறது. ஆ.ராசாவும் சரி, கல்மாடியும் சரி & அசைந்து கொடுக்காமல் அசத்துவதிலிருந்து இரண்டு விஷயங்கள் பொதுவாகத் தெளிவாகிறது. ஒன்று - இந்த ஊழலை அவர்கள் தனியாகச் செய்யவில்லை. செய்திருக்கவும் முடியாது. இரண்டு & அதனாலேயே அவர்கள் பயப்படாமல் தெளிவாக இருக்கிறார்கள். இந்த விசாரணை எங்கு எப்படி முடியும் என்று அவர்களுக்குத் தெரிந்திருப்பதால் வரும் தைரியம்.

அது சரி & இந்த கண்துடைப்பு விசாரணை சர்க்கஸின் நோக்கம் என்ன? இறுதி முடிவு என்ன? எதிர்க்கட்சிகளின் நிலை என்ன? நோக்கம் & மக்கள் காதில் பூ சுற்றுவது (காகிதப் பூதான் அதுவும் & மல்லிகை
கிலோ ஆயிரம் ரூபாய் விற்கிறது!) இறுதி முடிவாக சட்ட ரீதியாக ஒன்றிரண்டு அதிகாரிகளைக் காவு கொடுப்பதைவிடப் பெரிதாக எதுவும் நடந்துவிடப் போவதில்லை. ஆக, ஏதாவது பயன் அல்லது முடிவு என்றால் அது அரசியல் ரீதியாகத்தான் இருக்க முடியும். எதிர்க்கட்சிகள் அதுவும் குறிப்பாக பி.ஜே.பி.யைப் பொறுத்தவரை வெறும் வாயில் மெல்லக் கிடைத்
த அவலாகக் கருதி நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை என்று பிடிவாதம் பிடித்தாலும், நீரா ராடியாவுக்கும் பி.ஜே.பி. தலைவர்களுக்கு மிடையே கூட தொடர்பும், டீலிங்கும் இருந்தது என்ற காங்கிரஸ் குற்றச்சாட்டு எதிர்க்கட்சிகளின் வேகத்துக்கு முளைத்த ஸ்பீட்-பிரேக்கர்.

பட்ஜெட் தொடரைப் புறக்கணிப்பது எதிர்க்கட்சிகளின் பெயருக்கே களங்கமாக முடிய வாய்ப்பிருப்பதால் ஸ்பெக்ட்ரம் புயல் பிப்ரவரிக்குப் பிறகு தேய்ந்து, ஓய ஆரம்பிக்கும் என்று எதிர்பார்க்கலாம். சரி... அரசியல் ரீதியாக ஸ்பெக்ட்ரம் என்ன விளைவுகளை ஏற்படுத்தும்? காங்கிரஸைப் பொறுத்தவரை இது ஏதோ ஆ.ராசா & தி.மு.க. தொடர்பான ஊழல்; மத்திய அரசும் பிரதமர் மன்மோகன் சிங்கும் வாயில் விரல் வைத்தால் கடிக்கத் தெரியாத அப்பாவிகள் என்பது போல் ஒரு நாடகம் போட்டு வருகிறார்கள். காலில் காங்கிரின் வந்துவிட்டால் கால்வரையில் வெட்டிவிடுவதுதான் சாமர்த்தியம் என்ற ரீதியில் தி.மு.க.வை வெட்டிவிடப் பார்க்-கிறார்கள். திரிணாமுல் மம்தாவும் அவ்வப்போது முரண்டு பிடிப்பதால் இந்த விவாகரத்தை மிகவும் நாசூக்காக காங்கிரஸ் கையாள்கிறது. இந்த நாடகத்தின் ஒரு காட்சிதான் ராகுலின் சமீபத்திய தமிழ்நாடுசுற்றுப்பயணமும் அப்போது நிகழ்ந்த நிகழ்வுகளும். மக்கள் விருப்பம் ஒன்றேதான் தங்களுக்கு முக்கியம் என்று காட்டிக்கொள்கிறது காங்கிரஸ். அ.தி.மு.க.வைப் பொறுத்தவரையில் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கும் வசதி. பந்து பட்டால் சிக்ஸர், படாவிட்டால் பாதகமில்லை என்ற நிலைப்பாடு. சட்டமன்றத் தேர்தலுக்கு ஸ்பெக்ட்ரம் ஊழல் ஒன்றே பிரதானப் பிரசார ஆயுதமாகக் கொள்ளும் வாய்ப்பு. காங்கிரஸ், அ.தி.மு.க.வுடன் சேர்ந்தாலும் சரி, மூன்றாவது அணியானாலும் சரி & தி.மு.க.வைக் கை கழுவ முடிவு செய்துவிட்டதோ என்றே தோன்றுகிறது.


இப்போது தி.மு.க. நிலைக்கு வருவோம். இப்படிப்பட்ட ஒரு மெகா ஊழல், ஒரு கட்சியின் தலையெழுத்தை நிர்ணயிக்குமளவு வந்துவிட்ட பின் என்ன செய்திருக்க வேண்டும்? ஒன்று & இந்த ஊழலில் காங்கிரஸின் பங்கு என்ன என்பதை மக்களுக்கு வெட்ட வெளிச்சமாக்கி இருக்க வேண்டும். அப்பட்டமாக அப்படிச் செய்தால் ஊழல் நடந்ததை ஏதோவொரு வகையில் ஒத்துக்கொள்வது போலாகிவிடும் & உண்மை. ஆனால், இரண்டு மிகப்பெரிய டி.வி. சானல்களை வைத்துக்கொண்டு காங்கிரஸுக்கு எதிராக ஒரு நிலைப்பாட்டை மக்கள் மனதில் கொண்டு வருவது தி.மு.க.வினருக்கு கஷ்டமில்லை. அவர்கள் நினைத்து மிகப் பிரபலமான ஒரு சாமியாரையே ஒரே நாளில் சந்திக்கு கொண்டு வர முடிந்ததே? ஆனால், கலைஞரால் அப்படி முடிவெடுக்க முடியாததற்குக் காரணம் ஆ.ராசா விஷயத்தில் அவர் குடும்பத்திற்குள்ளேயே குழப்படிகள். ஆழ்வார்பேட்டையின் அதிகாரத்தை இந்த சாக்கில் ஒரேடியாக அழித்துவிட வேண்டும் என்று உள்ளுக்குள்ளேயே சில வியூகங்கள் நடப்பது தெரிகிறது.


சரி & இந்த நிலைப்பாடு சரிப்படவில்லை என்றால் ஆ.ராசாவை விலக்கி வைத்து (அல்லது விலக்கினாற்-போல் நடித்து) கட்சியைக் காப்பாற்ற முனைந்திருக்கலாம். ஓரளவாவது கலைஞரை மக்கள் நம்பியிருப்பார்கள். 13 ஆண்டுகாலம் ஆட்சியில் இல்லாதபோதும், தி.மு.க. என்ற மாபெரும் இயக்கத்தை மடிந்துவிடாமல் காப்பாற்றிய அரசியல் சாணக்கியரான கலைஞர், ஒரு சாதாரண நிருபர் கூட்டத்தில் நிதானம் தடுமாறிப் பேசும் நிலை வந்தது எதனால்? அவரே எழுதிய மனோகரா நாடகத்து வசந்தசேனைதான் ஞாபகத்திற்கு வருகிறது. ஒரு வசந்தசேனைக்காக வாழ்நாள் பூராவும் வளர்த்த இயக்கத்தை அழியவிடப் போகிறாரா? வசந்தசேனையால் அரண்மனையும் அரசுமே இடிந்து விழுந்த கதையை வீரத்துடன் எழுதிய கலைஞருக்கே அந்தக் கதையின் நீதி புரியாமல் போனது பரிதாபம்.

பாசம் அவரது நிதானத்தையும் சாதுரியத்தையும் மறைக்கிறது. நேரடியான பாசத்தைவிட நாலுபக்கமும் பாசவலையில் சிக்கித் தவிக்கும் இயலாமை அவருடைய குழப்பத்தை உச்ச நிலைக்குக் கொண்டுபோய்விட்டது. இந்த சமயத்திலும் அவர் ஆ.ராசாவைக் காப்பாற்ற கட்சியை முடுக்கிவிடுவது & பலிகொடுக்கிறோம் என்று தெரிந்தே படைவீரர்களை மரணத்தின் வாயிலுக்கு படைத்தலைவன் அனுப்புவது போன்றதுதான்.

இதுவும் ஒருவகையில் சுயநலம் & குடும்பநலம் கலந்த கோழைத்தனம். ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ஊழல் நடக்கவில்லை என்ற வாதம் கேலிக்குரியது. அப்படியென்றால் ஏதோ முப்பதாயிரம் & நாற்பதாயிரம் கோடி ஊழலை ஏன்
இவ்வளவு பெரிதாகச் சொல்கிறீர்கள்? என்று கேட்பதாக மக்களே புரிந்துகொள்கிறார்கள். தலைவன் முடிவெடுக்கத் தடுமாறும்போது அல்லது தலைவனின் முடிவு தடுமாற்றமாய் இருக்கும்போது உப தலைவர்களுக்கென்று சில கடமைகள் இருக்கின்றன.

தலைவனைத் தற்காலிகமாகவோ, வயது கருதி நிரந்தரமாகவோ ஓய்வு பெறச் செய்துவிட்டு, தலைமைப் பொறுப்பை உப தலைவர்கள் கையில் எடுக்க வேண்டும். கலைஞர் குடும்பம் வேண்டுமானால் தி.மு.க. என்ற இயக்கத்தால் வளர்ந்திருக்கலாம். தி.மு.க. என்ற இயக்கம் வளர்ந்தது கலைஞர் குடும்பத்தினால் மட்டுமல்ல, எண்ணற்ற பல தலைவர்களினாலும், கோடிக்கணக்கான கடைநிலைத் தொண்டர்களின் உழைப்பினாலும். அந்த உழைப்பும் சரித்திரமும் வீண் போகாமலிருக்க வேண்டுமானால்... இந்தத் தேர்தலுக்குப் பின்னும் தி.மு.க. என்ற இயக்கம் தொடர்ந்து அரசியல் வானில் மின்ன வேண்டுமென்றால்... ஸ்டாலின் & அழகிரி என்ற இரண்டு உப தலைவர்களும் தங்கள் கசப்புகளை மறந்து, துறந்து, கைகோர்த்து தலைமை ஏற்று ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் கட்சிக்கு சாதகமான நிலைப்பாட்டை மேற்கொள்ள வேண்டும். இந்தத் தேர்தலில் தி.மு.க. வெற்றி பெறலாம் & பெறாமல் போகலாம். ஆனால், இப்போது இவர்கள் எடுக்கும் நடவடிக்கை காலா காலத்திற்கும் தி.மு.க. என்ற இயக்கத்தைக் காப்பாற்றும். தகப்பன் சாமிகளாக மாறி, இதைச் செய்வார்களா பார்ப்போம்!

http://www.tamiltodaynow.in/2011/01/21010.html

ஊழலில் பொதுமக்களுக்கும் பங்கு!

ஒவ்வோர் ஆட்சியிலும் ஒரு பெயரில் ஊழல் என்ற வழக்கு (!) மாறி, இப்போது ஒவ்வோராண்டிலும் ஒரு பெயரில் ஊழல் என்பது பிரபலமாகிவிட்டது. அதேபோல, ஊழலின் உத்திகளும் மாறியிருக்கின்றன. ஏதோவொரு சான்றுக்காக வருவாய் அலுவலகங்களில் ரூ. 50, 100 கொடுப்பதும், பெரிய அளவில் ஏதோவொரு ஆதாயத்துக்காக பெட்டிகளில் லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் கொடுப்பதும் பழைய முறை.

அதன்பிறகு ரொக்கம் தவிர்க்கப்பட்டு, உரியவரின் வீடுகளுக்குத் தேவையான பொருள்களாக (டிவி, குளிர்சாதனப் பெட்டி...) நேரடியாக இறக்கிவிடுவதும், ஆதாயத்தின் அளவுக்கேற்ப வீடு, பண்ணைத் தோட்டம் வாங்கித் தருவதும் அண்மைக்கால முறைகள். இவையெல்லாவற்றையும் நாம் பார்த்திருக்கிறோம்.

இப்போது நேரடியாக ஆதாயம் பெறுவது என்ற ஊழல் இலக்கணம் முற்றிலும் மாறி, பல்வேறு நவீனமான உத்திகளுடன் அது பிரவாகமெடுத்திருக்கிறது. நேரடியாக நடப்பது எல்லாமும் சட்டப்படி நடக்கிறது. அதன்மூலம் பிறருக்குக் கிடைக்கும் ஆதாயத்தில் பங்கு பெற்றுக் கொள்வது அல்லது அந்த ஆதாயம் பெறுபவராகவே "பினாமியில்' மாறிக் கொள்வது என்ற நவீனம் ஊழலில் ஊற்றெடுத்திருக்கிறது.

இந்தப் பரிணாம வளர்ச்சி இன்னும் வளருமா? என்ற கேள்வி அச்சம் தொடர்பானது. ஏன் வளர்ந்து கொண்டே இருக்கிறது? என்ற கேள்வி ஆய்வு தொடர்பானது. இந்த இரண்டையும் பற்றி யாரும் கவலைப்பட்டதே இல்லை. குய்யோமுறையோவென்று கத்துவோமே தவிர, யோசித்ததே கிடையாது. அதுவும்கூட, தொகையைக் கேட்ட ஆச்சரியம்தானே தவிர, வேறெதுவுமாக இருக்க வாய்ப்பில்லை.

பரிணாம வளர்ச்சி இருக்குமா என்ற அச்சத்துக்கு உடனடி பதில், "வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது' என்பதாகத்தான் இருக்கும். ஏனென்று மறுபடியும் ஒரு கேள்வி கேட்டால், "சட்டவிதிமுறைகள் அப்படித்தான் இருக்கின்றன' என்ற "ரெடிமேட்' பதிலையும் நாமே வைத்திருக்கிறோம். அதுவும் உண்மையல்ல.

இந்த ஊழல் உலகத்துடன் ஏதோ ஒருவகையில் நம்மையும் பிணைத்து விட்டிருக்கிறார்கள் என்பதுதான் இதற்குக் காரணம். சிறியதாகவோ, பெரியதாகவோ பொதுமக்களையும் இலகுவாகப் பிணைத்துவிட்டதன் விளைவு, நேரடியாகக் கேள்வி கேட்கும் திராணியை இழந்துவிட்டோம்.

முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசாவிடம்- பொதுவாகவே திமுகவி -னரிடம் - இதுவும் வேண்டாம், ஆளும் தரப்பிலிருந்து எல்லோரும் ஏதோவொரு பெயரில் "லஞ்சம்' பெற்றுக் கொண்டுதானிருக்கிறார்கள். பெறுபவர்களுக்கு வேண்டுமானால் நன்கொடையாகவோ, அன்பளிப்பாகவோ, சலுகையாகவோ... இன்னும் வேறு ஏதோவொரு பெயரிலோ இருக்கலாம்.

"வாயை அடைக்க' என்று வெளிப்படையாகவும் சொல்ல வேண்டாமே. ஆனால், கொடுப்பவர் ஏதோவொரு ஆதாயத்தை மனதில் கொண்டுதான் கொடுக்கிறார். எதிர்க்கட்சி, எதிர்க்கட்சியின் தோழமைக் கட்சிகள், இவர்களுக்கெல்லாம் ஆதரவு தரும்- எதிர்க்கும், எல்லோரையும் எதிர்க்கும் அமைப்பினர், ஊழலுக்கு எதிராகக் கூக்குரலிடுவோர் என சகலரும் வாங்கிக் கொள்கிறார்கள்.

இதோடு நின்றுவிடவில்லை. வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கும் உத்தியைக் கொண்டு அவர்கள் செய்த பாவத்தை-லாபத்தைக் கணிசமான பெரும்கூட்டத்துக்குமே பிரித்துக் கொடுத்துவிடுகிறார்கள். இது வெளிப்படையாக எல்லோருக்கும் தெரிந்தாலும், புரிந்து கொள்ளப்படுவதில்லை.

எடுத்துக்காட்டுக்கு, அலைக்கற்றை விவகாரத்தையே எடுத்துக்கொள்வோம். பல லட்சம் கோடி ரூபாய்கள் அரசுக்கு வருவாய் இழப்பு என்கிறார்கள். அதிலிருந்து சில ஆயிரம் கோடிகள் ராசாவுக்கோ, அவர் மூலமாக திமுகவினருக்கோ, காங்கிரஸ்காரர்களுக்கோ கிடைத்திருக்கலாம்.

தொகை குறைவாகவோ, கூடுதலாகவோ, பங்கு பிரித்ததாகக் கூறப்பட்டதில் விடுபடுதலோ இருந்தால் தயைகூர்ந்து யாரும் வருத்தப்பட வேண்டாம்! எடுத்துக்காட்டுக்குத்தான்.

அலைக்கற்றை விவகாரம் வெளியே தெரிய ஆரம்பித்த 2008-க்குப் பிறகு தமிழ்நாட்டில் இடைத்தேர்தல்கள் நடைபெற்றிருக்கின்றன. அவற்றில் விநியோகம் செய்யப்பட்ட தொகை எங்கிருந்து வந்தது? வாக்குக்குக் கிடைத்த தொகை ரூ. ஆயிரம் என்கிறார்கள், ரூ. 2 ஆயிரம் என்கிறார்கள். மூக்குத்தி என்கிறார்கள். குடம் என்கிறார்கள், வேஷ்டி- சேலை என்கிறார்கள். இன்னும் என்னென்னவோ.

ஆக, கொடுத்திருக்கிறார்கள். இதை திமுகவினரும்கூட, அண்மையில் சென்னையில் தேர்தல் அலுவலர்களைச் சந்தித்துவிட்டு வெளியேவந்து செய்தியாளர்களிடம் பேசியபோது லேசுபாசாக ஒப்புக்கொண்டும் இருக்கிறார்கள்.

அப்படியானால், அலைக்கற்றை விவகாரத்திலிருந்து ஆதாயமாகக் கிடைத்த பணம், பிரித்தளிக்கப்பட்டது என்பதை ஒப்புக் கொள்ளலாம் அல்லவா? அதுதானே உண்மை. கள் விற்ற காசு புளிக்கவா போகிறது என்று விட்டுவிட முடியுமா?

பெரும் தொகையைப் பார்த்து மலைத்துப்போய் சில சொற்களை உதிர்ப்பதுதான் இப்போதைக்கு நாம் வெளிப்படுத்தும் ஆதங்கங்களே தவிர, வேறொன்றுமில்லை. சரி, என்ன செய்யலாம்?

இந்த ஆண்டு இரு தேர்தல்களை தமிழ்நாட்டு மக்கள் சந்திக்கிறார்கள். சட்டப்பேரவைக்கான தேர்தல் முன்னதாகவும், அதைத் தொடர்ந்து உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலும் வரவிருக்கிறது. பேரவைத் தேர்தல்களின் முடிவு இரண்டாவது தேர்தலைக் கேள்விக்குள்ளாக்கவும் செய்யலாம்! இப்போ ஊழலில் பொதுமக்களுக்கும் பங்கு!தைக்கு இரு தேர்தல்கள் வரவிருப்பதாகவே கருதுவோம். பெரிய மாற்றத்தை மக்கள் கொண்டு வரவேண்டும் என்று நினைப்பது அபத்தம் எனக் கடந்த கால வரலாறுகளில் இருந்து புரிந்துகொள்ள வேண்டிய ஒன்று.

இருந்தாலும், ஒரு நப்பாசை. பெரிய மாற்றத்தை எதுவும் ஏற்படுத்த வேண்டாம். குறைந்தபட்சம் பணம் வாங்காமல் விரும்பியோருக்கு வாக்களிக்கும் நேர்மையை வாக்காளப் பெருங்குடி மக்கள் மேற்கொள்வார்களேயானால் அதுவே பெரிய வெற்றியாகக் கருதலாம்.

www.dinamani.com

Thursday, January 6, 2011

முடிக்கப்பட வேண்டிய ஆட்சி இல்லாவிடில் நாடு முடிந்துபோகும்!

திராவிட கழகத்தின் சாதனைகள்

திராவிட கழகத்தின் சாதனைகள்

திராவிட கழகத்தின் சாதனைகள் பற்றி ம.தி.மு.க. நட்சத்திரப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத்தின் கருத்து

"தி.மு.க. அரசை வீழ்த்துவதற்கு மக்கள் மன்றத்தில் நாங்கள் வெறிக் கூச்சல் இடவில்லை. பேசத்தான் செய்கிறோம். எங்களுக்குக் கூடும் கூட்டத்தைப் பார்த்து, அவருக்குத்தான் வெறி கிளம்பி இருக்கிறது.

நாங்கள் வீழ்த்த நினைப்பது... கருணாநிதியின் குடும்ப ஆட்சியை. இப்போது நடப்பது ஒரு குடும்பத்தின் ஆட்சி. சம்பத்தின் மகன் ம.தி.மு.க-வில்தான் இருப்பான். தவறு ஏதும் இல்லை. ஆனால், கருணாநிதியின் வயதையத்த பெரியவரை மேலாதிக்கம் செய்து, அதிகாரம் செலுத்தும் விசித்திரம் தி.மு.க-வில் இருந்தால், அதற்கு என்ன அர்த்தம்? கருணாநிதி குடும்பத்தில் பிறந்தவர் என்பதற்காகத் தகுதி இல்லாதவர் மந்திரி ஆக்கப்பட்டால், அது என்ன ஆதிக்கம்? அறம் சார்ந்த அரசியலுக்குச் சம்பந்தம் இல்லாத ஒருவர், தனது இன்னொரு மகனுக்கு இடைஞ்சலாக இருக்கிறார் என்பதற்காக, அவரைச் சமாதானப்படுத்த ஒரு பரந்த அரசாங் கத்தின் பல்லாயிரம் கோடி புழங்கும் துறை தரப்படுமானால், அது குடும்ப அரசியலா... கொள்கை அரசியலா? தனது குடும்பத்தில் யாருக்கு என்ன பதவி, எந்தத் தகுதிக்காகத் தரப்பட்டது என்பதை நேர்மை இருக்குமானால், 'நெஞ்சுக்கு நீதி'யில் கருணாநிதி எழுதட்டும். ஆறு பேர் பவர் சென்டராக இருந்து தமிழ்நாட்டின் பவரைச் சூறையாடுகிறார்களே அதற்காகத்தான் இந்த ஆட்சி வீழ்த்தப்பட வேண்டும்.

நேயர் விருப்பத்தில் கேட்ட பாட்டையே திரும்பத் திரும்பப் போடுவது மாதிரி, முட்டை போட்டேன், டி.வி. கொடுத்தேன், அரிசி கொடுத்தேன், ஆம்புலன்ஸ் விட்டேன் என்று கருணாநிதி தனது சாதனையாகச் சொல்கிறார். இவை எல்லாம் திட்டங்கள்... சாதனைகள் அல்ல. திட்டம் வேறு... சாதனை வேறு. மேற்கு வங்காளத்துக்கும் வங்க தேசத்துக்கும் இருந்த ஃபராக்கி அணை பிரச்னையை, ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த ஜோதிபாசு இன்னொரு நாட்டின் அதிபராக இருந்த ஷேக் ஹசீனாவைச் சந்தித்துப் பேசி, ஒப்பந்தம் ஒன்றைத் தயாரித்து, அதில் நம்முடைய பிரதமர் தேவகவுடாவைக் கையெழுத்துப் போடவைத்தார்.அதுதான் சாதனை.

கேரள மாநில முதலமைச்சர் அச்சுதானந்தனை முல்லைப் பெரியாறுக்காக, கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பாவை காவிரிக்காக இவர் எத்தனை தடவை பார்த்தார். இதுவரை பிரச்னையை முடிக்க முடிந்ததா கருணாநிதியால்? எமர்ஜென்சி வந்தபோது பயப்படாமல் எதிர்த்த கருணாநிதியால், இப்போது ஏன் முடியவில்லை? தமிழ்நாட்டின் எல்லையைத் தாண்டி தன்னுடைய குடும்பத்தினரது சொத்துக்கள் குவிந்துவிட்டன. பார்த்தார், மாநில நலன்கள் அனைத்தையும் காவு கொடுத்துவிட்டார். நூற்றாண்டுகளின் வரப்புகளைக் கடந்ததாக இருந்தால், அது சாதனையாகும். ஆளுக்கு அரைக் கிலோ அல்வா என்று அறிவிக்கப்போவதாகக் கேள்விப்பட்டேன். இதெல்லாம் சாதனையா?

கருணாநிதி ஆட்சியில்தான் அளவு சாப்பாடு 72 ரூபாய் ஆகி இருக்கிறது. ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்குத் தர வேண்டாம். இரண்டு இட்லியை கருணாநிதியால் இலவசமாகத் தர முடியுமா? அறிவிக்கப்பட்ட மின்வெட்டு, அறிவிக்கப்படாத மின் வெட்டு... என்று வார்த்தை ஜாலம் சொல்லி, தமிழ கத்தை இருட்டாக்கியதுதான் மிச்சம். மின்வெட்டு காரணமாக சிறு தொழில்கள் அனைத்துமே முடக்கப் பட்டுவிட்டன. 'கருணாநிதி நடத்தும் மாநாட்டுக்கு சிவத்தம்பி வரலாம், செந்தமிழ்த் தாய் வர மாட்டாள்' என்று எழுதியதற்காகவே பழ.கருப்பையா கையை பட்டப் பகலில் அடியாட்கள் முறுக்கி உடைத்திருக் கிறார்கள். தா.பாண்டியன் காரை உடைக்கிறார்கள், பாரதிராஜா அலுவலகம் தாக்கப்படுகிறது, பல்கலைக் கழகத் துணைவேந்தரை ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. ஒருவர் அடிக்கிறார், சப்-கலெக்டர் ஜனார்த்தனனை மந்திரியின் ஆட்கள் சாதியைச் சொல்லி திட்டி மிரட்டு கிறார்கள், குடியாத்தம் மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ. அனுப வித்த சித்ரவதைகள் எத்தனை, உமாசங்கர் ஐ.ஏ.எஸ் ஸைப் பந்தாடுகிறார்கள், சீமான் எப்போது வெளியே வருவார் என்றே தெரியவில்லை, வைகோ மீது வழக்குகள், என் மீது எல்லா ஊரிலும் வழக்குகள்... இப்படி கருத்துரிமை, பேச்சுரிமை, எழுத்துரிமை எல்லாவற்றையும் காலில் போட்டு மிதித்துவிட்ட இந்த ஆட்சியை எதற்கு வைத்திருக்க வேண்டும்?

தனக்குப் பாராட்டு விழா நடந்தால் போதும் என்று நினைக்கும் முதலமைச்சர், ஏக இந்தியாவில் இவர் ஒருவர்தான். பெரியாரை மேடையில் வைத்துக் கொண்டே ஒருவர், அவரது தியாகத்தைப் புகழ்ந்து பேசினார். 'இவரது பேச்சை இவ்வளவு நேரம் கேட்டதுதான் என்னுடைய தியாகம்' என்று அவர் சொன்னார். நல்ல தலைவர்கள், தங்களை யாராவது புகழ்ந்தால் நாணித் தலை குனிந்தார்கள். ஆனால் இவரோ, சினிமாக் காரர்கள் தனக்கு ஒரு பாராட்டு விழா நடத்த வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு 90 ஏக்கர் நிலத்தைத் தூக்கிக் கொடுக்கிறார். ஆசாட பூபதிகளும் பஃபூன்களும் உட்கார்ந்துகொண்டு அதிகாரத்தில் உள்ளவர் களுக்கு ஆராதனை பாடுவது மன்னர் காலத்தில் மக்கிப்போனவை. அதை மறுபடியும் கருணாநிதி அரங்கேற்றுவது சரித்திர விசித்திரம்!

இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்பேன் என்று முழக்கமிட்டார் கருணாநிதி. 115 பள்ளிகளில் இந்தி வருகிறது என்பதை எதிர்த்து மாணவர் போராடினார்கள். ஆனால், இன்று லட்சக்கணக்கான பள்ளிகளில் ஆங்கிலம் இருக்கிறதே... இது யாருடைய தவறு? தமிழில் படிக்கத் தமிழர்களே தயார் இல்லை என்ற மனோபாவம் உருவானதற்கு கருணாநிதி காரணம் அல்லவா?

கொள்கையைக் காவு கொடுத்து, லட்சியத்தை அடகுவைத்து, நிலத்தையும் கடலையும் வானத்தையும் வளைத்துப்போட்ட பிறகு, இன்னும் என்ன வேண்டுமாம்?

இது முடிக்கப்பட வேண்டிய ஆட்சிதான்... முடியாவிட்டால், நாடு முடிந்துபோகும்!"

நன்றி
ஆ .விகடன் இணையம்

கருணாநிதியின் அரசியல் புரட்டு வாழ்க்கை

திராவிட இயக்கத்துக்கும் காங்கிரசுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. காந்தி வரும் வரை காங்கிரஸ் மேட்டுக்குடிக்காரர்களின் கட்சி. அந்த மேட்டுக்குடி காங்கிரஸ்காரர்கள் பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் மனுப் போட்டுக்கொண்டி -ருந்தார்கள். பெரியார் வரும் வரை திராவிட இயக்கத்தினரும் அப்படித்தான். காந்தி காங்கிரசுக்கு எப்படி கடவுளோ அப்படித்தான் பெரியாரும் திராவிட இயக்கத்துக்கு. நேரு தனிப்பட்ட முறையில் மிஸ்டர் க்ளீன் ஆக இருந்தா -லும் கட்சியின் பல கோளாறுகளை கண்டுகொள்ளவில்லை. அவருடைய கரிஷ்மா அனைவரையும் கவர்ந்தது. அண்ணாவும் அப்படித்தான். இந்திரா காந்தி காரியம் ஆனதும் பெரியவர்களை கழற்றி விடுவது (காமராஜ்), லஞ்சம், ஊழல், வாரிசு அரசியல் எல்லாவற்றையும் காங்கிரஸில் ஒரு தவிர்க்க முடியாத விஷயம் ஆக்கினார். கலைஞரும் அப்படித்தான். இந்திராவுக்கு மொரார்ஜி, கலைஞருக்கு நாவலர். இந்திராவுக்கு காமராஜ், கலைஞருக்கு ராஜாஜி. இந்திராவுக்கு சஞ்சய் காந்தி, கலைஞருக்கு அழகிரி. ராஜீவ் போல ஸ்டாலின்.

அவரது கொள்கைகளை அவர் கைவிட்டு வெகு நாட்களாகிவிட்டன. அவரது கூர்மையான மூளை இப்போது பதவி, குடும்பம் ஆகியவற்றை மட்டுமே முன் வைத்து செயல்படுகிறது. அவர் தலைவர் இல்லை, அரசியல்வாதி. இந்திராவை மறுபடி பார்ப்பது போல இருக்கிறது.

ஆனால் அவர் இந்திரா போல பணக்கார, அரசியல் பாரம்பரியம் உள்ள குடும்பத்தில் பிறந்தவர் அல்ல. கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவர். சிறு வயதிலேயே பொது வாழ்வுக்கு வந்தவர். ஒரு காலத்தில் லட்சியவாதியாக இருந்திருக்க வேண்டும். சினிமா என்று ஒன்று இல்லாவிட்டால் ஏழையாக -த்தான் இருந்திருப்பார். தி.மு.க. பதவிக்கு வருவதற்கு முன்பே சில பல தகிடுதத்தம் செய்தவர் என்று கண்ணதாசன் தன் மனவாசம், வனவாசம் போன்ற புத்தகங்களில் குறிப்பிடுகிறார். ஆனால் அண்ணா அவரது பணம் திரட்டும் திறமை, தேர்தலை சமாளிக்கும் திறமை ஆகியவற்றால் அவரை கட்சியின் இன்றியமையாத தலைவர் என்று கருதினாராம். காந்திக்கும் இதற்கெல்லாம் ஒரு படேல் தேவைப்பட்டார் என்று ஞாபகம் இருக்கட்டும்.

பதவிக்கு வருவதற்கு முன் அவர் அரசியல் பங்களிப்பை பற்றி எனக்கு ரொம்ப தெரியாது. தி.மு.க.வின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்திருக்கிறார். ஈ.வே.கி. சம்பத், கண்ணதாசன் போன்றவர்களுக்கு இவரோடு ஏற்பட்ட மனஸ்தாபம், அண்ணா இவருக்கு கொடுத்த முக்கியத்துவம், ஆகியவற்றால்தான் கட்சியை விட்டு போனார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். கட்சியில் அண்ணா, நாவலருக்கு அடுத்த மூன்றாவது இடத்தில் இருந்தார் போல தெரிகிறது.

1965இன் ஹிந்தி எதிர்ப்பு போராட்டம், அரிசி தட்டுப்பாடு, காமராஜ் மத்திய அரசியலில் மூழ்கியது, ராஜாஜி, ம.பொ.சி. போன்ற அப்பழுக்கற்ற உழைப்பாளர்களின் கூட்டணி, சுடப்பட்ட எம்ஜிஆர் மீது எழுந்த சிம்பதி, எம்ஜிஆரின் திரை உலக இமேஜ் போன்ற பல காரணங்கள் தி.மு.கவை ஆட்சியில் அமர்த்தின. அண்ணா இறந்தவுடன் எல்லாரும் நாவலர்தான் முதலமைச்சராக வருவார் என்று எதிர்பார்த்தார்கள். எம்ஜிஆர் ஆதரவுடன் அவரை கவிழ்த்துவிட்டு முதலமைச்சரானார். நாவலர் கட்சி பொது செயலாளர் பதவிக்கு போட்டி இட்ட போது அது வரை பெரியாருக்காக காலியாகவே வைக்கப்பட்டிருந்த தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்து நாவலரை மீண்டும் கவிழ்த்தார். 71இல் பங்களாதேஷ் போரினால் இந்திராவுக்கு ஏற்பட்டிருந்த ஆதரவு, எம்ஜியார், அண்ணாவின் மறைவு ஆகியவற்றின் மீது சவாரி செய்து காமராஜை தோற்கடித்தார்.

அது வரை அருமையாக கணக்கு போட்ட மூளை எம்ஜிஆர் விஷயத்தில் சொதப்பி விட்டது. அவருக்கு ஒரு மந்திரி பதவி கொடுத்திருக்கலாம். குறைந்த பட்சம் மு.க. முத்துவை வைத்து படம் எடுக்காமல் இருந்திருக்கலாம். எம்ஜிஆர் தன் பாணியிலே ஒரு இளைஞன் கிழவனாகிக்கொண்டிருக்கும் தனக்கு போட்டியாக உருவாவதை பார்த்தார். மந்திரி பதவியும் கிடையாது என்பது உறுதியாகிவிட்டது. நடிகனுக்கும் நாடாளத் தெரியும் என்று சவால் விட்டு கட்சியை விட்டு வெளியேறினார். கலைஞர் தனக்கு ஐந்து வருஷம் பதவி இருக்கிறது, அதற்குள் எம்ஜிஆரை அடக்கி விடலாம் என்று நினைத்திருக்க வேண்டும். பெரிய தப்பு கணக்கு. (சின்ன தப்பு கணக்கு சோவை அடக்கி விடலாம் என்று நினைத்தது)

மிசா சமயத்தில் ஜேபி, மொரார்ஜி போன்றவர்களே ஜெயிலுக்கு போக, அவர் ஜெயிலுக்கு போகாது ஆச்சரியம்தான். ஸ்டாலின் அடிபட்டார், சிட்டிபாபு செத்தே போனார். பலர் மன்னிப்பு கேட்டு தி.மு.கவை விட்டுப் போனார்கள். ஆனாலும் கட்சி இருந்தது. கலைஞரின் தமிழுக்கும் தலைமைக்கும் பின்னால் ஒரு கூட்டம் இருந்தது. என்ன, எம்ஜிஆருக்கு பின்னால் இருந்த கூட்டம் இதை விட பெரியதாக இருந்ததால் கலைஞர் 77இல் தோற்கடிக்கப்பட்டார்.

ஆனால் 77இல் நீங்கள் தமிழ் நாட்டில் இருந்திருந்தால் அதிர்ந்திருப்பீர்கள். மஸ்டர் ரோல் ஊழல், சர்க்கரை ஊழல், அந்த ஊழல், இந்த ஊழல் என்று வெளி வந்துகொண்டே இருந்தது. மஸ்டர் ரோல் ஊழலில் ஈடுபட்ட ஒரு சென்னை கார்ப்பரேஷன் குமாஸ்தா வாக்குறுதி என்று ஒரு சினிமா படமே தயாரித்தார். தினத்தந்தியில் பொழுது விடிந்து பொழுது போனால் இதே நியூஸ்தான். லஞ்சம் அதற்கு முன்பும் இருக்கத்தான் செய்தது. ஆனால் அதை மறைத்து, பயந்துகொண்டே வாங்கினார்கள். அதை சாதரண விஷயமாக்கியது கலைஞர்தான். அவர் வழியில் பின்னால் எம்ஜிஆரும் போனார். கலைஞர் எழுபதுகளில் எட்டடி பாய்ந்தால் எம்ஜிஆர் பின்னாளில் பதினாறடி பாய்ந்தார்; ஜெவும் சசிகலாவும் எண்பதடி பாய்ந்தார்கள். கலைஞர் நமக்கு தெரியாமல் போய்விட்டதே என்று அவரும் இப்போதெல்லாம் நூறடி பாய்கிறார்.

அவர் 80இல் தோற்றது ஒரு சோகக் கதை. பேசாமல் இருந்திருக்கலாம். இந்திராவிடம் கெஞ்சி எம்ஜிஆர் அரசை டிஸ்மிஸ் செய்ய வைத்தார். அனுதாப அலை அடித்து எம்ஜிஆர் திரும்ப வந்துவிட்டார். காங்கிரஸின் உள்குத்து வேலையால் ஹண்டே அவரை கிட்டத்தட்ட தோற்கடித்தே விட்டார் (ஆயிரமோ என்னவோதான் ஓட்டு வித்தியாசம்) மனம் குளிர்ந்து எம்ஜிஆர் ஹண்டேவுக்கு மந்திரி பதவி எல்லாம் கொடுத்தார். அப்போதுதான் எம்ஜிஆரும் கலைஞரும் சேர்ந்து அரசியலை சும்மா oneupmanship ஆக ஆக்கினார்கள். கலைஞருக்கு எம்ஜிஆரை embarass செய்ய வேண்டும், அது ஒன்றுதான் வாழ்க்கையின் லட்சியம் போல இருந்தது. எம்ஜிஆருக்கு கலைஞரை வார வேண்டும் அது ஒன்றுதான் லட்சியம். கலைஞரின் சட்ட சபை ஆயதங்கள் ரஹ்மான் கான், துரைமுருகன், சுப்பு. அவர்கள் மூவரும் எம்ஜிஆர் கண்ணில் விரலை விட்டு ஆட்டினார்கள். எம்ஜிஆரும் அவர்களை ரசித்துக்கொண்டே காளிமுத்து (கருவாடு மீனாகாது போன்ற தத்துவங்களை சொன்னவர்) போன்றவர்களை வைத்து ஏதோ சமாளித்துக்கொண்டிருந்தார். (துரைமுருகனை படிக்க வைத்தது எம்ஜிஆர்தான். துரைமுருகனிடம் அவர் எம்ஜிஆரை தீவிரமாக தாக்கிய காலத்தில் இதை பற்றி கேட்டார்களாம். அவர் எம்ஜிஆர் தெய்வம், கலைஞர்தான் தலைவன் என்று சொன்னாராம்.) எம்ஜிஆரை காக்கா பிடிக்க வேண்டும் என்றால் கலைஞரை மட்டம் தட்ட வேண்டும் அவ்வளவுதான் – கலைஞர் தெலுங்கர் என்று கூட சொல்லிப் பார்த்தார்கள். இந்த கலாட்டாவில் உழவர் போராட்டம் (உழவர் தலைவர் நாராயண சாமி நாயுடு கடனை திருப்பி கொடுக்கக் கூடாது என்ற உறுதியான கொள்கை உடையவர்), இட ஒதுக்கீடு கலாட்டா, திருந்செந்தூர் கொலை, பால் கமிஷன் அறிக்கை, என்று பல விஷயங்கள் நடந்தன.

84இலோ கேலிக்கூத்து. எம்ஜிஆர் படத்தை போட்டு ஓட்டு கேட்டுப் பார்த்தார். எம்ஜிஆரின் உடல் நிலைக்காக அடித்த அனுதாப அலையில் கலைஞர் ஏறக்குறைய காணாமலே போய்விட்டார். அவரும் உடனே ஏன் சூடு சுரணை இல்லாத தமிழனே, நீ என்னை தண்ணியிலே போட்டால் நான் உனக்கு தோணியாவேன், கரையில் போட்டால் ஏணியாவேன், வயலுக்கு போட்டால் சாணியாவேன் என்று தன் பாணியிலே அறிக்கை விட்டுக்கொண்டு ஓடு மீன் ஓட உறு மீன் வரும் வரை காத்துக்கொண்டு இருந்தார்.

எம்ஜிஆர் மறைந்து, ஜானகி-ஜெ சண்டையில் அவர் 89இல் ஆட்சிக்கு வந்தார். அவரது ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்பட்டது அநியாயம்.

ஆனால் 89இல் மாறன் மத்திய அமைச்சர் ஆனது தி.மு.கவுக்கு ஒரு inflection point. ஒரு லோக் சபா எம்.பி. கூட இல்லாவிட்டாலும் வி.பி. சிங் தி.மு.க.விலிருந்து ஒரு அமைச்சர் வேண்டும் என்று சொன்னார். அன்றிலிருந்து கலைஞருக்கு மத்திய அரசு பற்றி ஒரு கணக்கு மனதில் ஓட ஆரம்பித்தது. திராவிட நாடு எல்லாம் அப்போதுதான் உண்மையிலேயே போயே போச்! அவர் அப்போதுதான் முழுமையான இந்தியர் ஆனார்.

91இல் ராஜீவ் சிம்பதி அலையில் ஜெ ஆட்சிக்கு வந்தார். எழுபதுகளில் கலைஞர் ஆட்சி எப்படி தமிழ் நாட்டின் valuesஐ மாற்றியதோ அப்படித்தான் இந்த ஆட்சியும். இப்படியும் பதவி துஷ்ப்ரயோகம் செய்ய முடியுமா என்று அசந்து போனோம்.

சசிகலா கண்ணில் கண்டதை எல்லாம் வாங்கித் தள்ளிக் கொண்டிருந்தார். ஜெ யாரோ முன் பின் தெரியாதவர்கள் எனக்கு பல லட்சம் டாலர் அன்பளிப்பு தந்தார் என்று வெளிப்படையாக ஒத்துக்கொண்டார். வளர்ப்பு மகன் திருமணம் மாதிரி ராமன்-சீதா கல்யாணம் கூட நடந்திருக்காது. ஜால்ராக்கள் கொழித்தனர். ஜெவுக்கு எதிராக ஒரு கடுமையான எதிர்ப்பு அலை வீசியது. சோ ராமசாமியே ஜெவுக்கு கலைஞர் பெட்டர் என்று சொன்னார். மூப்பனாருடன் கூட்டணி, மூப்பனாருக்கு பெருந்தன்மையாக அதிக அளவு எம்.பி. சீட்கள், சன் டிவி, ரஜினிகாந்த், சோ ஆகியோரின் வெளிப்படையான ஆதரவு – 96இல் அமோகமாக ஜெயித்தார்.

அவர் முயன்றிருந்தால் தேவே கவுடா, குஜ்ரால் ஆகியோர் இடத்தில் மூப்பனார் அமர்ந்திருக்க முடியும். பொறாமை, ஈகோ. வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவிக்காவிட்டாலும் உள்குத்து வேலை நடத்தினார். ஜென்டில்மன் மூப்பனாரும் பேசவில்லை.

96இல் நல்லபடியாக ஆட்சி நடத்தினார். அவரது ஆட்சிக் காலங்களிலேயே சிறந்தது அதுதான். க்ரிடிக் சோ கூட அதை ஒத்துக்கொண்டார். சோவே எல்லா விஷயங்களிலும் நல்ல ஆட்சிதான், ஆனால் புலிகள் மீது ஒரு சாஃப்ட் கார்னர் இருக்கிறது, அதனால் ஜெவுக்கு ஓட்டு போடுங்கள் என்று சொன்னார். ஆனால் கட்சி உளுத்துப்போய்விட்டது. சொந்த பலத்தில் ஆட்சிக்கு வர முடியாது. கூட்டணி சரியாக அமையவில்லை. மக்களும் ஆட்சியில் காந்தியே இருந்தாலும் தோற்கடிப்பது என்று ஒரு வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள ஆரம்பித்துவிட்டார்கள்.

மீண்டும் ஜெ. நள்ளிரவில் கைது. (அதை எப்படிய்யா சரியாக விடியோ எடுத்தார்கள்?) மாறன் வேட்டி அவிழ ஜீப் பின்னால் ஓடியது மறக்க முடியாத காட்சி. ஒரு மத்திய அமைச்சருக்கே அவ்வளவுதான் மரியாதை என்றால் ஜெவின் திமிரை என்ன சொல்வது? நாற்பது எம்.பி. தொகுதியும் அவருக்கே. அன்றிலிருந்து அவர்தான் தமிழக காங்கிரஸ் தலைவர். தங்கபாலு, கிருஷ்ணசாமி எல்லாம் சும்மா லுலுலாயி.

2006 – அருமையான தேர்தல் வியூகம். காங்கிரஸ், பா.ம.கவுடன் கூட்டணி. இலவச டிவி அறிவிப்பு. மைனாரிட்டி அரசுதான், ஆனால் மெஜாரிட்டி அரசுக்கு இதற்கும் ஒரு வித்தியாசமும் இல்லை. இலவசங்கள் சரியான விஷயம் இல்லைதான் – ஆனால் சொன்னதை செய்தார், சொன்னதைத்தான் செய்தார். இலவச டிவி கொடுத்தார், அரிசி சீப்பாக கிடைக்கிறது எல்லாம் சரிதான். ஆனால் குடும்பத் தகராறை கட்டுக்குள் வைக்க முடியவில்லை. அழகிரி பக்கம் சாய்ந்தார், தயாநிதி மாறன் வெளியேற்றப்பட்டார், கனிமொழி அரசியலுக்கு வந்தார், பிறகு கண்கள் பனித்தன, இதயம் இனித்தது, ஸ்பெக்ட்ரம் ஊழல் முடிந்தும் விட்டது. இதற்கு ஏனையா அவர்களை வெளியே அனுப்பினீர்கள்? அழகிரியால் கெட்ட பேர்தான். (தா. கிருஷ்ணன் கொலை செய்யப்பட்டதிலிருந்தே அப்படித்தான் – தா.கி. இறந்ததும் அதற்கும் சமீபத்தில் 19xxஇல் யாரோ கொல்லப்பட்டார் என்று காட்டியது மிக மோசமான விஷயம்)

இன்றைக்கு அவரை பார்த்தால் பதவிக்காக இளவரசர்கள் அடித்துக்கொள்ள, ஒன்றும் செய்ய முடியாமல் உட்கார்ந்திருந்த மொகலாய ராஜாக்கள், திருதராஷ்டிரன் போலத்தான் இருக்கிறது. எவ்வளவு சீக்கிரம் ரிடையர் ஆகிறாரோ, அவ்வளவுக்கவ்வளவு நல்லது.

கட்சி உளுத்துப்போய்விட்டது. தி.மு.கவில் இன்று யார் சேருவார்கள்? அப்பா தி.மு.க.வில் பிரமுகராக இருந்தால் பிள்ளை சேருகிறான், அவ்வளவுதான். கலைஞரும் குறுநில மன்னர்களின் வாரிசுகளை அங்கீகரிக்கிறார். அழகிரி, ஐ. பெரியசாமி, வீரபாண்டி ஆறுமுகம், பொங்கலூர் பழனிச்சாமி மாதிரி பலர் அவர்களது வாரிசுகளை முன் வைத்துவிட்டார்கள். ஆனால் எந்த இளைஞன் வந்து இந்த கட்சியில் சேருவான்? அவன் அப்பா பிரமுகராக இல்லாவிட்டால் அவனுக்கு அங்கீகாரம் கிடைப்பது கஷ்டம். (நாகப்பட்டினம் ரூசோ கட்சிக்காக உழைத்தார் – அவருக்கு டிக்கெட் கிடைக்கவில்லை, செத்தே போனார். அவர் மனைவி சுயேச்சையாக நின்று கணிசமான ஓட்டு வாங்கினார்)

கலைஞரின் தமிழுக்காக ஐம்பதுகளிலும், அறுபதுகளிலும், ஏன் எழுபதுகளிலும் கூட பலர் வந்து சேர்ந்தார்கள். இன்று ஸ்டாலினுக்காக யாரும் வரப் போவதில்லை. அவருக்கு பிறகு கட்சி இன்னும் மோசமாகத்தான் ஆகப்போகிறது. அவுரங்கசீப் ஞாபகம்தான் வருகிறது. அவுரங்கசீப்பின் சாம்ராஜ்யம் அளவில் மிகப் பெரியது. ஆனால் உள்ளே சிவாஜியை சமாளிக்க முடியவில்லை, அவருக்கு பிறகு சாம்ராஜ்யமும் உடைந்து சுக்கல் சுக்கலாக போய்விட்டது. தி.மு.கவும் அப்படித்தான் ஆகப்போகிறது. பெருங்காய டப்பா மாதிரி கொஞ்ச நாள் வாசனையை வைத்து ஓட்டுவார்கள்.

பல தகுதிகள் இருந்தாலும், கட்சியை கட்டி காப்பாற்றி இருந்தாலும், அவரை அரசியலில் வெற்றி அடைந்திருக்கிறார் என்று சொல்ல முடியவில்லை. தோல்வி என்றும் சொல்ல முடியவில்லை. ஆதங்கம்தான் மிஞ்சுகிறது. எவ்வளவோ செய்திருக்கலாம்.

http://koottanchoru.wordpress.com/2009/02/14/

பிரதமர் பதில் சொல்வாரா..?

கேள்விக்கு என்ன பதில்?

விலைவாசி கண்ணைக் கட்டும் இந்நேரத்தில் பிரதமருக்கு பாரதிய ஜனதா கட்சி பின் வரும் பத்து கேள்விகளை எழுப்பியுள்ளது.

1. பிரதமர் மன்மோகன்சிங் விலைவாசி உயர்வு ஏன் என்று தெரிந்திருந்தும் நாட்டு மக்களுக்கு அதை தெரியப்படுத்த மறுப்பது ஏன்?

2. இந்தியாவில் மட்டும்தான் ஒட்டுமொத்த பணவீக்க வீதம் 11 சதவீதமாக உள்ளது. உணவு பண்டங்களுக்கான பணவீக்க விகித அளவு மட்டும் கடந்த 20 வாரங்களில் 17 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாகவே இருக்கிறதே தவிர இறங்கியபாடில்லை இதற்கு காரணம்தான் என்ன? இந்த விலை உயர்வை தடுக்க மத்திய அசு எடுத்த நடவடிக்கைகள்தான் என்ன?

3. உலக அளவில் பணவீக்க விகிதம் 1 சதவீதம் முதல் 2 சதவீதமாகவே உள்ளது. இந்தியாவில் மட்டும் பண வீக்கம் 11 சதவீதமாக இருப்பதன் மர்மம் என்ன?

4. உலக அளவில் ஒப்பிடும்போது சர்க்கரை விலை 100 சதவீதம் உயர்வாக உள்ளது. கோதுமை விலை 80 சதவீதம் அதிகரித்துள்ளது. உலகச் சந்தையை விட இந்தியாவில் உணவு பண்டங்களின் விலை 80 சதவீதத்துக்கு மேல் உயர்வாக உள்ளது என்பதை ஒப்புக் கொள்கிறீர்களா?

5. இந்தியாவின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி 7.2 சதவீதம் சீனாவில் 9 சதவீதம், ஆனால் சீனாவில் பண வீக்க விகிதம் 2 சதவீதம்தான். இந்தியாவில் மட்டும் பண வீக்கம் 11 சதவீதமாக உயர்ந்துள்ளது ஏன்?

6. 48 லட்சம் டன் சர்க்கரையை கிலோ ரூ.12.50 விலைக்கு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தீர்கள். பின்னர் அதையே வெளிநாடுகளில் இருந்து கிலோவுக்கு ரூ.22 முதல் ரூ.32 வரை கொடுத்து இறக்குமதி செய்தீர்கள். இந்த லாபகரமான நடவடிக்கை ஏன் என்று நாட்டு மக்களுக்கு விளக்க தயாரா? சர்க்கரைக்கு தட்டுப்பாடு ஏற்படாமல் தடுக்கவும் விலை உயராமல் கட்டுப்படுத்தவும் கையிருப்பை ஏற்படுத்த வேண்டும் என்று நினைக்காமல் ஆன் லைன் வாணிபத்துக்கு துணை போனது ஏன்?.

7. அரசின் தானிய கிடங்குகளில் தானியங்களை வைக்க இடமில்லாமல் நிரம்பி வழிகின்றன. பொது விநியோகத்துக்கு எடுத்து வழங்காமல் அரிசி, கோதுமை, பருப்பு உள்ளிட்டவை புளுத்து போய் உள்ளது. இந்த நிலையில் நாட்டின் சரிபாதி மக்கள் இரவில் காலி வயிறோடுதான் தூங்க செல்கிறார்கள் என்பது இந்த அரசுக்கு தெரியுமா?

9. 2005 ல் வறுமை கோட்டுக்கு கீழ் வாழ்ந்தவர்களின் எண்ணிக்கை 31 கோடி என்று மத்திய திட்டக்குழு அறிவித்தது. ஆனால் 2009 டிசம்பரில் இந்த எண்ணிக்கை 42 கோடியாக உயர்ந்துள்ளது என்கிறது டெண்டுல்கர் குழு. வறுமையை ஒழித்து விட்டோம் என்று இன்னமும் நீங்கள் எப்படி கூறுகிறீர்கள்?

10. நாட்டின் ஏழைகளில் 51 சதவீதம் பேருக்கு ரேஷன் அட்டையே கிடையாது. அவர்களுக்கு அரிசி, கோதுமை, பருப்பு, உள்ளிட்ட அத்தியாவசிய பண்டங்கள் தரப்படுதே இல்லை என்று மத்திய அரசு நியமித்த சக்சேனா கமிட்டி கூறி உள்ளதே?

ஏதாவது ஒரு கேள்விக்காவது பதில் சொல்வாரா சர்தார்ஜி?

http://krelango.blogspot.com/2010/04/blog-post.html

என்ன கொடுமை (கலைஞர்) கருணாநிதி இது?

முன்குறிப்பு: சில வாரங்களாக உங்களிடம் கேட்கப்பட வேண்டிய கேள்விகள் குவிந்துகொண்டே போகின்றன. கொஞ்சம் கேள்விகளை இந்த வாரம் கேட்டுத் தீர்த்துவிட உத்தேசம். கலைஞருக்கு சில கேள்விகள் என்று தலைப்பு வைத்தால், நீங்கள் கவனிக்காமல் கூடப் போய்விடலாம். சினிமா தொடர்பாக தலைப்பு வைத்தால் நிச்சயம் தவறாமல் படிப்பீர்கள் என்றுதான் இந்தத் தலைப்பு. தவிர, தமிழகம் முழுக்க மக்கள் மனதில் ஒலித்துக் கொண்டிருக்கும் வாக்கியம் இது.
.
கேள்வி 1: ரேஷன் கடைகளில் அரிசி விலையை ஒரு கிலோவுக்கு ஒரு ரூபாய் என்று நீங்கள் அறிவித்திருப்பதால், தமிழ்நாட்டில் ஒரு கோடியே 86 லட்சம் குடும்பங்கள் பயனடையப் போவதாக கூறியிருக்கிறீர்கள். ஒரு குடும்பம் என்பது மிகக் குறைந்தபட்சம் மூன்று பேர் என்று வைத்துக் கொண்டால் கூட, தமிழ்நாட்டின் மொத்த குடும்பங்கள் 2 கோடி 20 லட்சம்தான். அப்படியானால், தமிழகத்தில் பாதிக்கு மேற்பட்ட குடும்பங்கள் ஒரு கிலோ அரிசியை 2 ரூபாய் கொடுத்து வாங்க முடியாத கதியில் இருக்கிறார்களா?
.
ஐந்து முறை நீங்கள் முதலமைச்சராக இருந்ததன் விளைவு இதுதானா?
என்ன கொடுமை......
.
கேள்வி 2: செல்வகணபதி என்று ஒரு ஊழல் பேர்வழியை...... மன்னிக்கவும், அவரைப் பற்றி அப்படி நான் சொல்லவில்லை. நீங்கள், உங்கள் அரசு சொன்னதுதான் அது. தி.மு.க.வில் இணைத்துக் கொண்டு உருகோ உருகென்று உருகிப் பேசியிருக்கிறீர்களே.... என்ன பேச்சு சார் அது ? இத்தனை காலமாக உங்களோடு வராமல் அவர் அ.தி.மு.க.வில் இருந்துவிட்டது பற்றி அப்படி ஒரு உருக்கம் உங்களுக்கு. ஒருவர் செத்த பிறகு அவரை எரித்து இறுதி அஞ்சலி செலுத்த வரும் இடத்தில், பிணம் பாதுகாப்பாக எரிவதற்கான கொட்டகைகளுக்குக் கூரை போடுவதில் கூட செல்வகணபதி ஊழல் செய்தார் என்று, அவர் மீது வழக்கு போட்டதே உங்கள் ஆட்சிதானே ?
.
அப்படிப்பட்டவர் இத்தனை காலமாக உங்களுடன் இல்லாமற் போனாரே என்று எதற்கு உருகுகிறீர்கள் ? சாவு வீட்டில் கூட கொள்ளை அடிக்கும் சாமர்த்தியம் உள்ள ஒரு கை, உங்கள் ஊழல் ஆட்டத்தில் குறைகிறதே என்ற வருத்தமா? அவர் ஊழல் செய்யாதவர், நேர்மையாளர் என்றால், உங்கள் அரசு போட்டது பொய் வழக்கா? நீதிமன்றத்திற்குப் போய் `இவர் மீது பொய் வழக்கு போட்டுவிட்டோம். மன்னித்துக் கொள்ளுங்கள்' என்று உங்கள் அரசு சொல்லத் தயாரா? வழக்கு போட்டது சரிதான் என்றால், இப்போது கட்சியில் சேர்த்துக் கொண்டது ஏன் ? தி.மு.க.வில் சேருவதற்கான தகுதிகளில் ஒன்று, எதிலும் ஊழல் செய்து சம்பாதிக்கும் சாமர்த்தியம் என்று அறிவிப்பீர்களா? என்ன கொடுமை........
.
கேள்வி 3: ஒருவர் மீது வழக்கு இருந்தாலும் கட்சியில் சேர்த்துக் கொள்ளலாம். ஜெயலலிதா வந்தால் கூட சேர்த்துக் கொள்வோம் என்று அறிவித்திருக்கிறீர்களே.... அது நிச்சயம் சும்மனாங்காட்டி இல்லைதானே? உங்கள் ஆழ்மன விருப்பம் அதுதான் என்று நான் அறிந்த உளவியல் அணுகுமுறை சொல்கிறது.
.
அவரோ, தான் ஒரு போதும் தி.மு.க.வில் சேர விண்ணப்பிக்கும் நிலை வராது. நீங்களும் உங்கள் குடும்பத்தினரும்தான் விரைவில் அ.தி.மு.க.வில் சேர விண்ணப்பிக்கும் நிலை வரும் என்று லாவணி பாடிவிட்டார். அதாவது அவருக்கும், நீங்களும் அவரும் ஒரே கட்சியில் இருப்பதில் எந்த ஆட்சேபணையும் இல்லை என்று தெரிகிறது. தி.மு.க.வில் அவர் சேருவதா, அல்லது அ.தி.மு.க.வில் நீங்கள் சேருவதா என்பது மட்டும்தான் பிரச்சினை போலிருக்கிறது.
.
கங்கை - காவிரி நதி நீர் இணைப்பு நடக்கிறதோ இல்லையோ, அரசியலில் ஊழல் கங்கையையும் ஊழல் காவிரியையும் இணைத்து மகிழ்வோம். பார்ப்பன எதிர்ப்பு ஒரு பிரச்சினையே அல்ல. பொது எதிரிக்கு எதிராக ராஜாஜியோடு அன்று கை கோர்க்கவில்லையா? இன்றைய உங்கள் பொது எதிரிகள் ராமதாஸ், விஜய்காந்த் எல்லாரையும் கூண்டோடு காலி செய்ய சிறந்த வழி இதுதான்.
.
உதவாதினி தாமதம். உடனே சசிகலாவுக்கு பரிச்சயமானவரான டி.ஆர்.பாலுவை விட்டுப் பூர்வாங்கப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்குங்கள். எவ்வளவு சீக்கிரம் இரு கழக இணைப்பு நடக்கிறதோ, அவ்வளவுக்கவ்வளவு தமிழக அரசியலுக்கு நல்லது. அண்ணா நூற்றாண்டில் இந்த முயற்சியைத் தொடங்கினால், உங்கள் 40 ஆண்டு கால நண்பர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டுக்குள் முடித்துவிடலாம். செய்வீர்களா ?
என்ன கொடுமை.......
.
கேள்வி 4: 40 லட்ச ரூபாய்களை கழகத்திலிருந்து எடுத்து அண்ணாவின் ரத்த வாரிசுகளுக்கு `அள்ளிக்' கொடுத்திருக்கிறீர்கள். 20 சதவிகித பண வீக்க காலத்தில் இந்த 40 லட்ச ரூபாய்க்கு அசல் மதிப்பு என்ன என்பதை ப.சிதம்பரத்தைக் கேட்டால், உங்களுக்கு மட்டும் ரகசியமாகச் சொல்வார்.
.
அண்ணாவின் வாரிசுகளின் அசல் மதிப்பு இவ்வளவுதான் என்பதை இதை விட நாசூக்காக எடுத்துச் சொல்லும் திறமை வேறு யாருக்கும் கிடையாது. கனிமொழி எம்.பி தேர்தலில் போட்டியிடும்போது அறிவித்த கோடிக்கணக்கான சொத்துக் கணக்கோடு ஒப்பிட்டால் இது நன்றாகவே புரியும்.
.
அண்ணா குடும்பத்துக்கு எதற்காக இப்போது இந்த உதவி? உதவி தேவைப்பட்டவர்கள் என்றால், நூற்றாண்டு வரை காத்திருக்க வேண்டிய தேவை என்ன? குடும்பத்தின் மூத்தவர் டாக்டர் சி.என்.ஏ.பரிமளம் நல்ல வேளை இப்போது உயிரோடு இல்லை. இருந்திருந்தால், அவர் தற்கொலை செய்துகொள்ள இன்னொரு காரணமாக இது ஆகியிருக்கும் அல்லவா.
.
அண்ணாவின் குடும்பம் பொருளாதார நிலையில் வசதியாகவே இருக்கிறது. பேராசைகள் இல்லாத குடும்பம் அது. அரசோ கட்சியோ ஏதேனும் செய்வதாக இருந்தால், அண்ணாவின் கருத்துக்களை, வாழ்வியலை மக்களிடம் பரப்ப உதவி செய்தால் போதும் என்றுதான் பரிமளம் கடைசி வரை சொல்லி வந்தார்.
.
ஏன் இதுவரை உங்கள் அரசோ, கட்சியோ அண்ணாவின் எழுத்து அனைத்தையும் ஒரு செம்பதிப்பாக, காந்திக்கும் அம்பேத்கருக்கும் உள்ளது போல கொண்டு வரவில்லை?
.
உங்கள் எழுத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து நோபலுக்கு அனுப்புவதாக சொல்லி ஜால்ரா அடிக்கிற பல்கலைக்கழகத்துக்கு, நீங்கள் முதலில் பெரியாரையும் அண்ணாவையும் பரப்புங்கள் என்று ஏன் சொல்லவில்லை?
.
அவர்களை எல்லாம் பரப்பி, தமிழக மக்களுக்கு விழிப்பு வந்துவிட்டால், அவர்களோடு உங்களை ஒப்பிடத்தொடங்கிவிட்டால், உங்கள் அரசியலுக்கும் அரசியல் வாரிசுகளுக்கும் சிக்கல் என்பதுதானே உங்கள் பயம் ? என்ன கொடுமை......
.
கேள்வி:5 ராமாயண தசரதனைப் போல காதோரம் நரை தோன்றியதும் ஆட்சிப் பொறுப்பை வாரிசிடம் ஒப்படைக்கும் பக்குவம் இல்லாமல் வயது முதிர்ந்தாலும் உடல் தளர்ந்தாலும் நாற்காலியில் ஒட்டிக் கொண்டிருப்பவர் நீங்கள் என்று கட்டுரை எழுதியதற்காக நெடுமாறன் மீது மயிர் அர்ச்சனை செய்து கவிதை எழுதியிருக்கிறீர்களே.... ஏதோ கோபத்தில் சொன்னதாக வசவுகளை விட்டுவிடலாம்.

ஆனால், உங்கள் கவிதையில் நீங்கள் தெரிவிக்கும் ஒரு தகவல் தேச முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறதே, அதைப் பற்றித்தான் இந்தக் கேள்வி.
.
விடுதலைப்புலிகளிடம் பணம் பெற்றுக் கொண்டு ஏமாற்றுவதாக நெடுமாறன் மீது ஒரு குற்றச்சாட்டை வைத்திருக்கிறீர்களே. தடை செய்யப்பட்ட இயக்கத்திடம் நெடுமாறன் பணம் வாங்கினார் என்பது உண்மையானால், முதலமைச்சரான நீங்கள் ஏன் இதுவரை அதற்காக சட்டப்படி நடவடிக்கை எடுக்கவில்லை? எடுக்காதது குற்றத்துக்கு உடந்தையாக இருந்த குற்றமல்லவா?
.
புலிகள் தலைவருக்கு அஞ்சலிக் கவிதை பாடியவர் என்பதால் நீங்களும் நெடுமாறனுக்கு உடந்தை என்பதற்கு பூர்வாங்க ஆதாரம் இருப்பதாக ஒரு நீதி மன்றம் கருத முடியுமல்லவா?
.
உங்கள் குற்றச்சாட்டு முற்றிலும் பொய், கட்டுக்கதை என்றால், நெடுமாறனை அவதூறு செய்ததற்காக நீங்கள் அவரிடமும் புலிகளிடமும் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டாமா? எது சரி ? என்ன செய்யப் போகிறீர்கள் ? என்ன கொடுமை.......
.
கேள்வி 6: உலக அளவில் பல்வேறு பகுத்தறிவாளர்கள் தங்கள் முத்திரைகளைப் பதித்தவர்கள். பெர்ட்ரன்ட் ரஸ்ஸல், இங்கர்சால், கோவூர் என்று நீண்ட பட்டியலே உண்டு. உங்கள் பிராண்ட் தனி. வறுமையின் நிறம் சிவப்பு என்பது போல பகுத்தறிவின் நிறம் மஞ்சள் (சால்வை) என்று அதற்கும் ஒரு தனி அடையாளம் வகுத்தவர் நீங்கள். உங்கள் பெயரில் இயங்கும் கலைஞர் டி.வி மட்டும் இதில் பின்தங்கிவிட முடியாதல்லவா.
.
அதனால்தான் இந்தியத்தொலைக்காட்சிகளிலேயே முதன்முறையாக இந்துப் பண்டிகை நாளில் வசூலுக்காக நடத்தும் சிறப்பு நிகழ்ச்சிகளை, `விநாயக சதுர்த்தி சிறப்பு நிகழ்ச்சி' என்று அறிவிக்காமல், `விடுமுறை நாள் சிறப்பு நிகழ்ச்சி' என்று அறிவித்து பகுத்தறிவு சாதனை படைத்திருக்கிறது. இனி தீபாவளி, ரம்ஜான், கிறிஸ்துமஸ் அவ்வளவு ஏன்? ஒவ்வொரு ஞாயிறு அன்றும் கூட இதே போல `விடுமுறை நாள் சிறப்பு நிகழ்ச்சி' என்றே அறிவிக்கச் செய்வீர்கள் என்று எதிர்பார்க்கிறேன். முழுப் பூசணிக்காயையும் மறைக்கும் அருமையான பகுத்தறிவு சோற்றில் ஒரே ஒரு கல்.
.
விநாயக சதுர்த்தி, மன்னிக்கவும் விடுமுறை நாள் நிகழ்ச்சியைக் காலை 6 மணிக்கு பக்திப் பாடல்களுடன் தொடங்குவதாகப் போட்டிருக்கிறது. பக்தி என்றால் என்ன? வேளச்சேரி ஸ்டாலின், மயிலை கனிமொழி, மதுரை அழகிரி முதலிய கலிகால தெய்வங்கள் மீதான பாடல்களாகத்தானே இருக்கும்? வாதாபி கணபதியாக இருக்காதல்லவா?
என்ன கொடுமை.......
.
கேள்வி 7: மின்தடை பற்றித்தான் நியாயமாகக் கேட்கவேண்டும். ஆனால், அதைப்பற்றிய எந்த கேள்விக்கும் நியாயமான பதில் உங்கள் அரசிடமிருந்து வருவதே இல்லை.
.
ஹூண்டாய், ஃபோர்ட் போன்ற வெளிநாட்டு கம்பெனிகளுடன் ஒப்பந்தம் போட்டபோது 24 மணி நேரம் இடையறாத மின்சாரம் தருவதாக ஒப்பந்தம் போடுகிறீர்கள். ஆனால் உள்ளூர் சிறு தொழிற்சாலைகளுக்கு தினமும் எட்டு மணி நேரம் கூட அத்தகைய மின்சாரம் தரப்படுவது இல்லை.
.
தமிழகத்தில் எந்த ஊருக்குப் போனாலும் மின்சாரம் இல்லாமல் குழந்தைகள் முதல் விவசாயிகள் வரை படும் பாடு தெரியாத ஏ.சி வாழ்க்கையில் நீங்களும் உங்கள் சகாக்களும் திளைத்துக் கொண்டிருக்கிறீர்கள். ஆடம்பர விழாக்கள் நடத்த வேண்டாமென்று மின்வாரியம் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறது. ஸ்டாலின் போகுமிடமெல்லாம் நடப்பதற்கு என்ன பெயர்?
.
ஏழைக் குழந்தைகள் கல்விக்கு நிதி திரட்ட என்ற பெயரில் கனிமொழியைப் பயன்படுத்தி ஒரு மாரத்தான் ஓட்டம் நடத்தி ஒரு நாள் முழுக்க, இதில் ஓடாத இதர சென்னைவாசிகளையும் தெருத்தெருவாக திண்டாட விட்டீர்கள். மாரத்தான் செலவுப்பணத்தையும் பரிசுப் பணத்தையும் ஏழைக் குழந்தைகளுக்கு அளித்திருந்தாலே போதும். அது ஏன் உங்களுக்கு உறைக்கவில்லை ?
.
மின்வெட்டைப்பற்றி 1973-ல் உங்கள் முதல் ஆட்சியின்போது எங்கள் கிறித்துவக் கல்லூரி ஆண்டு மலரில் என் சக மாணவர் ஒருவர் எழுதிய கவிதையை உங்களுக்கு இப்போது அர்ப்பணிக்கிறேன். கவிதை உங்கள் மனச்சோர்வை ஆற்றும் அருமருந்தல்லவா... இதோ கவிதை:
"இந்த ஆட்சியில் வாழ்வதை விட சாவது மேல் என்று மின் கம்பியைத்
தொட்டால்,
சே.. மின்வெட்டாம்.''
.
பின்குறிப்பு: இந்த ஓ பக்கங்களைப் படித்துவிட்டு என்னைத் திட்டி கவிதை எழுதி என்னை கவுரவித்து உங்கள் பொன்னான நேரத்தை வீணாக்க வேண்டாமென்று கேட்டுக் கொள்கிறேன். அந்த வேலையை சின்னக் குத்தூசி தலைமையிலான உங்கள் ரசிகர் மன்றத்தினர் பார்த்துக் கொள்வார்கள்.

-ஞாநி

http://tamilamutham.net/home/index.php?option=com_content&view=article&id=457:2010-06-22-19-31-53&catid=88:2010-06-18-16-20-40&Itemid=412

Wednesday, January 5, 2011

அகில உலகத்திலும் தி.மு.க. எதிரிகள்?

பிச்சுப் பிடுங்கும் மீடியா

முரசொலி இதழில் ஒரு கேள்வி பதில்வடிவிலான அறிக்கையை சமீபத்தில் முதல்வர் கருணாநிதி வெளியிட்டிருந்தார். ”பத்திரிகை யாளர்களுக்கு எத்தனையோ உதவி களை நீங்கள் செய்திருக்கிறீர்கள். ஆனாலும் அவர்கள் உங்களைத் தொடர்ந்து தாக்குவதற்கு என்ன காரணம்?” என்ற கேள்விக்கு, ”தாக்கி எழுதுபவர்கள் பெயரைப் பட்டியலிட்டுப் பாருங்கள். அதைப் படித்தாலே, ஏன் அவர்கள் தாக்கி எழுதுகிறார்கள் என்ற காரணம் உங்களுக்குப் புரியும்!” என்று பொடி வைத்திருந்தார் கருணாநிதி.

செய்திகளுக்கு அவர் சாதி சாயம் பூசப்பார்க்கிறாரோ என்னவோ… கடந்த இரண்டு வாரத்திய சர்வதேச பத்திரிகைகளை திருப்பிப் பார்த்தால்… அகில உலகத்திலும் தி.மு.க. எதிரிகளே ஆக்கிரமித்திருப்பதுபோலத்தான் அர்த்தம் வரும் – கருணாநிதி பார்வையில். இந்த ‘மீடியா சாதி’ விமர்சனங்கள் என்னதான் சொல் கின்றன?

நியூயார்க் டைம்ஸ் (அமெரிக்கா. – எழுதியவர் லிடியா பால்கீரின்):

மிகச் சாதாரண வக்கீலான ஆ.ராசாவுக்கு தொலைத் தொடர்புத் துறை பற்றிய தொழில்நுட்ப அறிவோ… வர்த்தக ஞானமோ இல்லை. சுருக்கமாகச் சொன்னால், வேகமாக வளர்ந்துவரும் இந்தியத் தொலைத் தொடர்பு துறையை வழிநடத்தக்கூடிய எந்தத் தகுதியும் அவருக்கு இல்லை. ஆனால், அவருக்கு இருந்தது வேறு ஒரு தகுதி. எந்த ஒரு கட்சியின் 16 எம்.பி-க்களின் ஆதரவு இல்லாவிட்டால், காங்கிரஸ் அரசு கவிழ்ந்துவிடுமோ… அந்தக்கட்சித் தலைவரின் ஆதரவு அவருக்கு இருந் தது.

உலகத்தின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் அரசியல் எப்படி இருக்கிறது என்பதற்கு ராசாவே ஓர் உதாரணம். குடும்பம், சாதி ஆகியவற்றை அடிப்படை யாகக்கொண்ட பிராந்தியக் கட்சி கள் தங்களின் கஜானாவை நிரப்பிக் கொள்ள.. பசை யுள்ள மத்திய அமைச்சர் பதவிகளைப் பெறுகின்றன. ராசா சார்ந்து இருக்கும் தி.மு.க என்ற கட்சி, பிரிவினை என்ற முழக்கத்தின் அடிப்படையில் வளர்ந்த கட்சிதான் என்றாலும் தனது கொள்கைகளை எல்லாம் அது எப்போதோ மூட்டை கட்டிவைத்துவிட்டது. சக்கர நாற்காலியில் இருந்தபடியே ஆட்சி செய்யும் அந்தக் கட்சி யின் தலைவரும், ஓயாமல் சண்டையிட்டுக்கொள்ளும் அவரது எண்ணற்ற வாரிசுகளும் செயல்படும் முறையைப் பார்த் தால், இது என்ன கட்சியா அல்லது தனியார் கம்பெனியா என்ற கேள்வியே எழும்!

எமிரேட்ஸ் (துபாய்):

2001-ம் ஆண்டு நிர்ணயித்த அதே விலையில் 2008-ம் ஆண்டு 2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமங்களை இந்திய அரசு விற்பனை செய்திருக்கிறது. இந்தத் துறையில் முன்அனுபவமோ, தொழில் நுட்ப அறிவோ இல்லாதவர்களுக்கு விற்பனை செய்ததில் 1.76 லட்சம் கோடிக்கு இந்திய அரசுக்கு வருமான இழப்பு ஏற்பட்டிருப்பதாக, அந்த நாட்டின் கணக்கீட்டாளர்களே சொல்கிறார்கள். இதையடுத்து, தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு முறைகேடாக வழங்கப்பட்ட உரிமங்கள் ரத்து செய்யப்படுமா என்ற கேள்வி மலைபோல எழுந்து நிற்கிறது. அப்படி ஏதாவது நடக்கும்பட்சத்தில், அது இந்தியத் தொலைத் தொடர்பு துறையையே பாதிக்கும் வாய்ப்புகளும் உள்ளன.

எக்கானமிஸ்ட் (லண்டன்):

அடுக்கடுக்காகப் பல ஊழல்களை சந்தித்துக்கொண்டு இருக்கும் இந்தியாவில் இப்போது எல்லாவற்றையும்விட பெரிதான தொலைத் தொடர்புத் துறை ஊழல் ஒன்று வெளியே வந்திருக்கிறது. சுமார் மூன்று வருடங்களுக்கு முன்பு நடந்த இந்த ஊழல், தாக்குப்பிடிக்க முடியாத நெருக்கடியை சந்தித்துக்கொண்டு இருக்கும் இந்த வேலையில்… வேறு வழி இல்லாமல் இதற்குக் காரணமான அமைச்சர் ஆ.ராசாவைப் பதவி விலகச் செய்து இருக்கிறார் மன்மோகன் சிங். இதனால், இதுவரை புனிதராகக் காட்சியளித்துக்கொண்டு இருந்த பிரதமர் மன்மோகன் சிங்கும் சேற்றில் இழுக்கப்பட்டு இருக்கிறார். அந்த நாட்டின் உச்ச நீதிமன்றமே அவரைக் குறை சொல்லி இருக்கிறது. நாடாளுமன்றத்தில் ராசாவின் கட்சியின் ஆதரவு அவருக்கு வேண்டியிருந்ததால்தான் மன்மோகனால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை, பாவம்!”

வால் ஸ்ட்ரீட் ஜர்னல் ப்ளாக் (நியூயார்க் – பிரசாந்த் அகர்வால் எழுதியது):

இந்தியாவின் மிகப் பெரிய தொழில் என்ன? தகவல் தொழில்நுட்பமா? மருந்துகள் தயாரிப்பா? அல்லது ஆட்டோமொபைலா? ஊழல்தான் இந்தியாவின் மிகப் பெரிய துறையாக இப்போது விஸ்வரூபம் எடுத்து வளர்ந்து நிற்கிறது. 2008-ம் ஆண்டு இந்தியாவில் வெறும் 30 கோடி தொலைத் தொடர்புகள் மட்டுமே இருந்தன. அதனால், புதிதாக 2ஜி எனப்படும் இரண்டாவது தலைமுறை டெலிபோனுக்கான நேரம் வந்தபோது… உலகின் அத்தனை பெரிய தொலைத் தொடர்பு கம்பெனிகளும் இதில் ஆர்வம் காட்டின. ஆனால், அரசு ஏலமே விடவில்லை. ஏனெனில், தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த ராசா தன் சக அமைச்சர்களின் யோசனைகளை மட்டுமல்ல… டெலிகாம் ரெகுலேட்டர் யோசனைகளையும் புறம் தள்ளிவிட்டு முதலில் வந்தவர்களுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் வழங்கி இருக்கிறார்.

இந்த முறைகேட்டால் அரசுக்கு எவ்வளவு வருமான இழப்பு ஏற்பட்டது என்பதை மக்களுக்கு விளக்க, இந்தியப் பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் திணறிக்கொண்டு இருக்கின்றன. பூஜ்யம் என்ற எண்ணை உலகுக்குக் கொடுத்த இந்திய நாட்டில் கோடிக்கு மேல் உள்ள பெரிய தொகையைக் குறிப்பிட வார்த்தைகளே இல்லை. (பில்லியன், ட்ரில்லியன் போன்ற வார்த்தைகளுக்கு இணையான வார்த்தைகள் இந்தியாவில் புழக்கத்தில் இல்லை)

கார்டியன் (இங்கிலாந்து இதழில் பங்கஜ் மிஸ்ரா):

நீரா ராடியா விரும்பியது மாதிரியே அவரது வேட்பாளரான ராசா மத்திய அமைச்சரவையில் தொலைத் தொடர்பு அமைச்சராக ஆனார். நீரா ராடியாவின் வாடிக்கையாளரான டாடா உட்பட பல நிறுவனங்களுக்கு 2ஜி அலைக்கற்றை உரிமங்களை விற்றதில் அமைச்சரான ராசா, நாட்டுக்கு 1.76 லட்சம் கோடி ரூபாய் மதிப்புக்கு இழப்பு ஏற்படுத்தி இருக்கிறார். இதையடுத்து எழுந்த பலமான நெருக்கடிகளின் காரணமாக, ராசா அமைச்சர் பதவியில் இருந்து விலகினார். இப்போது இந்தியாவுக்கு ஏற்பட்டிருக்கும் நிலையை, அந்நாட்டின் தலைவரான சோனியாவே இப்படி வர்ணித்திருக்கிறார். ‘நாட்டின் பொருளாதாரம் நாலா திசைகளிலும் விரிவடைந்து கொண்டேயிருக்கிறது. ஆனால், நமது தார்மிக உலகம் சுருங்கிக்கொண்டே இருக்கிறது. எந்த நோக்கத்துக்காக நமது சுதந்திரப் போராட்ட வீரர்கள் பாடுபட்டார்களோ… அந்த நோக்கங்கள் இப்போது தோல்வியடைந்துவிடுமோ என்ற அச்சம் எழுந்திருக்கிறது!’ என்கிறார். இதையே நாமும் திருப்பிச் சொல்ல வேண்டி இருக்கிறது!

இவை எல்லாம் படித்த பிறகு… கருணாநிதி சொல்லும் காரணம் ஏதாவது உங்களுக்குப் புரிகிறதா?

வேல்ஸ்
நன்றி – ஜூனியர் விகடன்

கருணா + குடும்பம் + கழகம் ..= தி மு க

வம்சம், கனிமொழி, அஞ்சுகம், இதெல்லாம் கோடம்பாக்கத்தில் எடுக்கப்பட்ட எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ் சினிமாக்களின் பெயர்கள். இனி வரும் காலங்களில் தயாநிதி, கலாநிதி, தயாளு, ராஜாத்தி, காந்தி அழகிரி, துர்கா ஸ்டாலின், இதெல்லாம் தமிழ் சினிமாவில் வரப்போகிற படங்கள். இதற்கு கூட்டம் கூட்டி ஆள் பிடிக்க வேண்டிய அவசியமே இல்லை.

கருணாநிதியின் வாரிசுகள், வாரிசின் வாரிசுகள் என்று நிறுத்தமில்லாமல் வளர்ந்து விட்ட நிலையில் எல்லா தொழில்களையும் கபளீகரம் செய்து கொண்டிருக்கும் கருணாநிதி குடும்பம் சினிமாவையும் விட்டு வைக்கவில்லை. பிரமாண்ட மல்டிபிள் தியேட்டர்கள், வணிக வளாகங்கள், நவீனக் குடியிருப்புகள், சாராய ஆலைகள், ரியல் எஸ்டேட், எந்த வழியேலேனும் சம்பாதித்து தமிழகத்தையே பழைய ராஜராஜசோழன் காலத்திற்கு இட்டுச் சென்று கொண்டிருக்கிறார் கருணாநிதி. ஆக அரசியலிலும், தொழிலிகளிலும் முத்துவேலர் வம்சம் கொடி கட்டிப்பறக்கிறது.

எண்பதுகளில் இந்தியாவையே கபளீகரம் செய்த நேரு குடும்பத்தினரின் ஆதிக்கத்தை எதிர்த்தவர் கருணாநிதி. இந்தியா என்ன நேரு குடும்பத்தின் சொத்தா? என்றெல்லாம் கேட்டவரின் குடும்பம் நேரு குடும்பத்தையே விஞ்சி விட்டது. மகள்,மகன்,பேரன்,பேத்தி கொள்ளுப் பேரன் என்று கிளம்பி வந்து தமிழகத்தையே சுரண்டிக் கொழுத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த மெகா குடும்பத்தை அண்டிப் பிழைக்கும் குறு நில மன்னர்களோ அவர்கள் சக்திக்கு வட்டம், மாவட்டம், வட்டாரம் என்று பங்கு போட்டு வாரிச் சுருட்டிக் கொண்டிருக்கிறார்கள். ‘வட போச்சே’ என்பது போல சசிகலா குடும்பமோ அடுத்து எப்படி ஆட்சிக்கு வருவது இந்தத் தொழில்களை எப்படிக் கைப்பற்றுவது என்று கைபிசைந்து நிற்கிறது.

தமிழின் சினிமாவில் ஒரு காலத்தில் சிறு சிறு தயாரிப்பாளர்கள் கூட சினிமாத் தொழிலில் முதலிட முடியும் என்ற நிலை மாறி சன் தொலைக்காட்சி கேட்கிற விலைக்குள் படத்தை எடுத்து முடித்து அதற்குள் லாபம் பார்க்கிற ஒருவரால் மட்டுமே சினிமாவில் இருக்க முடியும் என்ற நிலை. இதை மீறுகிறவர்களோ, சன், கலைஞர் தொலைக்காட்சிகளுக்கு அப்பாற்பட்டு ரசிகர்களை நம்பி படம் எடுக்கலாம் என்று நினைக்கிறவர்களோ அதிகாரமற்றவர்களாக இருந்தால் கோடம்பாக்கத்தில் எதுவுமே செய்ய முடியாத நிலை. அல்லது எல்லோரும் மணிரத்னமாகப் பிறந்திருக்க வேண்டும். ஒரு மாறன் இல்லை என்றால் சோனி நிறுவனத்திடம் பேரம் பேசி விற்கும் தந்திரம் தெரிந்திருக்க வேண்டும். ஆக விருத்தியான பார்ப்பன, திராவிட வம்சங்களில் பிறக்க வாய்ப்பில்லாதவர்கள் கருணாநிதியின் வம்சத்தின் முன் அடங்கி நடக்க வேண்டும். இதுதான் மாமன்னர் கருணாநிதியின் அரசியல் வளர்ச்சி.

இவர்கள் முதன் முதலாக கைப்பற்றியது கேபிள் தொலைக்காட்சியை. திமுகவின் கட்சிப் பணத்தை எடுத்து பேரன்களுக்குக் கொடுத்து பூமாலை என்னும் வீடியோ பத்திரிகையைத் துவங்கினார் மாமன்னர். பின்னர்தான் அதிகாரமும் வந்து சேர பூமாலை தன் வலையை விரித்து கேபிள் தொடங்கி இப்போது தென்னிந்தியாவையே 17 சேனல்களால் கபளீகரம் செய்து கொண்டிருக்கிறது. ஒரு காலத்தில் தூர்தர்ஷன் தமிழர்களுக்கு எதிரானது என்று சொல்லி தூர்தர்ஷனை உடைத்த கருணாநிதியின் குடும்ப ஊடகங்கள் தூர்தர்ஷனை விட படுமோசமான நஞ்சு போதையை மக்களிடம் பரப்பிக் கொண்டிருக்கின்றன.

இவர்களை மீறி எந்த ஒரு தொலைக்காட்சியும் கேபிள் வழி மக்களைச் சென்றடைய முடியாத நிலை. இவர்களை விமர்சித்து ஏதாவது நிகழ்ச்சி தயாரித்தால் அந்த நிகழ்ச்சி மக்களைச் சென்றடையாது. காரணம் 70% கேபிள் இணைப்புகளை கலாநிதி மாறனுக்குச் சொந்தமான சுமங்கலி கேபிள் விஷன் வைத்திருக்கிறது. மீதியை அழகிரிக்குச் சொந்தமான நிறுவனம் வைத்திருக்கிறது. இது கேபிள் தொலைக்காட்சியின் நிலை. வம்சங்களுக்கிடையில் பிளவு வந்த போது அரசுத் தொலைக்காட்சி துவங்கி உமசாங்கரை பொறுப்பாகப் போட்டு பின்னர் வம்சம் இணைந்ததும் அவரை பலிகடாவாக்கியதுதான் வம்சத்தின் இயல்பான குணம். வம்சம் பிரிந்த போது ஒரு தொலைக்காட்சிதான் இருந்தது வம்சம் இணைந்த பின் செத்தும் கெடுத்தான் சீதக்காதி என்பது போல சன், கலைஞர் என்று இரண்டு சனியன்கள்.

சினிமாவை மட்டும் ஏன் விட்டு வைக்க வேண்டும் என்று நினைத்த மாறன் சகோதரர்கள் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தைத் துவங்க ஸ்டாலினின் மகனோ ரெட் ஜெய்ண்ட் நிறுவனத்தைத் துவங்கினார். அழகிரி மகனோ கிளவுட் நைன் நிறுனத்தை துவங்கினார். இன்று கோடம்பாக்கத்தில் இந்த மூன்று சினிமா நிறுவனங்களுக்கும் வைப்பதுதான் சட்டம். மூன்று கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய நடிகர்களுக்கு பத்து கோடி சம்பளம் ஏற்றி விட்டதோடு, எந்தப் படத்திற்கு தியேட்டர் கொடுப்பது, எந்தப் படத்தை எப்போது வெளியிடுவது, தொலைக்காட்சி ரைட்ஸ் எவளவு என தீர்மானிப்பது எல்லாம் இவர்கள்தான்.

இந்த வம்சத்தின் அரஜாகத்திற்கு துணைப்போகும் சூப்பர் ஸ்டார்கள், சுப்ரீம் ஸ்டார்கள். புரட்சி நாயகர்கள். படங்களில் இந்த புர்ரச்சி வீரர்கள் காண்பிக்கும் வீரம் நிஜத்தில் கோபாலபுரத்தில் கொத்தடிமைகளாக நடமாடுகின்றன. கருணாநிதி வம்சம் எடுக்கிற சினிமாவைத்தான் விநியோகஸ்தகர்கள் வாங்க வேண்டும், தியேட்டர்காரர்கள் திரையிட வேண்டும், ரசிகர்கள் பார்க்க வேண்டும். இது போக எடுக்கப்படுகிற எல்லா சினிமாக்களையும் தங்கள் தொலைக்காட்சிகளுக்கே கேட்கிற விலைக்கே விற்க வேண்டும் என்ற மறைமுக நெருக்கடி வேறு. ஆக கருணாநிதி வம்சத்தின் அந்தப்புரமாக கோடம்பாக்கம் மாறி விட்டது.

அடுத்து பத்திரிகை. தமிழ் பத்திரிகை உலகில் கிட்டத்தட்ட எல்லா பத்திரிகைகளையுமே கட்டுப்படுத்துவது, அல்லது பத்திரிகை துவங்குவது என்று துவங்கி இப்போது இருக்கும் எல்லா ஊடகங்களையும் தன் கட்டுக்குள் வைத்திருக்கிறது கருணாநிதி வம்சம். குமுதல் செட்டியாருக்கும் வரதராஜனுக்கும் வந்த பிரச்சனையில் உள்ளே நுழைந்த கருணாநிதி இரு தரப்பையுமே தன் வழிக்குக் கொண்டு வந்து விட்டார். செட்டியார் இனி எப்போதும் கருணாநிதிக்கு எதிராக எழுத முடியாது. வரதராஜனின் குமுதம் ரிப்போர்ட்டரோ எழுதிய அடுத்த நிமிடமே பழைய எப்.ஐ.ஆர் தூசு தட்டி எடுக்கப்படும் நிலையில் நிரந்தரமான கத்தியை செட்டியாருக்கும், பார்ப்பனருக்கும் சேர்த்தே தொங்கவிட்டு விட்டார் கருணாநிதி.

மிச்சமிருப்பது ரியல் எஸ்டேட். கருணாநிதியின் மூத்த மகன் மு.க முத்து குடிகாரராக இருந்த இவர் நீண்டகாலமாக கருணாவைத் திட்டிக் கொண்டிருந்தார். அதிமுக கூட கருணாநிக்கு எதிராக இவரைப் பயன்படுத்திக் கொண்டது. இப்போது ஐந்தாவது முறையாக முதல்வரான கருணாநிதி பதவியேற்ற உடனேயே முத்துவை சேர்த்துக் கொண்டார். இப்போது ரியல் எஸ்டேட் தொழிலில் முத்துவின் மகன் டாக்டர் அறிவுநிதி கொடி கட்டிப் பறக்கிறார். இன்றைய தேதியில் தமிழக விவாசாயிகளிடம் அடிமாட்டு விலைக்கு நிலத்தை மிரட்டி வாங்கி பிரமாண்ட குடியிருப்புகளை அமைப்பதும், பன்னாட்டு நிறுவனங்களுக்கு விவாசாய நிலங்களை மக்களை மிரட்டி வாங்கிக் கொடுப்பதும்தான் அறிவுநிதியின் தொழில். ஒரே நாளில் பல கோடி ரூபாய், இப்படிக் கட்டப்பஞ்சாயத்து செய்து சம்பாதிக்கும் அறிவு நிதி சினிமாவிலும் அவ்வப்போது போலீஸ் மாமா கேரக்டரில் நடித்து சமூக நீதியை நிலைநாட்டுகிறார்.

முத்துவேலர் வம்சம் தழைத்தோங்கி செழித்தோங்கி ஒட்டு மொத்த தமிழகத்தையும் ஆக்டோபஸ் போலப் படர்ந்திருக்கிறது. ஆனால் கருணாநிதி முன்னர் எப்போதையும் விட தனது வாரிசுகளை நினைத்து பெருமை கொள்கிற ஒரு தகப்பனாக வம்சத்தின் அரசனாக இருக்கிறார். இது தொடர்பான அதிருப்தி எல்லா தரப்பிலும் எழுவதை உணர்ந்திருக்கும் கருணாநிதி அதை அலட்சியத்துடன் ஒதுக்குகிறார்.

சமீபத்தில் சென்னையில் நடந்த நடிகர், நடிகைகள், தொழிலாலளர்களுக்கு நிலம் வழங்கி வீடு கட்டும் திட்டத்தை துவங்கும் விழாவில் கலந்து கொண்டு தன் பெயரை தானே அந்த சினிமா ஏழை நடிகர்களின் நகருக்கு வைத்து அதை தானே திறந்து வைத்துப் பேசிய கருணாநிதி இந்தியாவில் உள்ள எல்லா வாரிசுகளையும் சுட்டிக்காட்டி இப்படி எல்லோரும் வாரிசாக இருக்கும் போது ‘‘என் மனைவி மட்டும் மலடியாக இருக்க வேண்டுமா? ’’ என்று கேட்டிருக்கிறார். மேலும் நான் திராவிட மக்களுக்காக உழைப்பதாலேயே இப்படித் திட்டப்படுவதாக வேறு தன் வழக்கமான திராவிட, பார்ப்பனப் பல்லவியைப் பாடியிருக்கிறார். நிகழ்ச்சி முடிந்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கலாசார தூதுவரும் பார்ப்பன நாட்டிய மாமேதை பத்மா சுப்ரமணியத்தின் ராஜராஜசோழன் ஆயிரமாண்டு ஸ்பெஷல் மானாட மயிலாட டான்ஸ் ரிகல்சலுக்குச் சென்றதாகக் கேள்வி.

புழுத்து நாறிக் கொண்டிருக்கும் இந்த சமூக அமைப்பில் சினிமா தொடங்கி சட்டமன்றம், நாடாளுமன்றம் வரை வாரிசுகளின் ராஜ்ஜியமே கொடிகட்டிப் பறக்கிறது. இந்த வாரிசுகள் தங்களின் திறமைகளால் வந்தவர்களில்லை. அரசு, சினிமாத்துறைகளின் பிரமாண்டமான இரும்புக் கதவுகள் இவர்களின் தனிப்பட்ட திறமைகளுக்காகவும் திறக்கவும் இல்லை. ரவுடி அழகிரி மத்திய மந்திரியானதும், அழகிரி மகன் தயாரிப்பாளராகவும், ஸ்டாலின் மகன் பெரிய பட்ஜெட் தயாரிப்பாளராகவும், தயாநிதி எம்.பி, அமைச்சரானதும், இலக்கியவாதி கனிமொழி ஓவர்நைட்டில் பாராளுமன்ற உறுப்பினராக ஆனதும் வம்சத்தின் அதிகார செல்வாக்கில்தான். இந்த வம்சத்தின் ஆட்சியை ஏற்றுக் கொண்டதால்தால் ரஜினி வம்சம், கமல் வம்சம், போன்ற சினிமா வம்சங்கள் வாழ்கின்றன.

இப்போது வம்சம் தனது சாம்ராஜ்ஜியத்தை அதிகாரப்பூர்வமாகவும், வியாபார நிமித்த்தமாகவும் நிலைநாட்டிவிட்டது. அரசியலோ, சினிமாவோ, பத்திரிகையோ எல்லாம் வம்சத்தின் தயவில் வாழ்கின்றன. வம்சத்தை எதிர்த்துக் கொண்டு ஒரு தமிழன் கூட தமிழகத்த்தில் மூச்சு கூட விடமுடியாது. தமிழ், திராவிடம், முற்போக்கு, முதலாளித்துவம் எல்லாம் வம்சத்தின் இருப்பிற்கேற்ப புதிய விளக்கம் பெறுகின்றன.

சட்டபூர்வமாகவோ, சட்டமன்ற தேர்தல் மூலமாகவோ இந்த வம்சத்தை வீழ்த்திட முடியாது. சுரணையும், சுயமரியாதையும், வார்த்தையைத் தாண்டி வாழ்க்கையில் வரும்போது தமிழக மக்க்ளால் வம்சத்தின் ஆட்சிக்கு முடிவு கட்ட முடியும். அந்த நாள் தானாக வருமென்று காத்திருப்பவர்கள் முடக்கப்படுவார்கள். அந்த நாளை தனது போராட்ட இலக்காக கொண்டு போராடுபவர்கள் அதிகரிக்கும்போது வம்சம் அதன் அடிப்படையற்ற டாம்பீகத்திலிருந்து வேரும் விழுதுமாய் நீக்கப்படும்.

Courtesy: http://www.vinavu.com/2010/09/08/karunanidhi-24×7/

யாருக்கும் வெட்கமில்லை…- ஞாநி

ரத்தம் கொதித்தது – நவம்பர் 18ஆம் தேதி மதுரையில் கருணாநிதியின் பேரன் கல்யாணத் திருவிழா நிகழ்ச்சிகளை டி.வி.யில் பார்த்தபோதும் செய்திகளைப் பத்திரிகைகளில் படித்தபோதும்.

பள்ளிகளுக்கு விடுமுறை. பல்கலைக்கழகத் தேர்வுகள் தள்ளிவைக்கப் -பட்டன. மதுரையின் இளவரசர் என்று அழகிரி மகனைப் போற்றி விளம்பரப் பலகைகள். தாம் மேற்கொண்ட அதே பகுத்தறிவு லட்சியத்தைத் தம் குடும்பமே பேரன், பேத்திகள் வரை பின்பற்றுவதைப் பற்றிப் பெருமைப் -படுவதாக மேடையில் கருணாநிதியின் ஓர் அப்பட்டமான பொய்ப் பேச்சு… எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தமாதிரி திருமணத்துக்கு வந்த ஆங்கில வாழ்த்துச் செய்திகளைப் படித்து நன்றி கூறியது தயாநிதிமாறன். பக்கத்தில் அழகிரி.

இவர்களின் சண்டையினால் தானே மதுரை தினகரன் அலு வலகத்தில் மூன்று அப்பாவி மனிதர்கள் செத்தார்கள். தீ வைத்தவர்கள் எல்லாம் கல்யாணப் பந்தலில் விருந்தினர்களாக…

கருணாநிதி குடும்பத்தில் தயாளு அம்மாளிலிருந்து தயாநிதி வரை எல்லோரும் எப்பேர்ப்பட்ட திறமையான நடிகர்கள் என்பது அன்றைக்கு மேடையில் தெரிந்தது. அடுத்த சில நாட்களில் வெளிவந்த அவுட்லுக் இதழில் அம்பலப் படுத்தப்பட்ட நீரா ராடியா ஃபோன் பேச்சு டேப்களைப் படித்தபோதுதான், அவர்களின் நடிப்புத் திறமையின் முழுப் பரிமாணமும் புரிந்தது. சிவாஜி கணேசன் முதல் தனுஷ் வரை பத்மினி, சாவித்திரி முதல் த்ரிஷா வரை அத்தனை நடிகர்களையும் தூக்கிச் சாப்பிட்டு விடுகிற திறமையுடன் ஒரே குடும்பத்தில் இத்தனை பேர் இருக்கிறார்களே என்று வியப்பாகவும் எரிச்சலாகவும் இருந்தது.

மக்களுக்குத் தொண்டு செய்வதற்காக தயாநிதி மாறனும் கனிமொழியும் ஆ.ராசாவும் எவ்வளவு துடித்திருக்கிறார்கள் என்பதை நீரா ராடியா டேப்கள் நமக்குப் புரியவைக்கின்றன. இந்த டேப்கள் எதுவும் எந்தப் பத்திரிகையாள -ரும் தனி முயற்சியில் பதிவு செய்தவை அல்ல. அரசாங்கத்தின் வருமான -வரித் துறை, உள்துறை அனுமதியுடன் நீரா ராடியாவைத் தொடர்ந்து கண்காணித்துப் பதிவு செய்தவை. இப்போது உச்ச நீதி மன்றத்தின் முன்னால் தாக்கல் செய்யப்பட்டிருப்பவை. இவற்றிலிருந்து தெரியவரும் தகவல்கள் தான் என்ன?

1. ‘கருணாநிதிக்கு வயதாகி புத்தி பேதலித்துவிட்டது. ( senile ). இனிமேல் தானும் ஸ்டாலினும் தான் கட்சியை நடத் திச் செல்லப் போகிறோம். காங்கிர ஸார் என்னுடன் பேசுவதுதான் நல்லது. ஸ்டாலினும் என் கட்டுப் பாட்டில் தான் இருப்பார்’ என் றெல்லாம் தயாநிதிமாறன் தில்லியில் சொல்வதாக நீரா ராடியா, ஆ.ராசாவிடம் சொல்கிறார்.

2. அழகிரிக்கு ஆங்கிலம் தெரியாது என காங்கிரஸார் மனத்தில் விதைத்தது யாரென்று தமக்குத் தெரியும் என ராசா சொன்னதுக்குதான் மேற்படி பதில்.

3. அதுமட்டுமல்ல அழகிரி ஒரு கிரிமினல். ஐந்தாவது வகுப்புக்கு மேல் படிக்கவில்லை என்றும் தயாநிதி சொல்லியிருக்கிறார். இதையெல்லாம் கருணாநிதியிடம் சொல்லுங்கள் என்கிறார் நீரா.

4. இல்லை. நான் அழகிரியிடமே சொல்லிவிட் டேன். அவர் தலைவரிடம் போய்ச் சொல்லிவிட்டார் என்கிறார் ராசா.

5. எங்களுக்கு டி.ஆர்.பாலுவுடன்தான் பிரச்னை. ராசாவிடம் இல்லை என்று சோனியா காந்தியை நேரடியாகவே கருணாநிதியிடம் ஃபோனில் சொல்ல வைக்கும்படி ராசா, நீராவைக் கேட்டுக் கொள்கிறார். அகமது படேல் மூலம் சொல்லுவதாக நீரா சொல்கிறார். பாலுதான் பிரச்னை என்பதை எழுதி ஒரு சீலிட்ட கவரில் வைத்து கருணாநிதியிடம் கொடுக்கச் சொல்கிறார் ராசா.

6. தம்மைத்தான் தி.மு.க சார்பில் தில்லியில் காங்கிரஸாருடன் பேசும்படி கருணாநிதி தனியே சொல்லியனுப்பி இருப்பதாக தயாநிதி மாறன் தில்லியில் சொல்லிவருவதாக நீரா, கனிமொழியிடம் சொல்கிறார்.

7. தயாநிதி பொய் சொல்வதாகவும் பொய்களைப் பரப்புவதாகவும் கனிமொழி, நீராவிடம் சொல்கிறார். அதற்கு நீரா, சென்னையில் சன் டி.வி.காரர்கள் இதர வட இந்திய சேனல்கள் எல்லோரிடமும் தவறான செய்திகளை வேண்டுமென்றே பரப்புகிறார்கள் என்று தம்மிடம் சி.என்.என்.ஐ.பி.என். சேனலின் ராஜ்தீப் சர்தேசாய் கூறியதாகத் தெரிவிக்கிறார்.

8. தயாநிதி, பதவி ஏற்பு நிகழ்ச்சிக்குச் செல்லப் போவதாக நீரா, கனிமொழியிடம் சொல்கிறார். போகக்கூடாது என்று கருணாநிதி சொல்லியிருப்பதாகக் கனிமொழி சொல்கிறார். ராசாதான் போகவேண்டும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறதாம். ஆனால் தயாநிதி பின்னால் கருணாநிதியிடம் வந்து அகமது படேல் கூப்பிட்டதால் சென்றேன் என்று ஏதாவது கதை விடுவார் என்கிறார் கனிமொழி. இதையெல்லாம் அப்பாவிடம் சொல்ல வேண்டி யதுதானே என்று நீரா கேட்கிறார். அய்யோ அவருக்குப் புரியவே புரியாது, என்று அலுத்துக் கொள்கிறார் கனிமொழி. விரக்தியடையாதே. நீதான் மகள். நீதான் அப்பாவிடம் பேசவேண்டும் என்று ஆறுதல் சொல்கிறார் நீரா.

9.தமக்கு கேபினட்டில் என்ன துறை தருவார்கள் என்று நீராவிடம் கனிமொழி கேட்கிறார். நல்வாழ்வு, சுற்றுச் சூழல், விமானத்துறைகளில் ஒன்றைத் தரச் சொல்லியிருப்பதாக நீரா சொல்கிறார். சுற்றுலா வேண்டாம் என்கிறார் கனிமொழி.

10. தொழிலதிபர் ரத்தன் டாட்டாவுடன் நீரா பேசும்போது, அமைச்சர் ராசாவை தயாநிதி துரத்தித் துரத்தி அடிப்பது கவலையாக இருப்பதாக டாட்டா சொல்கிறார். எதுவும் ஆகாது. அப்படியே ஆனாலும், ராசா இடத்துக்குக் கனிமொழிதான் வருவார் என்று ஆறுதல் சொல்கிறார் நீரா.

11. இன்னொரு பேச்சில், ராசாவுக்காக இவ்வளவு செய்திருந்தும் இப்படி ( நமக்குச் சாதகமில்லாமல்) நடந்துகொள்கிறாரே என்று கவலைப்படுகிறார் ரத்தன் டாட்டா. கோர்ட் உத்தரவினால் அப்படி என்று தம்மிடம் ராசா விளக்கியதாகவும் கோர்ட் உத்தரவைப் பற்றிக் கவலைப்படவேண்டாம். அதற்கு வியாக்யானம் சொல்வது ராசா கையில்தான் இருக்கிறது என்று ராசாவிடம் சொல்லிவிட்ட தாகவும் நீரா தெரிவிக்கிறார்.

12. புதிய அட்டர்னி ஜெனரல் பற்றி ரத்தன் டாட்டா கவலை தெரிவிக்கிறார். அவரைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். நமக்கு சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்ரமணியம்தான் முக்கியம். அவரைப் பார்க்கப்போகிறேன். அவருக்கு அனில் அம்பானியைத் துளியும் பிடிக்காது. நேர்மையானவர். (!) அனில் சொல்வதை ஒப்புக் கொள்ளமாட்டார் என்று நீரா பதிலளிக்கிறார்.

13. அனில் அம்பானியின் குழப்படிகள் பற்றி ஏன் மீடியா அம்பலப்படுத்தாமல் இருக்கிறது என்று டாட்டா, நீராவைக் கேட்கிறார். விளம்பர பலம்தான். ஏதாவது நெகட்டிவாக எழுதினால் உடனே விளம் பரத்தை நிறுத்தி விடுகிறார்கள் என்று டைம்ஸ் ஆஃப் இந்தியாவும் தைனிக் பாஸ்கர் பத்திரிகையும் சொல்கிறார்கள். மற்றவர்களும் இதைச் செய்யமுடியுமே என்றேன். மீடியா ரொம்ப ரொம்ப பேரா சைப்படுகிறது என்று விளக்குகிறார் நீரா.

14. என்.டி. டி.வி.யின் பர்க்கா தத்துடன் நீரா பேசுகிறார். இருவரும் காங்கிரஸ் – தி.மு.க அமைச்சர் பதவிப் பங்கீடு பேச்சு வார்த்தைகளை விவாதிக்கிறார்கள். தாம் காங்கிரஸ் தரப்பிடம் என்ன தெரிவிக்க வேண்டும் என்று பர்க்கா கேட்கிறார். தாம் அம்மா, மகள் (ராஜாத்தி, கனிமொழி) இரு வருடனும் பேசிவிட்டதாகவும் , காங்கிரஸ் தலைவர்கள் கருணாநிதியிடம் நேரடியாகப் பேசவேண்டும் என்றும் தயாநிதி மாறன், பாலு இருவரையும் வைத்துக் கொண்டு பேசக் கூடாது என்றும் நீரா சொல்கிறார்.

15. ஹிந்துஸ்தான் டைம்ஸின் ஆசிரியர் இயக்குனர் வீர் சிங்வியும் நீராவும் பேசுகிறார்கள். சிங்வி, தாம் தொடர்ந்து சோனி யாவையும் ராகுலையும் சந்தித்து வருவதாகச் சொல்கிறார். அமைச்சர் இலாக்கா பங்கீட்டுப் பிரச்னை காங்கிரஸ்-தி.மு.க பிரச்னை அல்ல. தி.மு.கவின் உள்தகராறுதான் என்கிறார். இரண்டு மனைவிகள், ஒரு சகோதரன், ஒரு சகோதரி, ஒரு மருமகன், என்று எல்லாம் ஒரே சிக்கலாக இருக்கிறது. கருணாநிதி தானே நேரில் பேசட்டும். அல்லது இன்னார்தான் தம் சார்பில் என்று ஒரே ஒருவரைத் தெரிவிக்கட்டும். ஆளுக்கு ஆள் பேசுகிறார்கள். தயாநிதி, குலாம் நபி ஆசாதை அடிக்கடி கூப்பிட்டு நான் தான் அதிகாரபூர்வமான பிரதிநிதி என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார். யாரும் அவரை சீரியசாக எடுத்துக் கொள்வதில்லை என்று வீர் சிங்வி சொல்கிறார்.

16. நீரா உடனே தயாநிதி மாறனை அமைச்சரவையில் சேர்க்கப் பெரும் நிர்ப்பந்தம் இருப்பதாகச் சொல்கிறார். என்ன நிர்ப்பந்தம்? தயாநிதி, கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளுக்கு 600 கோடி ரூபாய் கொடுத்திருப்பதாகவும் அதனால் ஸ்டாலினும், செல்வியும் நிர்ப் பந்திப்பதாகவும் நீரா சொல்கிறார்.

இப்படியாகத் தமிழ் நாட்டின் மானத்தை தில்லியில் தி.மு.க தலைவர் கருணாநிதியின் குடும்பம் நாறடித்துக் கொண்டிருக்கும் கதை தொடர்கிறது.

படிக்கப் படிக்க ரத்தம் கொதிக்கிறது…

மேலே கொடுக்கப்பட்டது சுருக்கம்தான். முழு உரையாடல்களைக் கேட்டால், மந்திரி பதவிக்கான வெறி, ஆவேசம், பேராசை, நினைத்தபடி ஒவ்வொன்றும் நடக்கவில் லையே என்ற ஆதங்கம், எரிச்சல், எப்படி யாவது காரியத்தை முடித்துவிடவேண்டு மென்ற பதைப்பு எல்லாம் கனிமொழியின் பேச்சில் தொனிக்கின்றன. ஒவ்வொருவர் பேச்சிலும் ஒரு தொனி இருக்கிறது. தைரியம், மமதை, எல்லாம் தம் கண்ட்ரோலில் இருக்கிறது என்ற மிதப்பு எல்லாம் தெரிகின்றன.

இந்திய ஜனநாயகத்தின் அடிப்படை களையே உலுக்கும் கேள்விகளையும் அவற்றுக்கு அதிர்ச்சியான பதில்களையும் இந்த டேப்கள் நமக்குள் எழுப்புகின்றன.

கேள்வி 1: அமைச்சர்களைத் தேர்ந் தெடுப்பது யார்? பிரதமரா? தொழிலதி பர்களா?

பதில்: தொழிலதிபர்கள்தான். மன் மோகன்சிங் ஒரு டம்மி பீஸ்.

கேள்வி 2: எதற்காகக் குறிப்பிட்ட துறை தமக்கு வேண்டுமென்று அலைகிறார்கள்? தொண்டு செய்யவா? கொள்ளையடிக்கவா?

பதில்: கேள்வி கேட்ட முட்டாளே! தொண்டுக்கும் அரசியலுக்கும் என்ன சம் பந்தம் ? கொள்ளையடிக்கத்தான்.

கேள்வி 3: எல்லா ஊழல்களையும் முறை கேடுகளையும் அம்பலப்படுத்தும் மீடியா காரர்கள் அரசியல்வாதிகளுடன் செய்தி சேகரிக்கப் பேசினால் குற்றமா ? அது தரகு வேலை பார்ப்பதாகிவிடுமா?

பதில்: செய்தி சேகரிப்பவரின் தொனி வேறு. தரகு பேர்வழியின் தொனி வேறு. நிச்சயம் ராடியா டேப்களில் இருக்கும் தொனி தரகர்களின் தொனிதான்.

கேள்வி 4 : ராடியா டேப்கள் பற்றி கருணாநிதி, கனிமொழி, ராசா, தயாநிதி மாறன், மன்மோகன்சிங், சோனியா, ராகுல் காந்தி, ரத்தன் டாட்டா ஆகியோர் ஏன் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை ?

பதில்: சொன்னாலும் நாம் நம்பப் போவதில்லை என்பது அவர்களுக்குத் தெரியும் என்பதால்தான்.

கேள்வி 5: இத்தனைக்கும் பிறகு எப்படி மக்களைத் தேர்தலில் சந்திக்கத் தெருத் தெருவாக இனி வருவார்கள் ?

பதில்: ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய்களில் ஒரு துளியை, கவர்களில் கொடுத்தால் மக்களுக்குப் போதுமானது என்று அவர்கள் நம்புவதனால்தான்.

இந்தக் கட்டுரையை எப்படி முடிக்க? கண்கள் பனித்தன. நெஞ்சம் இனித்தது என்றா?

http://manikandanvisvanathan.wordpress.com/2010/12/21/

தி மு க -2050- அல்ல 2015- ல் கூட இது நடக்கலாம்

முதலில் “ கடவுள் வாழ்த்து “

மொழி வளர்த்த ஆசாடபூதியே போற்றி
திருக்குவளை தீய சக்தியே போற்றி
மஞ்சள் துண்டு மடாதிபதியே போற்றி
காகிதப்பூவை மணந்த கண்ணனே போற்றி
கனிமொழியின் தந்தையே போற்றி
செம்மொழி மாநாடு தந்த செம்மலே போற்றி
அஞ்சாநெஞ்சனை பெற்ற அண்ணலே போற்றி
தளபதியின் தந்தையே போற்றி
மானாட மயிலாட தந்த மன்னவா போற்றி
குஷ்பூவை கட்சியில் சேர்த்த தலைவா போற்றி
வீல் சேரில் வரும் வில்லனே போற்றி
சிங்களனை வாழவைத்த சிற்பியே போற்றி
ஈழத்தை அழித்த இதயமே போற்றி
தமிழின துரோகியே போற்றி போற்றி

மொழி வரலாறு:

தமிழ் என்ற மொழி, 20ம் நூற்றாண்டு வரை, எழுத்து வடிவம் பெறாமல் பேச்சு வடிவிலேயே இருந்தது. 20ம் நூற்றாண்டில் திருக்குவளையில் பிறந்த முத்துவேல் கருணாநிதி என்பவர் தான் தமிழ் என்ற மொழிக்கு எழுத்து வடிவத்தை தந்தவர். அவர் பிறந்த பிறகுதான் தமிழே பிறந்தது.

தமிழ் மட்டும் இல்லாமல், இயற்றமிழ், இசைத் தமிழ் மற்றும் நாடகத்தமிழ் ஆகிய அனைத்தையும் கண்டு பிடித்ததால் தான், கருணாநிதியை முத்தமிழ் அறிஞர் என்று அழைக்கின்றனர்.

20ம் நூற்றாண்டு வரை, திருக்குறளை திருவள்ளுவர்தான் கண்டுபிடித்தார் என்று சில பார்ப்பன ஏடுகள் திரித்து எழுதிக் கொண்டிருந்தன. 2010ல் வாழ்ந்த சிறந்த மொழியறிஞரான வாலி என்பவர் தான், திருக்குறளை எழுதியது கருணாநிதிதான் என்று கண்டு பிடித்தார். திருக்குறள் மட்டுமல்லாமல், கருணாநிதி, சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, கம்பராமாயணம் என்று பல்வேறு இலக்கியங்களை கருணாநிதி எழுதியுள்ளார் என்று வாலி கூறியுள்ளார்.

21ம் நூற்றாண்டில் வாழ்ந்த கவிஞர் வைரமுத்து என்பவர், தமிழை மட்டுமல்ல, பாரசீகம்,உருது, வங்காளம், இந்தி, துளு, மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளுக்கும் எழுத்து வடிவை தந்தவர் கருணாநிதி தான் என்று ஒரு மொழி ஆய்வு நூலில் குறிப்பிட்டுள்ளார்.

இது மட்டுமல்லாமல், கருணாநிதி தொல்காப்பியம் என்ற தமிழ் இலக்கண நூலையும் எழுதியுள்ளார் என்று வரலாற்று ஏடுகள் தெரிவிக்கின்றன.

கணிதம்:

திருக்குவளையிலிருந்து திருட்டு ரயிலில் வந்த ஒரு தகரப் பெட்டி, பல்லாயிரம் கோடிகளாக எப்படி மாறுவது என்பதை மாணவர்கள் கணக்காக போட வேண்டும்.

அடுத்து, ஒன்று இரண்டாக, இரண்டு மூன்றாக, பல்லாயிரக்கணக்கான எண்ணிக்கையில் குடும்பத்தை எப்படி பெருக்குவது என்பது அடுத்த கணக்கு.

பத்துக்கு பத்து என்ற சுற்றளவில் இருந்த ஒரு அறையை எப்படி ஆயிரக்கணக்கான சதுர கிலோ மீட்டர்களாக எப்படி பெருக்குவது என்பதை மாணவர்கள் பயிற்சி எடுக்கவும்.

1ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு நடந்து அரசுக்கு 7000 கோடி வருமானம் வருகிறது. 2ஜி ஏலம் விடும் போது, 60,000 கோடி வருமானம் அரசுக்கு செல்லாமல், அந்தப்புரத்திற்கு செல்வது எப்படி என்பதை பித்தாகரஸ் தியரத்தை வைத்து மாணவர்கள் கணக்கிட வேண்டும்.

புவியியல்:

உதய சூரியனை கோள்கள் அனைத்தும் எப்படி சுற்றி வருகின்றன என்பதைப் பற்றி மாணவர்கள் இந்தப் பாடத்திட்டத்தில் தெரிந்து கொள்ளலாம்.

விஞ்ஞானம் வளர்வதற்கு முன்னால், சூரியன் தான் பூமியை சுற்றி வருகிறது என்று நம்பிக் கொண்டிருந்தனர். முதன் முதலில் கோப்பர்நிக்கஸ் என்ற விஞ்ஞானி, கருணாநிதி என்ற சூரியனைத் தான் அனைவரும் சுற்றி வருகிறார்கள் என்று கண்டு பிடித்து சொன்னார்.

தலைமைச் செயலகத்தில் கருணாநிதி என்ற சூரியனை அமைச்சர்கள் அதிகாரிகள் என்ற பல்வேறு கோள்கள் சுற்றி வருவதே சூரியனைத் தான் மற்ற கோள்கள் சுற்றி வருகின்றன என்பதற்கான சான்று.

வரலாறு:

தமிழ்நாட்டை ஆட்சி செய்த திருக்குவளை சாம்ராஜ்யம் தான் இருப்பதிலேயே மிகப் பெரிய சாம்ராஜ்யமாக கருதப் படுகிறது. முதன் முதலில் அண்ணா என்பவர் உருவாக்கிய இந்த சாம்ராஜ்யத்தை, கருணாநிதி என்பவர் கைப்பற்றினார். அவர் கைப்பற்றியவுடன், தமிழகத்தை பல்வேறு குறுநில மாநிலங்களாக பிரித்து தனது குடும்பத்தினர் ஒவ்வொருவரையும் ஆட்சி செய்ய பிரித்துக் கொடுத்தார்.

கருணாநிதி சந்தித்த முதல் போர், அண்ணாமலை பல்கலைகழகத்தில் உதயக்குமார் என்ற குறுநில மன்னனை கொன்று சிதம்பரத்தை கைப்பற்றியது. உதயக்குமார் என்ற குறுநில மன்னன், கருணாநிதிக்கு வழங்கப் பட்ட பட்டத்தை கேள்வி கேட்டதால், அவர் மீது போர் தொடுத்தார் கருணாநிதி.

கருணாநிதிக்கு மூன்று மகன்கள். ஒருவர் இளவரசர் மு.க.முத்து. இவர் தண்ணீர் தேசத்தின் இளவரசனாக ஆக்கப் பட்டார். அடுத்தவர் இளவரசர் அஞ்சா நெஞ்சன். திருக்குவளை சாம்ராஜ்யத்திலேயே அஞ்சா நெஞ்சன் தான் மிகச் சிறந்த வீரனாக கருதப் படுகிறார். தனது சாம்ராஜ்யத்தை திருச்சிக்கு தெற்கே விரிவுப் படுத்திக் கொண்டே சென்றர் அஞ்சா நெஞ்சன்.

தா.கிருஷ்ணன் என்ற ஒரு குறுநில மன்னன் அஞ்சா நெஞ்சனை எதிர்த்துக் கேள்வி கேட்டார் என்ற காரணத்துக்காக அங்கே படையெடுத்துச் சென்று அவரை வீழ்த்தினார் அஞ்சா நெஞ்சன். அதற்கு அடுத்து தினகரன் என்ற ஒரு சிறு குழு, அஞ்சா நெஞ்சனுக்கு எதிராக குரல் கொடுத்த போது, தினகரனை படையெடுத்துச் சென்று தாக்கி, மூன்று பேரை கொன்று தினகரனையும் வெற்றி கண்டவர் இளவரசர் அஞ்சா நெஞ்சன்.

அடுத்த இளவரசரான இளைய தளபதி தனது அண்ணன் அளவுக்கு சுதாரிப்பாக இல்லை என்றாலும், தன்னால் இயன்ற அளவுக்கு தந்தையின் சாம்ராஜ்யத்தை விரிவு படுத்துவதில் உதவிகள் செய்துள்ளார். 21ம் நூற்றாண்டின் இறுதியில் துணை மன்னனாக பதவி ஏற்றார் இளைய தளபதி.

பட்டத்து இளவரசியான கனிமொழி தனது அண்ணன்களுக்கு சிறிதும் சளைத்தவர் இல்லை என்ற வகையில் டெல்லி வரை சென்று வெற்றிக் கொடி நாட்டியவர்….

http://manikandanvisvanathan.wordpress.com/2010/12/31/293/