அரிந்தம் பந்தோபாத்யாய், தமிழாக்கம். சேஷாத்ரி ராஜகோபாலன்
(Bandyopadhyay Arindam – பந்தோபாத்யாய் அரிந்தம் - ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம். (ஆங்கிலத்தில் 11-டிசம்பர்-2010இல் வெளிவந்தது) http://www.blogs.ivarta.com/An-open-letter-Mr-Rahul-Gandhi/blog-395.htm
தமிழாக்கம் செய்தவர்: சேஷாத்ரி ராஜகோபாலன்.
முதல் பகுதியாக “ராம் ஜேத்மலானி எழுதிய-நன்நெறியும் அதிகாரம் தரும் வலிமையும்-ETHICS & POWER, எனும் கட்டுரை முன்னர் வெளியிடப்பட்டது)
இனி, பகுதி-இரண்டு;
இந்திய நாட்டு வருங்கால பிரதம மந்திரியே! நேரு-காந்தி வம்சத் தோன்றல் ராகுல் அவர்களே,
நீங்கள் ஒரு சாதாரணவர் அல்ல என எனக்கு நன்றாகத் தெரிகிறது. தேர்தலில் உங்களுடன் போட்டியிட்டு எவரும் வெற்றியடைய முடியாத, பட்டத்து இளவரசரென்றும், வருங்கால பிரதம மந்திரி எனவும் என் போன்ற சாமானிய மக்களுக்கும் அடிக்கடி வலியுறுத்தப் படுகிறது. காங்கிரஸ் கட்சியை புதிதாய் மெருகூட்டி அமைக்க இறைவனால் பிரத்யேகமான அனுப்பப்பட்ட அவதார-மீட்பாளர் (messiah) நீங்களே என, அவ்வப்போது பறைசாற்றப் படுகிறது. இதற்கெல்லாம் சிகரமாக, மிகத் துடிப்புள்ள இளைஞராக இன்று இருப்பதால், வருங்காலத்தில் ஓசைப்படாமல் மாபெரும் புரட்சி செய்து, இந்திய நாட்டில் தற்போதிருக்கும் எல்லா ஒழுங்கு முறைகளையும் முற்றிலும் மாற்றி அமைக்க விரும்பும் வருங்கால முடி சூடா மாமன்னரென, மக்கள் மனதிலிருந்து எளிதில் துடைதெழுத இயலாதவாறு உணர்த்தப் படுகிறது.
சமீபகாலத்தில், தற்செயலாக ஒருவருடைய முயற்சியுமின்றி, மிக எளிதாக நிகழ்ந்த மாற்றங்கள் அனைத்தையும், மாபெரும் வெற்றி என சித்தரிக்கப் பட்டு, உங்களுக்கும் இம் மாற்றங்களுக்கும் எவ்வித சிறு தொடர்பு தொலை தூரத்திலும் கூட இல்லாது போனாலும், இதன் நற்பெயர் அனைத்தும் தன்னிச்சையாக, நேரு-காந்தி குலக்கொழுந்தாக உதித்த ஒரே காரணத்திற்காக, உங்களுகே அர்ப்பணிக்கப் படுகிறது. இவ் வெற்றிப் பட்டியலில் 2009 இல் நடந்தேறிய பாராளுமன்ற சட்டசபை தேர்தல் வெற்றிகளும் அடக்கம்; ஆனால், தேர்தலில், வோட்டை பதிவு செய்யும் மின்னணு இயந்திரதையே (EVM) சந்தேகிக்கப் படும் படி இன்று உள்ளது. இருப்பினும், 2009இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்குக் கிடைக்கப்பெற்ற வெற்றி, இதன் நற்பெயர் உங்களுகே கற்பித்து கூறப் படுகிறது.
[ஆனால், தற்கால செய்திகளில், டாக்டர் சுப்பிரமணிய ஸ்வாமியின் EVM போன்ற ஏகப்பட்ட குற்றச் சாட்டுகளுக்கு இதுவரை எந்த தக்க பதிலளிக்காதது, EVMஇல் உள்ள கோளாறுகளை நிரூபித்துக் கொண்டிருந்த இந்திய EVM நிபுணர் ஒருவர் கைது செய்யப்பட்டது, இரு EVM வெளி நாட்டு நிபுணர்களை டில்லி விமான நிலையத்திலேயே அடைத்து வைத்து, பின் அந்தந்த நாட்டு தூதரகங்கள் செய்த கடு முயற்சிக்குப் பின், இந்தியாவுக்குள் நுழைய அனுமதி வழங்கப்பட்டது பற்றி படிக்கும் போது மக்களுக்கு ஏதோ குறைபாடு / குளறுபடி கட்டாயம் இருக்கிறது என ஊகிக்க ஆரம்பித்து விட்டனர். தங்களுக்குத் தெரியாமல் திரை மறைவில் EVMஇல் ஏதோ எங்கோ எப்படியோ, விபரீதங்க்கள் கட்டாயமாக இருக்கலாமென சாமானிய மக்கள் (‘ஆம், ஆத்மி’ ‘आम आदमी’) அனுமானிக்கிறார்கள்].
இதன் காரணமாக, இந்திய தகவல் துறைக்கு நீங்கள் ஒரு கவர்ச்சிமிக்க தனி கவனிப்புக்குப் பாத்திரமான வராகக் கருதப் படுகிறீர்கள். இந்திய நாட்டில் உள்ள மின்னணு தகவல் துறைக்கு (electronic media) வேண்டிய உங்களைச் சார்ந்த படங்கள், கட்டுரைகள், செய்திகள், இல்லாமல் பத்திரிக்கைகளுக்கும், காணொளிகளுக்கும், ஒரு நாள் கூட கழிக்கமுடியாது என்ற நிலையை உண்டாக்கியும் விட்டு இருக்கிறீர்கள். இவைகளை பிரசுரம் செய்வதில் அவர்களுக்கு ஒரு ‘கிளு கிளு’ப்பு, மெய் சிலிர்ப்பு, புத்துணர்ச்சி முதலியவை ஏற்படுகிறது போலும்! உதாரணமாக, அதில் ஒன்று, ‘தளித்’ வீட்டில், அவர்களுடனேயே கிராமத்தில் ஒரு இராத்தங்கியது.
கிராமப்புரம் மட்டுமல்ல; நகரத்திலுள்ள பகட்டான சிற்றுண்டி சாலையில் மகளிருடன் சிரித்து மகிழ்ந்து, காலை உணவு உண்ட அரும் காட்சியை அச்சிட்டது இந்திய தகவல் துறைக்கு மட்டற்ற மகிழ்ச்சியை எளிதில் அள்ளித் தருகிறதாக ஆகி விடுகிறது.
சமீபத்தில் ஆந்திரப் பிரதேஷில் புதிதாகத் தேடிப் பொறுக்கி எடுக்கப்பட்ட முதல் அமைச்சர், N. கிரண் குமார் ரெட்டி, தான் சத்தியப் பிரமாணம் எடுத்துக்கொள்வதற்கு முன்னரே, தன் நன்றியை களிப்புடன் காட்டி, மிகுந்த ஆர்வத்துடன் 2014இல் நடக்க இருக்கும் தேர்தலில், தன் பூரண ஒத்துழைப்புடன் ஆந்திரா விலுள்ள எல்லா காங்கிரஸ் பாராளுமன்றத் தொகுதிகளையும் வென்று, இன்னும் அதிக உரிமையுடன் உங்களையே இந்திய நாட்டுப் பிரதமராக்கிக் காட்டுவதாக, எல்லா ஜன நாயக ஒழுங்குமுறைகளையும் மீறி பகிரங்கமாக, சவால் விட்டு, தன் தணியாத நன்றிகலந்த ஆசைக் கருத்தை வெளியிட்டு இருக்கிறார். உண்மையில் உங்கள் பாரம்பரியமோ தியாகிகளால் நிறையப்பட்ட உன்னத வம்சம் என்பதற்கு மற்றொரு எடுத்துக்காட்டு கீழே கொடுக்கப் பட்டுள்ளது. பிரதம மந்திரி பதவியைத் தங்களுக்கு அளிக்கப் போவதை மற்றவர்கள் சொல்லும்போது கூட, உங்களுக்கு இதிலெல்லாம் இப்போது விருப்பமில்லை என தாங்கள் கூறியபோது, அப்பப்பா! தங்கள் அவையடக்கம் இந்திய மக்களை அப்படியே மயிர் சிலிர்க்க வைத்துவிட்டது. இம்மாதிரியான பிரதம மந்திரியை அடையக் கொடுத்துவைத்த இந்திய நாட்டு மக்கள் அனைவரும் எத்தனை ஜென்மங்களாக என்னென்ன பல்வகை கடுந்தவங்களை மேற்கொண்டனரோ! ஆந்திர முதலமைச்சரை விட்டுத் தள்ளுங்கள், அது ஏதோ நன்றியின் உச்ச நிலையில் உணர்ச்சி பீறிட்டு தன்னையறிமால் உதிர்த்த வசன தாரைகள் தான்!! அவரைச் சொல்லிக் குற்றமில்லை. அது இவர் கட்சியில் வளர்ந்த விதம் அப்படி! அவர் சொல்லியவற்றில், எதுவரை செயலாற்ற முடியுமோ? போகப் போக பார்க்கலாம். எல்லாவற்கும் சிகரமாக, உங்கள் நேரு-காந்தி வம்சத்துக்கே விசுவாசமுள்ள,
பிரதம மந்திரி பதவிக்காக தேடிப் பொறுக்கி எடுக்கப்பட்டவர், எவ்வித லஞ்ச ஊழல் அழுக்குக் கறைபடாத கையுடையவர் என்று கூறப்படும் கீர்த்திபெற்ற, திருவாளர் மன்மோகன் சிங்ஜி கூட, அவரே கொஞ்சமும் தயக்கமின்றி, காங்கிரஸ் கட்சி விரும்பினால், எப்போது வேண்டுமானாலும் தன் பிரதம மந்திரியை பதவியை துச்சமென்று தூக்கி எறிந்து விட்டு, ராகுல் காந்திக்காக தன் இடத்தை விட்டுக் கொடுக்கத் தயாராக இருப்பதாக பகிரங்கப் பிரகடனம் செய்துள்ளார். இப்படி மக்களை வசியம் பண்ணி, தன்னையே ஒரு மாபெரும் சக்தியாகவும், எவராலும் வென்று சமாளிக்க முடியாதவராயும், சிறு வயதினராக இருப்பினும், இச்சக்தி கொண்டு எப்போது வேண்டுமானாலும், எவருக்கும், எந்தவிஷயத்திலும் தன் அபிப்பிராயங்களையும் அள்ளி வீசும் உரிமை தங்களுக்கே உடையது என உங்கள் காங்கிரஸ் கட்சிப் பிரமுகர்கள் கருது கிறார்கள்!
ஒருவேளை உங்கள் தன்நம்பிக்கை எனும் ஆவிக்கூண்டு (High-flying ballon) இன்னும் உயர்ந்து மேலெழுந்து செல்ல, காற்றை இன்னமும் ஊதிப் பெருக்கிவிட, உங்களுக்கு முகஸ்துதி செய்வதற்கென்றே உருவாக்கப்பட்ட உங்களைச் சுற்றியுள்ள ஆதரவாளர்களுடன், உங்கள் மீது இயற்கைக்கு மாறான பொதுவான அக்கறையுள்ளவர்களின் தனிக்குழுக்களுமாகச் சேர்ந்து கற்பனைக்கே எட்டாத மாபெரும் பேரணிகளை காங்கிரஸ் கட்சிக் காகவே உண்டாக்கும் மனப்பாங்கு தகவல் துறை ஆட்களுக்குத் தான் உள்ளது. இவைகளெலாம் இன்று தகவல் துறை திட்டமிட்டு தயார் செய்ததல்லவா!!
தாங்களே ஒரு பாராளுமன்ற அங்கத்தினர் என்பதாலும், பல குண நலங்கள் உடையவர் என உங்கள் காங்கிரஸ்காரர்கள் சொல்லித் தான் சாமானிய மக்களுக்குத் தெரிகிறது. உங்களுக்காகவே, உங்களைச் சுற்றி உருவாக்கப்பட்ட தனிப் பெரும் பிரகாசமாகச் சுழலும் ஒரு என தெய்வீக ஒளி வட்டமும், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பெருங்குழுவிலிருந்து பொறுக்கி உருவாக்கப்பட்ட மிகச் சிலர் கொண்ட சிறு குழுவின் முக்கிய செயலாளர் என்ற பதவியும் உங்களிடம்தான் உள்ளது. மேலாக, மிகப் பிரசித்தி பெற்ற “நேரு-காந்தி” எனும் பரம்பரை நுட்ப மரபணு இயல்புகள், தங்கள் ரத்த நாளத்தில் கலந்து உரிமையுடன் பெற்றதாக இருக்கும் சிறப்பால், இப்பேற்பட்ட தங்களே, வம்சாவளி அரசியல் என்ற பொது கருத்துப்படிவத்தையே கூட (political concept of dynastic rule) மாற்றி அமைக்கும் ஒழுங்குமுறைத் திட்டத்தை உருவாக்க விரும்புகிறீர்களென சொல்லும் போது, என்போன்ற சாதா சாமானியப் பிறவிகளுக்கே, இந்த திட்டம், சுத்த படு கோமாளித்தன மாகவே புலப்படுகிறது. இதெல்லாம் நடக்கிற வேலையா!?
“தேனெடுத்தவன் புறங்கையை நக்கி சுவைக்காமல் விட்டு விட முடியுமா?”
இதெல்லாம் ஒரு விளம்பரத்திற்காகச் சொல்லப்படும், சாகச பகட்டு வித்தை எனக் கூட மக்களுக்கு அடையாளங்காண இயலாதென நினைத்துவிட்டீர்கள் போலத் தெரிகிறது!
முன்னாள் பிரதம மந்திரிகளான், தங்கள் தந்தை ராஜீவ் காந்தி, பாட்டி இந்திராஜி, ஆகிய இருவரும் இந்நாட்டுக்காக உயிர்பலித் தியாகம் புரிந்தது பற்றி காங்கிரஸ் கட்சியினர் காது புளித்து உள்சவ்வு கிழிந்து போகுமளவிற்கு சொல்லக் கேட்டுக் கேட்டு, ‘ஆம், ஆத்மி’ ‘आम आदमी’ எனும் சாமானியர்கள் முன்னரே மனம் நொந்து போயிருக்கிறார்கள். உங்கள் தந்தை, பாட்டி, மீது ஏற்பட்ட வன்முறை யால் தாக்கப்பட்டு உயிர் துறந்ததற்குக் கூட இந்தியா நாடே நஷ்ட ஈடு தரவேண்டு மென எதிர்பார்க்கிறீர்களா? தங்களுக்கே சம்பந்தமில்லாத அநாவசிய வன்முறையில் இந்நாட்டில் உங்களைப் போல எத்தனையோ பேர் தங்கள் நெருங்கிய உறவினர்களை இழந்திருக்கிறார்கள். அவர்களுக்குக் கிடைக்காத நஷ்ட ஈடு உங்களுக்கு வேண்டுமா? நஷ்ட ஈடு எம்மாதிரித் தேவை எனவும் சுட்டிக்காட்டவும். தங்கள் தந்தை ராஜீவ் காந்தி, பாட்டி இந்திராஜி, ஆகிய இருவரும், இறந்த பின்னணி காரணங்களைத் (circumstances or reasons) தோண்டி எடுக்க இக்கட்டுரை சரியான மேடையாகாது. இதுவரை உங்கள் பதவியால் கிடைத்தவைகள் எல்லாமே இன்னும் போதவில்லையா? இதையே சொல்லிச் சொல்லிக் கொண்டு இருப்பதற்குக் காரணமென்ன?
இதையெலாம் விட, மக்கள் மனதில் பளிச் பளிச்சென்று அடிக்கடி நினைவை வாட்டி வதைக்கும் தந்தை ராஜீவ் காந்தி, பாட்டி இந்திராஜி, ஆற்றிய ஏராள செய்கைகளால் எழும் எண்ணங்களும் அதனால் விளைந்த பின் விளைவு என்ற பயங்கரங்கள், மக்கள் கண் முன்னே ஒருங்கே தோன்றுகின்றன. இதனால் இந்திய நாட்டுக்கு விளைந்த நஷ்டத்தை யார் ஈடு செய்ய வேண்டுமெனவும் அறுதி இட்டுக் கூறிவிடவும்.
அதாவது தங்கள் பாட்டி-தந்தை இருவரும் இந்நாட்டுக்கு ஆற்றிய பெருந்தொண்டுகளான,
1. அவசரநிலைப் பிரகடனம், (Emergency),
2. சொந்த காரணங்களுக்காக மிகத் தவறாக பழிக்குப்பழி என சொல்லி சீக்கியர்களுக் கெதிராக காங்கிரஸ் கட்சிக்காரர்கள் விளைவித்த கலகங்கள் (anti-Sikh riots),
3. போஃபோர்-குவாட்ரோச்சி போன்ற (Bofors- Quattrocchi scandal), இந்திய நாட்டுக்கு இழைத்த துரோக, மானக் கேடான பழிகள்,
4. போபால் நச்சு-வாயு சோகங்கள், (Bhopal poisonous gas tragedy)
போன்ற இந்திய நாட்டின் மிகச் சோகமான துன்பியல் நிகழ்ச்சிகள்தான், பளிச்சென முதலில் மக்கள் நினைவில் நீங்காது இடம் பெற்று வாட்டுகின்றன.
இதற்கு மேலும் உங்களை இன்னும் திகைப் பூட்டி, திக்கு முக்காடாமல் செய்ய வேண்டாம் என தான் மக்களாகிய நாங்கள் நினைக்கிறோம்; ஆனால் முடியவில்லையே!. அதையும் சொல்லித் தொலைக்கிறேன்.
முதன் முதல் இந்திய பிரதம மந்திரியாகத் திகழ்ந்த, அதாவது உங்கள் கொள்ளுத் தாத்தா (பாட்டி இந்திராஜியின் தகப்பனார்-நேருஜி), இந்தியராகப் பிறந்தும், இந்தியாவை ஆண்ட கடைசி ஆங்கிலேயரென அடைமொழி சிறப்புப் பெயர் பெற்றவர், கடைசி கவர்னர்-ஜெனரல் மௌண்ட்பாட்டன் துரையின் மனைவி “எட்வினா’வுடன் மிக நெருங்கிய நட்புடையவர் என கருதப்படுபவர்:
1. இந்தியப் பிரதமர்-நேருவின் நண்பர் என கருதப்பட்ட சைனா பிரதமர் சௌ-என்-லாய், 1962இல், பஞ்சசீலக் கொள்கையுடன் எதிர்பாராமல், இந்திய நாட்டின் இருகால்களையும் சேர்ந்து வாரிவிட்டதால் இந்திய எல்லயில் சைனாவுடன் போர் நடந்தது (betrayal of China in 1962 through Chou-En-Lai). இதில் இந்திய ராணுவம் எல்லா விஷயத்திலும் மிகுந்த கஷ்ட, நஷ்டங்களை அடைந்தது.முக்கியமாக உலகத்தின் முன் இந்தியாவின் மானமே பறி போனது.
2. சைனப் பிரதமாராக இருந்த சௌ-என்-லாய் (Chou-En-Lai) கிண்டலாக, நேருஜிக்காக, உலக சொற்களஞ்சியத்துக்கு புதிதாக உருவாக்கிக் கொடுத்த சொல்லான, மிக ‘உபயோகமான முட்டாள்’ (very useful idiot) என சிறப்புப் பட்டம் பெற்றவர்.
3. காஷ்மீரில், முதல்வர் ஷேக் அப்துல்லாவுடன் சேர்ந்து 1948 முதல் உபரியாக நேருஜி செய்த ஆரம்பக் குளருபடிகள் (disputes, tragedies in Kashmir), இன்றுவரை நீடித்து வருங்காலத்தில் இன்னும் எத்தனை தொல்லை, ரொக்கம், நேர நஷ்டம் என்று தீர்ந்து தொலையுமோ??!.
4. ஐக்கிய நாட்டு பாதுகாப்பு சபையில் நிரந்த இடத்திற்காக (permanent seat at UN security council) மிக முட்டாள்தனமாக அலங்கோலங்களை நடத்திக் காட்டியவர்,
5. மற்றும் நேருஜியின் காரியதரிசியாக இருந்த M.O.மத்தாய், நேரு இறந்ததற்கான காரணங்களை மத்தாய் புத்தகத்தில் படித்தது, இந்திய மக்கள் மேலும் அதிர்ச்சி யடைந்துள்ளனர்.
இவைகளேல்லாம் நேரு வம்ச அங்கத்தினர்கள் யாவரும் ஒருவர் விடாமல், ஒருங்கே சேர்ந்து நடத்திக் காட்டிய அவலச் செய்கைகள் மக்கள் நினைவிலிருந்து இன்று வரையில், நிரந்தரமாக நீங்காமல் வாட்டி, வதைத்துக் கொண்டு இருக்கிறது. இவைகள் போதாதென்று, இன்றைய நாட்களில், உங்கள் அன்னை சோனியாஜி, (உண்மை இத்தாலியப் பெயர் - Edvige Antonia Albina Maino- “சோனியா” என்பது, ராஜீவை மணந்தவுடன் சோனியாஜியின் மாமியார், அதான்! உங்கள் பாட்டி இந்திராஜி செல்லமாக தன் இத்தாலிய மருமகளுக்கு கடி-மணம் கழிந்தபின் சூட்டிய புதுப்பெயர்), அடுத்தது நீங்கள் வேறு வரப் போகிறீர்கள் என் பேசிக்கொள்கிறார்கள். இன்னும் என்னென்ன மிச்சம் நடக்க இருக்கிறதோ!
அடுத்தாக, இந்நாட்டில் இருக்கும் பணக்காரர்கள், ஏழைகள் என்கிற “இரு ஹிந்துஸ்தானங் கள்” எனும் பிரிவுகளையும் இணைத்து ஒன்றாகச் சேர்த்திடும் பாலமாக, காங்கிரஸ் கட்சிதான் இருக்க முடியும் என தாங்கள் உறுதியான நிலைபாடுடன் உள்ளீர்களென மக்களாகிய எங்களுக்குத் தெரிகிறது. இந்த சமாசாரத்தில், மனசாட்சிக்கு துரோகம் செய்யாமல், மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் கூறுங்கள். ‘ஆம், ஆத்மி’ ‘आम आदमी’ இந்திய சாமானியர்கள் மிக ரத்தினச் சுருக்கமாக தெரிந்துகொள்ள விரும்புவது இது தான், “இரு இந்தியாக்கள்’ எனும் இதன் பின்னணியில் அங்கம் வகிக்க இருக்கும் நபர்கள் யார் யாரென விலாவாரியாக, பணக்காரர் என்பவர் யார், ஏழை என்பவர் யாரெனும் இரு வரையறைகளைத் தெளிவு படுத்த (clear definition) உங்களால் இயலுமா?
மிக சமீபத்தில் வெளிவந்த அறிக்கை ஒன்றில், இந்திய சுதந்திரத்திற்குப் பின், 1947முதல், 2008 வரை இந்தியா 462 பில்லியன் (ஒன்றுக்குப்பின் ஒன்பது பூஜ்யங்கள் உடைய எண், $462,00,00,00,000) அமெரிக்க டாலர் ($) இந்திய கஜானாவுக்குப் போய் சேரவேண்டிய அந்நிய செலாவணி செல்வத்தை - வரி ஏய்ப்புகள், சட்ட விரோதச் செய்கைகள், லஞ்ச லாவண்யங்கள், கருப்புப் பணப் புழங்கல்கள், பதுக்கல்கள், போன்ற பலதரப்பட்ட நாட்டுக்குப் புரிந்த துரோகச் செயல்களால் ஒட்டுமொத்தமாக இந்திய நாடே இழந்திருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. [ http://www.newkerala.com/news/world/fullnews-87245.html ]
462 பில்லியன் டாலகள் என்பது, நம் இந்திய நாட்டின் (தேசீய) மொத்த உள் நாட்டு வளர்ச்சி மதிப்பீட்டுத் தொகையில் (GDP = Gross domestic product) அதாவது 640 பில்லியன் டாலர்களில் ($) - 72% விழுக்காடாக உள்ளது. இதே 2008 வரை உள்ள புள்ளி விவரம் மட்டும் தான்; இன்றுவரை கணக்கெடுத்தால் எதில் முடியுமோ, அது ஆண்டவனுக்கே வெளிச்சம்!! அதாவது 462 கோடி அமெரிக்க டாலர்களை ($) அந்நிய செலாவணி வருவாயை இந்திய நாடு சாமானிய ஏழைமக்களுக்குத் தெரியாமல், மேலும் ஏழைகளுக்கும் இந்த துரோகச் செயல்களுக்கு எவ்விதத்திலும் சம்பந்த மில்லாது இருப்பதால், இப்பணக்காரர்களால் தான், இந்திய நாடே இழந்திருக்கிறது என மக்கள் நினைக்கிறார்கள். இப் பின்னணியில், இதில் பங்குதாரர்கள் யார் யாரென்று மக்கள் உங்களைத்தான் கேட்கிறார்கள். நீங்கள் தான் எங்கள் வருங்கால பிரதமராயிற்றே! உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் அத்துபடியாகத் தெரிந்திக்க வேண்டுமே!
பொருளாதாரம் பற்றி கேட்கப்படும் இக்கேள்வியாவது உங்களுக்குப் புரிகிறதா, அல்லது இல்லையா? இப்பேற்பட்ட உங்களைத் தான் இந்திய நாட்டை ஆள இருக்கும் வருங்கால பிரதமந்திரியாக ஆக்கிவிட - உங்கள் இத்தாலிய அன்னை–சோனியாவுடன், தற்கால பிரதம மந்திரி, லண்டன் பொருளாதாரக் கல்வி பள்ளி பட்டதாரி (London School of Economics graduate), இந்திய ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுனராக விளங்கியவர் (Governor, Reserve Bank of India), இந்திய நாட்டில் முதன்முதல் பொருளாதார சிர்திருத்தம் கொண்டுவந்து புரட்சி செய்த முன்னள் நிதி அமைச்சர், எவ்வித லஞ்ச ஊழல் அழுக்கால் கறைபடாத கையுடைய மன் மோகன் சிங்ஜி, ஏனைய காங்கிரஸ் கட்சி ‘ஆமாஞ்சாமி’ பிரமுகர்கள், தகவல் துறையினர் எல்லோரும் ஒட்டு மொத்தமாக, தங்கள் தளராத முயற்சியில் சதா சர்வ காலமும் ஈடுபட்டுள்ளனர். ஒரு வேளை, ‘இரு இந்தியாக்கள்’ என தாங்கள் கூறியபடி, வேறு எதையாவது மனதில் வைத்துக்கொண்டு சொல்கிறீர்களா அல்லது வேண்டுமென்றே மக்களை தவறான வழியில் இட்டுச் செல்ல விரும்புகிறீர்களா என ஆறு பத்தாண்டுகளாக (6 decades) அல்லது நினைவு தெரிந்த நாளாக ஏழைகளாகவே இருக்கும், ஒரே குழப்பத்தில் ஆழ்ந்துள்ள, ‘ஆம், ஆத்மி’ ‘आम आदमी’ இந்திய சாமானியர்கள் உங்களையே தான் திருப்பிக் கேட்க விரும்புகிறார்கள்.
உங்கள் காங்கிரஸுக்கு மிகவும் பிடித்த போராட்ட வாசகமான “கரீபி ஹடாவோ” -(गरीबि हटाओ) அதாவது “ஏழ்மையை அகற்று” எனும் வாசகம், அனேக ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சிதான் வள வள வென்று பிதற்றிக்கொண்டே இருக்கும் புளித்துப் போன வசனமாக உங்களுக்குக் கூடத் புரியவில்லையா? உங்களுக்குப் புரிகிறதோ இல்லையோ, மக்களுக்கு நன்றாகப் புரிந்து தொலைந்து விட்டது.
இதில் ஒரு விநோதமான குழப்பம் யாதெனில், இந்திய நாட்டு சரித்திரத்தில், கடந்த 62 ஆண்டுகளில் (2010) 37 (கிட்டத்தட்ட 60%) ஆண்டுகள், உங்கள் வம்சாவளியினரே நம் ஹிந்துஸ்தானில் ஆட்சி செலுத்தி வருகிறீர்கள் என்றாவது உங்களுக்குத் தெரியாமல் இருக்க வழியில்லை. பல முறை மற்றவர், அவலத்தில் நீங்கள் எல்லோருமாக மகிழ்வு கொள்வது போல, இன்றுவரை உங்கள் இத்தாலிய அன்னை மேன்மை தங்கிய சோனியாஜி அதி புத்திசாலித்தனமாக நடப்பில் இந்திய நாட்டையே ஆண்டு அரசாளும் மாதரசியாக, சீக்கிய பிரதம மந்திரியை ஆட்டிப்படைக்கும் இக்காலகட்டத்தில் தான், முறை கேடான தனிப்பட்ட சிலர் ஈட்டிய ஆதாயத்தால், நாட்டு செல்வத்தையே சூரையாடிய மானக் கேடுகளான (‘loots estimated’),
• Commonwealth games’` 2000 crores, ‘loot estimated’
• Adharsh ` 800 crores, ‘loot estimated’
• 2G Spectrum, loss to the Exchequer is `.1.76 lac crores. Loot estimated is `.60,000 crores
• Next in line, recent Rice scam details to follow–Loot not yet estimated!
என வெவ்வேறான கொடும் மானக் கேடான அவலங்கள்-இந்திய நாட்டின் மீது நடந்த மோசடிகள் (Fraud on entire Indian nation) அவ்வப்போது, காலந்தவறாமல், திடீர் திடீரென, தொடர் குண்டு வெடிப்பு வன்முறை போன்று, அடுத்தடுத்து தொடர்ந்து நடக்கிறதல்லவா? இந்நிகழ்ச்சிகளை சின்னஞ்சிறு குழந்தை முதல், படு தொண்டு கிழங்கள்வரை பட்டி தொட்டிகளில் உள்ளவர்களால் கூட விவாதிக்கப் பட்டு சந்தி சிரிக்கிறது. இந்த நாட்களில் யாருக்கும் குறிப்பாக அரசியல் வாதிகளுக்கு வெட்கமில்லை!........ Absolutely ‘NO’ shame!!
இந்த அட்டூழியங்களில், பங்கு கொண்டவர்களாக மதிப்பிட, வெகு ஆண்டு களாக இந்திய நாட்டு, சமூகத்தில் மேல் மட்டத்தில் உள்ள பணம் கொழுத்த பண முதலைகள் எனும், சுய நலமாக சொத்து சேகரிக்க என, முழு நேர அரசியல் எனும் தொழில் புரியும் அரசியல்வாதிகளா அல்லது பெரும்பான்மையாக நிரந்தர-ஏழைகளாக தினம் சோத்துக்கும்/கஞ்சிக்கும் ‘லாட்ரி’ அடிக்கும், ‘ஆம், ஆத்மி’ ‘आम आदमी’ இந்திய சாமானியர்கள் எனும் பொது மக்களா? அல்லது இவ்விருவர்களில் யார் பணக்காரர், யார் ஏழை என? என நீங்களே தீர்ப்பு சொல்லுங்கள். அரசியல் என்றால், குறி இன்றி, காற்றில் உயர பந்தடிக்கும் கால் பந்து போல விளையாட வேண்டும் என பொருளல்ல. சில நேரங்களில் உண்மையும்பேசி, நேர்மையாவும் நடந்து கொள்ளலாம்! தவறல்ல. (Political Air shots) இளம் சமுதாயத் தலைவரென உங்களை உருவப்படுத்தி தகவல் துறை வருணிப்பது போல, நீங்களும் அடிக்கடி நாட்டு இளைஞர்களை அரசியலில் சுறுசுறுப்பாக ஈடுபட தூண்டியும் விடுகிறீர்கள். தன்னிச்சையாக அடிமை சாசனத்தை ஒப்புக்கொண்ட, உங்களைச் சூழ்ந்துள்ள காங்கிரஸ் சுய நலக் கும்பல் போல, தர்பங்கா-பீஹார், அஹமதாபாத்-குஜராத் போன்ற இடங்களில், தாங்கள் அள்ளி வீசிய ஆதாரமற்ற அபிப்பிராயங்களையும், இளைஞர்கள் அப்படியே உங்களை நம்பிவிடுவார்கள் என மனப்பால் குடிக்காமல், அவர்களுடைய புத்திசாலித்தனத்தைக் குறைவாக மதிப்பீடு செய்து-அவமதிப்பாய் பேசாமல் இருந்தால் தான் உங்கள் வருங்காலத்திற்கு நல்லது. சராசரியாக உங்கள் வயதுடைய இளைஞர்களில் பலர், தாங்கள் கல்லூரியில் பட்டம் வாங்கிடதைவிட கொஞ்சம் அதிகம் படித்தவர்கள் அனேகம் பேர் இருப்பார்கள் என என் அனுமானம். (இங்கே குறிப்பிட்டது குழந்தைகள் பறக்க விட விரும்பும் காத்தாடி அல்லது ‘பட்டம்’ kite அல்ல, University Degrees! ஆமா.......ம்! நீங்கள் படித்த கல்லூரிகள், கலாசாலைகள், அங்கு எடுத்துக்கொண்ட பாடங்கள் முக்கிய புத்தகங்களின் பட்டியலைக் கொடுக்க இயலுமா?)
உங்களுக்கு நீதிஷ் குமார் பீஹாரில் புகட்டிய பாடங்களை, திரும்பத் திரும்ப ஆய்வு செய்து உங்களையே திருத்திக்கொள்ளப் படித்து பார்த்துக் கொள்ளவும். பீஹாரை நீதிஷ் குமார் முன்னேறப்பாதையில் இட்டுச் செல்லவில்லை என்ற உங்கள் பொய்யான பொறுப்பற்ற சொற்கள் தான் காங்கிரஸ் கட்சிக்கு, அதாவது ராகுல் காந்திக்கு படு தோல்வியை பெற்றுதந்தது என ஞாபகத்தில் கொள்ளவும். அங்குள்ள வாக்காளர்கள் எந்த விஷயத்திலும் உங்களுடன் ஒத்துப் போகவில்லை எனத் தெளிவாக, இனியாவது உங்கள் புத்தியில் உறைக்கிறதா இல்லையா? இதே கதிதான் உங்களுக்கு இனியும் எல்லா இடங்களிலும் வரக் காத்திருக்கிறது.
[தெய்வப் புலவர், திருவள்ளுவர் ‘அடக்கமுடைமை’ யில் (127)இல், “யாகாவாராயினும் நாகாக்க, காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு” எனக் கூறியுள்ளார். இத்தாலிய மொழியில் இதற்கு ஒப்பான நல்லுரை எனக்குத் தெரியாது, நீங்களே உங்கள் அன்னையைக் கேட்டு இட்டு நிரப்பிக்கொள்ளவும். ஒருவேளை இம்மாதிரி நல்லுரைகள் இத்தாலிய மொழியில் இல்லாதும் இருக்கலாம்].
உங்களுக்கு மறக்க முடியாத இன்னொரு சரியான பாடம்: காங்கிரஸ் கட்சியின் அரசியல் செயல் பாணி குஜராத்திலுள்ள வாக்காளர்களுக்கு, சுத்தமாகப் பிடிக்கவில்லை, எனும் சங்கதியை அங்கே நடைபெற்ற சட்டசபை, முனிசிபல் தேர்தல்களில் மிகத் தெளிவாக அங்குள்ள வாக்காளப் பெருமக்கள் உங்களுக்குப் புகட்டிய பாடம் இன்னுமா விளங்கவில்லை? காங்கிரஸ் கட்சியின் வாக்காளர் வங்கி அரசியல் கொள்கைபடி, நீங்கள் அங்குள்ள சிறுபான்மையினரான முஸ்லிம் வாக்குக்காக ஏதேதோ இட்டுக்கட்டி, அந்த மாகாண முதல் மந்திரி நரேந்திர சிங் மோதிஜியை, சைனா சர்வாதிகாரி ‘மா-ட்சே-துங்க்’ (Mao Zedong) உடன் ஒப்பிட்டு அநாவசியமாக அநாகரிகமாக ‘உளறி கொட்டி, கிளறி மூடியது’ காங்ரஸுக்கும் அங்கு உங்களைச் சேர்ந்தவர்களையும் படு தோல்வியடையச் செய்யவில்லையா? இதேபோல, உங்கள் அன்னை, சோனியா, முன்பு செய்த அம்மாதிரி அருவருக்கத்தக்க மிகத் தவறாக, நரேந்திர சிங் மோதிஜிக்குக் கற்பித்துக் கூறிய அடைமொழிச் சொற்றொடரான, “சாவு வியாபாரி” (merchant of death) என்ற பிதற்றலால் காங்கிரஸுக்குக் கிடைத்த படுதோல்விப் பாடங்கள் உங்கள் நினைவுக்கு என்றுமே வரவே வராதா?
செல்வாக்குடைய உங்களை மிக முகஸ்துதி செய்வோர், உங்களைச் சுற்றியிருக்கும் கவசம் போன்ற பாதுகாவலர்கள் (SPG guards) ஆகிய இவர்களையும் தாண்டி, உண்மையான செய்திகள் உங்களை வந்தடையுமானால், சிறுபான்மையினராக உள்ள முஸ்லிம்கள் கூட காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மையினரைத் திருப்திபடுத்தும் அரசியல் அவிவேக செயல்முறைக் கொள்கைகளால் மிகவும் சலிப்புற்றிருக்கினர் எனத் தெரிகிறது. இதற்கு சான்றாக, குஜராத்தில் நடைபேற்ற ஜில்லா பஞ்சாயத்து-முனிசிபாலிடி தேர்தல்களில், அதிக விழுக்காடாக அனேக முஸ்லிம்களும், நரேந்திர மோதிஜியின் கட்சிக்கே (BJP) தங்கள் மேலான வாக்குகளை அளித்துள்ளனர். பாரதீய ஜனதா கட்சி சார்பில் (BJP) தேர்தலில் போட்டியிட வேட்பாளர் மனுசெய்த 247 முஸ்லிம்களில், 118 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.
இதேதான் பீஹாரிலும் நடந்தேறியது. கீழ்க் குறிய ஆதாரப்படி, பீஹாரில் உள்ள முஸ்லிம்களும் பாரதீய ஜனதா கட்சி-ஜனதா-தல் (BJP-JD(U) alliance) கூட்டணிக்கே, தங்கள் வாக்குகளை அளித்துள்ளனர். அதாவது மொத்த 51 இடங்களில் 40 இடங்களில் இக்கூட்டணியே வெற்றியடைந்திருக்கிறது.
ஸ்ரீமான் ராஹுல் காந்தி அவர்களே! காங்கிரஸ் கட்சிக்கு குஜராத் முஸ்லிம்கள் நம்பிக்கை துரோகம் செய்தனர் என்பதில் எந்த அர்த்தமும் மில்லை. இதற்கு இன்னொரு முக்கியகாரணம் உங்களுக்குத் தெரியுமோ தெரியாதோ? நீங்கள் அடிக்கடி மேற்கோள்களாகக் காட்டும், உங்களால் அரசாட்சியின் போது நியமிக்கப்பட்ட (UPA-appointed) சச்சார் சட்டக்குழு (Sachar Committee) சமர்ப்பித்த அதன் அறிக்கையில்தான், குஜராத்திலுள்ள முஸ்லிமின் ஒவ்வொரு தலைக்கு-வருமானம் தான் (per capita income) இந்திய நாட்டில் உள்ள மற்ற மாகாணங்களில் உள்ள முஸ்லிம்களைக் காட்டிலும் அதிகமென்றும், இதற்கும் மேலாக இவர்களுடைய வங்கியில் பாதுகாப்பிற்காகப் இடப்பட்ட தொகைகள் தான் மற்ற மாகாணங்களிலுள்ள சரி நேரான (counterparts) முஸ்லிம்களைக் காட்டிலும் அதிகமெனவும், மற்ற மாகாணங்களிலுள்ள முஸ்லிம்களைக் காட்டிலும் குஜராத் முஸ்லிம்கள் தான் மிகத் தரமான கல்வியில் சிறந்து விளங்குகிறார்கள் எனவும் மிக தெளிவாகக் கூறிப்பட்டுள்ளது. இதையெல்லாம் படிக்க வேண்டும் இளவரசரே! அப்படிப் படித்திருந்தால், உண்மையில் நடந்தவைகளைக் கூறமுடியும். இல்லயேல் சொல்லிழுக்குப்பட்டு சோகாக்க வேண்டிவரும்!. இனி, வாயை விட்டு மாடிக்கொள்ளவேண்டாம்!
இன்னொரு முக்கிய செய்தி: ஜனாப் அபூ குஃவைசர் எனும் பீகாரிலுள்ள முஸ்லிம் ஐக்கிய அணியின் United Muslim Front) தலைவர் ஆணித்தரமாகக் கூறியது: முஸ்லிம்களின் முன்னேறத் திறகு எந்த நல்ல காரியத்தையும் காங்கிரஸ் கட்சி என்றும் செய்ததே கிடையாது என அழுத்தந்திருத்தமாகக் கூறியுள்ளார். இதே கருத்தைத்தான் BJP சார்பில் நின்று, தேர்தலில் வெற்றிபெற்ற போபி சாமா (Babi Sama) எனும் முஸ்லிம் கூடக் கூறியுள்ளார்.
“பாரத ஜனதா கட்சி சார்ந்த நாரேந்திர மோதிஜியை முஸ்லிம்கள் அதிகம் நம்புவதற்குக் காரணம், முற்றிலும் முன்னேறதை முதன்மையாகக் கொண்ட பாரபட்சமில்லாமல் தொடங்கியுள்ள எல்லா திட்டங்கள் தான் முஸ்லிம்களை அவர்பால் ஈர்க்கிறது. முஸ்லிம்களும் ஹிந்துக்களும் முன்னேற்றத்தைத்தான் சேர்ந்து விரும்புகின்றனர். அதுவும் தங்கள் கண்முன்னே நிகழும்போது, பாரத ஜனதா கட்சிக்குப் பின்னால் எல்லோரும், வருந்திக் கூப்பிடாமல் கூட, இயல்பாகச் சேர்ந்து கொள்கிறார்கள்.
2010இல், மிக தனிசிறப்பு வாய்ந்த கௌரவமான ஐக்கிய நாடுகள் சபை அளித்த பரிசு “prestigious 2010 United Nations Public Service Award (UNPSA)” (http://deshgujarat.com/2010/06/23/gujarat-receives-un-public-service-award-at-spain/ )
குஜராத் மானிலத்திற்கு, பார்செலோனா-ஸ்பெயின் நாட்டில் அளிக்கப்பட்டது, ஏனெனில், பொதுத் தொண்டு பணிகளில், அகில உலகிலேயே, இம் மாகாணமே முன்னணியில் உள்ளது; காரணம், நிருவாகத்தில் ஒளிவு மறைவின்மை, (பணம் பண்ணும் சுய நலமின்மை, கபடமின்மை), பணியில் கடமைப் பொறுப்பு, எளிதாகவும் விரைவாகவும் செயலாற்றும் நிர்வாகத் திறன் ஆக இவையனைத் திலுமே குஜராத் மாநிலம் முதலிடத்தில் உள்ளது. ‘இன்று விண்ணப்பம் கொடுத்தால், நாளை பதில் வாரும்’ (Today apply, tomorrow reply) எனும் வசனம் மக்களிடம் அங்குள்ளது. இதில் கூட குற்றங்குறைகளைக் கண்டுபிடிக்க, தகவல் துறையைச் சார்ந்த அனேகர் பூதக் கண்ணாடியுடன் மிகைப்படுத்திக் கூற தங்கள் சக்தியை முழுமூச்சுடன் தணிக்கை மூலம் முயன்று உபயோகப்படுத்தி கொடுத்த போதிலும் இவைகளெலாம், முக்கியமில்லாது, பயனற்றது, மிக அற்பமானது எனக் கருதப்பட்டு, கீழே கொடுக்கப்பட்டுள்ள ஏகோபித்த பாராட்டுகள், இந்த மாகாணத்திற்கும், அதன் முதலமைச்சர் நரேந்திர மோதிஜி அவர்களின் செயல்திறனே இந்த சிறப்புக்குக் காரணம் என பறை சாற்றுகின்றன. (list of acclaims that the state and its leader have got).http://www.gujaratindia.com/state-profile/awards.htm - இந்த இணையத்திலுள்ள பட்டியலைப் படிப்பவர், பார்ப்பவர்களுக்கு முற்றிலும் திகைப்பூட்டி, பெரும் மலைப்பையும் தன்னிச்சையாக உண்மையாக உண்டாக்கி விடுகிறது. ஒன்றா, இரண்டா! அடேங்கப்பா!! அப்பட்டியலை விலாவாரியாகக் கொடுத்து மாளாது என்று தான், இங்கே கொடுக்க முடியவில்லை. ஒன்று, இரண்டென்றால் கொடுத்திருக்கலாம். இணையத்தில் உள்ள மேற்குறிப்பிட்ட சங்கிலியில் தொடர்பு கொண்டு நீங்களே பார்த்துத் தெரிந்து கொள்ளவும்!
இவைகளே, உங்களுக்கும், உங்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு எச்சரிக்கையாகும், ராகுல் காந்தி அவர்களே! வெகு நாட்களாக இந்தியர்களை படு முட்டாள்களாக காங்கிரஸ் கட்சியினர் ஆக்கியிருக்கிறார்கள் என உங்கள் மனசாட்சிக்குக்கூடவா இன்னும் தெரியவில்லை? அது இருப்பவர்களுக்குத் தான் தெரிந்திருக்குமே! இந்நாள்வரை பெரும்பான்மையான இந்தியர்களை, பசியுடன் இருக்க வைத்தீர்கள், படிக்காத முட்டாள்களாகவும் ஆக்கி வைத்திருக்கிறீர்கள். ஆதலால் அரசாங்கமும், மற்ற உங்கள் அரசியல் கூட்டாளிக் கட்சிகளுமாகச் சேர்ந்து (கழகம் போன்ற), கொஞ்சமும் செலவழிக்காமல், “முதலில்லாத வியாபாரம், வந்ததெலாம் லாபமே” எனும் கோட்பாடுடன், மக்கள் வோட்டுகளை ஒட்டு மொத்தமாக மலிவான விலைக்கு வாங்குவது போல, அவ்வப்போது தேர்தல் சமயத்தில் பிச்சையளிக்கும் ரொட்டித் துண்டுபோன்ற இலவசங்களைக் கொடுத்து வருகிறீர்கள். தேர்தலுக்கு சற்று முன்னதாக, கவர்ச்சி வசனமாக, “உணவு, உடை, இருக்க இடம்” (रोटी, कपडा, मकान) ‘ரோடி, கப்டா, மகான்’ என நீங்கள் பல தலைமுறைகளாக மக்களுக்கு வாக்குறுதியை அள்ளி வீசுகிறீர்கள்; தேர்தலுக்குப் பிறகு “ஆம் ஆத்மீ”க்களுக்கு (சாமானியருக்கு) உண்மையாக ஒன்றும் கிடைப்பதில்லை, எவ்விதத்திலும் நியாமும் அளித்ததில்லை; ஆனால் அநியாயங்கள், மனதைப் புண்படுத்தும் அவமானம், இறுமாப்புடன் ஏளன இகழ்ச்சியைத் தான் தவறாமல் செய்து வந்திருக்கிறீர்கள். உங்கள் பொழுது போக்கிற்காக, இந்நாட்டு இளைஞர்களை அரசியலில் சேர்ந்து நாட்டின் அரசியல் விதியை மாற்ற வேறு அழைக்கிறீர்கள். உண்ண உணவுக்காகக் வயிறு காயும்போது அரசியலாவது மண்ணாவது என ‘ஆம், ஆத்மி’ ‘आम आदमी’ இந்திய சாமானியர்கள் நினைப்பது உங்களுக்கு இன்னும் தெரியாதது மிகச் சோகம் தான்.
இப்பேற்பட்ட ஆட்சி செலுத்த அரசாங்கம், உதவாக்கரை அரசியல்வாதிகள் மக்களுக்கென, இருந்த போதிலும், இவர்கள் உதவியில்லாமல் கூட, இந்திய நாட்டின் மீது அக்கறை, பக்தி கொண்டு, எடுத்துக்கொண்ட பணியில் சுய நலமின்றி மனப் பூர்வமாக உழைத்து, தன்மானமுள்ள சாமானியர்கள், சக்தி, தரம், ஆகியவைகளில் உயர்ந்த நிலையை அடைந்து உங்களை கேள்வி மேல் கேள்வி கேட்டுத் துளைக்கத் தொடங்கி, சரியான பதில்களையும் உடனுக்குடன் கொடுக்க சகல உரிமையுடன் வற்புறுத்த ஆரம்பித்து விட்டனர். உலகத் தர வளர்ச்சியடைந்த காரணத்தால், இந்திய நாட்டு மக்களுடைய எதிர்கால வளர்ப்பு வளத்தில் மக்கள் ஈடுபாடும் அதிகமாகி விட்டது. இதனால் இவர்கள் மூடிக்கிடந்த கண்கள் திறக்கப்பட்டன; தற்போது இந்திய மக்கள் ‘आम आदमी’ இந்திய சாமானியர்களுக்கு எதெது நேர்மைக்கிணங்க பொருத்தமானது, அவைகளை நன்கு அடையாளங் கண்டு கொள்ளவும் முடிகிறது; எதெது செய்து எந்தெந்த இடத்திலிருந்து எப்படி வரவழைக்க வேண்டுமென நுணுக்கம் சார்ந்த அறிவியல் திறனுடன், இவைகளை அடந்தே தீரும் எண்ணத்தில் திடமான கருத்துறுதியுடன் உள்ளனர். வேண்டுமானால், நேற்றுவரை உங்களுடன் அவ்வப்போது சகபாடிகளாக இருந்த, “லாலுப் பிரசாத் யாதவ்”களிடமும், “முலைம் சிங்”களிடமும் விசாரித்து சரிபார்த்துக் கொள்ளுங்கள். இப்போதே இவர்கள் செல்லாக்காசென புறக்கணிக்கப் படுகின்றனர்.
சிக்கனம் என்ற பெயரில், இந்திய நாட்டு வரி கொடுப்போர் ரொக்கச் செலவில், எப்போதும் ஆடம்பரத்துடன் ஊர் ஊராகசுற்ற உங்களுடன் கூடவே பயணம் செய்யும் பாதுகாப்புப் படையென, “ஆமாஞ்சாமி” பட்டாளங்களுடன், நீங்களும் உங்கள் காங்கிரஸ் கட்சி நடத்தும் தரக் குறைவான போலிப் பகட்டு புனைத் திறம் வாய்ந்த தந்திர மாயா ஜாலங்களை விட்டொழித்து உபயோகமான காரியத்தில் இனியாவது ஈடுபட முயற்சியாவது செய்து பாருங்கள். இந்த அழகில், “ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்”கத்தை (RSS)ஐ, தடை செய்யப்பட்ட முஸ்லிம் பயங்கர வன்முறைக் குழுவுடன் (SIMI= Student Islamic Movement of India)உடனும், அல்லது நரேந்திர சிங் மோதிஜி’ஐ சிறுமைபடுத்துவதாக நினைத்துக்கொண்டு, ‘மோதிஜி’யை, ‘மா-ட்சே-துங்’குடன் (Mao Zedong) ஒப்பிட்டதால், உண்மையில் அந்த கம்யூனிஸ்ட் சர்வாதிகாரியைக் கூடப் பெருமைப்படுத்தி விட்டீர்கள். இந்த கூற்றை சற்று உங்களுக்குள்ளேயே உள்ளாய்வு செய்து, அசைபோட்டு சிந்தித்துக் கொள்ளுங்கள்.
சாமானியர்களிடமிருந்து, அதாவது ‘ஆம் ஆத்மி’யிடமிருந்து உங்களுக்கோர் நற்செய்தி:
இந்திய தகவல் துறை தங்கள் “நம்பகத்தன்மையை” எனும் மேல்சட்டை, கீழ்க் காலுரை இவ்விரண்டையும், உள் உடுப்பு உள்பட இழந்து நிர்வாணமாக காட்சியளிக்கிறார்கள்; இனியாவது, அவர்களையே, உங்கள் வெற்றிப்பாதையை உருவாக்கும் கருத்தைத் துருத்திக் காட்டவோ, அல்லது பாதுகாப்புக் கேடையமாக உபயோகிப்பதைத் தவிர்த்து விடுங்கள். இதனால், முன்னரே உங்கள் மீதும், உங்கள் அன்னையின் செய்கைகளால் விளைந்திருக்கும் அவப்பெயரை அகற்றும் நேர்மையான நற்பணியில் ஈடுபட்டுப் பாருங்கள் [திரு. சுந்தரம், பணி ஓய்வுபெற்ற I.A.S., அதிகாரி Thursday, November 25, 2010 இல், எழுதிய கட்டுரையை படித்துப் பாருங்கள், QUIT INDIA FIRANGI SONIA!! QUIT INDIA! http://ennapadampanchajanya.blogspot.com/]
உங்கள் அன்னை, சோனியாஜி, அடிக்கடி பிதற்றும் “public sab jaanti hai“(“पब्लिक सब जानति है”) அதாவது “எல்லாம் மக்களுக்குத் தெரியும்” எனும் சொற்றொடரின் உண்மை அர்த்தத்தை, அதாவது, காங்கிரஸ் கட்சி நடாத்துவதை மக்கள் உண்மையில் மக்கள் அறிந்து கொண்டு விட்டனர். இனி சாமானிய மக்களிடம் உங்கள் ‘பாச்சா’ பலிக்காது. இனியாவது, எண்ணம், சொல், செயல் (मनसा – वाचा – कर्मणा) ஆகிய மூன்றும் ஒன்றிணைந்து செயல்பட இனியாவது முடிகிறதா என முயன்றாவது பாருங்கள்.
ஆகவே, தாங்கள் இனி அரசியலில் முன்னேற்றப் பாதையில் வேலை ஏதாவது செய்ய விரும்பினால், உங்களுக்கொரு ஆலோசனை: முதலில் மிகச்சின்னஞ்சிறு ‘அமேதி’ (Amethi) முனிசிபாலிடி தொகுதியில் நின்று, உண்மையில் மக்களுக்கு பொதுத் தொண்டு புரிந்து, படிப்படியாக முன்னேறும் வழியைத் தேடுங்கள். உங்களுக்கு வயது தான் சாதகமாக இருக்கிறதே!
இதையே சம்ஸ்கிருத மொழியில் – सोपान आरोहण (अवरोहण ) न्यायः-Sopana Aarohana (avarohana) Nyayah – The maxim of ascent (descent) of staircase. அனேக மாடிப்படிகளை, ஒவ்வொன்றையும் ஒன்றுக்கு அடுத்தது ஒன்றின் மீது கால்களைப் பதிய வைத்து தான் ஏறவோ (இறங்கவோ) வேண்டும். இந்த ஒழுக்கப் பயிற்சி ஆபத்திலாததது. ஒரே குதிப்பில் மாடிக்கும் சென்றுவிட இயலாது. அப்படி, ஒரே குதிப்பில் மாடியிலிருந்து தரையில் குதித்து இறங்கி விடவும் இயலாது. இந்த ஒழுக்க விதியை மீறினால், உடலில் உள்ள எலும்புதான் நொறுங்கும். நான் சொல்ல வந்தது புரிந்ததா? கவர்ச்சிமிக்க இளவரசே!!
No comments:
Post a Comment