ஜனவரியில் அதிரடி பண்ணப்போறாரு விஜய். கட்சிக்கு பேரெல்லாம் ரெடிபண்ணியாச்சு... என உற்சாகத்தில் இருக்கிறார்கள் விஜய்யின் ரசிகர் மன்றத்தினர். கடந்த 28ந்தேதி சென்னை வடபழநியில் உள்ள விஜய்யின் ஜெ.எஸ்.கல்யாணமண்டபத்தில் ரசிகர் மன்ற ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
தமிழகம் முழுவதிலிருந்தும் மாவட்ட, ஒன்றிய மற்றும் மகளிரணியின் முக்கிய நிர்வாகிகள் மட்டும் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். ஒவ்வொரு நிர்வாகிகளின் மனசிலும் என்ன இருக் கிறது என்பதை தெரிந்துகொள்வதற்காக விஜய்யும், எஸ்.ஏ.சந்திரசேகரனும் ஒவ் வொருவரையும் தனித்தனியே அழைத்து பேசினார்கள். இதனால் ஞாயிறு காலை 9.30 மணிக்கு தொடங்கிய ஆலோசனை மறுநாள் அதிகாலை 2.30 மணிவரை... கிட்டத்தட்ட 17மணி நேரம் நடந்திருக் கிறது. இந்த ரகசிய ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் சிலரிடம் பேசினோம்.
"" "தை பொறந்தா வழி பொறக்கும்'னு சொல்லுவாங்க. எங்களுக்கும் தையில் அரசியல் வழி பொறக்கும்கிறது நிச்சயமாகிருச்சு. எங்க ஒவ்வொருத்தரை யும் தனித்தனியே கூப்பிட்டு கருத்துக் கேட்டாரு தலைவர். எல்லா நிர்வாகிகளும் சொன்ன ஒரு விஷயம் 2011 தேர்தலில் பங்கேற்பது குறித்துத்தான். மூன்று விதமான கோரிக்கை களை நாங்கள் தலைவர்கிட்ட வச்சோம். அரசியல் கட்சியை உடனே தொடங்கணும். அது உடனடியா சாத்தியப் படாதுன்னா.... கூட்டணியில் இடம்பெறணும். அதுவும் இப் போதைக்கு முடியாதுன்னா... யாருக்கு வாக்களிக்கணும்னு நீங்க வாய்ஸ் கொடுக்கணும்னு சொன்னோம். எம்.ஜி.ஆருக்குப் பிறகு மக்கள் செல்வாக்குள்ள நடிகர் ரஜினி, விஜயகாந்த்தைவிட விஜய்தான்னு போனவருஷம் லயோலா கல்லூரி எடுத்திருந்த சர்வே முடிவுகளையும் விஜய்யிடம் காட்டினோம்.
பத்து சதவிகித நிர்வாகிகள் தி.மு.க.வோடு கூட்டணினும், 90 சதவிகித நிர்வாகிகள் அ.தி.மு.க.வோடு கூட்டணினும் சொன்னாங்க. அதுக்கு விஜய்... "எல்லா கட்சி களைச் சேர்ந்தவங் களும் என்னோட மன்றத்தில இருக் கீங்க. ஏதாவது ஒரு கட்சியோட கூட் டணினு சொன் னா... மன்ற நிர்வாகி களுக்கு தேவையில் லாம மனவருத்தம் வருமே?'னு சொன் னாரு. ‘அரசியல்ல நீங்க எறங்கீட்டா நாங்க எங்க ளோட கட்சிகள்ல இருந்து விலகிடுவோம். அதனால் துணிஞ்சு முடிவெடுங்க தலைவா'னு ஒட்டுமொத்த நிர்வாகிகளுமே சொன்னோம்.
"உங்க எதிர்பார்ப்பு வீண்போகாது. ஜனவரியில் நல்ல செய்தி நிச்சயம் உண்டு'னு நம்பிக்கை டானிக் கொடுத்துட்டார் தலைவர். கட்சிக்கு "மக்கள் சக்தி', "மக்களாட்சி பேரவை', "மக்கள் இயக்கம்'னு சில பெயர்கள் கூட பரிசீலனையில் இருக்கு. உலக அரசியல் தலைவர்கள், இந்திய அரசியல் தலைவர்கள், அரசியலமைப்புச் சட்டம்... இப்படி அரசியல் சார்ந்த புத்தகங்களை தலைவர் தீவிரமா படிச்சிட்டு இருக்காரு. அவரோட கார்ல இப்படிப்பட்ட புத்தகங்கள் இருக்குது. எங்களையும் படிக்கச் சொல்லீருக்காரு. விவசாயிகளை மதிக்கணும்கிறத அடிக்கடி சொல்றாரு. "உண்மையான ஜனநாயகத்தை ஒவ்வொரு மனுஷனும் அனுபவிக்கணும். அதுதான் நம்ம அமைப்போட நோக்கம்'னு சொல்லீருக்காரு'' என விபரம் சொன்னார்கள் நிர்வாகிகள்.
விஜய் மன்றத்தை அரசியல் சக்தியாக மாற்றுவதில் முக்கிய பங்காற்றி வரும் அவர் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரனிடம் இதுபற்றி கேட்டோம்.
""விஜய் ரசிகர்களை சினிமா ரசிகர்களாகவே வைத்திருக்காமல் அடுத்த தளத்திற்கு கொண்டு செல்லும் முயற்சியில் இருக்கிறார் விஜய். ஏற்கனவே மன்ற நிர்வாகிகள் பல்வேறு சமூக சேவைகளை செய்துவருகிறார்கள். அவர்களை இன்னும் கூடுதலாக சமூக சேவைக்கு ஊக்குவிக்கும் முயற்சியாகத்தான் மன்ற நிர்வாகிகளை சந்தித்து ஆலோ சனை நடத்துகிறார்.''
http://shockan.blogspot.com/search?updated-min=2010-01-01T00%3A00%3A00%2B05%3A30&updated-max=2011-01-01T00%3A00%3A00%2B05%3A30&max-results=50
விஜய்யின் வியூ கம்தான் என்ன?
இப்போது விஜய் ரசிகர் நற் பணி இயக்கத்தை "மக்கள் இயக்கம்' என பெயர் மாற்றி யிருக்கிறோம். மக்கள் இயக்கத்தின் முதல் மாநில மாநாடு பிரமாண்டமாகவும், ஆக்கப் பூர்வமாகவும் வெகு சீக்கிரம் நடைபெற விருக்கிறது. அதன்பிறகு பாருங் கள் எங்கள் வேகத்தை. ’
மக்கள் இயக்கம் தேர்தலில் தனித்து போட்டியிடுமா?
சமூக சேவையை ஒருங் கிணைத்து செய்றதுக்குத் தான் இந்த மாநாடு. அரசியல் பற்றி பிறகுதான் முடிவு செய்வோம்.’’
அ.தி.மு.க.வோடு கூட்டணி வைக்கப் போவதாக வும், ஜெயலலிதா கொட நாட்டிலிருந்து திரும்பியதும் அவரை நீங்கள் சந்திக்கப் போவதாகவும் செய்திகள் பரவலாக வருகிறதே?
மன்ற நிர்வாகிகள் தங்கள் விருப்பத்தை விஜய்யிடம் சொல்லியிருக்கிறார்கள். அதுதான் இப்படி வெளியில் செய்தியாக கசிந்திருக்கிறது.
முதலில் மாநாட்டை நடத்தப் போகிறோம். விஜய் ரசிகர்களையெல்லாம் தொண்டர்களாக மாற்றப் போகிறோம். அதன்பிறகுதான் அரசியல் குறித்து விவாதிப்போம்.’’
மாநாடு நடத்த வேண்டிய அவசியத்திற்கும், அரசியல் மூவ்களை இப்போது மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கும் என்ன காரணம்? எந்த நெருக்கடிகளுக்காக விஜய் அரசியல் தீவிரம் காட்டுகிறார்?
’’எந்த நெருக்கடியும் இல்லை. இது இயல்பானது. வழக்கமான ரசிகனின் குணாதிசயங்களிலிருந்து விஜய் ரசிகர்கள் மாறுபட்டவர்களாக, சமூக அங்கீகாரம் பெற்றவர்களாக இருக்க வேண்டும் என விஜய் விரும்புகிறார். அதற்காகத்தான் இந்த மாநாடு. அதற்கான நேரம் இப்போது வாய்த்திருக்கிறது. அவ்வளவுதான். மாநாட்டுக்குப் பிறகுதான் கூட்டணி குறித்து விவாதிப்போம்’
-என்றார் எஸ்.ஏ.சி.
அரசியல் மூவ் குறித்து எஸ்.ஏ.சி. மறக்காமல் மறைத்துப் பேசினாலும் ஜெயலலிதாவை எஸ்.ஏ.சி. சந்திப்பதற்கான வேலைகள் நடந்தபடியே இருக்கிறது. அதுமட்டுமில்லை... மாநிலம் முழுவதிலிருந்தும் விஜய்யை தொடர்பு கொண்டு பேசுகிறார்கள் பல அரசியல்கட்சி புள்ளிகள், மாஜி மந்திரிகள், தொழிலதிபர்கள். இதனால் அவர்களையெல்லாம் அழைத்துப் பேசவும் முடிவு செய்திருக்கிறார் விஜய். இதற்கான கூட்டம் அநேகமாக இன்னும் சில தினங்களில் நடக்கவிருக்கிறது.
No comments:
Post a Comment