கருணாநிதி முன் நடிகைகளில் குத்தாட்டம் ஆடியது, உடலைக் குலுக்கியது, காட்டியது எல்லாமே நிஜமாகவே நடந்துள்ளதே?
பிறகு எதற்கு போலியைக் கண்டு முகம் சுளிக்கவேண்டும்?
உண்மையிலேயே அத்தகைய ஆபாச குத்தாட்டம் முகம் சுளிக்கும் வகையில் இருந்தால், அப்பொழுதே வயதான தலைவருக்குச் சொல்லியிருக்கவேண்டும்.
அரைகுறை ஆடைகளுடன் ஆபாச நடனம்: பென்னாகரம் இடைத் தேர்தல் பிரசாரத்திற்கு வந்துள்ள கலைக்குழுவினர், முதல்வர் கருணாநிதி போல் வேடமணிந்தவர் முன், குத்தாட்டம் போட்டு அரைகுறை ஆடைகளுடன் ஆபாச நடனம் ஆடி அசத்தினர். தேர்தல் என்றாலே ஆட்டம், பாட்டம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தி கூட்டம் கூட்டுவது வாடிக்கையான ஒன்று. தற்போது பென்னாகரத்தில் இடைத் தேர்தல் களை கட்டியுள்ள நிலையில் அனைத்து கட்சிகளின் சார்பிலும் தெருமுனை பிரசாரம், பொது கூட்டம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் பல இடங்களில் நடத்தி வாக்காளர்களை கவர்ந்து வருகின்றனர்.
கருணாநிதி போல் வேடமணிந்து…………: தி.மு.க., சார்பில் விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்த கலைக்குழுவினரின் ஆடல், பாடல் மற்றும் குத்தாட்ட நிகழ்ச்சி நடந்தது. மினி லாரியில் வந்த இக்கலைக்குழுவில், மதுரையைச் சேர்ந்த ராமராஜன், முதல்வர் கருணாநிதி போல் வேடமணிந்து கட்சி பிரமுகர்கள் மற்றும் பொது மக்களை பார்த்து கும்பிட்டு ஓட்டு கேட்டு சென்றார்.
இளம் பெண்கள் மூவர் குத்தாட்டப் பாடல்களுக்கு உடலை குலுக்கி ஆபாசமாக ஆட்டம்: பொது மக்கள் அதிகம் கூடும் பென்னாகரம் காவல்நிலையம், பஸ் நிலையம் மற்றும் பி.டி.ஓ., ஆபீஸ் அருகேயும் லாரியை நிறுத்திவிட்டு, லாரியில் அமைக்கப்பட்ட மேடையின் ஒரு பகுதியில் கருணாநிதி வேடமணிந்தவர் உட்கார்ந்திருக்க, அவர் அருகிலேயே அரைகுறை ஆடை அணிந்த இளம் பெண்கள் மூவர் குத்தாட்டப் பாடல்களுக்கு உடலை குலுக்கி ஆபாசமாக ஆடினர்.
வேடிக்கை, குத்தாட்டம், முகம் சுளிப்பு: இதை நூற்றுக்கணக்கானோர் கூடி வேடிக்கை பார்த்தனர். இருப்பினும் சில மூத்த கட்சியின் நிர்வாகிகள் கருணாநிதி போல் வேடமணிந்தவர் முன், இப்படி குத்தாட்டம் போடுவதை சகித்து கொள்ள முடியாமல் முகம் சுளித்து சென்றனர்.
- தினமலர் நமது சிறப்பு நிருபர் -
No comments:
Post a Comment