Sunday, January 2, 2011

போலி குடும்ப அட்டைகளும் தி மு க மைனாரிட்டி அரசின் பித்தலாட்ட அரசியலும்

* வழக்கம் போல் இந்தப் பொங்கல் திருநாளுக்கு அனைத்து ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கும் வேட்டி, சேலை இலவசம்.

* அனைத்து ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கும் இலவச வண்ணத் தொலைக் காட்சிப் பெட்டி.இலவசம்.

* ஆனால் நம் தமிழகத்தில் மட்டும் 40 லட்சம் போலி ரேஷன் கார்டுகள் இருப்பதாக சமீபத்திய ஆய்வு தெரிவிக்கின்றது. இதை உணவுத்துறை அமைச்சரும் ஒத்துக் கொண்டிருக்கிறார்.

* சரி ஒரு இலவச வேட்டி சேலை 20 ரூபாய் என்று வைத்துக் கொண்டால், 40 லட்சம் போலி ரேஷன் கார்டுகள் மூலம் இந்தத் திட்டத்தினால் 8 கோடி ரூபாய் பாழ்.

* அதே போன்று ஒரு வண்ணத் தொலைக் காட்சிப் பெட்டி 2000 ரூபாய் என்று வைத்துக் கொண்டால் கூட, 40 லட்சம் போலி ரேஷன் கார்டுகள் மூலம் இந்தத் திட்டத்தினால் 800 கோடி ரூபய் பாழ்.

* நமதருமை முதல்வரின் குடும்பத்தில் நடந்த குடுமிப் பிடிச் சண்டையின் விளைவாக, நமதருமை முதல்வர் அறிவித்த மாபெரும் திட்டம் “தமிழக அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷன். இதற்கு ஒதுக்கப்பட்ட தொகை 60 கோடி. இப்பொழுது இந்தத் திட்டமும் பணால். 60 கோடியும் பாழ்.

* சமீபத்தில் தமிழகத் திரை உலகினர் நடத்திய விழா ஒன்றிற்கு 50 லட்சம் ரூபாய் அரசுப் பணத்தை – தவறு – நம்முடைய வரிப் பணத்தை அள்ளி விட்டிருக்கிறார் டாக்டர்ர்ர்ர்ர் முதல்வர்.

இப்படி அரசால் வீணடிக்கப் படும் கோடான கோடி பணத்திற்கு பட்டியலிட்டால் பக்கங்கள் போதாது.

இவையெல்லாம் யார் அப்பன் வீட்டுப் பணம்? இப்படி வீணடிக்கப்படும் பணத்தை ஆளும் கட்சித் திருப்பிக்கட்ட வேண்டும் என போது நல வழக்கு போட இயலுமா என விவரம் தெரிந்தவர்கள் யாராவது சொல்லுங்களேன்…

இனி ஆளும் கட்சி MLAக்கள், MPக்கள் முதல்வர் குடும்பத்தினர் யாவரும் அரசு வழங்கும் இலவச வேட்டி சேலை உடுத்த வேண்டும் – அரசு மருத்துவமனைகளில் தான் வைத்தியம் செய்து கொள்ள வேண்டும் – ரேஷனில் போடும் உணவைத்தான் சாப்பிட வேண்டும் – அவர்களுடைய வாரிசுகள் அரசுப் பள்ளிகளில்தான் படிக்க வேண்டும் - இப்படி ஏதாவது சட்டம் இயற்ற வழி இருக்கின்றதா நண்பர்களே?

http://karunanidhispolitics.roudhrampazhagu.com/?paged=2

No comments:

Post a Comment