Monday, January 3, 2011

அண்ணன் அழகிரின்னா சும்மாவா....?

மதுரை நாமகரணம் மாறுகிறது_-இனி அழகிரி மாவட்டம்

இன்றைய மதுரையின் நாடாளுமன்ற வேட்பாளாராக திமுக சார்பில் கருணாநிதியின் செல்லப்பிள்ளை மு.க. அழகிரி நிறுத்தப்பட்டுள்ளார்.

மதுரை முரசொலி அலுவலகத்தை கவனித்துக் கொள்ள நீ தான் சரியான ஆள் என்று சொல்லி அழகிரியை, கருணாநிதி ரயிலேற்றி மதுரைக்கு அனுப்பி வைக்கிறார். இந்த சம்பவம் நடந்த ஆண்டு 1980. அழகிரியின் கையில் அப்போது இருந்த தொகை ரூ.81 ஆயிரம். அழகிரி வந்த உடனே ஆட்டம கண்ட மதுரையின் முரசொலி பதிப்பு சில மாதங்களிலேயே மூடுவிழா கண்டது.

இனி சென்னைக்கு போவதும் கடினம். அங்கு ஏற்கனவே ஏராளமான வாரிசுகள் கலைஞரை சுற்றி கும்மியடிக்கும் போது, தானும் கூட்டத்தோடு கோயிந்தா போடுவது ஆகாது என்று நினைத்த அழகிரி, மதுரையிலேயே காலூன்ற முடிவு செய்கிறார்.


இதற்கடுத்து தனது சொத்து சேர்க்கும் படலத்தைதொடங்குகிறார். கருணாநிதி எப்போதெல்லாம் முதலைமச்சர் பதவியில் இருந்தாரோ… அப்பொழுதெல்லாம் மு.க.அழகிரி தென்மாவட்டங்களின் நிழல் முதலமைச்சராக இருந்து மாவட்ட ஆட்சித்தலைவர்கள், காவல் துறையினர், அதிகாரிகள் ஆகியோரை ஆட்டிப்படைத்து சொத்துக்களை மெல்ல குவிக்கிறார். சென்னையிலிருந்து தன்னந்தனியாக ரயிலேறிய அழகிரி, ஒரு கட்டத்தில் தமிழக தென்மாவட்டங்களின் அதிபதியாக தன்னை நிலை நிறுத்திக் கொள்கிறார்.

1980 ல், மதுரை திருநகர் 5 வது ஸ்டாப்பில் உள்ள குமாரசாமி என்ற வக்கீ்ல் வீட்டில், பக்தஜனசபையை சேர்ந்த தியாகராசன் என்பவர் அழகிரியை குடிஅமர்த்துகிறார். அழகிரிக்கு டி.எஸ்.பி சண்முகநாதன் என்ற போலீஸ் அதிகாரி துணையாக பாதுகாப்புக்கு இருக்கிறார். ஒரு ஆண்டு கழித்து சதுரிய நாராயணன் பிலிம்ஸ் வீட்டிற்கு பின்புறம் அழகிரி குடியேறுகிறார்.

பின்னர் 1987 ல் மதுரை டி.வி.எஸ் நகரின் அருகில் உள்ள அழகப்பன் நகரில் வந்து குடியேறுகிறார். இந்த பகுதி தான் தனது குடும்பத்துடன் வாசம் செய்ய ஏற்ற பகுதி என்று முடிவெடுக்கிறார். உடனே, சென்னையில் தனது பெயரில் தனது தந்தையார் கருணாநிதி வாங்கிப் போட்டிருந்த வீட்டை, நடிகர் சரண்ராஜிடம் 9 லட்ச ரூபாய்க்கு விற்று விட்டு மதுரை சத்யசாய் நகரில் 4 ஏ என்ற கதவு எண் உள்ள வீட்டை வாங்குகிறார். இந்த வீட்டை கருப்பசாமி என்பவர் மூலமாக மதுரை அரசரடியில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்கிறார்கள். இப்போது அழகிரி குடியிருக்கும் அந்த வீட்டின் அப்போதை விலை 4.5 லட்சம் ரூபாய். அந்த வீட்டின் தரைதளம் குண்டும், குழியுமாக இருக்கிறது. இதனை விலைக்கு வாங்கிய பின்னர் சுமார் 5 கோடி ரூபாய் செலவழித்து வீட்டை நவீன வசதிகளுடன் புதுப்பிக்கிறார்.


இருந்தாலும், வாங்கிய வீடு போதுமான புழக்கத்திற்கு வசதியாக இடம் இல்லாமல் இருக்கிறது. என்ன செய்வது என்று சிந்தித்த அழகிரி, அக்கம்பக்கத்தில் யாரையாவது வீட்டை காலி செய்ய வைத்தால் மட்டுமே தனது வீட்டை விஸ்தரிக்க முடியும் என்ற முடிவுக்கு வருகிறார். அப்போது கண்ணில்படுகிறது அவரது வீட்டின் பின்புறம் இருந்த ஒரு அப்பாவி பிராமண பெண்ணின் வீடு. அதனை வாங்க நினைக்கிறார். பூர்வீக வீடான அதனை தர அந்த பிராமண பெண் மறுக்கிறார். பிறகென்ன..அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவமாட்டான் கதை தான்.

பாவம்.தலைதெறித்து வீட்டை காலி செய்கிறார் அந்தபிராமண பெண். அழகிரியின் வீடு விஸ்தாரமாகிறது. இதற்கடுத்து தனது வீட்டுக்கு அருகிலேயே செட்டில் விளையாட ஒரு இடம் வேண்டும் (1996 ம் ஆண்டு) என்று நினைக்கிறார். உடனே சத்யசாய் நகரில் ஒருவரிடம் இருந்த 12 செண்ட் நிலத்தை மிரட்டி ஒட வைத்து வாங்கி விடுகிறார். இந்த மூன்று சொத்துக்களையும் தனது மனைவி காந்தி அழகிரி பெயரில் வாங்கி சுகபோகமாக வாழ தொடங்குகிறார்.

இது மட்டுமா.. எதிர்காலத்தில் தனது குடும்ப உறுப்பினர்கள் வந்தால், வீட்டுக்குள்ளேயே அனைத்து வசதிகளும் இருக்க வேண்டும் என்பதற்காக, தனது வீட்டின் பின்புறம் இருந்த 3 ஏக்கர் நிலத்தை, செண்ட் 3 ஆயிரம் என்ற விலையில் தனது மகள் கயல்விழி பெயரில் வாங்கி வைக்கிறார்.

இதுதவிர மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் எதிரே உள்ள சட்டக்கல்லூரி விடுதி அருகில் உள்ள 1 ஏக்கர் காலி இடத்தையும் அழகிரியின் 2 வது மகள அஞ்சுகத்தின் பெயரில் வாங்குகிறார்.

இது தவிர மதுரையை ஒட்டியுள்ள செழிப்பான தோப்பு பகுதிகள் அழகிரியின் கண்ணில் படுகின்றன. இதில் மதுரையிலிருந்து உசிலம்பட்டி செல்லும் வழியில் உள்ள விக்கிரமங்கலம் என்ற இடத்தில் 5 ஏக்கர் தென்னந்தோப்பை வாங்கி அங்கு ஆடம்பர பங்களா, நீச்சல் குளம் கட்டி்யிருக்கிறார். இது மு.க.அழகிரியின் மாமனார் காராளன் பெயரில் வாங்கப்பட்டுள்ளது. இந்த இடம், அழகிரியின் மாமனார் காராளன் தன்னிடமிருந்த முந்திரி தோப்பை, திருச்சி மாவட்டம் முசிறி தொகுதி எம்.எல்.ஏ ஜோதிகண்ணனிடம் விற்றுவிட்டு, வி்க்கிரமங்கலத்தில் உள்ள இந்த தென்னந்தோப்பை வாங்குவதாக கணக்கு காட்டப்படுகிறது. இந்ததோப்பில் உள்ள தென்னை உள்பட மரங்களுக்கு மண் நிரப்புவதற்காக அரசு டிராக்டர்களும், அதிகாரிகளும் பயன்படுத்தப்படுகின்றனர்.


அழகிரி மகன் தயாநிதிக்கு மட்டும் சொத்து இல்லாமல் போகுமா? அழகர் கோயில் செல்லும வழியில் உள்ள கள்ளந்திரி என்ற இடத்தில், அழகிரியின் மகன் தயாநிதி பெயரில் ஒரு தென்னந்தோப்பும், பூவந்தி என்ற இடத்தில் தோடடமும், தோப்புகளும் வாங்கி போடப்பட்டுள்ளன. இது தவிர தென்மாவட்டங்களில் குறிப்பாக, திண்டுக்கல், கொடைக்கானல் ஆகிய இடங்களில் தான் அதிக அளவில் தோப்புகளும், பண்ணை வீடுகளும் இருக்கின்றன. கொடைக்கானலில் பல கோடி மதிப்புள்ள ஆடம்பர பங்களாக்கள், கட்டப்பட்டுள்ளன. கலைஞர் ஐயா உளியின் ஓசை கதையை இங்கு உட்கார்ந்து சிந்தித்து தான் எழுதினார். கொடைக்கானல் திமுக பிரமுகர் மாயன் வீட்டுக்கு மேற்கில் எட்டு ஏக்கர் நிலம் வாங்கப்பட்டு, இந்த இடத்தை பாராமரிக்க சுமார் 200 கோடி ரூபாய் வரை செலவு செய்ய்பட்டிருக்கலாம் என்று அந்த பகுதி மக்கள் கூறுகிறார்கள்.

அழகிரி இரண்டாவது மகள் அஞசுக செல்வி மற்றும் அவரது கணவர் விவேக் பெயரில் கோடிக்கணக்கில் டிபாசிட் செய்யப்பட்டுள்ளது. இவ்வளவும் போதாது என்று மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில், மாநகராட்சிக்கு சொந்தமாக உள்ள கடைகள் பலவற்றை குத்தகைக்கு எடுத்து அங்கு சிறுவர்களை சீரழிக்கும் வீடியோ கேம்ஸ் கடைகளை நடத்தி வருகிறார்.காந்தி சில்க்ஸ் என்ற பெயரில் தனது மனைவி காந்திக்கு பட்டுபுடவை விற்கும் கடை ஒன்றை வைத்து கொடுத்துள்ளார். இது தவிர பினாமிகள் பெயரில், ( மதுரை தங்கமயில் ஜுவல்லரிக்காரர்கள், அழகிரியின் வீட்டுக்கு காய்கறி வாங்கிவரும் பொட்டுசுரேஷ், தாய்மூகாம்பிகை திருமணமகால் நடத்தும் சேதுராமன், வீட்டுக்கு பணி செய்ய வந்து மர்மமான முறையில் இறந்து போன வழக்கில் குற்றவாளியான நாகேஷ்) உள்பட பினாமிகளின் பெயரில் பல ஏக்கர் நிலங்கள் வாங்கப்பட்டுள்ளன.

இது தவிர அசையும் சொத்துக்களாக பல லட்சம் மதிப்புள்ள லேண்ட்ரோவர் கார் உள்பட ஏராளமான கார்கள் உள்ளன. வெறும் 81 ஆயிரத்துடன் மதுரைக்கு வந்த அழகிரியின் இன்றைய சொத்து மதிப்பை பார்த்து மதுரை மக்கள் மயங்கி விழாத குறை தான்.

http://tamilchat.forumotion.com/politics-special-f22/about-karunanithi-t2275.htm

No comments:

Post a Comment