ஊருக்கு மட்டுமே உபதேசம்!
ஏ.எம்.அருண்ராஜ், வத்திராயிருப்பு, விருதுநகர் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: ‘இங்கே அமர்ந்திருக்கும் போது நீங்கள் அத்தனை பேரும் தமிழர்களாக, தமிழ்க்குல மக்களாக அமர்ந்திருக்கிறீர்கள். இங்கிருந்து வெளியே போகும் போது செட்டியார்களாக, முதலியார்களாக, பிள்ளைமார்களாக , வன்னியர்களாக, முக்குலத்தோராக பிரிந்து செல்கிற ஒரு தன்மை இருக்கிறது. அந்த நிலைமைமாறி, அனைவரும் ஒரே குலம், ஒரே இனம், ஒரே மொழிக்குச் சொந்தக்காரர்கள் என்ற உயர்ந்த நிலை தமிழகத்தில் உருவாக வேண்டும்…’ என்று தாம் புரோகிதம் பண்ணிய திருமண விழாவில் செப்பியுள்ளார் கருணாநிதி.
பிறருக்கு உபதேசம் உரைக்கச் சொன்னால் உவகைக் கனியுடன் உபதேசிப்பார். ஆனால், தான் மட்டும் அந்த உபதேசத்தை பின்பற்ற மாட்டார்.ஒரே குலம், ஒரே இனம், ஒரே மொழி என்று ஒய்யாரமாகப் பேசுவார். ஆனால், தான் மட்டும் நொடிக்கு நொடி நிறம் மாறிப் பேசி, தன் அரசியல் சுயலாபத்திற்கு எது லாபமோ அப்படி நடந்து கொள்வார் கருணாநிதி.
ஆகா…எத்தனை நிறங்கள்…இதோ:
* இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் கூட்டத்தில் இந்துக்களை ‘திருடர்கள்’என்று இழிவுபடுத்துவார்.
* நாடார்கள் மத்தியில், ‘நான் உங்கள் சம்பந்தி’ என்பார்.
* சந்தடி சாக்கில், ‘நான் இசைவெளாள மருத்துவ வகுப்பைச் சேர்ந்தவன்’ என்பார்.
* திநெல்வேலி பக்கம் சென்றால் பிள்ளைமார் மத்தியில், ‘நானும் இசை வேளாளப் பிள்ளைமார் பிரிவுதான்’ என்பார்.
* தலித் கூட்டம் என்றாலோ, ‘நான் ஒரு தலித் என்று கூறிக் கொள்வதில் பெருமைப்படுகிறேன்’ என்பார்.
தேர்தல் நேரங்களில் எந்தெந்த ஏரியாவில் எந்த ஜாதி அதிகமோ அந்த தொகுதியில் அதே ஜாதிக்காரரை நிறுத்தி 1967லிலேயே தமிழகத்தில் ஜாதி மோதலுக்கு வித்திட்டவரே கருணாநிதி தான்.
* அதேபோல் தேர்தல் பிரசாரத்தில் அந்தந்த ஜாதியினரிடையே, ‘நான் உங்கள் சம்பந்தி’ என்பார். மறுநாளே, ‘ஜாதிகள் இல்லையடி பாப்பா’ என்று பாடிய பாரதியைப் பாராட்டுவார். அடுத்த நாளே, ‘அவாள்…இவாள்’ என்று திட்டுவார்.
* ஆனால், இந்து என்.ராம் என்றால் ஐயகோ, ‘இந்து என்ராம்…இந்து என் ராம்’ என்று ஏங்குவார். தாங்கு தாங்கென்று தாங்குவார், ‘முற்போக்கு எழுத்தாளர்’ என்று க.வீரமணிக்கு தெரியாமல் உச்சி முகர்வார். ஏன்?…தன்னை ‘குல்லுகப் பட்டர்’ என்று வீரமணி திட்டி விடுவாரோ என பயப்படுவார் கருணாநிதி.
* கம்யூனிஸ்ட் கூட்டம் என்றால்,நானும் கம்யூனிஸ்ட் தான்; 10 வயதிலேயே ஒரு கையில் சிகப்பு கொடி ஏந்தி போராடினேன். என்பார்.
* முஸ்லிம் லீக் கூட்டம் என்றால், நான் இஸ்லாமியர்களுக்கக 10 வயதில் இன்னொரு கையில் பச்சைக் கொடி பிடித்து போராடினேன் என்பார்.
* தேர்தலில் தோற்று விட்டாலோ செந்தமிழ் இனத்தை, மாக்கள், வாழ மட்டை, மடசம்பிராணி, சொரணைகெட்ட ஜென்மம், மரமண்டை என்று புகழ்வார்.
* ‘இந்தியை செம்மொழி தமிழர்கள் எவரும் படிக்கக் கூடாது’ என மிரட்டுவார். ஆனால், தன் மொத்த வழித்தோன்றல்களும் ஸ்பெஷல் இந்திப் பண்டிட்டுகள் மூலம் மூன்று ஷிப்ட் முறைவைத்து யாருக்கும் தெரியாமல் இந்தியைப் படிக்கச் சொல்வார்.
* மன்மோகன் சிங், கமல்நாத், சோனியா காந்தி, சல்மான் குர்ஷித் போன்ற தலைவர்கள் விருந்துண்ண வீட்டிற்கு வரும்போது தன் வழித் தோன்றல்களை இந்தியில் பேசச் சொல்லி சொக்கி மகிழ்ந்து சுயநலமாக அமைச்சர் பதவியை மிரட்டிப் பெறுவார்.
இப்படி, தனக்கு சாதகம் என்றால் சர்க்கரை என்பார். மற்றவர்களுக்கு நல்லது என்றால் அவர்களை படிக்க விடாமல் கெடுத்து, ‘ஐயகோ நான் நித்தம் நித்தம் நெருப்புண்டு வாழ்ந்தேன். தமிழர்களே இந்தியைப் படிக்காதீர்’ என்று கெடுத்து, துரும்பைக் கிள்ளிப் போட்டு அதைத் தூணாக்கி, தமிழர்களை துளிர் விட விடாமல் தடுத்து, முட்டுக் கட்டை போட்டு தலையில் நறுக்கென்று கொட்டுவார்.
இது தான் கருணாநிதியின் ராஜ தந்திரம். இவர் பேச்சை ஏற்று என்றும் ஏமாறுபவர்கள் தான் நம் செம்மொழித் தமிழர்கள், ஏமாறும் தமிழர்கள் இருக்கும் வரை என்றென்றும் கருணாநிதிக்கு ஏற்றம் தான்; என்றென்றும் கொண்டாட்டம் தான்.
நன்றி: இது உங்கள் இடம். சென்னை தினமலர்
No comments:
Post a Comment