Sunday, January 2, 2011

தி மு க காங்கிரஸ் கூட்டணி - எந்த அளவு சாத்தியம்...?


"வரும் தமிழக சட்டமன்றத்துக்கான தேர்தலில் தி.மு.க.வோடு கூட்டணியில் தொடர ராகுல்காந்திக்கு விருப்பமே இல்லை. தமிழகத்துக்கு வரும்போது அவரது நடவடிக்கைகளும், தி.மு.க.வுக்கு எதிராக இங்கே ஒரு சிலர் தடித்த வார்த்தைகளை அவ்வப்போது பிரயோகிப்பதும், காங்கிரஸ் தலைமையும் அதை கண்டுகொள்ளாமல் இருப்பதும் கூட்டணி மாறுவதற்கான சமிக்ஞைதான்' என்பதும், "இல்லை... இல்லை... தி.மு.க.வுக்கு தொடர்ந்து கூட்டணி விஷயத்தில் கிலி உண்டாக்கி சீட்டுக்களை அதிகம் கேட்டுப் பெறுவதற்கும், அப்படியே ஆட்சியிலும் பங்கு கேட்டு வலியுறுத்துவதற்குமான ராஜ தந்திரத்தைத்தான் மேலிட ஆசியோடு, தமிழக காங்கிரஸார் வெளிப்படுத்தி வருகிறார்கள்' என அரசியல் ஹேஷ்யங்களை உதிர்ப்பதுமே தமிழகத்தின் நடப்பு அரசியலாக இருக்கிறது. சோனியா, ராகுலின் எண்ண ஓட்டங்களை, அவரின் நெருக்க மான நட்பு வட்டாரமோ "சமீபத் திய நிகழ்வு ஒன்றே போதும். தமிழகம் தெளிவு பெற...' என அச்சம்பவத்தை விவரிக்கிறது.

சோனியா கலந்து கொண்ட திருச்சி கூட்டத்தில் "தி.மு.க. கூட்டணி வேண்டவே வேண்டாம்...' என்று கூச்சல் போட ஆயிரம் பேரை தயார் செய்து வைத்திருந்தார் ஈ.வி.கே. எஸ்.இளங்கோவன். மத்திய உளவுத்துறை மூலம் இதை அறிந்த சோனியா, அகமது பட்டேலை அழைத்து கூட்டத்திலும் கூட்டணியிலும் குழப்பம் விளை விக்க முயலும் இளங்கோவனை கண்டிக்கச் சொன்னார். உடனே அகமது பட்டேலும் "சோனியாவே பங்கேற்கும் சிறப்புமிக்க இந்த மாநாட்டில் கூட்டணிக்கு எதிராக கூட்டத்திலிருந்து ஒருவர் குரல் கொடுத்தாலும்...?' என கடுமை யாக எச்சரிக்க... அமைதியானார் இளங்கோவன். அதனாலேயே, அவரை மேடையில் உட்கார வைத்து பேச வாய்ப்பு தரவில்லை. அடுத்து, எந்த மேடையிலும் தி.மு.க. குறித்து வாய் திறக்கக் கூடாது என போட்ட உத்தரவை இம்மியளவும் பிசிறாமல் கடைப் பிடிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார். தி.மு.க.வை விமர்சிக்கும் இளங்கோவனுக்கு கிடைத்த மேலிட "ஆசி' இதுதான். எங்களுக்கு தெரிந்து இந்தியாவிலேயே பெயரைச் சொல்லாமல் "டாக்டர் கலைஞர்' என்று மரியாதையாக சோனியா அழைக்கும் ஒரே தலைவர் கலைஞர்தான்.

"கலைஞர் மீது சோனியா காட்டும் பரிவும் பாசமும் வெளிப்படையானதுதான். ஆனால்... ராகுல்...?'


தி.மு.க.வினரை மட்டுமல்ல... கதர்ச் சட்டைகளையும் புருவம் உயர்த்தச் செய்யும் இந்தக் கேள்விக்கு ராகுலைப் பற்றி முழுவதும் அறிந்திருந்தால் இப்படி ஒரு சந்தேகமே எழாது. போலித்தனத்தை அடியோடு வெறுப்பவர் ராகுல். "என்னுடைய வேலை என்ன தெரியுமா?' என்னும் பொருள்பட அவர் அடிக்கடி சொல்லும் வார்த்தை 'ஙஹ் ரர்ழ்ந்' என்பது. அவரது சிந்தனை, செயல்பாடெல்லாம் மேற்கு வங்காளம், பீகார், அசாம், தமிழ்நாடு ஆகிய நான்கு மாநிலங்களிலும் இளைஞர் காங்கிரஸ், மாணவர் காங்கிரஸை வலுப்படுத்து வதில்தான். இதன் மூலம் காங்கிரஸை வலுப்பெறச் செய்து, கூட்டணி கட்சிகளின் தயவில்லாமல் மத்தியில் ஸ்திரத் தன்மையோடு தனித்து ஆட்சி அமைக்க முடியும் என்பதே அவரது கணக்கு. அதற்காக அந்தந்த மாநிலத்துக்கு செல்லும்போது, கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவரான அம்மாநில முதலமைச்சரையோ, வேறு முக்கிய பொறுப்புகளில் உள்ளவர்களையோ அவர் சந்திப்பதே இல்லை. அவரது இயல்பு தெரியாமல் "தமிழகம் வரும் ராகுல் மரியாதை நிமித்தமாகக் கூட கலைஞரை சந்திப்பதில்லை. அவருக்கு கலைஞரை பிடிக்காது. ஜெயலலிதாவைப் பிடிக்கும்' என்று இஷ்டத்துக்குப் பேசுகிறார்கள்.

லக்னோவில் ராகுல் நடத்திய ஒரு கலந்துரையாடலின் போது இந்தியாவில் எந்தெந்த மாநிலங்களில் எந்தெந்த கட்சிகள் கட்டமைப்புடன் வலுவாக இருக்கிறது என பேச்சு திரும்பியது. அப்போது தமிழகத்திலிருந்து வந்திருந்த கல்லூரி பேராசிரியர் ஒருவர் தி.மு.க. சந்தித்த சோதனைகள் குறித்தும், நெருக்கடியான காலகட்டத்திலும் அந்தக் கட்சியை தாங்கி நின்றது நகரங்கள், கிராமங்கள் என எங்கும் அமைப்பு ரீதியாக வியாபித்திருக்கும் கொள்கை பிடிப்புள்ள தொண்டர் கள்தான் என்று விரிவாகப் பேச... "ஜனநாயக முறையில் இந்த அளவு கட்டுக் கோப்பாக கட்சி நடத்துபவராக இருக்கிறாரே கலைஞர்? நேருவைப் போல இவரும் ஒரு ஜனநாயகவாதிதான்...' என்று வியந்து புகழ்ந்தார் ராகுல்.

ஆடம்பர அரசியல் நடத்தும் தலைவர்கள் குறித்து ஒருவர் ராகுலிடம் பேசியபோது "ஜெயலலிதாவை இதுவரை நான் சந்தித்ததே இல்லை' என்று கிண்டலாக இடைமறித்தார் ராகுல். ராகுலைப் பார்க்க வந்த மாணவர் காங்கிரஸ் தலைவர் ஒருவர் காஸ்ட்லியான ரோலெக்ஸ் வாட்ச் கட்டியிருந்தார். கழுத்தில் தடிமனான தங்க சங்கிலி. காலில் டாப் ரேட் ஷூ அணிந்திருந்தார். அவரிடம் ராகுல் "உங்களுக்கு இது ரொம்ப நன்றாக இருக்கிறது. ஆனால், இத்தனை ஆடம்பரமாக வலம் வரும் உங்களிடம் ஏழை மாணவர்கள் எப்படி நெருங்க முடியும்?' என்று கேட்டார். அப்போது பொது வாழ்க்கை யில் உள்ளவர்கள் எல்லாவற்றிலும் எளிமையை கைக் கொள்ள வேண்டும் என்பதில் உறுதியான நிலைப்பாடு கொண்ட ராகுல், ஆடம்பர அரசியல் செய்பவர் யாராக இருந்தாலும் அவர்களிடமிருந்து விலகியே இருப்பார்.

விஜயகாந்த்தைக் காட்டிலும் ராகுலை இம்ப்ரெஸ் செய்தவர் திருநாவுக்கரசர்தான். கட்சியில் இணைவதற்கு முன் ராகுலை சந்தித்தபோது "ஏன் அ.தி.மு.க.விலிருந்து விலகினேன்? அப்புறம் ஏன் பா.ஜ.க.வில் சேர்ந்தேன்? இப்போது ஏன் காங்கிரசில் சேர முடிவு எடுத்திருக் கிறேன்?' என தன்னை அவர் வெளிப்படுத்திய விதம் கண்டு சிலாகித்துப் போனார் ராகுல். அப்போது "ஜெயலலிதா தலைமையின் கீழ் எப்படியெல்லாம் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறது அக்கட்சி, சுயமரியாதை உள்ள எவராலும் அவரோடு இணைந்து பணியாற்ற முடியாது' என்று கோர்வையாக பல சம்பவங்களை சொல்லியிருக்கிறார் திருநாவுக்கரசர்.

இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர் அட்டையில் சோனியா, ராகுல் படங்களை அச்சிட்டே ஆக வேண்டும் என்பதில் பிடிவாதம் காட்டினார்கள் தொண்டர்கள். "யார் படமும் வேண்டாம்' என்றார் ராகுல். வேறு வழியின்றி "உங்கள் படத்தை வேண்டாம் என்று உங்களால் சொல்ல முடி யும். ஆனால் அன்னை சோனியா படத்தை வேண்டாம் என்று சொல்வது சரியல்ல' என்று தர்க்கம் பண்ணினார்கள் தொண் டர்கள். உடனே, தனது அறைக் குள் போன ராகுல் அரைமணி நேரத்தில் வெளியே வந்தார். அவர் கையில் "என் படத்தையும் அச்சி டக்கூடாது' என சோனியாவே கையெழுத்திட்டு ஃபேக்சில் அனுப்பிய கடிதம். தனி நபர் துதிபாடும் அரசியல் கூடவே கூடாது என்பதில் அத்தனை உறுதியாக இருப்பவர் ராகுல்.

1967-லிருந்து தமிழகத்தில் திராவிட ஆட்சிதான். பதவி மோகம், கோஷ்டி அரசியல் பண் ணுவதை எல்லாம் விட்டுவிட்டு கட்சியை தூக்கி நிறுத்தக்கூடிய, சுயநலமற்ற காமராஜரைப் போன்ற தலைவர்கள் இங்கே உருவாக வில்லை. உழைத்தால் உணர்வுப் பூர்வமான தமிழக மக்களின் மனதில் நிச்சயம் இடம்பிடிக்க முடியும் என்று நம்புகிறார் ராகுல். ஆக்கப்பூர்வமாக சிந்தித்து, ஒரு ஹீரோ போல செயல்படுகின்ற ராகுலைப் போய் வில்ல னாக சித்தரிக்கப் பார்க்கிறதே தமிழகம்? "மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில் ஆட்சி நிர்வாகம் திறம்பட நடக்கிறது. எல்லா வகையிலும் பாதுகாப்பாக உள்ள தி.மு.க. கூட்டணியின் ஆட்சியே வேண்டும். காங்கிரசும் அதில் அங்கம் வகிக்க வேண் டும். அப்போதுதான் தமிழகத்தில் காங்கிரஸை வளர்க்கமுடியும்' என்ற கோரிக்கை அழுத்தமாகவே பதிந்து விட்டது ராகுல் மனதில். "தேர்தல் நெருங்கும் நாட்களில் நெருக்கடி கொடுப்போம். ஆட்சியில் பங்கு தர தி.மு.க. மறுத்துவிட்டால், நஷ்டம் தி.மு.க.வுக்குத்தான். நாம் தனித்தே போட்டியிட்டு காங்கிரசின் பலத்தை அறிவோம். இல்லையென்றால் இருக்கவே இருக்கிறது தே.மு.தி.க. போன்ற கட்சிகள். அதே நேரத்தில், ஒருக்காலும் அ.தி.மு.க.வோடு கூட்டு சேரமாட்டோம். ஏனென்றால், தேர்த லுக்காக காங்கிரசின் சுயமரியாதையை விட்டுக் கொடுக்கக் கூடாது' என்பதில் உறுதியாக இருப்பவர் ராகுல்.

"ஒருவகையில் பார்த்தால் தி.மு.க. கூட்டணியிலிருந்து விலகுவது காங்கிரசுக்கு விஷப் பரிட்சைதான். தற்கொலைக்கு சமமானதுதான். இதற்கு ஒருபோதும் சம்மதிக்க மாட்டார் சோனியா' என பதறுவோரும் உண்டு. ஆனால் கட்சியின் தலைவி என்ற ஸ்தானத்திலிருந்து பார்க்காமல், ராகுலின் நடவடிக்கைகளை ஒரு அம்மாவாக ரசிக்கவே செய்கிறார் சோனியா. "எனக்கே உத்தர விடுகிறான் என் மகன்' என பூரித்துப் போகிறார். இதற்கு உதாரணம் காட்டுகிற சம்பவம் தமிழகத்திலேயே வந்திருக் கிறது. புதிய தலைமைச் செய லகத்தின் திறப்பு விழாவுக்கு தமிழகம் வந்த சோனியா முத லில் சென்றது கட்சி அலுவல கமான சத்தியமூர்த்தி பவனுக் குத்தான். ராகுலின் விருப்பப்படி யே நடந்து கொண்டார். "கட்சி யை வளர்க்க பல வழிகளிலும் முயற்சிக்கிறான். பார்ப்போமே...' என அறிவிக்கப்படாத முழு சுதந்திரத்தையும் ராகுலுக்கு கொடுத்து விட்டார் சோனியா.

"தமிழகத்தில் என்னென்ன மோ பேசிக்கிட்டிருக்காங்க. நாங்க உண்மையை பேசறோம்' என ராகுலுக்கு நெருக்கமான டெல்லி வட்டாரம் இப்போதே தேர்தல் நெருப்பை பற்ற வைத்திருக்கிறது.

தி.மு.க. தரப்பிலோ, "கூட்டணி ஆட்சிக்கு ஒரு போதும் சம்மதிக்க மாட்டார் கலைஞர். திராவிட கொள்கைகளில் ஊறியிருக்கும் அவரது போர்க் குணத்தை அறிந்திருக்க மாட்டார் ராகுல். காங்கிர சின் இந்தத் தேர்தல் மிரட்டல்களை தூசியாக ஊதி விடுவார். பீகார் தேர்தலில் லாலுவை மூன்றாம் இடத்துக்கு தள்ளி விடலாம் என்று ஒரு தேர்தல் கணக்கை அங்கே தொடங்கியிருக்கிறார் ராகுல். அந்தக் கனவு பலிக்கவில்லையென்றால் "கூட்டணி ஆட்சி' என்ற நிலைப்பாட்டிலிருந்து தமிழகத்தில் தானாக பின்வாங்கி விடுவார். எதற்கும் தயார் நிலை யில், அதுவரை பொறுமை காப்போம். "ஒருவேளை தமிழக சட்டமன்ற தேர்தலில் கூட்டணியிலிருந்து காங்கிரஸ் கழன்று கொண்டால், மத்தியில் ஆதர வை வாபஸ் பெற்று விடும் தி.மு.க. ஆட்சியில் நீடிக்க தி.மு.க. எம்.பி.க்கள் 18 பேரின் இழப்பை எங்ஙனம் ஈடு செய்யும் காங்கிரஸ்? சிக்கல் இல்லாத நட்பை புதைத்து விட்டு குழப்பமான கூட்டணி காணுமா? இத்தனை ரிஸ்க் எடுத்து காங்கிரஸ் சாதிக்கப் போவ தென்ன?' என்று விவேகத்துடன் கேட்கிறார்கள்.

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் ராகுலிடம் விடை இருக்கிறதா என்ன?

http://shockan.blogspot.com/2010/10/blog-post_20.html

No comments:

Post a Comment