Monday, January 3, 2011

‘அரசியல் அனாதை’

தொல்காப்பியன் திருமாவளவனும், கார்த்திக் சிதம்பரமும்: அப்பனை மாற்றிய தமிழ் கலாச்சாரத்தின் முரண்பாடுகள்

தொல்காப்பியன் திருமாவளவனும், கார்த்திக் சிதம்பரமும்: அப்பனை மாற்றிய தமிழ் கலாச்சாரத்தின் முரண்பாடுகள்

அப்பனை மாற்றிய மகன்கள்: அப்பனின் பெயரை அல்லது ஊரின் பெயரை முன்னால் வைத்துக் கொண்டு / போட்டுக் கொண்டு அடையாளம் காணுவதுதான் முறை. ஆனால், இந்த இரண்டு நபர்களும் அப்பனையே மாற்றியவர்கள். அதாவது, அப்பா ராமசாமியை தொல்காப்பியனாக மாற்றியது முந்தையது, அப்பனை பின்னால் தள்ளியது பிந்தையது.

முஸ்லீம் ஓட்டு வங்கிக்கு அலையும் விதம்: வெட்கமில்லாமல், குல்லா போட்டு கஞ்சி குடித்து முஸ்லீம்களை தாஜா பிடிப்பதில் ஒருவேளை இரண்டு பேரும் போட்டாப்போட்டி போடுகிறார்கள் போலும்! காங்கிரஸ்தான் முஸ்லீம்களுக்கு ஏற்ற கட்சி என்று பின்னது சொல்லியிருக்கிறார். முன்னதுடன் ஒரு சினிமா இயக்குனர் இப்போழுதுதான் சேர்ந்துள்ளார் / சேர்க்கப்பட்டுள்ளார்.

இருவருமே அரசியல் அனாதைகளாக இருப்பது: இப்பொழுதுள்ள நிலையில் இருவருமே தேர்தலில் தனியாக நின்றால் வெற்றி பெறமுடியாது. ஆக, ஒட்டுண்ணியாக யாருடைய தயவாவது அவசியம் தேவைப்படுகிறது. கடந்த தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி வெற்றிப்பெற்றது, ஜெயலலிதாவின் துணையாலே (கூட்டணி அமைத்தவிதம்) அன்றி, அவரவர் திறமை-தகுதியால் அல்ல. தனியொரு கட்சி அதிக இடங்களை வென்றாலும், அதனைத் தனிமைப் படுத்தி, கூட்டணி என்ற ரீதியில் ஆட்சியைப் பிடிப்பது இன்றைய அரசியல் விபச்சாரமாக இருக்கிறது. இதில் எந்த பத்தினியும் யாருடனும் படுக்கத் தயாராகவே இருக்கிறாள். அதனால்தான் “அரசியல் அனாதைகள்” அதிகமாகின்றனர்.

தமிழகக்கட்சிகள் ஒழுங்கற்றவைதாம்: தமிழகத்தில் உள்ள மாநில / தேசிய கட்சிகள் ஒழுங்கற்றவைதான். அவற்றிற்கு எந்தவித ஒழுங்கோ, ஸ்திரமான கொள்கையோ, அரசியல் பத்தினித்தனமோ இல்லை. சுவரொட்டிகளில் எப்படி ஒவ்வொரு கட்சியும் தமக்கு சம்பந்தம் இல்லாத தலைவர்களின் (அதுவும் எதிரும் புதிருமானவர்கள்) படங்களைப் போட்டுக் கொள்கிறார்களோ, அதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம். “மசாலா- அரசியல்தனம்” தான் அதிலுள்ளதே தவிர, வேறெந்த கொள்கைபிடிப்பும் இல்லை. இதுவும் அரசியல் விபச்சாரத்தில் இன்னுமொரு ரகமாகிறது.

காங்கிரஸை திட்டியதில் கருணாநிதியை விஞ்சுபவர்கள் யாரும் இல்லை: காங்கிரஸை அந்த காலத்திலிருந்து இப்பொழுது வரை திட்டியிருக்கும் உண்மையை இந்த இருவருமே அறியமாட்டார்கள். முன்னது அப்பொழுது அரசியலிலேயே இல்லை, பின்னது பிறக்கவேயில்லை. ஆக காங்கிரஸ் ஒன்றும் ஒழுங்கான கட்சியில்லை. ஒரே குட்டையில் ஊரிய மட்டைகள் இப்பொழுது அதிகமாகவே உள்ளன.

125 வருட காங்கிரஸ் பாரம்பரியம்: இப்படி காங்கிரஸே பேசுவதற்கு தகுதியில்லை. ஏனால், இன்றும் உயிரோடுள்ள 80-90 கிழங்களுக்கு காங்கிரஸைப் பற்றி நன்றாகவேத் தெரியும். ஏன் திமுக, திமுக தலைவர்கள் பற்றியும், அவர்கள் 1947க்குப் பிறகு, இந்திரா, ராஜிவ், சோனியா என்றுள்ள காங்கிரஸ்கள் பற்றி திட்டியுள்ளதை / அவதூறு பேசியுள்ளதைப் பற்றியும் அதிகமாகவே தெரியும்.

http://secularsim.wordpress.com/category/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88/

No comments:

Post a Comment