Sunday, January 2, 2011

''தி.மு.க. வேண்டாம்!''

தமிழ்நாட்டின் அரசியல் டெம்பரேச்சரை எகிறவைப்பது, இப்போது காங்கிரஸ் கட்சிதான்!

கட்சியை வளர்க்க சோனியாவும் ராகுலும் அடுத்தடுத்து தமிழகத்துக்கு வரப்போவதால், மாநிலத்தின் பல இடங்களில் கலந்துரையாடல் கூட்டங்கள் நடக்கின்றன. அந்த வரிசையில் நடந்த ஈரோடு கூட்டம் பற்றிய லைவ் ரிலே இது...கடந்த 3-ம் தேதி, ஈரோட்டில் செயல் வீரர்கள் கூட்டம் என்று அறிக்கை வெளியிட்டதுமே, பரபரப்பு. ஏனென்றால், இளங்கோவனுக்கும்... தங்க பாலுவுக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம் என்பது எல்லோருக்கும் தெரியும். ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் சாந்த சொரூபியாகவே பேசினார். ஒரு ரகசியத் தகவல் ஒன்றையும் சொன்னார்...

''சென்னைக்கு குலாம் நபி ஆசாத் வந்திருந்தபோது, அவருக்கு பக்கத்தில் நான் உட்கார்ந்திருந்தேன். 'கூட்டணியைப்பற்றி பொது மேடையில் பேசக் கூடாது!' என்கிறீர்கள்... கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசலாம் என்று வந்தால், 'சோனியாவுக்கு வரவேற்பு கொடுப்பதைப் பற்றி மட்டும் பேசுங் கள்' என்கிறீர்கள்... நாங்கள் தலைமைக்குக் கட்டுப்படுவோம். ஆனால், தமிழ்நாட்டு மக்களின் மனநிலை என்ன என்பதை நன்கு அறிந்து கருத்து களை சொல்லக் கூடாது என்பது எந்த விதத்தில் நியாயம்?' என்று அவரிடம் கேட்டேன். 'தயவுசெய்து அம்மையார் வந்துவிட்டு செல்லட்டும். அதன் பிறகு, பேசிக்கொள்ளலாம்' என்றார். அதையே இப்போது உங்களிடம் சொல் கிறேன். நாம் சொல்வதை தலைமை கேட்க வேண்டும் என்றால், முதலில் நம் மீது நம்பிக்கை வர வேண்டும். அதனால், கூட்டத்தைப் பெரிய அளவில் கூட்ட வேண்டும். அப்படியானால்... நாம் நினைப்பது நடக்கும்!'' என்று சொல்லிவிட்டு அவர் அமர, அவரையே பார்த்துக்கொண்டு இருந்தார் தங்கபாலு!

இறுதியாகப் பேசிய தங்கபாலு, ''நேற்றுதான் இளைஞர் காங் கிரஸ் நடைபயணத்தைத் துவக்கி வைத்துவிட்டு இங்கே வந்தேன். அவர்கள் சென்னையைசென்று அடையும்போது, ராகுல் தலைமையில் பொதுக் கூட்டம் நடைபெறும். அந்தக் கூட்டத்துக்கும் திருச்சியில் அன்னை சோனியா அம்மையார் நடத்த இருக்கிற பொதுக் கூட்டத்துக்கும் நீங்கள் அனைவரும் திரளாக வந்து கலந்து கொள்ள வேண்டும்!'' என்று சொல்லிக்கொண்டு இருக்கும்போதே, 'தங்கபாலு ஒழிக... ஒழிக!' என்று கண்டனக் குரல்கள் எல்லாப் பக்கமும் ஒலித்தன. சிலர் 'தி.மு.க. கூட்டணி வேண்டாம்' என்று குரல் எழுப்பினர். 'காங்கிரஸ் ஆட்சியை தமிழகத்தில் அமைப்போம்' என்று சிலர் குரல் கொடுத்தனர். பலரும் கோஷம் போட்டபடி தங்கபாலுவை நோக்கி வந்தார்கள். அவரை சிலர் தாக்கவும் முயன்றனர்.

உடனே, இளங்கோவன்... தங்கபாலுவை சூழ்ந்து, பத்திரமாக அவர் கார் அருகே அழைத்து சென்றார். அரை மணிநேரத் தள்ளுமுள்ளுக்குப் பிறகு ஒருவாறாக அங்கிருந்து பத்திரமாகச் சென்றார் தலைவர். தங்கபாலுவைச் சுற்றி இன்று கெரோ செய்தவர்களில் ஒரு பிரிவினர் இளைஞர் காங்கிரஸை சேர்ந்தவர்கள். இன்னொரு தரப்பு ப.சிதம்பரம் ஆதரவாளர்களாம்.

ஈரோடு மேற்குத் தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் 'கராத்தே' சக்திவேலிடம் பேசினோம். ''ஈரோடு மாவட்ட இளைஞர் காங்கிரஸைப் பொறுத்த வரை தங்கபாலுவை எங்கள் யாருக்கும் கொஞ்சம்கூட பிடிக்கவில்லை. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை வளர்க்க அவர் முயற்சிக்கவே இல்லை. இலங்கைப் பிரச்னை தீர்ந்தாலே, தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிச்சுடலாம். இதைப்பற்றி எல்லாம் தங்கபாலு யோசிக்கவில்லை. ஆளும் கட்சியின் குடும்ப அரசியலுக்கு கைக்கூலியாக இருக்கிறார். தமிழ்நாடு காங்கிரஸ் பதவியில் இருந்து அவரைத் தூக்கிவிட்டு இளங்கோவனை நியமித்தால், தமிழ்நாட்டில் மாபெரும் மாற்றம் உருவாகும்!'' என்றார் காட்டமாக.

உள்கட்சி ஜனநாயகத்துக்கும், உள்காய ஜனநாயகத் துக்கும் எப்போதுதான் வித்தியாசம் புரிந்துகொள்ளுமோ தமிழ்நாடு காங்கிரஸ்!

http://shockan.blogspot.com/2010/10/blog-post_4853.html

No comments:

Post a Comment