நினைவில் இருக்கும் நாடாளுமன்றத் தேர்தல்களும் அதன் பிறகு வந்த அரசுகளும் - ஒரு முன்னோட்டம்-3 | ||||
| ||||
.தமிழ் நாட்டில் 1991ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் ஜெயலலிதாவின் அண்ணா. தி.மு.கவும் காங்கிரசும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன.தேர்தலின் போது தமிழ்நாட்டில் பிரச்சாரத்தில் இருந்த ராஜீவ் காந்தி விடுதலைப் புலிகளால் கொடூரமாகக் கொல்லப்பட்டார். இருந்தாலும் காங்கிரஸ் தேர்தலில் தனிப் பெரும்பான்மை பெற முடியவில்லை. ஆனால் அதிக இடங்கள் வென்ற தனிக் கட்சியாக காங்கிரஸ் இருந்ததால் அதனை ஆட்சி அமைக்க வருமாறு அன்று ஜனாதிபதியாக இருந்த வெங்கட்ராமன் அழைத்தார். தேர்தலிலேயே நிற்காத நரசிம்ம ராவ் பிரதமராகப் பதவி ஏற்றார். வி.பி.சிங் மற்றும் சந்திரசேகர் அரசுகள் இந்தியப் பொருளாதாரத்தை மோசமாகக் கையாண்டதின் விளைவு, நரசிம்ம ராவ் பதவி ஏற்ற போது நாட்டின் பொருளாதார நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருந்தது. மன்மோகன் சிங் நிதி அமைச்சராகப் பதவி ஏற்றார். நரசிம்ம ராவ் அவருக்கு முழுச் சுதந்திரம் கொடுத்தார். பொருளாதாரச் சீர்திருத்தத்தை முழு வீச்சுடன் செயல்படுத்தினார். இன்று இந்தியா அடைந்துள்ள பொருளாதார முன்னேற்றத்திற்கு அடித்தளம் இட்டவர்கள் என்ற பெருமை மன்மோகன் சிங் மற்றும் நரசிம்ம ராவையே சேரும். மேலும் நரசிம்ம ராவ் ஆட்சியில்தான் பஞ்சாபில் நடந்து வந்த காலிஸ்தான் பிரிவினை வாதம் முழுவதும் அடக்கப்பட்டு,சாதாரண நிலைக்குக் கொண்டு வரப்பட்டது. மீண்டும் 1998ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெற்றது. தமிழ்நாட்டில் அண்ணா தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க, ம.தி.மு.க மற்றும் பா.ம.க போட்டியிட்டன. கணிசமான தொகுதிகளில் இந்தக் கூட்டணி வெற்றி பெற்றது. பா.ஜ.க தலைமையில் கூட்டணி ஆட்சி அமைத்தது. வாஜ்பாய் பிரதமராகப் பதவி ஏற்றார். ஆனால் அந்த அரசை நடத்த வாஜ்பாய் மிகவும் கஷ்டப்பட்டார். பிரமச்சாரியான வாஜ்பாய், ஜெயலலிதா,மம்தா பானர்ஜி மற்றும் மாயாவதியால் பட்ட துன்பம் சொல்லி முடியாது. ஜெயலலிதா ஆதரவை விலக்கிக் கொண்டதால் பா.ஜ.க அரசு கவிழ்ந்து 1999ஆம் ஆண்டு மீண்டும் பொதுத் தேர்தல் வந்தது. கம்யூனிஸ்ட்களும் இந்திய அளவில் 60௦ இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றது குறிப்பிடத் தக்கது. கம்யூனிஸ்ட் ஆதரவுடன் காங்கிரஸ் கூட்டணி 2004ஆம் ஆண்டு மன்மோகன் சிங் தலைமையில் ஆட்சி அமைத்தது. லல்லு பிரசாத் கட்சி,தி.மு.க மற்றும் ஷரத் பவார் கட்சிகள் ஆட்சியில் பங்கு வகித்தன. மன்மோகன் சிங் நிதி அமைச்சராக இருந்ததற்கும் பிரதமராக கடந்த ஐந்து ஆண்டுகள் இருந்ததற்கும் பெரிய அளவில் வித்தியாசம் இருந்தது. அவரால் பிரதமராக தன்னிச்சையாகச் செயல்பட முடியாது தான். எந்த விஷயத்திலும் சோனியாவின் கட்டளையை எதிர்பார்த்துக் காத்திருந்தார். கம்யூனிஸ்ட்கள் மற்றும் தி.மு.க வின் எடுபிடிகள்.அமெரிக்காவுடனான 1-2-3 ஒப்பந்தத்தில் ஏற்பட்ட கருத்து வேறு பாட்டில் கம்யூனிஸ்ட்கள் காங்கிரஸ் கூட்டணிக்குக் கொடுத்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்டது. பல சமயங்களில் மன்மோகன் சிங்கைப் பார்க்க மிகவும் பரிதாபமாக இருந்தது என்றால் மிகையாகாது. ஆனாலும் இந்திய அரசியலில் மன்மோகன் சிங் ஒரு மிகச் சிறந்த பண்பாளர் என்பதை மறுக்க முடியாது. இப்போது நடந்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பலருக்கு பிரதமர் பதவி மேல் ஆசை உள்ளது. ஆனால் ஒரு தொங்குப் பாராளுமன்றம்தான் வரும் போல் உள்ளது. தேர்தலுக்குப் பிறகு பல பேரங்கள் நடக்க வாய்ப்புள்ளது. நாட்டில் ஒரு நல்ல தலைவர் கூடிய சீக்கிரத்தில் வருவார் என்று எதிர்பார்ப்போம். http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=1312 |
Sunday, January 2, 2011
இந்திய அரசியல் நிகழ்வுகள் - ஒரு கண்ணோட்டம் : 3
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment