Sunday, January 2, 2011

இந்துமதத்தில் மட்டும் தான் ஜாதிகள் உள்ளதா?

ஜாதிகள் இல்லையடி பாப்பா, குலம் தாழ்தி உயர்த்தி சொல்லல் பாவம்! என்றார் பாரதியார். ஜாதிகள் ஆயிரம் இருப்பினும் ஏற்றத்தாழ்வு பார்க்காமல் இருப்பது மேலான வாழ்க்கை. ஆனால் ஜாதிகளும் பிரிவுகளும் இந்துக்களிடம் மட்டும் தான் இருக்கிறதா? கொஞ்சம் சமூகத்தைச் சுற்றிப்பார்த்தால் பல விஷயங்களைப் புரிந்து கொள்ள முடிகிறது. சுற்றிப்பார்ப்போம் வாருங்கள்!

இந்துக்களிடம் தான் பல பிரிவுகள் இருக்கின்றன என்றும் மற்றவர்கள் எல்லோரும் ஒரே மதம் ஒரே கடவுள் என்ற கொள்கையில் ஒன்றாக ஒற்றுமையாக இருப்பது போன்ற தோற்றத்தை ஊடகங்கள் தொடர்ந்து பரப்பி வருகின்றன. சினிமாக்காரர்களும் இந்துக்களிடம் இருக்கும் ஜாதிகளை கதையாக வைத்தே படமாக்கி வியாபாரம் செய்கிறார்கள். அதாவது ஜாதி வேற்றுமையை மறந்து மக்கள் ஒற்றுமையுடன் வாழவேண்டும் என்று மக்களுக்கு போதிப்பார்கள். ஆனால் இவர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் உடனே ஜாதி சங்கங்களில் சரணடைந்து விடுவார்கள் என்பது வேறு விஷயம்.

ஜாதியை விட வேண்டும் என்று கூறும் அரசியல் வாதிகளும் சினிமாக்காரர்களும் ஜாதியை உட்படுத்தாமல் பேசவோ, அல்லது படம் எடுக்கவோ தயாராக இல்லை. அதிலும் நடிகர்கள் கமல் மற்றும் விவேக் போன்றவர்கள் தங்களது ஒவ்வொரு படத்திலும் ஜாதீய கதாபாத்திரங்கள் இல்லாமல் பிழைப்பு நடத்துவதே கிடையாது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் கூட இந்துக்களிடையே இருக்கும் ஜாதிப் பிரிவினையை வைத்து நியா நானா என்று பேசி வியாபாரம் செய்வார்கள். ஆனால் இவர்கள் எல்லோருமே கூட்டாக பிறமதங்களில் நிலவும் ஜாதி வேறுபாட்டை பற்றி அதில் கடைபிடிக்கப்படும் ஏற்றத்தாழ்வுகள் பற்றி திட்டமிட்டு பேசுவதில்லை.

எந்த மதமாகினும் பிரிவினைகள் இருப்பதும் அதில் ஏற்றத்தாழ்வுகள் பார்க்கப்படுவதும் மனித குல அமைதிக்கு ஒவ்வாததே. இருப்பினும் ஒரு விழிப்புணர்ச்சிக்காகவாயினும் நாம் பிற மதங்களில் கடைபிடிக்கப்படும் ஜாதீய பிரிவுகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

இதைப்பற்றி பேசிக்கொண்டிருக்கையில் நண்பர் ஒருவர் கிறிஸ்தவ மதத்தின் பிரிவுகளைப் பற்றி பகிர்ந்துகொண்ட தகவல்களை கொஞ்சம் பார்ப்போம்.

ஒரே கிறிஸ்து, ஒரே பைபிள், ஒரே மதம் என்று சொல்லி இந்துக்களை ஏமாற்றுபவர்களுக்கிடையே தான் எத்தனைப் பிரிவுகள்!

லத்தீன் கத்தோலிக்கர்கள், சிரியன் கத்தோலிக்க சர்ச்சுக்குள் நிழைய மாட்டார்கள்.
இந்த இரு பிரிவினரும் மார்தோமா சர்ச்சுக்குள் நுழைய மாட்டார்கள்.
இந்த மூன்று பிரிவினரும் பெந்தகோஸ்ட் சர்ச்சுக்குள் நுழையமாட்டார்கள்.
இந்நான்கு பிரிவினரும் (Salvation Army Church) சால்வேஷன் ஆர்மி சர்ச்சுக்குள் நுழையமாட்டார்கள்.
இந்த ஐந்து பிரிவினரும் சென்வென்த் டே அட்வென்டிஸ்ட் சர்ச்சுக்குள் நுழைவதில்லை.
இந்த ஆறு பிரிவினரும் (Orthodox Church.) ஆர்தோடாக்ஸ் சர்சுக்குள் நுழையமாட்டார்கள்.
இந்த ஏழு பிரிவினரும் (Jacobite church) ஜேகோபைட் சர்ச்சுக்குள் நிழையாமாட்டார்கள்.
இப்படி கிறிஸ்தவர்களில் 146 பிரிவினர்கள் கேரளாவில் மட்டுமே இருக்கிறார்கள் என்கிறது அந்த தகவல்.

தமிழகத்தை எடுத்துக் கொண்டால் நாடார் கிறிஸ்தவர்கள், தலித் கிறிஸ்தவர்கள், வன்னியர் கிறிஸ்தவர்கள் என்று மதம் மாறிய பிரிவினர்கள் எல்லோரும் அவர்களது ஜாதியை கிறிஸ்தவ ஜாதியாக மாற்றி ஜாதி கிறிஸ்தவர்களாகவே வாழ்கிறார்கள். இப்படி மதம் மாறிய கிறிஸ்தவர்கள் தங்கள் குடும்பப் பிள்ளைகளுக்கு வரன் பார்க்கும் போது சொந்தப் பிரிவைச் சேர்ந்த கிறிஸ்தவர்களாகவே பார்ப்பதும் நடக்கிறது.

அவ்வளவு ஏன், மாதாவைக் கும்பிடும் கிறிஸ்தவர்கள் ஏசுவை ஏற்றுக் கொள்வதில்லை. ஏசுவைக் கும்பிடும் கிறிஸ்தவர்கள் மாதாவைக் கும்பிடுவதில்லை. இரண்டுமே கிறிஸ்தவத்தின் கடவுள் என்றாலும் இவ்விரண்டு பிரிவினரும் ஏசுவயும் மாதாவையும் பரஸ்பரம் சாத்தான்களை ஏசுவதைப் போல ஏசுவார்கள்.

சில வருடங்களுக்கு முன் ஒரிசாவில் கிறிஸ்தவர்களின் அட்டூழியங்களுக்கு எதிராக இந்துக்களின் எழுச்சி நிகழ்ந்த போது தமிழகத்திலும் பல இடங்களில் சிலுவைகள் நொறுக்கப்பட்டன. தென் தமிழகத்தில் அதிகம் நிகழ்ந்த இந்த தாக்குதல் சம்பவங்களை நடத்தியவர்கள் இந்துக்களே என்று ஊடகங்கள் செய்தி பரப்பின. ஆனால் உண்மையை கூர்ந்து கவனித்த பின்னர் தான் பல இடங்களில் ஏசு சிலையை சேதப்படுத்தியவர்கள் மாதாவைக் கும்பிடுவர்கள் என்றும், பல இடங்களில் மாதா சிலையை சேதப்படுத்தியவர்கள் ஏசுவைக் கும்பிடுபவர்களாக இருந்தார்கள் என்ற உண்மை வெளியே வந்தது. ஆனால் உடனே அந்த விஷயம் பரவாமல் தடுக்கவும் பட்டது. இது செக்யூலரிச நாடாயிற்றே!

கிறிஸ்தவத்தில் பிரிவினை இல்லை என்ற மாயை உடையாமல் பார்த்துக் கொண்டன மத'சார்பு' ஊடகங்கள்.

சரி இனி முஸ்லீம்களின் பிரிவுகள் பற்றி தெரிந்து கொள்வோம்.

ஏகத்துவம் என்ற பெயரைக் கொண்டு ஒரே கடவுள் ஒரே மதம் என்று கூறும் இஸ்லாத்தில் எத்தனை பிரிவுகள் என்று தகவல்கள் கீழ்கண்டவாறு தெரிவிக்கின்றன.

Among Muslims, Shia and Sunni kill each other in all the Muslim countries.

முஸ்லீம்களில் சுன்னி, ஷியா என்று இரு பெரும் பிரிவுகள் உள்ளன. உலகெங்கிலும் ஒரே கடவுள் தான் என்று சொல்லிக்கொள்ளும் இந்த முஸ்லீம்கள் தம் சக மதத்தவரையே கொன்றுகுவித்து வருகிறார்கள். இன்றைக்கும் பாகிஸ்தானில் மசூதிகளில் குண்டு வெடிப்பதற்கு இதுவே காரணம்.

அநேக மதக்கலவரங்கள் பல முஸ்லீம் நாடுகளிலும் இந்த இரு பிரிவினருக்கு இடையில் தான் நடக்கிறது.

ஷியா முஸ்லீம் சுன்னி முஸ்லீம்களின் மசூதிக்குச் செல்லமாட்டார்.
இந்த இரு பிரிவினரும் அஹமதியா மசூதிக்குச் செல்லமாட்டார்கள்.
இந்த மூன்று பிரிவினரும் சுஃபி மசூதிக்குச் செல்லமாட்டார்கள்
இந்த நான்கு பிரிவினரும் முஜாஹிதீன் மசூதிக்குச் செல்லமாட்டார்கள்.
இப்படி முஸ்லீகளிலேயே 13 பிரிவுகள் இருக்கின்றன.

இது மட்டுமா முஸ்லீம்களின் வேறுபல பிரிவினரையும் பார்க்கலாம். (ஆங்கிலத்தில்)

Ansari Arain Awan Bohra Dawoodi Bohra Dekkani Dudekula Ehle-Hadith Hanabali Hanafi Ismaili Khoja Labbai Lebbai Lodhi Malik Mapila Maraicar Memon Mugal Mughal Pathan Quresh Qureshi Rajput Rowther Salafi Shafi Sheikh Shia Siddiqui Sunni Hanafi Sunni Malik Sunni Shafi Syed

அனுமார்வால் பொன்று நீண்டிருக்கும் இத்தனை ஜாதிகளைக் கொண்ட முஸ்லீம்கள் வேறு ஜாதிகளில் பெண் கொடுக்கவோ எடுக்கவோ மாட்டார்கள். அதிலும் மரைக்காயர் மற்றும் லெப்பைகள் போன்றோர் அரபு முஸ்லீம்கள் என்று கூறிக்கொள்வர். இவர்களைப் பொறுத்தவரை மற்றவர்களுக்கு பெண் கொடுக்க மாட்டார்கள். ஜாதிகளும் அதில் மேல் கீழ் என்று பிரிவுகளும் முஸ்லீம்களிலும் உண்டு. பட்டாணி முஸ்லீம் பெண்மணியை நாசுவன் ஜாதி ஆணுக்கு திருமணம் செய்து வைக்கமாட்டார்கள்.

இல்லையென்றால் மேட்ரிமோனியல் தளங்கள் அவர்கள் வசதிக்காக இத்தைனைப் பிரிவுகளை உண்டாக்கி வியாபாரம் செய்ய முன்வருமா என்ன? படம் கீழே!

இத்தனைப் பிரிவுகளுக்குள்ளும் நிறைய ஏற்றத்தாழ்வுகள் உண்டு. மைனாரிட்டி என்பதால் வெளியே தெரிவதில்லை அல்லது வெளியே தெரிந்து அவர்களின் ஜாதி வெறி பிம்பங்கள் கலைய ஊடகங்கள் அனுமதிப்பதில்லை என்பதே உண்மை. இந்த சினிமாக்காரர்களும் இத்தகைய மதங்களில் நிகழும் வேற்றுமைகளை வெளிப்படுத்தும் வன்னம் படம் எடுத்து மக்களுக்குக் காட்டியதில்லை.

அவ்வளவு ஏன், அமெரிக்கா ஈராக்கின் லட்சக்கனக்கான மக்களை அழித்து அந்நாட்டு என்னை வளத்தை அபகரித்துக்கொண்டது தெரிந்த செய்தியே! ஆனால் இதை அமெரிக்கா முஸ்லீம்கள் மீது நிகழ்த்திய தாக்குதல் என்ற ரீதியிலேயே இந்தியாவில் ஊடகங்கள் செய்தி பரப்பின. இங்கு இருக்கும் முஸ்லீம்கள் கூட அமெரிக்காவை எதிர்கும் வகையில் ஊர்வலம் போவதும், சுவரொட்டிகள் ஒட்டி எதிர்ப்பு தெரிவித்தும் வந்தனர்.

உண்மையோ முற்றிலும் வேறானது. ஈராக்கின் கோரப்படுகொலைகளுக்கு மூலக்காரணம் அங்கே நிலவிய ஷியா , சுன்னி பிரிவுச்சண்டையே! அதை அமெரிக்கா நரித்தனமாக பயன்படுத்திக் கொண்டது என்பதே உண்மை. (எண்ணெய் வளங்களை ஒருங்கே கொண்ட மொத்த முஸ்லீம்நாடுகளும் ஒற்றுமையாக இருந்திருந்தால் அமெரிக்கா என்றைக்கோ பிச்சைக்கார நாடாகி திருவோடு ஏந்தி இருக்கும். இன்றைக்கும் அமெரிக்கா பிழைத்து வருவது என்னெய் விற்பனைக்கு ஷேக்குகள் அமெரிக்க டாலரை உபயோகிப்பதால் தான்.) ஈராக்கைச் சுற்றியுள்ள மற்ற முஸ்லீம் நாடுகளின் முழுமையான ஆதரவுடனேயே அமெரிக்கா அந்நாட்டை அழித்தது என்றால் மிகையில்லை. அதிபர் சதாம் உசேனின் படுகொலைக்கு அதே மதத்தைச் சேர்ந்தவர்களே காரணம் ஆனார்கள். ஏன், சுன்னி ஷியா பிரிவினை.

ஆனால் இவர்கள் வெளியே சொல்லிக் கொள்வதோ ஒரே இறைவன், ஒரே மதம், ஒன்றான மக்கள் என்றுதான். அப்பிரானி இந்தியர்களும் குறிப்பாக இந்துக்களும் இதை நம்பிவிடுகின்றனர். ஐயோ பாவம்!

ஒரே கடவுள் ஒரே மதம் என்று கூறிக்கொள்ளும் இவர்களுக்குள் எத்தனைக் கொடிய கொலைகள். அப்பாவி மக்களும் ஊடகங்கள் கூறுவது போல இந்துக்கள் மட்டுமே ஜாதிப்பிரிவினை கொண்டு சண்டை இட்டுக் கொள்கிறார்கள் என்று நம்பி ஏமாந்து போகிறார்கள். வெறும் ஆயிரம், இரண்டாயிரம் வருடங்கள் கொண்ட மதங்களுக்குள்ளேயே இத்தனை பிரிவுகள் இருக்கின்றன எனில் லட்சக்கனக்கான வருடங்கள் பாரம்பரியம் உள்ள இந்து தர்மத்தைச் சேர்ந்த மக்கள், வாழும் வகைகளில் உட்பிரிவுகள் கொண்டிருப்பதில் ஆச்சரியமோ அதிர்ச்சியோ என்ன இருக்கிறது என்று தெரியவில்லை.

இந்துக்களில் இருக்கும் பிரிவினர்களிடையே எழும் ஜாதி மோதல்கள் பொருளாதார ரீதியான ஏற்றத்தாழ்வுகளுக்காக எழும் உரிமைப் போராட்டங்களாகவே பார்க்கப்படுகின்றனவே அன்றி அவை மதரீதியான பிரிவினை அல்ல. பொருளாதார ரீதியாக அனைத்து இந்துக்களும் சமமான வளர்ச்சி பெற்று விட்டால் இந்து மதத்தின் பிரிவுகள் தானே மங்கிப்போகலாம். அல்லது அரசியல் தலைவர்கள் ஓட்டு வங்கிக்காக ஜாதித்தீயை வளர்க்காமல் இருந்தால் ஜாதியின் அழுத்தம் நீர்த்தும் போகலாம். ஆனால் இந்துக்களிடைய ஜாதீய தாக்கம் நீர்த்துப்போகாமல் பார்த்துக்கொள்வதே அரசியல் வாதிகளும் ஊடகங்களும் தான். வெள்ளையர்களின் பிரித்தாளும் கொள்கையை இந்துக்களிடை நடைமுறைபடுத்தி பலர் தலைவர்களாக குளிர்காய்வதே இந்துக்களிடையே நிலவும் பிரிவினைக்கு மூலக்காரணம்.

கீ வீரமனி கூட நாத்திகத்தை ஒரு மதமாக மாற்றி அதற்கு தலைவராகவும் முயற்சி செய்கிறார். விண்ணப்பப் படிவங்களில் மதம் என்ற இடத்தில் நாத்திகம் என்று எழுதச்சொல்கிறார். எத்தனைப் பிரிவினைவாதிகள் புதிதாக உருவானாலும் மக்கள் ஒற்றுமையை இழக்கவில்லை என்பதே உண்மை.

பலஆயிரம் வருட பாரம்பரியம் உள்ள இந்துக்களின் வாழ்கையில் - 1280 வகையான மத புத்தகங்கள் உள்ளன. பல ஆயிரம் வகையான சொற்பொழிவுகளும், சொற்பொழிவாளர்களும் இருக்கிறார்கள். என்னிலடங்கா கடவுளர்கள் உள்ளனர். பல வகையான மகான்களும், ரிஷிகளும், ஆச்சாரிய குருமார்களு இருக்கின்றனர். பல்வேறு வகையாக தத்துவங்கள் போதிக்கப்படுகின்றன. இந்து தர்மத்தின் படி வாழும் மக்கள் நூறுக்கும் மேற்பட்ட வெவ்வேறு மொழிகள் பேசும் மக்களாக இருக்கின்றனர். ஆயிரக்கனக்கான கோவில்கள் இருக்கின்றன. இந்த வெவ்வேறு மொழி பேசும் கோடிக்கனக்கான மக்கள், பல நூறு தெய்வங்களையும் பல்வேறு கோவில்களையும் ஒன்றாக ஒற்றுமையாக அமைதியாகத்தான் வழிபட்டுக்கொண்டு இருக்கின்றனர். தீபாவளிப் பண்டிகையை கோடான கோடி மக்கள் இறையுணர்வுடன் ஒரே மாதிரி கொண்டாடுகிறார்கள்.

இந்துக்களில் மாரியம்மனை கும்பிடுபவர் முருகனை அவமதிப்பதில்லை. பிள்ளையாரைக் கும்பிடுபவன் ஐயப்பனை வெறுப்பதில்லை. விஷ்னு பக்தன் ஆயினும் சிவன் கோவிலுக்குப் போகாமல் இருப்பதில்லை. சிவன் பக்தனாயினும் திருப்பதிக்குப் போய் வழிபடாத இந்துக்கள் இருக்கமுடியாது. ஏன் இந்துக்கள் வேளாங்கன்னி மாதாவையும், நாகூர் தர்காவையும் கூட ஒரே கடவுளின் தோற்றமாகவே பார்க்கின்றனர். பல நூறு கடவுளர்களை வழிபடுபவராயினும் இந்துக்களுக்கு எல்லாம் கடவுளே! அதாவது அடிப்படையில் ஏகத்துவம்!

ஆக ஒரே மதம் ஒரே தேவன் என்று சொல்லிக்கொண்டு ஒரு நாட்டையே பிரிவினையால் அழிக்கும் பிற மதத்தவரை விட பல நூறு கடவுளரைக் கொண்டாலும் ஒரே கலாச்சாரம் ஒன்றான வாழ்க்கை என்று அமைதியாக வாழும் இந்துக்களின் வாழ்க்கை போற்றத்தக்கதே!

மொத்தத்தில் எந்த மதத்தில் ஜாதிகளிருந்தாலும் எல்லாவருக்கும் ஒரே பாடல் "ஜாதிகள் இல்லையடி பாப்பா, குலம் தாழ்த்தி உயர்த்தி சொல்லல் பாவம்" - மகாகவி பாரதியார்

இந்துமதத்தில் மட்டும் தான் ஜாதிகள் உள்ளதா? Copyright © 2010 | பகுத்தறிவு |All rights reserved.

http://www.mytoday.com/v/http/thatstamil.oneindia.in/bookmarks/story/~~/bookmarks/out/11334/

No comments:

Post a Comment