Sunday, January 2, 2011

ஊழல் தடுப்புத் துறையால் ஊத்தி மூடப்பட்ட பெரும் ஊழல்

புதன்கிழமை, 01 டிசம்பர் 2010 00:07

500 ரூபாய் லஞ்சம் வாங்கிய சர்வேயர் கைது. கரூர் மாவட்டம் அத்தியூர் கிராமத்தில் சர்வேயராக உள்ள கிருஷ்ணன், அவரிடம் நில அளவை செய்வதற்காக வந்த கண்ணன் என்பவரிடம் ரூபாய்.500 லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாத கண்ணன் லஞ்ச ஒழிப்புப் போலீசாரிடம் புகார் தெரிவித்தார். அவர் புகாரின் மீது வழக்கு பதிவு செய்த லஞ்ச ஒழிப்புப் போலீசார், ரசாயனம் தடவிய பணத்தை சர்வேயர் கிருஷ்ணன் பெறும் போது பாய்ந்து சென்று பிடித்து கைது செய்தனர்.

இது போன்ற பல்வேறு செய்திகளை வாசகர்கள் செய்தித் தாளில் படித்திருப்பீர்கள். அந்த சர்வேயர் 500 ரூபாய் லஞ்சம் வாங்கியது தவறில்லையா என்றால் தவறு தான். சந்தேகமே இல்லை.

இப்படி 500ம் 1000மும் லஞ்சம் வாங்கும் கீழ் மட்ட ஊழியர்களை பாய்ந்து பாய்ந்து பிடிக்கும் லஞ்ச ஒழிப்புத் துறை, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகளின் மீதான ஊழல் பற்றி எப்படி நடவடிக்கை எடுத்தது என்று பார்ப்போம்.

2001ம் ஆண்டு அண்ணா திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஜெயலலிதா, திமுகவினர் 1996 முதல் 2001 வரை செய்த ஊழல்களை விசாரிக்குமாறு உத்தரவிட்டார். இந்த காலகட்டத்தில் மு.க.ஸ்டாலின் சென்னை மாநகர மேயராக இருந்தார். அப்போது மாமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த வெற்றிவேல், மாநகராட்சி, பாதாள சாக்கடை குழாய்களை புதுப்பிப்பதில் ஏராளமான ஊழல் நடைபெற்றுள்ளதாக புகார் தெரிவித்தார். இதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறையில் DE 51/2001/PUB/HQ என்ற விரிவான விசாரணை மேற்கொள்ளப் பட்டது. இந்த விசாரணையை மேற்கொண்டவர் பாண்டியன் என்ற டிஎஸ்பி.

இந்தத் திட்டம் என்னவென்றால், ஜப்பானிய வங்கி, உலக வங்கி மற்றும் தமிழக அரசு ஆகிய மூன்றம் இணைந்து, சென்னை மாநகரில் உள்ள குடிநீர் மற்றும் கழிவு நீர் குழாய்கள் அணைத்தையும் புதுப்பிப்பது.

இதற்காக சென்னை மாநகராட்சியிலிருந்து மூன்று பொறியாளர்கள், குடிநீர் வழங்கல் வாரியத்திலிருந்து மூன்று பொறியாளர்கள், பொறியியல் பட்டம் பெற்ற ஐந்து உதவி ஆய்வாளர்கள், இதை மேற்பார்வை செய்ய ஒரு ஐஜி. இந்த ஐஜி யாரென்றால் சவுக்கு வாசகர்களுக்கு நன்கு அறிமுகமான சட்டம ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக இருக்கும் ராதாகிருஷ்ணன் தான் அவர்.

radhakrishna1n

இந்த வேலைகளில் டெண்டர் விட தொடங்கி கான்ட்ராக்டரை தேர்வு செய்வதிலிருந்து அனைத்துக் கட்டங்களிலும் ஊழல் நடந்திருப்பது லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணையில் தெரிய வந்தது. உத்தேசமாக 60 கோடி அளவுக்கு அரசுக்கு இழப்பீடு ஏற்பட்டிருப்பதும் விசாரணையில் தெரிய வந்தது.

இதையடுத்து லஞ்ச ஒழிப்புத் துறை கடித எண் DE 52/2001/PUB/HQ 23.10.2001 நாளிட்ட அறிக்கையை விழிப்புப் பணி ஆணையருக்கு (Vigilance Commissioner) அனுப்புகிறது. அந்த அறிக்கையில், பூர்வாங்க விசாரணை நடத்தியதில், மிகப் பெரிய ஊழல் நடந்திருப்பது தெரிய வந்திருக்கிறது. ஆகையால் கீழ் கண்டவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து வழக்கு தொடர உத்தரவு இடுமாறு அறிக்கை ஒன்றை அனுப்புகிறது.

1) திரு.மு.க.ஸ்டாலின்

2881310355_aa4ea16668_b

2) திருமதி.சாந்தா ஷீலா நாயர், ஐஏஎஸ்

Santha_Sheela_Nair_IAS1

3) திருமதி.எஸ்.மாலதி ஐஏஎஸ்

Malathy_S

4) திரு.ஜோதி ஜகராஜன் ஐஏஎஸ்

jothy

5) திரு.சி.பி.சிங், ஐஏஎஸ்

singh

6) திரு.ஜே.ராதாகிருஷ்ணன், ஐஏஎஸ்

J

7) திரு.ராஜேஷ் லகோனி, ஐஏஎஸ்

Rajesh_Lakhoni_IAS

பல்வேறு இடங்களில் பல்வேறு வகைகளில் ஊழல் நடைபெற்றிருந்தாலும், எளிமையாக புரியும் படி சொல்வதானால், சென்னை மாநகர் எங்கும், சாலையில் பள்ளம் நோண்டுவதானால், பள்ளத்தை மூடுவதற்கு முன், குறிப்பிட்ட அளவு மணல் கொட்டி மூட வேண்டும் என்பது விதி. இந்த விதியை வேலை ஒப்பந்தம் எடுக்கும் நிறுவனம் கட்டாயம் கடை பிடிக்க வேண்டுமென்று நிபந்தனை விதிக்கப் படுகிறது.

வேலை முடிந்து ஒப்பந்தம் எடுத்த நிறுவனம் பணம் கேட்டு கடிதம் அனுப்பும் போது, எந்த இடத்திலும் மணல் நிரப்பவில்லை என்பது தெரிய வருகிறது. இந்தப் பணிகளை சரி பார்த்த பொறியாளர்களும், மணல் நிரப்பப் படாததால் எம்புக் எனப்படும் வேலையை சரிபார்க்கும் புத்தகத்தில் கையொப்பம் இட மறுக்கிறார்கள்.

ஆனால், இந்தப் பொறியாளர்களின் எதிர்ப்பையும் மீறி, அனைத்து நிறுவனங்களுக்கும் பணம் பட்டுவாடா செய்யப் படுகிறது.

லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை துவங்கியவுடன், பள்ளம் வெட்டிய இடங்களில் மாதிரிக்காக மீண்டும் பள்ளம் வெட்டப் பட்டு மணல் இருக்கிறதா என்று சரி பார்த்த போது எந்த இடத்திலும் மணல் நிரப்பப் படவில்லை என்ற உண்மை தெரிய வந்தது. மேலும், சம்பந்தப் பட்ட ஒப்பந்தக் காரர்களிடம், எந்த இடத்திலிருந்து மணல் வாங்கினீர்கள் என்று விசாரணை சமயத்தில் கேட்கப் பட்ட போது, மணலே நிரப்பவில்லை என்பதை ஒப்புக் கொண்டார்கள்.

இந்த அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும் என்று, லஞ்ச ஒழிப்புத் துறை 23.10.2001 அன்று அரசுக்கு அறிக்கை அனுப்புகிறது.

அரசின் பொதுத் துறை, ஏசி/1023/6 05.12.2001 நாளிட்ட கடிதத்தில், இது தொடர்பாக தொழில்நுட்பக் குழு ஒன்றை அமைக்குமாறும், அந்த குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் முடிவெடுக்கப் படும் என்று லஞ்ச ஒழிப்புத் துறைக்கு கடிதம் ஒன்று அனுப்புகிறது. நெடுஞ்சாலைத் துறையின் கண்காணிப்புப் பொறியாளர் ரோலன்ட்ஸ் நெல்சம் மற்றும் குடிநீர் மற்றும் கழிவு நீர் வாரிய இணை தலைமைப் பொறியாளர் மொய்தீன் அப்துல் காதர் தலைமையில் ஒரு குழு அமைக்கப் படுகிறது. இவர்களின் கீழ் இருபதுக்கும் மேற்பட்ட பொறியாளர்கள் வேலை செய்து, ஜுன் 2003ல் தங்களது அறிக்கையை அளிக்கிறார்கள். இந்த அறிக்கை ஏற்கனவே லஞ்ச ஒழிப்புத் துறை செய்த பூர்வாங்க விசாரணையை உறுதி செய்கிறது.

இந்த நேரத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையின் இயக்குநராக நாஞ்சில் குமரன் வருகிறார். அவர் அதிமுக ஆட்சியிலேயே, திமுகவோடு ரகசிய உறவு வைத்திருக்கிறார். இவர் காலத்தில் தான், திமுக முக்கிய பிரமுகர்களின் மீது போடப்பட்ட பல ஊழல் வழக்குகள் மீளா உறக்கத்தில் ஆழ்ந்தன.

Kumaran_1

இந்த அடிப்படையில், தொழில்நுட்பக் குழு கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் ஏற்கனவே லஞ்ச ஒழிப்புத் துறை கேட்டிருந்த முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய அனுமதி வேண்டும் என்ற கோரிக்கையை உறுதிப் படுத்தாமல், வெறுமனே, 60 கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு, மேல் நடவடிக்கைக்காக அறிக்கை அனுப்பப் படுகிறது என்று 21.01.2004 அன்று மொக்கையாக ஒரு அறிக்கையை அனுப்புகிறார். இது போல, ஒரு அறிக்கையை இவர் அனுப்பியதற்கான பரிசுதான், திமுக ஆட்சியில் நாஞ்சில் குமரனுக்கு வழங்கப் பட்ட சென்னை மாநகர காவல் ஆணையாளர் பதவி.

இதற்குப் பிறகு, இந்த அறிக்கை மீளா உறக்கத்தில் ஆழ்ந்தன. மே 2006ல் திமுக ஆட்சிக்கு வந்தவுடன், ஸ்டாலின் மற்றும், ஐஏஎஸ் அதிகாரிகள் மீதான அத்தனை வழக்குகளும், உள்துறை செயலாளராக நியமிக்கப் பட்ட மாலதி மற்றும் ஜோதி ஜகராஜனால் மூடப்பட்டன. இது தொடர்பான அரசாணைகள் மாலதி மற்றும் ஜோதி ஜகராஜன் தூண்டுதலால் உடனுக்குடனாக வெளியிடப் பட்டன.

இதில் சம்பந்தப் பட்டவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்று பார்ப்போம்.

மு.க.ஸ்டாலின். துணை முதல்வர்.

சாந்தா ஷீலா நாயர் ஓய்வு பெற்று விட்டார்.

எஸ்.மாலதி தலைமைச் செயலாளர்

சி.பி.சிங் மின் வாரிய சேர்மன்

ஜோதி ஜகராஜன் பொதுத் துறை செயலாளர்

ஜே.ராதாகிருஷ்ணன் ஐக்கிய நாடுகள் அயல்பணியாக வெளிநாட்டில் உள்ளார்.

ராஜேஷ் லகானி சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் அகற்று வாரிய மேலாண் இயக்குநர்.

இது தொடர்பான லஞ்ச ஒழிப்புத் துறையின் ரகசிய அறிக்கையை சவுக்கு தனது வாசகர்களுக்காக வழங்குகிறது.

1

2

3

4

5

6

7

8

9

10

11

12

http://www.ilakku.in/index.php?option=com_content&view=article&id=191:2010-11-30-19-25-00&catid=1:2010-07-12-16-58-06&Itemid=2

No comments:

Post a Comment