Wednesday, January 5, 2011

காங்கிரஸ்-போயஸ்!விஜய் அரசியல் வண்டி ரெடி

விஜய்யின் அரசியல் வண்டி கிட்டத்தட்ட ரெடி! அநேகமாக வரும் 28, 29-ம் தேதிகளில் எலுமிச்சம் பழம் நசுக்கி வண்டியை நகர்த்திவிடுவார் விஜய் என்கிறார்கள் கோடம்பாக்கத்துக்காரர்கள்!

இலங்கைப் பிரச்னை தீவிரம் அடைந்து இருந்த காலக் கட்டத்தில் தனது ரசிகர்களுக்கு கறுப்புச் சட்டை அணி வித்து உண்ணாவிரதம் இருக்கவைத்தார் விஜய். 'விஜய்க்கு அரசியல் ஆசை வந்துவிட்டது!’ என்று எல்லோரையும் சொல்லவைத்தது அந்தச் சம்பவம். அதற்கு ஏற்ப விஜய்க்கு காங்கிரஸ் தலைவர் ராகுலிடம் இருந்து அழைப்பு வந்தது. தமிழ்நாட்டில் காங்கிரஸை வளர்க்க வேண்டும் என்று நினைத்த ராகுல், அதற்கு தமிழகத்தில் பிரபலமானசிலரை காங்கிரஸுக்குள் இழுத்துப் போட முயற்சித்தார். தமிழ் நாட்டில் செல்வாக்கான இளைய வி.ஐ.பி-க்களின் பட்டி யலில் அப்போது விஜய்க்கு முக்கிய இடம் இருந்தது. உடனடியாக, விஜய்யைச் சந்திக்க விரும்பினார் ராகுல். டெல்லியில் நிகழந்தது சந்திப்பு. காங்கிரஸ் கட்சியில் விஜய் இணைய, ராகுல் கோரிக்கை வைத்ததாகவும் அப்படி இணைந்தால் இளைஞர் காங்கிரஸில் முக்கியப் பதவி தர வேண்டும் என்று விஜய் கேட்டதாகவும் அப்போது செய்தி பரவியது. ஆனால், பத்திரிகையாளர் சந்திப்பில் 'இளைஞர் காங்கிரஸில் சேர்க்கும் வயதை விஜய் கடந்துவிட்டார்!’ என்று வெளிப்படையாகவே ராகுல் கமென்ட் அடித்தார். அதன் பிறகு, அந்தப் பேச்சும் அடங்கியது. இந்நிலையில் தி.மு.க. ஆதரவுப் பிரமுகர்களின் சினிமா நிறுவனங்களில் விஜய் நடிக்க ஆரம்பித்தார். அவரது அரசியல் ஆர்வம் தொடர்பான ஊகங்களும் மங்கி மறைந்தன என்றே சொல்ல லாம்!

இந் நிலையில் அ.தி.மு.க. பிரமுகர் சைதை துரைசாமி இல்லத் திருமணத்தில் ஜெயலலிதாவை எதிர்பாராத விதமாக விஜய்சந்தித்தார். வெறும் நல விசாரிப்பாக மட்டும்தான் அது அமைந்திருந்தது. இதைத் தொடர்ந்து மதுரை கூட்டத்தில் பேசிய ஜெயலலிதா, 'அரசியலுக்கு வரப்போவ தாக ஒரு நடிகர் அறிவித் ததும் அவரைத் தங்களது கம்பெனி படங்களில் நடிக்கவைத்து கபளீகரம் செய்துவிட்டார்கள்’ என்ற அர்த்தத்தில் சொன் னது விஜய்யை மனதில் வைத்துத்தான் என்று அந்தச் சந்திப்பின் பின்னணியை நீட்டினார் கள். ஜெயலலிதா - விஜய் சந்திப்புக்குப் பிறகு, சினிமா பிரமுகர்கள் சிலர் ஜெயலலிதாவைச் சந்தித்தார்கள். தமிழ் சினிமாவின் அப்போ தைய நிலை குறித்து விசாரித்த ஜெயலலிதா விடம், விஜய்யின் தர்ம சங்கட சூழ்நிலையையும் அப்போது குறிப் பிட்டார்கள் என்றும் ஒரு தகவல் பரவிக் கிடக்கிறது அ.தி.மு.க. வட்டாரத்தில்.

எது எப்படியோ, ஆனால் ஜெயலலிதாவின் மதுரைப் பேச்சு விஜய் மனதில் சில அதிர்வு அலைகளை ஏற்படுத்தி உள்ளது என்பது உண்மை. அந்த மதுரைக் கூட்டத்துக்குப் பிறகு, தனது ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த மூன்று மாவட்டத் தலைவர்களை அழைத்துப் பேசி உள்ளார் விஜய். சமீபத்தில் வெளியான படங்களின் வெற்றி, தோல்விகள்பற்றிப் பேசி முடித்த பின், அரசிய லையும் அலசி இருக்கிறார்கள். ''நீங்களும் ரஜினி சார் மாதிரி வர்றேன்... வர்றேன்னு ஏமாத்திடு வீங்கன்னுதான் எல்லாரும் பேசு றாங்க'' என்று ஒருவர் சொல்ல, சிரித்துவைத்தாராம் விஜய். ''புதுக் கோட்டை மீட்டிங்லயே அதுக்கான யோசனையில இருக்கேன்னுதானே சொல்லியிருக்கேன். பிறகு ஏன் சந்தேகப்படுறீங்க'' என்று விஜய் கேட்க... ''உங்க தலைவர் ராகுலை பார்க்கிறார்... ஜெயலலிதாவை மீட் பண்றார்... கருணாநிதி குடும்ப கம்பெனி படத்தில் நடிக்கிறார். அதனால தெளிவான முடிவை எடுக்க முடியாது!'' என்று ரசிகர்கள் மத்தியில் உலவும் பேச்சுகளை அவர்கள் சொல்லச் சொல்ல, தீவிர யோசனையில் ஆழ்ந்திருக்கிறார் விஜய். பிறகு மௌனம் உடைத்து, ''நானே தேதி சொல்றேன். விரைவில் நல்ல செய்தி எதிர்பாருங்கள்!'' என்று சொல்லி அனுப்பிவைத்திருக்கிறார். ''தேர்தல் வரப் போகுது. அதனால பொங்கலுக்கு முன்னால் உங்களது அறிவிப்பு இருக்க வேண்டும்!'' என்பதை மட்டும் தனது கோரிக்கையாக வைத்து வெளியேறி இருக்கிறார்கள், அந்த மூன்று மாவட்டத் தலைவர்கள்.

'காவலன்’ படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் முடிந்து, 'வேலாயுதம்’ பட ஷூட்டிங் காரண மாக பொள்ளாச்சியில் இருக்கும் விஜய், இந்த மாதக் கடைசியில் அனைத்து மாவட்டத் தலைவர்களையும் சென்னைக்கு அழைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தவிருக்கிறார்.

தன்னுடைய ரசிகர் மன்றத்தை அரசியல் கட்சியாக மாற்றுவதில் தொடங்கி, கட்சித் தலைமை அலுவலகத்தை அமைப்பது வரை அனைத்து காரியங்களையும் டிசம்பர் மாதத்தில் முடுக்கிவிட இருக்கிறாராம். விஜய்யின் இந்த மூவ்களைத் தெரிந்துகொண்டு, காங்கிரஸ் மற்றும் அ.தி.மு.க-வினர் அவருக்கு வலை வீசி வரும் காட்சிகளையும் உன்னிப்பாகக் கவனிக்க முடிகிறது. ''ராகுலை திரும்பவும் மீட் பண்ணுங்க. உங்களுக்கு உரிய மரியாதை கிடைக்கும்!'' என்று சொல்லி வருகிறார்கள் கதர் ஆதரவாளர்கள். ''உங்களது ஆதரவை எங்கள் பக்கமாகத் திருப்புங்கள்!'' என்று அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் சிலர் கோரிக்கை வைத்து வருகி றார்கள். 'இணைந்தால் காங்கிரஸ்... கூட்டணி போட்டால் போயஸ்!’ என்று விஜய் மனசு அலைபாய்ந்துகொண்டு இருப்பதாகச் சொல்கிறார் சென்னை மாவட்ட விஜய் ரசிகர் மன்ற நிர்வாகி ஒருவர்.

'விஜய் கட்சி ஆரம்பிக்கப் போகிறாரே?’ என்று சில மாதங்களுக்கு முன்னால் விஜய காந்த்திடம் கேட்டபோது, ''அவர் ஆரம்பிக்க வேண்டும். அப்போதுதான் கருணாநிதியைப் பற்றி முழுமையாக அவரால் அறிந்துகொள்ள முடியும்!'' என்று பதில் அளித்தார்.

சொகுசான சினிமா வாழ்க்கையை மட்டுமே அனுபவித்து வந்த விஜய், இந்த மாதிரியான அரசியல் வெப்பத்தை எப்படித் தாங்கிக்கொள் வார் என்பதும் யோசித்தாக வேண்டிய விஷயம்.

புதிய வரவுகள் நாட்டுக்கு நல்லதுதான்!

http://www.rishas.com/space.php?uid=2&do=blog&id=760


No comments:

Post a Comment